நடிகை ரம்பாவுக்கு பெண் குழந்தை பிறந்தது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நடிகை ரம்பாவுக்கு பெண் குழந்தை பிறந்தது

1/19/2011 12:27:32 PM

நடிகை ரம்பாவுக்கும், கனடாவை சேர்ந்த தொழில் அதிபர் இந்திரகுமாருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. கனவருடன் கனடாவில் இருந்தார் ரம்பா.   நிறைமாத கர்ப்பமாக இருந்த அவருக்கு பிரசவ வேதனை ஏற்பட்டது. உடனடியாக டொரான்டோ நகரில் உள்ள மவுன்ட் சினை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக, ரம்பாவின் கணவர் இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.


Source: Dinakaran
 

நடிகர் பா.விஜய் வீட்டில் கொள்ளை முயற்சி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகர் பா.விஜய் வீட்டில் கொள்ளை முயற்சி
1/18/2011 5:20:24 PM
வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரம் ராகவேந்திரா நகரில் சினிமா பாடலாசிரியரும் நடிகருமான பா. விஜய் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவு, 1 மணியளவில் இவர் வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து இரண்டு நபர்கள் உள்ளே புகுந்தனர். சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த விஜய்யின் பெற்றோர் திடுக்கிட்டு எழுந்தனர். விளக்கு வெளிச்சத்தில் இரண்டு வாலிபர்களின் நடமாட்டம் தெரிந்தது. விஜய் வீட்டில் இல்லை. இதையடுத்து அவர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தனர். கட்டுப்பாட்டு அறையில் இருந்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ரோந்து பணியில் இருந்த போலீசார் பா.விஜய் வீட்டிற்கு விரைந்தனர். போலீஸ் வருவதை அறிந்த மர்ம நபா¢கள் அங்கிருந்து  தப்பி ஓடிவிட்டனர். போலீசார், மர்ம நபர்களின் அடையாளங்களை விஜய்யின் பெற்றோரிடம் கேட்டறிந்தனர். மர்ம நபர்கள், திருடுவதற்காக வந்தார்களா அல்லது வேறு காரணமா என்று போலீசார் விசாரிக்கிறார்கள்.


Source: Dinakaran
 

அருள்நிதி நடிக்கும் உதயன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அருள்நிதி நடிக்கும் உதயன்

1/18/2011 2:16:53 PM

முதல் படத்திலேயே தனது திறமையை வம்சம் ‘அருள்நிதி’ வம்சம் படத்துக்குப் பிறகு ஏராளமான கதைகளை கேட்டு வந்தார். இந்நிலையில் இரண்டு கதைகளை மட்டும் ஓகே செய்திருந்தார் அருள்நிதி. ஒன்று ஈரம் அறிவழகன் கூறிய கதை. இரண்டாவது அறிமுக இயக்குனர் சாப்ளினுடையது. ஆனால் சாப்ளினை அழைத்து படத்தை தொடங்குவதற்கான உத்தரவை வழங்கியிருக்கிறார் அருள்நிதியின் தந்தையும், படத்தை தயா‌ரிக்கப் போகிறவருமான மு.க.தமிழரசு. நகரத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. இந்தப் புதிய படத்துக்கு உதயன் என்று பெயர் வைத்துள்ளனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படம் முடிந்த பிறகு அறிவழகன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பார் என தெரிகிறது.


Source: Dinakaran
 

வனிதாவிடமே மகன் இருக்கலாம் :உச்ச நீதிமன்றம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வனிதாவிடமே மகன் இருக்கலாம் : உச்ச நீதிமன்றம்

1/18/2011 2:06:10 PM

நடிகை வனிதாவுக்கும், முதல் கணவர் ஆகாஷுக்கும் பிறந்த விஜய் ஸ்ரீஹரி, தனது தாயிடமே இருக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதுதொடர்பாக ஆகாஷ் தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. ஜனவரி 18-ந் தேதிக்கு பின்னர் விஜய்ஸ்ரீஹரியை, ஆகாஷ் வனிதாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இதில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து ஆகாஷ் உச்சநீதிமன்றத்தை அணுகினார்.
அதில் வனிதாவிடம் விஜய் ஸ்ரீஹரியை ஒப்படைக்க கூடாது. அவனை தன்னுடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தற்போது வனிதாவுக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளது. விஜய் ஸ்ரீஹரி, வனிதாவிடம் இருப்பதற்குத் தடை இல்லை என்று நீதிமன்றம் கூறி விட்டது. மேலும் ஆகாஷின் மனுவையும் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.


Source: Dinakaran