ஏ.ஆர். ரஹ்மானுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்

Ar Rahman Turns 47 Today

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கீ போர்டு வாசிப்பவராக வாழ்க்கையைத் துவங்கி பின்னர் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பெரிய இசையமைப்பாளர் ஆனார். அவர் கோல்வுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு உட்களில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

ஒரு ஆஸ்கர் விருது வாங்க மாட்டோமா என்று பல கலைஞர்கள் ஏங்குகையில் ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு இசையமைத்தற்ககாக 2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றார். தொடர்ந்து அவர் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஆஸ்கர் விருது தவிர அவர் கிராமி விருதும் பெற்றுள்ளார்

இசைத் துறையில் 20 ஆண்டுகளாக இருக்கும் அவர் பல்வேறு சாதனைகள் படைத்தும் அடக்கமாக இருப்பது தான் அவருடைய ஸ்பெஷல். ரஹ்மானுக்கு 47 வயதானாலும் அவர் திரைத்துறைக்கு வந்தபோது இருந்த மாதிரியே இன்னும் இளமையாகத் தான் உள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஹ்மான்!

 

விஸ்வரூபத்தை திரையிடும் எந்த தியேட்டருக்கும் ஒத்துழைப்பில்லை - திரையரங்க உரிமையாளர் சங்கம்

Dont Screen Viswaroopam Tntoa Annouunces   

சென்னை: கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்துக்கு தடையை மீறு தியேட்டர்கள் தரும் யாருக்கும் ஒத்துழைப்பு தர மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கமலின் விஸ்வரூபம் படம் வருகிற 11-ந்தேதி ரிலீசாகிறது. அதற்கு 10 மணி நேரம் முன்பு 10-ந்தேதி இரவு 9.30 மணிக்கு டி.டி.எச் மூலம் வீடுகளில் ஒளிபரப்பாகிறது. கட்டணம் ரூ 1000. இதற்காக 6 டிடிஎச் நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன.

டிடிஎச் மூலம் பார்க்க ரசிகர்கள் பணம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

கமலின் இந்த முயற்சிக்கு திரையரங்க உரிமையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தப் படத்துக்கு தமிழகத்தில் எங்குமே தியேட்டர் தரமாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் வினியோகஸ்தர்களும், டி.டி.எச்.சில் வெளியிடும் எந்த ஒரு படத்தையும் எந்த தியேட்டர்களிலும் திரையிடுவதும் இல்லை, விநியோகம் செய்வதும் இல்லை என முடிவெடுத்துள்ளோம் என்று திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அண்ணாமலை நேற்று அறிவித்தார்.

இதற்கிடையில் கோவை மாவட்ட திரையரங்கு உரிமையாளர் சங்கம் கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அங்குள்ள 32 தியேட்டர்களில் படத்தை திரையிடப் போவதாக கூறி, விளம்பரமும் வெளியிட்டுள்ளனர்.

சென்னையிலும்...

அடுத்து அண்ணாசாலையில் உள்ள தேவி காம்ப்ளெக்ஸில் இரண்டு திரையரங்குகளிலும், சாந்தி திரையரங்கிலும் இந்தப் படத்தைத் திரையிடப் போவதாக அறிவித்துள்ளனர். திருச்சியிலும் ஒரு தியேட்டரில் வெளியாகும் என்று தெரிகிறது.

2000 பேர் வரை உறுப்பினராக உள்ள திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தில் சிலர் மட்டும் கட்டுப்பாடுகளை மீறியிருப்பது, பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலர் பன்னீர் செல்வம் கூறுகையில், "கமல் எப்படி தன் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவதன் மூலம் தியேட்டர்களை ஒழித்துக் கட்டுவதில் குறியாக இருக்கிறாரோ, அதே மாதிரி நாங்களும் அவர் படத்துக்கு தியேட்டர் தராமல் தியேட்டர்களின் எதிர்காலத்தைக் காக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறோம்.

சங்கத்தின் முடிவை மீறி யாராவது விஸ்வரூபத்துக்கு தியேட்டர்கள் அளித்தால், அவர்களுக்கு எங்களால் எந்த ஒத்துழைப்பும் தரமுடியாது," என்றார்.

 

இளமை ஊஞ்சலாடுகிறது ரீமேக்: ரஜினி வேடத்தில் தனுஷ், கமல் வேடத்தில் சிம்பு, ஸ்ரீபிரியாவாக ஸ்ருதி?

Dhanush Simbu Ilamai Oonjal Aadukirathu Remake

சென்னை: ரஜினி, கமல் நடித்த இளமை ஊஞ்சல் ஆடுகிறது படத்தின் ரீமேக்கில் தனுஷ், சிம்பு மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்கவிருக்கிறார்களாம்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா ஆகியோரை வைத்து ஸ்ரீதர் எடுத்த சூப்பர் ஹிட் படம் இளமை ஊஞ்சல் ஆடுகிறது. 1978ல் ரிலீஸான இந்த படம் பட்டி தொட்டி எல்லாம் கலக்கியது. இந்நிலையில் இப்படத்தை தற்போது ரீமேக் செய்யவிருக்கின்றனர். ரீமேக்கில் ரஜினி கதாபாத்திரத்தில் அவரது மருமகன் தனுஷ், கமல் வேடத்தில் சிம்பு மற்றும் ஸ்ரீபிரியா கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடிக்க உள்ளார்களாம். ஆனால் இது குறித்து நடிகர்கள் யாரும் வாய் திறக்கவில்லை.

எலியும், பூனையுமாக இருந்த தனுஷும், சிம்புவும் திடீர் என்று நண்பர்களாகினர். சிம்பு தனது பிறந்தநாள் விழாவுக்கு தனுஷை அழைத்திருந்தார். இதன் மூலம் அவர்களுக்கிடையே இருந்த பகை மறைந்துவிட்டது என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரே படத்தில் நடிக்கவிருக்கின்றனர்.

அவர்கள் இருவரும் தற்போது பிசியாக இருப்பதால் கையில் உள்ள படங்களை முதலில் முடித்துவிட்டு இந்த படத்தில் நடிப்பார்கள் என்று தெரிகிறது.

 

கமலிடம் விஸ்வரூபம் ஸ்பெஷல் ஷோ கேட்டாரா ஜெயலலிதா?

Jaya Asks Kamal Vishwaroopam Specia Show

சென்னை: கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தின் சிறப்பு காட்சியை தனக்காக காண்பிக்க முடியுமா என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டதாக வதந்தி கிளம்பியுள்ளது.

விஸ்வரூபம் படம் வரும் 10ம் தேதி டிடிஹெச்சில் ரிலீஸாகிறது. அதன் பிறகு தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை டிடிஹெச்சில் ரிலீஸ் செய்தால் ரசிகர்கள் யாரும் தியேட்டருக்கு வர மாட்டார்கள் என்று தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் அவர்கள் டிடிஹெச் ரிலீஸிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவும் முடிவு செய்துள்ளனர். விஸ்வரூபம் சந்திக்கும் பிரச்சனை பற்றிய செய்திகளைப் படிக்கையில் அப்படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விஸ்பரூபத்தை உடனே பார்க்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவும் ஆர்வமாக உள்ளாராம்.

தனக்காக சிறப்பு காட்சி காண்பிக்க முடியுமா என்று அவர் கமலிடம் கேட்டுக் கொண்டதாக வதந்திகள் பரவியுள்ளது.

 

சேவை வரிக்கு எதிர்ப்பு ... ரஜினி, கமல் உள்பட தமிழ்த் திரையுலகினர் நாளை உண்ணாவிரதம்

Rajini Kamal Others Sit On Fast Against Service Tax

சென்னை: சேவை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் திரையுலகினரின் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகையர் உள்பட தமிழ்த் திரையுலகின் அத்தனைப் பிரிவினரும் பெருமளவில் கலந்து கொள்ளவுள்ளனர். வள்ளுவர் கோட்டம் எதிரே இந்தப் போராட்டம் நடைபெறும்.

உண்ணாவிரதப் போராட்டத்தையொட்டி நாளை படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. உண்ணாவிரதத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகர், நடிகையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான மத்திய அரசு பட்ஜெட்டில் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து பிரிவினருக்கும் தொலைக்காட்சி துறை தொழிலாளர்களுக்கும் 12.3 சதவீதம் சேவை வரி விதிக்கப்பட்டது. இது கடந்த ஜூலை 1,ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதற்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைக் கண்டித்து ஒருநாள் போராட்டம் அறிவித்து, தியேட்டர்களை மூடினர். படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் ஆகிய மூன்று பிரிவினருக்கும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதே நேரத்தில், ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறும் நடிகர், நடிகைகள், டைரக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சேவை வரி கட்ட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு திரையுலகினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த உத்தரவை எதிர்த்துதான் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. போராட்டம் குறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறுகையில்,திரையுலக கலைஞர்கள் ஏற்கனவே வருமான வரி கட்டி வருகின்றனர். இந்நிலையில், சேவை வரி விதிப்பது அவர்களுக்கு சுமையாக இருக்கும். இந்த சுமையை தயாரிப்பாளர்கள் மீதுதான் அவர்கள் சுமத்துவர். இதனால் தயாரிப்பு செலவு அதிகரித்து திரையுலகம் கடுமையாக பாதிக்கும்.

எனவே, சேவை வரியில் இருந்து திரையுலகம் மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இதை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு நாளை ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கிறோம். காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

இதில் திரைப்பட நடிகர் நடிகைகள், சின்னத்திரை கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், தொழிலாளர்கள், வினியோகஸ்தர்கள், திரை அரங்க உரிமையாளர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.

ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் கலந்துகொள்ள ஒப்புதல் அளித்துள்ளனர். இதையொட்டி தமிழகம் முழுவதும் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள், அது தொடர்பான எந்த பணிகளும் நடக்காது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தியேட்டர்களில் படக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.