யுவன் வாய்ப்பைப் பறித்த தேவி ஸ்ரீபிரசாத்!!

Dsp Compose Ajith Movie The First Time

அஜீத் படம் என்றாலே யுவன் சங்கர் ராஜாதான் இசை என்பது எழுதப்படாத விதி. இப்போது அதில் ஒரு மாற்றம்.

இந்த முறை அஜீத்தின் அடுத்த படத்துக்கு இசையமைக்கப் போகிறவர் யுவன் சங்கர் ராஜா அல்ல. தேவி ஸ்ரீ பிரசாத்!!

அஜீத்தும் தேவி ஸ்ரீ பிரசாத்தும் இணைவது இதுதான் முதல் முறை.

ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைப்பார் என்றுதான் அறிவித்திருந்தனர். பின்னர் என்ன நடந்ததோ... கொலவெறி புகழ் அனிருத் இசையமைக்கிறார் என்று செய்திகள் வெளியாகின.

இப்போது அவரும் இல்லை. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்தின் இயக்குநரை தொடர்ந்து நச்சரித்து இந்த வாய்ப்பை தேவி ஸ்ரீ பிரசாத் பெற்றதாகவும் ஒரு செய்தி உலா வருகிறது.

இதுகுறித்து இயக்குநர் சிறுத்தை சிவா கூறுகையில், "விரைவில் அனைத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போகிறோம்," என்றார்.

 

'கரீனா - சயீப் கல்யாணம் செல்லாது செல்லாது' - முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு

Darul Uloom Labels Saif Kareena Marriage

மும்பை: மதம் மாறாத கரீனாவை சயீப் அலிகான் திருமணம் செய்தது முஸ்லிம் மத சட்டப்படி செல்லாது என்று இஸ்லாமிய அமைப்பான தாருல் உலூம் தியோபந்த் அறிவித்துள்ளது.

முதல் மனைவி அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்த சயீப் அலிகான், நடிகை கரீனா கபூரை 5 ஆண்டுகள் காதலித்தார். சில தினங்களுக்கு முன்புதான் இருவருக்கும் பதிவுத் திருமணம் நடந்தது.

கரீனா கபூர் இந்து மதத்தைச் சேர்ந்தவர். சயீப் அலிகான் முஸ்லிம். ஆனால் இந்து முறைப்படி கரீனாவுக்கு தாலி கட்டிதான் சயீப் திருமணம் செய்தார்.

கரீனா கபூர் முஸ்லிம் மதத்துக்கு மாறவில்லை. எனவே முன்னணி இஸ்லாமிய அமைப்பான தாருல் உலூம் தியோபந்த் இந்த திருமணத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சயீப் அலிகான்-கரீனா கபூர் திருமணம் முஸ்லிம் மத சட்டத்துக்கு விரோதமானது. திருமணத்துக்கு முன் கரீனா கபூர் முஸ்லிம் மதத்துக்கு மாறி இருக்க வேண்டும். ஆனால் அவர் மதம் மாறவில்லை. எனவே இந்த திருமணத்தை இஸ்லாம் அங்கீகரிக்காது, என்று குறிப்பிட்டுள்ளது.

 

மீண்டும் சொந்தப் படம் எடுக்கிறார் ஷங்கர்!

Shankar Produce Films Again

தொடர்ந்து மூன்று படங்கள் தோல்வியைத் தழுவியதால் மூடப்பட்ட தனது எஸ் பிக்சர்ஸை மீண்டும் திறக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

முதல்வன், காதல், வெயில், கல்லூரி, இம்சை அரசன் 23-ம் புலிகேசி, ஈரம் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைத் தந்த ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம், இரட்டை சுழி, அனந்தபுரத்து வீடு போன்ற தோல்விப் படங்களால் இழுத்து மூடப்பட்டது.

இப்போது மீண்டும் படங்கள் தயாரிக்க முடிவு செய்துள்ள ஷங்கர், எழுத்தாளர் ராஜூ முருகனை இயக்குநராக அறிமுகம் செய்கிறார்.

ராஜூ முருகன் சொன்ன ஒரு கதை ரொம்பப் பிடித்துப்போனதால், படம் தயாரிக்கும் முடிவுக்கு வந்தாராம் ஷங்கர்.

இந்தப் படத்தின் வெற்றியைப் பொறுத்து தொடர்ந்து புதிய படங்களைத் தயாரிக்கப் போகிறாராம். அதுமட்டுமல்ல, தனது இயக்கத்திலும் ஒரு படத்தைத் தயாரிக்கவிருக்கிறாராம்.

 

இந்தியன் பனோரமாவுக்கு வாகை சூட வா தேர்வு!

vaagai sooda vaa selected indian panorama   

Close
 
சற்குணம் இயக்கத்தில் விமல், இனியா ஜோடியாக நடிக்க, முருகானந்தம் தயாரித்த படம் 'வாகை சூடவா'.

தேசிய விருது உள்பட ஏராளமான விருதுகளை இந்தப் படம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெற்றுள்ளது. நார்வே திரைப்பட விழாவில் 7 விருதுகளை அள்ளியது இந்தப் படம். இப்போது இந்தியன் பனோரமாவுக்கு தேர்வாகியுள்ளது.

இதுகுறித்து இயக்குநர் சற்குணம் கூறுகையில், 'இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வாவது சாதாரண விஷயமல்ல. காரணம் தேசிய விருதுக்கு அடுத்தபடியான பெருமை இந்தப் பிரிவுக்கு உண்டு.

மலையாளத்தில் 5 படங்களும், மராத்தி, பெங்காலியில் தலா 3 படங்களும் ஆக மொத்தம் 20 படங்கள் இந்தப் பிரிவுக்கு தேர்வாகி உள்ளன. இதில் தமிழில் இருந்து தேர்வான ஒரே படம் 'வாகை சூடவா' என்பது பெருமையாக உள்ளது.

 

இந்தியன் பனோரமாவுக்கு வாகை சூட வா தேர்வு!

vaagai sooda vaa selected indian panorama   

Close
 
சற்குணம் இயக்கத்தில் விமல், இனியா ஜோடியாக நடிக்க, முருகானந்தம் தயாரித்த படம் 'வாகை சூடவா'.

தேசிய விருது உள்பட ஏராளமான விருதுகளை இந்தப் படம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெற்றுள்ளது. நார்வே திரைப்பட விழாவில் 7 விருதுகளை அள்ளியது இந்தப் படம். இப்போது இந்தியன் பனோரமாவுக்கு தேர்வாகியுள்ளது.

இதுகுறித்து இயக்குநர் சற்குணம் கூறுகையில், 'இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வாவது சாதாரண விஷயமல்ல. காரணம் தேசிய விருதுக்கு அடுத்தபடியான பெருமை இந்தப் பிரிவுக்கு உண்டு.

மலையாளத்தில் 5 படங்களும், மராத்தி, பெங்காலியில் தலா 3 படங்களும் ஆக மொத்தம் 20 படங்கள் இந்தப் பிரிவுக்கு தேர்வாகி உள்ளன. இதில் தமிழில் இருந்து தேர்வான ஒரே படம் 'வாகை சூடவா' என்பது பெருமையாக உள்ளது.

 

'கரீனா - சயீப் கல்யாணம் செல்லாது செல்லாது' - முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு

Darul Uloom Labels Saif Kareena Marriage

மும்பை: மதம் மாறாத கரீனாவை சயீப் அலிகான் திருமணம் செய்தது முஸ்லிம் மத சட்டப்படி செல்லாது என்று இஸ்லாமிய அமைப்பான தாருல் உலூம் தியோபந்த் அறிவித்துள்ளது.

முதல் மனைவி அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்த சயீப் அலிகான், நடிகை கரீனா கபூரை 5 ஆண்டுகள் காதலித்தார். சில தினங்களுக்கு முன்புதான் இருவருக்கும் பதிவுத் திருமணம் நடந்தது.

கரீனா கபூர் இந்து மதத்தைச் சேர்ந்தவர். சயீப் அலிகான் முஸ்லிம். ஆனால் இந்து முறைப்படி கரீனாவுக்கு தாலி கட்டிதான் சயீப் திருமணம் செய்தார்.

கரீனா கபூர் முஸ்லிம் மதத்துக்கு மாறவில்லை. எனவே முன்னணி இஸ்லாமிய அமைப்பான தாருல் உலூம் தியோபந்த் இந்த திருமணத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சயீப் அலிகான்-கரீனா கபூர் திருமணம் முஸ்லிம் மத சட்டத்துக்கு விரோதமானது. திருமணத்துக்கு முன் கரீனா கபூர் முஸ்லிம் மதத்துக்கு மாறி இருக்க வேண்டும். ஆனால் அவர் மதம் மாறவில்லை. எனவே இந்த திருமணத்தை இஸ்லாம் அங்கீகரிக்காது, என்று குறிப்பிட்டுள்ளது.

 

மீண்டும் சொந்தப் படம் எடுக்கிறார் ஷங்கர்!

Shankar Produce Films Again

தொடர்ந்து மூன்று படங்கள் தோல்வியைத் தழுவியதால் மூடப்பட்ட தனது எஸ் பிக்சர்ஸை மீண்டும் திறக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

முதல்வன், காதல், வெயில், கல்லூரி, இம்சை அரசன் 23-ம் புலிகேசி, ஈரம் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைத் தந்த ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம், இரட்டை சுழி, அனந்தபுரத்து வீடு போன்ற தோல்விப் படங்களால் இழுத்து மூடப்பட்டது.

இப்போது மீண்டும் படங்கள் தயாரிக்க முடிவு செய்துள்ள ஷங்கர், எழுத்தாளர் ராஜூ முருகனை இயக்குநராக அறிமுகம் செய்கிறார்.

ராஜூ முருகன் சொன்ன ஒரு கதை ரொம்பப் பிடித்துப்போனதால், படம் தயாரிக்கும் முடிவுக்கு வந்தாராம் ஷங்கர்.

இந்தப் படத்தின் வெற்றியைப் பொறுத்து தொடர்ந்து புதிய படங்களைத் தயாரிக்கப் போகிறாராம். அதுமட்டுமல்ல, தனது இயக்கத்திலும் ஒரு படத்தைத் தயாரிக்கவிருக்கிறாராம்.

 

பிரியாணி படத்தில் "ஷ்யாம் ஆண்டர்சன்"

Sam Anderson in Biriyani

கார்த்தி நடிக்க வெங்கட்பிரபு இயக்கும் பிரியாணி படத்தில்  ரிச்சா கங்கோபாத்யாய் ஹீரோயினாக நடிக்கிறார். மற்றொரு ஹீரோயினாக காக்டெய்ல் இந்தி படத்தில் நடித்த தியானா நடிக்க பேச்சு நடக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் இம்மாதம் கடைசி வாரத்தில் தொடங்குகிறது. வெங்கட் பிரபு படம் என்றால் கெஸ்ட் ரோல் அதிகமாக இருக்கும், அப்படி இந்த படத்திலும் கெஸ்ட் ரோல் உண்டு. யார் அந்த நடிகர் தெரியுமா?.. பவர் ஸ்டாருக்கு இணையான ஷ்யாம் ஆண்டர்சன்.. யூ டியூப் போன்ற சமூக வலைதளங்களில் அதிகம் பார்த்த படங்களில் ஷ்யாம் ஆண்டர்சனின் 'யாருக்கு யாரோ ஸ்டப்னி'. இந்நிலையில் கார்த்தி நடிக்கும் பிரியாணி படத்தில் 'ஷ்யாம் ஆண்டர்சன்' நடிக்க வைக்கப் போகிறார். இப்படியாவது வெள்ளித்திரையை 'ஷ்யாம் ஆண்டர்சன்' தொடட்டும்..
 

தல படத்தின் அடுத்த சர்ப்ரைஸ்

Next Surprise in Ajith Film

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தல அஜீத் அடுத்த 'சிறுத்தை' படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் நடிக்கயிருக்கிறார். இந்த படத்தில் அனுஷ்கா, சந்தானம் நடிக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இதனையடுத்து அடுத்த சர்ப்ரைஸாக, இந்த படத்தில் 'தேவி ஸ்ரீ பிரசாத்' இசையமைக்க போகிறார். முன்னதாக இந்த படத்தில் அனிருத் ஸ்ரீகாந்த் இசையமைப்பார் என செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பது படக்குழு உறுதி செய்துள்ளது.
 

கமலின் விருந்து ரெடி

Vishwaroopam has length of 148 minutes and 23 seconds

அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆவதால் விஸ்வரூபம் பட ரிலீசை கமல்ஹாசன் தள்ளிப்போனதாக கூறப்பட்ட நிலையில், படத்திற்கு தணிக்கை குழு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. கமல்ஹாசன், ஆண்ட்ரியா நடித்துள்ள படம் விஸ்வரூபம். இப்படத்தை கமலே எழுதி இயக்கியுள்ளார். இப்பட ஷூட்டிங் முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிந்துவிட்டது. கமலின் பிறந்தநாளான நவம்பர் 7ந் தேதி அன்று பாடல் வெளியீட்டு விழா நடக்கிறது. இந்நிலையில், அதே சமயம் இந்தி பதிப்பிற்கு ஏ சான்றிதழ் வழங்கியது. இதனையடுத்து, 'விஸ்வரூபம்' படக் குழுவினர் இந்தி பதிப்பிற்கும் யூ/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் கேட்டதாக தெரிகிறது. படக்குழு கேட்டுக் கொண்டதால், மீண்டும் தணிக்கை செய்து, சில சீன்களை கட் செய்து யூ/ஏ சான்றிதழ் வழங்கியது. 'விஸ்வரூபம்' படத்தின் நீளம் சுமார் இரண்டரை மணி நேரம் அதாவது 148 நிமிடம் 23 நொடிகள். ஆக மொத்தம் கமலின் விருந்து ரெடி.
 

நிஷாவை காதலிக்கும் விஜய்-சிம்பு

STR-Vijay Romances Nisha

தலைப்பு கேட்டு பயந்திட வேண்டாம்.. தீபாவளிக்கு வெளியாகவுள்ள இளைய தளபதி விஜய்-யின் 'துப்பாக்கி' மற்றும் சிம்புவின் 'போடா போடி' படங்களில் வரும் ஹீரோயின்களின் பெயர் தான் நிஷா. ஆமாம், துப்பாக்கி படத்தில் காஜல் அகர்வாலின் பெயர் 'நிஷா' அதே போல், 'போடா போடி' படத்தில் வரலட்சுமியின் பெயரும் 'நிஷா' தான். அதனால் தான் இப்படி ஒரு தலைப்பு..
 

வாகை சூடிய விமல், சற்குணம்

''''Vaagai sooda vaa'''' get another appaluse

களவாணி புகழ் சற்குணம் இயக்கத்தில் 'வாகை சூட வா' படம் பலரது பாராட்டுகளை வென்றது. இதனையடுத்து, 'International Film Festival of India' பட விழாவில் தமிழ் சினிமா சார்பாக 'வாகை சூடவா' படத்தை திரையிட தமிழக அரச அனுமதி அளித்துள்ளது. 'வாகை சூடவா' படம் மொத்தம் 20 படங்களை எடுத்து கொண்ட தமிழக தேர்வு குழு, 'வாகை சூடவா' படத்தை திரையிட தேர்வு செய்தது. செங்கல் சூளையில் வேகும் குழந்தைகளின் வாழ்வில், கல்வியை விதைக்கும் ஆசிரியனின் கதையான இந்த படம் 59வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ் படமாக 'வாகை சூடவா' தேர்வு செய்யப்பட்டது. வாழ்த்துக்கள் விமல், சற்குணம்...
 

ஷங்கருக்கு நோ சொன்ன சீனா..

China says no to director Shankar

ஐ பட ஷூட்டிங்கிற்காக விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் படக்குழுவுடன் சீனா செல்ல ரெடியாக இருந்தார் இயக்குனர் ஷங்கர், ஆனால் சீனாவில் ஷூட்டிங் செய்ய அந்நாட்டு அரசு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. நண்பன் படத்தையடுத்து ஷங்கர் இயக்கி வரும் படம் ஐ. இதில் விக்ரம், எமி ஜாக்சன் ஜோடி. இப்படத்தில் பலவித கெட்அப்புகளில் விக்ரம் தோன்றுகிறார். சுரேஷ்கோபி, ராம்குமார், சந்தானம் உள்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபகாலமாக சென்னை மற்றும் சுற்றுப்புற இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. அடுத்த கட்ட ஷெட்யூல் சீனாவில் நடக்கயிருந்தது. இந்நிலையில் ஷூட்டிங் செய்ய சீனா அனுமதி வழங்காததை அடுத்து இயக்குனர் அமெரிக்கா அல்லது இங்கிலாந்தில் ஷூட்டிங் செய்ய யோசித்து வருகிறார்.
 

நடிகை த்ரிஷாவின் தந்தை கிருஷ்ணன் மாரடைப்பால் மரணம்

Actress Trisha Father Krishnan Passes Away

ஹைதராபாத்: நடிகை த்ரிஷாவின் தந்தை கிருஷ்ணன் மாரடைப்பால் நேற்று காலமானார்.

ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மேனேஜராக வேலை பார்த்து வந்த அவருக்கு வயது 68.

நடிகை த்ரிஷாவின் தாய் உமாவும் தந்தை கிருஷ்ணனும் நீண்ட காலமாக பிரிந்து வசிக்கின்றனர். ஆரம்பத்தில் சென்னையில் உள்ள ஓட்டலில் மேனேஜராக இருந்த கிருஷ்ணன், மகளின் இமேஜ் பாதிக்குமே என்பதற்காகவே ஹைதராபாதுக்குப் போய்விட்டார்.

ஆழ்வார்பேட்டையில் தனது தாயுடன் தனியாக வசித்து வந்தார் த்ரிஷா.

த்ரிஷாவும் அவரது அம்மா உமாவும் எவ்வளவோ முறை அழைத்தும் கிருஷ்ணன் இவர்களோடு வசிக்கவில்லை. தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று கூறி அவர் தனியே வசித்து வந்தாராம்.

தான் வேலை பார்க்கும் ஹைதராபாத் நட்சத்திர ஓட்டலுக்கு த்ரிஷா வந்தால் கூட, அவரை தன் மகள் என்று காட்டிக் கொள்ள மாட்டாராம்.

இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் ஹைதராபாதில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்படவே ஹோட்டல் ஊழியர்கள் அவரை அவசர அவசரமாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

இந்த கூத்தைக் கேளுங்க.. மகளுடனே ஜோடியாக நடித்த சினிமா தயாரிப்பாளர் - சீட்டிங் கேஸில் கைது!!!

Kannada Producer B P Srinivas Arrested In Cheating Case

பெங்களூர் தான் பெற்ற மகளுக்கே கணவராக நடித்துள்ளார் ஒரு கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர். அவரை மோசடி வழக்கில் ஜெய்ப்பூர் போலீஸார் கைது செய்து தூக்கியுள்ளனர்.

கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் பி.பி.ஸ்ரீனிவாஸ். இவர் தும்கூர் மாவட்டம் துருவகரே பகுதியைச் சேர்ந்தவர். கன்னடத்தில் சில படங்களைத் தயாரித்துள்ளார். முஸ்ஸஞ்சய கெலத்தி என்ற படத்தைத் தயாரித்து அதில் நடித்தும் உள்ளார். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலனி ஸ்ரீனிவாஸ். இவர் வேறு யாரும் இல்லை, ஸ்ரீனிவாஸ் பெற்றெடுத்த சொந்த மகள் ஆவார்.

இந்தப் படம் தயாரிப்பில் இருந்தபோதே பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பெற்ற மகளுக்கே கணவராக நடிப்பதா என்று பலரும் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். போராட்டங்களும் நடந்தன. பல கன்னட அமைப்புகள் கடுமையாக இதை சாடின. ஆனாலும் ஸ்ரீனிவாஸ் அதைக் கண்டுகொள்ளவில்லை. மாறாக படத்தை எடுத்து முடித்து வெளியிட்டும் விட்டார்.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஸ்ரீனிவாஸ் மீது ஒரு மோசடி புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அம்மாநில போலீசார் ஸ்ரீனிவாஸைத் தேடி வந்தனர். ஆனால் அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில்,முனியூரில் உள்ள தனது வீட்டில் பதுங்கியிருப்பதாக ஜெய்ப்பூர் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்று அவரைக் கைது செய்தனர்.

 

சுவிட்சர்லாந்தில் தேனிலவு

Honeymoon in Switzerland

பாலிவுட் காதல் ஜோடி சயீப் அலிகான்கரீனா கபூர் திருமணம் கடந்த 16ம் தேதி மும்பையில் நடந்தது. இதையடுத்து, டெல்லியில் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன், பிரீத்தி ஜிந்தா உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் கலந்து கொண்டனர். அரசியல் தலைவர்களும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.  நாளை மறுதினம் கரீனாசயீப் மும்பை திரும்புகின்றனர். 22ம் தேதி முதல் கரீனா ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார். புதிய படத்துக்காக மும்பையில் ஷாருக்கானுடன் டூயட் சீனில் பங்கேற்கிறார். மத்திய பிரதேச மாநிலத்தில் நடக்கும் இந்தி பட ஷூட்டிங்கில் சயீப் பங்கேற்கிறார். வரும் டிசம்பர் மாதம் புதுமண தம்பதிகள் சுவிட்சர்லாந்துக்கு தேனிலவு செல்கின்றனர். பின்னர் ஜனவரி 7ம் தேதி இந்தியா திரும்புகின்றனர்.
 

த்ரிஷாவின் அப்பா காலமானார்

Trisha''s father died

பிரபல நடிகை த்ரிஷாவின் அப்பா மாரடைப்பால் நேற்று காலமனார். ஐதராபாத்திலுள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மேலாளராக வேலை செய்து வந்த கிருஷ்ணனுக்கு நேற்று மாலை கடுமையான மார்பு வலி ஏற்பட்டது. இதனையடுத்து, அவரது சக ஊழியர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், ஆனால் அவர் மரணமடைந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினார்கள். தந்தை இறந்த செய்தி கேட்ட த்ரிஷாவும், த்ர்ஷாவின் அம்மாவும் ஐதராபாத்திற்கு விரைந்துள்ளனர்.
 

முருகதாஸின் ""ராஜா ராணி''

Murugadoss''s ''Raja Rani''

ஆர்யா நயன்தாரா மற்றும் ஜெய் கூட்டணியில், இயக்குனர் அட்லி இயக்கி, இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தயாரிக்கும் படத்திற்கு ராஜா ராணி என்று பெயர் சூட்டி உள்ளனர். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இப்படத்தினை முருகதாஸூடன் இணைந்து தயாரிக்க உள்ளது. இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று உலகநாயகன் கமலஹாசனால் கிரீம் இன் சாலை பங்களாவில் வைத்து துவங்கப்பட்டது. ஆர்யா மற்றும் நயன்தாரா ஏற்கனவே பாஸ் என்கிற பாஸ்கரனில் ஜோடியாக நடித்து பெரிய வெற்றி கண்டது. அதனால் இந்த படத்திலும் கண்டிப்பாக அவர்களது கூட்டணி வெற்றியை கொடுக்கும் என்று நினைத்தால், அதற்க்கு மாறாக ஜெய்யும், நயன்தாராவும் இப்படத்தில் ஜோடி சேருகின்றனர். தற்போது ஆர்யா சேட்டை, இரண்டாம் உலகம் மற்றும் விஷ்ணுவர்தனின் தலைப்பில்லா படத்தில் நடித்து கொண்டிருப்பதால், அதனை முடித்து விட்டு ராஜா ராணி ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என்று எதிர் பார்க்கபடுகிறது.
 

பாடகி சின்மயி கமிஷனரிடம் புகார்

Singer chinmayi complaint to Commissioner

'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் வரும் 'ஒரு தெய்வம் தந்த பூவே' பாடல் மூலம் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் சின்மயி ஸ்ரீ பாதா. தொடர்ந்து, தமிழ் உட்பட 7 மொழிகளில் 600க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி முன்னணி பாடகியாக உள்ளார். டெலிவிஷன்களில் இசை சம்பந்தமான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் நேற்று காலை தனது தாயார் பத்மாசினியுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். அங்கு 2 புகார் மனுக்கள் கொடுத்தார். ஒரு மனுவில் சின்மயி கூறியிருப்பதாவது:

டுவிட்டர் இணையதளத்தில் என்னை ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்களும், அருவருக்கத்தக்க வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. 6 பேர் சேர்ந்து இந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டுள்ளனர். உதவி பேராசிரியர் ஒருவருக்கும் இதில் தொடர்பு உள்ளது. அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருக்கிறார். மற்றொரு புகாரில், "மும்பை சாய்பாபா டெலி பிலிமை சேர்ந்த இசை நிகழ்ச்சிகள் நடத்தும் கஜேந்திர சிங் என்பவர் எனக்கு ரூ.17 லட்சம் பணம் தரவேண்டும். பலமுறை கேட்டும் அவர் தராமல் காலம் கடத்திக்கொண்டு வருகிறார். எனவே ரூ.17 லட்சம் பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இரண்டு புகார்கள் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். புகார் அளித்து வெளியே வந்த சின்மயி நிருபர்களிடம் கூறியதாவது: பேஸ் புக் மற்றும் டுவிட்டர் இணைய தளத்தில் கடந்த 2 ஆண்டுகளாக உறுப்பினராக உள்ளேன். அதில், எனது புகைப்படத்தை சிலர் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர். இது எனக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்று யாரும் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட பிறகும் அவர்கள் இதுபோன்ற அருவருக்கத்தக்க வகையில் கருத்துக்களையும் படங்களையும் தொடர்ந்து வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளவில்லை.

குறிப்பாக பெண்களின் மனம் நோகும்படி 6 பேர் கொண்ட கும்பல் கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக இந்த செயலில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது. அதிலும் என்னை குறி வைத்து ஆபாச தகவல்களை பரப்பி வருகின்றனர். அவர்கள் 6 பேர் பெயர்களையும் குறிப்பிட்டு கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளேன். எனக்கு ஏற்பட்டுள்ள நிலையை எனது பேஸ்புக்கிலும் வெளியிட்டுள்ளேன். எனவே இதுபோன்று வக்கிரமான செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். இவ்வாறு சின்மயி கூறினார்.
 

தமிழுக்கு வரும் ஜெனிலியா படம்

Ram charan dubbed in tamil

சிரஞ்சிவி மகன் ராம் சரண் நடித்த 'மாவீரன்', 'ரகளை', 'சிறுத்தைப்புலி' போன்ற டோலிவுட் படங்கள் தமிழில் டப்பிங் ஆகி ரிலீஸ் ஆனது. இதைத் தொடர்ந்து இவர் நடித்த 'ஆரஞ்ச்' என்ற படம் தமிழில் 'ராம் சரண்' என்ற பெயரில் டப்பிங் செய்யப்படுகிறது. கதாநாயகியாக ஜெனிலியா நடித்துள்ளார். பிரபு, பிரகாஷ்ராஜ், பூஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  காதல் என்பது சீக்கிரமே கருகிப்போகும் விஷயம் என்று ஹீரோவும், காதல் நீடித்து நிலைக்கக்கூடியது என்று எண்ணும் ஹீரோயினுக்கும் இடையில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களே கதை. பி.ராஜசேகர் ஒளிப்பதிவு. பாஸ்கர் இயக்கம். வசனம் ஏஆர்கே.ராஜராஜன். தயாரிப்பு எஸ்.சுந்தரலட்சுமி. இதன் ஷூட்டிங் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.
 

மீண்டும் நடிக்க வந்த குட்டி ராதிகா

Kutty Radhika to act again

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை மணந்த குட்டி ராதிகா மீண்டும் நடிக்க வந்தார். 'இயற்கை', 'வர்ணஜாலம்', 'மீசை மாதவன்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் குட்டி ராதிகா. இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். இதையடுத்து நடிப்புக்கு முழுக்கு போட்டார். சமீபத்தில் 'லக்கி' என்ற படம் மூலம் தயாரிப்பாளராக திரையுலகிற்குள் நுழைந்தார். இதில் யாஷ், திவ்யா நடித்தனர்.

இதையடுத்து 'சுவீட்டி நானா ஜோடி' படத்தை தயாரிப்பதுடன் மீண்டும் நடிப்புக்கு திரும்பி உள்ளார். விஜயலட்சுமி சிங் இயக்குகிறார். இதன் ஷூட்டிங் தொடங்கியது. ராதிகா நடித்த பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன.

மீண்டும் நடிக்க வந்ததுபற்றி ராதிகா கூறும்போது,'படங்களில் கிளாமராக நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் ஆபாசமான உடை அணிய மாட்டேன். இந்த கட்டுப்பாடுகளு டன் படங்களில் நடிக்கிறேன். இப்படத்தில் ஆதித்யா ஹீரோவாக நடிக்கிறார். ஏற்கனவே அவருடன் நான் நடித்திருக்கிறேன். தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது' என்றார்.
 

"வாய்ப்பு கேட்டு கெஞ்ச மாட்டேன்"

I will not beg to offer

வாய்ப்பு கேட்டு கெஞ்சும் பழக்கம் என்னிடம் இல்லாததால் அதிக படங்களில் நடிக்கவில்லை என்றார் கமாலினி முகர்ஜி. 'வேட்டையாடு விளையாடு', 'காதல்னா சும்மா இல்ல' படங்களில் நடித்த கமாலினி முகர்ஜி கூறியதாவது: கோலிவுட்டில் இரண்டு படங்களில் நடித்தேன். டோலிவுட்டில் நிறைய படங்களில் நடித்து வந்தேன். மலையாளத்தில் 'நேதோலி செரியா மீன் அல்ல' படத்தில் நடிக்கிறேன்.

இது பன்முகம் கொண்ட கதாபாத்திரம். சமீபத்தில் டோலிவுட்டில் 'ஷிருடி சாய்' படத்தில் நாகார்ஜூனாவுடன் நடித்தேன். ஷிருடி பக்தையான நான் இதில் நடித்தது மகிழ்ச்சி. ஒரு நடிகையாக என்னை பிரபலப்படுத்திக் கொள்ளாமல் அடக்கியே வாசித்தேன். எனக்கு மேனேஜர்கள் கிடையாது. வாய்ப்பு வேண்டும் என்று கேட்டு யாரிடமும் கெஞ்சியதில்லை. முந்தைய படங்களில் நடித்ததை வைத்தே அடுத்தடுத்த படங்கள் எனக்கு வந்திருக்கின்றன.

நான் வங்காளப் பெண். ஆனாலும் நடிகையாகி 7 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் வங்காள மொழிப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. இந்தியில் ரேவதி இயக்கிய 'பிர் மிலிங்கே' என்ற படம் மூலம் அறிமுகமானேன். ஒரு நடிகையாக தென்னிந்திய படங்கள்தான் என்னை பிஸியாக வைத்திருக்கிறது. 'வெவ்வேறு மொழிகளில் நடிப்பது கஷ்டமா?'' என்கிறார்கள். அது எனக்கு கடினமாக தெரியவில்லை. அதை சவாலாக எடுத்துக்கொண்டேன். விரைவில் வங்காள மொழிப் படம் ஒன்றை இயக்க உள்ளேன். இவ்வாறு கமாலினி முகர்ஜி கூறினார்.
 

கௌதமிடம் வாய்ப்பு கேட்ட பவர் ஸ்டார்?

Power star asked for a chance to Gautam menon?

இது நம்ம பவர் ஸ்டார் பற்றிய சூடு பறக்கும் செய்தி...பவர் ஸ்டார் எனப்படும் டாக்டர் சீனிவாசன், இயக்குனர் கௌதம் மேனனிடம் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளார். சந்தானம்-பவர் ஸ்டார் கூட்டணியில் விரைவில் வெளியாக இருக்கும் படம் 'கண்ணா லட்டு திண்ண ஆசையா?'. இந்த படத்தின் காட்சிகளை, சந்தானம் தன்னுடைய நெருங்கிய நண்பரான சிம்புவிடம் போட்டுக் காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது சிம்புவுடன் கௌதம் மேனனும் காட்சியை பார்த்தாகவும், அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி பவர் ஸ்டார் சீனிவாசன், கௌதம் மேனன் படத்தில் வாய்ப்பு கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

ஷங்கரின் அடுத்த படம் ரெடி

Shankar''s next film Ready

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் அடுத்த படம் ரெடியாகிவிட்டது. இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெயில், காதல், இம்சை அரசன் 23ம் புலிகேசி. மற்றும் ஈரம் போன்ற படங்கள் மிக பெரிய வெற்றி பெற்றது. வளரும் இயக்குனர்களுக்கு வாய்ப்பு வழங்கும் இயக்குனர்களில் ஷங்கரும் ஒருவர். ஆனால் சமீபகாலமாக தனது தயாரிப்பை தள்ளி வைத்த ஷங்கர் தற்போது மீண்டும் ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார். சமீபத்தில், புதுமுக இயக்குனர் ராஜமுருகனிடம் கதை கேட்ட ஷங்கர், உடனே ஓகே என்று சொல்லிவிட்டாராம். ராஜமுருகனின் கதையை கேட்டு, வியந்து போன ஷங்கர், விரைவில் படத்தை தொடங்கலாம் என பச்சைகொடி காட்டிவிட்டாராம். இந்த படத்தில் ஹீரோவாக, ஹீரோயினாக யார் நடிக்க போகிறார்கள் என்பது விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.