பிரபுதேவாவை பிரிந்தார் நயன்தாரா : மீண்டும் நடிக்க வருகிறார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தெலுங்கு படத்தில் மீண்டும் நடிக்க நயன்தாரா சம்மதித்துள்ளார். இதனால் பிரபுதேவாவிடம் இருந்து அவர் பிரிந்துவிட்டதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபுதேவாவை திருமணம் செய்துகொள்வதற்காக நடிப்புக்கு முழுக்குப் போட்டார் நயன்தாரா. அவர் கடைசியாக 'ஸ்ரீராம ராஜ்ஜியம்' என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். இதன் படப்பிடிப்பு முடிந்த கடைசி நாளில் எல்லோரிடமும் கண்ணீர் விட்டு அழுதபடி விடை பெற்றார். திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா நடிக்க மாட்டார் என்று பிரபுதேவா அப்போது கூறி வந்தார். இதற்கிடையே பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக, கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா.

இந்நிலையில், 'ஸ்ரீராம ராஜ்ஜியம்' படம் தெலுங்கில் ஹிட்டானதை அடுத்து, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், நாகார்ஜுனா, ரவிதேஜா உள்ளிட்ட ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்கள், அவர் மீண்டும் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், நயன்தாரா பதிலேதும் சொல்லாமல் இருந்தார். இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ரசிகர்கள் மற்றும் ஹீரோக்களின் விருப்பத்துக்கு ஏற்ப, நயன்தாரா தெலுங்கில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந்தப் படத்தை தசரத் இயக்குகிறார். இதுபற்றி தசரத் கூறும்போது, ''நயன்தாரா நடிப்பது உண்மைதான். நாகார்ஜுனா ஹீரோவாக நடிக்கிறார். மே மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது'' என்றார். இப்போது நயன்தாரா நடிக்க உள்ள படத்துக்கு சம்பளமாக, ஒன்றரை கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக, பட யூனிட் தெரிவித்துள்ளது.

நயன்தாராவும் பிரபுதேவாவும் சேர்ந்து வாழ, சென்னை போட் கிளப் பகுதியில் சொந்தமாக வீடு வாங்கியிருந்தனர். இப்போது அந்த வீட்டில் இருவரும் இல்லை என்று கூறப்படுகிறது. பிரபுதேவாவிடம் இருந்து சுமூகமாக பிரிந்துவிட்டதால்தான் நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார் என்றும் தமிழ், தெலுங்கில் அவர் தொடர்ந்து நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 

சூர்யா ஜோடியானார் ஹன்சிகா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா நடித்த படம், 'சிங்கம்'. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதிலும் சூர்யா, அனுஷ்கா ஜோடியாக நடிக்கின்றனர். இன்னொரு ஹீரோயின் தேடி வந்தனர். இந்நிலையில் ஹன்சிகா மோத்வானி ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் சந்தானம் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தை இயக்கும் ஹரி கூறும்போது, ''ஏப்ரல் மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. தேவிஸ்ரீ பிரசாத் இசைஅமைக்கிறார். 'சிங்கம்' படத்தை விட இரண்டு மடங்கு விறுவிறுப்பாக இதன் திரைக்கதை இருக்கும். இன்னும் படத்துக்கு பெயர் வைக்கவில்லை' என்றார்.


 

படத்தில் ஜோடியாக நடித்தவர்கள், நிஜவாழ்வில் ரகசிய திருமணம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சேலம் நியூ மாடர்ன் பிலிம் மேக்கர்ஸ் சார்பில், 10 பேர் இணைந்து தயாரிக்கும் படம், 'நீ எனக்காக மட்டும்'. புதுமுகம் தமிழ், ஸ்ரீலட்சுமி ஜோடி. கே.பி.சக்திவேல் இயக்குகிறார். கதைப்படி தமிழ், ஸ்ரீலட்சுமி காதலிக்கின்றனர். எதிர்ப்பை மீறி, திருமணம் செய்கின்றனர். பிறகு பெண்ணின் பெற்றோர், தமிழிடம் இருந்து ஸ்ரீலட்சுமியைப் பிரிக்கின்றனர். அவரை காணாத நிலையில் தமிழ், வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிக்கிறார். அப்போது ஸ்ரீலட்சுமி திரும்பி வர, தமிழ் என்ன முடிவு எடுக்கிறார் என்பது கிளைமாக்ஸ். ஆனால், ஷூட்டிங்கில் காதல் ஜோடி நிஜமாகவே காதலிக்கத் தொடங்கிவிட்டனர். இருவரது வீட்டிலும் எதிர்ப்பு. இதையடுத்து இந்த ஜோடி, சேலம் ரிஜிஸ்டர் ஆபீசில் பதிவு திருமணம் செய்துகொண்டது. இதுபற்றி தமிழிடம் கேட்டபோது, ''சம்பவம் உண்மைதான். எங்கள் வீட்டில் ஆதரவு கிடைத்துள்ளது. விரைவில் ஸ்ரீலட்சுமியின் வீட்டிலும் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம்" என்றார்.


 

ரஜினி, அமிதாப் பச்சன் இணைகிறார்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரஜினிகாந்தும் அமிதாப்பச்சனும் இணையும் படத்தை இயக்க இருப்பதாக, தெலுங்குப் பட இயக்குனர் பூரி ஜெகநாத் தெரிவித்துள்ளார். ரஜினியும் அமிதாப்பச்சனும் கடைசியாக, 'அந்தா கானூன்' என்ற இந்திப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியாகி 28 வருடங்கள் ஆகிவிட்டது. இதையடுத்து இப்போது மீண்டும் இணைய இருக்கின்றனர். அமிதாப் நடித்த, 'புட்டா ஹோகா தேரா பாப்' படத்தை இயக்கிய புரி ஜெகநாத் இதை இயக்குகிறார். இதுபற்றி பூரி ஜெகநாத் கூறும்போது, ''சென்னையில் ரஜினியை சந்தித்து இந்த ஐடியாவை சொன்னேன். ரஜினி உற்சாகமாகிவிட்டார். இதில் நடிக்க அவருக்கு இருக்கும் ஆர்வத்தைத் தெரிந்துகொண்டேன். ரஜினியையும் அமிதாப்பையும் இயக்குவது எனது வாழ்நாள் கனவு. இப்போதுதான் அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. இருவரையும் இயக்குவது சாவாலான விஷயம்தான்'' என்றார்.


 

பாடல்களில் ஆங்கிலம் தவிர்க்க முடியாது: விவேகா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பாடலாசிரியர் விவேகா, நிருபர்களிடம் கூறியதாவது: இந்த வருடம் ஷங்கரின் 'நண்பன்' படத்தில் எழுதிய 'என் ஃபிரண்ட போல யாரு மச்சான்' பாடல் ஹிட்டாகியுள்ளது. தற்போது 'மாற்றான்', 'சிங்கம் 2', 'சகுனி', 'கரிகாலன்', 'அரவான்', 'வல்லினம்', 'இஷ்டம்' உட்பட 80 படங்களுக்கு பாடல் எழுதுகிறேன். ஒவ்வொரு பாடலையும் முதல் பாடலாக நினைத்தே எழுதுகிறேன். தமிழ்ப் பாடல்களில் ஆங்கில வார்த்தை கலப்பது பற்றி கேட்கிறார்கள். சினிமா தொடங்கிய காலத்திலிருந்தே இந்த விவாதம் தொடர்கிறது. ஒரு படத்தின் கதாபாத்திரம் ஸ்டைலாக இருக்கும்போது, பாடல் காட்சி மட்டும் தூயதமிழில் படமாக்கப்பட்டால் பொருத்தமாக இருக்காது என்று இயக்குனர்கள் நினைக்கிறார்கள். இது சரியான கருத்துதான். எனவே, தமிழ்ப் பாடல்களில் ஆங்கில வார்த்தை கலந்துவிடுகிறது. இதை தவிர்க்க முடியாது என்றே நினைக்கிறேன்.


 

கைதியின் வாழ்க்கை கதை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஏ.வி ஸ்கிரீன்ஸ் சார்பில் எக்ஸ்.பி.ராஜன் தயாரிக்கும் படம், 'சூரிய நகரம்'. ராகுல் ரவீந்திரன், மீரா நந்தன், கஞ்சா கருப்பு, சூரி ஆகியோருடன் ஆர்.வி.உதயகுமார் நடிக்கிறார். ஒளிப்பதிவு, ஜே.கே.வெங்கி. இசை, ஃபென் வியாலி. பாடல்கள், வைரமுத்து. எழுதி இயக்கும் மா.செல்லமுத்து, படம் பற்றி கூறியதாவது: மனித வாழ்க்கையில் கோபம் ஏற்படுத்துகின்ற தாக்கம், பல விபரீதங்களை உண்டாக்குகிறது. கோபத்தைத் தூண்டுவதில் சூழ்நிலையின் பங்கு அதிகமாக இருக்கும். அப்படி கோபப்படுகிறவனின் வாழ்க்கைப் பதிவாக இந்தப் படம் உருவாகிறது. மதுரை மக்களின் வீரம், கோபம், அவர்களின் ஈரமனம் குறித்து படம் சொல்லும். சில வருடங்களுக்கு முன் தமிழக அரசால் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு, 120 கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். அவர்களில், கொலைக்குற்றம் செய்தவரும் ஒருவர். விடுதலையாகி வெளியே வந்த அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், செய்திகளாக வந்தன. அதை கருவாகக் கொண்டு இந்தக் கதையை உருவாக்கினேன். தயாரிப்பாளர் ராஜனின் மகன் ஃபென் வியாலி இசை அமைக்கிறார். அடுத்த மாதம் படம் ரிலீசாகிறது.


 

புயல் நிவாரண நிதிக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 லட்சம் உதவி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளை மேற்கொள்வதற்காக தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, புயல் நிவாரண நிதிக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 லட்சம் வழங்கினர். நிதி உதவியை தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேற்று நேரில் சந்தித்து ரூ.10 லட்சத்தை வழங்கினார்.