ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் என்ற தலைப்பில் தயாராகும் படத்தில் அருள்நிதி நடிக்கிறார். இப்படத்தை சிம்புதேவன் இயக்குகிறார்.
அருள்நிதி இப்போது தகராறு என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு பூர்ணா ஜோடியாக நடிக்கிறார்.
வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாக உள்ள இந்தப் படத்தை, 'கிளவுட் நைன் மூவிஸ்' தயாநிதி அழகிரி தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, 'இம்சை அரசன் 22-ம் புலிகேசி', 'இரும்புக் கோட்டை முரட்டு சிக்கம்' படங்களை இயக்கிய சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கிறார் அருள்நிதி.
வடிவேலு நடிக்க 'இம்சை அரசன் 22-ம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகத்தைத்தான் அடுத்த இயக்க முடிவு செய்திருந்தார் சிம்புதேவன். ஆனால், இப்போதைக்கு அந்தப் படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன் அருள்நிதியை வைத்து இயக்குகிறார். 'ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார்.
இப்படத்தினை அருள்நிதியின் அப்பாவான மு.க.தமிழரசு தனது மேனகா மூவிஸ் மூலம் தயாரிக்கிறார்.