முப்பரிமாண மென் இன் பிளாக் 3... மே மாதம் தமிழிலும் ரிலீஸ்!


 

'இளைய தளபதி' போய் 'தலைவரா'ன விஜய்!


 

சிவாஜி, சந்திரமுகி, தெய்வதிருமகள், வேலாயுதம்... தமிழ் புத்தாண்டு சிறப்புத் திரைப்படங்கள்!


 

மகள் திருமணம்: முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்பு வைத்த இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்!


 

முதல் முறையாக தமிழில் பாடிய பப்பிலஹரி!


 

நடிகர் நம்பியார் மனைவி மறைவு - முதல்வர் ஜெயலலிதா இரங்கல்


 

தனுஷ் மீது ராக்கி சாவந்த் பாய்ச்சல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஜோடி போட்டு நடனம் ஆடாததால் தனுஷ் மீது பாய்ந்துள்ளார் பாலிவுட் ஹீரோயின் ராக்கி சாவந்த். பாலிவுட்டில் அவ்வப்போது பிரச்னைகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்துபவர் ராக்கி சாவந்த். இவர் மும்பை நிகழ்ச்சியொன்றில் தனுஷுடன் மேடையில் தோன்றி 'ஒய் திஸ் கொல வெறி டி' பாட்டுக்கு நடனம் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. முதலில் நடனம் ஆட ஒப்புக்கொண்ட தனுஷ் திடீரென்று ஆட மறுத்துவிட்டார். விழாவுக்கும் செல்லவில்லை. இதனால் ராக்கி சாவந்த் கோபம் அடைந்தார். தனுஷுடன் இணைந்து ஆடவேண்டும் என்ற கூறியதால்தான் ஒப்புக்கொண் டேன். இதற்காக பலமுறை ஒத்திகையில் ஈடுபட்டேன். இவ்வளவு கஷ்டமும் இப்போது வீண் ஆகிவிட்டது. அவர் வராமல் ஏமாற்றி விட்டார் என்று கூறி தனுஷை திட்டி தீர்த்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தனுஷிடம் கேட்டபோது, '3' படம் ரிலீசுக்காக நான் சென்னையில் இருக்க வேண்டி இருந்தது. எனவேதான் ராக்கி சாவந்த் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என்றார். ஆனால் தனுஷ் இந்நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கு வேறு காரணம் கூறப்படுகிறது. '3' படத்தில் நடித்தபோது ஸ்ருதி ஹாசனுடன் காதல் மலர்ந்தது என்றும், அவருடன் நெருக்கமாக இருக்கிறார் என்றும் வதந்தி பரவியது. இதனால் பிரச்னை ஏற்பட்டது. ஏற்கனவே சர்ச்சையில் சிக்கி இருந்த தனுஷ் வீணாக மற்றொரு சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. 'ராக்கி சாவந்துடன் சேர்ந்து ஆடினால் புதிய பிரச்னையில் சிக்கிக்கொள்வீர்கள்' என்று மேனேஜர் எச்சரித்ததால் அவருடன் ஆடுவதை தனுஷ் தவிர்த்தார் என்று கூறப்படுகிறது.


 

விக்ரமுடன் இணையும் ஜீவா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இன்றைய தேதியில் பிசியாக இருக்கும் ஹீரோ ஜீவா தான். 'கோ' படத்திற்கு பிறகு அவரது மார்க்கெட் சிகரத்தை தொட்டிருக்கிறது. தமிழின் முன்னணி இயக்குனர்களுடனும் தலா ஒரு படம் கையில் வைத்திருக்கும் ஜீவா மிஷ்கினுடன் முகமூடி, கௌதம் மேனனின் 'நீதானே என் பொன்வசந்தம்' மற்றும் இயக்குனர் ஜனநாதன் படம்... என படு பிசியாக உள்ளார். இதனையடுத்து, மணிரத்னம் உதவியாளர் பிஜாய் நம்பியார் இயக்கும் 'டேவிட்' படத்தில் விக்ரமுடன் இணைந்து நடிக்கிறார் ஜீவா.


 

நடனம் ஆடினார் ரஜினிகாந்த்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
லண்டனில் நடைபெற்ற ''கோச்சடையான்'' படப்பிடிப்பை முடித்துக்கொண்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிக்கும் 'கோச்சடையான்' படத்தை, ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா இயக்குகிறார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு படத்தின் சூட்டிங்கில் ரஜினிகாந்த் பாட்டுக்கு நடனம் ஆடினார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடலுக்கு அவர் ஆடி வருகிறார். பாடலுக்கு இந்தி 'சரோஜ் கான்' நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.


 

இளம் ஹீரோக்களுடன்தான் பழகுவேன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'இளம் ஹீரோக்கள்தான் எனக்கு நண்பர்கள். அவர்களுடன் சுற்றுவதை நிறுத்த மாட்டேன்' என்கிறார் எமி ஜாக்ஸன். 'மதராச பட்டணம்' படத்தில் நடித்தவர் எமி ஜாக்ஸன். அவர் கூறியதாவது: பழைய மெட்ராஸ், புதிய சென்னை இரண்டையுமே நான் பார்த்துவிட்டேன். எனது முதல் படமான 'மதராச பட்டணம்' சுதந்திரத்துக்கு முந்தைய கதை என்பதால் பழைய மெட்ராஸ் எப்படி இருக்கும் என்பதை தத்ரூமாக செட் அமைத்தார்கள். அங்கு நடித்துவிட்டு சிட்டிக்குள் சென்றால் முற்றிலும் புதிய சிட்டிக்குள் வந்ததுபோல் உணர்வேன். தமிழ் எனக்கு வேற்றுமொழியாக இருந்தாலும் அதில் நடிக்க வந்தபோது இயக்குனரும், பட யூனிட்டாரும் தந்த ஆதரவு என்னை படத்தோடு ஒன்ற வைத்தது. இதற்கு முன்பு வெளிநாட்டு நடிகை ஒருவர் கோலிவுட் படத்தில் நடித்திருக்கிறாரா என்பது எனக்கு தெரியவில்லை. அதேநேரத்தில் வெளிநாட்டு பெண்ணாக இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டது சந்தோஷம்.

இந்தியில் 'ஏக் திவான தா' படத்தில் நடித்தேன். தற்போது 'தாண்டவம்' படத்தில் விக்ரமுடன் நடிக்கிறேன். இதன் ஷூட்டிங்கில் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சமூக அமைப்புகளில் எனக்கு ஆர்வம் உண்டு. திரையுலகம் மற்றும் வேறு துறையிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். என்னுடைய நண்பர்கள் எல்லாருமே இளம் நடிகர்கள்தான். அவர்களுடன் மட்டுமல்ல, மற்ற துறை நண்பர்களுடனும் வெளியில் சுற்றுவதை விரும்புகிறேன். 'இளம் நடிகர்களுடன் மட்டும் பழகுவது ஏன்?' என்று கேட்கிறார்கள். அவர்களுடன்தான் நான் நடிக்கிறேன். அவர்களிடம் பழகாமல் எப்படி நடிப்பது? கோலிவுட்டை பொறுத்தவரை எனக்கு இப்போதைய நண்பர் ஆர்யா மற்றும் மதராச பட்டணம் டீம்தான். இவ்வாறு எமி ஜாக்ஸன் கூறினார்.


 

சமூக சேவை நோக்குடன் செயல்படும் கமல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'விஸ்வரூபம்' படத்தில் பிசியாக இருக்கும் உலக நாயகன் கமலஹாசன், வர்த்தக ரீதியிலான பொருட்களுக்கு விளம்பர தூதராக ஒப்புக்கொள்வதில்லை. மேலும் ''வர்த்தக ரீதியிலான பொருட்களுக்கு விளம்பர தூதராக ஒப்புக்கொள்ளாமல் இருந்த கமல்ஹாசன் தற்போது அந்த எண்ணத்தை தளர்த்தி சமூக சேவை நோக்குடன் செயல்படும் நிறுவனங்களுக்கு தூதராக இருக்க முடிவு செய்திருக்கிறார். ஏற்கனவே எய்ட்ஸ், போலியோ என சமூக விழிப்புணர்வு கொண்ட விளம்பரங்களில் கமலஹாசன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

கிசு கிசு - சாக்கு போக்கு இயக்கம்.. ஷாக் கொடுத்த ஹீரோயின்..

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்லகாலம் பொறக்குது...
நல்லகாலம் பொறக்குது...

சிவா காட் ஆடும் டான்ஸ் பேர்ல படம் எடுக்கற விஜயமான இயக்கம் ஹாலிவுட் பூமியிலயும், சிவப்பு கொடி நாட்டுலயும் ஷூட்டிங் நடத்த முடிவு பண்ணாராம்... பண்ணாராம்... முதல்ல ஓ.கே. சொன்ன தயாரிப்பு, திடீர்னு ஹாலிவுட் பூமிக்கு போக வேணாம்னு சொல்லிட்டாங்களாம். எடுக்கற காட்சிய சிவப்பு கொடி நாட்டுலய எடுத்துருங்க. இன்னொரு கன்ட்ரிக்கு போய் எடுத்தா பட்ஜெட் எகிறிடும்னு கறாரா சொல்லிட்டாங்களாம். இதுபத்தி இயக்கத்துகிட்ட கேட்டா ஹாலிவுட் பூமிக்கு போகாததுக்கு காரணம் விசா கெடக்காததுதான்னு சாக்குபோக்கு சொல்றாராம்... சொல்றாராம்...

மாசக்கணக்குல ஸ்டிரைக் நடந்ததை சாதகமா பயன்படுத்திக்கலாம்னு உதவி இயக்கங்க நம்பனாங்களாம்... நம்பனாங்களாம்... ஷூட்டிங் இல்லாம வீட்ல இருக்க ஹீரோக்கள பாத்து சூப்பர் கதை இருக்கு சொல்ல வரட்டுமான்னு பர்மிஷன் கேட்டப்ப எல்லா ஹீரோக்களுமே எஸ்ஸாயிட்டாங்களாம்... சம்மர் லீவுல ஷூட்டிங் வெச்சிடுவாங்க. அதால பேமலியோட இப்பவே பாரின் போறோம். வந்தப்பறம் கேக்கறேன்னு சொல்லிட்டாங்களாம். கால்ஷீட் வாங்கிடலாம்னு குஷியா இருந்த உதவி இயக்கங்க ஏமாற்றத்துல சோர்ந்து போயிட்டாங்களாம்... போயிட்டாங்களாம்...

மர்மமாக இறந்துபோன திவ்யமான பாரதி ஹீரோயினுடைய லைப் ஹிஸ்ட்ரிய படமாக்குற இயக்கம், அதே சாயல்ல இருக்கற ஓல்டு ரம்ப ஹீரோயின ஒப்பந்தம் பண்ண முடிவு பண்ணாராம்... பண்ணாராம்... ஒரு வழியா தேடி கண்டுபிடிச்சி பேசப்போன இயக்கத்துக்கு ஷாக்காம். ஸ்லிம்மா இருந்தவரு இப்ப பெருத்து போயிருக்காராம். இதால வேற ஹீரோயின இயக்கம் தேடுறாராம்... தேடுறாராம்...


 

கே.எஸ்.ரவிக்குமார் மகள் திருமணம்: முதல்வருக்கு அழைப்பு

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச்செயலகத்தில் திரைப்பட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குடும்பத்தினருடன் சந்தித்து தனது மகளின் திருமணத்துக்கு வந்து மணமக்களை வாழ்த்த வேண்டுமென கேட்டுக் கொண்டு திருமண அழைப்பிதழை வழங்கினார்.


 

பெப்சி - தயாரிப்பாளர் பிரச்சினையில் நடுநிலை வகிப்போம் - நடிகர் சங்கம் அறிவிப்பு


 

நான் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும்? - எஸ்ஏ சந்திரசேகரன்


 

நக்கீரன் கோபால் வழக்கு: வீரப்பன் பற்றி தயாரான படங்களை வெளியிட தடை!