என் குடும்பத்தினரை என் கணவர் சந்திக்க முடியாமல் நடிகை நயன்தாரா தடுத்து வருகிறார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விஜய் நடித்த வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நயன்தாராவுக்கும், பிரபுதேவாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. பழக்கம் நாளாக நாளாக காதலாக மாறியது. தொடர்ந்து நயன்தாராவை திருமணம் செய்யப்போவதாக பிரபுதேவா அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி ரமலத், பிரபு தேவா மீது சென்னை குடும்ப நல கோர்ட்டில் ரமலத் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், என் கணவர் பிரபுதேவா, குடும்பச்செலவுக்கே பணம் தருவதில்லை. என்னையும், என் குடும்பத்தினரை என் கணவர் சந்திக்க முடியாமல் நடிகை நயன்தாரா தடுத்து வருகிறார். என் கணவரை என்னிடம் சேர்த்து வையுங்கள், என்று கோரியுள்ளார். ரமலத்துக்கு பிரபுதேவா ரூ.2 கோடி பணம் மற்றும் ரூ.85 லட்சம் மதிப்புள்ள நகைகளை வழங்கியிருப்பதாக வெளியான செய்தியிலும் உண்மை இல்லை என்றும் ரமலத் கூறியுள்ளார்.


Source: Dinakaran
 

சினேகாவுக்கு மீண்டும் ஆபாச எஸ்எம்எஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நடிகை சினேகாவுக்கு மீண்டும் ஆபாச எஸ்எம்எஸ்கள் வருவதாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் அவரது தந்தை புகார் தெரிவித்துள்ளார். சினேகாவுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். தகவல்கள் அனுப்பியதாக ஏற்கனவே பெங்களூரை சேர்ந்த ராகவேந்திரா என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னை சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த நிலையில், நடிகை சினேகாவின் தந்தை ராஜாராம் நேற்று பகல் 12 மணியளவில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து பேசினார். அப்போது புகார் மனு ஒன்றையும் கொடுத்தார். அந்த புகார் மனுவில், ஏற்கனவே தொல்லை கொடுத்த ராகவேந்திரா மீண்டும் நடிகை சினேகாவுக்கு செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் ஆபாச தகவல்களை அனுப்பி வருவதாகவும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.எம்.எஸ். தகவலில் “என்றைக்கும் நான்தான் உன் கணவன்” என்று கூறியுள்ளார். மேலும் ஆபாச வார்த்தைகள் அடங்கிய எஸ்எம்எஸ்கள் அனுப்பி வருவதாகவும் இது சினேகாவை பெரும் வேதனைக்கு உள்ளாக்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தும்படி சென்னை உளவுப்பிரிவு போலீசாருக்கு, கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். இந்த எஸ்எம்எஸ்களை அனுப்பியது ராகவேந்திராதானா என உளவுப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Source: Dinakaran
 

அய்யனார் வன்முறை படமா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம்ஸ் சார்பில் பி.எல்.தேனப்பன் தயாரிக்கும் படம் 'அய்யனார்'. ஆதி, மீரா நந்தன் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமித்ரன் கூறியதாவது: காதல், சென்டிமென்ட், ஆக்ஷன், காமெடி, கிளாமர் எல்லாம் நிறைந்த கமர்சியல் படம் இது. கோபம் வந்தால் கொலை செய்பவன்தான் ஹீரோ. அதற்கு காரணம் என்ன? அவன் யார்? எதை நோக்கி போகிறான் என்பதை திரைக்கதையில் சொல்கிறேன். தணிக்கைக்கு சென்றபோது நல்ல படமாக இருக்கிறது. ஆனால் ரத்தம் அதிகமாக இருக்கிறது. அதை குறைத்தால் ரசிகர்கள் குடும்பத்தோடு பார்க்க உதவும் என்ற தணிக்கை குழுவின் கருத்தை ஏற்று கொஞ்சம் குறைத்தோம். ஆனாலும் ஆக்ஷன் வேகத்தை குறைக்கவில்லை. சிலர் 'அய்யனார்' என்ற பெயரை பார்த்ததும் வன்முறை படம் என்று தவறாக நினைக்கிறார்கள். அழகான ஆக்ஷன் படம். நான் இயக்கிய கன்னடப் படம் 'சொதேகரா' தற்போது வெளியாகி அங்கு ஹிட்டாகி உள்ளது.


Source: Dinakaran
 

புலிக்குட்டியை தத்தெடுத்த கார்த்தி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வண்டலூர் வன காப்பத்தில் உள்ள வெள்ளைப்புலியை நடிகர் கார்த்தி தத்தெடுத்தார். அக்டோபர் 2ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வன உயிரினங்களின் பாதுகாப்பு வாரமாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மத்திய மாநில அரசுகள் மக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் சென்னை வண்டலூர் வன உயிரியல் பூங்காவுக்குச் சென்ற நடிகர் கார்த்தி, அங்குள்ள வெள்ளைப்புலி ஒன்றை தத்தெடுத்தார்.


Source: Dinakaran
 

பிகினி டிரெஸ் அணிவதால் படம் ஓடுமா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பிகினி டிரெஸ் அணிவதால் படம் ஓடாது என்றார் லேகா வாஷிங்டன். தமிழில், 'ஜெயம்கொண்டான்' படத்தில் நடித்த லேகா, இப்போது இந்தி, கன்னட படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: 'பீட்டர் கயா காம் சே' என்ற இந்தி படத்தில் பிகினி டிரெஸ் அணிந்து நடித்திருக்கிறேன். இதுபற்றி பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியிருக்கின்றன. எனக்கு எந்த உடை மீதும் வெறுப்பில்லை. கதைக்கு தேவை என்றதால் நடித்தேன். அதே போல பிகினி அணிவதால் படம் ஹிட்டாகிவிடும் என்பதில் அர்த்தமில்லை. கதை நன்றாக இருந்தால் மட்டுமே படங்கள் ஓடும். இந்த படத்தை அடுத்து 'பவர்' என்ற இந்தி படத்தில் நடிக்கிறேன். இதில் அமிதாப்பச்சன், அஜய் தேவ்கன், கங்கனா ரனவத் ஆகியோரும் நடிக்கிறார்கள். இருந்தாலும் எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கிறது. தமிழில் 'வ' படம் ரிலீசாக இருக்கிறது. கன்னடத்தில் நடித்துள்ள 'ஹுடுகா ஹுடுஹி' ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதில் தியான் ஜோடியாக நடித்துள்ளேன். சதாவும் நடித்துள்ளார். இதையடுத்து தமிழ் படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறேன். இவ்வாறு லேகா வாஷிங்டன் கூறினார்.


Source: Dinakaran
 

மீண்டும் கன்னடத்துக்கு வந்தார் நமீதா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நீல்கண்டா, இந்திரா, ஹூ ஆகிய படங்களில் நடித்த நமீதா, இப்போது மீண்டும் கன்னட படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு 'நமீதா ஐ லவ் யூ' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜெய சிம்மா பிக்சர்ஸ் சார்பில் ரவிதேஜா ரெட்டி தயாரிக்கிறார். ஜெய சிம்மா ரெட்டி எழுதி, இயக்குகிறார். ஷோபனா, ஷிவபிரசாத், ஜெயந்தி உட்பட பலர் நடிக்கின்றனர். காதல் கதையான இது, கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுகிறது.


Source: Dinakaran
 

ஒரே பட ரீமேக்கில் நடிப்பது ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பொம்மரிலு தெலுங்கு படத்தில் நடித்தார் ஜெனிலியா. அதே படத்தின் தமிழ் ரீமேக்கான சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் நடித்தார். பின் இந்தி ரீமேக்கிலும் நடித்து வருகிறார். இதே போல் தெலுங்கில் ரெடி படத்தில் நடித்தார். இப்போது அதே படத்தின் தமிழ் ரீமேக்கான உத்தமபுத்திரன் படத்திலும் அவர் நடிக்கிறார்.இது பற்றி ஜெனிலியா கூறியதாவது:ஒரு படத்தில் நடித்த பின் அதே படம் இன்னொரு மொழியில் ரீமேக் செய்தால் அதில் சிலர் நடிக்க மாட்டார்கள். நான் அப்படியல்ல. ஒரு மொழியில் நடித்ததைவிட இன்னொரு மொழியில் அந்த கேரக்டரை இன்னும் மெருகூட்டி நடிக்கவே விரும்புவேன். தெலுங்கில் நான் நன்றாக நடித்ததால்தான் Ôபொம்மரிலுÕ படத்தின் இரு மொழி ரீமேக்குகளிலும் என்னை தேர்வு செய்தார்கள். அது எனக்கு கவுரவம்தான். அதே போல், ரெடியில் நடித்த என்னையே உத்தமபுத்திரனிலும் நடிக்க கேட்டார்கள். அதுவும் எனக்கு பெருமைதான். அதனால்தான் நடிக்கிறேன். 2 வருடங்களுக்கு பின் தமிழில் நடிக்கிறேன். மித்ரன் ஜவஹர் இப்படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார்.இவ்வாறு ஜெனிலியா கூறினார்.


Source: Dinakaran
 

ரிஸ்க் எடுப்பது பிடிக்கும் - தனுஷ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ரிஸ்க் எடுப்பது ரொம்பவும் பிடிக்கும் என்கிறார் தனுஷ்.சமீபத்தில் நடந்த பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, அவர் கூறும்போது, ஒவ்வொரு படத்திலும் ஏதாவது புதிதாக செய்ய விரும்புகிறேன். பொல்லாதவன் படத்தில் கிளைமாக்சில்தான் சண்டையே போடுவேன். அதற்காக ஜிம் சென்று சிக்ஸ் பேக் கொண்டு வந்தேன். முதல்முறையாக காமெடி கலந்த ஹீரோ வேடத்தில் நடித்தேன். ஆக்ஷன் இமேஜ் கிடைத்தபோது திடீரென காதல் கதைகளிலும் நடித்தேன். ரிஸ்க் எடுக்கிறீர்களே என்றார்கள். வாழ்க்கையில் பலமுறை ரிஸ்க் எடுத்திருக்கிறேன். ரிஸ்க் எடுப்பது எனக்கு புதிதல்ல. அது எனக்கு பிடிக்கும் என்றார்.


Source: Dinakaran
 

பாழடைந்த மண்டபத்தால் துணை நடிகர்கள் கலக்கம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பாழடைந்த மண்டபத்தில் நடக்க இருந்த ஷூட்டிங்கில் பங்கேற்க துணை நடிகர்கள் மறுத்தனர். இதனால் அதே போன்ற மண்டபத்தை செட்டாக போட்டு படமாக்கியுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழைÕ பட இயக்குனர் ஏகாதசி கூறியது:

இந்த படத்தில் புதுமுகங்கள் தேஜ், நட்சத்திரா நடிக்கின்றனர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பாழடைந்த மண்டபம் ஒன்றில் 15 நாட்கள் நடத்த வேண்டும். அதற்காக பல இடங்களில் அப்படியொரு மண்டபத்தை தேடினோம். கடைசியாக பரமக்குடி சாலையில் ஒரு மண்டபம் கிடைத்தது. இங்கு நடிப்பதற்கு 100 துணை நடிகர், நடிகைகள் தேவைப்பட்டார்கள். உசிலம்பட்டி, நடுமுதலைகுளம், கீழம்பட்டி ஆகிய ஊர்களிலிருந்து 100 பேரை தேர்வு செய்து அழைத¢துச் சென்றோம். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தது. 12 நாள் ஷூட்டிங் நடத்திவிட்டு திரும்பினோம். ஊர் மக்களை ஒரு லாரி மற்றும் வேனில் ஏற்றி அனுப்பிவைத்தோம். சிலைமான் என்ற இடத்தில் விபத்து நடந்தது. இதில் பஞ்சு என்ற மூதாட்டி இறந்தார். அப்போதுதான் அந்த பாழடைந்த மண்டபம் பற்றிய ஒரு விஷயம் தெரிந்தது. மன்னர் காலத்தில் தண்டனைகளை நிறைவேற்ற அந்த மண்டபத்தை பயன்படுத்தியுள்ளனர். அங்கு மேலும் 3 நாள் ஷூட்டிங் நடத்த கடந்த வாரம் துணை நடிகர்களை அழைத்தோம். அந்த மண்டபமா.. வரமாட்டோம் என சொல்லிவிட்டார்கள். பின் அதே போன்ற மண்டப செட் ஒன்றை போட்டு மதுரையில் ஷூட்டிங் நடத்தினோம்.


Source: Dinakaran