சிக்குபுக்கு படத்திற்கு யு சர்டிபிகேட்!

http://www.images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/chikku-bukku-02/chikku-bukku-01.jpg
தாம்தூம் படத்தை தொடர்ந்து மீடியா ஒன் குளோபல் மற்றும் மெஜஸ்டிக் மல்டிமீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வழங்கும் புதிய படம் சிக்கு புக்கு. ஆர்யா, ஸ்ரேயா, ப்ரீத்திகா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்தை டைரக்டர் கே.மணிகண்டன் இயக்கியுள்ளார். டிசம்பர் 3ம் தேதி உலகம் முழவதும் 300 தியேட்டர்களில் ரீலிஸ் ஆகவிருக்கும் இப்படத்தை சமீபத்தில் சென்சார் அதிகாரிகள் பார்த்து பாராட்டியுள்ளனர். அதோடு யு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறது சென்சார்போர்டு. பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய வெற்றி நாயகனாக உலா வரும் ஆர்யா இப்படத்திலும் சந்தானத்துடன் சேர்ந்து செம கலாட்டா செய்திருக்கிறாராம். எனவே இந்த படமும் பாஸ் போலவே மக்கள் மதிப்பீட்டில் பாஸ் ஆகும் என்கிறார் டைரக்டர் மணிகண்டன்.
 

விருதகிரி இசை வெளியீடு! விஜயகாந்த் புது திட்டம்!!

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_124110000000.jpg
விருதகிரி படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த நடிகர் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். விஜயகாந்த் முதல் முதலாக தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் புதிய படம் விருதகிரி. படத்தில் போலீஸ் அதிகாரியாக விஜயகாந்த் நடிக்கிறார். விஜயகாந்த் தே.மு.தி.க. கட்சியை தொடங்கி, விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தோகுதியில் உள்ள விருதகிரீஸ்வரர் கோயில் மூலவரை குறிக்கும் வகையிலும், விருதாச்சலம் மக்களை பெருமைப்படுத்துவதற்காகவும் விருதகிரி என படத்திற்கு பெயர் சூட்டியிருப்பதாக ஏற்கனவே விஜயகாந்த் கூறியிருந்தார்.

படத்தின் சூட்டிங் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டிவிட்ட நிலையில் வருகிற 22ம்தேதி இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார் விஜயகாந்த். சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில் விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். 2011 சட்டமன்ற தேர்தல் பிரசார ஆயுதமாக விருதகிரி படம் இருக்கும் என ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில் பட வெளியீட்டுக்கான ஆயத்த பணிகளில் விஜயகாந்த் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

கிசு கிசு - டைட்டிலுக்காக புதுமுகத்தை மிரட்டும் பிரபல டைரக்டர்!

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_095702000000.jpg
தான் விரும்பிய டைட்டிலை வேறொரு புதுமுகம் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருப்பதையறிந்த பிரபல டைரக்டர் அந்த புதுமுக டைரக்டரை மிரட்டி வருகிறாராம். ஏற்கனவே 10 படங்களை இயக்கியிருக்கும் அந்த டைரக்டர் தற்போது மருமகன் நடிகரை வைத்து ஒரு படத்தை இயக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த படத்திற்கு முதலில் அருவா என பெயர் சூட்டியிருந்தனர். ஆனால் படத்தின் நாயகனுக்கோ வேறொரு தலைப்பின் மேல் ஈர்ப்பு. நாயகன் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக அந்த தலைப்பை பதிவு செய்ய முற்பட்டபோதுதான் தெரிந்தது, நாயகனின் விருப்ப தலைப்பு வேறோரு புதுமுக டைரக்டரின் கையில் இருக்கிறது என்று. உடனடியாக அந்த புதுமுகத்திடம் போனில் பேசிய டைரக்டர், தனக்கு அந்த ‌தலைப்பை விட்டுக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறார். ஆனால் புதுமுகமோ... வாய்ப்பே இல்லை. எனது படத்திற்கு அந்த தலைப்புதான் பொருத்தமாக இருக்கும், என்று கூறி மறுத்து விட்டாராம்.

விட்டாரா டைரக்டர்...? ஆளு தெரியாம மோதாதே... மரியாதையா டைட்டிலை கொடுத்திரு என மிரட்டத் தொடங்கி விட்டார். அதேநேரம் புதுமுகமோ, நீங்க எவ்வளவு மிரட்டினாலும் அந்த டைட்டிலை தர முடியாது என முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறார். மிஷ்கின் பஞ்சாயத்து முடிவுக்கு வந்துள்ள நிலையில் இயக்குனர்கள் சங்கத்தில் இப்போது இந்த பிரச்னை சூட்டை கிளப்பி விட்டிருக்கிறதாம்.
 

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் திருமணம் கோலாகலமாக நடந்தது!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
Click here to see 




மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி – அனுஷா திருமணம் இன்று காலை மதுரையில் தமிழக நிதி அமைச்சர் அன்பழகன் தலைமையில் கோலாகலமாக நடந்தது. மணமக்களை முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், துணை முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் வாழ்த்தினர்.
முதல்வர் கருணாநிதியின் பேரனும், மு.க.அழகிரியின் மகனுமான துரை தயாநிதிக்கும், சென்னை ஐகோர்ட் வக்கீல் சீதாராமன் மகள் அனுஷாவுக்கும் திருமணம், மதுரை தமுக்கம் மைதானத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த பிரமாண்ட பந்தலில் இன்று கோலாகலமாக நடந்தது. திருமணத்துக்கு வந்தவர்களை முதல்வரின் மனைவி தயாளு அம்மாள், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மனைவி காந்தி அழகிரி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், மு.க.முத்து, மு.க.தமிழரசு, ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி., முரசொலி செல்வம், செல்வி செல்வம், கயல்விழி – வெங்கடேஷ், அஞ்சுக செல்வி – விவேக், உதயநிதி ஸ்டாலின், அறிவுநிதி, சீதாராமன் குடும்பத்தினர் வரவேற்றனர்.
மணமேடையில் திருமண நிகழ்ச்சி இன்று காலை 9.10க்கு தொடங்கியது. மண விழாவுக்கு அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். மு.க.ஸ்டாலின் வரவேற்றார். 9.47க்கு முதல்வர் கருணாநிதி திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுக்க, மணமகள் அனுஷா கழுத்தில் அதை மணமகன் துரை தயாநிதி கட்டினார். பின்னர் முதல்வர் மற்றும் தயாளு அம்மாள் காலில் விழுந்து மணமக்கள் ஆசி பெற்றனர்.
 மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பேசினர். மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், வயலார் ரவி, குலாம்நபி ஆசாத், ஜி.கே.வாசன், சன் குழும தலைவர் கலாநிதி மாறன் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தொழிலதிபர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வாழ்த்தினர்.
 திருமணத்தையொட்டி, மதுரை நகர் விழாக்கோலம் பூண்டிருந்தது. திமுக கொடி தோரணங்கள், வண்ண விளக்குகளால் மதுரையின் முக்கிய சாலைகள் அனைத்தும் ஜொலித்தன. திருமண நிகழ்ச்சிகள் 5 இடங்களில் டிஜிட்டல் திரை மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. திருமண பந்தலில் சிறப்பு சைவ விருந்து அளிக்கப்பட்டது. கூட்டத்தினர் அனைவரும் விருந்து சாப்பிட வேண்டும் என்பதற்காக ராஜாமுத்தையா மன்றம், காந்தி மியூசியம் உள்ளிட்ட பல்வேறு திருமண மண்டபங்களிலும் விருந்து பரிமாறப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், கள்ளழகர் திருக்கோயில், நரசிங்கப் பெருமாள் கோயில், மதுரை நகர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள ஆதரவற்றோர், முதியோர், பார்வையற்றோர் இல்லங்களிலும் திருமண விருந்து அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் நெப்போலியன், ஜெகத்ரட்சகன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராசா, சபாநாயகர் ஆவுடையப்பன், தமிழக அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, வேலு, ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், சுப.தங்கவேலன், சாத்தூர் ராமச்சந்திரன், நேரு, தங்கம் தென்னரசு, தமிழரசி உள்பட பலர் பங்கேற்றனர். அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா துறையினர் ஏராள மானோர் திரண்டு வந்திருந்தனர்.
முன்னதாக நேற்று நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கவர்னர் பர்னாலா கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நடிகர்கள் கமல்ஹாசன், அஜித், பிரபு, மாதவன், சூரியா, கார்த்தி, வடிவேல், விவேக், ஸ்ரீகாந்த், எஸ்.எஸ்.ராஜேந்திரன், ராஜேஷ், தியாகு, வாகை சந்திரசேகர், ஏ.எல்.ராகவன், எம்.என்.ராஜம், சினிமா தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமநாராயணன் மற்றும் டிஜிபி லத்திகாசரண் உட்பட அரசு அதிகாரிகள், தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.



Source: Dinakaran
 

சிங்கப்பூரில் ‘மன்மதன் அம்பு’-நிருபர்களுக்கு லைவ்!

Kamal and Trisha
சிங்கப்பூரில் நடைபெறும் மன்மதன் அம்பு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை செய்தியாளர்களுக்காக சென்னை ஹோட்டலில் லைவ் ஆக ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளனராம். அதே போல படத்தின் நாயகனான கமல்ஹாசன் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் செய்தியாளர்களிடம் உரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கமல்ஹாசன், திரிஷா, மாதவன், சங்கீதா நடிக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்க, உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க உருவாகியுள்ள படம் மன்மதன் அம்பு.
கமல்ஹாசன் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ல இப்படம் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகியுள்ள முதல் கமல்ஹாசன் படமாகும்.
Kamal to use technology - 'Manmadhan Ambu' audio launch live through video 
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கமல்ஹாசனே எழுதியுள்ளார். சில பாடல்களையும் பாடியுள்ளார். படம் முழுக்க ரோம், வெனிஸ், பாரீஸ், பார்சிலோனாவில் வைத்துப் படம் பிடிக்கப்பட்டுள்ளது. படத்தின் முக்கியக் காட்சிகளை மெடிட்டரேனியன் க்ரூய்ஸ் எனப்படும் பிரமாண்ட சொகுசுக் கப்பலில் படமாக்கியுள்ளனர்.
படத்தின் இசையை தேவி ஸ்ரீபிரசாத் கவனித்துள்ளார். மொத்தம் 6 பாடல்கள். அதில் 2 பாடல்களை கமல்ஹாசனே பாடியுள்ளார். இப்பாடல்கள் நவம்பர் 20ம் தேதி ரசிகர்களின் காதுகளை வந்தடையவுள்ளது.
இதற்காக சிங்கப்பூரில் பிரமாண்டமான அளவில் இசை வெளியீட்டு விழாவை வைத்துள்ளனர். அதில் கமல்ஹாசன், திரிஷா, மாதவன், சங்கீதா, கே.எஸ்.ரவிக்குமார், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட படக்குழுவினர் மொத்தமாக பங்கேற்கின்றனர்.
இந்த இசை வெளியீட்டு கோலாகலம் நவம்பர் 18ம் தேதியே, அதாவது இன்றே தொடங்கியுள்ளது. இன்று ஒட்டுமொத்த படக்குழுவினரும் சூப்பர்ஸ்டார் விர்கோ என்ற சொகுசுக் கப்பலில் பயணிக்கின்றனர். நாளை பிரேசில் நடனக் கலைஞர்கள், சீன அக்ரோபாட் கலைஞர்களின் சிறப்பு நடன நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் மன்மதன் அம்பு படக் குழுவினருடன் 300 சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு ரசிக்கவுள்ளனர்.
நவம்பர் 20ம் தேதி சிங்கப்பூர் எக்ஸ்போ, மாக்ஸ் பெவிலியன் அரங்கில் இசை வெளியீடு நடைபெறுகிறது. 3 மணி நேரம் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியை 7000 பேர் கண்டு களிக்கவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின்போது கமல்ஹாசன், தேவிஸ்ரீபிரசாத், மாதவன், திரிஷா, சங்கீதா ஆகியோர் சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளனர்.
இந்த ஆடியோ வெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள பத்திரிக்கையாளர்கள் மிஸ் பண்ணி விடக் கூடாது என்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக கிண்டி, லீ ராயல் மெரீடியன் ஹோட்டலி்ல நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 20ம் தேதி மாலை 3.30 மணி முதல் இதைக் காணலாம். செய்தியாளர்களுக்கான பிரத்யேக ஏற்பாடு இது.
ஆடியோ வெளியீட்டைத் தொடர்ந்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கவுள்ளார்.
 

ஜெமினி கணேசன்-90:சென்னையில் விழா!

Gemini Ganesan
காதல் மன்னன் என்று ரசிகர்களால் போற்றப்பட்ட ஜெமினி கணேசனின் 90வது பிறந்த நாளை அவரது குடும்பத்தினர் சென்னையில் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அவரது வாழ்க்கை வரலாறு குறித்த டிவிடியை முதல்வர் கருணாநிதி வெளியிடுகிறார்.
இதுதொடர்பாக ஜெமினி கணேசனின் மகளும், பிரபல மருத்துவருமான டாக்டர் கமலா செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எங்கள் அப்பாவின் 90வது பிறந்தநாள் விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் 21ந் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது. இதில் தமிழக முதல்வர் கருணாநிதி கலந்துகொண்டு ஜெமினியின் வாழ்க்கை வரலாறு டி.வி.டி.யை வெளியிட்டு பேசுகிறார். டி.வி.டி.யின் முதல் பிரதியை டைரக்டர் கே.பாலச்சந்தர் பெற்றுக்கொள்கிறார்.

Kamal Haasan Launches Gemini Ganesan Biography Stills, Photo Gallery

 ஜெயஸ்ரீ விஸ்வநாதனால் ஏற்கனவே தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட எங்கள் தந்தையின் வாழ்க்கை வரலாறு புத்தகமான வாழ்க்கைப் படகு தற்போது ஏராளமான புகைப்படங்கள் சேர்த்து மறுமதிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த புத்தகத்தையும் முதல்வர் கருணாநிதி வெளியிடுகிறார். முதல் பிரதியை கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொள்கிறார்.
விழாவில், கணேஷ் பிரபா இசைக்குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திரைப்பட பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், வாணிஜெயராம், எல்.ஆர்.ஈஸ்வரி, ஏ.எல்.ராகவன் ஆகியோர் கலந்துகொண்டு ஜெமினி கணேசனின் பழைய பாடல்களை பாடுகிறார்கள்.
திரையுலகில் காதல் மன்னனாக வலம்வந்த எங்கள் தந்தை மிகவும் கஷ்டப்பட்டு, சுயமுயற்சியினால்தான் புகழை அடைந்தார். பொதுவாக அவர் கஞ்சன் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். நாங்கள்கூட அப்படித்தான் நினைத்தோம்.
ஆனால், அவர் குடும்பத்தினர் யாருக்கும் தெரியாமல் ஏராளமான தான தர்மங்கள் செய்திருக்கிறார். நிறைய பேரை படிக்க வைத்திருக்கிறார். அவர் மறைந்த பிறகு, மற்றவர்கள் சொல்லித்தான் இது எல்லாம் எங்களுக்கு தெரிய வந்தது. அவர் இல்லாதபோதுதான் அவருடைய பெருமை எங்களுக்கு தெரிகிறது என்றார் உணர்ச்சிவசப்பட்டு.
 

‘டான்’ ஷாருக்கும், நான்கு அழகிகளும்!

Sharukh Khan
ஒரே நேரத்தில் நான்கு உலக அழகிகளுடன் இணையும் ஷாருக் கான்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் புதிய சாதனை படைக்கவுள்ளார். ஒரே நேரத்தில் நான்கு முன்னாள் உலக அழகிகளுடன் சேர்ந்து நடிக்கவிருக்கிறார் ஷாருக்.
அமிதாப் பச்சன் நடித்த டான் படத்தின் ரீமேக்கில் ஷாருக் கான் நடித்து பெரும் ஓட்டம் ஓடியது அப்படம். இப்போது அதன் 2ம் பாகத்தில் நடிக்கவிருக்கிறார் ஷாருக்.
இப்படத்தில் ஷாருக் கானுக்கு லாரா தத்தா, பிரியங்கா சோப்ரா ஆகியோர் ஜோடிகளாக நடிக்கவுள்ளனர். இவர்கள் இருவரும் முன்னாள் உலக அழகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென்னும் கெஸ்ட் ரோலில் படத்தில் காட்சி தரப் போகிறார்கள்.
இப்படி ஒரே படத்தில் நான்கு முன்னாள் அழகிகள் ஒன்றாக சேர்ந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும். நான்கு உலக அழகிகளுடன் ஜோடி போட்டு நடித்த முதல் நடிகர் என்ற பெயரும் ஷாருக் கானுக்கு வரப் போகிறது.
டான் படத்தை விட மிகப் பிரமாண்டமாக இந்த டான்-2 இருக்கும் என்கிறார்கள்.
டான் படத்தைத்தான் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பில்லா என்று மாற்றி எடுத்தனர். சமீபத்தில் அதை அஜீத் அதே பெயரில் ரீமேக் செய்து நடித்தார். இப்போது பில்லா 2ம் பாகத்திலும் அஜீத் நடிக்கவுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
 

மாவோயிஸ்டுகளுடன் இணைந்த நேபாள கவர்ச்சி நடிகை ரேகா தாபா

Rekha Thapa
காத்மாண்டு: நேபாள நாட்டின் கவர்ச்சி நடிகை ரேகா தாபா, மாவோயிஸ்டுகளுடன் கை கோர்த்துள்ளார். இதைதனது பேஸ்புக் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
20 வயதுகளில் இருக்கும் ரேகா தாபா, கிழக்கு நேபாளத்தைச் சேர்ந்தவர். மிக மிக கவர்ச்சிகரமான உடைகளுடன் படங்களில் தோன்றுபவர். பல்வேறு சூடான சர்ச்சைகளையும் கிளப்பி வருபவர். தற்போது மாவோயிஸ்டுகளின் பிரசார பீரங்கியாக அவர் மாறியுள்ளார்.
முன்பு முழு முதுகும் தெரிய உடை அணிந்து வந்ததால் இந்து அமைப்பு ஒன்றுடன் இவருக்கு மோதல் ஏற்பட்டது. அதேபோல பாலிவுட் நடிகர் சக்தி கபூருடனும் மோதிய அனுபவம் இவருக்கு உண்டு. இப்போது மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார், அவர்களுடன் கரம் கோர்த்துள்ளார்.
கடந்த ஆண்டுதான் இவர் நேபாள மாவோயிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்தார். இதையடுத்து மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக தீவிரமாக செயல்படத் தொடங்கினார். இவர் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக பேசும் கூட்டங்களுக்கு பெரும் கூட்டம் வரத் தொடங்கியது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்திலும் கலந்து கொண்டார். அப்போது மாவோயிஸ்ட் தலைவரும், முன்னாள் பிரதமருமான புஷ்ப கமல் பிரசந்தாவுடன் இணைந்து இவர் டான்ஸ் ஆடி அனைவரையும் கவர்ந்தார். இந்தக் காட்சியை மீடியாக்களும், பிரசந்தாவின் மனைவி சீதா தஹாலும் விழிகள் விரிய பார்த்தனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் மாவோயிஸ்ட் ஆதரவு இயக்குநர் ஒருவரின் படத்தில் நாயகியாக நடிக்கவும் ரேகா தாபா ஒப்பந்தமானார். ஜெய்லாலா என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தை இயக்குநர் லமிசானே இயக்கவுள்ளார். கவர்ச்சிகரமான படங்களில் நடித்து வந்த ரேகா தற்போது மாவோயிஸ்ட் ஆதரவு படங்களில் நடிக்க படு தீவிரமாக உள்ளாராம். ஜெய்லாலா படப்பிடிப்பு தொடங்கியபோது அங்கு வந்த மாவோயிஸ்ட் மக்கள் விடுதலைப் படையின் துணைத் தலைவரான நந்த் கிஷோர் புன் பசங், உண்மையான துப்பாக்கியை எப்படி பிடித்து சுட வேண்டும் என்பது குறித்து ரேகாவுக்கு சொல்லிக் கொடுத்தார்.
ரேகாவின் தீவிர மாவோயிஸ்ட் ஆதரவைப் பார்த்து வியந்து போன மாவோயிஸ்ட் அமைப்பின் இளைஞர் பிரிவு தலைவரான சந்திர பகதூர் தாபா சாகர், ரேகாவை தனது தங்கையாக தத்தெடுத்துக் கொண்டார். சகோதரர்கள் தினத்தன்று இந்த தத்தெடுப்பு நடந்தது. அப்போது சாகர் தந்த பரிசுப் பணத்தையும் பாசத்தோடு பெற்றுக் கொண்டார் ரேகா.
ரேகாவின் வருகையால் மாவோயிஸ்ட் கட்சியினரும் குஷியடைந்துள்ளனர். ரேகாவின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, மாவோயிஸ்ட் கட்சியின் 2ம் நிலை தலைவரான பாபுராம் பட்டாராய், ரேகாவுடன், காத்மாண்டுவில் உள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க வந்ததால் அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அப்படம் ரேகா நடித்த யார் எனது இதயத்தைக் கவர்ந்தது என்று பொருள் படும் கஸ்லே சோரயோ மேரா மேன் என்ற தலைப்பைக் கொண்டதாகும்.
மாவோயிஸ்டுகளை மட்டுமல்லாமல் நேபாள மக்களிடையேயும் ரேகாவின் இந்த தீவிர மாவோயிஸ்ட் ஆதரவு போக்கு பெரும் வியப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 

ப்ரியாமணிக்காக வாய்ப்பு தேடும் ஜெகபதிபாபு

Priyamani
ப்ரியாமணி நடித்தால் சம்பளத்தைக் கூட குறைத்துக் கொண்டு நடிக்கத் தயார் என்கிறார் தெலுங்கு ஹீரோ ஜெகபதி பாபு.
ப்ரியாமணி – ஜெகபதி பாபு இடையிலான நெருக்கமான உறவு ஆந்திராவில் அத்தனை பிரசித்தம்.
ஒரு கட்டத்தில் சுத்தமாக வாய்ப்பில்லாமல் இருந்த ப்ரியாமணிக்காக பல வாய்ப்புகளை தானே போய் பெற்றுத் தந்தவர் ஜெகபதிபாபுதான் என்கிறார்கள்.
ஷாம் ஹீரோவாக நடிக்கும் ஷேத்ரம் படத்தில் ப்ரியாமணிக்கு நாயகி வாய்ப்பு வாங்கிக் கொடுத்ததோடு, அந்தப் படத்தி்ல் குறைந்த சம்பளத்தில் ஒரு கவுரவ வேடம் செய்யவும் ஒப்புக் கொண்டுள்ளாராம் ஜெகபதிபாபு.
ஏற்கெனவே இருவரும் இணைந்து 4 தெலுங்குப் படங்கள் நடித்துள்ளது. ஜெகபதிபாபுவுடன் உள்ள நெருக்கத்தை ப்ரியாமணியும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

'ஈரம்' அறிவழகன் இயக்கத்தில் அருள்நிதி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

முதல் படத்திலேயே தங்களது திறமையை காட்டிய ஈரம் ‘அறிவழகன்’, வம்சம் ‘அருள்நிதி’ கை சேர உள்ளனர். வம்சம் படத்துக்குப் பிறகு ஏராளமான கதைகள் கேட்ட அருள்நிதி இரண்டு கதைகளை மட்டும் ஓகே செய்திருந்தார். ஒன்று ஈரம் அறிவழகன் கூறிய கதை. இரண்டாவது அறிமுக இயக்குனர் சாப்ளினுடையது. ஆனால் சாப்ளினை அழைத்து படத்தை தொடங்குவதற்கான உத்தரவை வழங்கியிருக்கிறார் அருள்நிதியின் தந்தையும், படத்தை தயா‌ரிக்கப் போகிறவருமான மு.க.தமிழரசு. இந்த படம் முடிந்த பிறகு அறிவழகன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பார் என தெரிகிறது.


Source: Dinakaran
 

32 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் ரஜினி!

32 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரைக்கு வந்த ரஜினி, அழகிரி மகன் திருமண நிகழ்ச்சியில் அதைக் குறிப்பிட்டுப் பேசினார்.
ரஜினி சூப்பர் ஸ்டாராக உயர்ந்து கொண்டிருந்த நேரத்தில், உணவு உறக்கமின்றி ஒரு நாளைக்கு 22 மணிநேரம் தொடர்ந்து நடித்திருக்கிறார். சில நாள்களில் 24 மணிநேரமும் கண்விழித்து ஷூட்டிங்கில் இருந்தாராம். இதனால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. மனநலமும் பாதித்தது.
மதுரையில் படப்பிடிப்புக்கு வந்தபோதுதான் அவர் மிகவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரு மாத ஓய்வுக்குப் பிறகே மீண்டும் படப்பிடிப்புகளில் பங்கேற்றார். இதனை அவர் இந்திய அளவில் சூப்பர் ஸ்டாராகிவிட்ட பிறகும் மறக்காமல் குறிப்பிடுவது வழக்கம்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு அவர் மதுரைக்குச் செல்லவில்லை. இத்தனைக்கும் அவருக்கு மதுரையில்தான் எக்கச்சக்க ரசிகர் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது 32 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக மதுரைக்குச் சென்றுள்ளார் ரஜினி.
அழகிரி மகனை வாழ்த்தி அவர் பேசுகையில், “எனக்கும் இரண்டு பேரன்கள் உள்ளனர். அவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது கிடைக்கும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. இப்படியொரு சந்தோஷம் இருப்பதை பேரன்கள் பிறந்த பிறகுதான் உணர முடிஞ்சது.
பிள்ளைகளுக்கு திருமணம் நடத்தி வைத்து பேரக் குழந்தைகளைப் பார்ப்பது பெரிய சந்தோஷம்னா, பேரக் குழந்தைகளுக்கு திருமணம் நடத்தி வைப்பது அதைவிடப் பெரிய சந்தோஷம்.
முதல்வர் கலைஞர் அந்த வகையில் பேரன்களின் திருமணத்தை நடத்தி வைத்து நிறைந்த வாழ்க்கை வாழ்கிறார்.
32 ஆண்டுகளுக்குப் பிறகு நான் மதுரைக்கு வருகிறேன்… எனக்கு மிகுந்த உற்சாக வரவேற்பை அளித்தனர். நன்றி.
பொருத்தம், லட்சணம், அழகு மூன்றும் நிறைந்த இந்த தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டும், விட்டுக் கொடுத்தும் வாழ வேண்டும்”, என்றார் ரஜினி.
 

ரகசிய இடத்தில் பிரபுவுடன் நயன் பிறந்தநாள் கொண்டாட்டம்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கோர்ட்டுக்கு போவதா அல்லது ஷூட்டிங்க்கு போவதா என குழுப்பத்தில் உள்ளார் நயன். இன்று பிறந்தநாள் கொண்டாடும் நயனுக்கு உண்மையிலேயே மறக்க முடியாத பிறந்தநாள்தான். ரம்லத் வழக்கில் வரும் நவம்பர் 23-ம் தேதி ஆஜராவதா இல்லையா என்ற தயக்கம்… புதுப்படங்களை ஒப்புக் கொள்வதா வேண்டாமா என்ற தடுமாற்றம் என நயனுதாராவுக்கு அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் தன் காதலன் பிரபு தேவாவுடன் ரகசிய இடத்தில் அவர் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் என கிசு கிசு வெளியாகியுள்ளது.


Source: Dinakaran
 

சேலை கட்டி வந்த பமீலா

Television news, small screen news, chinnathirai news, television serials, chinnathirai serials, online chinnathirai serial

கலர்ஸ் டிவி நடத்தி வரும் பிக் பாஸ்4 நிகழ்ச்சியின் விருந்தினராக கலந்து கொண்ட அமெரிக்க நடிகை பமீலா ஆன்டர்சன், சேலை அணிந்து படு கவர்ச்சிகரமாக வந்தார். லாஸ் ஏஞ்சலெஸிலிருந்து திங்கள்கிழமை மும்பை வந்து சேர்ந்தார் பமீலா. விமான நிலையத்தில் அவரைக் காண பெரும் கூட்டம்கூடியதால், கூட்டத்தினர் மத்தியில் பமீலா சிக்கிக் கொள்ள நேரிட்டது. இதையடுத்து மிகுந்த சிரமப்பட்டு அவரை பாதுகாவலர்கள், மிகுந்த பாதுகாப்போடு அழைத்துச் சென்றனர்.
43 வயதாகும் பமீலா, பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் கெஸ்ட் ஆக கலந்து கொண்டார். இதற்காகவே அவர் மும்பை வந்தார். செவ்வாய்க்கிழமை இரவு பிக் பாஸ்-4 நடந்து வரும் வீட்டுக்கு அவர் சென்றார். இந்தியப் பெண்கள் அணிவதைப் போல சேலை கட்டி வந்தார். பாலிவுட்டில் குத்துப் பாட்டுக்குப் பெயர் போன யானா குப்தாவுடன் இணைந்து பமீலா பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தபோது போட்டியாளர்கள் படு வியப்புடன் பமீலாவைப் பார்த்தனர். பெண்களே மயங்கிப் போகும் அளவுக்கு பமீலாவின் கவர்ச்சி கரைபுரண்டோடியது. உள்ளே நுழைந்த பமீலா அனைவரையும் பார்த்து நமஸ்தே என்று சொன்னார். 3 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் கெஸ்ட் ஆக இருப்பார் பமீலா.
பமீலா பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த நிகழ்ச்சியை இன்று கலர்ஸ் டிவி தனது நேயர்களுக்கு ஒளிபரப்பவுள்ளது. பமீலா இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறையாகும். இந்த கெஸ்ட் விசிட்டுக்காக அவருக்கு ரூ. 2.5 கோடி பணம் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Source: Dinakaran
 

எனது பாடலை கேவலப்படுத்தினால் பாவம் சும்மா விடாது - டி.எம்.செளந்தரராஜன் ஆவேசம்

TMS
நான் பாடிய பாடல்களை ரீமிக்ஸ் செய்கிறேன் என்ற போர்வையில் கேவலப்படுத்தினால், அந்தப் பாவம் அவர்களை சும்மா விடாது என்று ஆவேசமாக கூறியுள்ளார் பழம்பெரும் பாடகரான டி.எம்.செளந்தரராஜன்.
பழம்பெரும் பாடகி பி.சுசீலாவின் அறக்கட்டளை சார்பில் சாதனை படைத்த பாடகர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
இதில், ஜேசுதாசுக்கு பி.சுசீலா அறக்கட்டளை விருதும், டி.எம்.சவுந்தரராஜன், பி.பி.சீனிவாஸ் ஆகிய இருவருக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.
விழாவில் டி.எம்.எஸ்., பி.சுசீலா பாடிய பழைய பாடல்களை இக்காலத்துப் பாடகர்கள் இணைந்து பாடினர். மனோ, ஹரிஹரன், உன்னி மேனன், ஹரீஷ் ராகவேந்திரா உள்ளிட்டோர் இப்பாடல்களைப் பாடினர்.
டி.எம்.எஸ். பாடிய பாடல் வரிகளை சிலர் உச்சரிக்கத் தடுமாறினர். இதைப் பார்த்து கோபமடைந்தார் டிஎம்எஸ்.
மைக்கைப் பிடித்த அவர், அந்தக்காலத்தில் நாங்கள் உணர்ச்சிகளை கொட்டி பாடினோம். அதே பாடல்களை உணர்ச்சியே இல்லாமல் திரும்பப்பாடி, சிலர் கேவலப்படுத்துகிறார்கள். மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இந்த பாவம், சும்மா விடாது என்றார். இதனால் விழாவில் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பி.சுசீலா குறுக்கிட்டு, உங்க அளவு திறமையான பாடகர்கள் யாரும் கிடையாது. மிக உயரத்தில் இருக்கிறீர்கள். இப்போது உள்ள பாடகர்கள் எல்லோருமே உங்களை வணங்குகிறார்கள் என்று டிஎம்எஸ்ஸை சமாதானப்படுத்தினார்.
இதனால் சற்று சாந்தமடைந்த டிஎம்எஸ், புதுப் பாடகர்களிலும் திறமையானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், அவர்களை வாழ்த்துகிறேன் என்று பாராட்டி பிரச்சினைக்கு முடிவு கட்டினார்.
 

மங்காத்தாவில் நாகார்ஜுனா நீக்கம்: அஜீத்துடன் அர்ஜுன்-சினேகா?

Ajith
மங்காத்தா படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்த நிலையில், அந்தப் படத்தின் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவிருந்த நாகார்ஜுனா நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
அந்தப் பாத்திரத்தில் இப்போது அர்ஜுன் நடிக்கவிருப்பதாகவும், சினேகாவும் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
அஜீத்தின் பொன்விழாப் படமான மங்காத்தா, பெரும் பொருட் செலவில் தயாநிதி அழகிரி தயாரிப்பில் உருவாகிறது. வெங்கட் பிரபு இயக்குகிறார்.
அஜீத் – த்ரிஷா டூயட் மற்றும் அஜீத் அறிமுக பாடல் காட்சி படமாக்கத்துடன் மங்காத்தா படப்பிடிப்பு தொடங்கியது. சமீபத்தில்தான் இதன் பாங்காக் ஷெட்யூல் முடிந்து, படக்குழுவினர் சென்னை திரும்பினர்.
இந்நிலையில், இந்தப் படத்தின் இன்னொரு நாயகனான நாகார்ஜுனா நீக்கப்பட்டுவிட்டதாகவும், அவருக்கு பதில் அர்ஜுன் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
சினேகாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் கோவாவில் நடித்தவர் சினேகா. அஜீத்துடன் ஆஞ்சநேயா படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.
 

விமலா ராமனுடன் ஒரு பிரச்சினையும் இல்லை - பிரியாமணி

Priyamani
விமலா ராமனுக்கும், எனக்கும் இடையே மோதல் என்று வெளியான செய்தியில் உண்மை. அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார் நடிகை பிரியா மணி.
புதுமுக இயக்குநர் விஜய் என்பவரின் இயக்கத்தில் விமலா ராமனும், பிரியா மணியும் இணைந்து புதிய தெலுங்குப் படத்தில் நடிக்கின்றனர். இதில் யாருக்கு முக்கியத்துவம் என்பது தொடர்பாக இரு நடிகைகளுக்கும் இடையே மோதல் மூண்டதாக தகவல்கள் வெளியாகின.
முதலில் விமலா ராமன் இப்படத்தில் இருக்கிறார் என்பது பிரியா மணிக்குத் தெரியாதாம். அது தெரிய வந்தபோதுதான் பிரச்சினை வெடித்ததாம். விமலா ராமனுக்கு முக்கியத்துவம் தரக் கூடாது, எனது காட்சிகளை அதிகப்படுத்துங்கள் என்று பிரியா மணி வற்புறுத்தியதாகவும், அதற்கு விமலா ராமன் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
நான் ஒருதேசிய விருது பெற்ற நடிகை. என்னை விமலா ராமனுடன் சமமாக நடிக்க வைப்பதா என்று பிரியா மணி ஆவேசப்பட்டதாகவும், அதற்கு விமலா ராமன் பதிலளிக்கையில், மாபெரும் இயக்குநர் அமீர். எனவே பருத்தி வீரன் படத்தில் பிரியா மணி என்றில்லை, எந்த நடிகை நடித்திருந்தாலும் அவருக்கு விருது கிடைத்திருக்கும் என்று நக்கலடித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அப்படி ஒரு சண்டையே நடக்கவில்லை என்று பிரியா மணி கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரியா மணி கூறுகையில், உண்மையில் நான் இப்படத்தில் 2வதாகத்தான் ஒப்பந்தமானேன். எனவே விமலா ராமனுக்கு முக்கியத்துவம் தரக் கூடாது என்று நான் வற்புறுத்தியதாக கூறுவதில் லாஜிக்கே இல்லை. மேலும் அப்படி நான்கூறவும் இல்லை.
இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது, தகராறு ஏற்பட்டது என்று வெளியான செய்தியெல்லாம் வெறும் வதந்திதான், அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்றார் பிரியா மணி.