‘நோ பெர்சன்ல் கொஸ்டீன்ஸ்’ நிபந்தனையோடு ட்விட்டருக்குத் திரும்பிய ‘பப்பாளி’...

‘ஆமா நாங்க காதலிக்கிறோம்' என அதிகாரப்பூர்வமாக டுவிட்டரில் அறிவித்த பப்பாளி நடிகை அவர். ஆனால், காதலன் மன்மதன் மீண்டும் தனது பழைய காதலியோடு ஜோடி சேர்கிறார் என்ற செய்தி வெளியானதும் நடிகையை கேள்விகள் துளைத்து எடுத்து விட்டார்களாம் அடுத்தவர்களின் பர்சனல் பக்கத்தை புரட்டும் ஆர்வலர்கள் சிலர்.

எவ்வளவோ விளக்கம் கொடுத்தும் தொடர்ந்து ரசிகர்கள் என்ற போர்வையில் அவர்கள் கடுப்பேற்றியதால், சில காலம் டுவிட்டருக்கு வருவதையே தவிர்த்து வந்தார் நடிகை.

காலம் தானே எல்லாவற்றுக்கும் மருந்து. தற்போது மீண்டும் டுவிட்டருக்கு வந்திருக்கிறார் நடிகை, பட் ஒரு கண்டிசனோடு. அதாவது, இனி தனது படங்கள் குறித்து மட்டுமே கேட்கலாம், பேசலாம். பர்சனல் விஷயங்கள் பேச கண்டிப்பாக அனுமதியில்லை என்பது தான் அது.

 

2வது மனைவி ரேணு தேசாயை விவகாரத்து செய்ய கோர்ட்டுக்கு போகும் பவன் கல்யாண்?

2வது மனைவி ரேணு தேசாயை  விவகாரத்து செய்ய கோர்ட்டுக்கு போகும் பவன் கல்யாண்?

ஹைதராபாத்: இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நடிகை ரேணு தேசாயை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் மனு கொடுத்திருக்கிறார் நடிகர் பவன் கல்யாண் என்று தெலுங்கு சினிமாவில் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண். இவர் சிரஞ்சீவியின் உடன் பிறந்த தம்பி. தெலுங்கில் இவருக்கு பவர் ஸ்டார் என இன்னொரு பெயரும் உண்டு.

பவன் கல்யாணுக்கு இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது. முதல் மனைவி நந்தினியை 1997-ல் திருமணம் செய்து, கருத்து வேறுபாடு காரணமாக 2007-ல் விவாகரத்து செய்து பிரிந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி மனைவிக்கு ரூ.5 கோடி ஜீவணாம்சம் கொடுத்தார்.

அதன் பிறகு தெலுங்கு நடிகை ரேணு தேசாய்க்கும் பவன் கல்யாணுக்கும் காதல் ஏற்பட்டது. 2009- ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது பவன் கல்யாண், ரேணு தேசாய் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டதாகவும், கடந்த ஆண்டிலிருந்தே இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது.

முதலில் நீதிமன்றத்துக்கு வெளியில் பேசி முடிக்க முடிவு செய்திருந்தார் பவன் கல்யான். ஆனால் இப்போது பரஸ்பர விவாகரத்து கோரி நீதிமன்றத்திலும் மனு கொடுத்துள்ளதாக தெலுங்கு பட உலகில் செய்தி பரவி உள்ளது.

கடந்த ஒரு ஆண்டு காலமாக இந்த விவாகரத்து செய்தி உலா வருகிறது. நீதிமன்றத்துக்கு போகக் கூடாது என்பதற்காக ரேணுவுக்கு ஒரே செட்டில்மென்டாக ரூ 40 கோடியை பவன் கல்யாண் கொடுக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்து இருவருமே எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

 

இசையமைப்பாளர் தீனா நடுவராகும் இசை மேடை

இசையமைப்பாளர் தீனா நடுவராகும் இசை மேடை

கலைஞர் டிவியில் இசை மேடை என்ற புதிய இசை நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் புதிய பாடகர்களை தேர்ந்தெடுக்கும் நடுவர்களாக பிரபல இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹைனா, தீனா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

‘இசை மேடை' சிறந்த மேடைப்பாடகர்கள் இடையே சிறந்த பாடகரைத் தேர்வு செய்து வெள்ளித்திரைக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி .

டிசம்பர் 8ம் தேதி முதல் ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது.

பாடகர்களின் திறமை

இந்த நிகழ்ச்சியில் நல்ல குரல் வளம் இருந்தும் சரியான அறிமுகம் கிடைக்காத பாடகர்கள் மேடையேறி தனி சுற்று, இரட்டைச் சுற்று மற்றும் பாரம்பரிய சங்கீதத்தில் தங்களுக்குள்ள திறமை மற்றும் தேர்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

பிரபல இசையமைப்பாளர்களும், திரைப்பட பின்னணி பாடகர்களும், அவ்வப்போது சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். நடுவர்களாக பிரபல இசையமைப்பாளர்கள் தீனா, ஏ.ஆர்.ரஹைனா பங்கேற்றுள்ளனர்.

‘‘இசை மேடை'' ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். கலைஞர் தொலைக்காட்சிக்காக லிபர்டி மீடியா சார்பில் பால் டி.ராஜா தயாரித்து வழங்குகிறார்.

 

கவுதம் மேனனுக்கு சாதகமில்லாத 'வானிலை'!

கவுதம் மேனன்- சிம்பு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு வைத்த வேகத்தில் மாறிவிட்டது.

இந்தப் படத்துக்கு இரு தினங்களுக்கு முன்புதான் சட்டென்று மாறுது வானிலை என்று பெயர் வைத்தார்கள். அதை சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

கவுதம் மேனனுக்கு சாதகமில்லாத 'வானிலை'!

இதுகுறித்த செய்திகள் அடுத்தடுத்து மீடியாவில் வரத் தொடங்கியதுமே, ஏற்கெனவே இதே பெயரில் ஒரு படம் முடிந்து ரிலீசுக்கும் தயாராக இருப்பதாக தகவல் வெளியானது.

அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் கவுதம் மேனனைத் தொடர்பு கொண்டு, உங்க படத்தின் பாடல் வரியைத்தான் 'சட்டென்று மாறுது வானிலை' என்று வைத்தோம். படம் முடிந்து 2012-லேயே சென்சார் சான்று கூட வாங்கிட்டோம் சார், என்றார்களாம்.

வேறு வழியின்றி சரி சொன்ன கவுதம் மேனன், இப்போது தலைப்பை மாற்ற முடிவு செய்துள்ளார்.

விரைவில் புதிய தலைப்பை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

 

கோச்சடையான்: தீபிகா சொந்தக் குரலில் பேசவில்லை... பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் குரல்!

கோச்சடையான்: தீபிகா சொந்தக் குரலில் பேசவில்லை... பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் குரல்!

ரஜினியின் கோச்சடையான் படத்தில் முதலில் சொந்தக் குரலில் பேச முயன்ற தீபிகா படுகோனுக்கு, இப்போது முன்னணி டப்பிங் கலைஞரான சவீதா குரல் கொடுக்கிறார்.

தீபிகா படுகோன் பாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்தாலும், அவர் ஒரு தென்னிந்தியப் பெண்தான். பெங்களூர்தான் பிறப்பிடம். அவருக்கு கன்னடம், இந்தியுடன் தமிழும் பேச வரும்.

ஆனால் அவ்வளவு சரளமாக இருக்காது. இதனால் தீபிகா படுகோனேவுக்கு கோச்சடையானில் டப்பிங் குரல் கொடுக்கபட்டு உள்ளது. தீபிகாவுக்கு குரல் கொடுத்திருப்பவர் பிரபல டப்பிங் கலைஞர் சவீதா ரெட்டி.

ஜெனிலியா தேஷ்முக், நந்திதா தாஸ் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் போன்ற ஹிந்தி திரைப்பட நடிகைகளுகு டப்பிங் கொடுத்தவர் சவிதா.இவர் முதன் முதலில் ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு குரல் கொடுத்தார். "

சவிதாவின் குரல் பற்றி வெகுவாக சிலாகிக்கும் சௌந்தர்யா கூறுகையில், "தீபிகாவிற்கு தமிழ் டப்பிங் செய்ய சவிதா சரியான தேர்வு. அவரது குரல் ரொம்ப ஸ்பெஷல். தீபிகாவின் பாத்திரத்துக்கேற்ற குரல் சவிதாவுக்குத்தான் இருக்கிறது," என்றார்.

 

’காதல் மன்னனை’ இயக்கத் தயாராகும் ‘காதலன்’

டான்ஸாகி, ஹீரோவாகி தற்போது இயக்கத்தில் கொடி கட்டிப் பறந்து வரும் ஒல்லிக்குச்சி உடம்புக்காரர் விரைவில் தல ரசிகர்களுக்கு திரை விருந்து தரப் போகிறாராம்.

ஆரம்பம் முதற்கொண்டு அசத்தலாக வசூலை வாரிக் குவித்து வரும் அல்டிமேட் காதல்மன்னனின் தற்போதைய படத்தை ஹிந்தியில் இந்த இயக்குநர் இயக்குவதாக பேச்சுகள் ஒருபுறம் உலா வர, மற்றொரு புறம் காதல்மன்னனை நேரடியாக தமிழில் இயக்க கதை நெடி செய்து கொண்டு இருக்கிறாராம் இயக்குநர்.

சமீபகாலமாக தமிழில் படம் எதுவும் இயக்கவில்லை என்ற ரசிகர்களின் மனக்குறையை நிவர்த்தி செய்வதோடு, ஹிந்தியில் படம் பிளாப் ஆனதால் ஒரு சேஞ்சுக்கு இப்புதுப் பட வேலைகளில் இயக்குநர் இறங்கப் போவதாக தகவல்கள் உலா வருகின்றன.

கதை முடிவானதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் எனத் தெரிகிறது.