மீண்டும் ப்ரியதர்ஷன் - மோகன்லாலுடன் இணைகிறார் இளையராஜா!

மீண்டும் இளையராஜாவுடன் கை கோர்க்கிறார்கள் மோகன் லாலும் இயக்குநர் ப்ரியதர்ஷனும்.

இந்தப் படம் சர்வதேசப் படமாக, பல மொழிகளிலும் உருவாகிறது.

கோபுர வாசலிலே, காலாபானி (சிறைச்சாலை), குரு போன்ற படங்களில் இளையராஜாவும் ப்ரியதர்ஷனும் மோகன்லாலும் இணைந்து பணியாற்றினர்.

Ilaiyaraaja to join with Mohanlal and Priyadarshan again

ப்ரியதர்ஷன் அடுத்து மோகன் லாலை வைத்து புதிய படம் இயக்குகிறார். சர்வதேசப் படமாக உருவாகும் இந்தப் படம் தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம், சீன மொழிகளில் தயாராகிறது.

இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவைச் சந்தித்த ப்ரியதர்ஷன் இந்தப் படம் குறித்து பேச்சு நடத்தினார். கதையைக் கேட்ட இளையராஜா இசையமைக்க சம்மதம் தெரிவித்தார்.

இந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

 

சினிமா ஆசையில் வந்த மாடல் அழகியை விபச்சாரத்தில் தள்ளிய டுபாக்கூர் இயக்குநர்!

சினிமா ஆசையில் கொல்கத்தாவிலிருந்து வந்த இளம்பெண்ணை விபச்சாரத்தில் தள்ளிய டுபாக்கூர் இயக்குநரை ஹைதராபாத் போலீஸ் கைது செய்ததது.

சில மோசடிப் பேர்வழிகள் ஏதாவது ஒரு உப்புமா கம்பெனி பெயரில் ஹீரோயின்கள் தேவை என்று விளம்பரம் கொடுத்து, வருகிற பெண்களிடம் பணம் கறப்பதும், அவர்களை அப்படியே மெல்ல மெல்ல விபச்சாரத்தில் தள்ளுவதும் சினிமாவில் தொன்று தொட்டு நடந்து வருகிறது.

Telugu director arrested for forcing woman to prostitution

அந்த வகையில் சமீபத்தில் ஹைதராபாதைச் சேர்ந்த ஹனுமான் நாயக் என்ற நபர் தன்னை இயக்குநர், தயாரிப்பாளர் என்று சொல்லிக் கொண்டு இளம் கதாநாயகி தேவை என அறிவிப்பு கொடுத்துள்ளார்.

அதை நம்பி கொல்கத்தாவிலிருந்து ஒரு இளம் மாடல் அழகி ஹைதராபாதுக்கு வந்து, இந்த ஹனுமான் சொன்னபடியெல்லாம் ஆடியிருக்கிறார்.

சும்மா ஒப்புக்கு சில நாட்கள் ஷூட்டிங் நடத்தி அந்தப் பெண்ணை நம்ப வைத்த ஹனுமான், பின்னர் அந்தப் பெண்ணின் கவர்ச்சிப் படங்களை வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டு, இஷ்டப்படி இந்தப் பெண்ணை அனுபவிக்கு இவ்வளவு ரேட் என பரப்பியுள்ளார்.

இந்த தகவல் போலீசுக்குத் தெரிய வந்ததும், விசாரணையில் இறங்கியுள்ளனர். அதன் பிறகுதான் இந்த டுபாக்கூர் ஹனுமான் நாயக்கின் லீலைகள் அம்பலத்துக்கு வந்தன.

இப்போது ஹனுமான் நாயக் பஞ்சாரா ஹில்ஸ் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளான். அந்தப் பெண் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

 

பப்ளிக்கா பண்ணிக்க மாட்டேன்.. ரகசியமாத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்! - டாப்சி

என் திருமணம் ஊரறிய நடக்காது... ரகசியமாகத்தான் நடக்கும் என்கிறார் நடிகை டாப்சி.

பொதுவாக நடிகைகள் தங்கள் காதலை மறைத்து கல்யாணச் செய்தியை கடைசி வரை மறைத்து திடீரென ஒரு நாள் மாலையும் கழுத்துமாக நிற்பார்கள்.

Tapsi wants a secret marriage

நடிகை டாப்சி டென்மார்க்கைச் சேர்ந்த பேட்மின்டன் வீரர் மதியாஸ்போ என்பவரை தீவிரமாக காதலிக்கிறார். இருவரும் ரகசியமாக ஊர் சுற்றுகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது உண்மைதானா என்று கேட்டால், "சில திரையுலக பிரபலங்கள் ரசிகர்களுக்கு தெரியாமல் ஏன் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பது இப்போதுதான் எனக்கும் புரிகிறது. என் திருமணம் சில ஆண்டுகள் கழித்துதான் நடைபெறும். ஆனால் எல்லாருக்கும் தெரியும் வகையில் நடக்காது. நண்பர்கள், உறவினர்கள் மத்தியில், ரகசியமாக நடக்கும்," என்றார்.

 

விஷால் - முத்தையா படத்துக்குத் தலைப்பு 'மருது'!

நடிகர் விஷாலை வைத்து இயக்குநர் முத்தையா உருவாக்கும் புதிய படத்துக்கு மருது என தலைப்பிட்டுள்ளனர்.

குட்டிப்புலி, கொம்பன் போன்ற படங்களை இயக்கியவர் முத்தையா. இப்போது பாயும் புலி படத்தில் நடித்து வரும் விஷால், அடுத்து பாண்டிராஜ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Vishal - Muthaiya film titled as Marudhu

அத்துடன் முத்தையா இயக்கத்திலும் நடிக்கிறார். பாண்டிராஜ், முத்தையா இருவர் படங்களும் ஒரே நேரத்தில் நடக்கவிருக்கின்றன.

முத்தையா இயக்கும் படத்துக்கு மருது என்று தலைப்பிட்டுள்ளனர். மதுரையைக் கதைக் களமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தை பிரபல சினிமா பைனான்சியரும் விநியோகஸ்தருமான மதுரை அன்பு தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகைகள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

 

காமராஜரின் உதவியாளர் வேடத்தில் நடித்த சசி பெருமாள்! - இயக்குநர் பாலகிருஷ்ணன் அஞ்சலி

‘காமராஜ்' திரைப்படத்தில் காமராஜரின் உதவியாளர் வைரவன் வேடத்தில் நடித்துள்ள காந்தியவாதி சசி பெருமாள் மறைவுக்கு அப்படத்தின் இயக்குநர் அ பாலகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார்.

Sasi Perumal plays Kamarajar's assistant Vairavan

இயக்குநர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "2004ல் ‘காமராஜ்' திரைப்படம் வெளியான பின்பு பெருந்தலைவரைப் பற்றி நெகிழச் செய்யும் பல தகவல்கள் எங்களை நோக்கி வந்தவண்ணம் இருந்தன. அவைகளை ‘காமராஜ்' திரைப்படத்தை டிஜிட்டல் மயமாக்கும் போது இணைக்க திட்டமிட்டிருந்தோம்.

Sasi Perumal plays Kamarajar's assistant Vairavan

அவைகளில் முக்கியமானது பெருந்தலைவர் காமராஜர் இறந்தபின்பு அவரது சொத்துமதிப்பை கணக்கிட்டு ரூ110 மற்றும் சில வேட்டி சட்டைகள், அவர் பரம ஏழையாக வாழ்ந்துள்ளார் என்பது வரலாறு. இக்காட்சியில் சொத்து மதிப்பை கணக்கிடும் அதிகாரியாக சமுத்திரகனி நடித்தார்.

Sasi Perumal plays Kamarajar's assistant Vairavan

பெருந்தலைவரின் உதவியாளராக 25 ஆண்டுகள் இருந்த வைரவன் வேடத்தில் நடிக்க பொருத்தமான, மனிதரை தேடினோம். ஏனென்றால் எங்களிடம் பழகிய வைரவன் அவர்கள் பெருந்தலைவரின் நிழலில் வாழ்ந்து ஒரு தேசத் தொண்டராக, யாரிடமும் எந்த உதவியையும் எதிர்பார்க்காதவராக இருந்தார்.

அத்தகைய மனிதருக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக சசிபெருமாள், வைரவன் வேடத்தில் நடித்தார். அவரை அணுகியதும் எந்த தயக்கமும் இன்றி, தனக்கு கிடைத்த பாக்கியமாக நடித்துக் கொடுத்தார். அவர் தோன்றியுள்ள ஒரே திரைப்படமும் இது தான்.

Sasi Perumal plays Kamarajar's assistant Vairavan

அவரது திடீர் மறைவு எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அவரது புனிதமான நோக்கம் வெற்றியடையும் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை.

எனது மனமார்ந்த இரங்கலை பதிவு செய்கிறேன்.

-இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

 

போக்கிரி மன்னன்: ஹீரோவாக மாறிய டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர்

பிரபு தேவா, ராகவா லாரன்ஸ் வழியில் இன்னொரு டான்ஸ் மாஸ்டரும் ஹீரோவாகக் களமிறங்கியுள்ளார். அவர்தான் ஸ்ரீதர்.

திரைக்கு இவர் புதியவர் அல்ல. பல படங்களில் ஒற்றைப் பாடலுக்கு ஆடி அறிமுகமானவர்தான் ஸ்ரீதர்.

Dance Master Sridhar turns hero in Pokkiri Mannan

இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘போக்கிரி மன்னன்'. இதில் ஸ்ரீதருக்கு ஜோடியாக ஸ்பூர்தி நடித்திருக்கிறார். மயில்சாமி, சிங்கம்புலி, ரமேஷ் ரெட்டி ஆகியோரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ராகவ் மாதேஷ் இயக்கியிருக்கிறார். இந்திரவர்மன் இசையமைத்துள்ளார்.

இப்படம் குறித்து ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் இதுவரை 200 படங்களுக்கு மேல் நடனம் அமைத்திருக்கிறேன். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழி படங்களிலும் பணியாற்றியிருக்கிறேன். போலி மது பற்றிய படம் இது. நான் இதற்குமுன் பாலசந்தரின் ‘பொய்' படத்தில் நடித்திருக்கிறேன்.

நடிப்பது மிகவும் கடினம். ஆனால் இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் அமைந்ததால் நடிக்க சம்மதித்தேன். இப்படத்திற்கு நானே நடனம் அமைத்திருக்கிறேன். எல்லாருக்கும் பிடிக்கும் விதமாக இப்படத்தின் நடனமும் படமும் இருக்கும். படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது," என்றார்.

 

சகலகலா வல்லவன் - விமர்சனம்

Rating:
3.0/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: ஜெயம் ரவி, அஞ்சலி, த்ரிஷா, விவேக், சூரி, பிரபு, ராதாரவி

ஒளிப்பதிவு: யுகே செந்தில்குமார்

இசை: எஸ்எஸ் தமன்

தயாரிப்பு: லட்சுமி மூவி மேக்கர்ஸ்

இயக்கம்: சுராஜ்

தென்காசியில் சேர்மன் பதவிக்கான மோதலில் ஜெயம் ரவி குடும்பத்துக்கும், சூரி குடும்பத்துக்கும் பெரும் பகை. ஆனால் அந்தப் பகையை, சூரியின் அக்கா மகள் அஞ்சலியைக் கண்டதும் மறந்து நட்பாகிறார் ஜெயம் ரவி. இருவரும் ரொம்ப சீக்கிரமே காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

இந்த நேரம் பார்த்து ஜெயம் ரவியின் சொந்த மாமாவான ராதாரவி, தன் மகள் த்ரிஷாவின் திருமணத்துக்காக ஊரையே சென்னைக்கு அழைக்கிறார். திருமண நேரத்தில் மாப்பிள்ளை ஜான் விஜய்யை போலி என்கவுன்டர் வழக்கில் கைது செய்ய, வேறு வழியின்றி த்ரிஷாவை மணக்கிறார் ஜெயம் ரவி.

Sakalakala Vallavan Review

ஆனால் ரவிக்கும் த்ரிஷாவுக்கும் ஒத்துப் போகவில்லை. இருவரும் எலியும் பூனையுமா தினசரி மோதிக் கொள்ள, விவாகரத்து கோருகிறார் த்ரிஷா. ஊருக்கு வந்து தன்னுடன் 30 நாட்கள் தங்கினால் விவாகரத்து தருவதாக கூறுகிறார் ரவி. த்ரிஷாவும் வருகிறார். அதன் பிறகு நடந்தவற்றை திரையில் பாருங்கள்.

இயக்குநர் சுராஜின் பெரிய பலமே காமெடி. ஆனால் இந்தப் படத்தில் அந்தக் காமெடி விவேக் தயவால் ரசிக்கும்படி உள்ளது. சூரி வரும் காட்சிகளில் சில எரிச்சல் ரகம்.

Sakalakala Vallavan Review  

ஜாலி இளைஞராக வரும் ஜெயம் ரவி ரசிக்கும்படி நடித்திருக்கிறார். அவருக்கும் அஞ்சலிக்கும்தான் பொருத்தம் பர்ஃபெக்டாக உள்ளது. நீச்சல் கற்றுக் கொள்ளும் காட்சி, அருணாச்சலம் படத்தில் வருவது போன்ற பச்சக் முத்தக் காட்சிகளும் கிளு கிளு ரகம்.

த்ரிஷாவுக்கு மேக்கப் சரியில்லையா.. முகமே அப்படித்தானா தெரியவில்லை.

Sakalakala Vallavan Review

கவர்ச்சி காட்டுவதில் புதிய எல்லையைத் தொட்டிருக்கும் அஞ்சலி எடைக்குறைப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

பல காட்சிகள் ஏற்கெனவே பார்த்தது போலவும், எதிர்ப்பார்த்த மாதிரியே இருப்பதும் சுராஜ் திரைக்கதையின் பலவீனம். குறிப்பாக அந்த சண்டைக் காட்சி அநாவசியம்.

Sakalakala Vallavan Review

விவேக்கின் காமெடி சில இடங்களில் அடல்ட்ஸ் ஒன்லி ரகம் என்றாலும், அவரும் செல்முருகனும் அடிக்கும் லூட்டிதான் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.

ஜெயம் ரவி போடும் 'ஒரு மாதம் என்னோடு வந்து தங்கு' என்ற கண்டிஷனெல்லாம் ஏற்கெனவே பல படங்களில் பார்த்தவைதானே!

Sakalakala Vallavan Review

யுகே செந்தில்குமாரின் ஒளிப்பதிவு ஓகே. ஆனால் அதே ஓகேவை தமனின் இசைக்கு சொல்ல முடியாது. மூன்று பாடல்களை கண்ணை மூடிக் கொண்டு தூக்கிவிடலாம்.

வழக்கமான காமெடி மசாலாதான். ஆனால் ஆங்காங்கே சுவையயான சிரிப்புக்கு உத்தரவாதம் இருப்பதால் அப்பாடக்கராக நிற்கிறான் சகலகலா வல்லவன்!

 

'யப்பா ஆர்யா.. என் பட ஆடியோ விழாவுக்கு மட்டும் வந்துடாதே!' - விஷால்

யப்பா ஆர்யா... நீ மட்டும் என் படத்தோட ஆடியோ ரிலீசுக்கு வந்துடாதே என்று ட்விட்டரில் தன் நெருங்கிய நண்பன் ஆர்யாவைக் கேட்டுக் கொண்டுள்ளார் விஷால்.

காரணம் முன்பு ஆம்பள பட இசை வெளியீட்டு விழாவில் ஆர்யா போட்டு விட்டுப் போன ஒரு பெரும் பிட்டு.

Arya, please don't come for my audio launch: Visha

'ஆம்பள' படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, "என்ன மச்சான் அதே தேதியில சில பெரிய படங்கள் வெளியாகுதே, எனக் கேட்ட போது எவனா இருந்தாலும் வெட்டுவேன்" என விஷால் கூறியதாக, ஆர்யா அந்த மேடையில் பேசி வைத்தார்.

காரணம் அதே நாளில்தான் அஜித்தின் 'என்னை அறிந்தால்', விக்ரமின் ‘ஐ' படங்கள் வெளிவர இருந்தன. இதனால் விஷால் வெட்டுவதாகச் சொன்னதாக ஆர்யா தெரிவித்தது பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

இந்த பாயும் புலி படத்தின் இசை வெளியீட்டிலும் கலந்து கொள்ளப் போவதாக ட்விட்டரில் ஆர்யா தெரிவிக்க, அதற்கு பதிலாக இப்படிக் கூறியுள்ளார் விஷால்:

"டியர் ஜாம்மி தயவு செய்து எனது இசை வெளியீட்டிற்கு வரவேண்டாம். சென்ற முறை நீ பரபரப்பை ஏற்படுத்திவிட்டாய். இந்த முறை வராதே. லவ் யூ, கடவுள் ஆசீர்வாதங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யா வருவாரா.. ஏதும் பரபரப்புக் கிளப்புவாரா எனக் காத்திருக்கிறது மீடியா. காரணம் இந்த முறை விஜய்யின் புலியும் விஷாலின் பாயும் புலியும் இசை வெளியீட்டிலும் சரி, பட வெளியீட்டிலும் சரி.. ஒரே நாளில் மோதிக் கொள்கின்றன.

 

எழில் இயக்கத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால்!

அடுத்தடுத்து வித்தியாசமான படங்களில் நடித்து வெற்றி பெற்று வரும் விஷ்ணு விஷால் அடுத்து நடிக்கவிருப்பது கமர்ஷியல் காமெடி ஹிட்டுகளைத் தந்து வரும் எழில் இயக்கத்தில்.

ஆரம்பத்தில் துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு என ரொம்ப சீரியஸ் படங்களைத் தந்தவர்தான் எழில். ஆனால் ஹிட் ஒன்றுதான் கோடம்பாக்கத்தில் நிலைக்க வைக்கும் என்பது புரிந்ததால், ரூட்டை மாற்றி மனம் கொத்திப் பறவையை எடுத்தார்.

Vishnu joins with director Ezhil

அந்த ரூட்டிலேயே ‘தேசிங்கு ராஜா', ‘வெள்ளக்கார துரை' ஆகிய படங்களைத் தந்தார்.

இதே போன்ற காமெடிப் கதையில்தான் இப்போது விஷ்ணுவை இயக்குகிறார். இந்தப் படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை, பிற நடிகர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியலை விரைவில் வெளியிட இருக்கின்றனர்.

விஷ்ணு நடிப்பில் உருவாகியுள்ள ‘இடம் பொருள் ஏவல்' படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இதுதவிர ‘கலக்குற மாப்ளே', ‘வீர தீர சூரன்' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் விஷ்ணு.

 

பாகுபலியை தூக்கி சாப்பிட தூபம்போடும் டைரக்டர்.. தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்

சென்னை: பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்டத்தை பார்த்து பயந்து போன நம்மூர் பிரமாண்ட டைரக்டர் உச்ச நட்சத்திரத்துடனான தனது அடுத்த படத்தை வெகு பிரமாண்டமாக எடுக்க முடிவு செய்து பெரிய குழுவோடு களமிறங்கியுள்ளார். ஆனால், இருவரையும் நம்புவதற்கு தயாரிப்பு தரப்புகள் தயாராக இல்லையாம்.

பாகுபலி திரைப்படம் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட விதத்தால் உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வசூலை வாரி குவித்து வருகிறது. இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர், ராஜமவுலிதான் என்று அனைத்து ஊடகங்களும் ரத்தின கம்பளம் விரித்துள்ளன.

Big budget Tamil director is upset with Baahubali

இது நம்மூரிலுள்ள பிரமாண்ட இயக்குநருக்கு கடும் கடுப்புகளை கிளப்பிவிட்டுள்ளது. ராஜமவுலியை அந்த பிரமாண்டம் வெளிப்படையாக வாழ்த்தி தனது பெரியமனுஷத் தனத்தை காண்பிப்பது போல காண்பித்துக் கொண்டாலும், உள்ளுக்குள் வெந்து கொண்டுள்ளது மனது.

உச்ச நட்சத்திரத்தை வைத்து தனது முந்தைய படத்தின் 2வது பாகம் எடுக்க உள்ள அந்த பிரமாண்டம், 27 உதவி இயக்குநர்களையும், 10 நிர்வாக தயாரிப்பாளர்களையும் வைத்து டிஸ்கஷன் செய்துள்ளார். எப்படியாவது, பாகுபலியை முந்திவிட வேண்டும், தயாரிப்பாளருக்கு எத்தனை மொட்டை போட்டாலும் பரவாயில்லை என்ற ரீதியில் ரொம்ப உக்கிரமாக டிஸ்கஷன் நடந்துள்ளது.

இந்நிலையில்தான், டிஸ்கஷன் விஷயத்தை யாரோ வெளியே லீக் செய்துவிட்டனர். கடுப்பிலுள்ளாராம், பிரமாண்டம். பிரமாண்டம், தயாரிப்பாளரை தெருவில் நிறுத்தி எடுத்த முந்தைய பிரமாண்ட படத்துக்கு போட்ட முதலை எடுப்பதற்குள் தயாரிப்பாளருக்கு நுரை தள்ளிவிட்டது. இதில், பாகுபாலியை முந்துகிறேன் பேர்வழி என்ற பெயரில், 300 கோடி என்று பட்ஜெட்டை போட்டு வைத்திருக்கும் பிரமாண்டத்தை நம்பினால் தெருக்கோடிதான் கதியா என்று பல தயாரிப்பாளர்களும் புழுதி பறக்க ஓடிக் கொண்டுள்ளனர்.

பிரமாண்டம் ஹீரோவாக வைத்து படமெடுக்க உள்ள நடிகருக்கும் இப்போது போதாத காலம். மக்கள் ரசனை மாறிவிட்டதால் அந்த குதிரை மீதும் பந்தையம் கட்ட தயாரிப்பாளர்கள் தயங்குகின்றனர். பிரமாண்டத்தின் சமீபத்திய படங்களும் பல லாஜிக் ஓட்டைகளுடன், புளித்து போன காட்சிகளுடன் பல்லிளிக்கின்றன. இருந்தாலும் ராஜமவுலியா, நானா என்ற கேள்விமட்டும் பிரமாண்டத்தை தூங்கவிடாமல் செய்து வருகிறதாம்.