மன்மதன் -2 நயன்தாராவின் கதையாமே!!

Is Manmathan 2 Shoot On Nayan S Rea

அடுத்தவர் பிரைவசி பற்றியெல்லாம் கவலைப்படாமல், தனது அனுபவங்களை காட்சிகளாக வைப்பது சிம்பு வழக்கம்.

கிட்டத்தட்ட அது தொட்டில் பழக்கம். மாற்ற முடியுமா...

இப்போது, தானும் நயன்தாராவும் காதலித்தது, இருவரும் பிரிந்தது, ஒருவரையொருவர் குற்றம்சாட்டி பேட்டிகள் கொடுத்தது, அதன் பிறகு நயன்தாராவுக்கு பிரபு தேவாவுடன் ஏற்பட்ட காதல் போன்றவற்றை கொஞ்சம் விரசமாகவே மன்மதன் 2 படத்தில் காட்சிப்படுத்தப் போகிறாராம்.

இந்தப் படத்தில் திரிஷா, அனுஷ்கா, இலியானா, தமன்னா உள்பட 6 நாயகிகள் நடிப்பது தெரிந்திருக்கும். இப்போது நயன்தாரா வேடத்தில் நடிப்பது யார் என்பதில் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லையாம் சிம்பு.

ஏஆர் ரஹ்மான் இசையமைப்பதாகக் கூறப்படும் மன்மதன் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. சிம்புவே படத்தை திரைக்கதை அமைத்து இயக்குகிறார்.

 

கமல் என்ற 'ஆச்சர்ய'த்திடம் வாழ்த்துப் பெற்ற புது இயக்குநர்!

Kamal Blesses Debutant Director  
சில ஆண்டுகளுக்கு முன் கமல் ஹாஸன் திரைக்கதை பயிற்சிப் பட்டறை ஒன்றை ஐஐடி வளாகத்தில் நடத்தியதும், அதில் 250 க்கும் அதிகமான இளம் படைப்பாளிகள், ஆர்வலர்கள் பங்கேற்றதும் நினைவிருக்கலாம்.

அந்தப் பட்டறையில் பங்கேற்றவர்களில் ஒருவரான ஹர்ஷவர்த்தன் இப்போது 'ஆச்சர்யங்கள் அன்லிமிடட்' என்ற படத்தை உருவாக்கியுள்ளார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல் காட்சிகளை தனது 'குரு' கமல்ஹாஸனிடம் காட்டி வாழ்த்திப் பெற்றுள்ளார்.

இதுகுறித்து ஹர்ஷவர்த்தன் கூறுகையில், "30 ஆண்டுகளாக நான் விரும்பும் சினிமாவை எடுக்க ரத்தம் சிந்தி வருகிறேன். இனியும் சிந்தத் தயாராக இருக்கிறேன், என்று திரைக்கதைப் பயிற்சிப் பட்டறையில் கமல் சார் கூறியதுதான் என்னை இந்த சினிமா எடுக்க வைத்தது. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் என்னைப் போன்றவர்களுக்கும் பங்கிருப்பதை உணர வைத்தவர் கமல்தான்.

அதன் விளைவுதான் ஆச்சர்யங்கள் என்ற படம். இந்தப் படத்தில் பாடல்கள் கிடையாது. விறுவிறுப்பான திரைக்கதையை நம்பி எடுத்துள்ளேன்.

இந்தப் படத்தை கமல் சாரிடம் காட்டி ஆசி பெற விரும்பினேன். நான், கேமரா மேன் மற்றும் ஹீரோ மட்டும் போய் கமலைப் பார்த்து படத்தின் ட்ரைலர் மற்றும் காட்சிகளைக் காட்டினோம். நான் யாரிடமும் உதவியாளராக இருந்ததில்லை என்ற தகவலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட கமல், படம் குறித்து நிறைய பேசினார்.

எனக்கு வாழ்த்துகளையும் அறிவுரைகளையும் கூறி அனுப்பி வைத்தார். மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணம் அது," என்றார்.
 

அரைகுறை ஆடை அணிந்ததற்காக கத்ரீனாவை சல்மான் அடித்தாரா?

Did Salman Khan Beat Katrina Kaif
ஏக் தா டைக் இந்தி படப்பிடிப்பில் சல்மான் கான் நாயகி கத்ரீனா கைபை அடித்தார் என்று கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் காதலர்களாக வலம் வந்த பாலிவுட் நடிகர் சல்மான் கானும், நடிகை கத்ரீனா கைபும் சேர்ந்து தற்போது ஏக் தா டைகர் என்ற இந்தி படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது சல்மான் கான் கத்ரீனா கைபை அடித்துவிட்டதாக சினிபிலிட்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.

இது குறித்து அந்த பத்திரிக்கையில் வெளியான செய்தி,

கத்ரீனா கைப் ரெடியாகி வருவதற்காக சல்மான் கான் செட்டில் காத்திருந்தார். வேனிட்டி வேனில் இருந்து வெளியே வந்த கத்ரீனா உடம்போடு ஒட்டி கிளீவேஜ் தெரியும் அளவுக்கு, உடம்பின் பெரும்பாலான பகுதிகள் தெரியும் அளவுக்கு அரை குறையாக ஆடை அணிந்து வந்தார். இதைப் பார்த்த சல்மான் கான் கடுப்பாகி என்ன டிரெஸ் போட்டிருக்க என்று கேட்டுள்ளார். அதற்கு கத்ரீனா நான் என்ன செய்ய இயக்குனர் சொன்ன ஆடையைத் தான் அணிந்துள்ளேன் என்று கூலாக சொன்னார். உடனே சல்மான் இயக்குனர் எங்கே, நான் அவரைப் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி கெட்டவார்த்தைகளால் திட்டி கத்ரீனாவை அடித்தார் என்று அதில் செய்தி வெளியானது.

ஆனால் இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று கத்ரீனாவின் தோழி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்,

இந்த செய்தி முற்றிலும் தவறானது. அவர்கள் பிரிந்துவிட்டாலும் எந்தவித பகையும் இல்லாததால் தான் ஒன்றாகச் சேர்ந்து நடிக்கின்றனர். டப்ளின் மற்றும் இஸ்தான்புல்லில் நடந்த படப்பிடிப்புகளில் அவர்கள் நன்றாகப் பழகியுள்ளனர். கத்ரீனா மீது சல்மானுக்கு அக்கறை அதிகம். மக்கள் பல்வேறு கதைகளை உருவாக்குவார்கள். அவர்கள் இருவரும் விருது வழங்கும் விழாவுக்கு வராததால் வதந்திகள் பரவுகிறது.

கத்ரீனா கைப் வசம் பல படங்கள் உள்ளன. ஊடகங்கள் பரப்பும் வதந்தியையெல்லாம் கண்டுகொள்ள அவருக்கு நேரமில்லை. கால்ஷீட் பிரச்சனையால் கரண் ஜோஹாரின் தோஸ்தானா 2ம் பாகத்தில் நடிக்க வந்த வாய்ப்பை அவர் தட்டிக்கழித்தார் என்றார்.
 

2வது மனைவியிடமிருந்து டைவர்ஸ் வாங்கித் தந்த வக்கீலையே 3வது விவாகரத்துக்கும் பிடித்த டாம் க்ரூஸ்!

Tom Cruise Hires The Same Lawyer He Used Nicole Split
நம்மூரில்தான் இல்லாததற்கும் பொல்லாததற்கும் ராசி பார்ப்பார்கள். ஆனால் ஹாலிவுட்டிலும் கூட அதே பஞ்சாயத்துத்தான் போல. ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் க்ரூஸ் தனது 3வது மனைவியான நடிகை கேத்தி ஹோம்ஸை விவாகரத்து செய்வதற்கு, ஏற்கனவே 2வது மனைவியான நடிகை நிக்கோல் கிட்மேனை விவாகரத்து செய்ய பயன்படுத்திய அதே வக்கீலையே பிடித்துள்ளாராம்.

ஹாலிவுட் ஹாட் ஸ்டார் க்ரூஸின் முதல் மனைவி மிமி ரோஜர்ஸ். இவருடன் 1987 முதல் 90வரை குடித்தனம் நடத்தினார் க்ரூஸ். அதன் பிறகு நடிகை நிக்கோல் கிட்மேனுடன் குடித்தனம். இது 1990 முதல் 2001 வரை நீடித்தது. அதன் பின்னர் 5 ஆண்டுகள் கேப் விட்டு, 2006ல் கேத்தி ஹோம்ஸை மணந்தார். அந்த வாழ்க்கை தற்போது முடிவுக்கு வருகிறது.

இதற்காக அவர் பிடித்துள்ள வக்கீல்தான் டென்னிஸ் வாசர். இவர்தான் கிட்மேனுக்கும், க்ரூஸுக்கும் விவாகரத்து வாங்கித் தந்தவர். தற்போது கேத்தி ஹோம்ஸ், க்ரூஸ் விவாகரத்தையும் இவரே வாங்கித் தரப் போகிறார்.

ஜூன் 28ம் தேதி விவாகரத்து கோரி கேத்தி ஹோம்ஸ், நியூயார்க் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், தனது திருமணத்தை முடித்து வைக்குமாறும், தனது 6 வயது பெண் குழந்தையான சூரியை தன் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

ஆனால் எப்பாடுபட்டாவது தனது மகளை தானே வளர்க்க வேண்டும் என்பதில் க்ரூஸ் தீவிரமாக உள்ளார். இதனால் வாதத் திறமை கொண்ட டென்னிஸ் வாசரை பிடித்துள்ளார். இவர் கிட்மேன், க்ரூஸ் விவாகரத்து வழக்கின்போது மிகத் திறமையாக வாதாடி, கிட்மேன், க்ரூஸ் ஆகியோரின் வளர்ப்புப் பிள்ளைகளான கானர் மற்றும் இசபெல்லாவை க்ரூஸ் வசம் மீட்டுக் கொடுத்தவர் என்பது நினைவிருக்கலாம்.

எனவே இம்முறை 6 வயது சூரியை டாம் க்ரூஸ் பெறுவதற்கு இவர் பாடுபட் போகிறார்.

பார்க்கலாம் வெல்லப் போவது க்ரூஸா அல்லது கேத்தி ஹோம்ஸா என்று...
 

கவுதம் மேனன் படத்திலிருந்து ரிச்சா விலகல்!

Richa Of Goutham Menon Film   
பெரிய இயக்குநர்களின் படங்களிலிருந்து நடிகைகள் ஓட்டம் பிடிப்பது இப்போது அடிக்கடி நடக்கிறது.

சமந்தா, ஹன்ஸிகா, கார்த்திகா வரிசையில் இப்போது, பெரிய இயக்குநர் படத்திலிருந்து விலகியிருப்பவர் ரிச்சா கங்கோபாத்யாய்.

ஜெய்-சந்தானம் நடிக்கும் தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் ரிச்சா. படப்பிடிப்பு அடுத்த வாரம் ஹைதராபாதில் தொடங்கவிருந்த நிலையில், கால்ஷீட் பிரச்சினையால் அந்தப் படத்திலிருந்து ரிச்சா விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தை கவுதம் மேனனின் போட்டோன் கதாஸ் தயாரிக்கிறது.

படத்திலிருந்து தானே விலகிக் கொண்டதாக ரிச்சா கூறிவரும் நிலையில், 'படத்தின் கதாநாயகன் ஜெய்யை விட மூத்த பெண் போல ரிச்சா தோற்றமளிப்பதாகக் கூறி ரிச்சாவை படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக' கவுதம் மேனன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே படத்தின் கதாநாயகியாக அபிநயா தேர்வு செய்யப்பட்டு கால்ஷீட் பிரச்சினை காரணமே அவர் வெளியேறிவிட்டது நினைவிருக்கலாம்!
 

த்ரிஷா - லட்சுமி ராய்... ஓய்ந்தது சண்டை; துபாயில் ஜாலி பார்ட்டி!

Trisha Lakshmi Rai Put Full Stop Their Enmity
மங்காத்தா படத்தில் ஆரம்பித்தது அந்த சண்டை. லட்சுமிராயும், த்ரிஷாவும் நடித்த அந்தப் படத்தில், த்ரிஷா ஒப்புக்குதான் ஹீரோயின். கலக்கியது லட்சுமி ராய்தான்.

இதில் த்ரிஷாவுக்கு ஏக மனவருத்தம். காரணம், இந்த இரு வேடங்களையும் முதலில் த்ரிஷாவிடம் சொல்லி, விரும்பிய வேடத்தில் நடிக்குமாறு சாய்ஸ் கொடுத்திருந்தாராம் வெங்கட் பிரபு. அதில் த்ரிஷா வேண்டாம் என்ற வேடத்தில் லட்சுமிராய் கலக்கிவிட்டார் என்று செய்திகள் வெளியானதன் விளைவு, லட்சுமி ராய் பற்றி த்ரிஷா வெளிப்படையாக கமெண்ட் அடித்தார்.

பதிலுக்கு லட்சுமி ராய் போட்டுத் தாக்க, கடந்த ஓராண்டு காலமாக நீடித்தது இருவருக்கும் பனிப்போர். இருவரும் விழாக்களில் சந்திப்பதைக் கூட தவிர்த்தனர்.

இப்போது இருவரும் சண்டைக்கு பை சொல்லி, நட்புக்கு ஹாய் சொல்லியுள்ளனர்.

சமீபத்தில் நடந்த துபாய் விருது வழங்கும் விழாவில் லட்சுமி ராயும் த்ரிஷாவும் அருகருகே அமரும் வாய்ப்பு. விழாவுக்குப் பின்னர், நட்சத்திர ஓட்டலில் விடிய விடிய நடந்த பார்ட்டியின்போது, இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொண்டார்களாம்.

தொடர்ந்து, இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டு, நெருங்கிய தோழிகளாகிவிட்டார்களாம். விருந்து முடியும் வரை பிரியாமலிருந்தவர்கள், பிரியா விடைபெற்று வீடு திரும்பியதாக நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்!
 

பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் டோக்கியோவில் கோச்சடையான் ஆடியோ ரிலீஸ்!!

Kochadaiyaan Audio Launch Tokyo   
சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் பட இசை வெளியீட்டை இந்த முறை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்துகின்றனர்.

ஆடியோ வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இந்தப் படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில், வைரமுத்து வரிகளில் 5 பாடல்களும் ஒரு தீம் மியூசிக்கும் படத்தில் இடம்பெற்றுள்ளன. ஒரு பாடலை ரஜினியே பாடியுள்ளார்.

ரஜினியின் முந்தைய படமான எந்திரன் இசை வெளியீட்டை மலேசியாவில் சன் டிவி நடத்தியது குறிப்பிடத்தக்கது.

படத்தை சூப்பர் ஸ்டார் ரஜியின் பிறந்த நாளான 12.12.12-ல் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டனில் பிரிமியர் ஷோக்கள்

இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு டோக்கியோவில் என்றால், படத்தின் சிறப்புக் காட்சிகள் லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், சிங்கப்பூர் போன்ற நகரங்களில் நடக்கவிருக்கிறது.

இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னையில் பிரிமியர் ஷோக்களை நடத்தவிருப்பதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

100 சதவீதம் ஹாலிவுட் ஸ்டைலில் படத்துக்கு புரமோஷனல் வேலைகளைச் செய்து வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.

ரஜினி கலந்து கொண்ட கோச்சடையான் பிரஸ் மீட்டே லண்டனில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
 

கோச்சடையான் - ரஜினி ஆட்டோகிராப், பஞ்ச் வசனங்களுடன் 5 லட்சம் சிறப்பு மொபைல் போன்கள்!

Kochadaiyaan Special Mobiles With Thalaivar Autograph
கோச்சடையான் படத்தின் வெளியீட்டைக் கொண்டாடும் வகையில், 5 லட்சம் மொபைல் போன்களை வெளியிடுகின்றனர்.

இதற்காக கார்பன் மொபைல் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளனர் தயாரிப்பாளர்கள்.

இந்த மொபைல் போன்களில் கோச்சடையான் படத்தின் மேக்கிங் வீடியோக்கள், சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாய்ஸ் மற்றும் பஞ்ச் டயலாக்குகள் லோட் செய்யப்பட்டிருக்கும்.

மொபைலின் பின்பக்கத்தில் ரஜினியின் ஆட்டோகிராப் (கையெழுத்து) இடம்பெற்றிருக்கும்.

மொத்தம் 5 லட்சம் மொபைல்களை கார்பன் நிறுவனம் இதற்காக பிரத்தியேகமாகத் தயாரிக்கிறது. ஒரு திரைப்பட வெளியீட்டுக்காக இப்படி சிறப்பு மொபைல் போன்கள் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.
 

ரியாலிட்டி ஷோக்களுக்கு நோ சொல்லிட்டேன்: சின்னத்திரை ஸ்ரீவித்யா

Small Screen S Neelambari Srividya
தென்றல் தொடரில் சைக்கோ கேரக்டரில் நடித்து இல்லத்தரசிகளிடம் திட்டு வாங்கியவர் ஸ்ரீ வித்யா. திருமணம் முடிந்த உடன் சீரியலுக்கு கொஞ்சம் பிரேக் விட்டிருக்கிறார். மணவாழ்க்கையை ஜாலியாக அனுபவித்துக் கொண்டிருந்தவரிடம் அவரின் சின்னத்திரை பயணம் குறித்து கேட்டோம்.

சிறுமியாக இருந்தபோதே சினிமாவில் பெரிய நடிகையாக வர வேண்டும் என ஆசைப்பட்டேன். அது போலவே இப்போது எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் நடிகை ஆகி விட்டேன். ஆனால் சினிமா மட்டும் "மிஸ்' ஆகி விட்டது. பள்ளிப் பருவமே என்னை நடிகையாக்கி விட்டது. பள்ளியில் நடக்கும் நாடகங்களில் நடித்ததுதான் என்னை இங்கு கொண்டு வந்திருக்கிறது. நடிக்க வேண்டும் என முடிவெடுத்த பிறகு சினிமாதான் என் கண்களில் தெரிந்தது.

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் திரைப்படத்தில் எட்டு வயதில் நடிக்க ஆரம்பித்தேன். ஒரு சில சினிமாக்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த பின்னர் சீரியல் ஆர்வம் தொற்றிக் கொண்டது. சீரியல் சூட்டிங், ரியல் எஸ்டேட் புரமோட்டர்ஸ் காம்பயரிங், படிப்பு, விளம்பர சூட்டிங் அப்படின்னு பரபரப்பா போயிட்டு இருந்தது. திருமணத்திற்காக சீரியலுக்கு கொஞ்சநாள் பிரேக் விட்டு வாழ்க்கையை ரசிச்சுகிட்டு இருக்கேன் என்றார்.

சினிமாவில் சாதிக்க முடியாததை சீரியல்களில் சாதித்து விடலாம் என்ற எண்ணத்தால் நான் சீரியல் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டேன். சீரியலில் ஒரே நேரத்தில் பல வித கேரக்டர்களை செய்வது எனக்கு பிடித்திருக்கிறது. சினிமாவில் எவ்வளவுதான் உழைத்தாலும் இப்போது சீரியல்களில் வாங்கியுள்ள பெயரை வாங்க முடியாது என்றே நினைக்கிறேன்.

ஏனெனில் சினிமாவில் நாயகனுக்கும் நாயகிக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் சீரியல்கள், ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்து அலங்கரிக்கின்றன. நானும் அவ்வப்போது ஓரிரு சினிமாக்களில் வருவேன். அதுவும் சினிமா நண்பர்களால்தான். மற்றபடி எனக்கு சினிமாவில் ஆர்வம் குறைந்து விட்டது. சினிமாக்களைப் பார்ப்பதோடு மட்டும் சரி.

இப்போது எல்லோர் வீட்டிலும் அமைதியான பெண்ணாக, துறுதுறு மாணவியாக, அழகான காதலியாக, அன்பான மகளாக, சில நேரங்களில் வில்லியாக வலம் வந்து கொண்டிருக்கிறேன்.

சினிமாவில் உச்சக்கட்டத்தில் இருந்த நடிகைகளே இறுதியாக வந்து சேரும் இடம் சீரியல் என்பதில் என்னைப் போன்றவர்களுக்கு கொஞ்சம் பெருமைதான். அவர்களோடு போட்டி போட்டு நடிப்பதில் சந்தோஷம் இருக்கிறது. அந்த போட்டி நிச்சயம் சீரியல் உலகத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.

எனக்கு கர்நாடக சங்கீதம் தெரியும். எத்தனையோ ரியாலிட்டி ஷோக்களில் நடனமாடவும், ஜட்ஜ் ஆக பங்கேற்கவும் அழைப்பு வருகிறது. ஆனால் அதற்கெல்லாம் நேரமில்லாததால் பெரிய நோ சொல்லிவிடுகிறேன் என்று கூறி சிரித்தார் சின்னத்திரை நீலாம்பரியான ஸ்ரீ வித்யா.
 

கொட்டும் மழையில் 'சிக்ஸ் பேக்' காட்டி ஆடிப் பாடி அதிர வைத்த ஜெனீபர் லோபஸ்!

Jennfier Rocks Brazil With Her Six Pack Abs
வயசானாலும் உன்னோட ஸ்டைல் மட்டும் இன்னும் மாறவே இல்லை என்று படையப்பாவில் ரஜினியைப் பார்த்து ரம்யா கிருஷ்ணன் 'சைட்' அடித்துக் கூறுவார். அது நிச்சயம் ஜெனீபர் லோபஸுக்கும் பொருந்தும். அவருடைய பாடல்களுக்கு அடிமையானவர்களை விட அவரது அசரடிக்கும் அந்த அமைதியான அழகுக்கு அடிமையாக இருப்பவர்கள்தான் அதிகம்.

இன்று 42 வயதில் இருக்கும் ஜெனீபருக்கு உலகம் முழுவதும் இன்னும் ரசிகர்களிடம் மவுசு குறையவில்லை. இந்தநிலையில் 48 இசைக் கச்சேரிகளுடன் புதிய உலகப் பயணத்தைத் தொடங்கியுள்ள ஜெனீபர் லோபஸ் பிரேசில் நாட்டில் அதிரடியான ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தி அனைவரையும் அசத்தி விட்டார்.

கொட்டும் மழையில் அவரது இசை நிகழ்ச்சி நடந்தது. மழையைப் பொருட்படுத்தாமல், ஜெனீபரோடு கூடவே பாடி நிகழ்ச்சியை ரசித்துப் பார்த்தனர் பிரேசில் ரசிகர்கள்.

பிரேசிலின் ரெசிப் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது ஜெனீபர் தனது அசர வைக்கும் குரலை மட்டுமல்லாமல், தனது 6 பேக் உடல் வனப்பையும் காட்டி அனைவரையும் திக்குமுக்காட வைத்தார். இவருக்கா 42 வயது என்று அத்தனை பேரும் வாயடைத்துப் போகும் வகையில் மின்னல் போல மேடையில் ஏறிப் பாடி ஆடினார் ஜெனீபர்.

அவரது குரல் வசீகரமும், உடல் கட்டுக்கோப்பும் அனைவரையும் ஜெனீபர் பைத்தியங்களாக்கி விட்டது. நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் முடிவு வரை ரசிகர்கள், மழையைப் பொருட்படுத்தாமல் அனுபவித்து ரசித்தது ஜெனீபரையும் உற்சாகத்தில் ஆழ்த்தி விட்டது.

இந்த நிகழ்ச்சியுடன் தனது உலக சுற்றுப்பயணத்தின், தென் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டார் ஜெனீபர். அதன் பின்னர் தனது சொந்த ஊரான நியூயார்க்குக்கு சிறிய ஓய்வுக்காக கிளம்பிச் சென்றார்.

தனது பிரேசில் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு ஜெனீபரை திக்குமுக்காட வைத்துள்ளது. அத்தனை ரசிகர்களுக்கும் தனது நன்றிகளைக் கூறிக் கொள்வதாக டிவிட்டர் மூலம் தகவல் தெரிவித்துள்ளார் ஜெனீபர்.

அடுத்து தொடரப் போகும் தனது இசை நிகழ்ச்சியில், 25 வயதான தனது காதலரும், டான்ஸருமான கேஸ்பர் ஸ்மார்ட்டுடன் இணைந்து கலக்கப் போகிறார் ஜெனீபர் லோபஸ்.

பழசு பழசுதாம்ப்பா...!
 

எனக்கே என் தொடைகளைப் பிடிக்கவில்லை... கிம் கர்தஷியான்!

Kim Kardashian Hates Her Thighs   

31 வயதாகும் நடிகை, மாடல் கிம் கர்தஷியானுக்கு அவரது தொடைகளைப் பிடிக்கவில்லையாம். நான் ஒன்றும் முழுமையான அழகி இல்லை. என்னிடமும் அழகற்ற சில அவயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக எனது தொடைகளை எனக்கே பிடிக்காது என்று வெளிப்படையாக பேசியுள்ளார் கிம்.

மேலும் அவர் கூறுகையில், நிச்சயமாக எனக்கு எனது தொடைகளைப் பிடிக்காது. இதைக் கூற நான் வருத்தப்படவி்ல்லை. எல்லாப் பெண்களையும் போலத்தான் நானும். என்னிடமும் சில வெறுப்பூட்டும் விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது.

பிகினி அணியும்போதெல்லாம் எனக்கு எரிச்சலாக இருக்கும். இதனால் குவிக்டிரிம் கிளென்சிங் செய்து கொண்ட பின்னரே பிகினிக்கு மாறுவேன். அதேபோல போட்டோ ஷூட்டின்போதும் இதேபோல செய்த பிறகே போஸ் கொடுக்க ஆரம்பிப்பேன் என்கிறார் கிம்.

கிம் சமீபத்தில் ஒரு டிவிக்கு அளித்த விலாவாரியான பேட்டியில் தனது தாயாரின் கள்ளக் காதல் குறித்துக் கூறியுள்ளார். அதாவது 25 வருடங்களுக்கு முன்பு இந்த கள்ளக்காதல் ஏற்பட்டதாம். தனது தாயாரே இதை தன்னிடம் கூறியதாக புன்னகைத்தபடி கூறுகிறார் கிம்.

என்ன குடும்பம்டா சாமீ...!

 

கோச்சடையான் ஒளிபரப்பு உரிமை - பெரும் விலைக்கு வாங்கியது ஜெயா டிவி!

Jaya Tv Grabs Kochadaiyaan Telecast Rights

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் தொலைக்காட்சி உரிமை ஆளுங்கட்சிக்கு சொந்தமான ஜெயா டிவிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை படத்தின் தயாரிப்பாளர்களான ஈராஸ் மற்றும் மீடியா ஒன் குளோபல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ரஜினி, தீபிகா, சரத்குமார் உள்பட பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள 3டி படமான கோச்சடையான் உரிமையை வாங்க பெரிய தொலைக்காட்சிகள் அனைத்தும் ஆர்வம் காட்டின.

ஆனால் இந்த உரிமையை இம்முறை வாங்கியிருப்பது... ஜெயா தொலைக்காட்சி.

தமிழ் சினிமா மட்டுமல்ல.. இந்திய சினிமாவில் எந்தப் படத்துக்கும் தராத அளவுக்கு பெரும் விலையை இந்தப் படத்துக்கு தந்துள்ளது ஜெயா தொலைக்காட்சி.

இந்தி மற்றும் தெலுங்கு ஒளிபரப்பு உரிமைக்கு ஜீ, சோனி மற்றும் ஜெமினி தொலைக்காட்சிகள் மோதி வருகின்றன.

12.12.12-ல் படம் ரிலீஸ்

படத்தை சூப்பர் ஸ்டார் ரஜியின் பிறந்த நாளான 12.12.12-ல் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.