இசைப்ரியாவின் வாழ்க்கை படமாகிறது- இளையராஜா இசையமைக்கிறார்!

ஈழத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட இசைப்ரியாவின் வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது. இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

"போர்களத்தில் ஒரு பூ" என்கிற தலைப்பில் இசைப்ரியாவின் வாழ்க்கையை படமாக எடுத்து வரும் இயக்குனர் கணேசன், கன்னடத்தில் சில படங்களுக்கு பணியாற்றியவர். இவர் தமிழில் இயக்கும் முதல் படம் இது.

இந்த படத்தில் இசைப்ரியாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பொருத்தமான முக அமைப்புடன் எந்த கதாநாயகியும் கிடைக்கவில்லையாம். அப்படியே பொருத்தமான முக அமைப்புகள் இருந்தாலும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க பல நடிகைகள் தயங்கினார்களாம்.

இசைப்ரியாவின் வாழ்க்கை படமாகிறது- இளையராஜா இசையமைக்கிறார்!

கடைசியாக அனு என்கிற புதுமுகம்தான் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் .

"முதலில் இசைப்ரியாவின் வாழ்க்கை வரலாறு பற்றி எனக்கு எதுவும் தெரியாது இயக்குநர்தான் அவங்களைப் பற்றி எனக்கு விவரமாகச் சொன்னார். சில வீடியோக்களையும் எனக்கு காண்பித்தார்.

கேட்பதற்கும் பார்ப்பதற்கும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. அதை விட ஷூட்டிங்கில் நடிக்கும்போதுதான் அந்த கதாப்பாத்திரத்தின் வலிகளை என்னால் உணர முடிந்தது. உண்மையான ஒரு போர்களம் எப்படி இருக்குமோ அப்படித்தான் எனக்குத் தெரிந்தது ஷூட்டிங் நடக்கும் இடங்கள் எல்லாம்.

இசைப்ரியாவின் வாழ்க்கை படமாகிறது- இளையராஜா இசையமைக்கிறார்!

சில இடங்களில் என்னையும் அறியாமல் அழுது இருக்கிறேன். நடிக்கிற எனக்கே இப்படி என்றால் நிஜத்தில் அந்த கொடுமைகளை எல்லாம் அனுபவித்த இசைப்ரியாவும் அந்த மக்களும் எவ்வளவு வலிகளைத் தாங்கியிருக்கிறார்கள் என்பதை இந்தப் படம் எனக்கு உணர்த்தியது.

எனக்கு கிட்டதட்ட இசைப்ரியாவின் மீது ஒரு அளவு கடந்த ஒரு பற்றையும் மரியாதையும் இந்தப்படம் எனக்கு தந்து இருக்கிறது," என்றார் அனு.

இசைப்ரியாவின் வாழ்க்கை படமாகிறது- இளையராஜா இசையமைக்கிறார்!

தன்னை எல்லோரும் இசைப்ரியா என்றே அழைப்பதால், இப்போது யார் தன் பெயரைக் கேட்டாலும் இசைப்ரியா என்றே கூறிவிடுகிறாராம் அனு.

இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். அவரது குரலில் இசைப்ரியா பற்றி ஒலிக்கும் ஒரு பாடலை கேட்டு கண்கலங்கிவிட்டார்களாம் படக்குழுவினர்.

 

ராத்திரிக்குள்ள ட்ரைலர் ரிலீஸ் பண்ணிடுவோம் - ஜில்லா இயக்குநர் நேசன்

இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட விஜய்யின் ஜில்லா ட்ரைலர், இன்னும் வெளியாகவில்லை. இன்று இரவு நிச்சயம் வெளியாகும் என படத்தின் இயக்குநர் நேசன் தெரிவித்துள்ளார்.

படம் வெளியாக இன்னும் இரு தினங்கள் மட்டுமே உள்ளது. பொதுவாக ட்ரைலர்கள் ஒரு மாதத்துக்கு முன்பே வெளியாவது வழக்கம்.

ஜில்லா பட ட்ரைலர்களை கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிடுவதா முதலில் அறிவித்தனர்.

ராத்திரிக்குள்ள ட்ரைலர் ரிலீஸ் பண்ணிடுவோம் - ஜில்லா இயக்குநர் நேசன்

பின்னர் டிசம்பர் 31-ம் தேதிக்கு தள்ளிப் போட்டனர்.

இந்த நிலையில் புத்தாண்டு தினத்திலிந்து இதோ அதோ என்று சொல்லப்பட்டு வந்தது. இன்று நிச்சயம் ட்ரைலர் வெளியாகும் என நேற்று அறிவித்தனர்.

ஆனால் இதுவரை வெளியாகவில்லை. இதுகுறித்து இயக்குநர் நேசன் கூறுகையில், "ட்ரைலரை வெளியிட நாங்கள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். இன்று இரவுக்குள் ஜில்லாவின் இரு ட்ரைலர்கள் வெளியாகும்," என்றார்.

 

நட்பின் மேன்மையை சொல்லும் 'ஒவ்வொரு நண்பனும் தேவை மச்சான்'!!

நட்பின் மேன்மையை உணர்த்தும் வகையில் தயாராகி வரும் புதிய திரைப்படத்துக்கு "ஒவ்வொரு நண்பனும் தேவை மச்சான்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இது முன்னணி காமெடியன் சந்தானம் ஒரு படத்தில் சொல்லும் வசனம் என்பது நினைவிருக்கலாம்.

'எஸ்.எம்.பி. பிக்சர்ஸ்' நிறுவனத்துக்காக ஆம்பூர் எஸ். மகேந்திரன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். இதில் கதாநாயகனாக புதுமுகம் மிதுன் அறிமுகமாகிறார்.

நட்பின் மேன்மையை சொல்லும் 'ஒவ்வொரு நண்பனும் தேவை மச்சான்'!!

'பாடி பில்டிங்' சாம்பியனான மிதுன் தற்போது மற்றொரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். 'இருக்கு ஆனா இல்ல' திரைப்படத்தில் நடித்துள்ள மனிஷாஸ்ரீ இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் 'சொல்லுங்க டாடி சொல்லுங்க' புகழ் 'சேட்டை' செந்தில், சூரியன் எஃப்.எம். தொகுப்பாளரான அசார், பாண்டு, சபீதா ஆனந்த், 'நாடோடிகள்' அர்ச்சனா, சிந்து போன்ற நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

நட்பின் மேன்மையை சொல்லும் 'ஒவ்வொரு நண்பனும் தேவை மச்சான்'!!

படத்துக்கு எச். ஷாஜகான் இசையமைத்துள்ளார். படத்தில் ஆறு பாடல்கள். முழுவதும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. பாடல்களை ராஜ ராஜ ராஜன் மற்றும் நிலா ரசிகன் எழுதியுள்ளனர். சுரேஷ் தேவ் நடனம் அமைத்துள்ளார்.

துபாய் நாட்டில் பல்வேறு குறும்படங்கள் மற்றும் விளம்பரப் படங்களை இயக்கியவரான ஜி. சலீம் "ஒவ்வொரு நண்பனும் தேவை மச்சான்" படத்தின் ஒளிப்பதிவை கவனித்துள்ளார்.

நட்பின் மேன்மையை சொல்லும் 'ஒவ்வொரு நண்பனும் தேவை மச்சான்'!!

தமிழ் இணைய வாசகர்கள் மத்தியில் 'அப்பாவி தங்கமணி' என்ற பெயரில் புகழ் பெற்ற எழுத்தாளரான புவனா கோவிந்த் இந்த திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார். அதற்கு திரைக்கதை அமைத்து வசனங்கள் எழுதி இயக்கி வருபவர், ராஜ ராஜ ராஜன். இவர், தொலைக்காட்சி செய்தித் துறையில் நெடிய அனுபவம் கொண்டவர்.

"ஒவ்வொரு நண்பனும் தேவை மச்சான்" படப்படிப்பு சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திரைப்படத்தின் முன்னோட்டப் பாடல் புத்தாண்டு தினத்தன்று 'யூ-ட்யூப்' இணையத்தில் "ANTI-LOVE ANTHEM" என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

 

நெல்லையில் 90 அடியில் பிரமாண்டமாக நிற்கும் 'வீரம்' அஜீத்

நெல்லை: நெல்லையில் உள்ள பாம்பே தியேட்டரில் வீரம் அஜீத்தின் 90 அடி உயர கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.

அஜீத் குமாரின் வீரம் படம் வரும் 10ம் தேதி பொங்கல் விருந்தாக ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையை தல படத்துடன் கொண்டாட ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.

நெல்லையில் 90 அடியில் பிரமாண்டமாக நிற்கும் 'வீரம்' அஜீத்

வீரம் படம் வெற்றி பெற வாழ்த்தி பிரமாண்ட கட் அவுட்டுகள் மற்றும் பேனர்களை வைக்க அஜீத் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் நெல்லையில் உள்ள பாம்பே தியேட்டர் முன்பு வீரம் படத்தில் வேட்டி, சட்டையுடன் வரும் அஜீத்தின் கிராமத்து கெட்டப் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்த கட் அவுட் 90 அடி உயரம் கொண்டதாகும்.

இந்த பிரமாண்ட கட் அவுட் பற்றி அஜீத் ரசிகர்கள் ட்விட்டரில் பெருமையாக தெரிவித்து வருகின்றனர்.

 

'வெள்ளை வேன் கதைகள்'... - லீனா மணிமேகலையின் மனதைப் பதற வைக்கும் படம்!

சென்னை: இலங்கையில் காணாமல் போன பல்லாயிரம் பேர்கள் மற்றும் அவர்களின் கண்ணீர் கதைகளை வெள்ளை வேன் கதைகள் என்ற பெயரில் படமாக்கியிருக்கிறார் செங்கடல் படம் தந்த லீனா மணிமேகலை.

எழுத்தாளரும் கவிஞருமான லீனா மணிமேகலை, மாற்று சினிமா முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

ஈழ அகதிகள் படும் துயரங்கள் குறித்த இவரது செங்கடல் உலகெங்கும் பெரும் வரவேற்பையும் விவாதங்களையும் எழுப்பியது. 30க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் பங்கெடுத்த இந்தப் படத்துக்கு விருதுகளும் கிடைத்துள்ளன.

'வெள்ளை வேன் கதைகள்'... - லீனா மணிமேகலையின் மனதைப் பதற வைக்கும் படம்!

இந்தப் படத்தையடுத்து வெள்ளை வேன் கதைகள் (White Van Stories) என்ற படத்தை இயக்கியுள்ளார் லீனா. இது ஒரு ஆவணப் படம்.

ஆனால், ரத்தமும் கண்ணீரும் தெறிக்கும் ஒரு உயிர்ப்பான படம். மனிதாபிமானத்தை மட்டுமே பிரதானப்படுத்தும் முக்கிய பதிவு.

குற்றங்களில் எல்லாம் கொடிய குற்றமான உயிர்களைக் காணாமல் போகடிக்கும் குற்றத்தை தொடர்ந்து செய்து வரும் இலங்கை அரசாங்கத்தை வெளிப்படுத்தும் படம்.

இலங்கையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் "காணாமல் போகடிக்கப்பட்ட" தங்கள் உறவுகளுக்காக வருடக்கணக்கில் தேடிக்கொண்டும், காத்திருந்தும் உழல்கின்றனர். கடந்த மூன்று தசாப்தங்களில் காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் கணக்கின்படி உலக அரங்கில் இலங்கை முதல் இடத்தைப் பிடிப்பதற்கு ஈராக்குடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஐந்து நாளுக்குமொருவர் இலங்கையில் இன்னும் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றனர்.

சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள், வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர்கள், இயக்கப் போராளிகளாக சாட்சியங்களோடு சரண்டைந்தவர்கள், இயக்கத்தால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு போராளிகளாக்கப்பட்டவர்கள், பத்திரிகையாளர்கள், கார்ட்டூனிஸ்டுகள், பாதிரியார்கள், மெளல்விகள், கலைஞர்கள், கேள்வி கேட்டவர்கள், கேள்வி கேட்காதவர்கள், மாணவர்கள், மீனவர்கள் என காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் கதைகளும் காரணங்களும் கொலைகார இலங்கை அரசுக்கு யாரும் தப்பவில்லை என்பதற்கு சாட்சி சொல்கின்றன.

"White Van Stories / வெள்ளை வேன் கதைகள்" காணாமல் போன உறவுகளின் 90 நிமிட விஷுவல் பெட்டிஷன்.

'வெள்ளை வேன் கதைகள்'... - லீனா மணிமேகலையின் மனதைப் பதற வைக்கும் படம்!

கடுமையான ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும் பயணம் செய்ததோடு, முஸ்லீம், சிங்களப் பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் சந்திந்து, கொரில்லா படப்பிடிப்பு நுட்பங்களுடன், உயிராபத்து அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், வெள்ளை வேன் கதைகளை எழுதி இயக்கி தயாரித்திருக்கிறார் லீனா மணிமேகலை.

காமன்வெல்த் மாநாட்டையொட்டி சேனல் ஃஃபோர் தொலைக்காட்சியில் சிறப்பு ஒளிபரப்பை பெற்று,லண்டனில் வெளியிடப்பட்ட இந்தப் படம் முதன்முதலாக இந்தியாவில், சென்னையில் திரையிடப்படுகிறது.

இடம் ஆர்கேவி ப்ரிவியு தியேட்டர், 317 ஜி, என்.எஸ்.கே சாலை (ஆர்காட் ரோடு). (ரஹேஜா கம்ப்ளெக்ஸ் அருகில்), வடபழனி, சென்னை.

நேரம் மாலை 6 -9 மணி. நாள் 12 ஜனவரி 2014

இந்த சிறப்புத் திரையிடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர் நல்லக்கண்ணு வருகிறார்.

மேலும் தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகளான இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா, வெற்றி மாறன், வசந்த், ராதா மோகன், எடிட்டர் லெனின், எழுத்தாளர் சி மோகன், ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், பத்திரிகையாளர் மாலன், பாலபாரதி எம்எல்ஏ, எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, ஓவியா, இயக்குநர் ஆர்வி ரமணி, இயக்குநர் அமுதன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

 

சரத்குமார் கட்சியை கிண்டலடித்தேனா? - நமீதாவின் விளக்கம்

சென்னை: சரத்குமாரின் கட்சியை கிண்டலடித்ததாக மீடியாவில் வந்த செய்திக்கு மறுப்பும் விளக்கமும் அளித்துள்ளார் நமீதா.

நமீதா அரசியல் கட்சி ஒன்றில் சேர இருப்பதாகவும், அதுபற்றி திருச்சியில் செய்தியாளர்கள் கேட்ட சரத்குமார் கட்சி வைத்திருக்கிறாரா என கிண்டலாக நமீதா கேட்டதாகவும் சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதுபற்றி நமீதா ஒரு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"நான் திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது பத்திரிகை நண்பர்கள் நீங்கள் அரசியலில் ஈடுபடப் போவதாக செய்திகள் வருகின்றனவே என்று கேட்டார்கள்.

சரத்குமார் கட்சியை கிண்டலடித்தேனா? - நமீதாவின் விளக்கம்

ஆமாம் ஆர்வமுள்ளது என்று பதிலளித்தேன். எந்த கட்சியில் இணையப்போகிறீர்கள் என்று கேட்டார்கள்...

இப்போதைக்கு சொல்லமுடியாது. இந்த மாதம் இறுதிவரை பொறுத்திருங்கள்.. சொல்கிறேன் என்று பதிலளித்தேன்.

ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளதே? என்றார்கள்.. ஆம் ஆத்மி என்றால் சாதாரண மனிதர்கள் என்று அர்த்தம். சாதாரண மனிதர்களும் அரசியலுக்கு வரலாம் என்பதை நிருபித்துள்ளார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துகள்... என்று பதிலளித்தேன். ஆனால் எங்கும் நான் ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போகிறேன் என்றோ அதற்கு தமிழகத்தில் தலைமை தாங்குவேன் என்றோ பதிலளிக்கவில்லை..

பின் நரேந்திர மோடி பற்றி கேட்டார்கள்.. குஜராத் மாநிலத்தை சிறப்பாக ஆக்கியவர். திறமையாக ஆட்சி செய்ய வாய்ப்பு உள்ளது என பதிலளித்தேன். பின் கேள்விகள் சினிமா பற்றி திரும்பியது.. நான் என்ன படங்கள் செய்கிறேன் என்று பேசிக் கொண்டிருந்தோம்.. அப்போது ஒரு நிருபர் சரத்துடன் கூட்டணி சேர்வீர்களா என்று கேட்டார். அதற்கென்ன எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணியாச்சே சேரலாம் என்று பதிலளித்தேன்..

அப்போது அவர் மேடம் நான் அவரது கட்சிக்கூட்டணி பற்றி கேட்டேன் என்றார். அப்படியா நான் சினிமா பற்றி கேட்டீர்கள் என்று நினைத்து பதில் சொன்னேன். அரசியல் பற்றி கேட்டீர்களா என்று கேட்டுவிட்டு இப்போது பதில் சொல்லமுடியாது.. ஒரு மாதம் பொறுத்திருங்கள் என்றும் பதிலளித்தேன்.

ஆனால் அதை சரத் கட்சி வைத்துள்ளாரா என்று கேட்டதாக மாற்றி தவறாக எழுதி விட்டார்கள். அந்த அவசர பரபரப்பில் நான் சொன்ன பதிலை மாற்றி எழுதி விட்டார்கள். உண்மைதான்.. நான் தமிழில், தமிழ் நாட்டு அரசியலில் புலமை பெற்றவள் கிடையாது. ஒப்புக்கொள்கிறேன்.

ஆனால், நான் திரையுலகில் இருக்கிறேன். சரத் சார் நடிகர் சங்கத் தலைவராக இருக்கிறார். அவர் நடிகர் சங்கத்தையே ஒற்றுமையுடன் குடும்பம் போல கொண்டு செல்பவர். அவரது குடும்ப நண்பராக இருக்கிறேன். அவர் கட்சி நடத்துவது கூட தெரியாமலா இருக்கப்போகிறேன்...?

எனவே சரத் சார் பற்றி நான் சொன்ன கருத்தை மாற்றி பதிவு செய்துகொண்டால் சந்தோசப்படுவேன்... உங்கள் ஆதரவு என்றும் தேவை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்."

-இவ்வாறு நமீதா கூறியுள்ளார்.

 

காதல் இளவரசன் தலைப்பை ஆர்யாவுக்கு விட்டுக் கொடுக்கிறேன் - கமல் ஹாஸன்

சென்னை: என்னுடைய காதல் இளவரசன் அடைமொழியை, நான் ஆர்யாவுக்குத் தருகிறேன் என்றார் கமல்ஹாஸன்.

பழைய நடிகர்களில் மறைந்த ஜெமினிகணேசனை காதல் மன்னன் என்றார்கள்.

அவரது காலகட்டத்திலேயே நடிக்க வந்த கமலஹாசனுக்கு காதல் இளவரசன் என்ற பட்டப் பெயர் சூட்டினர் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும்.

இப்போது கமல் ஹாஸன், உலக நாயகன் என்ற புதிய பட்டத்தைச் சுமக்க ஆரம்பித்துவிட்டார்.

காதல் இளவரசன் தலைப்பை ஆர்யாவுக்கு விட்டுக் கொடுக்கிறேன் - கமல் ஹாஸன்

எனவே தனது பழைய பட்டத்தை ஆர்யாவுக்குத் தர விரும்புவதாக அறிவித்துள்ளார்.

ஆர்யா நடிகைகளுடன் அடிக்கடி இணைத்து பேசப்படுகிறார். நயன்தாரா, டாப்சியுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். நடிகைகளை வீட்டுக்கு அழைத்து பிரியாணி விருந்து கொடுத்து காதல் வலையில் வீழ்த்துவதாக செய்திகள் பரவின. ஆர்யாவின் நெருங்கிய நண்பரான விஷாலும் இதனை உறுதிபடுத்தியது நினைவிருக்கலாம்.

ஆர்யா - நயன்தாரா ஜோடியாக நடித்த 'ராஜா ராணி' படத்தின் 100-வது நாள் விழாவில் பங்கேற்ற கமல்ஹாஸன், "காதல் இளவரசன் பட்டத்தை பல வருடங்களாக நான்தான் வைத்து இருந்தேன். அதை நான் ஆர்யாவுக்கு கொடுக்க விரும்புகிறேன். ஆர்யாதான் அடுத்த ‘காதல் இளவரசன்," என்றார்.

ஆர்யா மட்டும் இதுவரை எந்த பட்டத்தையும் வைத்துக் கொள்ளவில்லை. இனிமேல் போஸ்டர் பேனர்களில் காதல் இளவரசன் ஆர்யா என எழுத ஆரம்பித்துவிடுவார்கள்.