'இலவச மருத்துவமனை கட்றேன்... எல்லாரும் இலவச சிகிச்சைதேன்' - கஞ்சா கருப்பு

Ganja Karuppu The Service Poor

காமெடி நடிகர் கஞ்சா கருப்பு மதுரை அருகே இலவச மருத்துவமனை கட்டுகிறாராம். ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

முன்னணி இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் கஞ்சா கருப்பு. சில மாதங்களுக்கு முன் திருச்சிக்கு அருகே உள்ள மணப்பாறையில் சாந்திவனம் என்ற ஆதரவற்றோர் இல்லத்துக்கு நிதிதிரட்டிக் கொடுத்த கஞ்சா கருப்பு, 13 குழந்தைகளைத் தத்தெடுத்துள்ளார், தன் மனைவியுடன் இணைந்து.

இன்னொரு பக்கம், மதுரைக்கு அருகே மதகுப்பட்டியில், ஒரு மருத்துவமனையைக் கட்டி வருகிறார் கஞ்சா கருப்பு. இங்கு ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தவிர, திரைத்துறையில் முன்பு முக்கிய நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடித்து, இப்போது வேலையில்லாமல் இருக்கும் பல துணை நடிகர்களையும் தான் நடிக்கும் படங்களில் சிபாரிசு செய்கிறாராம் கருப்பு.

என்னமோ கருப்பு... இதெல்லாம் வெறும் விளம்பரமா இல்லாம இருந்தா சரிதான்!

 

இங்கிலீஷ் விங்கிலீஷில் ஸ்ரீதேவியுடன் அஜீத்

Ajith Shoot With Sridevi Hindi Movie

ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த நடிகை ஸ்ரீதேவி 14 வருடங்களுக்கு பிறகு ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்' என்ற இந்திப் படத்தில் மீண்டும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தியில் இப்படம் நேரடியாகத் தயாராகிறது.

இதில் முக்கிய காட்சி ஒன்றில் முன்னணி நடிகர்கள், கவுரவ தோற்றத்தில் ஸ்ரீதேவியுடன் தோன்றுகின்றனர்.

அந்தக் காட்சியில் இந்தி படத்தில் அமிதாப்பச்சன் நடிக்கிறார்.

தமிழ் பதிப்பில் ஸ்ரீதேவியுடன் நடிக்க அஜீத்திடம் கேட்டனர். ஆரம்பத்தில் அவர் பதில் எதுவும் சொல்லவில்லை. எனவே அஜீத்துக்கு பதில் மாதவனிடம் கேட்டனர்.

இந்த நிலையில் இப்போது அஜீத் நடிக்க சம்மதித்துள்ளார். இதையடுத்து ஸ்ரீதேவி, அஜீத் நடிக்கும் காட்சிகளை வருகிற 13-ந்தேதி மும்பையில் உள்ள ஸ்டூடியோவில் படமாக்குகின்றனர். இதற்காக அங்கு செட் போடப்பட்டு உள்ளது.

13-ந்தேதி ஸ்ரீதேவிக்கு பிறந்தநாள் என்பதால், படப்பிடிப்பிலேயே அவரது பிறந்தநாளை கொண்டாடவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. அன்றே படத்தின் பாடல்களையும் வெளியிடுகின்றனர்.

‘இங்கிலீஸ் விங்கிலீஸ்' படத்தை இயக்குநர் பால்கியின் மனைவி இயக்குகிறார். தயாரிப்பாளர்களில் ஒருவராக பால்கி பங்கெடுத்துள்ளார். அக்டோபர் 5-ந்தேதி ரிலீசாகிறது.

 

இனி சினிமாவில் 'தம்' சீன்களுக்கு தடையில்லை... ஆனால் எச்சரிக்கை வாசகம் கட்டாயம்!

Films That Have Smoking Scenes Star 20 Second

டெல்லி: சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விலக்கிக் கொள்ள முடிவெடுத்துள்ளது.

திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவதற்கு மத்திய அரசு தடை விதித்து இருந்தது.

நடிகர்களைத் தாண்டி, நடிகைகளும் ஏகாந்தமாக தம்மடிப்பது போல காட்சிகளை வைக்கும் அளவுக்கு முன்னேறிவிட்டதால், திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னணி நடிகர் நடிகைகளும் கண்டித்தனர். ஆனால் தடை உத்தரவை நடைமுறைப் படுத்துவதில் உறுதியாக இருந்தது மத்திய அரசு.

நடிகர்கள் புகை பிடிப்பதை பார்த்து இளைய தலைமுறையினர் அப்பழக்கத்துக்கு அடிமையாவதால் அத்தகைய காட்சிகள் இடம்பெறக்கூடாது என அரசும் சமூக நல ஆர்வலர்களும் கூறினர்.

ஆனால் இப்போது தனது உத்தரவை மத்திய அரசு திடீரென வாபஸ் பெற்றுள்ளது. கதைக்கு தேவை என்றால் புகை பிடிக்கும் காட்சியை வைத்துக் கொள்ளலாம் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. புகை பிடிக்கும் காட்சிகளை வைப்பதற்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

படம் துவங்கும் போது புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்ற வாசகத்தை இடம்பெறச் செய்யவேண்டும். இடைவேளை விட்டு படம் துவங்கும் போதும் இந்த வாசகம் இருக்க வேண்டும். புகை பிடிக்கும் காட்சி வரும் போதும் கொட்டை எழுத்தில் இந்த வாசகம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இதனால் திரையுலகினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இனிமேல் புகை பிடிக்கும் காட்சியில் நடிப்பதில்லை என 7 ஆண்டுகளுக்கு முன்பே முடிவெடுத்து அதைத் கொடர்ந்து பின்பற்றி வருகிறார்!

 

சிக்கலில் சங்கராபுரம்: வில்லன் இயக்கும் படத்துக்கே வில்லனான தயாரிப்பாளர்!

Sankarapuram Movie Trouble

தூத்துக்குடி,மதுரை சம்பவம் படங்களில் நடித்த ஹீரோ ஹரிகுமார் நடிப்பில் உருவாகிவரும் படம் சங்கராபுரம்.

கலாபவன் மணி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை பிரபல வில்லன் நடிகர் நம்பிராஜன் கதை-வசனம் எழுதி இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் மேலும் வளர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சங்கராபுரம் படத்தினை ஏஎம்ஆர் நிறுவனம் சார்பில்- ராஜேந்திரன் அண்ணாச்சியும் விஎஸ்வி நிறுவனம் சார்பில் விஜய சுகுமாரும் இணைந்து சரி பாதி முதலீடு செய்து தயாரித்து வந்தார்கள்.

ராஜேந்திரன் அண்ணாச்சி ஈசா படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அவர் தனது சொந்த சம்பாத்தியத்திலிருந்து 50 லட்சம் ரூபாயை படத்துக்கு முதலீடாகத் தந்தாராம்.

மற்றொரு பங்குதாரர் விஜய சுகுமார் தனது பங்கினைச் சரி வர முதலீடு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கணக்கு வழக்கும் சரியாகக் காட்டவில்லை என்கிறார்கள். விஜய சுகுமாரிடம் பணம் கொடுத்துப் பாதிக்கப்பட்டவர்கள் அலுவலத்திற்கு வந்து பணம் கேட்டுத் தொந்தரவு செய்யும் அளவுக்கு நிலைமை போய்விட்டது.

இதனால் அதிர்ச்சிக்குள்ளான ராஜேந்திரன் அண்ணாச்சி, முடியும் தறுவாயில் இருந்த சங்கராபுரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகளை நிறுத்திவிட்டார். மேலும் பிரச்சினைக்கு தீர்வு வரும்வரை சங்கராபுரம் படத்தயாரிப்பு வேலைகளில் ஈடுபடபோவதில்லை என்றும் முடிவு செய்திருக்கிறார்.

லேப் கடிதங்கள், ஒப்பந்தங்கள் ராஜேந்திரன் அண்ணாச்சியிடம் இருப்பதால் சங்கராபுரம் படத்தின் வேலைகள் நின்று போயுள்ளன. மொத்த யூனிட்டும் ஷாக்காகி நிற்கிறதாம்!

 

ஓடும் ரயிலில் கொல்ல முயன்று காப்பாற்றப்பட்ட குழந்தையை தத்தெடுக்க பிரபுதேவா, லாரன்ஸ் விருப்பம்!

Prabhu Deva Lawrence Wish Adopt Female Child

சென்னை: ஓடும் ரயிலிலிருந்து தாய் வீசிய பச்சிளம் குழந்தை காப்பாறப்பட்டதல்லவா... அந்தக் குழந்தையை பராமரிக்க நடிகர்கள் பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரயிலில் ஒரு பெண் பிளாஸ்டிக் பையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு வந்தார். குழந்தையின் அழுகுரல் கேட்டு பயணிகள் பையை வாங்கி பார்த்தனர். அப்போது உள்ளே குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

திடீரென்று அப்பெண் குழந்தையை பையில் சுற்றி ரெயிலில் இருந்து தூக்கி வீச முயன்றாள். பயணிகள் அவளை மடக்கி பிடித்து குழந்தையை மீட்டனர். தாம்பரம் போலீசார் விசாரித்தபோது வேறு ஒருவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் பெண் குழந்தை பிறந்ததாக தெரிவித்தாள். அவள் பெயர் சித்ரா என்று தெரியவந்தது.

மனித உரிமைகள் கழக மாநில மகளிர் அணி அமைப்பாளரும் ஜான்சிராணி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சங்க தலைவியுமான கல்பனாவிடம் அக்குழந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு கிருஷ்ணவேணி என பெயரிட்டுள்ளனர். குழந்தை 3.5 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த குழந்தையை தத்து எடுத்து வளர்க்க விருப்பம் தெரிவித்து நடிகர்கள் பிரபுதேவா, லாரன்ஸ் ஆகியோர் அணுகியுள்ளனர். நடிகை விசாலி கண்ணதாசனும் தன்னிடம் தத்து கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

மனித உரிமைக்கழக தலைவர் சுரேஷ் கண்ணன், சென்னை மாவட்ட அமைப்பாளர் வக்கீல் அசோக்குமார் ஆகியோர் சட்டப்பூர்வமான முறையில் குழந்தையை தத்து கொடுப்பது பற்றி ஆலோசித்து வருகின்றனர்.

 

இன்று 5 சின்ன படங்கள்... ஏதாவது தேறுமா?

Friday Special 5 Small Films Hit Screens

சென்னை: இந்த வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் படங்கள் எத்தனை தெரியுமா.. ஐந்து!

இவற்றில் எத்தனை தேறும் என்ற கேள்வி... அதேநேரம் ஓரிரு படங்கள் தேறினாலும் அது தமிழ் சினிமாவுக்கு சற்றே ஆறுதலளிப்பதாக இருக்கும்.

இந்த ஐந்து படங்களில் ஓரளவு பெரிய படம் எப்படி மனசுக்குள் வந்தாய்?. காதலில் விழுந்தேன் படம் தந்த இயக்குநர் பிரசாத்தின் அடுத்த படம். அதே போல காதல் த்ரில்லர். பார்க்கக் கூடிய அளவுக்கு வந்திருப்பதாக சொல்கிறார்கள்.

அடுத்தது பனித்துளி. நட்டி குமார் என்பவர் இயக்கியுள்ளார். இதுவும் த்ரில்லர் வகைதான்.

லிவிங்ஸ்டன் போன்றோர் நடித்துள்ள 3 டி படம் அதிசய உலகமும், புதுமுகங்கள் நடிப்பில் பாளையம் கோட்டை என்ற படமும் இன்று ரிலீசாகின்றன. ஸ்ரீராமகிருஷ்ண தரிசனம் என்ற பக்திப்படமும் இன்றய ரிலீஸ் லிஸ்டில் உண்டு!

இந்த தமிழ்ப் படங்கள் தவிர, மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தியிலிருந்து மூன்று டப்பிங் படங்களும் வெளியாகின்றன. அவை.. அடங்காதவள், தில் தில் மனதில், கொருக்குப் பேட்டை கூலி (தமிழ் இயக்குநர்கள் தோற்றார்கள் போங்க!)

அல்லு அர்ஜுனின் ஜூலாயி படம் நேரடியாக தெலுங்கிலேயே வெளியாகிறது. சென்னை மற்றும் என்எஸ்ஸியில் 30 அரங்குகள் இந்தப் படத்துக்கு தரப்பட்டுள்ளன.

கேங்ஸ் ஆப் வஸிப்பூர் 2 என்ற இந்திப் படமும், தி பார்ன் லெகஸி எனும் ஆங்கிலப் படமும் இன்று பெரிய அளவில் வெளியாகின்றன.

ஆக மொத்தம் இன்று 11 புதிய படங்கள் வெளியாகின்றன. என்ஜாய்!

 

பிரியதர்ஷினியின் பெர்சனல் பக்கங்கள்!

Tv Anchor Priyadarshini Personal Pages

தமிழ் திரைப்பட நடிகர், நாடகக் கலைஞர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நாட்டியக் கலைஞர் எனப் பல ஆற்றல் கொண்டவர் பிரியதர்ஷினி. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்திருந்தாலும் இதயக்கோவில், உயிரே உனக்காக ஆகிய திரைப்படங்களில் சிறப்பாக நடித்து பாராட்டு பெற்றுள்ளார். முதன் முதலாக, 1998ஆம் ஆண்டு பொதிகை தொலைக்காட்சியின் 'விழுதுகள்' நெடுந்தொடரில் சின்னத்திரை கலை வாழ்க்கையைத் துவங்கிய இவர், பல நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றிய திவ்யதர்ஷினி இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கிறார். 'புலி வருது' உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

நடனத்தில் ஆர்வம் கொண்ட பிரியதர்ஷினி ‘மானாட மயிலாட' நடன நிகழ்ச்சியில் முதல் பரிசினை வென்றிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சித் தொடரிலும் ‘சிறந்த நடனக் கலைஞர்' விருதினைப் பெற்றிருக்கிறார்.

பரதக்கலையை முறையாகப் பயின்ற இவர், அமெரிக்க தமிழ்த் திருவிழா - இல் இடம் பெற்ற "வீரத்தாய் வேலுநாச்சியார்" நாட்டிய நாடகத்தில் முக்கிய வேடத்தில் நாட்டியமாடி அசத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேனல்களில் இன்றைக்கு தர்ஷினி சகோதரிகளின் ஆதிக்கம்தான் ( பிரியதர்ஷினி - திவ்யதர்ஷினி). அக்கா பிரியதர்ஷினி கலைஞர் டிவி என்றால் தங்கை திவ்யதர்ஷினி விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக கலக்கி வருகிறார்.

 

சிங்கப்பூரில் 10,000 தமிழ் ரசிகர்கள் முன் பிரமாண்டமாக நடந்த மாற்றான் இசை வெளியீடு!

Maattrraan Audio Launched Amidst 10000 Tamil Fans

சிங்கப்பூர்: 10000 தமிழ் ரசிகர்கள் முன்னிலையில் மாற்றான் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக சிங்கப்பூரில் நடந்தது.

வியாழக்கிழமை நடந்த இந்த விழாவில் தமிழ் சினிமா உலகமே திரண்டுவிட்டது என்றால் மிகையல்ல.

ஏஜிஎஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ள படம் மாற்றான். சூர்யா - காஜல் அகர்வால் நடித்துள்ளனர். ஒட்டிப் பிறந்த இரட்டையராக சூர்யா நடித்துள்ளார். கே வி ஆனந்த் இயக்கியுள்ளார்.

இந்த ஆண்டில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை உண்டாக்கிய படங்களில் மாற்றானும் ஒன்று.

படத்தின் அறிமுக விழா சென்னையில் சில வாரங்களுக்கு முன் நடந்தது. இசை வெளியீட்டு விழாவை சிங்கப்பூரில் பிரமாண்டமாக நடத்தவிருப்பதாக அறிவித்தனர்.

அதன்படி நேற்று மாலை சிங்கப்பூர் எக்ஸ்போ ஹாலில் ஹாரிஸ் ஜெயராஜ் இசைக் கச்சேரியுடன் அமர்க்களப்பட்டது மாற்றான் இசை விழா.

இசைக் குறுந்தகட்டை இயக்குநர்கள் கவுதம் மேனன், ஹரி, விஜய், லிங்குசாமி வெளியிட, சூர்யா, கேவி ஆனந்த், ஹாரிஸ் ஜெயராஜ் பெற்றுக் கொண்டனர்.

நடிகர்கள் சிவகுமார், பிரபு, பிரசன்னா - சினேகா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். பிருந்தா நடன அமைப்பில் தன்ஷிகா, பூர்ணா உள்ளிட்டோர் பாடல்களுக்கு சிறப்பாக நடனம் ஆடினர்.

அஞ்சலா அஞ்சலா பாடலுக்கு மேடையில் திடீரென தோன்றி நடனம் ஆடினார் சூர்யா. அவருடன் கார்த்தி, பிரசன்னா ஆகியோரு இணைந்து ஆடி கலக்கினார்.

 

எதிர்கால இயக்குநர்களை உருவாக்கும் நாளைய இயக்குநர்!

Nalaya Iyakkunar Season 3 Grand Fin

கலைஞர் தொலைக்காட்சியில் à®'ளிபரப்பாகும் நாளைய இயக்குநர் நிகழ்ச்சி திரைப் படத்துறையின் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு நல்லதொரு பிளாட்பார்ம் ஆக உள்ளது என்று நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் பிரபுசாலமன் உள்ளிட்ட பிரபலங்கள் தெரிவித்தனர்.

சமீபத்தில் நாளைய இயக்குநர் சீசன் -3யின் நிறைவு விழா நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் கமல், நக்கீரன் ஆசிரியர் நக்கீரன்கோபால், இயக்குநர்கள் கே.பாலசந்தர், வெற்றிமாறன்,பிரபுசாலமன் உட்பட பலர் பங்கேற்று சிறந்த திரைப்படங்களை இயக்கிய இயக்குநர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்கள்.

நடிகர் கமல் பேசும்போது, ‘'நாளைய இயக்குநர்களுக்கு இது பெரிய ப்ளாட்பார்ம். இது மாதிரி எங்களுக்கு கிடைக்கல. அதனால கொஞ்சம் வருத்தம் கூட இருக்கு. இப்போ இருக்குறவங்களுக்கு இப்படி à®'ரு ப்ளாட் பார்ம் கிடைச்சிருக்கிறது சந்தோசமா இருக்கு'' என்றார்.

இயக்குநர் பிரபுசாலமன் பேசும்போது, ‘'எங்களுக்கு இப்படி à®'ரு ப்ளாட் கிடைச்சிருந்தா 12 வருசங்கள் கஷ்டப்பட்டிருக்க மாட்டோம்'' என்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் நிறைய இயக்குநர்கள் உருவாகி வருகிறார்கள் என்றார்.

சீசன் -3ல் நித்திலன் - பாக்யராஜ் ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். அவர்களுக்கு பரிசுத்தொகை இரண்டரை லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு பெற்ற பாரதிபாலா விற்கு à®'ன்றரை லட்சம் ரூபாயும், மூன்றாம் பரிசு பெற்ற குகன் à®'ரு லட்சம் ரூபாய் பரிசு பெற்றார்.

சீசன் -1ல் வெற்றி பெற்ற பாலாஜி மோகன், ‘காதலில் சொதப்புவது எப்படி'என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராகிவிட்டார். சீசன் - 2ல் வெற்றி பெற்ற கார்த்திக், ‘பீசா' என்ற திரைப்படத்தை இயக்கிவருகிறார். நாளைய இயக்குநர் போட்டியில் சிறப்பான படங்களைத்தந்த அஸ்வினுக்கு இயக்குநர் பிரபுசாலமன் தனது தயாரிப்பில் à®'ரு படத்தை இயக்கும் வாய்ப்பை தந்திருக்கிறார்.

நாளைய இயக்குநர் நிகழ்ச்சியை ‘ஜேவி மீடியா ட்ரீம்ஸ்'ஜெயவேல் தயாரித்து, இயக்கிவருகிறார். சிவகணேசன் இந்த நிகழ்ச்சியின் ஷோ டைரக்டராக உள்ளார். இதுவரை மூன்று சீசன்களிலும் இயக்குநர் பிரதாப்போத்தன், மதன், பாக்யராஜ், சுந்தர் -சி, வெற்றிமாறன், விக்ரமன், பிரபுசாலமன் ஆகியோர் நடுவர்களாக இருந்தார்கள். நாளைய இயக்குநர் சீசன் -4ல் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நடுவராக வரப்போகிறார் என்று இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் ஜெயவேல் தெரிவித்துள்ளார்.

இந்த சீசனுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது. பல ஆயிரக்கணக்கான குறும்படங்களுடன் போட்டியாளர்கள் குவிந்து வருகிறார்கள். நாளைய தமிழ்சினிமாவில் நாங்கள் உருவாக்கிய நாளை இயக்குநர்கள் அதிகம் இருப்பார்கள்'' என்று ஜெயவேல் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரபலங்கள் பங்கேற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சி வரும் ஞாயிறு காலை 10.30 மணிக்கு கலைஞர் டிவியில் à®'ளிபரப்பாக உள்ளது.

 

நினைத்தாலே இனிக்கும்... அடுத்து மெல்லிசை மன்னர் எம்எஸ்வியும் களமிறங்குகிறார்!

Msv Perform On Stage Jaya Tv

சென்னை: மெல்லிசை மன்னர் எனப்புகழப்படும் எம்எஸ் விஸ்வநாதன் பல ஆண்டுகளுக்குப் பிறகு, ரசிகர்களை தன் இசையால் மகிழ்விக்க வருகிறார். அவருடன் பல ஜாம்பவான்களும் மேடையேறுகிறார்கள்.

ஜெயா டிவி ஆரம்பிக்கப்பட்டு 14 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டியும், மெல்லிசை மன்னர் திரையுலகுக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதற்கு விழா எடுக்கும் விதத்திலும் பிரமாண்டமான இந்த இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு நினைத்தாலே இனிக்கும் என்று பெயரிட்டுள்ளனர். வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி புதன்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்கள், பாடகர்கள் உள்ளிட்ட கலைஞர்கள், அரசியல் - சமூகத் தளங்களில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மெல்லிசை மன்னரைப் பாராட்டுகிறார்கள்.

மக்கள் திலகம் எம்ஜிஆரால் 1950-ல் ஜெனோவா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டவர் எஸ்எஸ்விஸ்வநாதன்.

1952-ல் எம்எஸ்வியையும் டிகே ராமமூர்த்தியையும் 'மெல்லிசை மன்னர்கள்' என பட்டம் சூட்டியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

அதன் பிறகு 513 தமிழ்ப் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தெலுங்கு மற்றும் மலையாளத்தில் முறையே 29 மற்றும் 76 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

 

'சிவாஜியின் பேரன்' சிவாஜி தேவ் - மித்ரா குரியன் நடிக்கும் நந்தனம்!

Sivaji Dev Mithra Starring Nandanam Love 21st Century

காதலை பல கோணங்களில் கோடம்பாக்கத்துக்காரர்கள் சொல்லிவிட்டார்கள். இன்றைய கால கட்டத்தில் காதலிக்க ஏழு வருடங்கள் தேவையில்லை. ஏழு நாட்கள் போதும்...என்ற கருவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் படம்தான் நந்தனம்.

இன்றைய பெண்களும் சரி பசங்களும் சரி வாழ்க்கையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை முன்னிறுத்தியே தங்கள் சக துணையை தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற மையக்கருவை வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் புது இயக்குநர் என்சி ஷியாமளன். ஏ வெங்கடேஷிடம் உதவி இயக்குநராக இருந்தவர் இவர்.

சிங்கக்குட்டி படத்தின் மூலம் மிகப் பிரமாண்டமாக அறிமுகம் செய்யப்பட்ட சிவாஜி தேவ்தான் படத்தின் நாயகன். செவாலியே சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரின் புதல்வர். தன் தாத்தாவின் பெயரையே தனக்கும் வைத்துக் கொண்டுள்ளார்.

சிங்கக்குட்டி முடித்த கையோடு லண்டனில் நடிப்புப் பயிற்சியை மேற்கொள்ளச் சென்றவர், இப்போது அடுத்தடுத்து புதிய படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார். நந்தனம் தன்னையும் கோடம்பாக்கத்தில் ஒரு நல்ல இடத்தில் கொண்டுபோய் நிறுத்தும் என்கிறார் நம்பிக்கையுடன்.

காவலன் நாயகி மித்ரா குரியன் 'காவலனு'க்குப் பிறகு நடிக்கும் படம் இது.

படத்தின் முக்கிய வேடத்தில் சன் டிவியில் கையில் ஒரு கோடி நிகழ்ச்சி நடத்தும் ரிஷி நடிக்கிறார். காமடி களத்தை அயன் ஜெகன் களைகட்ட வைக்க, ஈசனுக்குப் பிறகு ஒரு மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஏ. எல் அழகப்பன்.

முதல் கட்டப்படப்பிடிப்பு சென்னையில் உள்ள நந்தனம் மற்றும் ஹெச் சி எல் போன்ற பிரபல ஐ டி நிறுவனங்களில் அனுமதி பெற்று நடைபெற்றது. அன்வர் படத்திற்கு இசையமைத்த கோபி சுந்தர் தமிழில் முதன்முறையாக அறிமுகமாகிறார். எல். மோகன் ஒளிப்பதிவு செய்ய, வி. டி. விஜயன் எடிட்டிங் செய்ய சங்கர்தாசின் தயாரிப்பு மேற்பார்வையில் நந்தனம் வேகமாக வளர்ந்து வருகிறது.