தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி மையத்திற்கு சூர்யா ரூ.6 லட்சம் நன்கொடை

தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி மையத்திற்கு சூர்யா ரூ.6 லட்சம் நன்கொடை

சென்னை: தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி மையத்திற்கு (டேங்கர் பவுன்டேஷன்) டயாலிசிஸ் இயந்திரங்கள் வாங்க நடிகர் சூர்யா ரூ. 6 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.

கோவை மாவட்டம் சூளூரில் தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி மையம் (டேங்கர் பவுன்டேஷன்) சார்பில் ஆர்விஎஸ் மருத்துவமனையில் இலவச டயாலிசிஸ் மையம் அமைக்கப்பட்டது. இந்த மையத்தை நடிகர் சூர்யா திறந்து வைத்தார்.

அந்த நிகழ்ச்சியின்போது டயாலிசிஸ் இயந்திரங்கள் வாங்க சூர்யா ரூ.6 லட்சம் நன்கொடையாக அளித்தார்.

டேங்கர் பவுன்டேஷன் கடந்த 1993ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த பவுன்டேஷன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

நடிகை ரீமா கல்லிங்களுக்கு திருமணம் - இயக்குநர் ஆஷிக் அபுவை மணக்கிறார்!

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகையும், யுவன் யுவதி தமிழ்ப் படத்தில் நடித்தவருமான ரீமா கல்லிங்கல் காதல் திருமணம் செய்கிறார். முன்னணி மலையாள இயக்குநர் ஆஷிக் அபுவை அவர் மணக்கிறார்.

அடுத்த மாதம் இந்தத் திருமணம் நடக்கிறது.

ரீமா கல்லிங்கல் தமிழில் 'யுவன் யுவதி' படத்தில் பரத் ஜோடியாக நடித்தார். ஜீவாவின் 'கோ' படத்திலும் கவுரவ தோற்றத்தில் தோன்றினார்.

நடிகை ரீமா கல்லிங்களுக்கு திருமணம் - இயக்குநர் ஆஷிக் அபுவை மணக்கிறார்!

மலையாளத்தில் முன்னணி நடிகை இவர்.

ரீமா கல்லிங்கலுக்கும் மலையாள இயக்குநர் ஆஷிக் அபுவுக்கும் ரொம்ப நாளாகக் காதல் இருந்தது.

ஆஷிக் அபு ஏற்கனவே மம்முட்டியை வைத்து 'டாடி கூல்' என்ற படத்தை இயக்கினார். 'சால்ட் இன் பெப்பர்', '22 பீமெல் கோட்டயம்' போன்ற ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக உள்ளார்.

'22 பிமெல் கோட்டயம்' படத்தில் கதாநாயகியாக ரீமா கல்லிங்கல் நடித்தார். அப்போதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்ததாம். இந்தத் திருமணம் குறித்து ஆஷிக் அபு கூறுகையில், "ரீமா கல்லிங்கலும் நானும் காதலிப்பது உண்மைதான். படப்பிடிப்பில் தான் எங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. காதலுக்கு பெற்றோர் சம்மதத்தை பெற காத்து இருந்தோம். இப்போது சம்மதம் கிடைத்து விட்டது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் திருமணம் நடக்கும்," என்றார்.

ஒப்புக் கொண்டுள்ள படங்களை திருமணத்துக்குப் பின்னரும் தொடர்ந்து நடித்துக் கொடுக்கப் போவதாக ரீமா தெரிவித்துள்ளார்.

 

தமிழ் சினிமாவில் டிசிப்ளின்டு லேடி குஷ்புதான்! - கேயார்

சென்னை: தமிழ் சினிமாவில் ரொம்ப டிசிப்ளின்டு லேடின்னா அது குஷ்புதான் என்றார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார்.

விஷால் நடித்து தயாரித்துள்ள பாண்டிய நாடு படத்தின் இசை வெளியீடு சென்னை சத்யம் திரையரங்கில் நேற்று நடந்தது.

தமிழ் சினிமாவில் டிசிப்ளின்டு லேடி குஷ்புதான்! - கேயார்

இதில் பங்கேற்ற தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் பேசுகையில், "விஷால் இன்னிக்கு இருக்கிற ஹீரோக்கள்ல ரொம்ப திறமையானவர். தன் ஆரம்ப நாட்கள்லேயே தன் படத்துக்கு திமிருன்னு பெயர் வச்சவர் அவர். திறமைக்கேற்ற திமிர்தான் அவருக்கு உள்ளது. அதுதான் அவரை சினிமாவில் ஜெயிக்க வச்சிருக்கு.

விஷால் ரொம்ப போராடி தன் இடத்தை தக்க வச்சிருக்கார். அவர் குடும்பம் முழுவதுமே சினிமாவை தொழிலாகக் கொண்டவர்கள். அதனால்தான் விஷாலுக்கு பக்க பலமா இருக்காங்க.

தன் சொந்தப் பணத்தை தயாரிப்பில் போட்டு தன் திறமையை நிரூபிக்க களமிறங்கியிருக்கிறார். அவர் இந்தப் படத்துல ஜெயிக்கணும்...

இந்த தீபாவளியைப் பொறுத்த வரை எனக்கு சின்ன உறுத்தல் என்னன்னா, தியேட்டர்கள் பிரச்சினைதான்.

இந்த தீபாவளிக்கு பாண்டியநாடு, ஆரம்பம், ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய 3 படங்கள் ரிலீஸாகுது. இதுல ஆரம்பம் படத்தோட தயாரிப்பாளர் ஏம்.எம் ரத்னம்கிட்ட அவர் படத்தை 2 வாரம் தள்ளி ரிலீஸ் பண்ணலாமேன்னு சொன்னேன். அப்போதான் அவங்க எதிர்ப்பார்க்கிற தியேட்டர் கிடைக்கும். ஆனா இப்போ இருக்கிற சூழ்நிலையில அது முடியாதுன்னு எனக்கும் புரியுது.

ஒருகாலத்துல தமிழ்நாட்டுல 2800 தியேட்டர்கள் இருந்தது, இப்போ வெறும் 1043 தியேட்டர்கள் தான் இருக்கு. அதிலேயும் 320 மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களாகிடுச்சி.

மத்ததெல்லாம் சிங்கிள் ஸ்கிரீன்ஸ். இப்போ வெளியாகிற இந்த மூணு படங்களுமே பெரிய படங்கள். மூணு படங்களுமே சக்சஸ் ஆகணும். இதுதான் எல்லாரோட ஆசை. ஆனா தியேட்டர்கள் கம்மியா இருக்கிற இந்த சூழ்நிலையில மூணு படங்களுமே வெளியாவது கொஞ்சம் சங்கடமாகத்தான் உள்ளது.

தமிழ் சினிமாவில் டிசிப்ளின்டு லேடி குஷ்புதான்! - கேயார்

குஷ்பு..

இந்த விழாவில் குஷ்புவைப் பார்த்ததும், அவங்களைப் பத்தி சில விஷயங்கள் சொல்ல ஆசைப்பட்டேன். சினிமா இன்டஸ்ட்ரில ஒரு டிசிப்ளின் லேடின்னா குஷ்புவைத்தான் சொல்வேன்.

ஏன்னா அவங்களுக்கு லோ பி.பி இருக்கு. நான் அவங்களை வெச்சு 6 படங்கள் டைரக்ட் பண்ணியிருக்கேன். பி பி. நேரத்தில் அவங்க சோர்வா படுத்திருப்பாங்க. ஆனா ஷாட் ரெடின்னு சொன்ன உடனே கேமாராவுக்கு முன்னால வந்து நின்னுடுவாங்க.

அதேமாதிரி அவங்க நடிக்கிற படமா இருந்தாலும் சரி, இல்லாத படமா இருந்தாலும் சரி, ஃபங்ஷன்னு கூப்பிட்டா கண்டிப்பாக வந்திடுவாங்க. அதான் அவங்க கமிட்மென்ட். புது நடிகைகள் அவங்ககிட்ட இதை கத்துக்கணும்," என்றார்.

 

ஆரம்பம் படத்துக்கு நான் தயாரிப்பாளரே இல்லீங்க! - ஏஎம் ரத்னம் தடாலடி

ஆரம்பம் படத்துக்கு நான் தயாரிப்பாளரே இல்லீங்க! - ஏஎம் ரத்னம் தடாலடி

சென்னை: அஜீத் நடித்து தீபாவளிக்கு வரவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆரம்பம் படத்துக்கு நான் தயாரிப்பாளரே அல்ல, என்று தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் அறிவித்துள்ளார்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள ஆரம்பம் படத்துக்கு திடீர் சிக்கல் எழுந்துள்ளது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் தன்னிடம் ரூ 1.50 கோடியை சில ஆண்டுகளுக்கு முன் வாங்கி கேடி படத்தை தயாரித்தாகவும், அந்த பாக்கியை இன்னும் திருப்பித் தராததால், வட்டியும் முதலுமாக சேர்ந்து ரூ 4.60 கோடி யாகிவிட்டதாகவும் அதைத் தராமல் படத்தை வெளியிடக் கூடாது என்றும் கூறி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் ஏஎம் ரத்னத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு பதிலளித்துள்ள ஏ.எம்.ரத்னமோ, "இந்த படத்தின் தயாரிப்பாளார் நான் இல்லை. ஏ.ரகுராம் என்பவர்தான் சத்ய சாய் மூவிஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கிறார். தயாரிப்பில் எனக்கு தொடர்பில்லை," என்றும் பதில் அளித்துள்ளார்.

 

முன்னழகை கூட்ட ஆபரேஷன் செய்தாரா ஸ்ரீதேவி?

மும்பை: நடிகை ஸ்ரீதேவி அறுவை சிகிச்சை மூலம் தனது முன்னழகை பெரிதாக்கியுள்ளார் என்று பெயர் தெரிவிக்க விரும்பாத நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்று அங்கேயே செட்டிலானவர் சிவகாசி மயிலு ஸ்ரீதேவி. நீண்ட காலமாக பெரிய திரையில் காணப்படாத அவர் இங்கிலிஷ் விங்கிலிஷ் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இதையடுத்து பல்வேறு பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் ஸ்ரீதேவி பெரும்பாலும் மாடர்ன் டிரஸ் தான் அணிந்து வருகிறார். அவ்வாறு அவர் மாட்ர்ன் டிரஸ் போடுகையில் அவரது முன்னழகு முன்பை விட பெரிதாகத் தெரிகிறது.

முன்னழகை கூட்ட ஆபரேஷன் செய்தாரா ஸ்ரீதேவி?

இந்நிலையில் இது குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத நடிகை ஒருவர் கூறுகையில்,

பொது நிகழ்ச்சிகளுக்கு ஸ்ரீதேவி மிகவும் அழகாக வருகிறார். அவரது முன்னழகு முன்பை விட மிகவும் பெரியதாக உள்ளது. அவர் வெயிட் போட்ட மாதிரி தெரியவில்லை. அதனால் அவர் அறுவை சிகிச்சை மூலம் முன்னழகை பெரிதுபடுத்தி இருக்கலாம் என்றார்.

 

இனி தம் சீன்களுக்கு கட்- இயக்குநர் ராஜேஷ்

சென்னை: இனி என் படங்களில் தம்மடிக்கிற மாதிரி காட்சிகளே இருக்காது என இயக்குனர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து காமெடி படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்தவர்தான் ராஜேஷ். இதுவரை இவர் இயக்கிய மூன்று படங்களிலும் டாஸ்மாக் பார் காட்சிகள்தான் முக்கிய பங்கு வகித்தன.

இனி தம் சீன்களுக்கு கட்- இயக்குநர் ராஜேஷ்

காரணம், இவருடைய படங்கள் அனைத்தும் இளைஞர்களை குறிவைத்து எடுக்கப்படுவதால் மது, சிகரெட் போன்றவைதான் தவறாமல் இடம்பெறுகின்றன.

இப்போது தீபாவளியை முன்னிட்டு ராஜேஷ் இயக்கிய ஆல் இன் ஆல் அழகுராஜா படம் திரைக்கு வருகிறது.

இந்தப் படத்துல புகைப் பிடிப்பது போன்ற காட்சிகளே இடம் பெறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாராம் ராஜேஷ்.

இது குறித்து படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் ராஜேஷ், "இந்தப் படத்துலேயும் தம்மடிக்கிற, தண்ணியடிக்கிற சீன்ஸ் இருக்குமா?ன்னு நெறைய பேர் கேட்டாங்க, அந்தளவுக்கு என்னோட படம்னாலே அதுல இந்த ரெண்டுமே இருக்கும்னு முடிவு பண்ணிட்டாங்க...

ஆனா நல்லவேளையா இந்தப் படத்துல தம்மடிக்கிற காட்சி ஒண்ணு கூட இல்ல, ஏன்னா கதைப்படி அந்தமாதிரி காட்சிகளே தேவைப்படல. அதுமட்டுமில்லாமல் இனிமே என்னோட படங்கள்ல தம்மடிக்கிற சீன்களே இல்லாத மாதிரி காட்சிகள் அமைக்கப் போறேன்," என்றார் அவர்.

 

அஜீத்தின் 'ஆரம்பம்'... வழக்கு படலம் ஆரம்பம்... திட்டமிட்டபடி படம் வருமா?

அஜீத்தின் 'ஆரம்பம்'... வழக்கு படலம் ஆரம்பம்... திட்டமிட்டபடி படம் வருமா?

சென்னை: தீபாவளிக்கு முன்கூட்டியே வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்ட அஜீத்தின் ஆரம்பம் படத்துக்கு, எதிர்ப்பார்த்தபடியே வழக்குகளும் ஆரம்பமாகிவிட்டன.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் தனக்கு வட்டியுடன் சேர்த்து ரூ 4.6 கோடி தர வேண்டியிருப்பதாக சென்னை, ஷெனாய் நகரைச் சேர்ந்த பி.ராஜேஸ்வரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனு விவரம்:

எனது மகன் பி.ஆனந்தகிருஷ்ணன் சார்பில் இந்த மனுவை நான் தாக்கல் செய்துள்ளேன். சினிமா தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கடந்த 2005-ஆம் ஆண்டு மே மாதம் 11-ஆம் தேதி, 'கேடி' என்ற திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக எனது மகனிடமிருந்து ரூ. 1.50 கோடி கடன் வாங்கினார்.

இந்தப் பணத்தை 2006-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருப்பித் தருவதாக அவர் வாக்குறுதி அளித்தார். ஆனால், அவர் கூறியபடி பணத்தைத் திருப்பித் தரவில்லை.

தற்போது நடிகர்கள் அஜித், நயன்தாரா, ஆர்யா உள்பட பலர் நடித்துள்ள 'ஆரம்பம்' திரைப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். வரும் தீபாவளியன்று இந்தப் படத்தை வெளியிடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், என் மகனிடம் இருந்து வாங்கிய கடன் ரூ. 1.50 கோடி மற்றும் அதற்குரிய வட்டித் தொகையுடன் சேர்த்து ரூ. 4.60 கோடி தரவேண்டும் என அக்டோபர் 5-ஆம் தேதி அவருக்கு நோட்டீஸ் அனுப்பினோம். அந்த நோட்டீஸூக்கு இதுவரை பதில் அளிக்கவில்லை.

அதனால், என் மகனிடம் வாங்கிய கடனை திருப்பித் தராமல் 'ஆரம்பம்' படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

மனுதாரர் சார்பில் வழக்குரைஞர்கள் நித்தேஷ் நட்ராஜ், வைபவ் ஆர்.வெங்கடேஷ் ஆகியோர் ஆஜராகினர்.

இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு இரண்டு வாரத்துக்குள் பதில் அளிக்க ஏ.எம்.ரத்னத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை அக்டோபர் 25-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

அக்டோபர் 31-ம் தேதி ஆரம்பம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, தியேட்டர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்ட நிலையில் இந்த புதிய நெருக்கடி எழுந்துள்ளது.

 

'ஆண்ட்ரியாதான் சிம்புவுக்கு சரியான ஜோடி!'

சிம்புவுக்கு சரியான ஜோடி ஆன்ட்ரியாதான் என்று கூறியுள்ளார் விடிவி கணேஷ்.

'விண்ணைத் தாண்டி வருவாயா ' படத்தில் சிம்புவிடம் இங்க என்ன சொல்லுது என்ற கேள்வியை கேட்டுப் பிரபலமானவர் கணேஷ்.

அந்த படத்தில் துவங்கிய இவர்களது நட்பு , இப்போது கணேஷ் தயாரிக்கும் ' இங்க என்ன சொல்லுது' படம் வரை தொடர்ந்து, சிம்புவின் ஈடுப்பாட்டால் அந்த படத்தை பெரிய படமாக்கும் வரை நீடித்து வருகிறது.

இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் தேர்வு நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இதுவரை வந்திராத ஜோடியாக இருக்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளரான கணேஷ் எண்ணத்துக்கு ஏற்ப தேர்வு நடந்தது . இறுதியில்சிம்பு ஜோடியாக ஆண்ட்ரியா தேர்ந்து எடுக்கபட்டார்.

'ஆண்ட்ரியாதான் சிம்புவுக்கு சரியான ஜோடி!'

இந்த ஜோடி தேர்வை பற்றி கணேஷ் கூறும் போது, 'சிம்புவும் ஆண்ட்ரியாவும் மிக சரியான ஜோடி. என் கணிப்பில், என் பார்வையில் அவர்களது ஜோடி ஒரு உற்சாகமான ஜோடியாகவே தெரிகிறது . ரசிகர்களுக்கு இந்த ஜோடியை ரொம்பவே பிடிக்கும் . இந்த கதாபாத்திரமும் அவர்களுக்கெனவே படைத்தது போலவே பொருத்தமாக இருக்கிறது . படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்தது , இறுதிகட்ட பணிகள் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது .இந்த மாத இறுதியில் படத்தை முடித்து பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறேன்," என்கிறார் .

'ஆண்ட்ரியாதான் சிம்புவுக்கு சரியான ஜோடி!'

இங்க என்ன சொல்லுது படத்தை வின்சென்ட் செல்வா இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார்.

மீரா ஜாஸ்மின், சொர்ணமால்யா, சந்தானம், பாண்டியராஜன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

 

ஜில்லா படத்தின் கேரளா உரிமையை வாங்கிய மோகன் லாலின் ஆசிர்வாத் சினிமாஸ்

ஜில்லா படத்தின் கேரளா உரிமையை வாங்கிய மோகன் லாலின் ஆசிர்வாத் சினிமாஸ்

சென்னை: விஜய் நடிக்கும் ஜில்லா படத்தின் கேரளா உரிமையை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் வாங்கியுள்ளார்.

ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில் நேசன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ஜில்லா. மதுரைக்காரராக வரும் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் காஜல் அகர்வால். இந்த படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.

அவரின் தந்தையாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிக்கிறார். மோகன் லால் படத்தில் தாதாவாக நடிக்கிறார். நீண்ட காலம் கழித்து பூர்ணிமா பாக்யராஜ் இந்த படம் மூலம் ரீ என்ட்ரி ஆகிறார்.

பொங்கலுக்கு ஜில்லா ரிலீஸ் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. இந்நிலையில் ஜில்லா படத்தின் கேரளா உரிமையை வாங்க கடும் போட்டி நடந்தது. அதில் இறுதியாக மோகன் லாலின் ஆசீர்வாத சினிமாஸ் உரிமையை வாங்கியுள்ளது.

விஜய் படங்களுக்கு கேரளாவில் எப்பொழுதுமே மவுசு உண்டு. இந்நிலையில் இந்த படத்தில் மோகன் லாலும் நடித்திருப்பதால் ஜில்லாவுக்கு கேரளாவில் கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

அறியாமை, அரசியல் போன்றவைதான் விஸ்வரூபம் எதிர்ப்புகளுக்கு காரணம்! - கமல்

அறியாமை, அரசியல் போன்றவைதான் விஸ்வரூபம் எதிர்ப்புகளுக்கு காரணம்! - கமல்

சென்னை: அறியாமை, அரசியல் போன்றவைதான் விஸ்வரூபத்துக்கு வந்த எதிர்ப்புகளுக்குக் காரணம், என்று நடிகர் கமல்ஹாஸன் கூறியுள்ளார்.

விஸ்வரூபம் படத்தை எடுத்து, பெரும் தடைகளுக்குப் பிறகு வெளியிட்டார் கமல். அந்த தடைகள், எதிர்ப்புகளே அப்படத்துக்கு பெரும் விளம்பரங்களாகவும் அமைந்தன.

இந்த நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடும் முயற்சியில் உள்ளார் கமல்.

இப்படத்துக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவேன் என கமலும் தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் 2-ம் பாகத்துக்கும் பெரிய எதிர்ப்புகள் வரும் என எதிர்ப்பார்க்கிறீர்களா என அவரிடம் சமீபத்தில் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல், "விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும்.

இந்த படம் பணத்தையும் பாராட்டையும் அள்ளித் தரும் என் நம்பிக்கை உள்ளது. விஸ்வரூபம் படத்தின் முதல் பாகத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அறியாமை, அரசியல், போன்ற காரணங்களால் அவை நிகழ்ந்தன.

அந்த அனுபவங்களில் இருந்து இந்த படத்தை எடுத்துள்ளேன். இந்த முறை சர்ச்சைகள் இருக்காது. அறிவுப்பூர்வமாக அணுகுவார்கள் என நம்புகிறேன்," என்றார்.

 

'குறைந்த வயதுள்ள எனக்கு இந்த விருது ஏன்...?' - சர்வதேச விருதை ஏற்க கமல் தயக்கம்

'குறைந்த வயதுள்ள எனக்கு இந்த விருது ஏன்...?' - சர்வதேச விருதை ஏற்க கமல் தயக்கம்

சென்னை: வயதான கலைஞர்களுக்கு தரும் விருது குறைந்த வயதுடைய எனக்கு எதற்கு என்று கூறி, ஒரு சர்வதேச விருதை திருப்பித் தரப் போகிறாராம் நடிகர் கமல்ஹாஸன்.

அது மும்பையில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட உள்ள வாழ்நாள் சாதனையாளர் விருது.

பொதுவாக இந்த விருது வயதான மூத்த நடிகர்களுக்குத்தான் இதுவரை வழங்கப்பட்டு வந்ததாம். இந்த முறை கமல் ஹாஸன் இந்திய சினிமாவுக்கு செய்த சாதனைகளுக்காக இந்த விருதினை அவருக்குத் தர முடிவு செய்து, அறிவித்துள்ளனர் விழாக் குழுவினர்.

இந்த விருதை ஏற்கலாமா வேண்டாமா என யோசனையில் உள்ளார் கமல்.

இது குறித்து கமல் கூறுகையில், "இந்த விருதை பெற எனக்கு தகுதி இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை.

ஆனாலும் விருதுக்கு என்னை பரிந்துரை செய்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இது எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். இன்னும் உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டி விடுவதாகவும் இருக்கும்.

அதே நேரம் வயதான நடிகர்களுக்கு கொடுக்கும் இந்த விருதை வயது குறைந்த இந்தக் கமலஹாசனுக்கு கொடுக்கலாமா என்று பேசுபவர்களுக்கு நான் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

நீங்கள் கொஞ்சம் பொறுத்திருங்கள்.... இந்த விருதை வேண்டாம் என்று மறுக்கவும் வேறு வயதான நடிகர்களுக்கு கொடுங்கள் என்று சிபாரிசு செய்யவும் நான் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

சினிமாவில் உதவி நடன இயக்குனராக பணியாற்றியதில் இருந்து நிறைய கற்றுக் கொண்டு வருகிறேன். அந்த வகையில் இப்போதும் நான் மாணவன்தான்.

விரைவில் புதிய இந்திப் படங்களில் நடிக்கத் திட்டமிட்டுள்ளேன்," என்றார்.

 

நய்யாண்டி- விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
2.5/5

நடிப்பு: தனுஷ், நஸ்ரியா நஸீம், சூரி, ஸ்ரீமன், நரேன், பிரமிட் நடராஜன், சத்யன்

இசை: ஜிப்ரான்

ஒளிப்பதி: வேல்ராஜ்

தயாரிப்பா: எஸ் கதிரேசன்

இயக்கம்: சற்குணம்

இப்போதெல்லாம் ஓரிரு படங்களிலேயே இயக்குநர்களின் 'ஸ்டஃப்' தீர்ந்து விடுகிறதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது சற்குணத்தின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் நய்யாண்டி படம்!

களவாணி, வாகை சூட வா என முதலிரு படங்களிலும் வித்தியாசம் காட்டிய சற்குணம், நய்யாண்டியை இரண்டாம் தர இயக்குநர் ஒருவர் திக்கித் திணறித் தரும் அறிமுகப் படம் மாதிரி தந்திருக்கிறார்.

ஹீரோ தனுஷைப் பொறுத்தவரை அவரது பட எண்ணிக்கையில் ஒன்றைக் கூட்ட இந்கப் படம் உதவியிருக்கிறது என்பதைத் தவிர சொல்ல ஒன்றுமில்லை. ஆடுகளத்துக்குப் பிறகு, பெரிய வெற்றிப் படம் எதையும் தமிழில் தனுஷ் தரவே இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

நய்யாண்டி- விமர்சனம்

தனுஷ் போன்ற நடிகர்கள் கருத்து சொல்வதில் உள்ள கவனத்தை தனக்கான கதைத் தேர்வில் காட்டினால் நன்றாக இருக்கும்.

இனி நய்யாண்டி படத்தின் கதை...

ஒரு கிராமத்துத் திருவிழாவுக்குப் போகும் தனுஷ் அங்கு நஸ்ரியாவைப் பார்க்கிறார். தமிழ் சினிமா வழக்கப்படி காதல். ஆனால் நஸ்ரியா முரண்டுபிடிக்க, தனுஷுக்குள் இருக்கும் 'ரொம்ப்ப நல்லவனை' கொஞ்சம் வெளியில் விடுகிறார். ஒரு நாளிரவு பனைமரத்தில் கள்ளடித்துவிட்டு அப்படியே அடுத்த மரத்துக்கு தாவுகிறார். இதை ஒளிந்திருந்து நஸ்ரியா பார்க்க, அடுத்த காட்சியிலேயே கட்டிப்பிடித்து காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு நெருக்கடியான சூழலில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இப்போது சிக்கல், தனுஷின் திருமணமாகாத முதிர் அண்ணன்கள் ரூபத்தில். இவர்களை வைத்துக் கொண்டு தான் திருமணம் செய்துகொண்டதைச் சொன்னால் சரியாக இருக்காதே என்று, தன் வீட்டுக்கே நஸ்ரியாவை, அநாதைப் பெண்ணாக நண்பன் சூரி மூலம் அனுப்பி வேலைக்கு சேர்த்துவிடுகிறார் தனுஷ்.

சில பல கலாட்டாக்களுக்குப் பிறகு, உண்மையைச் சொல்லி எப்படி சுமுகமாகிறார்கள் என்பதுதான் நய்யாண்டி.

க்ளைமாக்ஸ் உள்பட பல காட்சிகள் ஏற்கெனவே பல படங்களில் பார்த்த மாதிரிதான் உள்ளன. இந்த லட்சணத்தில் மூலக்கதை என ஒரு மலையாளப் படத்துக்கு கிரெடிட் வேறு!

நய்யாண்டி- விமர்சனம்

தனுஷுக்கு பெரிதாக வேலை எதுவும் இல்லை. அப்பாவின் பாத்திரக் கடையில் வேலை, நண்பர்களுடன் ஜாலியாக சுற்றிக் கொண்டு, நஸ்ரியாவுக்காக மரம் விட்டு மரம் தாவி, அடியாட்களுடன் சண்டை போட்டு... எதுவும் புதுசில்லை. கதைக்காக பெரிதாக மெனக்கெடுவதாகச் சொல்லிக் கொள்ளும் தனுஷ், இப்படியொரு கதையைத் தேர்வு செய்தது ஏன் என்று புரியவில்லை.

தனுஷால் சற்குணம் கெட்டாரா... சற்குணத்தால் தனுஷ் கெட்டாரா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

நஸ்ரியா... இந்தப் படத்தில் சுமாராகத்தான் தெரிகிறார். அதுவும் தனுஷுடன்... ஆழாக்கும் ஒல்லிக்குச்சியும் மாதிரிதான் இவர்களின் பொருத்தம் உள்ளது. மற்றபடி, சில காட்சிகளில் இயல்பான நடிப்பு தெரிகிறது (கடைசி காட்சி வரை இடுப்புக்கு மேல் ஒரு துணி, அதற்கும் மேல் தலைப்பாகட்டு மாதிரி ஒரு துணி சுற்றிக் கொண்டுதான் நஸ்ரியா வருகிறார். இதில் தொப்புளும், இஸ்லாமும் எங்கே வந்தன என்றுதான் தெரியவில்லை!!).

ஸ்ரீமனும் சத்யனும் இடைவேளைக்குப் பின் கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள்.

நய்யாண்டி- விமர்சனம்

நஸ்ரியாவின் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்ற பிரச்சினையில், எதற்கும் சின்ன வண்டை கேளுங்கப்பா என ஸ்ரீமன் கூற, 'அவன் பச்ச மண்ணுடா' என பிரமிட் நடராஜன் சொல்லும் காட்சியில், எல்லா குறைகளையும் மறந்து கலகலக்கிறது தியேட்டர்.

தனுஷின் நண்பனாக வரும் பரோட்டா சூரிக்கு, ஒரே மாதிரி வேடம், ஒரே மாதிரி டயலாக் என்றாகிவிட்டது.

அவ்வளவு பெரிய கோடீஸ்வரரான நஸ்ரியா அப்பா நரேன், ஒரு சுண்டைக்காய் வில்லன் காலில் விழுந்து கதறுவதும், திருமணமாகி கர்ப்பமாகவும் உள்ள பெண்ணைப் போய் தூக்கிக் கொண்டு வில்லன் பறப்பதும்... ம்ஹூம்.. முடியல!

நய்யாண்டி- விமர்சனம்

வேல்ராஜினி ஒளிப்பதிவு நன்றாகத்தான் உள்ளது. இந்தப் படத்துக்கெல்லாம் எதுக்குங்க பாரின் ஸாங் என்று அவராவது இயக்குநரிடம் கேட்டிருக்கலாம்.

பாடல்கள் பெரிதாக நினைவில் இல்லை. பின்னணி இசை என்றெல்லாம் ரொம்ப மெனக்கெடவில்லை ஜிப்ரான்.

தேசிய விருது பெற்ற நடிகர், இயக்குநர்... இருவருமே தங்களைத் தாங்களே நய்யாண்டி செய்து கொள்ள இப்படியொரு படமெடுத்திருக்கிறார்கள் போல!


 

பரோலை மேலும் 2 வாரம் நீட்டியுங்கள் - சஞ்சய் தத் மனு

பரோலை மேலும் 2 வாரம் நீட்டியுங்கள் - சஞ்சய் தத் மனு

மும்பை: தனது பரோலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என நடிகர் சஞ்சய் தத் மனு தாக்கல் செய்துள்ளார்.

1993-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில், சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்தாக நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சஞ்சய்தத் ஏற்கனவே 18 மாதம் ஜெயில் தண்டனை அனுபவித்துவிட்டதால், மீதியுள்ள 42 மாத கால தண்டனையை அனுபவிக்க சிறையில் அடைக்கப்பட்டார்.

முதலில் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருந்த அவர் பின்னர் பாதுகாப்பு கருதி புனே ஏர்வாடா மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். மருத்துவ காரணங்களுக்காக பரோலில் விடுவிக்க கோரி சஞ்சய்தத் கடந்த 1-ந் தேதி மனு செய்தார்.

இதை தொடர்ந்து அவர் 14 நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்டார். அவரது பரோல் இன்றுடன் முடிந்தது. இந்த நிலையில் பரோலை மேலும் 2 வாரத்திற்கு நீட்டிக்க கோரி சஞ்சய்தத் மனுதாக்கல் செய்துள்ளார். மருத்துவ காரணங்களுக்காக நீட்டிக்குமாறு அவர் கேட்டுள்ளார்.

 

நடிகர் பிரபு இனி 'டாக்டர்' பிரபு... ஐசரி கணேஷ் கொடுத்திட்டாருல்ல!

நடிகர் பிரபு இனி 'டாக்டர்' பிரபு...  ஐசரி கணேஷ் கொடுத்திட்டாருல்ல!

சென்னை: நடிகர் பிரபுவுக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது ஐசரி கணேஷின் வேல்ஸ் பல்கலைக்கழகம்.

சென்னையை அடுத்த பழைய பல்லாவரத்தில் உள்ளது இந்த வேல்ஸ் பல்கலைக்கழகம். இதன் 4-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில்தான் இந்த விருது வழங்கப்பட்டது.

விழாவிற்கு பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் தலைமை தாங்கினார். துணைவேந்தர் கே.சேகர் வரவேற்றார். இந்திய அரசின் சுகாதார ஆராய்ச்சி துறை செயலாளரும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக இயக்குநருமான டாக்டர் விஸ்வமோகன் கட்டோச் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் நடிகர் பிரபு, விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் எஸ்.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொது செயலாளர் கே.முருகன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வேந்தர் ஐசரிகணேஷ் வழங்கினார்.

விழாவில் 1,600 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.