மன்மதன் 2-ல் திரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்பட 6 நாயகிகள்!

Simbu Gets 6 Heroines Manmathan 2

சிம்பு நடிக்கும் மன்மதன் 2 படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்பட 6 பேர் நடிக்கின்றனர்.

சிம்பு, ஜோதிகா நடித்த மன்மதன் படம் 2004-ல் வெளியானது. ஏஜே முருகன் என்பவரை இயக்குநராக அறிவித்து, பின்னர் அவரை டம்மியாக்கிவிட்டு சிம்புவின் பெயரை பிரதானப்படுத்தினார்கள். இப்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறாராம் சிம்பு.

தலைப்பு 'மன்மதன் 2'. சிம்பு இப்போது நடித்துக் கொண்டிருக்கும் வாலு, வேட்டை மன்னன், போடா போடி படங்கள் முடிந்ததும் 'மன்மதன்2' படப்பிடிப்பு துவங்குகிறது.

இப்படத்தில் சிம்பு ஜோடியாக 6 கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

திரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்ளிட்டோர் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இவர்களுடன் மன்மதனில் நடித்த சிந்து துலானி, மந்த்ரா பேடி ஆகியோரும் நடிக்கக் கூடும் என்கிறார்கள். மேலும் சில நடிகைகளுடன் பேசி வருகிறார்களாம்!

 

கமலாவில் 3 டி திரையரங்கம் - இயக்குநர் அமீர் திறந்து வைத்தார்!

Ameer Lauches 3d Theater At Kamala

சென்னையின் முக்கிய திரையரங்குகளுள் ஒன்றான வடபழனி கமலாவில் புதிதாக 3 டி திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் அமீர் இந்த அரங்கை திறந்து வைத்தார்.

வடபழனியில் உள்ள இந்த அரங்கில் ஏற்கெனவே கமலா மற்றும் கமலா மினி என இரு அரங்குகள் இயங்கி வருகின்றன.

3 டி படங்களின் வருகை அதிகரித்திருப்பதையொட்டி, புதிதாக 3 டி வசதி கொண்ட அரங்கை திறந்துள்ளனர்.

பெப்சி தலைவரும் இயக்குநருமான அமீர் இந்த புதிய அரங்கை இன்று திறந்து வைத்தார்.

கமலா திரையரங்க இயக்குநர்கள் சித வள்ளியப்பன் மற்றும் சித கணேசன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

மிஷ்கின் இயக்கும் முகமூடி - ட்ரைலரை வெளியிட்டார் சூர்யா!

Mugamoodi First Look Unveiled   

ஜீவா நடிக்க, மிஷ்கின் இயக்கி வரும் சூப்பர் ஹீரோ கதையான முகமூடி படத்தின் முன்னோட்டக் காட்சியை இன்று நடிகர் சூர்யா, இயக்குநர் கவுதம் மேனன் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

'முகமூடி' படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டன. டப்பிங், பின்னணி இசைக் கோர்ப்பு உள்ளிட்ட போஸ்ட் புரடெக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பர்ஸ்ட் லுக் காட்சிகள் இன்று சத்யம் சினிமாவில் வெளியிடப்பட்டன.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் கவுதம் மேனன், நடிகர் சூர்யா, கேவி ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். ட்ரைலரை சூர்யா வெளியிட கவுதம் மேனன் பெற்றுக் கொண்டார்.

தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் கலைப்புலி தாணு, படத்தின் ஹீரோ ஜீவா, முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் நரேன், செல்வா, தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி உள்பட ஏராளமானோர் பங்கேற்றுப் பேசினர்.

 

பேசிய சம்பளம் கொடுக்காததால் வெளிநாட்டில் ஆட மறுத்த அமலா பால்!

Amala Paul Refuses Appear On Stage   

அமலா பால் எங்கு போனாலும் கூடவே ஏதாவது வில்லங்கத்தில் சிக்கிக் கொள்வதது சகஜமாகிவிட்டது.

இந்த முறை வெளிநாட்டில் வைத்து விவகாரம் கிளம்பியுள்ளது. சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியொன்றில் நடனமான அமலா பாலுக்கு பெரும் சம்பளம் பேசி அழைத்துச் சென்றார்களாம்.

பெரிய நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்ட அமலாவை, விழா துவங்கியதும் நடனமாட அழைத்தனர். ஆனால் வர மறுத்துவி்ட்டாராம். காரணம், கேட்டதற்கு, பேசின சம்பளத்தைக் கொடுக்காமல் எப்படி வர முடியும் என்று கேட்டுள்ளார்.

முழு தொகையும் செட்டில் பண்ணால்தான் நடனம் ஆடுவேன்.. இல்லாவிட்டால் மேடைக்கே வரமாட்டேன் என கறாராகச் சொல்லிவிட்டாராம்.

விழா அமைப்பாளர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, அமலாபால் ரகளை செய்தது உண்மைதான். ஆனால் அது சம்பள பாக்கிக்காக அல்ல, விமான டிக்கெட் பிரச்சினைக்காக என்றனர்.

இந்த விஷயத்தில் அமலா பால் என்றல்ல... எந்த நடிகைகளையும் குறை சொல்ல முடியாது. சில ஏற்பாட்டாளர்கள், இப்படி வெளிநாட்டுக்கு கூட்டி வந்து, விழா முடிந்ததும் அம்போ என்று விட்டுவிட்டுப் பறந்துவிடுவார்கள். எனவே இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைப்பவர்கள் முழுத் தொகையையும் முன்கூட்டியே கொடுத்தால்தான் நடிகைகள் வருவார்கள். இதுதான் கோடம்பாக்க வழக்கம். எனவே தவறு விழாக்குழுவினர் மீதுதான் என்றனர், இந்த விவகாரத்தின்போது உடனிருந்த சில கலைஞர்கள்.

 

தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்!

Tamil Selvanum Thaniyar Anjalum Shooting

கவுதம் மேனன் பங்குதாரராக உள்ள போட்டோன் கதாஸ் தயாரிக்கும் புதிய படமான தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படம் தமிழ் தெலுங்கில் இருமொழிப் படமாக தயாராகிறது.

ஏற்கெனவே இந்த நிறுவனம் இசை ஞானி இளையராஜா இசையில் உருவாகும் "நீதானே என் பொன்வசந்தம்" படத்தையும், அதை தெலுங்கில் "எதோ வெல்லி போயிந்தே மனசு" என்ற பெயரிலும் தயாரித்து வருகிறது.

"தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்" படத்தை பிரேம் சாய் இயக்குகிறார். இவர் பிரபு தேவாவிடம் உதவியாளராக இருந்தவர். இதே படம் தெலுங்கில் கூரியர் பாய் கல்யான் என்ற பெயரில் உருவாகிறது.

"இப்படத்தின் மைய கரு எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியையோ, மொழியையோ சார்ந்தது அல்ல, ஒரு நல்ல ஜனரஞ்சகமான நகைச்சுவை, காதல், ஆக்ஷன், என்ற கலவையுடன் பின்னபட்ட திரைக்கதையுடன் கூடியது. இக்கதையை நான் கேட்ட போது பல இடங்களில் சிரிப்பை கட்டுப்படுத்த சிரமபட்டேன்" என்கிறார் இயக்குநர் கவுதம்மேனன்.

ரிச்சா கங்கோபாத்யாய் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் ஜெய், சந்தானம், வி.டி.வி. கணேஷ் நடிக்கின்றனர். பிரபல பாடகர் கார்த்திக் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த 3 மாதங்களுக்கு ஹைதராபாதில் தொடர்ந்து நடக்கிறது.

 

பாண்டிராஜின் கேடி பில்லா கில்லாடி ரங்கா!

Pandiraj S Kedi Billa Killadi Ranga

'பசங்க', 'வம்சம்', 'மெரினா' ஆகிய படங்களை இயக்கிய பாண்டிராஜ் தனது அடுத்த படத்துக்கு கேடி பில்லா கில்லாடி ரங்கா என தலைப்பிட்டுள்ளார்.

இது முழுக்க முழுக்க காமெடிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் நாயகர்களாக விமலும் சிவகார்த்திகேயனும் நடிக்கிறார்கள். இந்த இருவரையும் ஹீரோக்களாக அறிமுகப்படுத்தியவர் பாண்டிராஜ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் இரண்டு ஹீரோக்கள் இருப்பது போலவே, இரண்டு வில்லன்கள் உண்டு.

முழுக்க சிரிப்புப் படம்தான் என்றாலும், அதிலும் ஒரு சமூக சிந்தனையை வைத்திருக்கிறாராம் பாண்டி.

இந்தப் படத்தில் அவருடன் முதல் முறையாக கைகோர்க்கிறார் யுவன் சங்கர் ராஜா. அதுவும் முழுக்க முழுக்க கிராமியப் பாடல்களாகத் தரப் போகிறார்களாம். பண்ணைப்புரத்து ராசாவுக்கு கிராமத்துப் பாடலை சொல்லியா தரவேண்டும்.

ஜூலை மாதத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது!

 

பில்லா 2 - பிரமாண்ட விழாவில் புதிய ட்ரைலர் - வருவாரா அஜீத்?

Ajith S Billa 2 Have New Trailer    | பில்லா 2  

அஜீத் நடிக்கும் பில்லா 2 படம் ஜூலை 13-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்துக்கு இரண்டாவது ட்ரைலர் வெளியிடுகிறார்கள்.

ஆடியோ வெளியீட்டைக் கூட சத்தமின்றி முடித்துவிட்ட பில்லா 2 தயாரிப்பாளர்கள், சென்சார் பிரச்சினை, பட வெளியீட்டில் நேர்ந்த தாமதம் போன்றவற்றால் படத்தின் மீது விழுந்துள்ள எதிர்மறை அபிப்பிராயத்தைக் கருத்தில் கொண்டு, இந்த ட்ரைலர் வெளியீட்டை பிரமாண்டமாக நடத்துகிறார்கள்.

வரும் ஜூலை 2-ம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலக அரங்கில் இந்த ட்ரைலர் வெளியீட்டு விழா நடக்கிறது.

இந்த விழாவிலாவது அஜீத் கலந்து கொள்வாரா என்ற கேள்விக்கு தயாரிப்பாளர்களால் கூட பதில் சொல்ல முடியவில்லை. இந்த மாதிரி விழாக்களில் பங்கேற்பதை 'சார்' விரும்பமாட்டார்... பிரஸ்ஸை மீட் பண்ணுவதையும் இப்போதைக்கு தவிர்க்கவே முயற்சிப்பார், என அஜீத்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

விட்டா படப்பிடிப்புக்கு வரலாமா வேணாமான்னு யோசிப்பாரு போலிருக்கே...!

 

வீடு தேடி வந்து இல்லத்தரசிகளிடம் திட்டு வாங்கும் தேவிப்ரியா!

Acting Serials Is The Best Moment

செல்லமே சீரியலில் வில்லத்தனம் காட்டும் சிநேகாவாக வந்து இல்லத்தரசிகளிடம் திட்டு வாங்குகிறார். அதேசமயம் அத்திப்பூக்கள் சீரியலில் போலீஸ் அதிகாரி ரெஜினாவாக வந்து பாராட்டு பெறுகிறார் நடிகை தேவிப்ரியா.

எப்படி ஒரே நாளில் வில்லியாக, நகைச்சுவை நடிகையாக, கண்டிப்பான அதிகாரியாக நடிக்க முடிகிறது என்ற கேள்வியோடு அவரை சந்தித்தோம்.

சினிமாவா சீரியலா என்று கேட்டால் நான் சீரியலுக்குத்தான் முக்கியத்துவம் தருவேன். ஏனெனில் சினிமாவை விட சீரியலில்தான் நடிகைகளின் கேரக்டர்கள் அதிகமாகப் பேசப்படுகிறது.

சீரியல் பல கதைகளை வீட்டுக்குள்ளேயே கொண்டு செல்வதால் மக்களால் மிகவும் ரசிக்கப்படுகிறது. சினிமா போல் சீரியல் பொழுதுபோக்கிற்காகப் பார்க்கப்படுவதில்லை. சீரியலில் ஒவ்வொரு நாளும் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறோமே அதுவே பெரிய வெற்றிதான்.

மேலும் சினிமாவை விட சீரியலுக்கான வரவேற்பு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதற்குக் காரணம் சீரியல்களின் புதிய கதைக் களங்கள்தான்.

சீரியலில் பழி வாங்கல், துரோகம், கணவன் மனைவி தொடர்புகளில் சிக்கல் இவைகள்தான் சீரியல்களில் ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்டு வருகின்றன என்பது உண்மைதான். மனிதர்களின் சராசரி வாழ்க்கைதான் இங்கு சீரியலாக்கப்படுகிறது.

மாமியார்-மருமகள் பிரச்னையை பற்றி சொல்லும் போது பழி வாங்கல், துரோகம் போன்றவற்றை சொல்லித்தான் ஆக வேண்டும். சினிமாவை விட பாலியல் தொடர்பான விஷயங்கள் சீரியலில் குறைவுதான். இருந்தாலும் ஒரு கதை சொல்லப்படும்போது அது தவிர்க்க முடியாத விஷயமாகி விடுகிறது.

சீரியலை குடும்பமே உட்கார்ந்து பார்க்கக் கூடிய இன்றைய சூழலில் இந்த விஷயங்கள் குறைந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும். அதைக் கட்டுப்படுத்தும் வகையில் சீரியலுக்கென தனி சென்சார் வந்தால் வரவேற்கலாம்.

இப்போது ‘செல்லமே', ‘ அத்திப்பூக்கள்', போன்ற குறிப்பிடத்தக்க சீரியல்களில் மட்டுமே நடித்து வருகிறேன். இந்த இரண்டுமே மாறுபட்ட கதாபாத்திரங்களை கொண்டவை. மக்களிடம் நன்றாக ரீச் ஆகியிருக்கின்றன.

சினிமாவில் எனக்கு முக்கியத்துவமான கேரக்டரில் மட்டும் நடித்து வருகிறேன். ‘வல்லமை தாராயோ', ‘நாயகன்' படங்களில் நல்ல கேரக்டர் கிடைத்தது. அது போல் கேரக்டர்கள் வந்தால் நடிப்பேன் என்று கூறி விடை பெற்றார் தேவிப்ரியா.

 

20 சண்டை, எக்கச்சக்க கூலிப்படையினருடன் தமிழுக்கு வரும் கூலி!

Kannada Gooli Comes Tamil 20

கன்னடத்தில் வெளியாகி ஹிட் ஆன கூலி என்ற படம் தமிழுக்கு வருகிறது. அந்தக் காலத்தில் படம் முழுக்க பாட்டு இருக்கும் என்பார்கள். அதேபோல இந்த கூலி படத்தில் படம் நிறைய சண்டைக் காட்சிகள்தானாம். கிட்டத்தட்ட 20 சண்டைக் காட்சிகள் இப்படத்தில் இருக்கிறதாம். சுதீப் நடித்த இப்படத்தை கொருக்குப்பேட்டை கூலி என்ற பெயரில் டப் செய்து கொண்டு வருகின்றனர்.

கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சுதீப், தமிழில் ஹிட் ஆன படங்களின் கன்னட ரீமேக்கில் நடித்துப் பிரபலமானவர். சேது, சிங்கம் என அவர் நடிக்காத தமிழ் ஹிட் ரீமேக் படங்களே இல்லை.

அதேசமயம், ரத்த சரித்திரம் படம் மூலம் நேரடித் தமிழ்ப் படத்திலும் சுதீப் நடித்துள்ளார். இப்போது அவரது படம் ஒன்று கன்னடத்திலிருந்து தமிழுக்கு டப் ஆகி வருகிறது. அப்படத்தின் பெயர்தான் கூலி.

2008ம் ஆண்டு வெளியான இப்படம், ஒரு கூலிப்படையின் கதையாகும். கூலிக்கு ஆளைத் தூக்குவது, போட்டுத் தள்ளுவது, கையைக் காலை எடுப்பது உள்ளிட்டவற்றில் ஈடுபடும் நாயகனும், அவனது காதலியும் சந்திக்கும் சவால்கள் குறித்ததுதான் படம்.

படத்தில் ஏகப்பட்ட சண்டைக் காட்சிகள், கிட்டத்தட்ட 20 சண்டைக் காட்சிகள் இருக்கிறதாம். இதுதான் அப்படத்தை அன்று ஹிட்டாக உதவியது. அதேபோல கூலிப்படையினரின் மோதல்களுக்கும் பஞ்சமில்லையாம்.

நடிகை மமதா மோகன்தாஸ், சுதீப்புக்கு ஜோடியாக நடித்திருந்தார். கிஷோர் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இப்படம் விரைவில் கொருக்குப்பேட்டை கூலி என்ற பெயரில் தமிழ்த் திரைக்கு வருகிறது.

நான் ஈ படத்தில் சுதீப்பும் நடித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம். இது அவருக்கு தமிழில் 2வது படமாகும்.

 

அழவைக்கும் சிரிப்பு (அறுவை) லோகம்!

Sun Tv S Sirippu Lokam Lacks Comdey

சிரிப்பு லோகம் என்ற பெயரில் கிச்சு கிச்சு மூட்டுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தொடர் தற்போது ரசிகர்களை அழவைக்கும் அறுவை லோகமாக மாறிவருகிறது என்று ரசிகர்களிடையே கருத்து நிலவிவருகிறது.

எமலோகத்தில் தினசரி நடக்கும் நிகழ்வுகள்தான் சிரிப்பு லோகத்தின் கதை. எமதர்மனாக சின்னிஜெயந்த், எமனின் மனைவியாக ஆர்த்தி கணேஷ்கரும் நடித்திருக்கின்றனர். சித்திரகுப்தனாக வென்னிற ஆடை மூர்த்தி, அவரது உதவியாளராக சிட்டிபாபு நடித்திருக்கும் இந்த தொடரில் நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

பூலோகத்தில் இறந்து போன மனிதர்கள் மேலோகத்தில் சென்று அவரவரின் பாவ புண்ணியங்களை கூறி அதற்கேற்ப தண்டனை வழங்கப்படுகிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சியை தொடங்கினர் சின்னி ஜெயந்த் அன் கம்பெனியினர். ஆனால் இதில் நகைச்சுவைக்கு பதிலாக ஒரே அறுவை மயமாக இருக்கிறது. வசனங்கள் எதுவும் உறுப்படியாக இல்லை.

எமலோகத்தில் காவல் இருக்கும் பூதங்கள் செல்போன் எல்லாம் வைத்து பேசுகின்றனராம். அங்கே போய் டவர் வைத்தது யார் என்று தெரியவில்லை?. பூலோகத்தில் இறந்து போன ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் சித்திர குப்தனுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு கடைசியில் எமலோகத்தை பிளாட் போட்டு விற்பனை செய்கிறாராம். சிரிக்க வைக்கிறேன் என்று கிச்சு கிச்சு மூட்டும் நடிகர்கள் உறங்கப்போகும் நேரத்தில் ரசிகர்களை வெறுப்பேற்றி அழ வைக்கின்றனர்.

லோகத்திலே இப்படியெல்லாமா ஓய் பயமுறுத்துவது...!

 

பாரதிராஜாவும் ஹாலிவுட்டுக்குப் போகிறார் - சாமுவேல் ஜாக்சனை வைத்து படம் இயக்குகிறார்!

Bharathi Raja Too Enter Into Hollywood

கமல்ஹாசனைத் தொடர்ந்து பாரதிராஜாவும் ஹாலிவுட்டுக்குக் கிளம்புகிறார். தமிழில் ஹிட்டடித்த பொம்மலாட்டம் படத்தை அவர் ஆங்கில வடிவத்திற்குக் கொண்டு செல்கிறார்.

நீண்ட காலமாக இயக்கத்தில் இருந்து பின்னர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் பொம்மலாட்டம். நானா படேகரின் நடிப்பும், அர்ஜூனின் பாத்திரமும் அனைவராலும் வரவேற்கப்பட்டு பேசப்பட்டது. ஒரு திரைப்பட இயக்குநரைப் பின்னணியாகக் கொண்ட படம் பொம்மலாட்டம்.

இந்தப் படத்தைத்தான் தற்போது ஹாலிவுட்டுக்குக் கொண்டு செல்கிறார் பாரதிராஜா. இப்படத்தில் நானா படேகர் பாத்திரத்திற்கு ஹாலிவுட் நடிகர் சாமுவேல் ஜாக்சனை தேர்வு செய்துள்ளார் பாரதிராஜா. அர்ஜூன் பாத்திரத்தில் பாரதிராஜாவின் நண்பர் ஒருவர் நடிக்கவுள்ளார். அவரே படத்தைத் தயாரிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

பொம்மலாட்டமும், தானும் ஹாலிவுட்டுக்குப் போவதை உறுதி செய்துள்ளார் பாரதிராஜா. ஆமாம், ஹாலிவுட்டில் எனது பொம்மலாட்டத்தை ரீமேக் செய்யப் போவது உண்மைதான். அமெரிக்காவைச் சேர்ந்த எனது நான்கு நண்பர்கள் இப்படத்தை தயாரிக்கப் போகிறார்கள் என்றார்.

தற்போது அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பாரதிராஜா அதை முடித்து விட்டு ஹாலிவுட் பறக்கிறார். ஆங்கில ரசிகர்களுக்காக பொம்மலாட்டம் படத்தின் திரைக்கதையில் மாற்றமும் செய்கிறாராம் பாரதிராஜா.

சமீபத்தில்தான் நடிகர் கமல்ஹாசன் ஹாலிவுட்டுக்குப் போகும் செய்தி வெளியானது. அந்தப் படத்தை அவர் இயக்கி நடிக்கவுள்ளார். திரைக்கதையும் அவரே. இந்த நிலையில், பாரதிராஜாவும் ஹாலிவுட் போவது தமிழ் திரையுலக ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கமலும், பாரதிராஜாவும் இணைந்து 16 வயதினிலே, சிவப்பு ரோஜாக்கள், ஒரு கைதியின் டைரி என தமிழில் மாயாஜாலம் புரிந்தவர்கள். இப்போது இருவரும் தனித் தனியாக ஹாலிவுட்டுக்குள் புகுவது குறிப்பிடத்தக்கது.

 

ஷகீலா 'பீர் குடித்து குறி சொல்ல' சென்சார் ஆட்சேபம்!

Censor Cuts Scenes Shakeela Aasami

ஆசாமி என்ற படத்தில் போலிச் சாமியார் வேடத்தில் ஷகீலா நடித்துள்ள காட்சிளுக்கு தனிக்கைக் குழு கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாம். அவர் பீர் குடிப்பது போலவும், சிகரெட் பிடிப்பது போலவும், பீரானந்தாஜி என்று பெயர் வைக்கப்பட்டதற்கும் தணிக்கைக் குழு எதிர்ப்புத் தெரிவித்து, ஷகீலா சம்பந்தப்பட்ட காட்சிகளில் 10இடங்களில் கத்திரி போட்டு விட்டனராம்.

ஒரு காலத்தில் ஷகீலா படம் என்றால் தியேட்டர்கள் அல்லோகல்லப்படும். கேரளாவை கிறங்கிப் போய்க் கிடந்தது ஷகீலாவின் அலையில் சிக்கி. ஆனால் இப்போது அமைதியான நதியாக மாறி விட்டார் கவர்ச்சிக் கடலான ஷகீலா. தமிழில் காமெடிப் படங்களில் லேசு பாசாக கவர்ச்சியைக் கலந்து நடித்து வருகிறார். சந்தானம் தனது படங்களில் தொடர்ந்து ஷகீலாவுக்கு நல்லாதரவு அளித்து வருகிறார்.

இந்த நிலையில் ஷகீலா நடித்துள்ள புதிய படம் ஆசாமி. இதில் அவர் போலிச் சாமியாரினியாக வருகிறார். பீர் குடித்தும் சிகரெட் பிடித்தும் குறி சொல்லும் சாமியாராக அவர் வருகிறாராம். அவரது பெயர்கூட பீரானந்தாஜியாம்.

அவருடைய கூட்டாளிகளாக சந்தானபாரதி, பாண்டு, நெல்லை சிவா, அனுமோகன் என ஒரு கூட்டமே நடித்துள்ளது. படத்தை முடித்து சென்சார் அதிகாரிகளிடம் கொடுத்து சான்றிதழ் கேட்டுள்ளனர்.

படத்தைப் பார்தத் சென்சார்காரர்கள், குறிப்பாக ஷகீலா தொடர்பான சீன்களைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டனராம். ஒட்டுமொத்த சாமியார்களும் இப்படித்தான் என்பதைப் போல சித்தரித்துள்ளீர்களே என்று கூறிய அவர்கள் மொத்த சீனையும் தூக்கினால்தான் சான்றிதழ் தருவோம் என்று கூறி விட்டனர். ஆனால் இயக்குநரும், தயாரிப்பாளரும் மறுக்கவே அப்பீலுக்குப் போனார்கள்.

அங்கும் ஷகீலா அன்கோவின் சீன்களுக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 10 இடங்களில் வெட்ட தயாரிப்பாளர் தரப்பு ஒத்துக் கொண்டது. இதையடுத்து அந்த கட்டோடு, படத்துக்கு யுஏ சான்றிதழ் கொடுத்து அனுப்பி வைத்துள்ளனராம்.

பரவாயில்லை, முன்பெல்லாம் ஷகீலா படம் என்றால் மொத்த படத்தையுமே வெட்ட வேண்டியிருக்கும், இப்போது பத்து சீனோடு போச்சே...!

 

யார் படத்துக்கும் நெருக்கடி வேணாம்... கோச்சடையானை தள்ளி வச்சுக்கலாம்! - ரஜினி

Rajini Postpones Kochadaiyaan Release

போட்டி மிக்க இந்த சினிமா உலகில், யாருக்கும் தன் படத்தால் நெருக்கடி வேண்டாம் என்ற நினைக்கும் ஹீரோவைக் காட்ட முடியுமா...

ஏன் முடியாது... இதோ சூப்பர் ஸ்டார் ரஜினி!

தீபாவளிக்கு கோச்சடையானை வெளியிடவிருப்பதாக பல நாட்களுக்கு முன்பே தயாரிப்பாளர்கள் அறிவித்துவிட்டது நினைவிருக்கலாம். சூப்பர் ஸ்டாரும் இதை உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் இப்போது சில தினங்கள் தள்ளி படத்தை ரிலீஸ் செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

காரணம்?

தீபாவளிக்கு ஷாரூக்கான் - கரீனா நடித்த 'யே கஹான் ஆ காயே ஹம்' படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். ஷாரூக்கான் பாலிவுட்டில் பெரிய நடிகராக இருந்தாலும், இப்போது ஒரே நேரத்தில் ரஜினி - ஷாரூக் படங்கள் வெளியானால் தியேட்டர் கிடைப்பது சிரமமாகிவிடும்.

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் ரஜினி படம் என்பதால், மும்பையில் மட்டும் 150க்கும் மேற்பட்ட அரங்குகள் - மால்களில் கோச்சடையானை வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

இதனால் ஷாரூக் படத்துக்கு தியேட்டர் கிடைப்பது சிரமம். மேலும் அதே தினத்தில் அஜய் தேவ்கன் நடித்த படமும் வெளியாகிறது. கோச்சடையானால் இந்தப் படங்களுக்கு மும்பையில் நெருக்கடி வேண்டாம் என்ற ரஜினி, 'படத்தை சில தினங்கள் தள்ளி வெளியிடலாம். யாருக்கும் பாதிப்பு வேண்டாம்' என்று கூறிவிட்டாராம்.

 

தெலுங்கில் கோச்சடையானுக்கு தலைப்பு 'விக்ரம் சிம்ஹா!'

Kochadaiyaan Titles As Vikram Simha   

தெலுங்கில் வெளியாகும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையானுக்கு விக்ரம் சிம்ஹா என தலைப்பிடப்பட்டுள்ளது.

ரஜினி இரண்டு வேடங்களில் நடிக்க, கேஎஸ் ரவிக்குமார் மேற்பார்வையில் உருவாகி வரும் கோச்சடையான், தமிழ் தவிர, தெலுங்கு, இந்தி மற்றும் ஜப்பானிய மொழியிலும் வெளியாகிறது.

கோச்சடையான் என்பது தூய தமிழ்ப் பெயராகும். எனவே மற்ற மொழிகளில் இந்தப் படத்தை அந்த மொழிக்குப் பரிச்சயமான தலைப்பைச் சூட்ட முடிவு செய்துள்ளனர்.

தெலுங்குப் பதிப்புக்கு 'விக்ரம்சிம்ஹா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தி மற்றும் ஜப்பானிய மொழியில் இந்தப் பெயரில் வெளியாகுமா அல்லது வேறு தலைப்பு வைக்கப்படுமா என்பது தெரியவில்லை.

இன்னும் பாடல் காட்சிகள் சில மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது. மற்றபடி படப்பிடிப்பு ஓவர்!