இந்த சங்கத்துக்கான தேர்தல் நேற்று நடந்தது. தலைவர் பதவிக்கு பாரதிராஜாவும், எஸ்.முரளியும் போட்டியிட்டனர். செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் 48பேர் போட்டியிட்டனர்.
ஆரம்பத்தில் பாரதிராஜா தலைமையில் ஒரு அணியாகவும் அமீர் தலைமையில் தனி அணியாகவும் நின்று மோத முடிவு செய்தனர். பின்னர் இயக்குநர்கள் பீ வாசு, கே எஸ் ரவிக்குமாரின் சமரசம் காரணமாக இருவரும் ஒரே அணியில் வெவ்வேறு பதவிகளுக்கு போட்டியிட்டனர்.
கவிஞர் பிறைசூடன் தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்தினார். மாலை வரை மொத்தம் 1,279 ஓட்டுகள் பதிவானது. இரவு 7 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் முடிவுகளை ஒரே நேரத்தில் அறிவிக்க வேண்டும் என்று இயக்குனர்கள் கருத்து தெரிவித்ததால் இரவில் ஓட்டு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.
இன்று காலை ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் பாரதிராஜா மீண்டும் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
இயக்குனர் அமீர் செயலாளராக தேர்வானார். பொருளாளர் பதவிக்கு இயக்குநர் ஜனநாதன் போட்டியின்றி ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைத் தலைவர்கள் பதவிக்கு சேரன், சமுத்திரக்கனி ஆகியோரும் போட்டியின்றி ஏகமனதாக தேர்வானார்கள்.
திரைப்பட இயக்குநர்கள் நலன், திரைத்துறையின் நலன் காக்க பாடுபடுவோம் என இயக்குநர் அமீர் தெரிவித்தார்.