2/25/2011 12:34:49 PM
பெரிய்…ய்…ய ஆசை
2/25/2011 12:34:49 PM
கிசு கிசு -‘பெட்ரூம்’ காட்சி..ஹீரோயின் புலம்பல்
2/25/2011 12:44:04 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
மிஷ் இயக்குனரும் ஐ காட் நடிகரும் இணைய இருந்த படம் டிராப் ஆயிடுச்சாம்… ஆயிடுச்சாம்… 30 சிக்கு மேல் போன படத்தோட பட்ஜெட்டை கேட்டு தயாரிப்பு அதிர்ச்சியாயிட்டாராம். இந்த கதைக்கு இவ்ளோ செலவு செய்ய முடியாது. இன்னெரு ஸ்கிரிப்ட் கொண்டு வாங்க. அதை தயாரிக்கலாம்ன்னு நாசுக்காக சொல்லிட்டாராம்… சொல்லிட்டாராம்…
வெளுத்துகட்டிய அர்ச்சனை ஹீரோயின் ஏற்கனவே ஒரு படத்துல பெட் ரூம் சீன்ல நடிச்சிருந்தாராம்… நடிச்சிருந்தாராம்… அந்த படத்தை நெட்ல உலா விட தயாரிப்பு ஐடியா பண்ணியிருக்காராம். 'அந்த காட்சில நடிக்க மாட்டேன்னு சொல்லியும் கட்டாயப்படுத்தி நடிக்க வச்சிட்டாங்க. புதுசா நடிக்க வந்த என்னை ஏமாத்தி அப்படி நடிக்க வச்சிட்டாங்கன்னு புலம்புறாராம்… புலம்புறாராம்…
கை நிறைய காசு, கால்ஷீட் நாட்களும் கம்மி. அதனால விளம்பரத்துல நடிக்க¤றதுதான் பெஸ்ட்டுன்னு சில ஆர்ட்டிஸ்ட்டுங்க நினைக்கிறாங்களாம். நினைக்கிறாங்களாம். அவங்களோட மேனேஜர்களுக்கும் நிறைய கமிஷன் கிடைக்குதாம்… அதனால விளம்பர வாய்ப்பை பிடிக்க மேனேஜருங்க போட்டி போடுறாங்களாம்… போடுறாங்களாம்…
மீண்டும் டைரக்ஷன் களத்தில் ரேவதி!
2/25/2011 11:49:26 AM
'மித்ர மை ஃப்ரண்ட்' படத்தை இயக்கிய ரேவதி, மீண்டும் டைரக்ஷன் களத்தில் குதிக்க தயாராகிவிட்டார். முழு ஸ்க்ரிப்ட்டையும் முடித்து விட்ட அவர், அந்தப் படத்தை இந்தியில் எடுக்கத் திட்டமிட்டுள்ளார். அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதே கதை. மேலும் படத்தில் பணிப்புரிய தொழில்நுட்ப கலைஞர்களையும் தேர்வு செய்து வருகிறார் ரேவதி.
திருப்பதி பிரதர்ஸ் தமிழ்நாடு முழுக்க தியேட்டர் விசிட்
2/25/2011 11:51:16 AM
பிரகாஷ்ராஜ் தயாரிப் பில், ராதாமோகன் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'பயணம்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப்படத்தை இயக்குநர் என்.லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தமிழ்நாடு முழுக்க ரிலீஸ் செய்துள்ளது. லிங்குசாமியின் தம்பியும் தயாரிப்பாளருமான என்.சுபாஷ் சந்திரபோஸ் தமிழ்நாடு முழுக்க தியேட்டர் விசிட் செய்து வருகிறார்.
ரஜினிக்கு கிடைத்த பாராட்டு
2/25/2011 11:53:47 AM
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு இந்திப்படமாக உருவாகிறது. அது சம்பந்தமாக சில்க் நடித்த படக்காட்சிகளை நஸ்ருதீன் ஷாவுக்கு போட்டுக் காட்டினார்கள். ரஜினியுடன் சில்க் ஆடிய நடனக் காட்சிகள் அந்த கலெக்ஷனில் அதிகமாக இடம் பெற்றிருந்தன. ரஜினியின் அசைவுகளை உன்னிப்பாக கவனித்த நஸ்ருதீன்ஷா கைதட்டி உற்சாகமானாராம். 'நான் இதுவரை ரஜினி படங்களைப் பார்க்கவில்லை. எனக்காக 'ரோபோ' படம் பார்க்க ஏற்பாடு செய்யுங்கள் அவரது நடிப்பு எனக்கு உதவி கரமாக இருக்கும்' என்று சொன்னதோடு, ரஜினியைப் பற்றி வெகுவாகப் பாராட்டிப் பேசினாராம்.
மிடில் கிளாஸ் பெண் ரம்யா நம்பீசன்
2/25/2011 12:58:44 PM
ஆட்ட நாயகன்', 'இளைஞன்', என்று அடுத்தடுத்த படங்கள் வெளியானதில் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறார் ரம்யா நம்பீசன். நடிகைக்குரிய பந்தா இல்லாமல் மிடில் கிளாஸ் பெண் போல் ரொம்ப சிம்பிளாக இருக்கிறார். தெலுங்கு படப்பிடிப்புக் காக ஐதராபாத் செல்லும் அவசரத்தில் இருந்தாலும் அளந்து எடுத்து பேசினார். இன்று நான் சரளமாக தமிழ் பேசுகிறேன் என்றால் அந்த பெருமை கலைஞரின் 'இளைஞன்' படத்துக்குதான். கிளாமர் ரோல்னா ஓடறீங்களாமே? என்ற கேட்டதற்கு அப்படி இல்லை. கிளாமர் ரோல் முதலில் எனக்கு பொருத்தமாக இருக்க வேண்டும். இன்று கிளாமர் என்றால் அங்கங்களை வெளிப்படுத்துவது என்று அர்த்தம் நிலவி வருகிறது. கிளாமர் எனக்கு எந்தளவுக்கு பொருந்துமோ அந்தளவுக்கு உடையணிந்து நடிப்பேன்.