சிகிச்சை முடிந்தது - வீடு திரும்பினார் மனீஷா கொய்ராலா

Manisha Koirala Discharged From Hospital

இரு வாரங்களுக்கு முன்பு மனிஷாகொய்ரலாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மும்பை ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனை செய்ததில் அவருக்கு புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து சென்றனர்.

நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் மனிஷா கொய்ராலா அனுமதிக்கப்பட்டார். அங்கு சில தினங்களுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.

சிகிச்சைக்கு பிறகு மனிஷாகொய்ரலா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இனி ஆபத்தில்லை என்பது உறுதியானதும், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ஆனாலும் அவர் இன்னும் சில வாரங்கள் அல்லது மாதங்கள் வரை அவர் அமெரிக்காவிலேயே தங்கியிருப்பார்.

 

தம் அடிக்கும் காட்சியில் தோன்றியதற்காக நடிகர் மோகன்லால் மீது அரசு வழக்கு!

Smoking Poster Mohanlal Too Lands In Trouble

திருவனந்தபுரம்: புகைப் பிடிக்கும் காட்சியில் தோன்றியதற்காக நடிகர் மோகன் லால் மீது கேரள அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது.

திரைப்படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும், திரைப்படங்களை விளம்பரப்படுத்த ஒட்டப்படும் போஸ்டர்களில், அதுபோன்ற காட்சிகள் இடம் பெறக்கூடாது' என, கடந்த ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில், கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், 'பாதுகாப்பான திருவனந்தபுரம்' என்ற பெயரில், மாநில அரசின் சுகாதாரத் துறை அதிகாரிகள், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் மலையாள நடிகை மைதிலி நடித்த திரைப்படத்தில், அவர் புகைப்பிடிப்பது போன்ற சில காட்சிகள் போஸ்டர்களாக தயாரிக்கப்பட்டு, நகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன.

இந்தப் போஸ்டர்களை அகற்றிய, சுகாதாரத் துறை அதிகாரிகள், நடிகை மீது வழக்கு பதிய உத்தரவிட்ட்டனர்.

ஆனாலும், அடுத்ததாக பிரபல நடிகர் மோகன்லால் நடித்து நேற்று வெளியான, 'கர்மயோதா' என்ற மலையாள திரைப்படத்திற்கான போஸ்டர்களிலும், அவர் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.

இதை பார்த்த, மாநில சுகாதார துறை அதிகாரிகள், அந்த சுவரொட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுத்ததோடு, நடிகர் மோகன்லால், படத்தின் இயக்குனர், மேஜர் ரவி, தயாரிப்பாளர் மற்றும் திரைப்படம் வெளியாகி உள்ள தியேட்டர்களின் மேலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி, வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டாண்டு சிறை அல்லது 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்.

இப்படியொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அதுவும் விவிஐபிக்கு எதிராக செய்யப்பட்டுள்ளது நாட்டிலேயே இதுதான் முதல் முறை.

 

1 கோடிக்கு ரூபாய்க்கு ஏலம் போனது மைக்கேல் ஜாக்சனின் கையுறை.

Michael Jackson S Crystal Encrusted Glove

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் கையுறை ஒருகோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

பாப் இசை உலகின் சக்கரவர்த்தி என்று அவருடைய ரசிகர்களால் புகழப்படுபவர் மைக்கேல் ஜாக்சன். தனது பாடலாலும், இசையாலும், நடனத்தாலும் உலகம் முழுவதும் பலகோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். உடல்நலக்குறைவினார் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மரணமடைந்தார்.

அவர் மறைந்தாலும் அவரது புகழ் இன்னும் மங்காமல் ஒளிவீசுகிறது. அவருடைய பொருட்களை பொக்கிஷமாக கருதும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இசை நிகழ்ச்சியின் போது மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய ஆடைகள் மற்றும் பொருட்கள் ஏலம் விடப்பட்டு வருகின்றன. அவற்றை அதிக விலை கொடுத்து அவரது ரசிகர்கள் வாங்கி செல்கின்றனர்.

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் மைக்கேல் ஜாக்சனின் கையுறை ஒன்று சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. அது ரூ.1 கோடிக்கு ஏலம் போனது. இந்த தகவலை ஏல மையத்தின் உரிமையாளர் நேட்டி சாண்டர்ஸ் தெரிவித்தார். சமீபத்தில் நடந்த ஏலத்தில் பிரபல பாப் இசைப்பாடகி காகா, மைக்கேல் ஜாக்சனின் 55 பொருட்களை ஏலத்தில் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சட்டம் ஒரு இருட்டறை - சினிமா விமர்சனம்

Sattam Oru Iruttarai Review
Rating:
2.0/5

நடிகர்கள்: தமன், ரீமா சென், பிந்து மாதவி, பியா, எஸ்ஏ சந்திரசேகரன்
இசை: விஜய் ஆன்டனி
தயாரிப்பு: எஸ்ஏ சந்திரசேகரன் & விமலா ராணி
இயக்கம்: சினேகா பிரிட்டோ

பழைய படங்களை ரீமேக் பண்ணுவது தவறல்ல. ஆனால் அவை இன்றைய சூழலுக்குப் பொருந்துமா? இன்றைய ரசனை மாறுதல்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அவற்றை மாற்ற முடியுமா என்பதைப் புரிந்து ரீமேக் செய்வதுதான் புத்திசாலித்தனம்.

பழைய வெற்றிப் படங்களை இன்றும் நாம் ரசித்துப் பார்ப்பதற்குக் காரணம், "அட, பெரிய வசதி வாய்ப்பில்லாத அந்த காலத்திலேயே என்னமா எடுத்திருக்காங்க," என்று நம் மனதுக்குள் இருக்கும் ஒரு சின்ன பிரமிப்பு காரணமாகத்தான். அதைப் புரிந்து கொள்ளாமல், மீண்டும் அதே படத்தை அதே தரம் அல்லது அதற்கும் சற்று குறைந்த தரத்தில் தரும்போது ரொம்பவே அமெச்சூர்த்தனமாகிவிடுகிறது.

எண்பதுகளில் வெளியாகி இப்போது ரீமேக் வடிவில் ரிலீசாகியிருக்கும் சட்டம் ஒரு இருட்டறை படமும் இந்த ரகத்தில்தான் சேர்ந்திருக்கிறது.

தன் காதலியை கண்ணெதிரில் கொன்ற மூன்று பேரை ஆதாரமில்லாமல் கொன்று பழிதீர்க்கிறான் ஹீரோ. இத்தனைக்கும் ஹீரோவின் அக்கா ஒரு உயர் போலீஸ் அதிகாரி. அக்காவின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு இதை எப்படி செய்கிறான் ஹீரோ என்பதுதான் கதை.

இதற்கு நடுவில் ஏகப்பட்ட பாடல்கள், பார்ட்டிகள், சண்டைகள், காதல்கள் என்று திணித்திருக்கிறார்கள். எதுவும் ஒட்டவில்லை.

படத்தின் இயக்குநர் சினேகா பிரிட்டோ என்று டைட்டில் சொன்னாலும், காட்சிகள், அதை எடுத்திருக்கும் விதம் எல்லாமே இதில் எந்த அளவு எஸ் ஏ சியின் பங்கிருக்கிறது என்பதை பறை சாற்றிவிடுகிறது. நீதிக்கு தண்டனை, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் எத்தனை சரளமாக, பார்வையாளர்களை நெளிய வைக்காமல் காட்சிகள் நகரும்... அந்தப் படங்களைத் தந்த எஸ்ஏசியிடமிருந்தா இப்படி ஒரு படம் என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.

படம் முழுக்க விஜய் புராணத்தை வேறு வலிந்து திணித்திருக்கிறார்கள். காதில் ரத்தம் வருகிறது. போதாக்குறைக்கு க்ளைமாக்ஸ் காட்சியையே எஸ்ஏசிக்கு என்று எழுதி வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது.

அந்த ஹாங்காங் காட்சிகள் பார்க்க ஓகே. ஆனால் அடிக்கடி பியாவும் ஹீரோ தமனும் மோதிக் கொள்வதும், ஒவ்வொரு முறையும் 'வாட் டூ யு திங் அபௌட் யுவர்செல்ப்' என்று பியா கேட்பதும், நத்திங் என்று தமன் சொல்வதும் செம கடி.

நிறைய லாஜிக் மிஸ்ஸிங், போலீஸ் துறையின் அடிப்படைக் கட்டமைப்பு பற்றிய குறைந்தபட்ச தகவல்களைக் கூட தெரிந்து கொள்ளாமல் ஸ்க்ரிப்ட் எழுதியிருப்பார்கள் போல. இன்ஸ்பெக்டர் திடீரென்று ஏசியாவதும், திடீரென்று ஜெயிலராக மாறுவதும்... ஒரே காமெடி போங்க.

வெளிநாட்டில் வசதியாக செட்டிலாகிவிட்ட மகா வில்லன், இப்படியா தன் பிள்ளையோடு வந்து வம்படியாக அடிபட்டு சாவான்!

தமன் (ஏற்கெனவே ஆச்சர்யங்கள் படத்தில் நடித்தவர்) ஹீரோ. சொன்ன வேலையைச் சரியாகத்தான் செய்திருக்கிறார். ஆனால் இப்படியொரு ஆக்ஷன் வேடத்தில் அவரைப் பொருத்திப் பார்க்க முடியவில்லை (இதே படத்தில் விஜயகாந்த் நடித்த போது அவரும் புதுமுகம்தானே என்று நினைத்து எஸ்ஏசி இவரைப் போட்டாரோ என்னமோ!)

பியா, பிந்து மாதவி இருவரின் பாத்திரங்களைப் போலவே நடிப்பும் மகா செயற்கை. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு யாருக்காவது தண்டனை தரவேண்டும் என போலீசார் விரும்பினால், நம்ம சாய்ஸ் காமெடி என்ற பெயரில் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊத்திய ஈரோடு மகேஷ் என்ற நபர்தான்!

நன்றிக் கடனுக்காக இசையமைத்திருப்பார் போலிருக்கிறது விஜய் ஆன்டனி. சொய்ங்.... டொய்ங்.... என்றெல்லாம் பாட்டுப் போட்டு தன் கோபத்தைக் காட்டியிருக்கிறார்.

எஸ்ஏ சந்திரசேகரன் போன்ற சீனியர்கள் ஏதாவது ஒரு வடிவில் தொடர்ந்து படமெடுக்க வேண்டும் என்று விரும்புவது நல்ல விஷயம்தான். ஆச்சர்யமானதும் கூட. ஆனால் அப்படி வரும் படங்கள் குறைந்தபட்சம் பார்க்க உத்தரவாதம் தரக்கூடியதாக இருந்தால் தமிழ் சினிமா ரசிகர்கள் சந்தோஷப்படுவார்கள்!

சட்டத்தில் இருப்பது வெறும் ஓட்டை என்றால்... இந்த இருட்டறைக்குள் இருப்பது பெரும் ஓட்டை!

-எஸ்எஸ்

 

கார்த்தி நடிக்கும் அடுதக்த படத்துக்கு தலைப்பு 'சார்பட்டா பரம்பரை'!

Karthi S Next Film Titled Sarpatta Paramparai

கார்த்தி நடிக்கும் புதிய படத்துக்கு சார்பட்டா பரம்பரை என தலைப்பு சூட்டியுள்ளனர். வழக்கம்போல ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் படம் இது.

கார்த்தி நடிப்பில் அலெக்ஸ் பாண்டியன் படம் பொங்கல் தினத்தன்று திரைக்கு வரவிருக்கிறது. தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் பிரியாணி என்ற படத்தில் நடித்து வரும் கார்த்தி, அதன் பிறகு ஒருகல் ஒரு கண்ணாடி படம் தந்த ராஜேஷ் எம் இயக்கத்தில் நடிக்கிறார்.

இந்த இரு படங்களும் முடிந்த பிறகு, கார்த்தி நடிக்க ஒப்புக் கொண்டுள்ள படத்தை அட்டகத்தி படத்தை இயக்கிய ரஞ்சித் இயக்குகிறார்.

இந்தப் படத்துக்கு சார்பட்டா பரம்பரை என்று தலைப்பிட்டுள்ளனர். கார்த்தியின் உறவினர் ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.