த்ரிஷ்யம் கன்னட ரீமேக்கில் இளையராஜா, பிரபு!

த்ரிஷ்ம் படத்தின் கன்னட ரீமேக்கிற்கு இளையராஜா இசையமைக்கிறார். தமிழ் நடிகர் பிரபு ஒரு முக்கிய வேடத்தில் அந்தப் படத்தில் நடிக்கிறார்.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் த்ரிஷ்யம். இப்போது பல்வேறு மொழிகளில் ரீமேக் ஆகி வருகிறது.

த்ரிஷ்யம் கன்னட ரீமேக்கில் இளையராஜா, பிரபு!

தமிழில் கமல் ஹாஸன் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் கன்னட ரீமேக்கில் வி ரவிச்சந்திர் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நவ்யா நாயர் நடிக்கிறார். கன்னடத்திலும் பல வெற்றிப் படங்கள் தந்த பி வாசு இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். பட்த்தில் இசைக்கு அந்த அளவு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

தமிழ் நடிகர் பிரபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த வேடத்தை மலையாளத்தில் செய்திருந்தவர் சித்திக். லூசியா படத்தில் அச்யுத் குமார் இதில் வில்லனாக நடிக்கிறார்.

கூர்க்கில் இன்று படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ள இந்தப் படம், மே மாதமே ரீலீசாகிறது.

 

இந்த ஆண்டு தேசிய விருதுப் போட்டியில் 40 தமிழ்ப் படங்கள்!

இந்த ஆண்டு தேசிய விருதுக்கான போட்டியில் 40 படங்கள் பங்கேற்றுள்ளன.

61 வது தேசிய விருதுக்கான அறிவிப்பு சமீபத்தில் கடந்த மாதம் அரசால் வெளியிடப்பட்டது.

மொத்தம் 30 பிரிவுகளில் இந்த விருதுகள் தரப்படுகின்றன. போட்டிக்கு படங்களை அனுப்ப கடந்த மாதம் 14-ம் தேதி கடைசி தேதியாகும்.

இந்த ஆண்டு மொத்தம் 40 படங்களை விருதுக்காக அனுப்பி வைத்துள்ளனர் தமிழ் சினிமாக்காரர்கள்.

இவற்றில் 6 மெழுகுவர்த்திகள், ஆதலால் காதல் செய்வீர், ஹரிதாஸ், மரியான், மூடர் கூடம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பண்ணையாரும் பத்மினியும், தலைமுறைகள், தங்க மீன்கள், விடியும் முன் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

இந்த ஆண்டு தேசிய விருதுப் போட்டியில் 40 தமிழ்ப் படங்கள்!

இந்தப படங்கள் தவிர, பாக்ஸ் ஆபீஸில் வெற்றியை ருசித்த கோலி சோடா, எதிர் நீச்சல், குட்டிப்புலி, பாண்டிய நாடு, ராஜா ராணி, சூது கவ்வும் போன்றவையும் விருதுக்காக மோதுகின்றன.

இனம், நெடுஞ்சாலை, ராமானுஜன் போன்ற படங்களும் விருதுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படங்கள் விருதைக் குறி வைத்தே எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

பரவை முனியம்மாவுடன் டான்ஸ் ஆடிய சிவகார்த்திகேயன்

பரவை முனியம்மாவுடன் டான்ஸ் ஆடிய சிவகார்த்திகேயன்

ராயபுரம் பீட்டர்.. என்ற பாடலுக்காக நாட்டுப்புறப் பாடல் கலைஞரும் நடிகையுமான பரவை முனியம்மாவுடன் இணைந்து டான்ஸ் ஆடினார் சிவகார்த்திகேயன்.

மான் கராத்தே படத்துக்காக இந்தப் பாடலும் நடனமும் படமாக்கப்பட்டது.

இந்தப் படத்தில் ராயபுரத்தில் வசிக்கும் பீட்டர் என்ற இளைஞராக வருகிறார் சிவகார்த்திகேயன்.

வட சென்னைப் பகுதி மக்கள் பேசுவது போன்ற சென்னைத் தமிழில் ஒரு பாடல் தேவைப்பட்டது. அதை ராஜா எழுத, அனிருத் இசையமைத்தார். சிவகார்த்திகேயன் தன் சொந்தக் குரலில் பாடினார்.

இந்தப் பாடலுக்கு படத்தில் இட்லி விற்பவராக வரும் பரவை முனியம்மாவும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடனமாடினார்.

படத்தில் இந்தப் பாடல் பெரிய ஹைலைட்டாக இருக்கும் என்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.

 

''அப்டீன்னா நான் பேண்ட் போட்டு, சுவிஸ்ஸில் டான்ஸ் ஆடியது வேஸ்ட்டா அங்கிள்...??''

சென்னை: தான் மாடர்ன் டிரஸ் போட்டு வெளிநாட்டில் டூயட் பாடியது வீணாகிவிட்டதே என்று இயக்குனரும், ஹீரோவுமான தாடிக்காரர் கவலைப்படுகிறாராம்.

இதுவரை கிராமத்து கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த இயக்குனரும், ஹீரோவுமான தாடிக்கார நடிகர் முதல் முறையாக படைக்கும் கடவுளின் பெயர் கொண்ட படத்தில் மாடர்னாக நடித்தார்.

படத்தில் அவர் மாடர்ன் டிரஸ் போட்டதுடன், வெளிநாட்டுக்கு எல்லாம் சென்று ஹீரோயினுடன் டூயட் பாடினார். முதல் முறையாக என் படத்திற்காக வெளிநாடு சென்று வந்தேன் என்று மகிழ்ச்சியாக கூறினார். ஆனால் பாவம் அவர் மாடர்ன் அவதாரம் எடுத்த படம் சரியாகப் போகவில்லை.

இதனால் அவர் கவலை அடைந்துள்ளாராம். இந்த சூட், பூட்டு எல்லாம் நமக்கு ஒத்து வராது இனி கிராமத்து கதாபாத்திரம் மட்டும் தான் என்று கன்டிஷனாக சொல்லிவிட்டாராம்.

அவரை வைத்து படத்தை எடுத்த தயாரிப்பாளர் நஷ்டப்பட்டதால் தனக்கு கடனை அடைக்க மேலும் ஒரு படத்தில் நடிக்க கேட்டாராம். அதற்கு நடிகர் பரதேசி இயக்குனரின் படத்தில் நடித்து முடித்துவிட்டு வருகிறேன் என்று கூறியுள்ளாராம்.

 

விரல் நடிகரின் காதல் பிரிவால் கலங்கிப் போயுள்ள தயாரிப்பாளர்

விரல் நடிகரின் காதல் பிரிவால் கலங்கிப் போயுள்ள தயாரிப்பாளர்

சென்னை: விரல் நடிகரும், அவரது காதலியும் பிரிந்துள்ளது அவர்கள் நடிக்கும் விலங்குகளின் பின்னால் இருக்கும் இரண்டு எழுத்து உறுப்பின் பெயர் கொண்ட படத்தின் தயாரிப்பாளரை கலங்க வைத்துள்ளதாம்.

விரல் நடிகரும், புஸு புஸு நடிகையும் தாங்கள் காதலிப்பதாக அறிவித்த சில மாதங்களிலேயே பிரிவு குறித்த அறிவிப்பையும் வெளியிட்டனர். அவர்கள் பாட்டுக்கு பிரிந்து சென்றுள்ளது அவர்கள் ஜோடியாக நடிக்கும் விலங்குகளின் பின்னால் இருக்கும் இரண்டு எழுத்து உறுப்பின் பெயர் கொண்ட படத்தின் தயாரிப்பாளரை கவலை அடைய வைத்துள்ளதாம்.

காரணம் படத்தை வாங்கியவர்கள் எல்லாம் தற்போது காதல் ஜோடி பிரிந்துள்ளதால் படம் வேண்டாம் பணத்தை கொடுங்கள் என்று கேட்கிறார்களாம். அவர்கள் பிரிந்துவிட்ட நிலையில் படத்தில் அவர்களின் காதல் வெற்றி பெறுவது போன்று காண்பிக்கப்பட்டால் ரசிகர்கள் சிரித்துவிடுவார்கள் என்கிறார்களாம்.

ஏற்கனவே படம் இழுத்துக் கொண்டிருக்கிற நிலையில் தற்போது புதிய பிரச்சனை கிளம்பியுள்ளது தயாரிப்பாளருக்கு.

 

கொடைக்கானல் குளிர் எனக்கு ஒத்துக்கல.. அதான் படத்திலிருந்து விலகிட்டேன்!- மனிஷா யாதவ்

கொடைக்கானல் குளிர் எனக்கு ஒத்துக்கல.. அதான் படத்திலிருந்து விலகிட்டேன்!-  மனிஷா யாதவ்

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் சார்பில் அவருடைய தம்பி என்.சுபாஷ் சந்திரபோஸ் தயாரிக்கும் படம், ‘இடம் பொருள் ஏவல்.' சீனு ராமசாமி இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். விஜய் சேதுபதி ஜோடியாக மனிஷா யாதவ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். விஷ்ணு ஜோடியாக நந்திதா நடித்து வந்தார். 

கொடைக்கானலில் நடந்த படப்பிடிப்பின்போது மனிஷா யாதவுக்கும், சீனுராமசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து மனிஷா யாதவ் நடித்த வேடத்தில் நந்திதாவையும், நந்திதா நடித்த வேடத்தில் மனிஷா யாதவையும் நடிக்க வைக்க சீனுராமசாமி முடிவு செய்திருந்ததாகக் கூறப்பட்டது.

ஆனால் மனீஷா யாதவ் மீடியாவிடம் சீனு ராமசாமி தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார். என்னிடம் அதற்கு ஆதாரம் உள்ளது. அதனால்தான் விலகிக் கொண்டேன் என்று முதலில் புகார் தெரிவித்திருந்தார்.

இதற்கு சீனு ராமசாமி மறுப்பு தெரிவித்திருந்தார். மனீஷாவுக்கு அந்த வேடம் பொருந்தவில்லை. அதனால்தான் மாற்றினேன் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் மனீஷா மீண்டும் இதுகுறித்து பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், "இடம் பொருள் ஏவல் படத்தில் நான் நடித்துக்கொண்டிருந்த வேடத்தில் நந்திதாவையும், நந்திதா நடித்துக்கொண்டிருந்த வேடத்தில் என்னையும் மாற்றினார்கள். நந்திதா நடித்த துணை கதாநாயகி வேடத்தில் நான் நடிக்க விரும்பவில்லை.

கொடைக்கானல் குளிரும் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால், அந்த படத்தில் இருந்து நான் விலகி விட்டேன். எனக்கும், இயக்குநர் சீனுராமசாமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மை. ஆனால், அது பேசி தீர்க்கப்பட்டு விட்டது," என்றார்.

 

நிமிர்ந்து நில் படத்துக்கு வரிவிலக்கு!

ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.

சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடன் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக அன்றைய தினம் படம் வெளியாகவில்லை.

நிமிர்ந்து நில் படத்துக்கு வரிவிலக்கு!  

இதனால் மனம் உடைந்த படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக செய்தி பரவியது. இதனை சமுத்திரக்கனி மறுத்தார். படத்தை ரிலீஸ் செய்ய தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தன.

இதன் விளைவாக, ஒரு நாள் கழித்து சனிக்கிழமை மாலை படம் வெளியானது.

படத்தின் கதை, தமிழ் வசனங்களுக்கு முக்கியத்துவம் தந்திருப்பது போன்ற காரணங்களை முன்னிறுத்தி இப்படத்துக்கு அரசு முழு வரிவிலக்கு அளித்துள்ளது.

முன்பெல்லாம் படத்தின் தலைப்பு தமிழில் இருந்தாலே வரிவிலக்கு என்ற நிலை இருந்தது. இதனால் வ குவார்ட்டர் கட்டிங் என்றெல்லாம் தலைப்பு வைத்து வரிவிலக்கை அனுபவித்தனர் திரைத் துறையினர்.

இப்போது சரியான காரணங்கள் இருந்தால் மட்டுமே படத்துக்கு வரிவிலக்கு என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

 

கடனை கொடுக்கவில்லை: ஏலத்திற்கு வரும் கௌதம் மேனன் சொத்துக்கள்

சென்னை: வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காததால் இயக்குனர் கௌதம் மேனனின் சொத்துக்கள் ஏலத்திற்கு வருகிறது.

காக்க காக்க, விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் கௌதம் மேனன். அவர் சொந்தமாக பட நிறுவனம் துவங்கினார். அந்த நிறுவனம் மூலம் நடுநிசி நாய்கள், வெப்பம் உள்ளிட்ட படங்களை தயாரித்தார். ஆனால் அந்த படங்கள் ஓடவில்லை.

கடனை கொடுக்கவில்லை: ஏலத்திற்கு வரும் கௌதம் மேனன் சொத்துக்கள்

இந்நிலையில் அவருக்கும் தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கும் இடையே பணப் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து குமார் நீதிமன்றம் வரை சென்றார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கௌதம் மேனனின் சொத்துக்களை ஏலத்தில் விட உத்தரவிட்டுள்ளது.

கௌதம் மேனன் தனக்கு சொந்தமாக இந்திரா நகர் முதல் மெயின் ரோட்டில் 7 ஆயிரத்து 91 சதுர அடியில் உள்ள சொத்தை அடமானம் வைத்து தான் கடன் பெற்றாராம். இந்நிலையில் கடனை திருப்பிக் கொடுக்காததால் அவரது சொத்தை வங்கி ஏலத்தில் விடுகிறது. இந்த சொத்தின் மதிப்பு ரூ.12.26 கோடி ஆகும்.

கௌதம் அஜீத் குமாரை வைத்து படம் ஒன்றை எடுக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.