கரையோரம் படத்தில் கவர்ச்சி புயலாய் நிகிஷா

இப்பொழுதெல்லாம் கதாநாயகிகள் மரத்தை சுற்றி மட்டும் டூயட் பாடுவதில்லை. வாள் சண்டை, குதிரையேற்றம், என நாயகர்களுக்கு இணையாக வீர தீர சண்டை பயிற்சிகளை கற்றுக்கொள்கின்றனர்.

கரையோரம் என்ற திகில் படத்தில் நாயகியாக நடிக்கும் நிகிஷாவும், படத்திற்காக குதிரையேற்றம் கற்றுக்கொண்டார். கரையோரம் படப்பிடிப்பு கிழக்கு கடற்கரையோரம் உள்ள கோவளம் கடற்கரையில் நடைபெறுகிறது.

இப்படத்தை ஜே.கே.எஸ் என்பவர் இயக்குகிறார். இவர் கன்னடத்தில் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். தமிழில் இதுதான் இவரின் முதல் படம். இப்படத்துக்கு சுஜித் ஷெட்டி இசையமைக்கிறார். ஜெய்ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங்: ஸ்ரீகாந்த், சண்டை காட்சி: கே.டி.வெங்கடேஷ்

கரையோரம் படத்தில் கவர்ச்சி புயலாய் நிகிஷா

செட் போட்டு படப்பிடிப்பு

படம் முழுவதும் கடற்கரை விடுதி ஒன்றில் நடப்பது போல படமாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒருமாதம் வாடகைக்காக பேசியபோது ரூ.50 லட்சம் கேட்டுள்ளனர். ஆனால் கடற்கரையோரம் உள்ள காலி இடத்தில் ரூ.40 லட்சம் செலவில் ரிசார்ட்ஸ் போல செட் போட்டு படமாக்கியுள்ளார்களாம்.

அச்சுறுத்த வரும் அனிமேசன்

இப்படத்தின் திகில் காட்சிகள் அனிமேஷனில் தயாராகிவருகிறதாம். 30 நாட்களுக்குள் படத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கரையோரம் படத்தில் கவர்ச்சி புயலாய் நிகிஷா

இனியா

நான் சிகப்பு மனிதன்' படத்தில் வில்லியாக நடித்த இனியா, தற்போது கரையோரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

நிகிஷா பட்டேல் நாயகி

‘என்னமோ ஏதோ', ‘தலைவா' ஆகியப் படங்களில் நடித்த நிகிஷா பட்டேலும் நடிக்கிறார். இவர்களுடன் சுனிஷ் ஷெட்டி முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

கடற்கரை விடுதி கதை

சென்னையில் இருந்து மங்களூருக்கு தனது நண்பரை சந்திக்க வரும் பெண், இடையில் ஒரு கடற்கரை விடுதியில் அறை எடுத்து தங்குகிறார். அந்த பீச் ரிசார்ட்ஸில் நடக்கும் அந்த பெண் சந்திக்கும் பிரச்சனைகளை திரில்லராக சொல்லியிருக்கிறார்களாம்.

நாயகியை சுற்றி

நாயகி பற்றி நிகிஷா பட்டேலை சுற்றி சுற்றியே கதை நகருகிறது.

இந்த படத்தில் அவருடைய நடிப்பு சிறப்பாக இருக்குமாம்.நடிப்போடு கூடுதல் கவர்ச்சியும் காட்டியுள்ளார் நிகிஷா.

கரையோரம் படத்தில் கவர்ச்சி புயலாய் நிகிஷா

8 நடிகர்கள் மட்டுமே

கணேஷ் பிரசாத், வஷிஷ்டா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சிங்கம்புலி, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் காமெடி கேரக்டரில் வருகின்றனர். இந்த படத்தில் மொத்தம் எட்டு பேர் மட்டுமே நடிக்கின்றனர் என்று படம் பற்றி இயக்குநர் ஜே.கே.எஸ் கூறியுள்ளார்.

பரபரப்பான கதை

குறிப்பிட்ட இடத்தை விட்டு வெளியில் நகராமல் ஒரே இடத்தில் கதை சொல்வது என்பதே பெரியசவால். ஜனங்க சோர்ந்து போகாமலிருக்க வேண்டும். ஆனால் இந்த படத்தில் நாங்க அப்படியொருஅட்டம்ப்ட் பண்ணியிருக்கோம். அதே நேரத்தில் ஒவ்வொரு காட்சியும் அடுத்து என்ன அடுத்து என்னன்னு பரபரக்க வைக்கும் என்றார் ஜே.கே.எஸ்.

 

விஞ்ஞானி - விமர்சனம்

எஸ் ஷங்கர்

நடிப்பு: பார்த்தி, மீரா ஜாஸ்மின், விவேக், போஸ் வெங்கட்

இசை: மாரீஸ் விஜய்

தயாரிப்பு- இயக்கம்: பார்த்தி

சமீபகாலமாக விவசாயத்தின் முக்கியத்துவம், அதைக் காக்க வேண்டியதன் அவசியம் குறித்து அதிக அளவு படங்கள் வர ஆரம்பித்திருப்பதைப் பார்க்க சந்தோஷமாக உள்ளது. இந்தப் படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆபீசில் நல்ல மகசூலைத் தருமா தராதா என்பதையெல்லாம் இரண்டாம்பட்சமாக வைத்துக் கொண்டு, விவசாயத்தைப் பேசுபொருளாக்கிப் பார்க்கும் இந்த புதிய படைப்பாளிகளை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

தமிழனை விட சிறந்த விஞ்ஞானி, சிறந்த விவசாயி, சிறந்த இலக்கியவாதி யாருமில்லை என்றால், உடனே தமிழ் தீவிரவாதம் என்பார்கள் சிலர். தம் இனப் பெருமை என்னவென்பதை உணரும் திராணியற்றவர்கள் இவர்கள்.

விஞ்ஞானி - விமர்சனம்

இந்த விஞ்ஞானி படத்தை எடுத்துள்ள பார்த்தி ஒரு நிஜமான விஞ்ஞானி. நாசாவில் பணியாற்றியவர். தமிழ் இலக்கியத்தின் ஆதியான தொல்காப்பியத்தை ஆய்ந்து, உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானி, விவசாயி தொல்காப்பியர்தான் என்ற முடிவுக்கு வந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். அதை எப்படி எடுத்திருக்கிறார் என்பது விமர்சனத்துக்குரியதுதான். ஆனால் இப்படி ஒரு சிந்தனையை ஆதாரங்களோடு சினிமாவாக்கியதற்காக அவருக்கு வாழ்த்துகள்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப் பாட்டன் தொல்காப்பியன், வகை வகையாக நெல்லைக் கண்டுபிடித்திருக்கிறார். ஒன்றிரண்டல்ல... கிட்டத்தட்ட மூவாயிரத்துக்கும் அதிகமான நெல் வகைகள். ஒவ்வொரு நெல்லுக்கும் ஒரு விசேஷ குணம். இனவிருத்திக்கு, உடல் பலத்துக்கு, நா ருசிக்கு என பல வகை நெல். அதில் ஒன்றுதான் தாகம் தீர்த்தான் நெல்.

விஞ்ஞானி - விமர்சனம்

இந்த நெல்லின் விசேஷம், மிகக் குறைந்த தண்ணீர் இருந்தாலே போதும், குறைந்த நாட்களில் ஒரு போகம் விளைவித்துவிட முடியும். தம் எதிர்காலத் தலைமுறை பஞ்சத்தில், வறட்சியில் தவிக்கும் காலம் வரும் என்பதை முன்னுணரும் தொல்காப்பியர், இந்த தாகம் தீர்த்தான் நெல்லின் தேறிய விதைகளை ஒரு கல்பானையில் போட்டு புதைத்து வைக்கிறார். யாராவது ஒரு நல்லவன் கையில் அது கிட்டும், மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்ற கணிப்பில்.

விஞ்ஞானி - விமர்சனம்

நிகழ்காலம்... நெற்களஞ்சியமான தஞ்சை வறட்சியின் பிடியில். மக்கள் தங்கள் நிலங்களை ரியல் எஸ்டேட்காரர்களுக்கு எழுதிக் கொடுக்கும் நெருக்கடி. அப்போதுதான் அந்த ஊரில் உள்ள மீரா ஜாஸ்மின் குடும்பத்தினருக்கு புதையலாகக் கிடைக்கிறது இந்த தாகம் தீர்த்தான் நெல் வைத்திருக்கும் கல்பானை. கூடவே தொல்காப்பியர் எழுதி வைத்திருக்கும் கல்வெட்டும் கிடைக்கிறது. அந்த நெல்லை மட்டும் உயிர்ப்பித்துவிட்டால், தமிழகமே நெற்களஞ்சியமாக மாறும் நிலை.

இந்த நெல்லுக்கு உயிர்கொடுக்கத் தகுதியான விஞ்ஞானியைத் தேடிப் போகிறார்கள். நாயகன் பார்த்தி இதில் தேர்ந்த விஞ்ஞானி என்பதால் அவரிடம் போய், நெல்லைக் காட்டி உயிர்ப்பிக்கக் கோருகிறார்கள் ஆனால் அவர் மறுத்து விரட்டிவிடுகிறார்.

விஞ்ஞானி - விமர்சனம்

அந்த விஞ்ஞானி பார்த்தி, மீரா ஜாஸ்மின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்தான் என்பது தெரிகிறது. உடனே, விஞ்ஞானியை மணந்து, அவர் மனதை மாற்றி, நெல்லுக்கு உயிர் கொடுக்கும் ஆய்வில் இறங்க வைக்க திட்டம் போடுகிறார் மீரா ஜாஸ்மின்.

திட்டப்படி அவரைத் திருமணமும் செய்கிறார். ஆனால் அதற்குப்பிறகு நடப்பதெல்லாம் அவர் எதிர்ப்பார்த்ததற்கு மாறாகவே அமைகின்றன. ஒரு கொலைப் பழி வேறு விழுகிறது. இதிலிருந்து தப்பித்தாரா? நெல்லுக்கு உயிர் கொடுக்கும் முயற்சி என்னவானது என்பதெல்லாம் சுவாரஸ்யமற்ற மீதிக் கதை.

விஞ்ஞானி - விமர்சனம்

தொடக்க ஓவரில் பிரமாதமாக விளாசிய பேட்ஸ்மேன், பின்னர் ஒரேயடியாக சொதப்புவது மாதிரிதான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் பார்த்தி.

தொல்காப்பியர், அவர் கண்டு பிடித்த நெல் வகைகள் போன்றவற்றைச் சொல்லும் காட்சிகளில் ஏக மிடுக்கு, சுவாரஸ்யம். ஆனால் இவ்வளவு பெரிய விஞ்ஞானி மூவாயிரம் ஆண்டுக்கு முந்தைய நெல் விதையின் மகத்துவம் தெரியாமல், திட்டி விரட்டுவது சரியா?

கிடைத்தது நெல்லாகவே இருந்தாலும் அது அரசாங்க சொத்தாயிற்றே.. அதை இவர்கள் பாட்டுக்கு எடுத்துக் கொண்டு ஊர் ஊராகப் போக போலீஸ் எப்படி அனுமதித்தது?

சஞ்சனா சிங் சமாச்சாரமெல்லாம் ரொம்ப பழசு. இன்னும் வித்தியாசமாக செய்திருக்கலாம்.

ஒரு ஹீரோ செய்ய வேண்டிய டூயட், சண்டை, கொஞ்சம் காமெடி என அனைத்திலும் முயற்சி செய்திருக்கிறார் பார்த்தி. ஆனால் பல காட்சிகளில் அவர் தன் முகத்தை தேமே என்று வைத்துக் கொண்டிருக்கிறார்.

மீரா ஜாஸ்மின்... அந்த பொலிவு இல்லை. டல்லடிக்கிறார். கொலைப் பழியிலிருந்து தப்பி வந்து காட்டில் தஞ்சம் புகும் காட்சிகளில், ஏதோ பிக்னிக் வந்தவர் மாதிரி ஜாலியாகத் திரிகிறார்.

விவேக்கின் காமெடியில் கொஞ்சமல்ல, ரொம்பவே 'ஏ' இருந்தாலும், படத்தின் அபத்தங்களைப் பொறுத்துக் கொள்ள உதவுகிறது. குறிப்பாக அந்த நீச்சல் குள காமெடி.

பாலா சிங், தலைவாசல் விஜய் போன்றோர் செட் ப்ராபர்ட்டிகள் மாதிரிதான். சொன்னதை ஒப்பித்திருக்கிறார்கள்.

இசையும் ஒளிப்பதிவும் பரவாயில்லை எனும் அளவுக்குதான். பார்த்தி - மீராவின் ஒரு டூயட் ஓகே.

படத்தின் இறுதியில், இந்தக் கதைக்கான ஆதாரங்கள் என பல விஷயங்களை பட்டியலிடுகிறார் இயக்குநர் பார்த்தி. அதற்கு முன் பார்த்த காட்சிகளின் அபத்தங்களை மறந்து, பெருமையாய் உணர முடிந்தது. இன்னும் கவனமெடுத்து காட்சிகளை அமைத்திருந்தால் இந்தப் படம் தமிழனுக்கு பெருமை சேர்க்கும் பட்டியலில் இடம்பிடித்திருக்கும்!

 

சிகப்பு ரோஜாக்கள் 2-ம் பாகம்... பாரதிராஜா மகன் இயக்குகிறார்!

சிகப்பு ரோஜாக்கள் படத்தின் 2-ம் பாகத்தை பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்குகிறார்.

பாரதிராஜா இயக்கத்தில் 1978-ல் வெளிவந்து மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய வெற்றிப் படம் சிகப்பு ரோஜாக்கள். பாக்யராஜ் கதை எழுதியிருந்தார்.

சிகப்பு ரோஜாக்கள் 2-ம் பாகம்... பாரதிராஜா மகன் இயக்குகிறார்!

கமல் சைக்கோ கொலையாளி கேரக்டரில் நடித்து இருந்தார். ஸ்ரீதேவிதான் கதாநாயகி. இளையராஜாவின் இனிமையான பாடல்கள், மிரட்டல் இசை, பாரதிராஜாவின் மிகச் சிறந்த இயக்கம் அனைத்தும் சேர்ந்து இந்தப் படத்தை 175 நாட்கள்வரை ஓட வைத்தது.

இந்த படத்தில் இடம் பெற்ற நினைவோ ஒரு பறவை, இந்த மின் மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது ஆகி இரண்டு பாடல்களும் இடம் பெறாத நிகழ்ச்சிகள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

சிகப்பு ரோஜாக்கள் 2-ம் பாகம்... பாரதிராஜா மகன் இயக்குகிறார்!

இதே படம் இந்தியில் ரெட் ரோஸ் என்ற பெயரில் பாரதிராஜாவால் ரீமேக் செய்யப்பட்டது.

இப்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் கமல் கேரக்டரில் விசாகன் நடிக்கிறார். பாரதிராஜா மகன் மனோஜ், தன் பெயரை மனோஜ் பாரதிராஜா என்று மாற்றிக் கொண்டு செய்கிறார்.

இந்தப் படத்துக்கு சிகப்பு ரோஜாக்கள் 2 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

 

என் தங்கச்சி சக நடிகையை அடித்தாரா?: பிரியங்கா சோப்ரா வக்காலத்து

மும்பை: தனது தங்கை மன்னாரா சக நடிகை ஸ்ரத்தா தாஸை குச்சியால் அடிக்கவில்லை என்று நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

பிரியங்கா சோப்ராவின் தங்கை மன்னாராவும் நடிகையாகியுள்ளார். அவர் படுகவர்ச்சி காட்டி நடித்துள்ள ஜித் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய படத்தில் மன்னாராவுடன் ஸ்ரத்தா தாஸும் நடித்துள்ளார். படத்தில் ஒரு காட்சியில் மன்னாரா குச்சியை வைத்து ஸ்ரத்தாவை தாக்கும் காட்சி உள்ளது. இந்த காட்சியை படமாக்கியபோது மன்னாரா தன்னை நிஜமாகவே அடித்துவிட்டதாக ஸ்ரத்தா குற்றம் சாட்டியிருந்தார்.

என் தங்கச்சி சக நடிகையை அடித்தாரா?: பிரியங்கா சோப்ரா வக்காலத்து

இந்நிலையில் ஜித் படம் தொடர்பான நிகழ்ச்சியில் மன்னாராவுடன், பிரியங்கா சோப்ராவும் கலந்து கொண்டார். அப்போது ஸ்ரத்தா குற்றச்சாட்டு பற்றி செய்தியாளர்கள் மன்னாரா மற்றும் பிரியங்காவிடம் கேட்டனர்.

அதற்கு மன்னாரா கூறுகையில்,

ஸ்ரத்தா ஒரு நல்ல நடிகை. படத்தில் அவருக்கு முக்கியமான வேடம் அளிக்கப்பட்டுள்ளது. அவரை யாரும் நிஜத்தில் அடிக்கவில்லை. படக்குழுவினர் தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்றார்.

பிரியங்கா கூறுகையில்,

ஸ்ரத்தாவை யாரும் நிஜத்தில் அடிக்கவில்லை. அடிக்கும் காட்சியை தான் படமாக்கினர். சிலநேரம் விபத்துகள் நடக்கத் தான் செய்யும் என்றார்.

 

கருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்!

ஐந்து இளைஞர்களுக்கும், ஒரு போலீஸ் அதிகாரிக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. அதை சமாளிக்க முடியாமல் நண்பர்கள் திருட்டுரயில் ஏறிச்செல்லும் சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள். சென்னையில் இறங்கிய பின் அதைவிட பெரும் பிரச்சனை அவர்களுக்கு காத்திருந்தது. அதிலிருந்து நண்பர்கள் மீண்டார்களா..? இல்லையா...? என்பதுதான் திருட்டு ரயிலின் கதை.

கருணாநிதியின் குடும்பத்து வாரிசு ஒருவர் திருட்டு ரயில் படத்தில் அறிமுகமாகிறார். மகன் மு.க.முத்து தொடங்கி பேரன்கள் உதயநிதி, துரை தயாநிதி, அருள்நிதி வரை கருணாநிதியின் குடும்பத்து வாரிசுகள் சினிமாவில் கோலோச்சி வருகின்றனர்.

கருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்!

ரக்ஷன்-கேத்தி

அந்த வரிசையில் தமிழ் சினிமாவிற்கு புதிதாக அறிமுகமாகிறார் நாயகன் ரக்ஷன். இவர்களுடன், சரண் செல்வம் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்க, கேத்தி ஹீரோயினாக நடிக்கிறார்.

கருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்!

திருப்பதியின் திருட்டுரயில்

எஸ்.எஸ்.எஸ் மூவிஸ் சார்பில் எ.எஸ்.டி. சலீம் மற்றும் அணு மூவிஸ் பி.ரவிக்குமார் தயாரிக்கும் இப்படத்தை திருப்பதி என்பவர் இயக்குகிறார். ஜெயப்ரகாஷ் இசையமைக்க, விஜய் வல்சன் ஒளிப்பதிவு செய்கிறார்.திருப்பதி இயக்கும் இரண்டாவது படம்தான் திருட்டு ரயில். இவர் ஏற்கனவே முத்துநகரம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

கருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்!

கூத்துப்பட்டறை நாயகன்

திருட்டுரயில் படத்தினை முதல்பாதி காமெடியாகவும் அடுத்த பாதியை சீரியஸாகவும் இயக்கியுள்ளாராம். ரக்ஷன் சிறுவயதில் இருந்தே திருப்பதிக்கு தெரிந்தவராம். கூத்துப்பட்டறையில் பயிற்சியும் பெற்றுள்ளாராம்.

மயில்சாமி-சென்ராயன்

இவர்களுடன் மயில்சாமி, சென்ராயன், ரவிக்குமார், பிரஷாந்த், பாலாஜி, சண்முகராஜன், இமான் அண்ணாச்சி, , சிவகுமார், பிளாக் பண்டி, தீப்பெட்டி கணேசன், அருள் ஜோதி, ராஜேந்திரன், பிரதீப் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்!

சென்னை கதை களம்

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம்.

எப்படி வாரிசு

அது சரி ரக்ஷன் எப்படி கருணாநிதியின் குடும்பத்தின் வாரிசு என்று கேட்பவர்களுக்கு, உதயநிதியின் தாய்மாமா அதாவது தாய் துர்காவின் அண்ணன் மகன்தான் இந்த ரக்ஷன் என்கின்றனர். எப்படியோ கருணாநிதியின் குடும்பத்து வாரிசை திருட்டு ரயிலில் ஏற்றிவிட்டார் இயக்குநர் திருப்பதி.

 

நடிகையின் நிச்சயதார்த்த செய்தியை கசியவிட்டது யார் தெரியுமா?

சென்னை: நம்பர் நடிகையின் நிச்சயதார்த்த செய்தியை ஊர், உலகத்திற்கு எல்லாம் கசியவிட்டது தொழில் அதிபர் சார் தானாம்.

நம்பர் நடிகைக்கு மார்க்கெட் முன்பு போல் இல்லாமல் டல்லடித்துள்ளது. இந்நிலையில் அவருக்கும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபரும், படத் தயாரிப்பாளருமான ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்ற செய்தி தீயாக பரவியது.
ஆனால் இதை நடிகையும், அவரது தாயும் மறுத்தனர். நிச்சயதார்த்தம் நடந்தால் உங்களுக்கு எல்லாம் சொல்லாமலா என்று தெரிவித்தார்கள்.

எனக்கு நிச்சயதார்த்தம் என்று சொல்வதை விட்டுவிட்டு வேறு ஏதாவது பற்றி பேசுங்கள், போர் அடிக்குது என்றார் நடிகை. ஆனால் திருமண செய்தி ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் தான் நடிகை இந்த செய்தியை கசியவிட்ட புண்ணியவான் யார் என்று புலன் விசாரணை நடத்தினாராம். விசாரணையில் அந்த புண்ணியவான் வேறு யாரும் இல்லை தனக்கு யாருடன் நிச்சயமானது என்று கூறப்படுகிறதோ அவரே தான் என்பது நடிகைக்கு தெரிய வந்து அப்படியே ஷாக் ஆகிவிட்டாராம்.

அடப்பாவி இந்த ஆள் செய்த வேலை தானா என்று நினைத்து அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டாராம். இந்த திருமண செய்தியால் அம்மணிக்கு வந்த பட வாய்ப்பும் பறிபோனது என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக தன்னை பற்றிய செய்தியை கசியவிட்டு அதை மறுப்பது 'அந்த' ஹீரோவின் வேலையாச்சே.

 

பாக்யராஜ் நடித்த துணை முதல்வர் இசை வெளியீடு... மேடையில் குவிந்த முன்னாள் நாயகிகள்!

பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயாகனாக நடிக்கும் துணை முதல்வர் படத்தின் இசையை மீனா, ராதிகா, பூர்ணிமா உள்ளிட்ட முன்னாள் கதாநாயகிகள் பலரும் வெளியிட்டு வாழ்த்தினர்.

துணை முதல்வர் படத்தை பாக்யராஜ் இயக்கவில்லை. நடிக்க மட்டும் செய்கிறார். இதில் ஜெயராமும் இன்னொரு நாயகனாக வருகிறார். ஸ்வேதாமேனன் நாயகியாக நடிக்கிறார். ரா.விவேகானந்தன் இயக்குகிறார். ஆர்.சங்கர், கே.ஜி.சுரேஷ்பாபு தயாரிக்கின்றனர்.

பாக்யராஜ் நடித்த துணை முதல்வர் இசை வெளியீடு... மேடையில் குவிந்த முன்னாள் நாயகிகள்!

முன்னாள் நாயகிகள்

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை ‘சத்யம்' தியேட்டரில் நடந்தது. இதில் முன்னாள் கதாநாயகிகள் மீனா, ஊர்வசி, ரோகிணி, சுகாசினி, ராதிகா, ரேகா, ஸ்ரீப்ரியா, பூர்ணிமா, வடிவுக்கரசி, கோவை சரளா ஆகிய பத்து பேர் பங்கேற்றனர். அவர்களே பாடல் சி.டி.யையும் வெளியிட்டனர். இவர்களில் சுகாசினி தவிர மற்ற அனைவருமே பாக்யராஜுடன் நடித்தவர்கள்.

பாக்யராஜ் நடித்த துணை முதல்வர் இசை வெளியீடு... மேடையில் குவிந்த முன்னாள் நாயகிகள்!

தாய்க்குலத்துக்கே முதலிடம்

பாக்யராஜ் தன் படங்களை தாய்க்குலத்தை மனதில் வைத்தே எடுப்பது வழக்கம். அந்த சென்டிமென்ட் காரணமாக, இந்த முறை தன் படத்தின் இசை வெளியீட்டை நடிகைகளின் தலைமையில் வெளியிட்டார்.

பாண்டியராஜன்

இயக்குநர் பாண்டியராஜன் விழாவில் பங்கேற்று பேசும்போது, ‘‘சினிமாவில் ஆரம்ப காலத்தில் சாப்பாட்டுக்கே வழியின்றி கஷ்டப்பட்டேன். அதன் பிறகு பாக்யராஜ் மூலம் வளர்ந்து பெரிய ஆளானேன்," என்றார்.

பாக்யராஜ் நடித்த துணை முதல்வர் இசை வெளியீடு... மேடையில் குவிந்த முன்னாள் நாயகிகள்!

என் குரு

ஊர்வசி பேசும் போது, சினிமாவில் நடிக்க தெரியாமல் இருந்த எனக்கு நடிப்பு சொல்லி கொடுத்து நடிகையாக்கிய குரு பாக்யராஜ் சார் என்றார்.

இயக்குநர்கள் பார்த்திபன், ஆர்.கே.செல்வமணி ஆகியோரும் விழாவில் பங்கேற்று வாழ்த்திப் பேசினார்கள்.

 

34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக பாரதிராஜா

34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் இயக்குநர் பாரதிராஜா. இந்தப் படத்தை என்வி நிர்மல்குமார் இயக்குகிறார்.

ஓம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பாரதிராஜா தனது மனோஜ் கிரியேஷன்ஸ் மூலம் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் மூலம் முதல் முறையாக பாரதிராஜாவுடன் இணைகிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. கங்கை அமரன் பாடல்கள் எழுதுகிறார்.

34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக பாரதிராஜா

ஒரு வயதான தந்தைக்கும் அவர் மகனுக்குமான பாசப் போராட்டத்தைச் சொல்லும் படம் இது என்கிறார்கள். படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் அமெரிக்காவில் நடக்கவிருக்கிறது.

பாரதிராஜா இயக்குநராவதற்கு முன், ஹீரோவாகத்தான் முயற்சி செய்தார். அப்போது அந்த ஆசை நிறைவேறவில்லை. புகழ்பெற்ற இயக்குநரான பின்னர் 1980-ல் கல்லுக்குள் ஈரம் படத்தில் நாயகனாக நடித்தார். அந்தப் படத்தை பாரதிராஜா மேற்பார்வையில் நிவாஸ் இயக்கினார். படமும் பாடல்களும் சிறப்பாக அமைந்தும் படம் சுமாராகத்தான் போனது. அதற்குப் பிறகு ஹீரோவாக அவர் நடிக்கவில்லை.

34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக பாரதிராஜா

தாவணிக் கனவுகள், ஆயுத எழுத்து, ரெட்டைச் சுழி, பாண்டிய நாடு படங்களில் அழுத்தமான பாத்திரங்களில் நடித்தார். தாவணிக் கனவுகள் மற்றும் பாண்டிய நாடு படங்களில் அவர் பாத்திரம் சிறப்பாக அமைந்தது.

34 ஆண்டுகளுக்குப் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் பாரதிராஜா.

 

ஈழப் போரில் உயிர் தப்பியவர் உருவாக்கும் விடுதலை புலிகள் பற்றிய புதிய படம்!

இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அவர்களின் போராட்டங்களை மையமாக கொண்டு பல ஆவண மற்றும் திரைப் படங்கள் கடந்த காலங்களில் வெளி வந்துள்ளன. சமீபத்தில் கூட புலிப்பார்வை என்ற தமிழ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஈழப் போரில் உயிர் தப்பியவர் உருவாக்கும் விடுதலை புலிகள் பற்றிய புதிய படம்!

இதோ அடுத்து விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, ஈழப் போரில் உயிர் தப்பிய திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் அந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மைன்பீல்டு (கண்ணிவெடி பகுதி) என்ற பெயரில் படம் ஒன்றைத் தயாரிக்கிறார். இதனை ஷிலாதித்யா போரா என்பவர் இயக்குகிறார். அவருக்கு இது முதல் படம்.

இந்த படத்தை அடுத்த ஆண்டு தொடங்கத் திட்டமிட்டுள்ளார் போரா. படத்தின் கதையானது தமிழ் படதயாரிப்பாளர் ஒருவரை பற்றியது. அவர் விடுதலை புலிகள் இயக்க தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனைச் சந்திக்கிறார்.

பிரபாகரனின் கருத்துகள் தயாரிப்பாளருக்கு ரொம்பப் பிடித்துப் போக, படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்ற தனது கனவை விட தனி தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்ற கனவே மிக முக்கியமானது என பிரபாகரன் அவருக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்.

ஈழப் போரில் உயிர் தப்பியவர் உருவாக்கும் விடுதலை புலிகள் பற்றிய புதிய படம்!

இதைத் தொடர்ந்து இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அதில் இணைந்து 25 வருடங்கள் வரை தனது வாழ்வினைச் செலவிடுகிறார். அந்த இயக்கத்தின் கொள்கையை விளக்கும் படங்களைத் தயாரிக்கிறார் என்று போகிறதாம் கதை.

யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவரான படதயாரிப்பாளர் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக வருகிறார். அவரது அடையாளத்தை மறைத்தே படத்தில் காட்டவிருக்கிறார் போரா.

இந்தியா-இலங்கை-விடுதலைப் புலிகள் என்ற கோணத்தைத் தாண்டி இது ஒரு மனிதன் குறித்த பதிவு. ஒருவரது வாழ்க்கையின் உண்மை சம்பவத்தை வைத்து படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன. ஆனால், இது ஓர் ஆவண படம் அல்ல என்கிறார் போரா.

வருகிற பிப்ரவரி-மார்ச் 2015ல் படம் திரைக்கு வரும். இலங்கை மற்றும் கேரளாவில் இதற்கான படப்பிடிப்பு நடக்கும். இது முதல் படமாக இருந்தாலும் தனக்கு மிக முக்கியமானது என்றும் அவர் கூறுகிறார்.

ஈழப் போரில் உயிர் தப்பியவர் உருவாக்கும் விடுதலை புலிகள் பற்றிய புதிய படம்!

இந்த படத்தின் ஒளிப்பதிவை கேங்ஸ் ஆப் வாசிபூர், பாம்பே வெல்வெட் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ராஜீவ் ரவி மேற்கொள்கிறார். பெரும்பான்மையான மணிரத்னம் படங்களில் பணியாற்றியுள்ள ஏ. ஸ்ரீகர் பிரசாத் படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். படத்திற்கான ஒலிப்பதிவு பணிகளை ரசூல் பூக்குட்டி செய்கிறார்.

படத்தில் எந்த சார்பு நிலையும் எடுக்காமல், நடந்ததை அப்படியே பதிவு செய்வதாகக் கூறியுள்ளார் போரா. பார்க்கலாம்!

 

கத்தி படத்தில் லைகா பெயரைப் போடலாம்.. மீறி அச்சுறுத்தினால் தண்டனை! - நீதிமன்றம் அதிரடி

நடிகர் விஜய் நடித்த, 'கத்தி' படத்தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை, படத்திலும், விளம்பரங்களிலும் வைத்துக் கொள்ள, பாதுகாப்பு வழங்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, தி.நகரில் உள்ள, லைகா தயாரிப்பு நிறுவனம், 'கத்தி' படத்தை தயாரித்தது. நடிகர் விஜய் நடித்த இந்தப் படத்தை, வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. 'இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர்களால், லைகா தயாரிப்பு நிறுவனம் நடத்தப்படுகிறது; 'கத்தி' படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்' என, சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

கத்தி படத்தில் லைகா பெயரைப் போடலாம்.. மீறி அச்சுறுத்தினால் தண்டனை! - நீதிமன்றம் அதிரடி

கடந்த மாதம், 20ம் தேதி, இரண்டு சினிமா தியேட்டர்கள் தாக்குதலுக்கு ஆளாகின. இதையடுத்து, படத்தின் பிரின்ட்களிலும், விளம்பரங்களிலும், 'லைகா' பெயரை பயன்படுத்த மாட்டோம் என, நிறுவனம் சார்பில், கடிதம் அளிக்கப்பட்டது.

லைகா மனு

அதைத் தொடர்ந்து, படமும் வெளியானது. இந்நிலையில், கடந்த, 7ம் தேதி, உள்துறை செயலருக்கும், டி.ஜி.பி.,க்கும், லைகா நிறுவனம் சார்பில், மனு அளிக்கப்பட்டது. போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அப்போதுதான், நிறுவனத்தின் பெயரை, படத்திலும், விளம்பரத்திலும் வெளியிட முடியும் என, மனுவில் கூறப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு வழங்கக் கோரி, உயர் நீதிமன்றத்திலும், லைகா தயாரிப்பு நிறுவனம், மனுத் தாக்கல் செய்தது.

தீர்ப்பு

மனுவை, நீதிபதி ராமசுப்ரமணியன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜரானார். நீதிபதி ராமசுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவு:

ஒரு கட்சியின் தலைவருக்கு, மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்ட கடிதத்தில், 'நியாயமான கோரிக்கையை ஏற்கிறோம்; உணர்வுகளை மதிக்கிறோம்; படம் மற்றும் விளம்பரங்களில் இருந்து, நிறுவனத்தின் பெயரை நீக்க, ஒப்புக் கொள்கிறோம்' என, கூறப்பட்டுள்ளது.

சென்சார் அனுமதித்த பிறகு...

இதுபோன்ற கடிதங்களுக்கு, முக்கியத்துவம் அளிக்க முடியாது. ஒரு படத்தை திரையிட, சென்சார் போர்டு சான்றளித்து விட்டால், மதம், ஜாதி, இனம், மொழி உணர்வுகளை காரணம் காட்டி, மீண்டும் தணிக்கை செய்ய, எந்த அமைப்பும் கோர முடியாது.

பிளாக்மெயில்

படத்தை வெளியிட சான்றளிக்கப்பட்ட பின், வசனம், காட்சிகள், தலைப்புகளை நீக்கும்படி கோருகிற அமைப்புகளின் நடவடிக்கையானது, 'பிளாக்மெயில்' போன்றதாகும். இத்தகைய மிரட்டல், வெற்றி பெற, அரசு அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு வெற்றி பெற அனுமதித்தால், சகிப்புதன்மை இல்லாத சிலரிடம், ஆட்சி அதிகாரத்தையும், சட்டத்தின் ஆட்சியையும், சரண்டர் செய்வதற்கு வழிவகுத்து விடும்.

எதிர்ப்பு சரிதானா?

இலங்கை அதிபருக்கு நெருக்கமானவர்கள் என, படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்த அமைப்புகள், அந்த படத்தின் மூலம், அந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு வருமானம் கிடைப்பதை எதிர்க்கவில்லை. படத்தை மக்கள் பார்ப்பதற்கும், அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. படத்தின் மூலம் அதிக வசூலாகி உள்ளது என, பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. அதன் மூலம், படத்துக்கு, சென்சார் போர்டு அல்லது மக்கள் தரப்பில், எந்த எதிர்ப்பும் இல்லை என்பதை காட்டுகிறது.

மக்களைத் தடுக்க முடியவில்லையே!

எந்த அமைப்பிடம், மனுதாரர் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டதோ, படத்தை நிராகரிக்கும்படி தமிழக மக்களை, அந்த அமைப்பால் கேட்க முடியவில்லை. தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை அகற்றியதால், அந்த அமைப்பும் சந்தோஷப்பட்டு கொண்டது. எனவே, கொள்கை அடிப்படையில், எதிர்ப்பு இல்லை.

லைகாவுக்கு பாதுகாப்பு கொடுங்க

தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை, படத்திலும், விளம்பரத்திலும் வெளியிட ஏதுவாக, மனுதாரருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். யாராவது அச்சுறுத்தலை ஏற்படுத்தினால், அவர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

 

'சீரியல் கிஸ்ஸர்' இம்ரான் ஹஷ்மி சன்னி லியோனுடன் நடிக்க விருப்பம்

மும்பை: பாலிட் நடிகர் இம்ராஷ் ஹஷ்மி முன்னாள் ஆபாச பட நடிகையான சன்னி லியோனுடன் சேர்ந்து நடிக்க தயாராக உள்ளாராம்.

இம்ரான் ஹஷ்மி, கங்கனா ரனௌத் உள்ளிட்டோர் நடித்துள்ள உங்ளி படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்த பட ஹீரோ இம்ரான் ஹஷ்மி பற்றி உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறோம். தெரியாதவர்களுக்காக இந்த சிறிய விளக்கம். இம்ரான் ஹஷ்மி படங்கள் என்றால் உதட்டோடு உதட்டை வைத்து அழுத்தி நச்சென்று இச் கொடுக்கும் காட்சிகள் கட்டாயமாக இருக்கும்.

சான்ஸ் கிடைத்தால் சன்னிக்கு லிப் டூ லிப் கொடுக்க இம்ரான் ஹஷ்மி தயார்  

இது தவிர ஹீரோயினுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளுக்கும் குறைவே இருக்காது. இந்த விஷயத்தில் இம்ரான் மிகவும் தாராளமானவர். அப்படிப்பட்டவருடன் அளவை தாண்டி கவர்ச்சி காட்டும் சன்னி லியோன் நடித்தால் எப்படி இருக்கும். சில கவர்ச்சி படங்கள் எல்லாம் இம்ரான், சன்னி நடிக்கும் படத்திடம் பிச்சை எடுக்க வேண்டும்.

இம்ரானோ உங்ளி படத்தில் சன்னி லியோனுடன் நடிக்க முடியாது என்று தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

சன்னி லியோனுடன் நடிக்க மாட்டேன் என்று நான் கூறவில்லை. அது வெறும் வதந்தி. தயாரிப்பாளர்கள் சன்னியை அணுகியபோது எங்கள் டேட்ஸ் ஒத்துப் போகவில்லை. டேட்ஸ் பிரச்சனையால் தான் அவருடன் நடிக்கவில்லை. நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் அவருடன் சேர்ந்து நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

 

'ஆம்பள' படப்பிடிப்பில் விபத்து: விஷால் காயம்

சென்னை: ஆம்பள படப்பிடிப்பில் சண்டை காட்சியை படமாக்கியபோது விஷால் காயம் அடைந்தார்.

விஷால் தற்போது சுந்தர் சி. இயக்கத்தில் ஆம்பள படத்தில் நடித்து வருகிறார். இதில் ஹன்சிகா, மதுரிமா உள்பட 3 நாயகிகள். படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்து வருகிறது. சுந்தர் சண்டை காட்சி ஒன்றை படமாக்கினார்.

'ஆம்பள' படப்பிடிப்பில் விபத்து: விஷால் காயம்

சண்டை காட்சியில் விஷால் வில்லனுடன் மோத வேண்டும். டூப் போடாமல் அவரே நடித்தார். விஷாலின் உடம்பில் கயிறு கட்டி அவர் வில்லனுடன் ஆக்ரோஷமாக மோதும் காட்சியை படமாக்கினர். விஷால் கயிறு மூலம் உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். அப்போது கயிறு அறுந்து விழவே உயரத்தில் இருந்து விஷால் கீழே விழுந்தார். இதில் அவர் காயம் அடைந்தார். அவரது உடலில் ஆங்காங்கே சிராய்ப்பு ஏற்பட்டது.

இதை பார்த்த படக்குழு அதிரிச்சி அடைந்தது. விஷாலை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தை அடுத்து அன்றைய படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

முன்னதாக பூஜை படப்பிடிப்பிலும் விஷாலுக்கு காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேடையிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த நாடக நடிகர்... மரணக் காட்சியில் பரிதாபம்!

திருவனந்தபுரம்: மேடை நாடகத்தில், மரண காட்சியில் நடித்துக் கொண்டிருந்த போது, மேடையிலேயே சுருண்டு விழுந்து நடிகர் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

கடந்த புதனன்று இரவு கேரளா கலா அகாடமி ஆப் ஆர்ட்டிஸ் சார்பில் காயம்குளத்தில் உள்ள கே.பி.ஏ.சி. ஆடிட்டோரியத்தில், ‘பகவத சப்தஹம்' நாட்டிய நாடகத்தின் ஆறாம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில், ஆர்.சி.பிள்ளை என்கிற ராமச்சந்திரன் பிள்ளை (45) என்பவர் கோவிந்தன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, கோவிந்தன் கதாபாத்திரம் மரணமடைவது போன்ற காட்சி வந்தது. அதில் நடித்துக் கொண்டிருந்த போது, திடீரென நிஜமாகவே மயங்கி விழுந்தார் பிள்ளை.

உடனடியாக, பிள்ளையை நாடகக் குழுவினர் அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பிள்ளை, கொச்சி மெட்ரோ பணியில் காவலராக பணி புரிந்து வந்தார். இவருக்கு கிரிஜா என்ற மனைவி உள்ளார்.

 

பந்து.. ஒரு தவறான செல்போன் அழைப்பால் நிகழும் விபரீதங்களைச் சொல்லும் படம்!

தகவல் தொடர்பு சாதனங்கள் நிறைந்துள்ள இன்றைய சமுதாயத்தில் செல்போன் இன்றியமையாததாக உள்ளது.

மேலும் தவறுதலான செல்போன் அழைப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், அப்படி ஒரு தவறான அழைப்பால் நிகழும் பிரச்சனையில் எதிர்பாராத விதமாக மாட்டிக்கொள்ளும் ஹீரோவின் வாழ்க்கை காவல்துறையின் தவறான நடவடிக்கையால் எப்படி பந்தாடப்படுகிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையால் சொல்லும் படம் தான் இந்தப் 'பந்து'.

பந்து.. ஒரு தவறான செல்போன் அழைப்பால் நிகழும் விபரீதங்களைச் சொல்லும் படம்!

இப்படத்தில் அறிமுக நாயகனாக பிரதாப் நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக அன்ஷிபா நடித்திருக்கிறார். இவர் மலையாளத்தில் ஹிட்டாகி வசூலை வாரிக்குவித்த ‘திருஷ்யம்' படத்தில் மோகன்லாலுக்கு மகளாக நடித்தவர்.

பந்து.. ஒரு தவறான செல்போன் அழைப்பால் நிகழும் விபரீதங்களைச் சொல்லும் படம்!

மேலும் தமிழிலும் ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை', ‘நாகராஜசோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ' ஆகிய படங்களிலும் ஹீரோயினாக நடித்தவர்.

இவர்களுடன் பல புதுமுகங்களும் நடித்திருக்கும் இப்படத்தை ஜெயபாலகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்.

பந்து.. ஒரு தவறான செல்போன் அழைப்பால் நிகழும் விபரீதங்களைச் சொல்லும் படம்!

திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

நந்தா இசையமைத்திருக்கிறார். எஸ்.பி.முத்துப்பாண்டியன் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களை பத்மாவதி எழுதியிருக்கிறார். எடிட்டிங்கை மீனாட்சி சுந்தர் கவனிக்க, சூர்ய மகேஷ் ஸ்டண்ட் காட்சிகளை அமைத்திருக்கிறார். வேதாத்திரி பிக்சர்ஸ் மற்றும் பவர்கிங் பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.

பந்து.. ஒரு தவறான செல்போன் அழைப்பால் நிகழும் விபரீதங்களைச் சொல்லும் படம்!

படப்பிடிப்பு, தொழில்நுட்ப வேலைகள் எல்லாம் முடிந்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

 

விஜய்வசந்த் - நிகிஷா பட்டேல் நடிக்கும் சிகண்டி!

தரமான படம் என்றும் - பக்கா கமர்ஷியல் பார்முலா என்றும் - வியாபார வெற்றிபெற்ற படம் என்றும் பரபரப்பாக பேசப்பட்ட "என்னமோ நடக்குது" படத்தை இயக்கிய ராஜபாண்டி, மீண்டும் விஜய் வசந்தை வைத்து இயக்கும் படம் சிகண்டி.

நிகிஷா பட்டேல் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் நாசர், சரண்யா, மனோஜ்.கே.பாரதி நடிக்கிறார்கள். கௌரவ வேடத்தில் சூரி நடிப்பார் என்று தெரிகிறது.

விஜய்வசந்த் - நிகிஷா பட்டேல் நடிக்கும் சிகண்டி!

சிகண்டியில் அழுத்தமான - வேறுபட்ட கதாப்பாத்திரம் ஒன்றில் சமுத்திரகனி நடிக்கிறாராம்.

இந்தப் படம் குறித்து இயக்குனர் ராஜபாண்டி கூறுகையில், "பள்ளிக் கல்வி சம்மந்தமாக சில படங்கள் ஏற்கனவே வந்திருக்கிறது. மேலும் வரலாம். அவர்கள் இதுவரை சொல்லாத, சொல்லப்படாத விஷயங்கள் நிறைய உள்ளன.

விஜய்வசந்த் - நிகிஷா பட்டேல் நடிக்கும் சிகண்டி!

அந்த விஷயங்களை முழுமையாக தருவதற்காக கிட்டத்தட்ட ஆறு மாதகாலம் சம்மந்தப்பட்ட கல்வியாளர்கள் - சமூக ஆர்வலர்கள், பத்திரிகை நண்பர்களுடன் ஆலோசித்து பல நல்ல தகவல்களை திரட்டி உள்ளோம். அதைத்தான் திரைக்கதையாக உருவாக்கியுள்ளோம்.

ஒரு இயக்குனராக என் பார்வையில் கல்வியின் தரம் - குறிப்பாக பள்ளிக் கல்வியின் தரம் இப்படியெல்லாம் இருக்கலாமே என்கிற ஆதங்கம் இந்த சிகண்டியில் வெளிப்படும்.

விஜய்வசந்த் - நிகிஷா பட்டேல் நடிக்கும் சிகண்டி!

படம் பார்க்கிற ஒவொருவரும் படத்தில் எதோ ஒரு சம்பவத்தில் தன்னை தொடர்பு படுத்தி பார்க்க முடியும். படப்பிடிப்பு விரைவில் துவங்கி படம் மே மாதம் வெளியாக உள்ளது.

"என்னமோ நடக்குது" படத்தை போலவே " சிகண்டி " படத்தையும் அதிக பொருட்செலவில் டிரிபிள் வி ரெகார்ட்ஸ் பட நிறுவனம் சார்பாக வி.வினோத்குமார் தயாரிக்கிறார்," என்றார்.

விஜய் வசந்தின் சகோதரர்தான் இந்த வினோத்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விழிமூடி யோசித்தால் விமர்சனம்

Rating:
2.5/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: கேஜி செந்தில்குமார், நிகிதா, ஊர்வசி, பவர் ஸ்டார் சீனிவாசன்

ஒளிப்பதிவு: கௌபாசு

இசை: ஆதிஃப்

தயாரிப்பு - இயக்கம்: கேஜி செந்தில்குமார்

புதிய இயக்குநர் கேஜி செந்தில்குமார் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள ரொமான்டிக் த்ரில்லர் விழிமூடி யோசித்தால்.

கல்லூரிப் படிப்புக்காக கோவையிலிருந்து சென்னைக்கு வருகிறார் நாயகன் செந்தில் குமார். ஊர்க்கார நண்பன் வீட்டில் தங்கியபடி கல்லூரிக்குச் செல்லும் செந்தில், பக்கத்து வீட்டில் வசிக்கும் நிகிதாவைப் பார்த்ததும் காதல் வசப்படுகிறார்.

மறுநாள் கல்லூரிக்குச் சென்று பார்த்தால், தன் வகுப்பில்தான் நிகிதாவும் படிக்கிறார் என்பதை அறிந்து கொள்கிறார். அப்போது இன்னொரு விஷயமும் தெரிகிறது. நிகிதாவுக்கு வாய் பேசமுடியாது என்பதுதான் அது. அதனால் என்ன என்று கூறி, காதலைத் தொடர்கிறார்.

விழிமூடி யோசித்தால் விமர்சனம்

ஊரிலிருக்கும் அம்மா ஊர்வசிக்கு இந்த விவரங்கள் தெரியவருகிறது. அவர் கிளம்பி வந்து நிகிதாவைப் பார்த்து, ஓகேவும் சொல்லிவிடுகிறார்.

அப்போதுதான் ஒரு தீவிரவாத கும்பல் செய்யும் கொலையை நேரில் பார்க்கும் நிகிதா, அதைப் படமெடுத்துவிடுகிறார். இது தெரிய வந்து, நிகிதாவைப் பிடித்துவிடும் தீவிரவாதிகள், அந்த படங்கள் அடங்கிய மெமரி கார்டை நிகிதா தர மறுத்ததால் கொன்றுவிடுகிறார்கள்.

இவர்களை ஹீரோ செந்தில் எப்படி பழிவாங்குகிறான் என்பது மீதிக் கதை.

விழிமூடி யோசித்தால் விமர்சனம்

விறுவிறுவென ஆரம்பிக்கிறது படம். கேமிரா நகர நகர நாமும் உடனே பயணித்து, அந்த முதல் கொலையைப் பார்த்து திடுக்கிடுகிறோம். எதற்காக இந்தக் கொலை என விவரிக்கும் ப்ளாஷ்பேக்கில் காட்சிகளை இன்னும்கூட அழுத்தமாக வைத்திருக்கலாம்.

நிகழ்கால பழிவாங்கலும், கடந்த கால காதலும் ஒரு இணை கோடுகள் மாதிரி பயணிப்பதாக திரைக்கதை அமைத்திருக்கிறார் செந்தில்குமார். அது பார்க்க புதுமையாகவும் உள்ளது.

விழிமூடி யோசித்தால் விமர்சனம்

ஹீரோவுக்குதான் இத்தனை விசேஷ சக்தி இருக்கிறதே.. அதை வைத்து நாயகியை முன்பே காப்பாற்றி இருக்கலாமே என்ற கேள்விக்கு பதிலில்லை.

நடிப்பைப் பொறுத்தவரை நாயகன் செந்தில்குமார், நாயகி நிகிதா இருவருமே புதுமுகங்கள். ஓகே.. தேறிட்டாங்க எனும் அளவுக்கு நடித்திருக்கிறார்கள்.

விழிமூடி யோசித்தால் விமர்சனம்

ஊர்வசி, பவர் ஸ்டார், பாலாசிங் போன்றவர்கள் தங்கள் வேலையைச் செய்திருக்கிறார்கள்.

முகமது ஆத்திப் இசையில் பாடல்கள் சுமார் ரகம். சில இடங்களில் பின்னணி இசை அதிர வைக்கிறது. ஒளிப்பதிவில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

விழிமூடி யோசித்தால் விமர்சனம்

சினிமாவில் முதல் முயற்சிகள், பெரும் படிப்பினைகள். அடுத்த படத்தை இன்னும் சிறப்பாக உருவாக்க இந்தப் படிப்பினை உதவக்கூடும்!

 

த்ரிஷா, ராணா: உள்ளே, வெளியே.. மங்காத்தாவே தோத்தது!!

சென்னை: தற்போது பிரிந்துள்ள த்ரிஷாவும், ராணாவும் மீண்டும் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

காதல் என்றால் ஊடல் இல்லாமலா. ஆனால் த்ரிஷா, ராணா காதலில் ஊடல் பெரும்பகுதி வகிக்கிறது. அவர்கள் சேர்வதும், பிரிவதுமாக பல ஆண்டுகளாக உள்ளனர். ஒவ்வொரு முறை அவர்கள் பிரியும்போதும் ராணாவின் வாழ்வில் வேறொரு நடிகை வந்திருப்பார். ராணா தற்போது அனைத்து உட்களிலும் தவித்துக் கொண்டிருக்கும் நடிகையை தான் முதலில் காதலித்ததாகக் கூறப்படுகிறது.

த்ரிஷா, ராணா: உள்ளே, வெளியே.. மங்காத்தாவே தோத்தது!!

அவர்கள் பிரிந்த பிறகு தான் த்ரிஷா ராணா வாழ்வில் வந்தாராம். இதில் விந்தை என்னவென்றால் அந்த மார்க்கெட் இல்லா நடிகையும் ராணாவும் பிரிய காரணம் இந்தி நடிகை பிபாஷா பாசு என்று அப்போது பரபரப்பாக பேச்சாகக் கிடந்தது. ராணா தற்போது த்ரிஷாவை பிரிந்தது பிபாஷாவுடன் மீண்டும் சேரத் தான் என்று கூறப்படுகிறது. பிபாஷாவும் ராணாவுடன் சேர இத்தனை நாட்களாக காதலராக இருந்த நடிகர் ஹர்மான் பவேஜாவை பிரிந்துவிட்டாராம்.

தலை சுத்துதா. இதற்கிடையே த்ரிஷாவும் ராணாவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரிவதற்கு காரணம் ஒரு உதட்டழகி இந்தி நடிகை. காதல் கசந்துவிட்ட த்ரிஷாவுக்கும் சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்று செய்திகள் வெளியாகின. அதை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதற்கிடையே பிபாஷாவை தேடிப் போன ராணாவோ அண்மையில் ஒரு பேட்டியில் எனக்கு அனுஷ்காவை பிடிக்கும், ஒவ்வொரு வார இறுதியிலும் சமந்தாவுடன் பார்ட்டிக்கு போக விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த குழப்பங்களை எல்லாம் பார்க்கையில் த்ரிஷாவும், ராணாவும் மீண்டும் சேரலாம் அதற்கான வாய்ப்புகளும் உள்ளது என்கிறது விவரம் அறிந்த வட்டாரம்.