'வெண்ணிலாவின் அரங்கேற்றத்தி்ல' நித்தியானந்தா?

 

அசின் 27 வது பிறந்தநாள் - அக்ஷய்குமார் வாழ்த்து

Asin Devoid Time Celebrate Her 27th Birthday   

மும்பை : பிரபல நடிகர் நடிகையர்கள் பிறந்தநாளை ஸ்டார் ஹோட்டலில் கொண்டாடுவார்கள். ஆனால் நடிகை அசின் தனது பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியுள்ளார்.

‘கில்லாடி 786' பட ஷூட்டிங்கில் மும்பை திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது. அதில் பிஸியாக உள்ள அசின் தனது 27-வது பிறந்தநாளை சூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடினார். படத்தின் ஹீரோ அக்ஷய் குமார் பூங்கொத்து கொடுத்து அசினுக்கு வாழ்த்து கூறினார்.

பிறந்த நாளினை எளிமையாக கொண்டாடியது ஏன் என்று கூறிய அசின், டிசம்பர்மாதம் தன்னுடைய படம் ரிலீசாக இருப்பதால் அதற்காக தூக்கத்தை கூட தியாகம் செய்து நடித்து வருவதாக கூறியுள்ளார். பிறந்தநாளுக்காக லீவ் எடுத்தால் சூட்டிங் பாதிக்கப்படும் என்று கூறிய அசின், தன்னுடைய பெற்றோர் மும்பையில் தன்னுடனே வசித்து வருவதால் சூட்டிங் முடிந்த உடன் அவர்களுடன் சந்தோசமாக பிறந்தநாள் கொண்டாட உள்ளதாக கூறியுள்ளார்.

வேலை மேல அவ்ளோ பக்தியா அசின்?

 

15 பெண்களுக்கு இலவச திருமணம் - ஏற்பாடு ரசிகர்கள்... நடத்தி வைப்பது விஜய்!

Vijay Conduct Free Marriage

à®"சூர்: 15 ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கிறார் நடிகர் விஜய். à®"சூர் நகர, à®'ன்றிய தலைமை இளைய தளபதி விஜய் நற்பணி இயக்கம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

தங்கள் மன்றத்தின் 15-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இதில், நடிகர் விஜய் கலந்து கொண்டு, 15 ஏழைப் பெண்களுக்கு, 51 சீர்வரிசைகள் வழங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

நாளை காலை 8 மணி முதல் 11 மணிவரை விழா நடக்கிறது. விஜய் மக்கள் இயக்க நிறுவனரும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குகிறார்.

இயக்கத்தின் மற்ற நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். 15 ஏழை பெண்களுக்கு, சீர்வரிசைகளை வழங்கி திருமணத்தை நடத்துகிறார் விஜய்.

 

பிரபல டிவி தொடர் இயக்குநர் மனைவி தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது!

மும்பை,: பிரபல இந்தி டிவி தொடர் இயக்குநர் சுனில் அக்னிகோத்ரியின் மனைவி தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நாடு முழுவதும் பிரபலமான டிவி தொடர் ‘சந்திரகாந்தா'. தூர்தர்சனில் à®'ளிபரப்பான இந்த தொடரை இயக்கியவர் சுனில் அக்னிகோத்ரி. இவரது மனைவி அஞ்சலி அக்னிகோத்ரி(41). இவர்களுக்கு சித்தார்த்(21), ஆதிஷ்(19) என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் மும்பை புறநகர் பகுதியான பாலி கில், ஹர் பகுதியில் வசித்து வருகின்றனர். அஞ்சலியும் மூத்த மகன் சித்தார்த்தும் நேற்று வீட்டில் இருந்துள்ளனர். பின்னர் சித்தார்த் ஜிம்முக்கு சென்றுள்ளார். மாலை 4 மணியளவில் திரும்பி வந்து பார்த்தபோது அம்மா, படுக்கையில் மயங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அஞ்சலி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்த போலீசார், அஞ்சலியின் வீட்டை சோதனையிட்டனர். மாத்திரை பாட்டில் à®'ன்றை கண்டெடுத்தனர். 20 மாத்திரைகள் இருக்க வேண்டிய அந்த பாட்டிலில் 8 மாத்திரைகள் குறைவாக இருந்தன. அஞ்சலி அவற்றை சாப்பிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

வீட்டில் இருந்து அவர் எழுதிய à®'ரு கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் தான் குடும்பத்தினர் அனைவரையும் மிகவும் நேசிப்பதாகவும் தனது சாவுக்கு யாருமே காரணமில்லை, எனக்கு இந்த வாழ்க்கையை வாழப் பிடிக்கவில்லை என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

 

கந்து வட்டியின் கோரப்பிடியைச் சொல்லும் 'துட்டு!'

Thuttu Movie On Cruelty Interest Rates

கந்துவட்டியின் கோரப்பிடியை விளக்கும் வகையில் à®'ரு படம் தயாராகிறது. படத்துக்குப் பெயர் துட்டு!

பார்வை à®'ன்றே போதுமே, பேசாத கண்ணும் பேசுமே படங்களை இயக்கிய முரளிகிருஷ்ணா இந்தப் படத்தை இயக்குகிறார்.

தனிமனித வாழ்க்கையில் கந்து வட்டியின் கொடுமை பிரிக்க முடியாத à®'ரு அங்கமாகி விட்டது. ஏழ்மைச் சூழலை விரட்டியடிக்க கந்து வட்டிக்கு பணத்தை வாங்கி அதற்கு வட்டி கட்ட முடியாமல் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள் எத்தனையோ பேர்கள் உள்ளனர்.

இப்படி கந்து வட்டியின் கோரப்பிடியை மையமாக வைத்து முழுக்க முழுக்க ஆக்‌ஷன் மற்றும் காமெடி கலந்து எடுத்திருக்கிறார்களாம் துட்டு படத்தில்.

இப்படத்தில் ஹீரோவாக வேலை எதுவும் இல்லாமல், எதைப் பற்றியும் கவலைப்படாமல் வெறுமனே ஊரைச் சுற்றித் திரியும் à®'ரு சராசரி இளைஞனாக ஆரியன் ராஜேஷ் நடிக்கிறார்.

இவர் ஏற்கனவே தெலுங்கில் பல வெற்றிப்படங்களில் நடித்தவர். தமிழில் கவிதாலயா நிறுவனம் தயாரித்த 'ஆல்பம்' என்ற படத்தில் நடித்த ஆரியன் ராஜேஷ் ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது தமிழ்ப் படம் இது.

மும்பையைச் சேர்ந்த சோனா சோப்ரா ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர்களுடன் சீதா, கோட்டா சீனிவாசராவ், கஞ்சாகருப்பு, மனோபாலா, டெல்லிகணேஷ், 'நந்தா'சரவணன், 'பெசன்ட்நகர்' ரவி, நெல்லை சிவா, 'மூணாறு' ரமேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

முரளிகிருஷ்ணா இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு முதல்முறையாக படத்தில் 4 பாடல்களை எழுதி இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார்.

படத்தின் தயாரிப்பாளர் கோபால்ஜி சினிமாவுக்குள் வருவதற்கு முன்பாகவே ஏராளமான மேடை நாடகங்களில் நடித்தவர். இந்தப் படத்தை தயாரிப்பதோடு மட்டுமில்லாமல் படத்தில் சீதாவின் கணவராகவும் à®'ரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

 

பாலிவுட்டில் நடிக்க பொறுமை தேவை: விமலா ராமன்

Patience is required to act in Bollywood: Vimala Raman

பாலிவுட்டில் நடிப்பதற்கு பொறுமை வேண்டும் என்றார் விமலா ராமன்.

'பொய்', 'ராமன் தேடிய சீதை' படங்களில் நடித்திருப்பவர் விமலா ராமன். அவர் கூறியதாவது:
தமிழில் 2 படங்களில் நடித்தேன். நல்ல கதாபாத்திரத்துக்காக காத்திருந்தேன். எதுவும் வரவில்லை. இதனால் பிறமொழியில் கவனம் செலுத்தி நடித்து வந்தேன். பாலிவுட்டில் 2 படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததும் ஏற்றுக்கொண்டேன். 'அப்ரா டஃபாரி', 'மும்பை மிரர்' ஆகிய படங்களில் நடிக்கிறேன். 'டேம் 999' ஆங்கில படம் உள்பட இதுவரை 6 மொழிகளில் நடித்திருக்கிறேன்.

பாலிவுட் அனுபவம் பற்றி கேட்கிறார்கள். தென்னிந்திய படங்களில் வேலை செய்வதை காட்டிலும் பாலிவுட் படங்களில் பணியாற்றுவது முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. தென்னிந்திய படங்களில் சிறிய பட்ஜெட் படங்கள்தான் அதிகம் தயாராகிறது. அதன் ஷூட்டிங் வேகமாக நடக்கும். ஆனால் பாலிவுட்டில் பெரும்பாலும் பெரிய பட்ஜெட் படங்கள் உருவாகின்றன. ஷூட்டிங்கும் மெதுவாகவே நடக்கிறது. இதற்கு பொறுமை அவசியம். பாலிவுட்டில் பணியாற்றுவதன் மூலம் பெரிய அளவில் பேர் கிடைக்க வாய்ப்புள்ளது. 'அப்ரா டஃபாரி' படத்தில் கோவிந்தா ஜோடியாகவும், 'மும்பை மிரர்' படத்தில் துப்பறியும் நிருபராகவும் நடிக்கிறேன். இவ்வாறு விமலா ராமன் கூறினார்.
 

தெலுங்கு ஹீரோ நானி திடீர் திருமணம்

Telugu Actor Naani Wedding

தெலுங்கு ஹீரோ நானிக்கும் அவரது காதலி அஞ்சனாவுக்கும் நேற்று விசாகப்பட்டினத்தில் திருமணம் நடந்தது.

நானியும் அஞ்சனாவும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தனர். ஆனால் இந்தக் காதல் குறித்து மீடியாவில் வந்த அத்தனை செய்திகளையும் நானி மறுத்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த மாதம் இருவருக்கும் திடீரென நிச்சயதார்த்தம் நடந்தது. நவம்பர் 24 ம் தேதி திருமணம் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், திடீரென விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் இருவருக்கும் திருமணம் நடந்தது.

தெலுங்கு திரையுலகினருக்காக வேறொரு நாளில் திருமண வரவேற்பு நடத்தப்படும் என்று நானி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
 

பிப்ரவரி 14-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது ""நீதானே என் பொன்வசந்தம்''

Nee thane En Pon vasanthan , jiiva

கவுதம் மேனன் இயக்கத்தில் இளையராஜாவின் இசை விருந்தாக உருவாகியிருக்கும் நீதானே என் பொன்வசந்தம், வரும் பிப்ரவரி 14 -ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது. ஜீவா - சமந்தா நடித்துள்ள இந்தப் படம் தெலுங்கிலும் நேரடிப் படமாக உருவாகியுள்ளது.

ஏற்கெனவே பாடல்கள் படுஹிட்டாகியுள்ளதால், அந்த சூடு குறையும்முன்பே படத்தை தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் தீபாவளி மற்றும் பொங்கலுக்கு பெரிய பட்ஜெட் படங்கள் மோதுவதால், சோலோவாக காதலர் தின ஸ்பெஷலாக களமிறங்குகிறது நீதானே என் பொன்வசந்தம்.

தெலுங்கிலும் அதே தேதியில் வெளியாகிறது. தெலுங்குப் பதிப்பில் ஹீரோவாக நடித்திருப்பவர் நானி.
 

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்: மம்தா மகிழ்ச்சி

Mamtha mohan doss

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டிருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினார் மம்தா மோகன்தாஸ்.
'சிவப்பதிகாரம்', 'குரு என் ஆளு', 'தடையற தாக்க' படங்களில் நடித்திருப்பவர் மம்தா மோகன்தாஸ். அவர் கூறியதாவது:

சினிமா துறையில் ஆரம்ப காலத்தில் இருந்தே ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் உண்டு. ஹீரோயின்களை பொறுத்தவரை அந்த முக்கியத்துவம் குறைவுதான். சமீபத்தில் 'முசாபிர்' என்ற மலையாள படத்தில் நடித்தேன். இதில் திவ்யா உண்ணி ரீ என்ட்ரியாகிறார். பரதநாட்டிய பெண்ணாக அவர் நடிக்கிறார். அப்போது இருவரும் மனம் விட்டு பேசிக்கொண்டிருந்தோம். இன்டஸ்ரியில் இப்போது ஏற்பட்டுள்ள மாறுதல்கள் குறித்து நிறைய பேசினோம். குறிப்பாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டிருப்பது பற்றி விவாதித்தோம். அதை கவனமாக கேட்டார்.

திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்த திவ்யா, இப்படத்தில் நடித்தாலும் தொடர்ந்து நடிப்பாரா என்பது பற்றி உறுதியாக சொல்லவில்லை. 'மீண்டும் நடிப்பது பற்றி யோசிக்கவில்லை. இப்படத்தில் ஷோபனாதான் பரதநாட்டிய பெண்ணாக நடிக்க கேட்கப்பட்டிருந்தார். அவர் நடிக்க முடியாமல் போனதால் என்னை இயக்குனர் அணுகினார். அதனால் நடித்தேன். தற்போது நடன பள்ளி நடத்தி வருகிறேன். அதில்தான் முழுகவனமும் இருக்கிறது' என்றார் திவ்யா.

இவ்வாறு மம்தா மோகன்தாஸ் கூறினார்.
 

சாம்பார் வைக்கும் இயக்கம்

Diector makes Sampar

நல்லகாலம் பொறக்குது... நல்லகாலம் பொறக்குது...

நயன ஹீரோயினுக்கு பாலிவுட்ல இருந்து மறுபடியும் அழைப்பு வருதாம்... வருதாம்... இதுபத்தி அவர் கிட்ட கேட்டா, 'கைநெறய படங்களோட சவுத்ல பிஸியா இருக்கேன். பாலிவுட்ல வாய்ப்பு வந்தாலும் இப்ப ஏத்துக்கறது கஷ்டம். சில ஹீரோயின்கள் அங்குள்ள சில ஹீரோக்கள சார்ந்து இருக்கறாப்ல என்னால இருக்க முடியாது. எனக்கு ஸ்கிரிப்ட்தான் முக்கியம். நடிக்கறதா இருந்தா ஸ்கிரிப்ட் பிடிச்சிருந்தா மட்டுமே நடிப்பேன்'னு கறாரா பேசறாராம்... பேசறாராம்...

'போடி, போடா'ன்னு சின்ன பசங்க பேசிக்கற  டைட்டில்ல இனிஷியலுக்கு பேர மாத்திகிட்ட நடிகர் நடிச்ச படத்த இயக்கற சிவமான இயக்கம் பேச ரொம்ப நாள் தடை இருந்துச்சாம். இப்பத்தான் இயக்கம் படத்த பத்தி மீடியாக்கள்ல பேச ஆரம்பிச்சிருக்காராம். 'இந்த படத்துல புதுசா எதையும் நான் ட்ரை பண்ணல. பிசா, பாஸ்தா மாதிரி வித்தியாசமான டேஸ்ட்ல இந்த கதய அமைக்கலே, சாம்பார் மாதிரி மசாலா கலந்த படமாவே எடுக்கறேன்'னு சொல்றாராம்... இயக்கம் சொல்றாராம்...

மல்லுவுட்ல நடிச்சிட்டிருக்க ஐஸ்வர்யமான தேவ நடிகைய கோலிவுட்ல 'மெட்ராஸ்ல ஒன் டே'
படத்துல நடிக்க ஒப்பந்தம் பண்ணாங்களாம்... பண்ணாங்களாம்... ஆர்வமா நடிக்க ஒப்புக்கிட்டவர்கிட்ட மனசு நோகடிகறாப்பல போட்டுக் கொடுக்கறாங்களாம்.  பைவ் ஸ்டார் ஹீரோவோட சிஸ்டரா படத்துல நடிக்கறாராம். ஒரு முற சிஸ்டரா நடிச்சா அதேபோல வேஷம்தான் தொடர்ந்து வரும்னு பயமுறுத்தறாங்களாம்... நடிகய
 

நடன ரசிகர்களைக் கவர்ந்த கொஞ்சும் சலங்கை!

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சிகளும், நடன நிகழ்ச்சிகளுக்கும் தனி ரசிகர்கள் உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு பொதிகைக் தொலைக்காட்சியில் ‘கொஞ்சும் சலங்கை' என்ற பரதநாட்டிய நடன நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

konjum salangai dance program on dd podhigai
Close
 
இந்த நடன நிகழ்ச்சியில் 7 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகள் பங்குபெற்று பரதநாட்டியம், நாட்டுப்புற நடனங்களை ஆடி ரசிகர்களை மகிழ்விக்கின்றனர். பிரபல நடிகை வெண்ணிறஆடை நிர்மலா, இந்த நிகழ்ச்சியின் நடுவராக இருந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்துகிறார். இவர் தமிழ் சினிமாவில் நடிப்பிலும் நடனத்திலும் தனி முத்திரை பதித்தவர். நடனத்திற்காக கலைமாமணி விருதும் பெற்றவர். வெண்ணிற ஆடை நிர்மலாவும் இந்த நிகழ்ச்சியில் தன் முத்திரை நடனங்களையும் ஆடி நடன ரசிகர்களை மகிழ்விப்பது சிறப்பம்சம்.

இந்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க நடனங்களையும், கிராமப்புற நடனங்களையும் வளர்க்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் சிறுவருக்கு "பொதிகை இளமயில்'' பட்டம் வழங்கப்படுகிறது. அதுபோலவே `சிறந்த கிராமப்புற நடனம்', `சிறந்த அபிநயம்', `சிறந்த உடைஅலங்காரம்', `புதுமை நடனம்' ஆகிய பிரிவுகளிலும் நடன கலைஞர்கள் சிறப்பிக்கப்படுகிறார்கள்.

ஞாயிறு தோறும் பகல் 10.30 மணி முதல் 11.30 மணி வரை பொதிகை சேனலில் ஒளிபரப்பாகும் கொஞ்சும் சலங்கை நிகழ்ச்சியை நடிகை சுதா தொகுத்து வழங்குகிறார்.

 

வெங்கட் பிரபு வழங்கும் ‘கோலிவுட் கிங்’

Venkat Prabhu Turns Tv Show Host

நடிகரும் இயக்குநருமான வெங்கட் பிரபு விஜய் டிவியில் ‘கோலிவுட் கிங்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இன்றுமுதல் சனிக்கிழமைதோறும் இரவு 8 மணிக்கு ‘கோலிவுட் கிங்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

சென்னை 600028 திரைப்படத்தை இயக்கிய வெங்கட் பிரபு தமிழ் திரை உலகில் பிஸியான இயக்குநராக இருந்து வருகிறார். சரோஜா, கோவா, மங்காத்தா போன்ற படங்களுக்குப் பின்னர் கார்த்தி நடிக்கும் ‘பிரியாணி' படத்தில் பிஸியாக இருக்கும் வெங்கட் பிரபு தற்போது விஜய் டிவியில் ‘கோலிவுட் கிங்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

சினிமாவைப் பற்றி தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறலாம். ஒவ்வொரு வாரமும் பிரபல நட்சத்திரங்களின் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். அவர்களிடம் அந்த ஹீரோவைப் பற்றிய, அவர் நடித்த திரைப்படங்களைப்பற்றிய கேள்விகள் கேட்கப்படும். அவர்களில் சரியான பதில்களை சொல்பவர்கள் நிகழ்ச்சியின் அடுத்தடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப் படுவார்கள். ஒவ்வொரு சுற்றிலும் அவர்களுக்கான பரிசுத்தொகையும் அதிகமாகிக் கொண்டே செல்லும். இறுதியில் அனைத்து கேள்விகளுக்கும் பதில்களை சரியாகச்சொல்லும் ஒரு ரசிகர் அந்த வாரத்தின் `கோலிவுட் கிங்'காக தேர்ந்தெடுக்கப்படுவார்.

சினிமாவைப் பற்றிய நிகழ்ச்சி என்பதாலும், வெங்கட் பிரபு தொகுத்து வழங்குவதாலும் நிகழ்ச்சி கலகலப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். விஜய் டிவியில் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது ‘கோலிவுட் கிங்'

 

காதலர் தின ஸ்பெஷலாக வருகிறது நீதானே என் பொன்வசந்தம்!

கவுதம் மேனன் இயக்கத்தில் இளையராஜாவின் இசை விருந்தாக உருவாகியிருக்கும் நீதானே என் பொன்வசந்தம், வரும் பிப்ரவரி 14 -ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது.

neethane en ponvasantham be release
Close
 
ஜீவா - சமந்தா நடித்துள்ள இந்தப் படம் தெலுங்கிலும் நேரடிப் படமாக உருவாகியுள்ளது.

ஏற்கெனவே பாடல்கள் படுஹிட்டாகியுள்ளதால், அந்த சூடு குறையும்முன்பே படத்தை தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் தீபாவளி மற்றும் பொங்கலுக்கு பெரிய பட்ஜெட் படங்கள் மோதுவதால், சோலோவாக காதலர் தின ஸ்பெஷலாக களமிறங்குகிறது நீதானே என் பொன்வசந்தம்.

தெலுங்கிலும் அதே தேதியில் வெளியாகிறது. தெலுங்குப் பதிப்பில் ஹீரோவாக நடித்திருப்பவர் நானி.

 

குறித்த தேதிக்கு முன்பே காதலி அஞ்சனாவை மணந்தார் நடிகர் நானி!

Actor Nani Anjana Get Married

தெலுங்கு ஹீரோ நானிக்கும் அவரது காதலி அஞ்சனாவுக்கும் நேற்று விசாகப்பட்டினத்தில் திருமணம் நடந்தது.

நானியும் அஞ்சனாவும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தனர். ஆனால் இந்தக் காதல் குறித்து மீடியாவில் வந்த அத்தனை செய்திகளையும் நானி மறுத்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த மாதம் இருவருக்கும் திடீரென நிச்சயதார்த்தம் நடந்தது. நவம்பர் 24 ம் தேதி திருமணம் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், திடீரென விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் இருவருக்கும் திருமணம் நடந்தது.

தெலுங்கு திரையுலகினருக்காக வேறொரு நாளில் திருமண வரவேற்பு நடத்தப்படும் என்று நானி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 

தமிழகத்தின் செல்லக் குரலாக ஆஜித் தேர்வு: பாராட்டிய ஏ.ஆர். ரகுமான்

Vijay Tv Super Singer Junior 3 Grand Final

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 பட்டத்தை சிறுவன் ஆஜித் தட்டிச்சென்றுள்ளான். வெற்றி பெற்ற சிறுவனுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டினை இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 பட்டத்தை வெல்வதற்காக ஒர் ஆண்டுக்கும் மேலாக தினந்தோறும் தங்களின் இனிய குரலால் பாடி பல்லாயிரக்காணவர்களை வசீகரித்த குழந்தைகள் காத்திருந்தது அந்த தருணத்திற்காகத்தான்.

இறுதிப்போட்டியில் சிறப்பாகப் பாடி எப்படியாவது பட்டத்தை வென்றுவிடவேண்டும் என்று போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் கனவும், லட்சியமும் இருந்தது. அதற்கான நாளும் வந்தது.

நேற்றைய தினம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் சுகன்யா, பிரகதி, கவுதம், ஆஜீத், யாழினி ஆகிய 5 போட்டியாளர்களும் தங்களின் மிகச்சிறந்த பங்களிப்பினை வெளிப்படுத்தினர். ஒவ்வொருவரும் பாடி முடித்த உடன் பார்வையாளர்களின் கரகோஷம் அரங்கத்தை எட்டியது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வந்திருந்து குழந்தைகளின் குரலில் வெளிப்பட்ட பாடல்களை ரசித்து சிரித்தார்.

அனைவருமே நன்றாக பாடினர் என்றாலும் பரிசு ஒருவருக்குத்தானே தரமுடியும். நடுவர்களின் மதிப்பெண்களோடு, உலகம் முழுவதும் இருந்த ரசிகர்கள் எஸ்.எம்.எஸ் மூலம் ஓட்டளித்து தேர்ந்தெடுத்த தமிழகத்தின் செல்லக்குரலை இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் அறிவித்தார். சிறுவயதில் மைக்கேல் ஜாக்சனின் திறமை அந்த சிறுவனிடம் வெளிப்பட்டதாக தெரிவித்ததும் அரங்கமே ஊகித்துவிட்டது.

ஆஜித் பாடிய வந்தேமாதரம் பாடல் நடுவர் ஏ.ஆர். ரகுமானை மட்டுமல்ல ஒவ்வொரு ரசிகரையும் கவர்ந்துவிட்டதுபோல... ஆஜித் முதல் இடம் பெற்றுள்ளதாக பலத்த கரகோஷத்திற்கு இடையே அறிவித்தார் ஏ.ஆர்.ரகுமான். சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 பட்டத்துடன் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டிற்கான சாவியை ஆஜித்திற்கு வழங்கினார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இரண்டாவது இடம் பெற்ற பிரகதிக்கு 5 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது. மூன்றாவது இடம் பிடித்த யாழினிக்கு 3 லட்சம் ரூபாய் பரிசும், நான்கு, ஐந்தாம் இடம் பிடித்த சுகன்யா, கவுதமிற்கு தலா 2 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட ஓர் ஆண்டுகாலம் பாடி ரசிகர்களை சந்தோசப்படுத்திய செல்லக்குரல்கள் சீசன் 3 நேற்றோடு முடிவுக்கு வந்தது இசை ரசிகர்களுக்கு வருத்தமான விசயம்தான்.

கவலைப்படாதீர்கள் சூப்பர் சிங்கர் சீசன் 4 இன்னும் சில தினங்களில் விஜய் டிவியில் தொடங்கப்போகிறது.