ஸ்ரீதேவிக்கு மெழுகுச் சிலை வைக்கும் மேடம் டுசாட்ஸ்?

After Madhuri Aishwarya Sridevi Get Waxed   

மும்பை: மேடம் டுசாட்ஸ் மெழுகு அருங்காட்சியகத்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு மெழுகுச் சிலை வைக்கப்போவதாக பேச்சு அடிபடுகிறது.

உலகப் புகழ் பெற்ற மேடம் டுசாட்ஸ் மெழுகு அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், ரித்திக் ரோஷன், நடிகைகள் கரீனா கபூர், மாதுரி தீக்ஷித், ஐஸ்வர்யா ராய் ஆகியோருககு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோலிவுட், பாலிவுட், டோலிவுட்டுகளை ஒரு காலத்தில் கலக்கிய நடிகை ஸ்ரீதேவிக்கு மேடம் டுசாட்சில் மெழுகுச் சிலை வைக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறது.

ஸ்ரீதேவிக்கு மெழுகுச் சிலை வைப்பது குறித்த விஷயங்கள் ரகசியமாக நடக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ஒரு பிரபலம் தனது பிளாக்கில் எழுதியுள்ளார். பல வருடங்கள் கழித்து ஸ்ரீதேவி நடித்துள்ள இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் ரிலீஸாகும் அன்று தேதி மெழுகுச் சிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் அவர் தனது பிளாக்கில் தெரிவித்துள்ளார்.

இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது மனைவிக்கு மெழுகுச் சிலை வைக்கப் போவது குறித்து போனி கபூர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

 

ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்: மமதி

Anchor Mamathi Chari Wants Act With Rajini

எத்தனையோ தொகுப்பாளர்கள் வந்தாலும் சிலர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை பார்க்க அதிக ஆவலாய் இருக்கும். சிலரது குரலின் வசீகரம் அப்படி.

சன் தொலைக்காட்சியில் புதிய ரியாலிட்டி ஷோவான சூப்பர் குடும்பம் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வந்துள்ள மமதியின் குரலும் அப்படிப்பட்டதுதான். ஏற்கனவே விஜய் டிவியில் ஹலோ தமிழா, சன் டிவியில் ‘ராணி மகாராணி' நிகழ்ச்சிகளின் மூலம் நேயர்களை கவர்ந்த அவர் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் சூப்பர் குடும்பம் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக களம் இறங்கியுள்ளார். சூட்டிங் பிஸியில் இருந்த அவரை செல்போனில் பிடித்தோம். தன்னுடைய சின்னத்திரை பயணம் குறித்த அனுபவங்களை அவர் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

சின்னத்திரையில் தூர்தர்ஷன் மட்டுமே இருந்த காலத்தில் இருந்து நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி கொண்டு இருக்கிறேன். பிக் எஃப்.எம் வானொலியில் "பிக் வணக்கம்' என்ற நிகழ்ச்சி தொகுத்து வழங்கியிருக்கிறேன். இதை தவிர விஜய் டிவியில் "சில்லுன்னு ஒரு சேலஞ்ச்' என்ற நிகழ்ச்சியும், ஹலோ தமிழா நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கியுள்ளேன். சன் டிவியில் ராணி மகாராணி நிகழ்ச்சிக்கு நிறைய வரவேற்பு கிடைத்தது.

என் தமிழ் உச்சரிப்பைக் கேட்க பிடித்திருப்பதாக நிறைய பேர் சொல்கிறார்கள். நிகழ்ச்சி ரொம்ப இயல்பாக இருக்கிறது என்றும் சொல்லுவார்கள். அதுதான் வெற்றியின் ரகசியம் என்று நினைக்கிறேன். தமிழ் சின்னத்திரையைப் பொருத்தவரை என்னையும் என் தமிழையும் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அது எனக்கு கடவுள் கொடுத்த வரம். பின்னணி குரலுக்கான வாய்ப்புகளும் நிறைய வருகின்றன. ஆனால் குரலால் நடிக்க எனக்கு விருப்பமில்லை.

சின்னத்திரையைத் தவிர ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து கொண்டு இருக்கிறேன். அதற்கு முழு நேரமும் செலவிட வேண்டியிருப்பதால் அதிகப்படியான நிகழ்ச்சிகள் வழங்க நேரம் கிடைப்பது இல்லை. இப்பொழுது சூப்பர் குடும்பம் நிகழ்ச்சியை வழங்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சின்னத்திரை நட்சத்திரங்களின் தனித்திறமையை வெளிக்கொண்டுவரும் நிகழ்ச்சி. இப்பொழுதுதான் தொடங்கியிருக்கிறது. முதல்வாரத்திலேயே நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.

எனக்கு சினிமாவில் எனக்கு நடிப்பதில் ஈடுபாடு இல்லை. நிகழ்ச்சி தொகுப்பாளராகவோ, அல்லது பங்கேற்பாளராகவோ இருக்கத்தான் விருப்பம். அதனால்தான் நடிப்பதற்கு வருகிற வாய்ப்புகளை வேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினி சாரோட படத்தில் மட்டும் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். சின்னவயதில் இருந்தே அவரோட ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

சினிமாத்துறை மட்டுமல்ல எந்தத் துறையாக இருந்தாலும் வெற்றி என்று எடுத்து கொண்டாலே அது ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் சரி பேராடினால்தான் வெற்றி கிடைக்கும். அதே சமயத்தில் தன்னுடைய எல்லையைத் தாண்டாமல் உழைக்கும் வரை பிரச்னைகள் எது வந்தாலும் எதிர்கொள்ளலாம். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் திறமையிருந்தால் வெற்றி பெறுவதற்கு ஆண், பெண் வேறுபாடு எல்லாம் கிடையாது என்று கூறிவிட்டு மாறாத புன்னகையோடு விடைபெற்றார் மமதி.

 

கேரளாவில் ஐஸ்வர்யாராயை காண ஆயிரக்கணக்கில் திரண்ட ரசிகர்கள்

Aishwarya Rai Bachchan Creates Euphoria Kerala

கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக்கடை திறப்புவிழாவில் பங்கேற்க வந்திருந்த ஐஸ்வர்யா ராயை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

கொச்சி எம்.ஜி. சாலையில் ஞாயிறன்று நடைபெற்ற விழாவில் வெள்ளையும், சந்தனமும் கலந்த உடையில் ஐஸ்வர்யாராய் பங்கேற்று புதிய நகைக்கடை ஷோரூமை திறந்து வைத்தார். இதன் மற்றொரு விளம்பர தூதரும் மலையாள நடிகருமான திலீப் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் கேரளா மாநில அமைச்சர்கள், மேயர்கள், சிறப்பு விருந்தினர்கள் ஒரு சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் ஐஸ்வர்யாராயை காண அவருடைய ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

கல்யாண் ஜூவல்லர்ஸ் விளம்பரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் புகைப்படங்கள் அனைத்தும் போட்டோஷாப் முறையில் திருத்தியமைக்கப்பட்டுள்ளவை என்று பரபரப்பு கிளம்பியது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் நேரிலேயே வந்து நகைக்கடை திறப்புவிழாவில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கண்கொள்ளாக் காட்சி... அநியாயத்துக்கு நிறைய உடை நீந்திய மடோனா!

World Madonna Wears More Clothes Than She

பாரீஸ்: மடோனா என்றாலே வித்தியாசம்தான் போல. 50 வயதிலும் அரைகுறை ஆடை, அவ்வப்போது 'மார்பு பிளாஷ்' என கலக்கி வரும் மடோனா, அவருக்கே ஆச்சரியம் தரும் வகையில், முழு நீள உடையுடன் காட்சி தந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விட்டார்.

மடோனா என்றால் அவரது டிரஸ்ஸிங் கலக்கல்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். 50 வயதிலும் கட்டழகோடு கலக்கல் டிரஸ்ஸோடு காட்சி தரும் மடோனா, சமீப காலமாக தனது பாடல் நிகழ்ச்சிகளின்போது மார்பகங்களை வெளிக்காட்டி பிரமிக்கவும் வைத்து வருகிறார்.

இந்த வயதிலும் காதலர்களை அவ்வப்போது மாற்றி கலங்கடித்தும் வருகிறார். லேட்டஸ்டாக அவரது காதலராக இருப்பவர் சின்னப் பையன் என்று செல்லமாக அழைக்கப்படும் பிராஹிம் ஜைபாத்.

இந்த நிலையில் தனது மகள் லூர்தஸ், காதலர் பிராஹிம் உள்ளிட்டோருடன் தெற்கு பிரான்ஸில் உள்ள கடற்கரைக்கு வந்த மடோனா, அங்கு அவர்களுடன் ஜாலியாக பொழுதைப் போக்கினார். மகள் லூர்தஸ் நீச்சல் உடையில் காட்சி தர, பாய்பிரண்ட் பிராஹிம் டிரவுசருடன் கலக்க, மடோனோ மட்டும் கழுத்து முதல் கால் வரை மூடிய வெள்ளை நிற உடையுடன் வித்தியாசமாக காட்சியளித்தார். இந்த உடையில் அவர் நீச்சலடித்தும் அசத்தினார்.

அவர் போட்டிருந்த உடைகளைப் பார்க்கும்போது, வருடம் பூராவும் போடும் உடைகளை விட அதிகம் போட்டிருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அடுத்து விரைவில் ஒரு இசை நிழ்ச்சியை அவர் பிரான்ஸில் நடத்தப் போகிறார். அந்த நிகழ்ச்சியின்போது வழக்கம் போல அவர் என்னத்தை செய்து பயமுறுத்தப் போகிறாரோ என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 

600 வது எபிசோடில் நாதஸ்வரம்: ரவிராகுல் மாறியது ஏன்?

Nathaswaram Serial Crosses 600th Episode

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாதஸ்வரம் தொடர் 600 வது எபிசோடினை எட்டியுள்ளது. அண்ணன், தம்பி குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் கதைதான் என்றாலும் களம் புதிது. முகங்கள் புதிது அதனால் சுவாரஸ்யம் குறையாமல் செல்லும் நாதஸ்வரம் 600 வது எபிசோடை தொட்டுள்ளது.

அண்ணன் சொக்கலிங்கத்திற்கு துரோகம் செய்த தம்பி மயில் தற்போது திருந்தியுள்ளார். அவர் மீண்டும் வந்து அண்ணன் குடும்பத்துடன் இணைவாரா?. மதுரைக்கு தம்பியை தேடிச் செல்லும் சொக்கலிங்கம் அண்ணன் கைகளில் தட்டுப்படுவாரா? ராகினிக்கு பார்த்துள்ள மாப்பிள்ளையின் சுயரூபத்தை அறிந்து கொள்வார்களா?. மலரின் அப்பா வீட்டில் சொத்து விசயம் என்ன ஆகும். மகா மீது வன்மம் வைத்துள்ள மரக்கடைக்காரார் என்ன ஆவார்? மகாவிற்கு ஏதாவது ஆபத்து நேருமா?

இப்படி 'இயக்குநருக்கேத் தெரியாத' பல சஸ்பென்ஸ்களுடன் போய்க் கொண்டிருக்கும் நாதஸ்வரம் இந்த வாரம் 600 வது எபிசோடினை எட்டியுள்ளது.

இதுநாள் வரை மாப்பிள்ளை செல்வரங்கமாக 595 எபிசோட் வரை நடித்த நடிகர் ரவிராகுல் இப்போது ஆளைக் காணோம். வழக்கம் போல இவருக்கு பதில் இவர் என்று கார்டு போட்டுவிட்டார்கள். ஏற்கனவே நாதஸ்வரம் நாடகத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் மாறிவிட்டார்கள். இப்போது செல்வரங்கமும் மாறிவிட்டார். அவருக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதால் வேறு ஆளைப் போட்டுவிட்டதாக நாதஸ்வரம் டீமில் கிசுகிசுத்தார்கள். எது உண்மையோ தெரியவில்லை.

நல்லவேளை, இந்த சீரியலுக்குப் பதில் இந்த சீரியல் என்று ரெட் கார்டு போடாத அளவுக்கு நாதஸ்வரம் பட்டையைக் கிளப்புதே அது போதுமே...!

 

ஒரே குண்டும் குழியுமா இருக்கு... அலுத்துக் கொள்ளும் நயனதாரா

Nayanthara Not Happy With Chennai Roads   

சென்னை நகரம் நன்றாக இருக்கிறது, பரபரப்பாக இருக்கிறது. ஆனால் ரோடுதான் சரியில்லை என்று அலுத்துக் கொண்டுள்ளார் நயனதாரா.

கடந்த ஏழு வருடமாக சென்னையில் தங்கி வாழ்ந்து வரும் நயனதாரா, இடையில் 2 காதல்களிலும் சிக்கி மீண்டு விட்டார். இத்தனை வருடங்களாக சென்னையிலேயே இருந்தாலும் சொந்தமாக வீடு வாங்கிக் கொள்ளவில்லை நயனதாரா. மாறாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்தான் நிரந்தரமாக தங்கியிருந்தார். ஹோட்டலில் நல்ல வசதி என்பதால் அங்கேயே ஜாகையை வைத்திருந்தார்.

அதேசமயம், ஹைதராபாத், கேரளா, மும்பை என இடையில் படப்பிடிப்புகளுக்காக போய்ப் போய் வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் இத்தனை காலம் தனக்கு சோறு போட்ட, இரண்டு காதல்களுக்கு அடிக்கல் நாட்டிய சென்னை நகரம் குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார் நயனதாரா.

அவர் கூறுகையில், சென்னையில் நான் நிறைய நேரம் செலவிட்டு உள்ளேன். இங்குள்ள பரபரப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனாலும் சில குறைகளும் உள்ளன. சென்னையில் உள்ள சாலைகள் சரியாக அமைக்கப்படவில்லை. பொதுமக்கள் நடந்து செல்லவும், வண்டிகளை à®"ட்டிச் செல்லவும் கஷ்டப்படுகின்றனர். குறிப்பாக மழைக்காலத்தில் ரோடுகள் குண்டும் குழியுமாகி மோசமாகி விடுகிறது.

ரோடுகளை சீரமைத்து, சாக்கடை கால்வாய் அடைப்புகளை சரி செய்தால் ரோடுகளில் தண்ணீர் நிற்காது. இந்த குறைகளை தவிர சென்னையை விரும்புவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. வரும் ஆண்டுகளில் சென்னையை சுத்தமான, பசுமையான நகரமாக பார்க்க நான் ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் நயனதாரா.

எனவே சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களே, முன்பை விட கடுமையாக உழைத்து நயனதாராவுக்கேற்றார் போல சென்னை மாநகர சாலைகளை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்...

 

தேசிய கொடியை அவமதித்ததாக ஷாருக்கான் மீது வழக்கு

Case Against Shah Rukh Khan Disrespection

மும்பை: தேசியக் கொடியை அவமதித்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி இந்திய அணி கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற பிறகு நடந்த கொண்டாடட்டத்தின்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தேசிய கொடியை அவமதித்ததாக சமூக சேவகர் ரவிந்திர பிரம்மே (40) என்பவர் சாட்டுஷ்ரிங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக தேசியக்கொடியை பிகினி போன்று அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த மாடல் கெஹ்னா வசிஷ்ட்டுக்கு எதிராக ரவிந்திரா டெக்கன் ஜிம்கானா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கெஹ்னாவை கடந்த சனிக்கிழமை அன்று கைது செய்தனர்.

இந்நிலையில் ரவிந்திரா கூறுகையில்,

தேசிய கொடியை அவமதிப்பவர்களை கண்டுபிடித்து அவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்கள் மீது புகார் கொடுக்க ஒரு இயக்கத்தை துவங்க திட்டமிட்டுள்ளோம். அண்மையில் நான் பிரவுஸ் செய்தபோது 2011ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி இந்திய அணி கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற பிறகு நடந்த கொண்டாடட்டத்தின்போது எடுக்கப்பட்ட படங்களைப் பார்த்தேன். அப்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நம் தேசிய கொடியை அசைப்பது போன்ற படத்தை பார்த்தேன். அவர் தேசிய கொடியை தலைகீழாகப் பிடித்து அதை அவமதித்துவிட்டார்.

ஷாருக்கான் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு ரோல் மாடல். அப்படிபட்டவர் பொறுப்புடன் செயல்பட வேண்டும். அவர் தேசியக் கொடியை அவமதித்தது குறித்து நான் சாட்டுஷ்ரிங் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். எனது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் வழக்கை ஷாருக்கான் வசிக்கும் மும்பை பந்த்ரா பகுதி காவல் நிலையத்திற்கு மாற்றினர் என்றார்.

 

5 நாட்களில் 'ரூ.100 கோடி' வசூல்: ஏக் தா டைகர் புதிய இந்திய சாதனை

Ek Tha Tiger Sets Box Office Record 100 Crore   

டெல்லி: சல்மான் கானின் ஏக் தா டைகர் படம் வெறும் 5 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் ஏக் தா டைகர் படம் சுதந்திர தினத்தன்று வெளியானது. படம் வெளியான வெறும் 5 நாட்களில் ரூ.100 கோடி வசூலாகியுள்ளது. 5 நாட்களில் ஒரு இந்தியப் படத்திற்கு ரூ.100 கோடி வசூலானது இது தான் முதன் முறை.

இதன் மூலம் வசூலில் ஏக் தா டைகர் புதிய சாதனை படைத்துள்ளது. முன்னதாக சல்மானின் தபாங்(ரூ.147 கோடி), ரெடி(ரூ.122 கோடி) மற்றும் பாடிகார்ட் (ரூ.148 கோடி) ஆகிய படங்கள் ரம்ஜான் பண்டிகையன்று ரிலீஸாகி ரூ.100 கோடி வசூல் செய்தது. ஏக் தா டைகரின் மூலம் தொடர்ந்து 4வது முறையாக சல்மானின் படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.

நேற்றுடன் ரூ.110 கோடி வசூல் செய்துள்ள இந்த படம் ஆமீர் கானின் 3 இடியட்ஸின் வசூல் சாதனையான ரூ.385 கோடியை மிஞ்சிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வரை உள்நாட்டில் மட்டும் ரூ.92.5 கோடி வசூலானது. இன்னும் 2 வாரத்திற்குள் ரூ.200 கோடி வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏக் தா டைகரில் சல்மானுக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சிகரெட்டையும், சிப்ஸையும் 'சாப்பிட்டு' உயிர் வாழும் அமெரிக்க நடிகை!

Stewart Refusing Eat Surviving On

லண்டன்: அமெரிக்க நடிகை கிரிஸ்டன் ஜேம்ஸ் ஸ்டூவர்ட் சரியாக சாப்பிடுவதில்லையாம். மாறாக எப்போது பார்த்தாலும் தம்மடித்தபடி இருக்கிறாராம். சிப்ஸ் மட்டுமே சாப்பிடுகிறாராம்.

சமீபத்தில்தான் கிறிஸ்டனின் காதலரான ராபர்ட் பேட்டின்சன் அவரை விட்டுப் பிரிந்தார். இதனால் மனம் நொந்து போய் விட்ட கிறிஸ்டன், சரியாக சாப்பிடுவதில்லையாம். மாறாக சிப்ஸை மட்டுமே கொறித்துக் கொண்டிருக்கிறாராம். அதேபோல எப்போது பார்த்தாலும் சிகரெட் புகைத்தபடி விரக்தியாக இருக்கிறாராம்.

அமெரிக்க நடிகைகளிலேயே அழகானவர் என்ற பெயருடையவர் கிறிஸ்டன். அவர் இப்போது இப்படி சோகமான நிலையில் இருப்பது அவரது ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

கிறிஸ்டன் எப்போது பார்த்தாலும் புகைத்தபடி இருக்கிறார். அவ்வப்போது ரெட் புல் எனர்ஜி பானத்தை அருந்துகிறார். கூடவே உருளைக்கிழங்கு சிப்ஸை கொறிக்கிறார். அவ்வளவுதான் இதுதான்அவரது சாப்பாடு என்று பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

லாஸ் ஏஞ்சலெஸிஸ் உள்ள ஒரு தயாரிப்பாளரின் வீட்டில்தான் தற்போது தங்கியிருக்கிறாராம் கிறிஸ்டன். வெளியே அவ்வளவாகத் தலை காட்டுவதில்லை. முகமெல்லாம் வெளுத்துப் போய் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறாராம் கிறிஸ்டன்.

யாராவது அவரை வற்புறுத்தி எதையாவது சாப்பிடக் கூறினாலும் அவரால் சாப்பிட முடியவில்லையாம். ஒரு கப் சூப் கூட குடிக்க முடியவில்லையாம். அந்த அளவுக்கு சோகம் அவரைத் தாக்கியுள்ளதாம்.

கிறிஸ்டனின் இந்த நிலை எங்கு போய் முடியுமோ என்று அவரது ரசிகர்கள் கவலைக்குள்ளாகியுள்ளனர்.

 

''தமிழகத்தில் தியேட்டர் உரிமையாளர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது''

Theatre Owners Are Dire Situation

சென்னை: தமிழகத்தில் உள்ள தியேட்டர் உரிமையாளர்களின் நிலையெல்லாம் கவலைக்கிடமாக இருப்பதாக கவலையுடன் கூறியுள்ளார் திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம்.

திருத்தணி என்று ஒரு படம். பரத்-சுனைனா நடிப்பில் ரொம்ப காலமாக தயாரிப்பில் உள்ள படம். பேரரசுதான் இயக்கியுள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா கமலா தியேட்டரில் நடந்தது. இயக்குநர் கே.பாக்யராஜ் ஆடியவை வெளியிட, திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் பேசுகையில்,

சினிமா தியேட்டர்களில் கூட்டம் குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. இது பற்றி திரை உலகின் அனைத்து பிரிவினரும் ஒன்று கூடி விவாதித்து ஒரு நல்ல தீர்வு காணவேண்டும்.

2012-ம் வருடத்தில் 150 படங்கள் திரைக்கு வந்துள்ளன. அதில் மூன்றே மூன்று படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. 2 படங்கள் சுமாராக ஓடியது. மீதி அத்தனை படங்களும் தோல்வி அடைந்தன. தியேட்டர் அதிபர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதனால் மிக விரைவில் திரையுலகினர் ஒன்று கூடி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்றார் பன்னீர்செல்வம்.

பின்னர் பேசிய எஸ்.ஏ.சி. கூறுகையில், இங்கே பன்னீர் செல்வம் பேசும்போது தியேட்டர் அதிபர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறினார். தியேட்டர் அதிபர்களுக்காவது தியேட்டர்கள் உள்ளன. ஆனால் தயாரிப்பாளர்களுக்கோ ஒரு வீடு கூட இல்லை.

தியேட்டர்களில் கூட்டம் குறைந்து கொண்டே வருவது உண்மைதான். இதற்கு தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகிய அனைத்து பிரிவினரும் ஒன்று கூடி ஒரு முடிவு எடுக்க கூடிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

150 படங்கள் இந்த வருடம் திரைக்கு வந்துள்ளன. அதில் 120 படங்கள் குறைந்த பட்ஜெட்டில் தயாரானவை. குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் அவைகளை சரியான நேரத்தில் ரிலீஸ் செய்ய வேண்டும்.

இந்த படம் வெளி வருவதற்கு நடிகர் பரத் உதவி செய்திருப்பதாக கேள்வி பட்டேன். சில நடிகர்கள் தயாரிப்பாளர்கள் எப்படியோ போகட்டும், அவர்கள் செத்தால் கூட பரவாயில்லை என்று நினைக்கிறார்கள் என்றார்.

விழாவில் திரையுலகினர் நிறையப் பேர் கலந்து கொண்டனர்.

 

'டாப் கன்' இயக்குனர் டோனி ஸ்காட் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை

Top Gun Director Tony Scott Dies After Jumping Bridge

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் இயக்குனர் டோனி ஸ்காட் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் டோனி ஸ்காட். அவர் தனது சகோதரர் ரிட்லி ஸ்காட்டுடன் சேர்ந்து படங்களைத் தயாரித்தும் வந்தார். டாப் கன், தி டேக்கிங் ஆப் பெல்ஹம் 123 போன்ற பிரபல படங்களை இயக்கியவர். இந்நிலையில் அவர் கடந்த 19ம் தேதி மதியம் 12.30 மணிக்கு லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பெட்ரோ மாவட்டத்தில் உள்ள வின்சென்ட் தாமஸ் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடல் பிற்பகல் 3 மணி அளவில் கண்டெடுக்கப்பட்டது. பாலத்தில் நின்றிருந்த அவரது காரில் தனது குடும்பத்தாருக்காக கடிதம் எழுதி வைத்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்தோனி டேவிட் ஸ்காட் கடந்த 1944ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். லண்டனில் உள்ள ராயல் காலேஜ் ஆப் ஆர்டில் படித்த அவர் தனது சகோதரர் ரிட்லி ஸ்காட்டுக்காக ஆயிரக்கணக்கான டிவி சீரீயல்களை இயக்கியுள்ளார். அவரது முதல் ஹாலிவுட் படமான 'தி ஹங்கர்' எதிர்பார்த்த அளவு போகவில்லை. அதையடுத்து 3 ஆண்டுகள் கழித்து அவர் எடுத்த 'டாப் கன்' படம் அவருக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. அவர் கிரிம்சன் டைட், எனிமி ஆப் தி ஸ்டேட் மற்றும் மேன் ஆப் பையர் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

அவர் டாப் கன் இரண்டாம் பாகத்தை இயக்கவிருந்தார். மேலும் நார்கோ சப் என்ற படத்தை 2013ம் ஆண்டு வெளியிடத் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் தான் அவர் திடீர் என்று தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே 2 முறை விவாகரத்தான அவருக்கு டான்னா வில்சன் ஸ்காட் என்ற மனைவியும், பிரான்க், மேக்ஸ் ஆகிய இரட்டைக் குழந்தைகளும் உள்ளனர்.

 

பார்க்கில் கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட எக்சர்ஸைஸ் செய்த நடிகை!

World Curvy Catherine Tyldesley Shows During Exercise In Park

பொதுமக்கள் கூடும் à®'ரு பார்க்குக்கு வந்த இங்கிலாந்து நடிகை கேத்தரின் டைல்டெஸ்லி, கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட உடற்பயிற்சி செய்து அனைவரையும் கிளுகிளுக்க வைத்து விட்டார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகை, மாடல் அழகிதான் கேத்தரின். காரனேஷன் ஸ்டிரீட் நாடகத்தில் தற்போது நடித்து வரும் பிரபலம். சமீபத்தில் லண்டனில் உள்ள à®'ரு பார்க்குக்கு வந்தார் கேத்தரின். முன்னழகு கிட்டத்தட்ட வெளியே தெரியும் அளவுக்கு à®'ரு உடை. அவருக்கு ஏற்கனவே பெரிய மார்பகம் வேறு. அதை மேலும் பெரிதாக வெளிக்காட்டியபடி வந்த கேத்தரின், தனது பயிற்சியாளருடன் இணைந்து பல்வேறு உடற்பயிற்சிகளைச் செய்தார்.

நீளம் தாண்டுதல், புஷ் அப், ஸ்டிரச்சிங், கிக்கிங், பன்ச்சிங் என பார்க்கில் செலவிட்டார் கேத்தரின். அந்த உடற்பயிற்சி முழுவதும் கவர்ச்சி மழைதான். இதை புகைப்படம் எடுக்கவும் அனுமதித்தார் கேத்தரின். கவர்ச்சிகரமான போஸ் வேறு கொடுத்தார்.

வேடிக்கை பார்த்தவர்கள், மூச்சை பெரிதாக இழுத்து விட்டவாறு கிளம்பிச் சென்றனர்... வேறென்ன செய்ய முடியும்...!