விரைவில் அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் வரிசையில் நான் இருப்பேன்: அருண் விஜய்

சென்னை: விரைவிலேயே அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் வரிசையில் தானும் வருவேன் என்று அருண் விஜய் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

முறை மாப்பிள்ளை படம் மூலம் நடிகர் ஆனவர் நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்குமார். 1995ம் ஆண்டு நடிக்க வந்தபோதிலும் அவருக்கு இதுவரை எந்த படமும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்நிலையில் அவர் தனது பெயரை அருண் விஜய் என மாற்றிக் கொண்டார்.

விரைவில் அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் வரிசையில் நான் இருப்பேன்: அருண் விஜய்

பாண்டவர் பூமி, இயற்கை போன்ற படங்கள் அவருக்கு கை கொடுத்த போதும் அவரது சினிமா பாதை கரடு முரடாகவே உள்ளது. இந்நிலையில் தான் அவர் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை அவர் பெரிதும் எதிர்பார்க்கிறார். தனது சினிமா வாழ்க்கையில் இந்த படம் திருப்புமுனையாக இருக்கும் என நினைக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

என்னை அறிந்தால் படம் என்னுடைய துவக்கம். நான் பலருக்கு பதில் சொல்ல வேண்டி உள்ளது. எனக்கு பதில் என் படங்கள் அவர்களுக்கு பதில் சொல்லும். விரைவில் நான் அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் வரிசையில் இருப்பேன். விரைவிலேயே எனக்கு அங்கீகாரம் கிடைத்துவிடும் என்றார்.

 

முதல் முறையாக ஹாலிவுட்டின் தி ஹாப்பிட் படத்துடன் ஷங்கரின் ஐ பட டீசர்!

ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ஐ' படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

அடுத்து படத்தின் ட்ரைலர் தயாராகி யு சான்றிதழ் பெற்றுள்ளது. இதனை விரைவில் தியேட்டர்களில் வெளியிடவுள்ளனர்.

முதல் முறையாக ஹாலிவுட்டின் தி ஹாப்பிட் படத்துடன் ஷங்கரின் ஐ பட டீசர்!

இந்நிலையில், இப்படத்தின் டீசரை, ஹாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் தி ஹாப்பிட் (The Hobbit - The Battle of Five Armies) என்ற படத்துடன் இணைத்து வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இப்படம், வட அமெரிக்காவில் மட்டும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இவற்றில் பெருமாபாலானவற்றில் ஐ பட டீசர் வெளியிடப்பட்டது. ஒரு ஹாலிவுட் படத்தின் இடையில் வெளியாகும் முதல் தமிழ் பட டீசர் என்ற பெருமையை ஐ திரைப்படம் பெற்றுள்ளது.

இதுதவிர, அமீர்கான் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள ‘பி.கே.' படத்தின் இடையிலும் ஐ படத்தின் இந்தி டீசரை வெளியிட ஒப்பந்தம் செய்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 9-ம் தேதி வருகிறது ஐ.

 

முன்னாள் காதலரை கடுப்பேத்த கண்டமேனிக்கு கவர்ச்சி காட்டப் போகும் நடிகை

சென்னை: புஸு புஸு நடிகை தனது முன்னாள் காதலரான விரல் நடிகரை கடுப்பேற்ற கூடுதல் கவர்ச்சி காட்டி நடிக்க முடிவு செய்துவிட்டாராம்.

கோலிவுட்டின் பிஸியான நடிகையாக உள்ளவர் புஸு புஸு நடிகை. அவர் தமிழ், தெலுங்கு படங்கள் என ஓடியோடி நடித்துக் கொண்டிருக்கிறார். பெரிய ஹீரோ படத்தில் தான் நடிப்பேன் என்ற பந்தாவெல்லாம் செய்யாமல் நடிக்கிறார்.

ஓவர் கவர்ச்சி காட்டி முன்னாள் காதலரை கடுப்பேற்றப் போகும் நடிகை

புதுமுக நடிகர் ஆனாலும் நான் நடிக்கிறேன் என தன்னை தேடி வருபவர்களிடம் சிரித்த முகத்தோடு கூறுகிறாராம். இத்தனை பரபரப்புக்கும் இடையே தனது முன்னாள் காதலரான விரல் நடிகரை பழி வாங்கவும், கடுப்பேற்றவும் அவர் ரூம் போட்டு யோசித்துள்ளார். அவ்வாறு யோசித்தபோது அவரது மூளையில் ஒரு பல்ப் எரிந்துள்ளது.

படங்களில் கூடுதல் கவர்ச்சி காட்டி விரல் நடிகரை கடுப்பேற்றுவது என நடிகை முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே நடிகையின் தாய்க்குலம் விரல் நடிகர் மீது கொலவெறியில் உள்ளார். இந்நிலையில் நடிகை இவ்வாறு ஒரு முடிவை எடுத்துள்ளார்.

நல்லா வாங்குறாங்கய்யா பழி, நல்லா ஏத்துறாங்கய்யா கடுப்ப...

 

லிங்கா சிறந்த படம்... குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள் - கே எஸ் ரவிக்குமார்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா ஒரு க்ளாஸ்ஸிக் படம். அதை மக்கள் பெரிதும் ரசிக்கிறார்கள். குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள், என்றார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இரு வேடங்களில் நடிக்க, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்து டிசம்பர் 12-ம் தேதி வெளியான படம் லிங்கா.

மிகப் பெரிய எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியான அந்தப் படம், வரலாறு காணாத ஓபனிங்குடன் ஓடிக் கொண்டுள்ளது.

லிங்கா சிறந்த படம்... குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள் - கே எஸ் ரவிக்குமார்

இந்தப் படம் ரூ 104 கோடியை முதல் மூன்றே தினங்களில் குவித்துவிட்டது. இன்றும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் படத்துக்கு எதிராக சிலர் எதிர்மறைக் கருத்துக்களைப் பரப்பி வருவது குறித்து இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரிடம் கேட்டபோது, "ரஜினி சாரின் கேரியரில் மிகச் சிறந்த படங்களில் ஒன்று லிங்கா. இது ஒரு க்ளாஸிக் படம் எனலாம். ரஜினிக்கு மிகப் பிடித்த படம்.

மக்கள் இந்தப் படத்தைக் கொண்டாடுகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக படத்தைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்கள். அனைத்துத் தரப்பிலும் படம் குறித்து மிக நல்ல கருத்துகள் வெளிவந்துள்ளன.

அதே நேரம் சிலர் எதிர்மறையாகவும் பேசத்தான் செய்கிறார்கள். அவர்களைத் தடுக்க முடியாது. எல்லோரையும் திருப்திப்படுத்துவது மாதிரி படமெடுக்க முடியுமா என்ன?

குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. நல்ல படம் எடுத்த திருப்தி எனக்கு இருக்கிறது.

எல்லோரும் நீளம் அதிகம் என்றார்கள். அதற்காக சில காட்சிகளை மட்டும் குறைத்துள்ளேன்.

விடுமுறை நாட்களே இல்லாத, பரீட்சை நேரத்தில் இந்தப் படத்தை வெளியிட்டிருக்கிறோம். இன்னும் இரண்டு நாட்களில் பரீட்சை முடிந்த பிறகு இந்தப் படத்துக்கு மேலும் அதிக கூட்டம் வரும்," என்றார்.

 

தீவிரவாத தாக்குதல் எதிரொலி... தி இன்டர்வியூ படக்காட்சிகளை ரத்து செய்தது சோனி

நியூயார்க்: தீவிரவாத தாக்குதல் காரணமாக கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகவிருந்த தி இன்டர்வியூ படத்தின் காட்சிகளை ரத்து செய்துள்ளது சோனி நிறுவனம்.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் - ஐ கேலி செய்து எடுக்கப்பட்டுள்ள படம் இந்த தி இன்டர்வியூ.

இந்த தகவல் பரவியதும், ஹேக்கர்ஸிடமிருந்து தாக்குதல் அச்சுறுத்தல் வந்தது. படத்தை திரையிடும் அரங்குகள் தாக்கப்படும் என்று கூறப்பட்டதால், இந்தப் படத்தைத் திரையிடுவதா இல்லையா என்ற குழப்பம் எழுந்தது.

தீவிரவாத தாக்குதல் எதிரொலி... தி இன்டர்வியூ படக்காட்சிகளை ரத்து செய்தது சோனி

அமெரிக்காவின் முன்னணி தியேட்டர்கள் மற்றும் மல்டிப்ளெக்ஸ்கள் படத்தைத் திரையிடுவதிலிருந்து பின்வாங்கின.

ஏற்கெனவே வட கொரியாவைச் சேர்ந்த சிலர் இந்தப் படத்துக்கு அச்சுறுத்தல் விடுத்ததையும் சிஐஏ கண்டறிந்துள்ளது. எனவே இந்தப் படத்தை கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிடுவது சந்தேகத்துக்கிடமாகவே இருந்தது.

இந்த நிலையில்தான், படத்தின் காட்திகளை ரத்து செய்வதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.

இது ஹாலிவுட்டில் அதிர்ச்சியலைகளை எழுப்பியுள்ளது. தாக்குதல் மிரட்டலுக்காக ரத்து செய்யப்படும் முதல் பெரிய படம் தி இன்டர்வியூதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

லிங்கா திருட்டு விசிடி.. ரஜினி தலைமை ரசிகர் மன்றம் கண்டனம்

ரஜினி நடித்த லிங்கா படத்தின் திருட்டு விசிடியை வெளியிடுவோருக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றம், இந்த செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் என்.ராம்தாஸ், செயலாளர் ஆர்.சூர்யா, பொருளாளர் கே.ரவி ஆகியோர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:

லிங்கா திருட்டு விசிடி.. ரஜினி தலைமை ரசிகர் மன்றம் கண்டனம்

எங்கள் தலைவர் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடுகிறது. இந்த படத்தின் திருட்டு சி.டி.க்கள் தமிழகம் மற்றும் புதுவையில் பல பகுதிகளில் விற்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

திருட்டு சி.டி. விற்போரை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த இழிய செயலில் ஈடுபடுவோரை ரசிகர்கள் போலீசில் பிடித்து கொடுக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

போலீசார் இந்த ஆசாமிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்,"

-இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

 

விஷ்ணுவர்த்தனுடன் இணையும் சீயான் விக்ரம்

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கப்போவதாக கோலிவுட் வட்டாரங்கரங்கள் தெரிவிக்கின்றன.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘ஐ' படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனையடுத்து கோலிசோடா பட இயக்குநர் விஜய் மில்டனின் இயக்கத்தில் ‘பத்து எண்றதுக்குள்ள' படத்தில் நடித்து வருகிறார்.

விஷ்ணுவர்த்தனுடன் இணையும் சீயான் விக்ரம்

இன்னுமொரு பிரம்மாண்டம்

இந்த நிலையில் விஷ்ணுவர்த்தனுடன் விக்ரம் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பிரம்மாண்ட படமாக அமையும் என்று பேச்சு அடிபடுகிறது.

இந்தி ரீமேக்

அக்ஷய் குமார் நடித்துள்ள இந்திப்படத்தின் ரீமேக் ஆகவும் இந்தப்படம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆர்யா உடன் விஷ்ணுவர்த்தன்

அதேசமயம் விஷ்ணுவர்த்தன் இப்போது ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னிதி நடிக்கும் யட்சன் படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

அஜீத்துக்கு கதை

இதனையடுத்து அஜீத்திற்கு கதை கூறியுள்ளார் விஷ்ணுவர்த்தன். இவர் ஏற்கனவே அஜீத்தில் பில்லா,ஆரம்பம் படங்களை இயக்கியவர்.

விக்ரமுடன் அடுத்து

இந்த நிலையில் விக்ரமுடன் இணையப்போவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

ஆண்டுக்கு 2 படம்

விக்ரம் நடித்த ஐ படம் மூன்றாண்டுகளுக்கு மேலாக தயாராகி வருகிறது. இனிமேல் ஆண்டுக்கு இரண்டு படம் ரீலீசாகும் வகையில் படங்களில் நடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளாராம் விக்ரம்.

 

ஒரே மாசத்தில் குண்டாவது எப்படி...? கணேஷ்கர் - ஆர்த்தி தரும் டிப்சை கேளுங்க!

சென்னை: குறைந்த கால அளவில் எளிதாக குண்டாவது எப்படி என காமெடி நடிகர்களான கணேஷ்கர், ஆர்த்தி தம்பதி டிப்ஸ் கொடுத்துள்ளனர்.

தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறுவயது முதல் இணைந்து காமெடியில் கலக்கியவர்கள், தற்போது திருமண பந்தத்திலும் இணைந்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இருவேறு கட்சிகளில் இருவரும் அங்கம் வகித்த போதும், குடும்ப வாழ்க்கைக்குள் அரசியலை நுழைய விடாமல் தடுத்து சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.

பொதுவாக எளிய வகையில் விரைவில் ஒல்லியாவது எப்படி என யோசித்துக் கொண்டிருக்க, சீக்கிரமாக குண்டாவது எப்படி என டைம்பாஸ் வார இதழுக்கு பேட்டி அளித்துள்ளனர் கணேஷ்கர் - ஆர்த்தி ஜோடி.

ஒரே மாசத்தில் குண்டாவது எப்படி...? கணேஷ்கர் - ஆர்த்தி தரும் டிப்சை கேளுங்க!

அப்பேட்டியில் அவர்கள் கூறியுள்ளதாவது :-

ஆர்த்தியின் பதில்...

குண்டா இருக்கறது தான் என்னோட பிளஸ் பாயிண்ட். பலபேர் டயட்ங்கிற பேர்ல ஒரே ஒரு டம்ளர் தண்ணியை மட்டும் குடிக்கிறாங்க. அவங்களையெல்லாம் பார்த்தா பாவமா இருக்கு.

ஆரோக்கியம் தான் முக்கியம்...

அவங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன். ஒல்லியா இருக்கிறோமோ, குண்டா இருக்கிறோமோ, ஆரோக்கியமா இருக்கணும். அவ்வளவு தான்.

சந்தோஷமா இருங்க...

மத்தபடி, மனசுல எந்தக் கவலையும் வெச்சுக்காம சந்தோஷமா இருங்க, பிடிச்சதை சாப்பிடுங்க. நீங்களும் என்னை மாதிரி குண்டாகிடுவீங்க' எனப் பதிலளித்துள்ளார்.

இது தான் டின்னர்...

இதே கேள்விக்கு கணேஷ்கர் பதில் கூறுகையில், ‘அது சப்ப மேட்டருங்க. ஒன்றரை கிலோ பர்த்டே கேக், 5 நேந்திரம் பழம் இது இரண்டையும் தினசரி ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடி சாப்பிடுங்க.

நிச்சயமா குண்டாகிடலாம்...

ஒரே மாசத்துல நிச்சயமா குண்டாகிடலாம். ஒரு காலத்துல நான் அப்படித்தான் பண்ணினேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

மூன்று நாளில் முடியும் வெற்றிமாறனின் விசாரணை... பிறகு சூதாடி

தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் சோதனை முயற்சியாக தற்போது 60 நிமிடங்கள் திரைப்படம் ஒன்றை எடுத்து வருகிறார். 'விசாரணை' என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் நாயகனாக நடித்து வருகிறார்.

பாடல்கள் இன்றி உருவாகி வரும் 'விசாரணை' திரைப்படம் ஒரு தமிழ்த்திரையுலகில் ஒரு சோதனை முயற்சி என்றும், இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை அடுத்து, அடுத்தடுத்து இதுபோன்ற ஒரு மணி நேர திரைப்படம் உருவாக்க இருப்பதாக வெற்றிமாறன் கூறியுள்ளார். விசாரணை படத்தின் படப்பிடிப்பு மூன்று நாட்களில் முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது.

மூன்று நாளில் முடியும் வெற்றிமாறனின் விசாரணை...  பிறகு சூதாடி

வெற்றிமாறனின் விசாரணை

‘பொல்லாதவன்', ‘ஆடுகளம்' ஆகிய படங்களை இயக்கிய வெற்றிமாறன் தற்போது ‘அட்டக்கத்தி' தினேஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ‘விசாரணை' என்று பெயர் வைத்துள்ளனர்.

கயல் ஆனந்தி

விசாரணையில் தினேஷிற்கு ஜோடியாக ஆனந்தி நடித்து வருகிறார். மேலும் சமுத்திரகனி, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

ஆடுகளத்திற்கு பின்னர்

வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்' படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து தமிழில் எந்த படமும் அவர் இயக்கவில்லை. மாறாக, இவரது உதவியாளர்கள் இயக்கும் படங்களை தயாரிப்பது மற்றும் திரைக்கதை எழுதுவது, வசனங்கள் எழுதுவது ஆகிய பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இறுதிக்கட்டத்தில் விசாரணை

தற்போது விசாரணை மூலம் மீண்டும் இயக்குனர் பணியை தொடர்கிறார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 3 நாட்களில் படப்பிடிப்பை முடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

முதல் போஸ்டர்

இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சூதாடி

நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் - வெற்றிமாறன் இணைப்பில் தொடங்கப்பட்ட படம் 'சூதாடி'. முதலில் பெயரிடப்படாமல் தொடங்கப்பட்ட படத்தில் தனுஷூடன் பார்த்திபனும் நடித்து வந்தார். பிறகு, இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

கைவிடப்பட்டதா சூதாடி

'அனேகன்', 'ஷமிதாப்', 'வேலையில்லா பட்டதாரி' ஆகிய படங்களில் மும்முரமாக பணியாற்ற ஆரம்பித்தார் தனுஷ். இதனால், வெற்றிமாறன் படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதனை வெற்றி மாறன் மறுத்தார்.

விசாரணைக்குப் பின்னர்

'அட்டகத்தி' தினேஷை வைத்து தனுஷ் தயாரிப்பில் 'விசாரணை' என்னும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். 'சூதாடி'க்கு முன்னரே இப்படத்தை முடித்து வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்குப் பின்னர் சூதாடியை எடுக்கப்போகிறார் வெற்றிமாறன்.

ஹாலிவுட் படம் போல

விசாரணை திரைப்படம் 2 மணி நேர படம் இல்லை. ஹாலிவுட் படங்களை விடவும் குறைவான நேரம் கொண்டதாக, ஏறக்குறைய 1 மணி நேரத்திற்கு ஓடும் படமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச்சில் ரிலீஸ்

மிகக் குறுகிய நேரம் கொண்டதாக வெளிவரும் முதல் சினிமாவாக 'விசாரணை' இருக்கும் என்கிறார்கள் வெற்றிமாறன் வட்டாரத்தில். இப்படக்குழுவினர் தற்போது கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் படத்தை படம் ரீலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

அம்மா நடிகைக்கு 5 கோடி சம்பளம்! அதிர்ச்சியில் முன்னணி ஹீரோயின்கள்

சென்னை: அம்மா கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ள தமிழிலின் முன்னாள் கனவு கன்னி நடிகைக்கு சம்பளமாக ரூ.5 கோடி அளிக்கப்படுகிறதாம். பிற நடிகைகள் பலரும் இதைப்பார்த்து வயிற்றெரிச்சலில் உள்ளனராம்.

ரஜினி, கமல்ஹாசன் காலத்தில் கொடிகட்டி பறந்த ஹீரோயின் நடிகை அவர். கண்ணுக்கு லட்சணமாகவும் இருப்பார், முட்டிக்கு மேலே கவுன் போட்டும் நடிப்பார் அந்த நடிகை.

அம்மா நடிகைக்கு 5 கோடி சம்பளம்! அதிர்ச்சியில் முன்னணி ஹீரோயின்கள்

திருமணமாகி மும்பையில் செட்டிலான அம்மணி வெகு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியில் வெளியான ஒரு படத்தில் நடுத்தர குடும்பத்து தாய் வேடத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அது தமிழிலிலும் டப் செய்யப்பட்டது. அப்படத்தை பார்த்த பலரும், இன்னும் அழகு குறையாமல் அப்படியே உள்ளாரே என்று பெருமூச்சு விட்டனர்.

இந்நிலையில் தமிழிலில் முன்னணி நடிகர் ஒருவர் நடித்துவரும் திரைப்படத்தில் அம்மா வேடத்தில் கால்பதிக்கிறார் அந்த நடிகை. அவருக்கு சம்பளம் ரூ.5 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது தமிழ் சினிமா உலகில் ஒரு முன்னாள் கதாநாயகிதான் அம்மா வேடங்களை ஆக்கிரமித்து வருகிறார். அந்த நடிகைக்கு போட்டியாக இந்த மயில் நடிகை களமிறங்கியுள்ளதால் இனி அம்மா வேடங்களுக்கு போட்டி களைகட்டும்

சம்பளம் குறித்து கேள்விப்பட்ட மற்ற நடிகைகள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்களாம்.

 

பிபாஷாவுக்கு டாட்டா காட்டிவிட்டு காஜலை லவ்வும் ராணா?

ஹைதராபாத்: நடிகர் ராணா தற்போது காஜல் அகர்வாலை காதலிப்பதாக தெலுங்கு திரையுலகினர் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

மறுபடியும் முதலில் இருந்தா, டைப் செய்யும் முன்பே கண்ணை கட்டுதே. ராணா காதலித்த, காதலிக்கும் நடிகைகள் பற்றி பெரிய பட்டியலே தயாரிக்கலாம். அந்த அளவுக்கு அவரது காதல் லீலை உள்ளது. அவரது வாழ்வில் வந்த பல காதலிகளில் அவ்வப்போது சேர்வதும் பிரிவதுமாக இருந்த ஒரே நடிகை த்ரிஷா தான்.

பிபாஷாவுக்கு டாட்டா காட்டிவிட்டு காஜலை லவ்வும் ராணா?

தற்போது அவரும் ராணாவை பிரிந்துவிட்டார். த்ரிஷாவின் பெயர் தற்போது சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் வருண் மணியனுடன் அடிபடுகிறது. கன்னட நடிகை ராகினி திவேதியுடன் ராணாவுக்கு ஏற்பட்ட காதலால் தான் த்ரிஷா விலகியதாக கூறப்பட்டது. ஆனால் பாலிவுட் நடிகையும், தனது முன்னாள் காதலியுமான பிபாஷா பாசுவுடன் சேரவே ராணா த்ரிஷாவை கழற்றிவிட்டதாகவும் பேச்சு அடிபட்டது.

ராணாவுக்காக பிபாஷாவும் தனது தற்போதைய காதலரான ஹர்மன் பவேஜாவை விட்டு விலகியதாக செய்திகள் வெளியாகின. இதற்கிடையே வார இறுதி நாட்களில் சமந்தாவுடன் அவுட்டிங் போக வேண்டும் என்று ராணா தனது ஆசையை டிவி நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்தினார்.

அது போதாது என்று அனுஷ்கா எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று வேறு ஒரு பிட்டை போட்டார். இந்நிலையில் அவர் தற்போது காஜல் அகர்வாலை காதலிப்பதாக தெலுங்கு திரையுலகினர் பேசிக் கொள்கிறார்கள்.

எப்படி பிக்கப் செய்கிறார் டிராப் செய்கிறார் என்றே தெரியவில்லை என்பது இந்த மச்சக்கார மன்மதமராசாவான ராணாவுக்கு தான் மிகவும் பொருந்தும்.

 

12ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி துவக்கி வைக்கிறார்

12ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை இன்று (18 டிசம்பர், 2014) மாலை 6 மணிக்கு உட்லாண்ட்ஸ் திரையரங்கில் கோலாகலமாக தொடங்குகிறது.

இவ்விழாவை தமிழக செய்திதுறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி துவக்கி வைக்கிறார்.

12ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி துவக்கி வைக்கிறார்

இயக்குனர் மகேந்திரன், சரத்குமார், வருண் மணியன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துக்கொள்ள, திரைத்துறையை சேர்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கவுள்ளனர்.

டிசம்பர் 18 முதல் டிசம்பர் 25 வரை நடக்கும் 12ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், உலகமெங்கும் வெகுவாக விமர்சிக்கப்பட்ட பல மொழி திரைப்படங்கள் உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் சிம்போனி, கேசினோ, ஐனாக்ஸ், ரஷ்யன் சென்டர் ஆப் சயின்ஸ் அண்ட் கல்ட்சர் ஆகிய இடங்களில் திரையிடப்படவுள்ளன.