துள்ள வைக்கும் 'டாப்லெஸ்' மோனிகா பெலுச்சி!


40 வயதைத் தாண்டியும் கவர்ச்சியில் கிறங்கடித்துவரும் இத்தாலியைச் சேர்ந்த ஹாலிவுட் நாயகி மோனிகா பெலுச்சி, டாப்லெஸாக போஸ் கொடுத்து ரசிகர்களை துள்ள வைத்துள்ளார்.

எல்லே என்ற பத்திரிகையின் அட்டைப்படத்துக்காகத்தான் இந்த அரைநிர்வாண போஸ் கொடுத்துள்ளார் பெலுச்சி.

கவர்ச்சி, ஆடையில்லாமல் நடிப்பது போன்றவையெல்லாம் மோனிகாவுக்கு ஒரு பிரச்சினையே இல்லை. 'ஷூட் எம் எப்' படத்தில் கூட அவர் கிட்டத்தட்ட அரைநிர்வாண காட்சியில் நடித்திருந்தார்.

அஸ்ட்ரிக்ஸ் அண்ட் ஒப்ளிக்ஸ் போன்ற நகைச்சுவை படங்களிலும் கூட அவர் கவர்ச்சி ததும்ப நடித்திருப்பார்.

ஏற்கெனவே பலமுறை பத்திரிகைகளுக்கு பெரும் தொகை பெற்றுக்கொண்டு ஒளிவு மறைவுடன் கூட நிர்வாண போஸ் கொடுத்துள்ளார். சாப்ட் போர்ன் நடிகை என்று கூறும் அளவுக்கு அவர் இமேஜ் அடிபட்டாலும், மோனிகாவின் கவர்ச்சிக்கு இன்னமும் நல்ல வரவேற்பு இருப்பதால், அவரது படங்களைப் பிரசுரிக்க ஆர்வம் காட்டுகின்றன பத்திரிகைகள்.

அதனாலேயே, பிரபல பத்திரிகையான எல்லே-யின் இந்த ஜூன் மாத இதழின் அட்டைப்பட நாயகியாக டாப்லெஸ் போஸ் தந்துள்ளார் மோனிகா பெலுச்சி.
 

அவன் இவன்... எதிர்பாராத ரெஸ்பான்ஸ்... குஷியான புக்கிங்!!


ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு தமிழ் படத்துக்கு முதல் ஒருவாரம் வரை திருப்தியான புக்கிங் நடந்துள்ளது. படத்தின் பெயர் அவன் இவன். இயக்குநர் பாலா!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படத்துக்குப் பிறகு, ரசிகர்கள் விரும்பி வந்து ஒரு படத்துக்கு காத்திருந்து டிக்கெட் முன்பதிவு செய்தது அநேகமாக அவன் இவனுக்காகத்தான் இருக்கும்.

இதற்கு காரணமும் பாலாதான். படம் குறித்து அவரைத் தவிர ஊரே பேசிக் கொண்டிருக்கிறது.

விஷால், ஆர்யா, ஆர்கே என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படத்தில் நகைச்சுவைக்கு பிரதான இடம் அளித்துள்ளாராம் பாலா.

சென்னையில் கிட்டத்தட்ட 17 திரையரங்குகளிலும், தமிழகம் முழுவதும் 350 திரைகளிலும் அவன் இவன் வெளியாகிறது. நாளை வெளியாகும் இந்தப் படத்துக்கு கடந்த சில வாரங்களாகவே நல்ல பப்ளிசிட்டி. முதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் அனைத்து அரங்குகளிலும் ஹவுஸ் புல். அடுத்து வரும் நாட்களுக்கும் கணிசமாக டிக்கெட் விற்பனையாகியுள்ளதாம்.

படம் நன்றாக இருப்பதாக செய்தி வெளியானால், வசூலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என சந்தோஷப்படுகிறார் கல்பாத்தி அகோரம்.
 

'கடவுள் பாதி மிருகம் பாதி!'


கோடம்பாக்கத்தில் அரிதான விஷயமாக பேசப்பட்ட மல்டி ஸ்டாரர் (இரண்டு அலலது மூன்று ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பது) படங்கள் இப்போது அதிகரிக்க ஆரம்பித்துவிட்டன.

இதற்கு முக்கிய காரணமாக உள்ளவை பாலாவின் அவன் இவன், ஷங்கரின் நண்பன்.

அடுத்து கோடம்பாக்கத்தில் தயாராகும் ஒரு படத்தில் மூன்று ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கப் போகிறார்கள். முதல் ஹீரோ ஆர்யா. இவருடன் மிருகம், ஈரம் பட நாயகன் ஆதியும், நரேனும் இணைகிறார்கள்.

இந்தப் படத்துக்கு தலைப்புதான் கடவுள் பாதி மிருகம் பாதி. படத்தின் இயக்குநர் ராஜ்மோகன் புதியவர் என்றாலும், அவரது கதையின் சுவாரஸ்யம் மூவரையுமே உடனே சம்மதிக்க வைத்துவிட்டதாம்.

இந்தப் படத்தின் சிறப்பு, இதில் கதாநாயகி என்று யாருமே கிடையாது. பரிசோதனை முயற்சியாக இந்தப் படத்தை எடுக்கிறார்களாம்.

பரவாயில்லையே பரிசோதனை முயற்சிக்கு மூன்று ஹீரோக்களின் ஆதரவு கிடைப்பது சாதாரண விஷயமா என்ன!!
 

மருத்துவமனையில் ஜெயசுதா!


பிரபல நடிகையும் ஆந்திர எம்எல்ஏவுமான ஜெயசுதா, உடல் நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அஜீரணம் மற்றும் வாயுத்தொல்லை காரணமாக அவர் இந்த வாரம் முழுவதும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் பிரபல நடிகையாக திகழ்பவர் ஜெயசுதா. ஒரு காலத்தில் ரஜினி உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்தவர்.

ஆந்திராவில் செட்டிலாகிவிட்ட இவருக்கு, கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி எம்எல்ஏ சீட் கொடுத்தார். அதில் ஜெயித்தும் விட்டார் ஜெயசுதா.

ஆனால் ராஜசேகர ரெட்டி மகன் ஜெகன்மோகன் ரெட்டி தனிக் கட்சி தொடங்கிய பிறகு, அவருடைய ஆதரவாளராக மாறிவிட்டார்.

நேற்று ஜெயசுதாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்றும் நாளையும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

விஜய்யிடம் அரசியல் 'புகலிடம்' கோரும் சோனா!


அதிமுக பிரமுகருடன் மோதலால் சிக்கல்-விஜய்யிடம் புகலிடம் கோரும் சோனா

விஜய் மக்கள் இயக்கத்தில் சேர சோனா மும்முரம்!

முன்பு ஒரு பிரஸ் மீட்டில், "நான் விரைவில் விஜய்யின் அரசியல் இயக்கத்தில் சேர்ந்து சேவை செய்வேன்" என்று கவர்ச்சி நடிகை சோனா கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

இப்போது அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கிவிட்டார் சோனா.

முதல்கட்டமாக, விஜய் மக்கள் இயக்கத்தில் சேர என்ன நிபந்தனை என்று கேட்டு விசாரித்த அவர், விரைவில் எஸ்ஏ சந்திரசேகரன் அல்லது விஜய்யை சந்தித்து தன்னை இயக்கத்தில் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் போகிறாராம்.

இந்த இயக்கத்தின் மகளிர் அணி தலைவர் பொறுப்பை தனக்குத் தந்தால் சிறப்பாக சேவை செய்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

விஜய் இயக்கத்தில் சேர சோனா இவ்வளவு தீவிரம் காட்ட காரணம், ஆளும் அரசியல் பிரமுகர்கள் மூலம் அவருக்கு மிரட்டல்தான் என்கிறார்கள்.

அந்த பிரமுகருடன் வாடகை பிரச்சினையில் தகராறு ஏற்பட, சோனா அவர் மீது போலீசில் புகார் தெரிவித்தார். ஆனால் போலீசோ, அதிமுக பிரமுகரை விட்டுவிட்டு சோனாவை விசாரிக்க ஆரம்பித்ததால், இப்போது அரசியல் பாதுகாப்பு தேட ஆரம்பித்துள்ளார் சோனா என்கிறார்கள் திரையுலகில்.
 

ரீமா, அசின், ஸ்ரேயாவின் 'போட்டு வாங்கும்' டெக்னிக்!!


அவன் இவனில் ஒரு கெஸ்ட் ரோலில் சூர்யா நடித்துள்ளார் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. ஆனால் பாலாவுக்கே தெரியாத செய்தி... அந்தப் படத்தில் ரீமா சென் 'நடித்திருக்கிறார்' என்பது!!

செய்தி உபயம் மீடியாக்கள். இதைப் பார்த்து பாலா என்ன நினைத்திருப்பாரோ தெரியாது. ஆனால் ரீமா சென் உடனடியாக மறுப்பு தெரிவித்திருக்கிறார் (ஒரு வேளை போட்டு வாங்குற டெக்னிக்கோ!)

"அவன் இவனில் நான் நடித்திருக்கிறேனா இல்லையா என்பது படத்தைப் பார்த்தால் தெரிந்துவிடப் போகிறது. ஆனால் மீடியாக்காரர்கள் ஏன் இப்படி யார் என்ன சொன்னாலும் க்ராஸ் செக் பண்ணாமல் போடுகிறார்கள்?" என்று மழுப்பலாகப் பேசியுள்ளார்.

கடந்த சில தினங்களாக, ரீமா சென், அசின், ஸ்ரேயா ஆகியோர் மீது சினிமாக்காரர்களே புகார் சொல்லத் துவங்கியுள்ளனர். கைவசம் படங்கள் இல்லாத இவர்கள், தாங்களாகவே, இந்தப் படத்தில் நடிக்கிறேன், அவருடன் நெருங்கிய தொடர்பு என்றெல்லாம் செய்தியைக் கிளப்பிவிட்டு, மறுப்பும் கூறி வருகிறார்களாம்.

எதற்கு இப்படி?

சும்மா கிணற்றில் போட்ட கல் மாதிரி இருந்தால் வாய்ப்பு எப்படி வரும்... ஏதாவது சலசலப்பு காட்டினால்தானே இன்டஸ்ட்ரியில் தாங்கள் இருப்பது மற்றவர்களுக்கு தெரியும் என்ற அபார யோசனையின் விளைவுதானாம் இது!

நல்லாத்தான் யோசிக்கிறாய்ங்க!
 

எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்... உடம்பை பாத்துக்கங்க! - கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி


சென்னை: மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன ரஜினி நேற்று இரவு திமுக தலைவர் கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசினார். தான் பூரண நலமடைந்துவிட்டதாக தெரிவித்த அவருக்கு, கருணாநிதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்தார். மேலும் சில வழக்கமான சோதனைகள் இருப்பதால் சிங்கப்பூரிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது உடல்நிலை குறித்து தகவல் தெரிவித்தார்.அப்போது தமிழகம் காப்பாற்றப்பட்டமைக்காக நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

அடுத்து திமுக தலைவர் கருணாநிதியுடன் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் பேசினார். தமது உடல் நலம் குறித்தும் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் கலைஞரிடம் தொலைபேசியில் ரஜினிகாந்த் விவரித்தார்.

உடல்நலம் தேறி ரஜினி விரைவில் சென்னை திரும்ப மனமாற வாழ்த்துவதாகவும், மீண்டும் பழைய வேகத்துடன் படங்களில் நடிக்க வேண்டும் என விரும்புவதாகவும் கருணாநிதி வாழ்த்தினார்.

அவருக்கு பதிலளித்த ரஜினி, "வாழ்க்கையில் நீங்கள் பார்க்காத ஏற்றத்தாழ்வுகள் இல்லை. எதைப்பற்றியும் கவலைப்படாமல், உடல் நிலையைப் பார்த்துக் கொள்ளுங்கள். அதுதான் முக்கியம்," என்றார் ரஜினி.
 

அருண் விஜய் 'ராசி': கம்பி நீட்டிய பிராச்சி!


'தடையறத் தாக்க' என்று ஒரு படம். அருண் விஜய் ஹீரோ. ஹீரோயினாக மும்பையைச் சேர்ந்த பிராச்சி தேசாயை ஒப்பந்தம் செய்தனர். ராக் ஆன், லைஃப் பார்ட்னர் போன்ற இந்திப் படங்களில் நடித்துள்ளார் இந்த பிராச்சி.

இவரை ஏற்கெனவே தங்கள் படங்களில் நடிக்க வைக்க பல தமிழ் இயக்குநர்கள் முயன்றனர். ஆனால் அப்போதெல்லாம் மறுத்து வந்தவர், அருண் விஜய்யின் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். பெரிய சம்பளம் பேசப்பட்டது. அட்வான்ஸையும் வாங்கி பெட்டியில் போட்டுக் கொண்டார்.

சில தினங்களில் படப்பிடிப்பு ஆரம்பித்தபோது, அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொந்த ஊரான குஜராத் போனவர்தான். வரவேயில்லை.

அதற்குள் அருண் விஜய் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை சுறுசுறுப்பாக முடித்துவிட்டார். இரண்டாவது ஷெட்யூலுக்கு வந்துவிடுவார் என்ற நம்பிக்கையுடன் போன் செய்த அருண் விஜய்யின் லைனுக்கே வரவில்லையாம் பிராச்சி. தொடர்ந்து அவர் செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. பின்னர்தான் தெரிந்தாம் பிராச்சி பிரச்சினை செய்யக் காரணம், அருண் விஜய்யின் கேரியர் கிராப் மற்றும் ராசி பற்றி யாரோ புட்டுப் புட்டு வைத்துவிட்டார்களாம் அம்மணியிடம்.

இந்த திருப்பணியைச் செய்தது தமிழ் சினிமாவைச் சேர்ந்த சிலர்தான் என்று தனக்கு வேண்டியவர்களிடமெல்லாம் புலம்பியபடி, புதிய ஹீரோயின் தேட ஆரம்பித்துள்ளாராம் அருண் விஜய்.
 

"மீண்டும் முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டது!" - ஜெ.வுக்கு போனில் ரஜினி வாழ்த்து


மீண்டும் முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டதற்கு வாழ்த்துக்கள் என ஜெயலலிதாவிடம் போனில் தெரிவித்தார் ரஜினிகாந்த்.

சிங்கப்பூர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன கையோடு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தொலைபேசியில் பேசினார் ரஜினி.

தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டதாகவும் அதற்கு தன்னுடைய வாழ்த்துக்கள் என்றும் அவர் ஜெயலலிதாவிடம் கூறினார்.

தான் பூரணமாக குணமடைந்துவிட்டதாகவும், அடுத்த மாதம் சென்னை திரும்புவதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஏப்ரல் 29-ம் தேதி ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சென்னை இசபெல்லா மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்ற ரஜினி, சிறுநீரக பிரச்சினைக்காக கடந்த மே 18-ம் தேதி சிங்கப்பூர் சென்றார். அங்குதான் அவரது நோய்க்கான மூல காரணம் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை வேகமாக சீரடைந்தது. இப்போது ரஜினி பூரண நலம் பெற்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்ததும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு போன் செய்தார் ரஜினி.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் சிங்கப்பூரிலிருந்து நேற்று தொலைபேசியில் பேசினார் நடிகர் ரஜினிகாந்த்.

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் முதலில் பேச முடிவு செய்ததது முதல்வருடன்தான் என்று கூறிய ரஜிநி தான் பூரண உடல்நலம் பெற்றுவிட்டதாக தெரிவித்தார். ரஜினிக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் தொலைபேசியில் ரஜினியின் குரலைக் கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாகவும் முதல்வர் கூறினார்.

சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டதற்காக ஜெயலலிதாவுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், தான் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றபோது அக்கறையுடன் விசாரித்ததற்கு நன்றிகளையும் கூறினார் ரஜினி.

விரைவில் ரஜினி சென்னை திரும்ப வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா அவரை வாழ்த்தியபோது, இன்னும் ஒன்றரை மாதத்தில் சென்னை திரும்புவதாக ரஜினி கூறினார்.

ரஜினியின் மனைவி லதா ரஜினியுடம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

ஐயப்பன் சிலையை தொட்டதாக நாடகம்-ஜெயமாலா ஆஜராக கேரள கோர்ட் உத்தரவு


திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்ப சாமி சிலையை தொட்டதாக கூறி நாடகமாடிய விவகாரத்தில் கன்னட நடிகை ஜெயமாலா உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 2006ம ஆண்டு பிரபல ஜோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர் தலைமையில் தேவபிரச்சன்னம் நடந்தது. அப்போது ஐயப்பன் விக்ரத்தை ஒரு பெண் தொட்டு விட்டதால் பரிகார பூஜை செய்ய வேண்டுமென பணிக்கர் கூறினார்.

இதற்கு மறுநாளே கன்னட நடிகை ஜெயமாலா நான்தான் பல ஆண்டுகளுக்கு முன் ஐயப்பன் விக்ரத்தை தெரியாமல் தொட்டு விட்டேன் என்று கூறினார்.

சபரி்மலைக்கு செல்ல 50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐயப்ப விக்கிரத்தை ஜெயமாலா தொட்டதாக கூறியது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் பணிக்கரும், ஜெயமாலாவும் சேர்ந்து திட்டமிட்டு நாடகமாடியது தெரிய வந்தது.

இதையடுத்து பணிக்கர், அவரது உதவியாளர் ரகுபதி, ஜெயமாலா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் 3 பேர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

3 ஆண்டுகளுக்கு பின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் வழக்கை தள்ளுபடி செய்யவேண்டுமென ஜெயமாலா கேரள உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம் இது தொடர்பாக ராணி நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் ராணி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது நடிகை ஜெயமாலா, உன்னி கிருஷ்ண பணிக்கர், ரகுபதி ஆகியோர் இம்மாத இறுதிக்குள் நேரில் ஆஜாராக நீதிபதி உத்தரவிட்டார்.
 

தமிழில் அவ்ளோதானா? - ப்ரியாமணியின் ஏக்கம்


தேசிய விருது வாங்கியதும், 'இப்படிப்பட்ட ரோல் வேண்டும், அப்படி நடிக்கமாட்டேன்' என்றெல்லாம் பிகு பண்ணிய ப்ரியாமணிக்கு தமிழில் இப்போது படங்களே இல்லை.

கடைசியாக நடித்த ராவணன், ரத்த சரித்திரம் படங்களில் அவர் நடித்திருக்கிறாரா என்று கேட்கும் அளவுக்கு 'தம்மாத்துண்டு' வேடங்கள்!

தெலுங்கு, கன்னடம் என்று போய்க் கொண்டிருக்கிறார். இன்டஸ்ட்ரியில் பெயர் ரிப்பேராகிவிட்டதால், நல்ல வாய்ப்புகள் வருவதும் நின்றுபோய், உப்புமா கம்பெனிகள்தான் அவரை அணுகுகின்றனவாம்.

சமீபத்தில் தனது பிறந்த நாளை பெங்களூரில் கொண்டாடிய பிரியாமணி, இப்போது நம்பிக்கொண்டிருப்பது 'ஷேத்திரம்' என்ற தெலுங்கு படத்தை. இது புராணப் படம்.

என்ன இப்படியாகிடுச்சே நிலைமை என்று துக்கம் விசாரித்த நிருபர்களிடம், "தமிழ்ல வாய்ப்பு அவ்ளோதானா என்று எல்லோரும் கேட்கிறார்கள். மீண்டும் தமிழில் நடிக்கணும். எந்த மாதிரி வேடமானாலும் ஓகே. நல்லமாதிரியா எழுதி கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க," என்கிறாராம்.