அண்ணல் அம்பேத்கர் மனைவி வேடத்தில் நடிக்கும் ராக்கி சாவந்த்

டாக்டர் அம்பேத்கரின் மனைவி வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் சர்ச்சைக்குரிய கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்.

இந்தியாவின் மாபெரும் ஒப்பற்ற தலைவரான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கையை தி காட்ஃபாதர் ஆப் இந்தியா என்ற தலைப்பில் படமாகத் தயாரிக்கின்றனர்.

அண்ணல் அம்பேத்கர் மனைவி வேடத்தில் நடிக்கும் ராக்கி சாவந்த்

இந்தப் படத்தில் அம்பேத்கரின் இரண்டாவது மனைவி சவீதா வேடத்தில் நடிக்கிறார் ராக்கி. சவீதா பாய் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேடத்தில்தான் ராக்கி நடிக்கிறார்.

சமீபத்தில் நடந்த இந்தப் படத்தின் பூஜையில் அவர் கலந்து கொண்டார். பிரபல பின்னணிப் பாடகர் உதித் நாராயணனும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்தப் படத்தில் தான் நடிப்பது குறித்து ராக்கி சாவந்த் கூறுகையில், "மாபெரும் தலைவர் அம்பேத்கர். அவர் ஒரு மகான். அவரது வாழ்க்கைச் சரித்திரம் பற்றிய படத்தில் எனக்கு இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த வேடம் கிடைத்ததை பாக்கியமாகக் கருதுகிறேன்," என்றார்.

 

சென்னையில் நாளை முதல் லிங்கா அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பம்!

ரஜினியின் சென்னையில் நாளை முதல் லிங்கா அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பம்!  

‘லிங்கா' திரையிடப்படும் திரையரங்குகளில் ரஜினி கட்- அவுட்கள் அமைக்கின்றனர். கொடி தோரணங்களும் கட்டுகிறார்கள்.

நேற்று முதல் ரத்ததானம், கண் தானம், ஏழைகளுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சிகளைத் தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.

‘லிங்கா' இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 5000 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. தமிழகம், கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் 1000 தியேட்டர்களில் படம் வெளியாகவிருக்கிறது. கேரளாவில் தமிழ்ப் படம் ஒன்று இத்தனை அரங்குகளில் வெளியாவது இதுவே முதல் முறை. நேரடி மலையாளப் படங்கள் வெளியாகும் அரங்குகளை விட இருமடங்கு அதிக அரங்குகளில் லிங்கா வெளியாகிறது.

ஹைதராபாத், பெங்களூரு, மும்பை போன்ற பெரு நகரங்களில்மட்டும் 400 அரங்குகளில் லிங்கா வெளியாகிறது. புனே, கோவா, டெல்லி, அகமதாபாத், சண்டிகர், கொல்கத்தா, பாட்னா போன்ற நகரங்களிலும் லிங்கா வெளியாகிறது.

தமிழகத்தில் ‘லிங்கா' படத்துக்காக அனைத்து தியேட்டர்களும் ஒதுக்கப்பட்டு உள்ளதால் இதர படங்கள் ரிலீசை தள்ளி வைத்துள்ளனர். அமெரிக்காவில் 328 அரங்குகளில் லிங்கா தமிழ் - தெலுங்கு பதிப்புகள் வெளியாக உள்ளன. இங்கு நேற்றே முன்பதிவும் ஆரம்பமாகிவிட்டது.

வெளிநாடுகளில்

இங்கிலாந்தில் 85 தியேட்டர்களிலும், பிரான்சில் 50 தியேட்டர்களிலும், டென்மார்க்கில் 20 தியேட்டர் களிலும் திரையிடப்படுகிறது. ஜெர்மனியில் 16 தியேட்டர்களிலும், ஹாலாந்தில் 9 தியேட்டர்களிலும், சுவிட்சர்லாந்தில் 6 தியேட்டர்களிலும், நார்வேயில் 4 தியேட்டர்களிலும், பெல்ஜியத்தில் 3 தியேட்டர்களிலும், சுவீடன் நாட்டில் 2 தியேட்டர்களில் லிங்காவை திரையிட ஒதுக்கி உள்ளனர். வெளிநாடுகளில் இதற்கு முன் ரஜினியின் எந்த படமும் இவ்வளவு அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டது இல்லை என்கின்றனர்.

ஆஸ்திரேலியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, அரபு நாடுகள், தென்னாப்பிரிக்கா, கானா போன்ற நாடுகளிலும் லிங்கா வெளியாகிறது. அங்கு எத்தனை அரங்குகள் என்ற விவரம் வெளியாகவில்லை. ஜப்பானிலும் லிங்காவை அதிக அரங்குகளில் வெளியிடுகின்றனர்.

தமிழ் நாட்டில் அனைத்து தியேட்டர்களிலும் டிக்கெட் முன்பதிவுகள் நாளை முதல் துவங்குகிறது. முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காக ரசிகர்கள் பல்வேறு பகுதிகளில் தியேட்டர்களை ஒப்பந்தம் செய்து வருகிறார்கள். பல தியேட்டர்களிலும் நள்ளிரவு 1 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சென்னை தியேட்டர்களில் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி துவங்குகிறது. காசி, வெற்றி, ஏஜிஎஸ் போன்ற அரங்குகளில் ஏற்கெனவே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கூட்டத்தைக் கட்டுபடுத்த தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

 

சர்ச்சை இமேஜை உடைத்தார் சாமி... கங்காரு படத்திற்கு யு சான்றிதழ் !

சென்னை : சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள கங்காரு படத்திற்கு சென்சார் போர்டு கிளீன் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

மிருகம், உயிர் மற்றும் சிந்து சமவெளி என தன் முந்தைய படங்கள் மூலம் சர்ச்சை இயக்குநர் என்ற பட்டத்தைப் பெற்றிருந்தார் இயக்குநர் சாமி. எனவே, அவரது புதிய படமான கங்காருவும் அதே போன்ற படமாகத் தான் இருக்கும் என எதிர்பார்க்கப் பட்டது.

ஆனால், தற்போது இப்படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியுள்ளதன் மூலம், இப்படம் பாச உணர்வை பறை சாற்றும் படம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

சர்ச்சை இமேஜை உடைத்தார் சாமி... கங்காரு படத்திற்கு யு சான்றிதழ் !  

அர்ஜுனா நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ஸ்ரீபிரியங்கா, வர்ஷா அஸ்வதி, ஆர்.சுந்தர்ராஜன், தம்பிராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, தயாரிப்பாளர் ஜின்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்த தனது பேட்டிகளில், ‘தனது முந்தைய படங்களைப் பார்த்து தனது தாயாரே திட்டி இருப்பதாகவும், இனியாவது ஒழுங்காக நல்ல மாதிரியாக படம் பண்ணு என அவர் அறிவுரை கூறியிருப்பதாகவும் சாமி தெரிவித்திருந்தார்.

மேலும், 'கங்காரு' என் அம்மாவே பாராட்டும்படி இருக்கும். இது வரையிலான சாமியின் பிம்பத்தை இப்படம் நிச்சயம் உடைக்கும்' என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.

அதனை உறுதி செய்யும் விதமாக, படம் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் 'கங்காரு' படத்திற்கு கிளீன் ‘யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர். அழுத்தமான கதையில் பல இடங்களில் கண்ணீரையும் வரவைக்கிறார் என்று அவர்கள் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

 

நண்பர் மகளுடன் டூயட் பாட நான்தான் வெட்கப்படணும்!- சோனாக்ஷியிடம் சொன்ன ரஜினி

நண்பர் மகளுடன் டூயட் பாடி நடிக்க வேண்டியிருக்கிறதே என்பதற்காக நான்தான் வெட்கப்பட வேண்டும், என்று சோனாக்ஷியிடம் கூறினாராம் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்தின் ‘நண்பர் மகளுடன் டூயட் பாட நான்தான் வெட்கப்படணும்!- சோனாக்ஷியிடம் சொன்ன ரஜினி  

ரஜினிகாந்த் படத்தில் நடிக்க அழைப்பு வந்ததும் எனது அப்பா சத்ருகன் சின்கா மிகுந்த சந்தோஷம் அடைந்தார். ரஜினிகாந்தும் எனது அப்பாவும் சிறந்த நண்பர்கள். இருவரும் இந்தியில் அஸ்லி-நக்லி படத்தில் இணைந்து நடித்தார்கள். இந்த படம் ரிலீசான ஒரு வருடத்தில்தான் நான் பிறந்தேன்.

ரஜினியுடன் நான் நடிக்கிறேன் என்றதும் எனது அப்பா அவரைப் புகழ்ந்து தள்ளினார். ரஜினிகாந்த் கடுமையான உழைப்பாளி, எளிமையானவர், கட்டுப்பாடுமிக்கவர், பக்திமான் என்று அடுக்கிக்கொண்டே போனார். உங்கள் நண்பர் ஆச்சே? எப்படி விட்டு கொடுப்பீர்கள்? என்று நான்கூட கேலியாக பேசினேன்.

ஆனால் அவருடன் நடித்தபோது தான் ரஜினி பற்றி அப்பா கூறியது எவ்வளவு உண்மையானது என்பது புரிந்து கொண்டேன். அவரிடம் ரசிகர்கள் அன்பு மட்டும் காட்டாமல் பைத்தியமாக இருப்பது ஏன்? என்பது புரிந்தது.

படப்பிடிப்பு முடிந்ததுமே அனைத்து ஹீரோக்களும் உடனடியாக சென்று விடுவார்கள். ஆனால் ரஜினிகாந்த் அவர்களுடன் அமர்ந்து பேசி, அவர்களை பாராட்டியதும், நலன் விசாரித்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரைப் பற்றி அப்பா சொன்னது கொஞ்சம்தான் என தெரிந்தது.

ரஜினியுடன் நடிக்கும் போது முதலில் எனக்கு வெட்கமாக இருந்தது. ரஜினிதான் எனக்கு உற்சாகமூட்டினார். எனது நண்பர் மகளுடன் காதல் காட்சியில் நடிக்க நான்தான் வெட்கப்பட வேண்டும். நீ வெட்கப்படுகிறாயே எனக் கூறி என்னை சகஜ நிலைக்கு கொண்டுவந்தார்.

என்னை பாலிவுட் நடிகை என்கிறார்கள். ஆனால் லிங்கா படத்தில் நான் தென்னிந்திய நடிகையாகவே மாறி இருப்பதை நீங்கப் பார்ப்பீர்கள்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஷூட்டிங் எடுத்தார்கள். எனக்கு மொழி தெரியாததால் அதனை புரிந்து நடிப்பதற்கு சிறிது தாமதம் ஏற்பட்டது. .

எனது நடிப்பை ரஜினிகாந்த் அணு அணுவாக பாராட்டி உற்சாகப்படுத்தினார்.

லிங்கா படத்தில் 1940-ம் ஆண்டு நடக்கும் கதையின் கதாநாயகி என்பதால் ஜாக்கெட் இல்லாமல் என்னை நடிக்க சொன்னார்கள். 70 ஆண்டுகளுக்கு முந்தைய பெண் என்பதால் ஜாக்கெட் இல்லாமல் நடித்தேன். நீச்சல் உடையில் கூட நடித்து விடலாம். ஆனால் ஜாக்கெட் இல்லாமல் நடித்தது வெட்கமாக இருந்தது. அப்புறம் பழகி விட்டது.

அந்த வேடத்தில் எனக்கு பேச்சு குறைவு. கண்களாலே பேசி நடிக்க வேண்டும். இதனை ஒரு சவாலாக செய்து முடித்தேன். லிங்காவுக்குப் பிறகு தென்னிந்தியாவில் நானும் ஒரு நிரந்தர இடம் பெறுவேன்," என்றார்.

 

நெல்லையில் யுவனின் இசை நிகழ்ச்சி.. இளையராஜா பங்கேற்கிறார்!

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது இசை நிகழ்ச்சியை திருநெல்வேலி நகரில் நடத்துகிறார்.

பொங்கலன்று (ஜனவரி 17) இந்த நிகழ்ச்சியை பாளையங்கோட்டை பெல்பின்ஸ் திடலில் நடத்துகிறார் யுவன்.

இந்த நிகழ்ச்சிக்கு ‘யுவன் மியூசிக்கல் எக்ஸ்பிரஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

நெல்லையில் யுவனின் இசை நிகழ்ச்சி.. இளையராஜா பங்கேற்கிறார்!

இந்த நிகழ்ச்ச்சியின் பர்ஸ்ட் லுக் நேற்று சமுக வலைதளங்களில் வெளியிட்டு பேசிய யுவன் கூறுகையில் ‘எங்கோ சென்று இசையமைப்பதைக் காட்டிலும் நம் மண்ணில் நடத்த வேண்டும் என்று எண்ணித்தான், நெல்லையை தேர்ந்து எடுத்தேன். எனது முதல் படமான ‘அரவிந்தன்'கூட இங்குதான் படமாக்கப்பட்டது," என்றார்.

நெல்லையில் யுவனின் இசை நிகழ்ச்சி.. இளையராஜா பங்கேற்கிறார்!

இந்த இசை நிகழ்ச்சியின் ஹைலைட்டாக இசைஞானி இளையராஜா தோன்றி பாடவிருக்கிறாராம்.

நெல்லையில் யுவனின் இசை நிகழ்ச்சி.. இளையராஜா பங்கேற்கிறார்!

பாடகர்கள் கார்த்திக், ஹரிசரண், ரஞ்சித், விஜய் யேசுதாஸ், செந்தில்தாஸ், வாசு, சத்யன், பெல்லிராஜ், ஸ்வேதா பண்டிட், ப்ரியா ஹிமேஷ், பிரியதர்ஷினி, ரம்யா ஆகியோரும் பங்கு பெற உள்ளனர்.

 

இந்திய சினிமாவில் முதல் முறையாக ரூ 200 கோடிக்கு இன்சூர் செய்யப்பட்ட ரஜினியின் லிங்கா!

இந்திய சினிமாவில் முதல் முறையாக ரூ 200 கோடிக்கு இன்சூர் செய்யப்பட்ட ரஜினியின் லிங்கா!  

அல்லயன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இந்தப் படம் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த அந்த நிறுவனத்தின் மீடியா தலைவர் சுமந்த் சலியன் கூறுகையில், "யாரும் எதிர்ப்பார்க்காத குறுகிய காலத்தில் ரஜினியின் லிங்கா படம் உருவாகியுள்ளது. இந்த அளவு பெரிய தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ள ஒரே இந்தியப் படம் லிங்காதான். உள்நாடு, வெளிநாடுகளில் ஏற்படும் வருவாய் இழப்பையும் இந்த ரூ 200 கோடி காப்பீடு ஈடு செய்யும்," என்றார்.

குறித்த நேரத்தில் எந்த காரணத்துக்காகவாவது படத்தை வெளியிட முடியாமல் போனாலோ, மோசமான காலநிலை, இயற்கைப் பேரிடரால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் படம் பாதிக்கப்பட்டாலோ இந்த காப்பீட்டின் மூலம் இழப்பீடு கிடைத்துவிடும்.

இந்திய சினிமாவில் காப்பீட்டு முறை நடைமுறைக்கு வந்தது 90களில்தான். கல்நாயக் படத்துக்குத்தான் முதல் முறையாக காப்பீடு செய்யப்பட்டது.

ரூ 100 கோடி பட்ஜெட் கொண்ட படத்துக்கு ரூ 80 லட்சம் வரை காப்பீட்டு முனைமம் (பிரிமியம்) கட்ட வேண்டும்.

 

விஜய் எப்போது சொன்னாலும் படம் தயாரிக்க நான் ரெடி! - உதயநிதி

விஜய் படத்தைத் தயாரிக்க நான் தயாராக உள்ளேன். அவர் எப்போது சரி என்று சொன்னாலும் படம் உடனே தொடங்கிவிடும், என்றார் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின்.

விஜய் சினிமா உலகத்திற்கு வந்து 22 ஆண்டு கடந்து விட்டது. இதை விஜய்யின் ரசிகர்கள், திரையுலகத்தினர் கொண்டாடி வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதற்காக விஜய், தன்னை வைத்து இயக்கிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தன்னுடை நடித்த நடிகர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

விஜய் எப்போது சொன்னாலும் படம் தயாரிக்க நான் ரெடி! - உதயநிதி

இதில் பெரிய தயாரிப்பாளர்கள் பட்டியலில் உதயநிதி ஸ்டாலினும் ஒருவர். பாரம்பரிய தயாரிப்பாளர்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் முதன்மையானவராக விஜய் கூறியுள்ளார். உதயநிதியை தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தியவரே விஜய். இவருடைய நடிப்பில் வெளியான ‘குருவி'தான் உதயநிதியின் முதல் தயாரிப்பு. அந்தப் படம் 100 நாட்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடியது.

விஜய்யை வைத்து மீண்டும் எப்போது படம் தயாரிக்க போகிறீர்கள் என்று உதயநிதியிடம் கேட்டதற்கு, "விஜய் எப்போது தேதி தருகிறாரோ அப்போது படம் தயாரிப்பேன். நாளையே தேதி தந்தாலும் படம் தயாரிக்க நான் தயார்," என்றார்.

தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வரும் விஜய், இப்படத்திற்குப் பிறகு அட்லி படத்தில் நடிக்கிறார். அதன்பிறகு கே.வி.ஆனந்த் படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. இந்தப் படங்களுக்குப் பிறகுதான் அவர் உதயநிதிக்கு கால்ஷீட் தரவிருக்கிறார்.

 

ரஜினி நிராகரித்த வெங்கண்ணா!

ஊர் உலகமெங்கும் ஒரே பேச்சாக இருக்கும் லிங்கா படத்துக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் என்ன தெரியுமா?

வெங்கண்ணா... ஆனால் இந்தத் தலைப்பை கேட்ட உடனே நிராகரித்துவிட்ட, ரஜினி, தானே சூட்டிய பெயர்தான் லிங்கா.

ரஜினிக்கு இந்தக் கதையை பொன் குமரன் சொன்னதுமே, சட்டென்று பிடித்துப் போய் உடனே ஆரம்பிச்சிடலாம் என்று களமிறங்கிவிட்டாராம்.

அடுத்து படத்தின் டைட்டில். இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இந்தப் படத்துக்கு முதலில் சூட்டிய பெயர் வெங்கண்ணா. இதை ரஜினியிடம் அவர் கூறியதும், 'நல்ல பவர்புல்லாதான் இருக்கு.. ஆனா இந்தத் தலைப்பு வேண்டாம்," என்று கூறிவிட்டாராம் ரஜினி.

ரஜினி நிராகரித்த வெங்கண்ணா!

அடுத்த என்ன தலைப்பு என்று ரவிக்குமார் யோசிக்கும் முன் ரஜினியே சொன்ன தலைப்புதான் லிங்கா.

இது ரஜினியின் பேரன் பெயர்.. அதனால்தான் வைத்துவிட்டார் என்று யாராவது நினைத்தால் அது தப்பு... காரணம் கதை சொல்லும்போதே கதையின் நாயகன் பெயர் லிங்கேஸ்வரன் என்றே சொல்லியிருக்கிறார்கள். எனவே அந்த லிங்கேஸ்வரனைத்தான் லிங்காவாக்கிவிட்டாராம் ரஜினி.

லிங்கா என்ற பெயரை தலைப்பாக்கிவிட்டு, படத்தில் இடம்பெறும் அணையைத் தேடியுள்ளனர். அப்போதுதான் ஷிமோகாவில் உள்ள ஒரு பெரிய, இதுவரை பெரிதாக வெளியில் தெரியாத ஒரு அணையைப் பார்த்துள்ளனர். அணையின் பெயர் லிங்கனமகி!

 

'காட்டை'த் தாண்டி 'கடலுக்குள்' அடி எடுத்து வைத்து கலக்கத்தில் மூழ்கிய 'சந்தோஷ' நாயகி!

சென்னை: காட்டை கடந்து கடலுக்குள் அடி வைத்து வைத்திருக்கும் பிரபல இயக்குநரின் படத்தில் நாயகியாக அறிமுகம் ஆகிறார் இந்த சந்தோஷமான நடிகை. முன்னதாக இயக்குநரின் படத்தில் நாயகியாக நடித்தவர்கள் தற்போது தமிழில் முன்னணி நடிகைகளாக வலம் வருகின்றனர். எனவே, தனக்கும் தமிழில் நிச்சயம் நல்லதொரு இடம் காத்துக் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையில் இந்த நடிகை இருந்தார்.

'காட்டை'த் தாண்டி 'கடலுக்குள்' அடி எடுத்து வைத்து கலக்கத்தில் மூழ்கிய 'சந்தோஷ' நாயகி!

ஆனால், சமீபகாலமாக நடிகை ரொம்பவும் சோகமாக உள்ளாராம். படம் ரிலீசாக உள்ள நிலையில் ஏன் இந்த சோகம் எனக் கேட்டால், அவர் தெலுங்கில் நடித்த படங்கள் தான் காரணம் என்கிறார்கள் விசயம் தெரிந்தவர்கள்.

சினிமாவுக்கு வந்த புதிதில் தெலுங்கில் கிடைத்த குட்டி குட்டி வேடங்களில் நடித்துள்ளாராம் நடிகை. பால் நடிகையின் முதல் படத்தைப் போல, சந்தோஷமான நடிகையும் சர்ச்சைக்குரிய படங்கள் பலவற்றில் நடித்துள்ளாராம்.

தமிழில் பிஷ் படம் ரிலீசானதும், அப்பழைய படங்களை தூசு தட்டி தமிழில் டப்பிங் பண்ண சிலர் ஐடியா செய்துள்ளனராம். அப்படங்கள் ரிலீசானால் தமிழில் தனது மார்க்கெட் கேள்விக்குறி ஆகிவிடும் என நடிகை அஞ்சுகிறாராம்.

இது தான் சந்தோஷமான நடிகையின் சோகத்தின் பின் உள்ள கதையாம் !

 

அமெரிக்காவில் முதல் முறையாக 40 மாகாணங்களில் 328 அரங்குகளில் லிங்கா!!

அமெரிக்காவில் முதல் முறையாக 328 அரங்குகளில் வெளியாகும் முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது ரஜினியின் அமெரிக்காவில் முதல் முறையாக 40 மாகாணங்களில் 328 அரங்குகளில் லிங்கா!!  

அமெரிக்காவில் இவ்வளவு அரங்குகளில் வெளியாகும் ஹாலிவுட் அல்லாத ஒரே படம் லிங்காதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்ல, அமெரிக்காவிலேயே முதல் முறையாக ஹாலிவுட்டைச் சேராத ஒரு படம் எக்ஸ்எல் ஐமேக்ஸ் அரங்கில் வெளியாகிறது. அமெரிக்காவின் மேற்கு மத்தியப் பகுதியில் உள்ள மிகப் பெரிய அரங்கமான மூவிகோ ரோஸ்மாண்ட்டில் அனைத்து காட்சிகளும் லிங்கா திரையிடப்படுகிறது.

அமெரிக்காவில் லிங்கா படத்துக்கான டிக்கெட் விற்பனையும் நேற்றே தொடங்கிவிட்டது. சிகாகோவில் லிங்கா படத்தின் முதல் காட்சிக்கான முதல் டிக்கெட்டை தக்ஷின் ஜெய் பாபாவுக்கு விற்கப்பட்டது.

500 இருக்கைகள் கொண்ட ஐமேக்ஸ் அரங்கில் அனைத்து டிக்கெட்டுகளையும் ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு வாங்கிவிட்டனர்.

 

"அப்பா வேணாம்ப்பா".. ஒரு குடிகார தந்தையின் கதை!

நல்ல நிறுவனத்தில் மரியாதைக்குரிய பொறுப்பில் இருக்கும் ஒரு மனிதனின் திரைக் கதைதான் ''அப்பா..வேணாம்ப்பா‘'.

குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பண்பான மனைவி, இரண்டு குழந்தைகள், நல்ல பதவி, என எல்லாம் இருந்தாலும் அவருக்குரிய மிகப்பெரிய பிரச்னை மது குடிப்பது தான். திருமணமாவதற்கு முன்பே அவரிடம் இருந்த குடிப்பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி காலை எழுந்தவுடனேயே குடித்தே ஆக வேண்டும் என்ற மோசமான நிலை அவருக்கு ஏற்பட்டுவிட்டது.

அந்த குடிப் பழக்கம் அவருடைய மானம், மரியாதை, வேலை, சொந்தம், நட்பு என எல்லாவற்றையும் இழக்க வைக்கிறது. அதற்குப் பின்னும் கூட அவர் அந்த பழக்கத்தை விடவில்லை. அவரால் ஏற்பட்ட தாங்க முடியாத பிரச்னைகளின் காரணமாக அவருடைய மனைவி, குழந்தைகளுடன் அவரை விட்டுப் பிரிகிறார்.

அதுவரை இருந்து வந்த மனைவியின் ஆதரவும் போன பின் பிச்சைக்காரன் போல் வாழ்கிறார். அப்பொழுதும் குடியை அவரால் நிறுத்த முடியவில்லை. உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அதன் தொடர்ச்சியாக அதே மருத்துவமனையில் உள்ள குடிகாரர்களுக்கான மருத்துவ சிகிச்சையிலும் சேர்கிறார். அந்த நிலையிலும் மனைவி அவரை காண வரவில்லை.

அங்கு தான் வாழ்க்கையில் முதன் முதலாக தான் ''குடிநோயாளி'' என்பதை உணர்கிறார். சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் போல் கட்டுப்படுத்த முடியாத குடியும் ஒரு நோய் என்பதை உணர்கிறார். சுமார் இரண்டு மாதங்கள் சிகிச்சைக்குப் பின் வித்தியாசமான மனிதனாக வெளிவரும் சேகரை மனைவி உட்பட சமுதாயமே குடிகாரனாகத்தான் பார்க்கிறது. வேலை இல்லாமலும் , தங்க இடமில்லாமலும் துன்பப்பட்ட அவர் குடிநோயாளிகளின் உதவியால் வாழ்க்கையை தெரிந்து கொள்கிறார்.

மீண்டும் அவமானப்பட்டு மறுபடி குடிக்கிறார். ஆனால் இந்த முறை அதைத் தொடராமல், ''தான் வாழ்க்கை முழுவதுமே குடிநோயாளிதான், குடியைத் தொடாமல் இருப்பது மட்டும்தான் அதற்கு ஒரே மருந்து'' என்பதை மனப்பூர்வமாக உணர்கிறார். தமிழ்நாடு உட்பட உலகெங்கிலும் உள்ள குடிநோயாளிகளுக்கான ‘'ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்'' என்ற அமைப்பின் உதவியை நாடுகிறார்.

அவரைப் போன்ற குடிநோயாளிகளைச் சந்தித்து தங்கள் வாழ்க்கையைப் பரிமாறிக்கொள்ளும் கூட்டங்களுக்குத் தொடர்ந்து போகிறார். அது அவரின் மனநிலையை மாற்றுகிறது. ஒரு புது மனிதனாக மாறுகிறார்.

அதன் பின் அவரின் குடும்பத்துடன் இணைகிறாரா? இல்லையா? என்பதுதான் ‘'அப்பா...வேணாம்ப்பா...'' என்ற இத்திரைப்படத்தின் கதை.

இந்தப் படத்தை வெங்கட்டரமணன் இயக்குகிறார். விகே கண்ணன் இசையமைக்கிறார்.