தம்பி வெட்டோத்தியை விட்ருங்க - தயாரிப்பாளர் சங்கம்


தங்கள் பஞ்சாயத்துக்கு மீறிய விஷயங்களே இல்லை என்பதில் உறுதியாக இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கே நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு லயன்பால் அசோசியேஷன் அமைப்பினர்.

கரண், அஞ்சலி, சரவணன் ஆகியோர் நடித்து, வடிவுடையான் டைரக்ஷனில், செந்தில்குமார் தயாரித்துள்ள தம்பி வெட்டோத்தி சுந்தரம் என்ற படம் குமரி மாவட்ட மக்களைப் புண்படுத்தும் விதத்தில் இழிவான காட்சிகளைக் கொண்டிருப்பதாகவும், எனவே படத்தை வெளியிடக் கூடாது என்பதுதான் இந்த நோட்டீஸின் சாரம்.

இந்த படத்தை தடை செய்யவேண்டுமென்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு இவர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

உடனே, தம்பி வெட்டோத்தி சுந்தரத்துக்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு வந்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.

'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படம் திரைக்கு வந்தால் சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படும். தம்பி வெட்டோத்தி சுந்தரத்துக்கு கிரீடம் சூட்டக்கூடியதாக இருக்கும். எனவே, படத்தை தடை செய்ய கோருபவர்கள், அந்த படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, தங்கள் கருத்தை சொல்லலாம். அவர்களுக்கு படத்தை திரையிட்டு காண்பிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்", என்று கூறியுள்ளார் கலைப்புலி தாணு.
 

கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் 'கிளர்ச்சிப்'புயல் அனுஷ்கா!


நடிகை அனுஷ்கா தற்போது கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க மறுக்கிறாராம். காரணம் அவரது ரகசிய சினேகிதராம்.

அனுஷ்கா தமிழிலும் சரி, தெலுங்கும் சரி கவர்ச்சி காட்ட தயங்கியதில்லை. அவர் சும்மா வந்தாலே 'சுரீர்'னுதான் இருக்கும். அவர் கவர்ச்சியாக நடிக்காத ஒரே படம் அநேகமாக தெய்வத் திருமகளாகத் தான் இருக்கும். அரை குறையாக வந்தாலும் சரி, முழுசா உடை அணிந்து வந்தாலும் அழகாகத் தான் இருக்கிறார். இதனால் அனுஷ்காவுக்கு ரசிகர்கள் ஜாஸ்திதான்.

சகட்டுமேனிக்கு கவர்ச்சியாக நடிக்க அனுஷ்கா தயங்குவதில்லை என்பதால் தயாரிப்பாளர்கள் செக்ஸியான கதாபாத்திரங்களுக்கு அவரைத் தான் அணுகுகின்றனர். அப்படி ஒரு படத்திற்கு பிகினியில் நடிக்க அனுஷ்காவை கேட்டுள்ளனராம். கவர்ச்சியான கதாபாத்திரமா அதுவும் பிகினியா நான் மாட்டேன்பா என்று ஒரேயடியாக மறுத்துவிட்டாராம்.

ஏன் இந்த திடீர் பதற்றம் என்று வந்தவர் குழம்பிப் போய் திரும்பி விட்டாராம். பிறகு ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்த பிறகுதான் தெரியவந்ததாம் - அனுஷ்காவின் ரகசிய சினேகிதர் போட்ட தடாவால்தான் கவர்ச்சி காட்ட மறுத்து விட்டார் என்று.

அன்புக் கட்டளைக்கு அடி பணியாவிட்டால் பிறகெப்படி!