ப்ரீத்தி, நெஸ் வாடியா விவகாரம்: கோர்ட்டுக்கு வெளியே செட்டில் பண்ண முயற்சி?

மும்பை: நடிகை ப்ரீத்தி ஜிந்தா, தொழில் அதிபர் நெஸ் வாடியா பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ள முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.

இந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தா தான் 5 ஆண்டுகளாக காதலித்த தொழில் அதிபர் நெஸ் வாடியா மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். மேலும் வாடியா தன்னை 2009ம் ஆண்டு நடந்த பார்ட்டி ஒன்றில் அறைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ப்ரீத்தி, நெஸ் வாடியா விவகாரம்: கோர்ட்டுக்கு வெளியே செட்டில் பண்ண முயற்சி?

இந்நிலையில் ப்ரீத்தியை தொந்தரவு செய்தால் வாடியா குழுமம் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நிழல் உலக தாதா ரவி பூஜாரி நெஸ் வாடியாவின் தந்தை நுஸ்லி வாடியாவுக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதற்கிடையே இந்த பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ள ப்ரீத்தி, நெஸ் தரப்பில் முயற்சி செய்யப்படுவதாக முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ப்ரீத்தி இஷ்க் இன் பாரிஸ் என்ற படத்தை தயாரித்து நடித்தார். படம் புஸ்ஸானதால் அவர் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறார் என்று இந்தி மீடியாக்கள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

 

"காப்பாற்றுங்கள்..." பிரதமர் நரேந்திர மோடிக்கு விஜய் அவசர கடிதம்

சென்னை: சேவை வரியை ரத்து செய்து சினிமாவை காப்பாற்றுமாறு நடிகர் விஜய், பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

விஜய் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பல அரிய திட்டங்களாலும், அதிரடி நடவடிக்கையாலும், இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல போராடும் தங்களுக்கு பாராட்டுக்கள். மற்ற துறைகளை போன்று சினிமாத்துறையையும் தாங்கள் நேசிப்பவர் என்பதால் இந்த கோரிக்கையை தங்களுக்கு வைக்கிறேன்.

சினிமா மக்களை மகிழ்விக்கும் பொழுதுபோக்கு சாதனம் மட்டுமல்ல, அரசுக்கு பல கோடி வருவாயை ஈட்டித் தரும் துறையாகும். ஆனால் கடந்த பல வருடங்களாக சினிமா, கவனிப்பாரின்றி பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. பல திரையரங்குகள், திருமண மண்டபங்களாகவும், வணிக வளாகங்களாகவும் மாறி வருகின்றன.

மத்திய-மாநில அரசுகளுக்கு சினிமா மூலம் பலவிதமான வரிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் செலுத்தப்படுகின்றன. ஆனால் கடந்த ஆட்சியில் புதிதாக சுமத்தப்பட்ட சேவை வரியால் இந்திய சினிமா பெரிதளவில் பாதிப்படைந்துள்ளது. பல காலங்களாக இந்த தொழிலை மட்டுமே நம்பியிருந்த லட்சக்கணக்கான தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள், ஏற்றுமதியாளர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் என அனைவரும் பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக, சினிமா தொழிலில் கொடிகட்ட பறிந்த பல முன்னணி நிறுவனங்களும், முக்கிய தயாரிப்பாளர்களும் நஷ்டத்தாலும், விரக்தியாலும், வேறு தொழிலுக்கு செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

இதே நிலை நீடிக்குமானால் திரைப்படம் எடுக்க முதலீட்டாளர்கள் பயந்து ஒதுங்கிவிடுவார்கள். இதனால் சினிமா தொழில் பாதிக்கப்படுவதோடு இந்த தொழிலை நம்பியிருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்களும் வேலையிழக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். மேலும், கடந்த ஆட்சியில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சரத்குமார், மம்முட்டி, மோகன்லால், வெங்கடேஷ், பவன்கல்யாண் மற்றும் இந்திய திரைப்பட வர்த்தக சபைகளும், இந்திய தொழிலாளர் சம்மேளனும், சேவை வரியை ரத்து செய்ய போராடி, மனுக்களும் கொடுத்துள்ளார்கள். இருப்பினும் திரையுலகிற்கு எதிராக சேவை வரி உள்ளது.

ஆகவே சினிமாத்துறைக்கு எதிராகவும், சினிமாத்துறையை நசுக்கிவரும் சேவை வரியை நீக்கி அழிந்து வரும் இந்திய திரையலகை காப்பாற்றும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதன்மூலம் பல தரமான படைப்புகள் வருவதோடு உலக அரங்கில் இந்திய படைப்புகளும் பேசப்படும். மேலும், பல புதிய முதலீட்டாளர்களும், புதிய திறமையாளர்களும் இந்திய சினிமாவுக்கு வருவார்கள். உலக அரங்கில் இந்திய சினிமா முதன்மை இடத்தை பிடிக்க உற்சாகம் ஊட்டுமாறு சக கலைஞனாக தங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜய் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழகம் வந்த நரேந்திரமோடியை விஜய் சந்தித்து பேசியிருந்தது நினைவுகூறத்தக்கது.

 

மாப்பிள்ளை திருடனாகவே இருந்தாலும், திருமணத்தை நிறுத்தும் ஐடியா இல்லை!- இனியா

திருவனந்தபுரம்: வீட்டில் பணம் திருடிய காதலனுடன் நிச்சயமான தன் சகோதரி திருமணத்தை ரத்து செய்யும் எண்ணமில்லை என்று நடிகை இனியா கூறியுள்ளார்.

தமிழில் வாகை சூடவா, மவுன குரு, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இனியா. முன்னணி நடிகையாக உள்ள இவருக்கு சுவாதி என்ற அக்கா இருக்கிறார். இவர் மலையாளத்தில் டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். திருவனந்தபுரம் கரமணை அருகே உள்ள மருதூர்க் கடவு என்ற பகுதியில் வசிக்கின்றனர்.

மாப்பிள்ளை திருடனாகவே இருந்தாலும், திருமணத்தை நிறுத்தும் ஐடியா இல்லை!- இனியா

சுவாதிக்கும் அதே ஊரை சேர்ந்த ஷாபின் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். இரு வீட்டு பெற்றோர் சம்மதத்தோடும் சமீபத்தில்தான் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

திடீரென ஒரு நாள் இரவு சுவாதி திருமணத்துக்காக வாங்கப்பட்ட நகைகளும், ரூ.5 லட்சம் ரொக்கப் பணமும் திருட்டு போனது.

போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொள்ளையை நடத்தியவர் சுவாதிக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையான ஷாபின்தான் என்பது உறுதியானது. இதனால் இனியா குடும்பத்தினர் அதிர்ச்சியானார்கள். சுவாதிக்கும் ஷாபினுக்கும் நிச்சயமான திருமணம் ரத்தாகும் என கூறப்பட்டது.

ஆனால் அப்படி ஒரு எண்ணம் இல்லை என்று நடிகை இனியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "என் சகோதரி திருமணத்தை நாங்கள் ரத்து செய்யவில்லை. அது மாதிரி எந்த திட்டமும் இல்லை. வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. இந்த விஷயம் குறித்து என் சகோதரியிடம் நான் பேசவில்லை.

ஷாபின் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்தான். அவரது குடும்பம் எங்களை விட வசதியானது. ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு ஷாபின் வந்தார். என் அக்காவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். என் பெற்றோர் ஷாபின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரை சந்தித்து பேசினர். அதன் பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடிவானது.

ஷாபினுக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். தவறானவர்களுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதால் இப்படி நடந்து கொண்டாரே என்னமோ.. எங்களைப் பொருத்தவரை உண்மையான குற்றவாளி இன்னும் சிக்கவில்லை என்றுதான் நினைக்கிறோம், என்றார்.

 

சரிதா நாயரின் சோலார் ஊழல் படத்துக்கு தடை!

திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த சோலார் ஊழலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சோலாப் ஸ்வப்னம் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பல பெருந்தலைகளை உருட்டிய விவகாரம் சோலார் ஊழல் வழக்கு. இந்த ஊழலில் முக்கிய குற்றவாளியான சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். ஆட்சியிலிருந்தவர்களை வளைத்துப் போட்டு பல கோடியை அவர் சுருட்டியதாக கூறப்பட்டது.

நடிகை ஷாலு மேனனுக்கும் இந்த ஊழலில் தொடர்பு இருப்பதாக புகார் கூறப்பட்டது.

சரிதா நாயரின் சோலார் ஊழல் படத்துக்கு தடை!

நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த ஊழலை மையமாக வைத்து மலையாளத்தில் சோலார் ஸ்வப்னம் என்ற பெயரில் படம் தயாராகி உள்ளது.

இந்த படத்தை ராஜு ஜோசப் என்பவர் தயாரித்துள்ளார். படத்தை வெளியிடக்கூடாது என்று சோலார் ஊழலில் சம்பந்தப்பட்ட சரிதா நாயரும் பிஜு ராதாகிருஷ்ணனும் தன்னை நேரில் மிரட்டியதாக அவர் சமீபத்தில்தான் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் சோலார் சொப்னம் படத்துக்கு தடை விதிக்கக் கோரி திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் பிஜு ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி படத்தை ரிலீஸ் செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

 

இளையராஜா இசையில் பாடும் அமிதாப் பச்சன்!

இளையராஜா இசையமைக்கும் இந்திப் படமான ஷமிதாப்பில் ஒரு பாடல் பாடுகிறார் பாலிவுட்டின் சாதனை நடிகர் அமிதாப் பச்சன்.

பால்கி இயக்கும் இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், தனுஷ், அக்ஷரா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இளையராஜா இசையில் பாடும் அமிதாப் பச்சன்!

இதற்கு முன் பா படத்தில் இளையராஜா இசையில் அமிதாப் பச்சன் ஒரு பாடல் பாடியிருந்தார். அந்தப் பாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் ஷமிதாப் படத்திலும் அமிதாப் பச்சனை ஒரு பாடல் பாடுமாறு இளையராஜா கேட்டுக் கொள்ள, மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார் அமிதாப்.

இதுகுறித்து அமிதாப் பச்சன் கூறுகையில், "இசைமேதை இளையராஜாவின் அற்புதமான இசையில் அருமையான பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது.

இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்றும் முன்னணியில் இருப்பவர் இளையராஜா. அவர் ஒரு மேதை," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

ஷகிலா இயக்கும் படம்... வேறென்ன, பலான விவகாரம்தான் கதை!

தெலுங்கில் ஒரு படத்தை இயக்குகிறார் முன்னாள் கவர்ச்சி நடிகை ஷகிலா என்பது பழைய செய்தி.

அது என்ன மாதிரியான படம் என்று விசாரித்தால்... கிட்டத்தட்ட அவர் முன்பெல்லாம் மலையாளத்தில் நடித்தாரே அந்த மாதிரி பி கிரேடு கதைதான் என்பது தெரிய வந்தது.

ஷகிலா இயக்கும் படம்... வேறென்ன, பலான விவகாரம்தான் கதை!

அந்தப் படத்துக்காக கொஞ்சம் தனது சொந்தக் கதையையும் சேர்த்து திரைக்கதை தயார் செய்திருக்கிறாராம்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என்ற பெயரில், பாலியல் சமாச்சாரங்களையே பிரதானமாக இந்தக் கதையில் எடுக்கப் போகிறாராம்.

"இன்றைக்கு பெண்களுக்கு எதிராக அதிகம் நடப்பது செக்ஸ் வன்முறைகள்தான். அதனால் அத்தகைய சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படத்தை எடுக்கிறேன். இப்படிப்பட்ட கொடுமைகளைத் தட்டிக் கேட்கும் ஒரு பெண்தான் இந்தப் படத்தின் நாயகி," என்று அவர் ஒப்புதல் வாக்குமூலமும் தந்துள்ளார்.

மேலும், "சினிமா நடிகை ஆன பிறகுதான், படம் இயக்குவதில் ஆர்வம் பெருகிறது. என் நீண்ட நாள் கனவு இதன் மூலம் நிறைவேறிவிட்டது," என்றார்.

 

ஓவர் அலம்பல் பண்ணும் ஹீரோ: புலம்பித் தள்ளும் இயக்குனர்

சென்னை: சிறுத்தை நடிகரால் அவரை வைத்து படம் இயக்கி வருபவர் புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

சிங்கத்தின் கெரியர் ஏறுமுகமாக இருந்தாலும் அவரது தம்பி சிறுத்தையின் கெரியர் சற்று மந்தமாகவே உள்ளது. அண்மையில் அவர் நடிப்பில் வந்த படங்கள் எல்லாம் பப்படமானது. இதனால் வருத்தத்தில் இருந்த தம்பி நடிகர் தற்போது போலிகத்தி பட இயக்குனரின் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு என்று நடிகர் மெனக்கெட்டு உடல் எடையை எல்லாம் குறைத்துள்ளாராம். ஆனால் படத் தலைப்பை தேர்வு செய்வதில் நடிகர் தலையிட்டு இயக்குனரை படாதபாடுபடுத்திவிட்டாராம்.

படத்திற்கு தேர்வு செய்யப்பட்ட தலைப்புகளை நடிகர் மூன்று முறை மாற்ற வைத்தாராம். இறுதியில் ஒரு தலைப்பை தேர்வு செய்துள்ளனர். அதை பாதிமனதாக ஏற்றுக் கொண்ட நடிகர் இது எல்லாம் ஒரு தலைப்பா, நல்லாவே இல்ல என்று கூறுகிறாராம்.

நடிகர் படுத்தும்பாடை பார்த்து இயக்குனர் அதை தாங்க முடியாமல் புலம்புகிறாராம்.

 

நள்ளிரவு பார்ட்டியில் ரகளை: விஷயத்தை அமுக்க போலீசுக்கு பணம் கொடுத்த நடிகை

சென்னை: ஜல் ஜல் நடிகை இரவு நேர பார்ட்டிக்கு சென்று அங்கு ரகளையாகி மேட்டரை அமுக்க போலீசாருக்கு பணம் கொடுத்தாராம்.

தமிழ், தெலுங்கில் நடித்து வரும் பெரிய கண்களை கொண்ட ஜல் ஜல் நடிகை இந்தியிலும் நடித்துள்ளார். பாலிவுட்டில் அவருக்கு மவுசு இல்லாததால் மார்க்கெட் உள்ள கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

அம்மணி கையில் தற்போது தெலுங்கு படங்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் படப்பிடிப்பு இல்லாதபோது அவர் தனது நண்பர்களுடன் இரவு நேர பார்ட்டிகளுக்கு செல்கிறாராம். அப்படி அண்மையில் அவர், நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றுள்ளார்.

பார்ட்டியில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று இருக்க இறுதியில் பெரிய ரகளையாகிவிட்டதாம். விஷயம் வெளியே வந்தால் தனக்கு பிரச்சனையாகிவிடும் என்று நினைத்த நடிகை போலீசாருக்கு பணம் கொடுத்து மேட்டரை வெளியே வரவிடாமல் அமுக்கிவிட்டாராம்.

நடிகைகள் இரவு நேர பார்ட்டிக்கு செல்வதும், அங்கு ரகளையாவதும் இது ஒன்றும் முதல் முறை அன்று.