இரண்டே கால் மணி நேரம் ஓடும் படத்தை இரண்டு மணி நேரத்தில் எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர் அகடம் படக்குழுவினர்.
அதுமட்டுமல்ல, முழுப் படத்தையும் ஒரே ஷாட்டில் எடுத்துள்ளார்களாம்.
இந்த விவரங்களை கின்னஸ் அமைப்புக்கு எழுதி, அங்கிருந்து அங்கீகாரக் கடிதமும் பெற்றுள்ளனர் அகடம் குழுவினர்.
தமிழகத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் புதுமுகம் சீனி அய்யர், பாஸ்கர், கலை, தமிழ் உள்பட முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
நௌஷத் ஒளிப்பதிவு செய்ய, ஷ்யாம் பெஞ்சமின் இசையமைத்துள்ளார்.
இஸட் முகமது இசாக் கதை திரைக்கதை வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இவருக்கு இதுதான் முதல்படம்.
ஸ்க்ரிப்ட், நடிகர்கள், ஷூட்டிங் ஸ்பாட் என அனைத்தையும் பக்காவாக ஏற்பாடு செய்தது கொண்ட இசாக், இரவில் இரண்டு மணிநேரத்தில் மொத்தப் படத்தையும் எடுத்து முடித்துவிட்டாராம்!
லாஸ்ட் பெஞ்ச் பாய்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் விரைவில் இந்தியிலும் தயாராகிறது.