கிசு கிசு - ரிப்பன் வெட்டும் நடிகை

Kodambakkam Kodangi நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
    
நமீ நடிகைக்கு கோலிவுட்ல புதுபட வாய்ப்பு வரலன்னாலும் அதுக்காக நடிகை வருத்தப்படாம குஷியா இருக்காராம்... இருக்காராம்... வேற லாங்குவேஜ்ல பிஸியாயிட்டாரான்னு கேட்டா அதுவுமில்லையாம். அப்படின்னா குஷிக்கு என்ன காரணம்னு கேட்டா ஊர் முழுக்க புதுசா ஷாப் திறக்கறாங்க அதுல ரிப்பன கட் பண்ணி வச்சாலே லட்ச லட்சமா தர்றாங்களாம்... தர்றாங்களாம்... அதுதான் குஷிக்கு காரணமாம்... காரணமாம்...

ஒரு காலத்துல பிலிம் இன்ஸ்டிடியூட் ஸ்டூடன்ட் படங்கள்ல பிஸியா இருந்தாரு ராம்கியான ஹீரோ. இப்போ 'பிரியாணிÕ கிண்டிகிட்டிருக்க¤ற வெங்கட இயக்கத்துக்கு திடீர்னு ராம்கியோட ஞபாகம் வந்துருச்சாம். அவரை முக்கிய ரோல்ல நடிக்க கேட்டாராம். நடிப்ப கழற்றி அலமாரில வச்சிருந்த ஹீரோ, இப்ப புது உற்சாகத்தோட தூசி தட்டி ரீ என்ட்ரிக்கு தயாராயிட்டாராம்... தயாராயிட்டாராம்...

செவன் ஜி குடியிருப்பு படத்துல நடிச்ச ரவிகிருஷ்ண ஹீரோவ அவரோட பிரதர் மேரேஜ்ல பாத்தவங்க ஷாக் ஆயிட்டாங்களாம்... ஆயிட்டாங்களாம்... ஸ்லிம்மா படத்துல தெரிஞ்சவர் கன்னாபின்னானு ஊதி பெருத்திருந்த தோற்றம்தான் எல்லாத்துக்கும் ஷாக் கொடுத்துச்சாம். புது படத்துக்காக இந்த தோற்றம்னு நடிகரு சொல்றாராம். எந்த படம்னு கேட்டா நைசா நழுவுறாராம்... நழுவுறாராம்...
 

இளையராஜாவை மிஸ் பண்ணிட்டீங்களே ஏன் பாலா? - பரதேசி பிரஸ் மீட்டில் கேள்வி

Bala S Explanation Not Working With Ilayaraja

சென்னை: புதிய காம்பினேஷனில் படம் பண்ண வேண்டும் என பத்திரிகைகள் எழுதியதால்தான் பரதேசியில் டீமை மாற்றினேன் என பதிலளித்துள்ளார் இயக்குநர் பாலா.

பாலா இயக்கும் புதிய படம் ‘பரதேசி'யின் ஆடியோ வெளியீடு நேற்று சென்னையில் நடந்தது.

இதைத்தொடர்ந்து 'பரதேசி' படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பாலா அளித்த பதில்கள்:

‘பரதேசி' என்று இந்த படத்திற்கு பெயர் வைக்கக் காரணம் என்ன?

இந்த தலைப்புக்கு கவித்துவமான விளக்கம் கூறமுடியாது. சுதேசிக்கு எதிர்ப்பதம் பரதேசி. ஊர் விட்டு ஊர் போகும் ஒரு பரதேசியின் கதை. அதைத்தான் தலைப்பாக வைத்திருக்கிறோம்.

உங்களுடைய படங்களில் நடித்த நடிகர்களில் யார் சிறந்த நடிகர்?

நான்தான் சிறந்த நடிகன்.

உங்களுடைய படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் பெரிய அளவில் ஹிட்டாகி விடுகிறார்கள். ஆனால், ஹீரோயின்கள் அந்த அளவுக்கு பெரிய அளவில் பேசப்படுவதில்லை. அது ஏன்?

அப்படி சொல்லமுடியாது. பிதாமகனில் நடித்த சங்கீதா, அந்த படத்திற்கு பெரிய நடிகையாகிவிட்டார். லைலாவும் பெரிய நடிகையாக வலம் வந்தார். அதுபோல், இந்த படத்தில் நடித்துள்ள இரு ஹீரோயின்களும் மிகப்பெரிய அளவில் பேசப்படுவதற்கு 100 சதவீதம் வாய்ப்புள்ளது.

‘பரதேசி' உண்மைக் கதையா?

இது முழுக்க முழுக்க உண்மை கதை கிடையாது. உண்மைக் கதையில் என்னுடைய கற்பனையையும் கலந்து பண்ணியிருக்கிறோம்.

இந்த படத்தில் அதர்வாவை நடிக்க வைக்கவேண்டும் என்று எப்படி தோன்றியது?

இந்த கதைக்கு அவர் தேவைப்பட்டார் என்பதுதான் உண்மை. அதுமட்டுமல்ல, அது என் கடைமையும்கூட.

இளையராஜாவை விட்டுவிட்டு, ஜிவி பிரகாஷை தேர்வு செய்தது ஏன்?

வழக்கமாக நான் இளையராஜா, விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால் என்று திரும்பத் திரும்ப ஒரே டீமை வச்சி படம் பண்றதாவும், புது ஆட்களோட ஏன் வேலை பார்க்கவில்லை என்றும் நீங்கள்தான் (பத்திரிகைகள்) எழுதினீர்கள். இப்போ ஏன் இளையராஜாவோட சேரலைன்னு கேட்கறீங்க..

‘பரதேசி' படத்தில் இரு நாயகிகளும் ரொம்பவும் அழகாக இருக்கிறார்கள். ஆனால் படத்தில் கறுப்பாக, அசிங்கமாக காட்டியிருக்கிறீர்கள். ஏன் கருப்பான நடிகைகளை நீங்கள் தேர்வு செய்யக்கூடாது?

அப்படியெல்லாம் கிடையாது. கருப்பான பெண்களையும் நடிக்க வைத்திருக்கிறேன். இந்த படத்தில் ரித்திகா என்ற புதுமுகத்தை அறிமுகம் செய்திருக்கிறேன். அவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எனக்கு நார்த் இண்டியன் நடிகை, சவுத் இண்டியன் நடிகை என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. மொத்தத்தில் இண்டியன் நடிகை என்றுதான் பார்க்கிறேன்.

‘பரதேசி' படத்தில் என்ன சொல்லியிருக்கிறீர்கள்?

இன்று டீ குடிக்காதவர்கள் என்று யாருமே கிடையாது. ஆனால், இப்படத்தை பார்த்தபிறகு அந்த டீயை குடிக்கும் முன்பு அதை குடிக்கலாமா? வேண்டாமா? என்று யோசிப்பீர்கள்.

 

ரத்தத்துல ஏன் எழுதினார்.. பேனா மை தீர்ந்திடுச்சா? - வைரமுத்துவை நக்கலடித்த பாலா!

Bala S Experience With Vairamuthu

சென்னை: பரதேசி படத்தின் பாடல்களை தன் ரத்தத்தில் எழுதியதாக வைரமுத்து கூற, அதற்கு ஏன்... பேனாவில் மை தீர்ந்துடுச்சா என்று மனதுக்குள் கிண்டலடித்தாராம் இயக்குநர் பாலா.

இதனை அவரே படத்தின் பிரஸ்மீட்டில் தெரிவித்தார்.

பரதேசி படத்தின் இசைவெளியீட்டுக்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், முதல் முறையாக வைரமுத்துவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த பாலா, "படத்தின் பாடல்களை எழுதி முடித்த பிறகு, அந்த தாள்களை என்னிடம் நீட்டினார் வைரமுத்து. நான் வாங்கி வைத்துக் கொண்டேன். அப்போது அவர், இந்த பாடல் வரிகளை நான் ரத்தத்தால் எழுதி இருக்கிறேன்.. படித்துப் பாருங்கள் என்றால் உணர்ச்சிகரமாக.

உடனே நான் நினைத்துக் கொண்டேன்... ஏன் ரத்தத்துல எழுதணும்... மை தீர்ந்துடுச்சா என்று.

நான் கொஞ்சமல்ல, ரொம்பவே கிண்டல் பிடிச்ச பேர்வழி. அதனால் இயல்பாகவே என் மனதுக்குள் அப்படி தோணுச்சு. ஆனா அப்புறம் படிச்சிப் பார்த்தேன். ரத்தத்துலதான் எழுதியிருந்தார்," என்றார்.

 

வன்முறை காட்சிகளை குறைத்துவிட்டேன் : பாலா பேட்டி

Reduced violence: Bala interview வன்முறை காட்சிகளை குறைத்துவிட்டேன் என்றார் பாலா. 'பரதேசி படம் பற்றி இயக்குனர் பாலா கூறியதாவது: 1940களில் டீ எஸ்டேட் தொழிலாளர்களின் வாழ்க்கையை சொல்லும் கதை. ஒவ்வொருவரும் டீ குடிக்கும்போது இப்படம் ஞாபகம் வரும். இதில் அதர்வா நடித்திருக்கிறார். மறைந்த முரளிக்கு நாம் எவ்வளவோ செய்ய வேண்டி இருக்கிறது. அந்த வகையில் அதர்வாவை இதில் பயன்படுத்தி இருக்கிறேன். 'நடிகர், நடிகைகளுக்கு கருப்பு மேக்கப்போட்டு நடிக்க வைப்பது ஏன்? என்கிறார்கள். கதைப்படிதான் கதாபாத்திரங்கள் அமைக்கப்படுகின்றன. வேண்டுமென்றே சிவப்பு நடிகர்களுக்கு கருப்பு மேக்கப் போடவில்லை.

இந்த படத்தில் கருப்பு மேக்கப் போட்டவரும் நடித்திருக்கிறார், சிவப்பு நிற நடிகையும் நடித்திருக்கிறார். இப்படத்துக்கு இளையராஜா இசை அமைக்காதது ஏன் என்கின்றனர். அதற்கு காரணம் பத்திரிகைகள்தான். இளையராஜாவை தவிர வேறு இசை அமைப்பாளருடன் நான் பணியாற்றுவதில்லை என்று எழுதுகிறார்கள். அதனால்தான் இம்முறை ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். வைரமுத்து பாடல் எழுதி இருக்கிறார். என் படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் இருப்பதாக விமர்சனங்கள் வரும். எனக்கு குழந்தை பிறந்த பிறகு வன்முறை காட்சிகளை குறைத்துவிட்டேன். இதில் பணியாற்றிய எல்லோருக்கும் தேசிய விருது கிடைக்க வேண்டும் என்பது என் ஆசை. அடுத்த மாதம் 21ம் தேதி படம் ரிலீஸ். இவ்வாறு பாலா கூறினார்.
 

மணல் கொள்ளைக்கு எதிரான கதை

Policy against sand theft மணல் கொள்ளைபற்றிய கதை படமாகிறது. மகேந்திரன், புதுமுகம் நீலாம்பரி நடிக்கும் படம் 'போரிடப் பழகு. இப்படம் பற்றி இயக்குனர் சேகர் பாரதி கூறியதாவது: வருங்கால சந்ததிக்கு முன்னோர்களாகிய நாம் விட்டு செல்லப்போவது வறண்ட பாலைவனமும், நீர் இல்லா பூமியையும்தான். அந்தளவுக்கு ஆற்று மணல் தோண்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுகிறது. ஆற்று மணலை தோண்டி எடுக்கும் தாதாவாக ரியாஸ்கான் நடிக்கிறார்.

அவரிடம் பணியாற்றும் மகேந்திரன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சொன்னதை செய்யும் முரட்டு குணம் படைத்தவர். அவரை காதலிக்கும் நீலாம்பரி மணல் கொள்ளையால் இயற்கை வளம் எவ்வாறு கொள்ளையடிக்கப்படுகிறது என்பதை புரிய வைத்து மணல் கொள்ளைக்கு எதிராக அவரை மாற்றி போராட வைக்கிறார். மனோபாலா, கிரேன் மனோகர், புதுமுகம் ஜெயகுமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஆண்டனி ஒளிப்பதிவு. பவதாரணி இசை. ம.பாலாஜி, ரோஸ்மேரி தயாரிப்பு. காஞ்சிபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது. இவ்வாறு சேகர் பாரதி கூறினார்.
 

ஒரே படத்தில் மோகன்லாலுடன் 4 ஹீரோயின்கள்

4 heroines in a film with Mohanlal ஒரே படத்தில் மோகன்லாலுடன் 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இரண்டு ஹீரோயின்கள் நடிக்கும் படங்களிலேயே பிரச்னை என்பது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் 4 ஹீரோயின்களை வைத்து படம் இயக்குகிறார் மலையாள இயக்குனர் சித்திக். தமிழில் கடைசியாக காவலன் படத்தை சித்திக் இயக்கினார். அதே படத்தை இந்தியில் சல்மான் கான் நடிப்பில் பாடிகாட் பெயரில் ரீமேக் செய்தார். பின் மீண்டும் பாலிவுட் படம் இயக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் மலையாள படத்தையே இயக்க அவர் முடிவு செய்துள்ளார். மலையாளத்தில் உருவாகும் இப்படத்துக்கு 'லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன் என பெயரிடப்பட்டுள்ளது.

மோகன்லால் ஹீரோ. மீரா ஜாஸ்மின், மம்தா மோகன்தாஸ், பத்மப்ரியா, மித்ரா குரியன் ஆகியோர் ஹீரோயின்கள். இது பற்றி சித்திக் கூறும்போது, 'இன்றைய இளைய சமுதாயம் எந்த விதமான பிரச்னைகளை சந்திக்கிறது என்பதுதான் கதை. வாழ்க்கையில் தன்னம்பிக்கையும், நேர்மறையான எண்ணங்களும் எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தும். மோகன்லாலை சுற்றி கதை சுழல்கிறது. ஐ.டி கம்பெனியில் பணியாற்றும் மம்தா, மித்ரா, கம்பெனி சிஇஓ மீரா, விமான பணிப்பெண்ணாக பத்மப்ரியா என வெவ்வேறு பணிகளில் இருக்கும் இளம்பெண்களை மோகன்லால் எவ்வாறு ஒன்றிணைக்கிறார் என்று கதை செல்லும். கொச்சியின் பல பகுதிகளில் ஷூட்டிங் நடக்க உள்ளது என்றார்.
 

ஒரு கோடி கேட்டு தயாரிப்பாளரை விரட்டிய சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan Demands Crore

புதிதாக படம் எடுக்க வந்த தயாரிப்பாளரை ஏகத்துக்கும் சம்பளம் கேட்டு விரட்டியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

மெரினா என்ற சுமாரான படத்தில் அறிமுகமாகி, அடுத்தடுத்த இரண்டு சொதப்பல் படங்களில் நடித்தவர் சிவகார்த்திகேயன்.

கோவையைச் சேர்ந்த வசதியான நபர் ஒருவர், சினிமா எடுக்கும் ஆசையில் சென்னை வந்தாராம்.

கோடம்பாக்கத்தில் ஹீரோக்கள் ரேட்டையெல்லாம் விசாரித்த அந்த நபர், 'சிவகார்த்திகேயன் கொஞ்சம் சீப்பா கிடைப்பாரு' என்று யாரோ சொன்னதை நம்பி, அந்தத் தம்பியிடம் போயிருக்கிறார்.

கதை மற்றும் பட்ஜெட்டையெல்லாம் கேட்டுக் கொண்ட சிவ கார்த்திகேயன், தனக்கு சம்பளமாக மட்டும் ஒரு கோடி ப்ளஸ் அஞ்சலியை ஹீரோயினாகக் கேட்டாராம்.

அடுத்த நாள் அந்தத் தயாரிப்பாளரின் கார் நேராகப் போய் நின்ற இடம் அவரது கோவை வீடுதானாம்.

ஆணியே புடுங்க வேணாம்... கோடம்பாக்கத்து ஒரு கும்பிடு! என்று கூறிவிட்டாராம், தன்னை சென்னைக்கு அழைத்துப் போன புரோக்கர் நண்பரிடம்!

 

சோனா மீது கேஸ் போட்டார்கள் ஆண்கள் நலச் சங்கத்தினர்

Men S Welfare Association Sues Actr

சென்னை: ஆண்களை துடைத்துப் போடும் டிஷூ பேப்பருடன் ஒப்பிட்டுப் பேட்டி கொடுத்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ள கவர்ச்சி நடிகை சோனா மீது தமிழ்நாடு ஆண்கள் நலச் சங்கம் சார்பில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் வழக்குப் போடப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஒரு வாரப் பத்திரிக்கையில் வெளியான சோனாவின் பேட்டி பெரும் புயலைக் கிளப்பி விட்டது. அதில் ஆண்களை டிஷூ பேப்பருடன் சோனா ஒப்பிட்டுக் கூறியதாக வெளியாகியிருந்ததால் ஆண்கள் நலச் சங்கத்தில் போராட்டத்தில் குதித்தனர். சோனா வீடு முன்பு போராட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் தான் அப்படியெல்லாம் பேசவில்லை என்றும் அந்தப் பத்திரிகைதான் திரித்து போட்டு விட்டதாகவும் கூறினார் சோனா. மன்னிப்பும் கேட்க மறுத்து விட்டார்.

இந்தப் பின்னணியில், ஆண்கள் பாதுகாப்புச் சங்க பொதுச் செயலாளர் மதுசூதனன் என்பவர் சென்னை எழும்பூர் 13-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் போட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், நடிகை சோனா ஆண்களைப் பற்றி தெரிவித்துள்ள கருத்து அவதூறானது. ஆண்களின் சுயமரியாதைக்கு எதிரானது. பண்பாடு மிக்க சமுதாயத்தை சீரழிக்கும் வகையில் பேசி உள்ளார். குடும்ப வாழ்க்கையை பற்றியும் கொச்சைப்படுத்தி இருக்கிறார்.

சுயமரியாதைக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் நடிகை சோனா மீது சட்டப்பிரிவுகள் 500, 504, 505 ஆகியவற்றின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

ஏற்கனவே சோனா மீது வேறு ஒரு ஊரிலும் வழக்குப் போட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

 

ஆடம்பர செலவுக்காக குற்றவாளிகளாக மாறும் இளையசமுதாயம்!: நீயா நானாவில் அதிர்ச்சி

Discussion On Pocket Money Neeya Naana

அப்பா நாலணா குடுப்பா....

நாலணாவுக்கு என்ன செலவு இருக்கு? பத்துபைசா தர்றேன்... பாட்டி கடையில மிட்டாய் வாங்கிட்டு பள்ளிக்கூடம் போ கண்ணு...

இது 80களில் பள்ளிக்கு சென்றவர்களின் வீடுகளில் நடந்த உரையாடல். 90களில் கல்லூரி சென்று படிக்கும் போது கூட 20 ரூபாய் செலவிற்கு வாங்குவது கூட அதிகம்தான். ஆனால் இன்றைக்கோ எல்.கே.ஜி செல்லும்போதே தினசரி 30 ரூபாய் அல்லது 50 ரூபாய் சாக்லேட், ஸ்நாக்ஸ் வாங்கித்தர வேண்டிய நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.

இதுவே வளர்ந்து கல்லூரி செல்லும்போது 500 லிருந்து 1000 ரூபாய் வரை கூட பாக்கெட் மணி கொடுக்கவேண்டியிருக்கிறது. தன்னுடன் படிக்கும் மாணவர்கள் ஆடம்பரமாக செலவு செய்கின்றனரே தானும் அதே போல செலவு செய்யவேண்டும் என்ற எண்ணம்தான் பெற்றோர்களிடம் பாக்கெட் மணி அதிகம் கேட்டு செலவு செய்யத் தூண்டுகிறது.

இந்தவாரம் நீயா நானா நிகழ்ச்சியில் ‘பாக்கெட் மணி' பற்றி பெற்றோர்களும், பிள்ளைகளும் விவாதித்தனர். தங்களுடைய பிள்ளைகளுக்கு பணத்தின் அருமை தெரியவில்லை என்று பெற்றோரும், அப்பா, அம்மா கொடுக்கும் பணம் போதவில்லை என்று குழந்தைகளும் மாறி மாறி புகார் தெரிவித்தனர்.

பெற்றோர் தரும் பணம் போதவில்லை அதற்காக வீட்டில் வைத்திருக்கும் பணத்தை திருடுகிறோம் என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து இளைய தலைமுறையினரும் தெரிவித்தனர். இது மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சிக்காக எடுத்த கணக்கெடுப்பு à®'ன்றில் 70 சதவிகித கல்லூரி மாணவிகள் பெற்றோர் கொடுக்கும் பாக்கெட் மணியை தவிர்த்து வீட்டில் பணம் திருடுகிறோம் என்று à®'ப்புக்கொண்டுள்ளனர்.

இளைய சமுதாயத்தினரின் இந்த பணம் திருட்டு ஆபத்தானது என்று தெரிவித்தார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளங்கோ. உலகம் முழுவதும் உள்ள இளைய தலைமுறையினர் ஆடம்பர செலவிற்காக பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்தார். இளைஞர்கள் ஆட்களை கடத்துவதும், திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் நடக்கிறது. இது பெண் பிள்ளைகள் என்றால் விபச்சாரம் செய்வதற்குக்கூட தயங்குவதில்லை என்றும் அவர் எச்சரித்தார்.

இதற்குக் காரணம் பிள்ளைகள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து அவர்களுக்கு செல்லம் கொடுத்து கெடுத்தது பெற்றோர்கள்தான். எனவே திடீரென்று அவர்களுக்கு பணம் கொடுப்பதை நிறுத்தினால் அவர்களின் எண்ணம் வேறு விதமாக வடிவெடுக்கிறது. எனவே ஆடம்பரமோகத்தை குறைத்து பணத்தின் அருமையை உணர்ந்து செலவு செய்யவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினர்.

இதேபோல் நிகழ்ச்சியில் பேசிய மற்றொரு சிறப்பு விருந்தினர் நாகப்பன் புகழேந்தி பணத்தின் அருமையை குழந்தைகள் உணரவேண்டுமானால் அவர்களின் கையில் பணத்தை கொடுத்து கணக்கு கேட்கலாம். அதனால் எதற்க்கு எவ்வளவு பணம் செலவு செய்யவேண்டும் என்பது அவர்களுக்கு தெரியவரும் என்றார்.

பணத்தின் அருமையை உணர்தும் புத்தகம் à®'ன்றை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்போவதாகவும் நாகப்பன் தெரிவித்தது சிறப்பு அம்சம்.

இன்றைய கால கட்டத்தில் நுகர்வு கலாச்சாரம் அதிகமாகிவிட்டது இதன்காரணமாகவே பெற்றோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதை உணராமலேயே ஆடம்பரச் செலவு செய்கின்றனர் இளைய தலைமுறையினர். இந்த சூழ்நிலையில் நடத்தப்பட்ட ‘நீயா, நானா' விவாதம் பயனுள்ளதாகவே இருந்தது என்கின்றனர் ரசிகர்கள்.

 

தற்கொலை செய்தால்தான் பாட்டு எழுத முடியுமா?.. வைரமுத்து கேள்வி!

Vairamuthu S Poser Director Mahendran

சென்னை: தற்கொலை குறித்துப் பாட்டெழுத வேண்டுமானால் அதற்காக தற்கொலை செய்து கொண்டால்தான் முடியுமா என்று விமானத்தில் மது அருந்துமாறு தன்னிடம் கூறிய இயக்குநர் மகேந்திரனிடம் கேட்டாராம் கவிஞர் வைரமுத்து.

பாலாவின் பரதேசி படத்தின் ஆடியோ நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. வைரமுத்து வெளியிட்டார். நடிகர்கள் விக்ரம், சூர்யா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் வைரமுத்து பேசுகையில், இப்படத்தில் படத்தில், à®'ரு வாழ்க்கை பிம்பப்படுத்தப்பட்டு இருக்கிறது. பாலா, à®'ரு சராசரி கலைஞன் அல்ல. மனிதர்களின் மறுபக்கத்தைப் பார்க்க பாலா ஆசைப்படுகிறார். மாறுபட்டு சிந்திக்கிறவன், எப்போதுமே கவனிக்கப்படுகிறான்.

வைரமுத்து தனது பாடல்களில் திருத்தங்களை செய்வதில்லை என்று என்னைப் பற்றி யாரோ சிலர் வதந்தியை பரப்பியிருக்கிறார்கள். நியாயமான திருத்தங்களை நான் எப்போதும் செய்து வருகிறேன். பொருந்தாத திருத்தங்களை ஏற்றுக்கொள்வதில்லை.

இந்த படத்தில், கண்ணீர்தானா கண்ணீர்தானா செந்தேனீரில் செம்பாதி கண்ணீர்தானா? என்று à®'ரு பாடல் எழுதியிருந்தேன். இதை, செந்நீர்தானா செந்நீர்தானா செந்தேனீரில் செம்பாதி கண்ணீர்தானா? என்று மாற்றிக் கொள்ளலாமா? என்று டைரக்டர் பாலா என்னிடம் கேட்டார். பாலாவின் திருத்தம் எனக்கு நியாயமாக இருந்தது. அவருடைய திருத்தத்தை ஏற்றுக்கொண்டேன்.

à®'ருமுறை நான் பெங்களூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தபோது, என் அருகில் டைரக்டர் மகேந்திரன் அமர்ந்திருந்தார். அவர் மது அருந்திக்கொண்டிருந்தார். நீங்களும் அருந்துகிறீர்களா? என்று என்னிடம் கேட்டார். எனக்கு பழக்கம் இல்லை என்றேன்.

குடிக்கிற அனுபவம் இல்லை என்றால், குடிகாரனைப் பற்றி எப்படி பாட்டு எழுதுவீர்கள்? என்று மகேந்திரன் கேட்டார். தற்கொலை செய்வது பற்றி பாட்டு எழுத வேண்டுமானால், தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா என்ன? என்று சிரித்துக்கொண்டே நான் கேட்டேன். மகேந்திரன் வாய்விட்டு சிரித்தார்.

எல்லாவற்றையும் அனுபவித்து எழுத முடியாது. உள்ளுணர்வை வைத்து எழுத முடியும் என்றார் வைரமுத்து.

 

கமல்தான் சொல்லிக் கொடுத்தார்.. திரிஷா

Kamal Is Behind My Dubbing Decision   

நான் சொந்தக் குரலில் பேசுவதையே இப்போதெல்லாம் விரும்புகிறேன். இதற்குக் காரணம் கமல்ஹாசன்தான். அவர்தான் என்னை சொந்தக் குரலில் பேச ஊக்குவித்தார் என்று கூறியுள்ளார் திரிஷா.

திரிஷாவுக்கு நல்ல குரல் வளம்தான், தமிழும் தெரியும்தான், ஆங்கிலத்தையும் கூடவே கலந்து கட்டி அடிப்பார்தான்... ஆனாலும் சொந்தக் குரலில் பேசாமலேயே இத்தனை காலமும் à®"ட்டி வந்தார். ஆனால் தற்போது சொந்தக் குரலில் பேச ஆரம்பித்துள்ளார்.

தோ, சமீபத்தில் கூட சமர் படத்தில் நடித்து முடித்த அவர் அப்படத்திலும் சொந்தக் குரலில்தான் பேசுகிறாராம். இதில் அவர் விஷாலுடன் ஜோடி கட்டியுள்ளார். அடுத்து ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமர் படத்தில் சொந்தக் குரலில் பேசுவது குறித்து அவர் கூறும்போது, நான் சொந்தக்குரலில் சமர் படத்தில் பேசுகிறேன். சந்தோஷமாக இருக்கிற்து. ஆனால் இதற்குக் காரணம் கமல்சார்தான். அவர்தான் சொந்தக் குரலில் பேச என்னை ஊக்கப்படுத்தினார், என்னைத் தயார்படுத்தினார்.

மன்மதன் அம்பு படத்தில் நடித்தபோது,சொந்தக் குரலில் பேசுவது குறித்து அவர் அளித்த பயிற்சி எனக்கு பெரும் உதவியாக இருக்கிறது. எப்படி வார்த்தைகளை உச்சரிக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்தார். அதை மறக்க முடியாது என்று கூறியுள்ளார் திரிஷா.

கேட்கவே திரில்லாத்தான் இருக்கு திரிஷா...!

 

அதிக படங்களுக்கு இசை அமைக்காதது ஏன்?

சென்னை : கீதாலயா மூவீஸ் சார்பில் கே.ஆனந்தன் நாயுடு தயாரிக்கும் படம், 'வெள்ளச்சி'. பாண்டு மகன் பிண்டு, சுசித்ரா உன்னி நடிக்கிறார்கள். வேலு விஸ்வநாத் இயக்கி உள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பவதாரிணி இசை அமைத்துள்ளார்.  இதுபற்றி பவதாரிணி கூறியதாவது: இசையை முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக் கொண்டேன்.

இப்போது தீவிரமாக இசை அமைக்கத் தொடங்கி விட்டேன். வெள்ளச்சி கிராமத்து கதை என்பதால் இசைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. நான் கேட்டுக் கொண்டதால் யுவன் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இதுவரை 7 படங்களுக்கு மட்டுமே இசை அமைத்திருக்கிறேன். புதுமுக இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன். தொடர்ந்து பாடல்களும் பாடி வருகிறேன்.
 

பாரசீக மன்னன் பாடல் வெளியீடு

சென்னை : ரிச் ஆர்ட் புரொடக்ஷன் சார்பில் கே.ஜே.பாலகிருஷ்ணன், திலீப் குமார் தயாரிக்கும் படம் 'பாரசீக மன்னன்'. ஜே.சுரேஷ் இயக்கி, இசை அமைத்து, நடிக்கிறார். ஜோடி சுதி லட்சுமி. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. யுவன் சங்கர் ராஜா வெளியிட, 'ஜித்தன்' ரமேஷ் பெற்றார். விழாவில் பழம்பெரும் இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் பேசும்போது, 'எங்கள் காலத்தில் நடிகர்களுக்கு லட்சத்தில்தான் சம்பளம். இன்றைக்கு ஒரு படம் ஓடிவிட்டாலே கோடியில் கேட்பதாகச் சொல்கிறார்கள்.

அன்றைக்கு ஹீரோக்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும் மக்களுக்கும் அதை கொஞ்சம் திருப்பிக் கொடுத்தார்கள். இப்போது கோடி கணக்கில் வாங்கும் ஹீரோக்கள் வீட்டில் பூட்டி வைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் வாங்கும் சம்பளம் மக்கள் கொடுப்பது. எனவே அதில் 25 சதவிகிதமாவது மக்களுக்குத் திருப்பித் தரவேண்டும்' என்றார். விழாவில், முக்தா சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஜே.சுரேஷ் வரவேற்றார். தயாரிப்பாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
 

பூர்வகுடி ஜல்லிகட்டு குடும்பத்தின் கதை

சென்னை : திருத்தணி முருகன் பிலிம்ஸ் சார்பில் எம்.குமார் தயாரிக்கும் படம், 'பூர்வகுடி'. ஈஸ்வர், மதுஸ்ரீ என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். புரூஸ் இசை. இதன் பாடலை, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட, கலைப்புலி தாணு பெற்றார். விழாவில் கவிஞர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். படம் பற்றி இயக்குனர் இப்ராஹிம் கூறியதாவது:

கிராமத்தில் ஜல்லிகட்டு ஒவ்வொரு குடும்பத்தின் தன்மானத்தோடு தொடர்புடையது. ஜல்லிக்கட்டால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை இது. பாதுகாப்பற்ற ஜல்லிக்கட்டால் எத்தனை உயிர்கள் பலியாகிறது. அவர்கள் குடும்பம் என்னாகிறது என்பதை சொல்லும் படம். படத்துக்காக தேனி அருகில் உள்ள பாலகிருஷ்ணாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தி படமாக்கினோம். இது படத்தின் ஹைலைட்டாக இருக்கும். இவ்வாறு கூறினார்.
 

சில்க் ஸ்மிதா படம் சனா கானால் லேட்

கொச்சி : சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் ரிலீஸ், சனா கானால் தள்ளிப்போகிறது. சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு 'கிளைமாக்ஸ்' என்ற பெயரில் மலையாளத்தில் தயாராகி உள்ளது. இதில் சில்க் ஸ்மிதாவாக சனாகான் நடித்துள்ளார். அணில் இயக்கியுள்ள இந்தப் படம் இந்த மாதம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால், 'பிக்ஸ் பாஸ் 6' நிகழ்ச்சியில் சனா கான் பங்கேற்றுள்ளதால், பட ரிலீஸ் அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

'இந்த படத்தின் புரமோஷனுக்கு சனா கான் முக்கியம். கடந்த ஒரு மாதமாக அவர் இல்லாததால் படத்தை விளம்பரப்படுத்த முடியவில்லை. இதனால் படத்தின் ரிலீஸை அடுத்த மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளோம். அதற்குள் சனா வந்துவிடுவார் என நம்புகிறோம்' என்று பட யூனிட்டில் தெரிவித்தனர். படத்தின் கதையை எழுதிய கலூர் டென்னிஸ் கூறும்போது, 'இந்த மாதம் ஒன்பது படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. சமீபத்தில் ஏற்பட்ட தியேட்டர் ஸ்டிரைக்கும் பட வெளியீட்டுக்கு தடங்கலை ஏற்படுத்தி உள்ளது. அதனால் இதன் ரிலீசை அடுத்த மாதம் தள்ளி வைத்துள்ளோம். அதற்குள் சனாவும் வந்துவிடுவார்' என்றார்.
 

மத்தாப்பூ தலைப்பு ஏன்?

சென்னை : 'தினந்தோறும்' நாகராஜ் இயக்கும் படம், 'மத்தாப்பூ'. ஜெயன், காயத்ரி, கீதா, சித்தாரா, ரேணுகா, கிட்டி உட்பட பலர் நடிக்கின்றனர். படம் பற்றி நாகராஜ் கூறியதாவது: திருச்சியில் இருந்து சென்னை வரும் ஹீரோ, தானும் தன்னைச் சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறான். எதிர்பாராத தருணத்தில் ஹீரோயினை சந்திக்கிறான். அவன் நினைப்பதற்கு நேரெதிராக ஹீரோயினும் அவளது குடும்பமும் இருக்கிறது. அவள் சோகத்தை மாற்ற முயற்சிக்கிறான் ஹீரோ. என்ன நடந்தது என்பது கதை.

நம் வாழ்க்கையில் எங்கேயோ, எப்போதோ விட்டுச் சென்ற ஞாபகங்களும், சந்தித்து மறந்த சம்பவங்களும், நாமே தேடித் தொலைத்த சந்தோஷங்களும் திரும்பவும் கிடைக்க நேர்ந்தால், அந்த மகிழ்ச்சியில் மலருகின்ற மத்தாப்பூவாக இந்த கதை இருக்கும். எல்லோரும் எல்லா நேரத்திலும் மத்தாப்பூ போல சந்தோஷமாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற கருத்தையும் சொல்லி இருக்கிறேன். ஷூட்டிங் முடிந்துவிட்டது. டிசம்பரில் படம் ரிலீசாகிறது.

 

மனிதனின் மறுபக்கத்தை பார்ப்பவர் பாலா வைரமுத்து பெருமிதம்

சென்னை : 'பி' ஸ்டுடியோஸ் சார்பில் பாலா தயாரித்து, இயக்கியுள்ள படம், 'பரதேசி'. அதர்வா, வேதிகா, தன்ஷிகா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, செழியன். இசை, ஜி.வி.பிரகாஷ் குமார். பாடல்கள், வைரமுத்து. இதன் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. பாலுமகேந்திரா வெளியிட, விக்ரம், சூர்யா பெற்றனர். பிறகு வைரமுத்து பேசியதாவது:

'பரதேசி' படத்தை பாலா திரையிட்டு காண்பித்தார். பார்த்து முடித்ததும் அதிர்வு ஏற்பட்டது. தமிழ் சினிமாவில் இது முக்கியமான படம். யாரும் தவற விட்டுவிடக் கூடாது. பஞ்சம் பிழைக்கச் செல்லும் ஒரு கூட்டத்தின் வாழ்க்கை, இதில் பிம்பப்படுத்தப்பட்டு உள்ளது. எப்போதுமே பாலா தன் படங்களில், மனிதனின் மறுபக்கத்தைப் பார்க்க ஆசைப்படுவார். இந்தப் படத்திலும் அவர் மிகச் சிறந்த பதிவை வெளிப்படுத்தி இருக்கிறார். நீரோட்டத்துடன் ஓடுவது செத்த மீன். நீரோட்டத்தை எதிர்த்து ஓடுவது உயிருள்ள மீன். அப்படியொரு உயிருள்ள மீன்தான் பாலா. அவரது படத்துக்கு பாடல் எழுதியது வித்தியாசமான அனுபவம். அதர்வா சிறப்பாக நடித்துள்ளார்.

1940,களில் நடக்கும் கதை இது. வைகை அணை கட்டும்போது, 14 கிராமங்கள் காலி செய்யப்பட்டன. சொந்த ஊரை விட்டு வெளியேறிய அந்த ஐந்து வயது சிறுவன்தான், இன்று உங்கள் முன் பேசிக் கொண்டிருக்கும் வைரமுத்து. எனவே, பஞ்சம் பிழைக்கப் போகும் கூட்டத்தைப் பற்றிய வலி எனக்கு தெரியும். வாழ்க்கையில் நான் பெற்ற அனுபவங்கள்தான் எழுத்துகளாக வருகின்றன.

இதுவரை நான் எழுதிய பாடல் வரிகளை மாற்றாத ஒரே இயக்குனர் பாரதிராஜா மட்டுமே. இந்தப் படத்துக்கு நான் எழுதிய ஒரு பாடலில், ஒரு வரியை மாற்ற வேண்டும் என்று பாலா கேட்டபோது, நன்றாக இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள் என்றேன். இன்னொரு பாடலில் ஒரு வரியை அவர் மாற்றியபோது, நான் சொல்ல வந்த கருத்து மாறிவிடும் என்று விளக்கினேன். புரிந்துகொண்ட அவர், நான் எழுதிக் கொடுத்ததையே பயன்படுத்தினார். அதுதான் பாலா.
இவ்வாறு வைரமுத்து பேசினார். விழாவில், பாலுமகேந்திரா, கங்கை அமரன், வேதிகா, தன்ஷிகா, ஜி.வி.பிரகாஷ் குமார் உட்பட பலர் பேசினர்.
 

தவறுகளில் இருந்து பாடம் ரம்யா நம்பீசன் தகவல்

சென்னை : தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன் என்று ரம்யா நம்பீசன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது; 'பீட்சா' படத்தில் என் நடிப்பு பாராட்டப்பட்டது. அடுத்து 'யா யா' படத்தில் நடிக்கிறேன். இது கமர்சியல் படம். மலையாளத்தில், 'அப் அண்ட் டவுண்' படத்தில் பரத நாட்டிய டான்சராக நடிக்கிறேன். இந்த படம் வித்தியாசமான முயற்சியை கொண்டது. அடுத்து 'லெஃப்ட் ரைட் லெஃப்ட்' என்ற மலையாள படத்தில் நடிக்கிறேன்.

 இதில் நிறைய உணர்ச்சிகளை காட்டி நடிக்க வேண்டி இருக்கிறது. இப்போது நடிக்கும் படங்களில் திருப்தியாக உணர்கிறீர்களா என்று கேட்கிறார்கள். அப்படி இல்லை. ஒரு நடிகையாக வித்தியாசமான வேடங்களில் நடிப்பதை அதிகமாக எதிர்பார்க்கிறேன். அதனால் எதிலும் திருப்திப்பட்டுவிட முடியவில்லை. ஆரம்பத்தில் நடிக்க கேட்டு வந்த கதைகளில் எல்லாம் நடித்தேன். சில கதைகளை கேட்கும்போது, இது ஹிட்டாகும் என தோன்றும். ஆனால், நிஜத்தில் அப்படி இல்லை. அதனால் பல தவறுகள் செய்தேன். இப்போது அந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டதால் சிறந்த கேரக்டர்களில் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறேன்.
இவ்வாறு ரம்யா நம்பீசன் கூறினார்.
 

இந்தியில் பின்னணி பேசுகிறார் பிரபுதேவா

சென்னை : பிரபுதேவா ஏபிசிடி (எனிபடி கேன் டான்ஸ்) என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதை டான்ஸ் மாஸ்டர் ரெமோ டிசோஸா இயக்குகிறார். சென்னையில் நடன ஆசிரியராக இருக்கும் பிரபுதேவா, போராடி நடனத்தின் மூலம் எப்படி முன்னேறுகிறார் என்பது கதை. நடனம் தொடர்பான இந்தப் படத்தை யுடிவி தயாரிக்கிறது. பிரபுதேவாவுடன் கணேஷ் ஆச்சார்யா, கே கே மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகும் இந்தப் படத்துக்கு பிரபுதேவாவே டப்பிங் பேசுகிறார்.

 

ரஜினி பற்றி ஆல்பம் தயாரிக்கிறார் லாரன்ஸ்

சென்னை : ரஜினிகாந்தின் பிறந்த நாள் அடுத்த மாதம் 12,ம் தேதி வருகிறது. அதையொட்டி ராகவா லாரன்ஸ், ரஜினியின் பிறந்த நாள் ஆல்பம் ஒன்றை தயாரித்து வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: ரஜினிக்கு இந்த பிறந்த நாள் சிறப்பானது. காரணம் அவர் மறுபிறவி எடுத்த பிறகு வரும் பிறந்த நாள். 12.12.12 என அமைந்த நாள். இதனால் அவருக்கு பிறந்த நாள் பரிசாக ஆல்பம் தயாரித்து வருகிறேன்.

ரஜினியின் பெருமைகளை சொல்லும் பாடலைக் கொண்ட ஆல்பம் இது. விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார். பாடல் தயாரானபிறகு நான் நடனமாடியும், சூப்பர் ஸ்டாரின் படக் காட்சிகளை பயன்படுத்தியும் வீடியோ ஆல்பமாக தயாரிக்கிறேன். ரஜினியின் பிறந்த நாள் அன்று இந்த ஆல்பம் வெளியிடப்படும்.
 

ஹோலோகிராபில் நரேந்திர மோடி

சென்னை : 'உள்ளத்தை அள்ளித்தா', 'அருணாச்சலம்', 'கலகலப்பு' உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், யு.கே.செந்தில்குமார். இவர், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசார வீடியோவை, 'ஹோலோகிராப்' தொழில்நுட்பத்தில் படமாக்கியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: ஹோலோகிராபிக் தொழில்நுட்பம், 3டியின் அடுத்த கட்டம். டிஜிட்டல் கேமராவில் இத் தொழில்நுட்பத்தில் ஒருவர் பேசுவதை படமாக்கி, திரையிட்டால் அவர் தத்ரூபமாக நேரில் நின்று பேசுவது போல் இருக்கும்.

இந்தியாவில் முதல்முறையாக இத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளோம். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் வீட்டில், அவர் தேர்தல் பிரசாரம் செய்யும் காட்சியை இந்த முறையில் படமாக்கினோம். மணி சங்கர் இயக்கினார். குஜராத்தி மொழியில் அவர் பேசியதை திரையிட்டுக் காட்டியபோது, மோடியால் நம்பமுடியவில்லை. எங்கள் டீமை பாராட்டினார்.
 

சர்வதேச பட விழாவில் நீது சந்திராவின் தேஸ்வா

மும்பை : தமிழில் 'யாவரும் நலம்', 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படங்களில் நடித்தவர் நீது சந்திரா. அமீர் இயக்கியுள்ள 'ஆதிபகவன்' படத்திலும் நடித்துள்ளார். பீகாரைச் சேர்ந்த நீது சந்திரா, 'தேஸ்வா' என்ற போஜ்புரி படத்தைத் தயாரித்துள்ளார். நீதுவின் சகோதரர் நிதின் இயக்கியுள்ள இந்தப் படம், கோவாவில் நடக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி நீது சந்திரா கூறியதாவது: பீகார் மாநிலம் பற்றி படங்களில் தவறாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அந்த மாநிலத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே காட்டி இருக்கிறார்கள். பீகாருக்கு இன்னொரு பக்கம் இருப்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். அந்த எண்ணத்தை மாற்றும்விதமாக நான் தயாரித்துள்ள படம் இருக்கும். பீகாரிலிருந்து இந்திய சர்வதேச பட விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதல் படமும் இதுதான் என்பதில் தயாரிப்பாளராக எனக்கு மகிழ்ச்சிதான்.

ஓம்பூரி போன்ற சிறந்த நடிகர்கள் படத்தை பார்த்துவிட்டு, பாராட்டினார்கள். இந்த மாதிரியான ஒரு படத்தை தயாரிக்க துணிச்சல் வேண்டும் என்றார்கள். அதுவே எனக்கு சிறந்த விருதாக இருக்கிறது. நான் நடித்துள்ள ஆங்கில படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்து, 'ஆதிபகவன்' படத்தின் ரிலீஸை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். 2013 எனக்கு சிறந்த வருடமாக இருக்கும். இவ்வாறு நீது சந்திரா கூறினார்.