2/16/2011 3:15:22 PM
180-க்கு என்ன அர்த்தம்?
2/16/2011 3:15:22 PM
புதுமுகங்களை அறிமுகப்படுத்த தயங்குகிறார் பாலா?
2/18/2011 10:51:14 AM
இயக்குநர் பாலா தனது படங்களில் புதுமுகங்களை அறிமுகப்படுத்த தயங்குகிறார் என்றும், அப்நார்மல் மனிதர்களைத்தான் படம் எடுக்கிறார் என்றும் குற்றச்சாட்டு உண்டு. அதை மாற்றும் விதமாக அடுத்து அவர் இயக்கப் போகும் படம் இருக்குமாம். மென்மையான காதல் கதையான இதில் நடிக்க இருப்பது ஷூட்டிங்கை வேடிக்கைகூட பார்த்திராத புதுமுகங்களாம்.
திருமணத்துக்கு ரெடி :சாயாசிங்
2/18/2011 10:52:34 AM
நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு தனது கல்லூரி தோழி ஒருவருடன் சேர்ந்து பெங்காலி படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் இருக்கிறார் 'மன்மத ராணி' சாயாசிங். அத்துடன் பெங்களூருவில் ஒரு விளம்பர கம்பெனி தொடங்கவும் திட்டமிட்டிருக்கிறார். இதற்கான அலுவலகமும் ரெடியாகிவிட்டது. விளம்பர படங்கள் இயக்கவும் வேலை நடக்கிறது. முக்கியமாக பெற்றோர் விருப்பப்படி இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்யவும் பச்சைக்கொடி காட்டிவிட்டாராம்.
மகன் காதலில் சிக்குவதற்குள் கால்கட்டுப்போடும் மார்க்கண்டேயன்
2/18/2011 10:32:07 AM
மகன் காதலில் சிக்குவதற்குள் அவருக்கு கால்கட்டுப்போட ஆசைப்படுகிறார் மார்க்கண்டேயன் சிவகுமார். மகனும் பெற்றோரின் விருப்பத்துக்கே விட்டுவிட்டார். 'தேதியையும், மண்டபத்தையும் மட்டும் சொல்லுங்க… மாப்பிள்ளை கோலத்துல வந்து நிக்குறேன்' என்று சொல்லிவிட்டாராம். சொந்தம் விட்டுப் போகக்கூடாதென்று சொந்தத்திலேயே பெண் தேடுகிறார்கள். இதற்காக அடிக்கடி கொங்கு மண்டலத்துக்கு பறந்து கொண்டிருக்கிறார் மார்க்கண்டேயன். அத்துடன் பெரிய நட்சத்திர குடும்பம் என்று சொந்தங்கள் ஒதுங்கிவிடக்கூடாது என்பதற்காக உறவினர்கள் வீட்டு சின்னச் சின்ன விழாக்களிலும் தவறாமல் கலந்து கொள்கிறார்.
வாய்ப்பு கிடைக்காததால் பத்மப்ரியா வருத்தம்!
2/18/2011 10:54:51 AM
தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைக்காததில் ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறார் பத்மப்ரியா. சமீபத்தில் சென்னை வந்த அவர் தனக்கு தெரிந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் தான் புதிதாக நடத்திய போட்டோ ஷூட்டின் படங்களை கொடுத்திருக்கிறார்.
கிளாமராக நடிக்கத் தயார். சம்பளம் இவ்வளவு போதும் என்ற சலுகைகளையும் அறிவித்துவிட்டுச் சென்றிருக்கிறார். தமிழில் வாய்ப்பு தேடும் பத்மப்ரியாவுக்கு மலையாளத்தில் 3 படங்கள் கைவசம் இருக்கிறது. 2 படங்கள் அவரது தேதிக்காக காத்திருக்கிறது.