ஹாலிவுட் ஸ்டார் மார்கன் ப்ரீமேன் பேத்தியை பேய் ஓட்டுவதாக கூறிக் கொன்ற காதலன்

லாஸ் ஏஞ்செல்ஸ்: மிகவும் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகரும் இயக்குனருமான மார்கன் ப்ரீமேனின் பேத்தி கொலை செய்யப்பட்டு இருக்கிறார், அவருக்கு பேய் ஓட்டுவதாகக் கூறி அவரது முன்னாள் காதலன் இந்த செயலை செய்திருக்கிறான்.

மிகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரான மார்கன் ப்ரீமேனின் முதல் மனைவியின் பேத்திதான் தற்போது இறந்திருப்பவர், இறந்த பெண்ணின் பெயர் ஈ டீனா ஹைன்ஸ் (33).

Hollywood Actor Morgan Freeman's step-granddaughter 'murdered by ex-boyfriend

நியூயார்க் நகரின் மத்தியில் ஈ டீனா விற்கு பேய் ஓட்டுவதாகக் கூறி அவரது முன்னால் காதலன் அவளைக் கொலை செய்திருக்கிறான், இதனால் ஏராளமான கத்திக் குத்துகளை வாங்கிய ஈ டீனா கொடூரமான முறையில் இறந்திருக்கிறார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த நியூயார்க் நகரவாசிகள் "அந்தப் பெண்ணை கத்தியால் குத்திக் கொண்டு பிசாசுகளே இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களைத் துரத்துகிறேன், பேய்களே இவள் உடலை விட்டு வெளியே செல்லுங்கள் என்று அவளின் காதலன் கூறியதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தைப் பார்த்த நகரவாசிகள் அந்தப் பெண்ணின் அலறலைக் கேட்டு நியூயார்க் போலீசிற்கு தகவல் அளித்துள்ளனர், ஆனால் அவர்கள் வருவதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.

இந்த சம்பவத்திற்குப் பின் மார்கன் ப்ரீமேன் பின்வருமாறு கூறியிருக்கிறார் "இந்த உலகம் அவளின் கலைத்திறமையை நன்கு அறியும், துரதிர்ஷ்டவசமாக அவள் இறந்து விட்டாள். கோடானுகோடி நட்சத்திரங்களின் இடையில் அவளும் ஒரு நட்சத்திரமாக மாறி வானில் மின்னுவாள்.

அவளின் ஆத்மா சாந்தி அடையட்டும்" என்று கூறியிருக்கிறார் தனது முதல் மனைவியின் பேத்தி என்றபோதிலும் மார்கன் ப்ரீமேன் அவளிடம் மிகுந்த அன்பு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

மார்கன் ப்ரீமேனுடன் கைகோர்த்து திரையுலக விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பலமுறை நடைபோட்டிருக்கிறார் ஈ டீனா, அந்த அளவிற்கு அந்தப் பெண்ணிடம் அன்பு செலுத்தினார் மார்கன் ப்ரீமேன்.

ஆனால் முட்டாள்தனமான காதலனால் அவள் தற்போது இறந்து விட்டாள், ஈ டீனாவின் முட்டாள் காதலனைக் கைது செய்த நியூயார்க் போலீசார் தற்போது அவனுக்கு கொலம்பியா மருத்துவமனையில் வைத்து மனநோயைக் குணப்படுத்தும் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கின்றனர்.

 

ரஜினியின் புதிய படத் தலைப்பு கபாலி.. உலக அளவில் ட்ரெண்டிங் ஆனது!

ரஜினியின் புதிய படத் தலைப்பான கபாலி உலக அளவில் இன்று ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனது.

இந்திய சினிமாவின் அடையாளம் என அழைக்கப்படும் ரஜினிகாந்த், லிங்கா படத்துக்குப் பிறகு மெட்ராஸ் இயக்குநர் ரஞ்சித் இயக்குநர் புதிய படத்தில் நடிக்கிறார்.


இந்தப் படத்தில் அவருடன் முற்றிலும் புதிய முகங்களாக, எந்த வகையிலும் வணிக மதிப்பற்ற கலை, தினேஷ், ராதிகா ஆப்தே போன்றவர்கள் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்துக்கு முதலில் காளி, பிறகு கண்ணபிரான் என தலைப்பிடப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இப்போது அந்தப் படத்துக்கு கபாலி என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கபாலி என்ற பெயர் மயிலாப்பூர் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் பிரபலமாக உள்ள பெயராகும். மயிலையில் சில ஆண்டுகள் முன்பு வரை கபாலி என்ற பெயரில் ஒரு திரையரங்கம் நடந்து வந்தது. உலகப் புகழ் பெற்ற கபாலீஸ்வரர் கோயில் உள்ளதும் இங்குதான்.

கபாலி என்ற பெயரில் வாழ்ந்த நிஜ தாதாவின் கதைதான் இந்தப் படம் என்றும் சொல்கிறார்கள்.

இந்தத் தலைப்பை அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் கபாலி என்பது உலக அளவில் ட்ரெண்டிங்கானது.

இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் கபாலி என்பது காமெயன் அல்லது காமெடி வில்லனின் பெயராக மட்டுமே இருந்தது. முதல் முறையாக இந்த கபாலி என்ற பெயர் நாயகனின், அதுவும் ஒரு சூப்பர் ஸ்டாரின் பெயராக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது!

 

ரஜினியின் புதிய அவதாரம் "கபாலி" ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த இயக்குநர் ரஞ்சித்

சென்னை: ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் என்ன கடந்த 3 மாதங்களுக்கும் மேல் ரசிகர்களின் மண்டையைக் குடைந்த இந்தக் கேள்விக்கு இன்று விடையளித்திருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.

படம் பேச்சுவார்த்தை ஆரம்பித்தது முதலே மாபெரும் எதிர்பார்ப்பு படத்தின் மீது எழ ஆரம்பித்தது, கதை என்ன யார் நடிக்கிறார்கள் போன்ற விவரங்களை எல்லாம் மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர் படக்குழுவினர்.

சமீபத்தில் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரங்களை வெளியிட்டனர், ஆனால் தலைப்பை மட்டும் வெளியிடவில்லை. முதலில் காளி என்று கூறினார்கள் பின்னர் அது கண்ணபிரானாக மாறியது.

சில நாட்களுக்கு முன்னர் கபாலி என்ற தலைப்பை வைத்திருப்பதாக உறுதிப்படுத்தப் படாத செய்திகள் வெளியாகின, இது தொடர்பாக தட்ஸ்தமிழில் நாமும் ஒரு செய்தியைக் கொடுத்திருந்தோம்.(கண்ணா என் பேரு காளியும் இல்லை கண்ணபிரானும் இல்லை கபாலிம்மா)

ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் யூகங்களை உறுதிபடுத்துவது போன்று ரஜினி - ரஞ்சித்தின் புதிய படத்திற்கு கபாலி என்றே பெயர் வைக்கப் பட்டிருக்கிறது. சற்று முன்பு இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் முறையாக அறிவித்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.


புதிய படத்தின் பெயர் கபாலி மகிழ்ச்சி தானே என்று ரசிகர்களைப் பார்த்து கேட்டிருக்கிறார், இதனால் மகிழ்ச்சியடைந்த ரஜினி ரசிகர்கள் தற்போது ட்விட்டரில் இதனை உலக அளவில் ட்ரெண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

கபாலி பேரக் கேட்டாலே சும்மா அதிருதில்ல...

 

100வது படத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலகுகிறார் பாலகிருஷ்ணா!

சினிமாவை விட்டு விலகப் போவதாக தெலுங்கு திரையுலகின் பிரபல நாயகன் பாலகிருஷ்ணா அறிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகராகத் திகழ்பவர் நடிகர் பாலகிருஷ்ணா. இவர் மறைந்த முன்னாள் நடிகரும், ஆந்திராவின் முதல்வருமாகத் திகழ்ந்த என்.டி.ராமாராவின் மகன்.

Balakrishna to say good bye to cinema

இவர், நடித்த பல படங்கள் தெலுங்கு திரையுலகில் பெரும் வெற்றிப் பெற்றன. சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போதே பாலகிருஷ்ணா தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், கடந்த 40 வருடங்களாக சினிமாவில் கோலாச்சி வரும் பாலகிருஷ்ணா, தற்போது சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். தனது 100-வது படத்தை முடித்த கையோடு சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் களமிறங்க பாலகிருஷ்ணா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பாலகிருஷ்ணா தற்போது தனது 99-வது படமாக ‘டிக்டேட்டர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடத்தின் இறுதியில் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து, போயாபதி சீனு இயக்கும் தனது 100-வது படத்தில் அடுத்த ஆண்டு நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை முடித்த பிறகு, 2017-ஆம் ஆண்டு முதல் பாலகிருஷ்ணா தீவிர அரசியலில் களமிறங்கப் போவதாக கூறப்படுகிறது. அதன் முதற்கட்டமாக தான் எம்எல்ஏவாக உள்ள ஹிந்துபூர் தொகுதியின் வளர்ச்சி பணிகளில் தீவிரம் காட்டப் போவதாக அறிவித்துள்ளார்.

 

ரஜினியைத் தொடர்ந்து கமலிடமும் ஆதரவு கோரிய விஷால் அணி!

ரஜினிகாந்தைத் தொடர்ந்து கமல்ஹாஸனிடமும் ஆதரவு கோரினர் விஷால் அணியினர்.

நடிகர் சங்கத்துக்கு வரும் செப்டம்பர் 1-ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியும், விஷால் தலைமையிலான அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இவ்விரு அணியிரும் தற்போது வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

Vishal and Team meet Kamal Hassan

சமீபத்தில் தென்மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு, நாடக நடிகர்களிடம் வாக்கு சேகரித்தனர். தற்போது, முக்கிய சினிமா பிரமுகர்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் விஷால் அணியினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

அதன் முதற்கட்டமாக இன்று நடிகர் ரஜினிகாந்தை விஷால் அணியினர் நேரில் சந்தித்து தங்களது அணிக்கு ஆதரவு கோரினர். அவரும் நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்கப் போவதாக விஷால் அணியினரிடம் கூறினார்.

பின்னர், விஷால் அணியினர் நடிகர் கமல்ஹாஸனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தங்களது அணிக்கு ஆதரவு கோரினர். அவரும், நடிகர் சங்க தேர்தலில் வாக்களிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இந்த சந்திப்பின்போது, நடிகர்கள் நாசர், கருணாஸ், ஜேகே ரித்தீஷ், கார்த்தி, பொன்வண்ணன், நடிகை குஷ்பு ஆகியோர் உடனிருந்தனர்.

 

ரெண்டு இட்லி ஒரு வடை சாப்பிட அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

சென்னை: ரெண்டு இட்லி ஒரு வடை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உணவகங்களிலும் பிரசித்தி பெற்ற வார்த்தை இது, அதே போன்று உணவகங்களின் மெனு கார்டிலும் தவறாமல் முதலிடம் மேலே சொன்ன 2 உணவுகளுக்கும் உண்டு.

தற்போது இதே பெயரில் ஒரு படமொன்று தமிழ் சினிமாவில் உருவாகி வருகிறது, இயக்குநர் என்ற படத்தை எடுத்த படத்தின் இயக்குநர் ரஜத் தனது மகன் பிரமோத்தை இந்தப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகப் படுத்துகிறார்.

Rendu Idly Oru Vadai Movie

தனது முதல் படத்தை தானே இயக்கி நாயகனாகவும் நடித்த ரஜத், இரண்டாவது படமான ரெண்டு இட்லி ஒரு வடை திரைப்படத்தில் தனது மகனை வைத்து இயக்குகிறார். இயக்கம் மட்டுமல்லாது ஒளிப்பதிவு மற்றும் தயாரிப்பு போன்றவற்றையும் ரஜத்தே கவனித்துக் கொள்வாராம்.

இந்தப் படத்தில் நாயகனாக அறிமுகமாகும் பிரமோத் படத்தின் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார் (ஒரு நாயகன் உதயமாகிறான்), இவருக்கு 17 வயதே ஆவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் தமிழ் தவிர்த்து தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் வெளியாக இருக்கின்றது, படத்தை ஆங்கிலப் படங்களுக்கு நிகராக எடுக்கவிருக்கிராறாம் இயக்குநர் ரஜத்.

இவரின் இயக்கத்தில் வெளியான இயக்குநர் திரைப்படம் 60 நாட்கள் ஓடி வெற்றி பெற்றதால்( அப்படி ஒரு படம் வந்துச்சா?), உற்சாகத்துடன் இட்லி, வடையைக் கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர்.

பொழுதுபோக்கு மற்றும் சமூக விழிப்புணர்வுடன் உருவாகி வரும் ரெண்டு இட்லி ஒரு வடை படத்தின் விளம்பரத்தை பாருங்கள், 2 இட்லி ஒரு வடை சாப்பிட உங்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கின்றோம்.ஒருவேளை தியேட்டர்ல படம் பார்க்க வர்றவங்களுக்கு இட்லி, வடை எல்லாம் தருவாங்களோ...

இது கூட பரவால்ல பாஸ் இவரோட அடுத்த பட தலைப்பு என்ன தெரியுமா? ஒரு மசால் தோசையும் 35 கதாநாயகிகளும் முடியல....

 

மருத்துவமனையிலிருந்து திரும்பினார் இளையராஜா... நேராக குற்றமே தண்டனை ரெகார்டிங்குக்கு சென்றார்!

மருத்துவமனையில் இரு தினங்கள் ஓய்வில் இருந்த இளையராஜா, இன்று அங்கிருந்து பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்துக்கு திரும்பினார்.

மருத்துவமனையிலிருந்து வந்த கையோடு, குற்றமே தண்டனை படத்தின் இசைப் பதிவில் பங்கேற்றார்.

Ilaiyaraaja returns to work

இசையமைப்பாளர் இளையராஜா இரு தினங்களுக்கு முன் தனது இணையதளம் மற்றும் யுட்யூப் சேனலை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்தார். இதற்கான செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற பிறகு, உடல் சோர்வாக இருந்ததால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஓய்வுக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா அறிவித்திருந்தார்.

அவருக்கு நெஞ்சு வலி என தகவல் பரவியது. ஆனால் உண்மையில், தொடர்ச்சியான மீடியா சந்திப்பு காரணமாக களைப்புற்ற அவருக்கு, லேசான மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் ஓய்வெடுத்தார்.

இந்த நிலையில், இரு தினங்கள் ஓய்வெடுத்த பிறகு இளையராஜா இன்று டிஸ்சார்ஜ் ஆனார்.

ஆனால் அவர் நேராக வீட்டுக்குச் செல்லாமல், பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தனது ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வந்தார். அங்கு காக்கா முட்டை பட இயக்குநர் மணிகண்டனின் குற்றமே தண்டனை படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பில் ஈடுபட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

 

நடிகர் சயிப் அலி கானா, ஏன் இப்படி செய்தார்?: வியக்கும் பாலிவுட்

மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலி கான் தனது 45வது பிறந்தநாளை வீட்டில் தனது மனைவி கரீனா கபூரோடு மிகவும் எளிமையாக கொண்டாடியுள்ளார்.

பாலிவுட் நடிகர் சயிப் அலி கான் தனது 45வது பிறந்தநாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினார். வழக்கமாக சயிப் தனது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடுவார். ஆனால் என்ன ஆனதோ தெரியவில்லை பாலிவுட்காரர்களே வியக்கும் வகையில் சப்தம் இல்லாமல் வீட்டில் தனது மனைவியும், நடிகையுமான கரீனா கபூருடன் மிகவும் எளிமையாக கொண்டாடியுள்ளார்.

Saif Ali Khan celebrates birthday in hush hush manner

பிறந்தநாள் என்றால் பார்ட்டி இல்லாமலா ஆனால் வீட்டிலேயே பார்ட்டி கொடுத்துள்ளார். அதுவும் மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டும் தான். சயிப் அளித்த பார்ட்டியில் கரீனாவின் அக்காவும், நடிகையுமான கரிஷ்மா கபூர் கலந்து கொண்டார்.

மேலும் கரீனாவின் தோழிகளான மலாய்க்கா அரோரா, அம்ரிதா அரோரா ஆகியோரும் பார்ட்டியில் கலந்து கொண்டனர். கரீனாவும் அம்ரிதா அரோரோவும் மிக மிக நெருங்கிய தோழிகள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கரீனா தான் நடித்துள்ள பஜ்ரங்கி பாய்ஜான் படம் சூப்பர் ஹிட்டான சந்தோஷத்தில் உள்ளார்.

 

மம்பட்டியான் ஸ்டைலில் மதுரை மணிக்குறவன்... இளையராஜா இசையமைக்கிறார்!

ஹரிக்குமார் நடிக்கும் மதுரை மணிக்குறவன் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

காளையப்பா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக கே.ஜி.காளையப்பன் தயாரிக்கும் படம் இது.

இரட்டை வேடங்களில் நடிக்கும் ஹரிகுமார் இந்த படத்திற்காக சில பிரத்யேக பயிற்சிகளை எடுதுக் கொண்டிருக்கிறார். தோற்றத்திலும் உடல் வாகு, மற்றும் நடை, உடை பாவனையிலும் வித்தியாசத்தை காட்டி நடித்து வருகிறாராம்.

Ilaiyaraaja to score Madurai Manikkuravan

கதாநாயகியாக மாதவிலதா நடிக்கிறார். மற்றும் ரிஷிதா, பவித்ரா ஆகியோரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சரவணன், சுமன், கே.ஜி.காளையப்பன், சுஜாதா, அனுமோகன், எம்.எஸ்.பாஸ்கர், டெல்லிகணேஷ், போண்டாமணி, முத்துக்காளை, ஐவரி.கே.சண்முகம் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு ஆர்.கே.பிரதாப். எழுதி இயக்குபவர் ராஜரிஷி. படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

படம் பற்றி இயக்குநர் ராஜரிஷியிடம் கேட்டோம்...

"அந்தந்த பகுதிகளில் மக்களின் பிரச்சனைகளுக்கு போராடி வட்டார மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி, போன்று மதுரை மணிக்குறவனும் ஒருவன்.

மண் சார்ந்த மனிதனின் வாழ்க்கைக்கு இளையராஜாவின் இசை சிறப்பாக இருக்கும் என்று அவரை அணுகினோம். அவரும் கதையைக் கேட்டு கதைக்கு உயிரூட்டுகிறேன் என்று அருமையாக டியூன் போட்டுக் கொண்டுத்திருக்கிறார். அது எங்கள் யூனிட்டுக்கு கிடைத்த முதல் வெற்றி," என்றார் இயக்குநர் ராஜரிஷி.

 

நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க வாங்கன்னு ஜெ.வை அழைப்போம் - விஷால்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு கண்டிப்பாக முதல்வர் ஜெயலலிதாவினை வாக்களிக்க அழைப்போம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் நடிகர் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியும், விஷால் தலைமையிலான மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் மூத்த உறுப்பினர் என்ற முறையில் முதலமைச்சர் ஜெயலலிதாவை ஓட்டளிக்க அழைப்பு விடுப்போம் என்று விஷால் தெரிவித்துள்ளார்.

Vishal going to invite jayalalitha today

சென்னைக்கு அருகில் உள்ள பூந்தமல்லி கீழ்மாநகரில் உள்ள 1000 ஆண்டுகள் பழமையான முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது.

இந்த விழாவில் நடிகர் விஷால் கலந்துகொண்டு, அம்மனின் தரிசனம் பெற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "நடிகர் சங்க வாக்காளர் பட்டியலில் மூத்த கலைஞர் கருணாநிதியின் பெயர் இல்லை. இது அவமானகரமானது.

நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க முதலமைச்சர் ஜெயலலிதா அழைப்பு விடுக்கவுள்ளோம். இதற்காக அவரைச் சந்திக்கவுள்ளோம். அனுமதி கேட்டுள்ளோம். கிடைத்ததும் நிச்சயமாக சந்திப்போம். அவர் வந்து வாக்களித்தால் அதை விட மகிழ்ச்சி வேறு இல்லை. அவர் நிச்சயம் வாக்களிப்பார் என நம்புகிறேன் என்றார் விஷால்.