தமிழ் திரையுலகின் 'மூத்த' இசையமைப்பாளரை மோசமாக சித்தரிக்கிறதா 'இசை' திரைப்படம்?

சென்னை: எஸ்.ஜே.சூர்யா இயக்கி, இசையமைத்து வெளியே வந்துள்ள திரைப்படமான இசை, தமிழ் சினிமாவின் இரு முக்கிய இசையமைப்பாளர்களை பிம்பிப்பது போல எடுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், அவரே நடித்து, இசையமைத்துள்ள திரைப்படம் இசை. மூத்த இசையமைப்பாளர் ஒருவர், திடீரென விஸ்வரூபம் எடுத்த இசையமைப்பாளரை பழிவாங்குவதுதான் கதை.

மூத்த இசையமைப்பாளர் வெற்றிச்செல்வன் கேரக்டரில் சத்யராஜும், இளம் இசையமைப்பாளர், ஏ.கே.சிவா, வேடத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் 'மூத்த' இசையமைப்பாளரை மோசமாக சித்தரிக்கிறதா 'இசை' திரைப்படம்?

தமிழ் சினிமாவின் உள்குத்து வேலையை காட்டுவதாக நினைத்துக் கொண்டு, மூத்த இசையமைப்பாளர் கேரக்டரை கடுமையாக டேமேஜ் செய்துள்ளார் இயக்குநர். படம் பார்ப்பவர்களுக்கு நிஜத்தில் அவர் எந்த இசையமைப்பாளரை இவ்வாறு தாக்குகிறார் என்பது நன்கு தெரியும் வகையில் காட்சிகள் உள்ளன. உதாரணத்துக்கு, மூத்த இசையமைப்பாளர், பூஜை, புணஸ்காரத்தில் மிகுந்த ஈடுபாடுடன் உள்ளவர் என்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதற்கேற்ப, ஹீரோ கேரக்டரை, ஏ.ஆர்.ரஹ்மானாக உருவகப்படுத்த மிகவும் மெனக்கெட்டுள்ளார் இயக்குநர். ஏ.கே.சிவா என்ற கேரக்டரின் இன்ஷியலே, ஏ.ஆர். ரஹ்மானின் இன்ஷியலை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. அதுமட்டுமின்றி, இசைப்புயல் என்ற அடைமொழிக்கு பதிலாக, இதில் இசை கடல் என்ற அடைமொழி, அந்த கேரக்டருக்கு தரப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் 'மூத்த' இசையமைப்பாளரை மோசமாக சித்தரிக்கிறதா 'இசை' திரைப்படம்?

ஓ.கே., ஹீரோ கேரக்டர் ரஹ்மான் என்றால், வில்லனாக சித்தரிக்கப்படும் மூத்த இசையமைப்பாளர் யார்? ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வந்த பிறகு வாய்ப்புகள் குறைந்து போனது எந்த இசையமைப்பாளருக்கு? என்ற கேள்விகள், ரசிகர்கள் மனதில் தொக்கி நிற்கின்றன. வில்லனாக சித்தரிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட அந்த மூத்த இசையமைப்பாளரின் ரசிகர்களை இந்த திரைப்படம் கோபப்படுத்தியுள்ளது.

ஒருவகையில், மூத்த இசையமைப்பாளர் ஒருவரை மிகவும் மோசமாக லைம்லைட்டில் நிற்க வைக்கும் முயற்சி படத்தில் தெரிவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அது, சரி.. எஸ்.ஜே.சூர்யாவுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமா என்ன?

 

திலீப்-மஞ்சுவாரியாருக்கு டைவர்ஸ்... மகள் திலீப் வசம் வளர கோர்ட் உத்தரவு!

திருவனந்தபுரம்: மலையாள நட்சத்திர தம்பதியான திலீப்-மஞ்சுவாரியாருக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1995 ஆம் ஆண்டு சல்லாபம் படத்தில் சேர்ந்து நடித்த போது, மலையாள நடிகர் திலீப்பும், நடிகை மஞ்சு வாரியாரும் காதலிக்கத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து 1998ம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

சுமார் 16 வருடங்கள் இணைந்து வாழ்ந்த இத்தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். திருமணத்திற்குப் பின் நடிப்பதை விட்டு விலகி இருந்தார் மஞ்சுவாரியார். ஆனால், தொடர்ந்து நடித்து வந்த திலீப்பிற்கும், திருமணமான சிறிது காலத்திலேயே கணவரைப் பிரிந்த காவ்யா மாதவனுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் திலீப் - மஞ்சுவாரியாரின் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

திலீப்-மஞ்சுவாரியாருக்கு டைவர்ஸ்... மகள் திலீப் வசம் வளர கோர்ட் உத்தரவு!

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் விவாகரத்து கேட்டு இருவரும் எர்ணாகுளம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி மோகன் தாஸ் இருவரையும் அழைத்து பேசினார். விவாகரத்து முடிவை மறு பரிசீலனை செய்யும்படி 6 மாதம் அவகாசம் கொடுத்தார்.

அந்த அவகாசம் முடிவடைந்த சூழலில், மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மஞ்சுவாரியரும், திலீப்பும் நேரில் ஆஜரா னார்கள். நீதிபதியிடம் சேர்ந்து வாழ முடியாது விவாகரத்து வேண்டும் என இருவரும் கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து இருவருக்கும் விவாகரத்து அளித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், மகள் மீனாட்சி தந்தை திலீப் பொறுப்பில் வளரவும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

தீர்ப்புக்குப் பின் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த திலீப், செய்தியாளர்களிடம், ‘நாங்கள் தொடர்ந்து நல்ல நண்பர்களாக இருப்போம். தாயார் என்ற முறையில் அவரது மகளை அவர் எப்போது வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம்' என்றார்.

 

மார்ச் 1-ல் கமல்ஹாஸனின் உத்தம வில்லன் இசை வெளியீடு

கமல் ஹாஸன் நடித்துள்ள உத்தம வில்லன் படத்தின் இசை வெளியீடு வரும் மார்ச் 1-ம் தேதி வெளியாகிறது.

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல், பூஜா குமார், ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடித்த உத்தம வில்லன் படம் முழுவதுமாக முடிந்து வெளியாகத் தயாராக உள்ளது.

இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனலுடன் இணைந்து, லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாாரிக்கிறது.

மார்ச் 1-ல் கமல்ஹாஸனின் உத்தம வில்லன் இசை வெளியீடு

படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கமல் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் வரும் மார்ச் 1-ம் தேதி படத்தின் இசையை வெளியிடவிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.