ஆக்ஷன் படங்களில் உடன்பாடில்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஆக்ஷன் படங்களில் உடன்பாடில்லை

8/9/2011 3:17:59 PM

'வந்தான் வென்றான்' பட இயக்குனர் கண்ணன் கூறியது: வேலை விஷயமாக மும்பை செல்லும் ஜீவாவுக்கும், வெளிநாட்டில் படித்து மும்பை வரும் டாப்ஸிக்கும் காதல் மலர்கிறது. இந்த காதல் ஜெயிக்கிறதா? ஜீவா எண்ணிச் செல்லும் வேலை முடிகிறதா? என்பதே கதை. டாப்ஸி ஏற்கனவே 'ஆடுகளம்Õ படத்தில் நடித்ததால் அவரால் தமிழ் வசனங்களை எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது. கண்ணை உருட்டிக்கொண்டு கடைசிவரை ரத்தம் சொட்டச் சொட்ட ஹீரோ நடிக்கும் ஆக்ஷன் கதைகளில் எனக்கு உடன்பாடில்லை. வாழ்க்கையில் அதிர்ச்சி, சந்தோஷம் என எல்லாம் கலந்து வரும். அதுபோல் வாழ்க்கையை யொட்டி வரும் படங்கள்தான் எனது பாணி. 'ஜெயம் கொண்டான்' ஒரு ஜனரஞ்சக படமாக அமைந்திருந்ததை எல்லோரும் பாராட்டினர். நேரடி படங்கள் இயக்குவதைவிட ரீமேக் செய்வது கடினம். இதை ஒரிஜினல் படத்தோட ஒப்பிட்டு பார்ப்பார்கள். 'தாரே ஜமீன் பர்' போன்ற நல்ல படங்களை ரீமேக் செய்வதில் தவறில்லை. அடுத்து அறிவியல் சம்பந்தப்பட்ட கதையை இயக்குகிறேன். அதற்கான ஸ்கிரிப்ட் தயாராகிறது.




 

கிசு கிசு - தயாரிப்புக்கு நடிகை டோஸ்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
தயாரிப்புக்கு நடிகை டோஸ்

8/9/2011 3:19:49 PM

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

வங்காள லாங்குவேஜ்ல ரீம ஹீரோயின் நடிச்ச படத்துல கிளாமர் ஓவராம்... ஓவராம்... அந்த படத்தை தமிழ்ல ரிலீஸ் பண்ண, கிளு கிளு படம் மாதிரி சித்தரிச்சி தயாரிப்பு போஸ்டர் ஒட்டினாராம். இது பற்றி தகவலறிந்த ரீம ஹீரோயின் உர்ராயிட்டாராம்... உர்ராயிட்டாராம்... தயாரிப்பை போன்ல கூப்பிட்டு ஒருபிடி பிடிச்சதோட, மான நஷ்ட வழக்கு போடுவேன்னு எச்சரித்தாராம். அதை கேட்டு தயாரிப்பு ஆடிப்போயிட்டாராம்... போயிட்டாராம்...

கல்லூரி நடிகைக்கு கோலிவுட்ல கைவசம் படம் இல்லாததால அவருக்கு டப்பிங் குரல் கொடுத்த மயி பாடகி சோகத்துல இருந்தாராம்... இருந்தாராம்... இது பற்றி கேள்விப்பட்ட டாப்பானசி ஹீரோயின் தான் நடித்துள்ள 'வந்து ஜெயிக்கிறÕ படத்துக்கு மயி பாடகியை டப்பிங் பேச இயக்கத்திடம் சிபாரிசு பண்ணினாராம்... பண்ணினாராம்... இயக்கமும் ஏற்கனவே தன்னோட படத்துல அவருக்கு வாய்ப்பு தந்திருந்ததால இந்த படத்துலேயும் பேசுறதுக்கு வாய்ப்பு கொடுத்துட்டாராம்... கொடுத்துட்டாராம்...

மல்லுவுட்ல கை ந¤றைய பேமென்ட் கிடைக்காததால, கோலிவுட்ல கவனம் செலுத்த நாடோடியான ஹீரோயின் முடிவு பண்ணியிருக்காராம்... பண்ணியிருக்காராம்... சமீபத்துல நடந்த  பட பாடல் விழாக்கு வந்த ஹீரோயின், பங்ஷன்ல கலந்துகிட்ட இயக்கங்களை சந்திச்சி, சிரிச்சி சிரிச்சி அன்பா பேசினாராம்... பேசினாராம்...




 

நயன்தாராவை மதம் மாற்றியது குற்றச் செயல்! - கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்


டயானா மரியம் குரியன் என்ற நயன்தாராவை கிறிஸ்தவ மதத்திலிருந்து கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்துள்ள பிரபு தேவா குடும்பத்தினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது கிறிஸ்தவ அமைப்பு.

சினிமாவில் நடிப்பதற்காக நயன்தாரா என்ற பெயருடன் வந்தவர் டயானா மரியத்துக்கும், ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் மனைவியுடன் வசித்து வந்த இந்துவான பிரபுதேவாவுக்கும் காதல் ஏற்பட்டது.

நயன்தாராவுக்காக முதல் மனைவி ரம்லத்தை பிரபுதேவா விவகாரத்து செய்துள்ளார்.

பிரபுதேவாவை மணப்பதற்காக நயன்தாரா இந்து மதத்துக்கு மாறியுள்ளார். சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஆரியசமாஜம் கோவிலுக்கு சென்று புரோகிதர்கள் முன்னிலையில் ஹோமம் வளர்த்து வேதமந்திரங்கள் சொல்லி இந்துவாக மாறினார். அவருக்கு இந்துவாக மாறியதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

நயன்தாரா மதம் மாறிய தகவல் சொந்த ஊர் கிறிஸ்தவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. உள்ளூர் கிறிஸ்தவ கோவிலில் விமர்சனங்கள் கிளம்பின. இதனால் நயன்தாரா பெற்றோரை முற்றுகையிட்டு கண்டனம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாராவை கட்டாயப்படுத்தி மதம் மாற்றி இருப்பதாக கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த மக்கள் ஐக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளரும், ஆராதனை கிறிஸ்தவ பொறுப்பாளருமான இனியன் ஜான் கண்டித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக நயன்தாரா கிறிஸ்தவ மார்க்கத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார் என்ற செய்தியை கேட்டபோது வருத்தமாகவும் வேதனையாகவும் இருந்தது. ஒரு உண்மையான கிறிஸ்தவர் அடுத்தவரின் எந்த பொருளுக்கும் ஆசைப்படக்கூடாது என்பது வேதாமகத்தின் ஆழ்ந்த கருத்து.

அப்படி அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவதும் அவற்றை அபகரிக்க நினைப்பதும் சாபத்தை விளைவிக்கக் கூடியது என்று பைபிள் தெளிவாக கூறுகிறது.

ஏற்கனவே ரம்லத் என்கிற இஸ்லாமிய சகோதரி பிரபுதேவாவை நம்பி மதம் மாறி திருமணம் செய்து கொண்டு தற்போது அவர் படுகிற வேதனைகளை நாட்டு மக்கள் நன்கறிவர்.

உபாகமம் 28-ம் அதிகாரம் 15 முதல் 68 வசனங்கள் வரை மொத்தம் 43 வசனங்களில் ஒருவன் கிறிஸ்தவத்தை விட்டு பின் மாற்றம் அடைந்தால் ஏற்படக்கூடிய சாபங்கள் குறித்து பைபிள் எச்சரிக்கை செய்கிறது.

பைபிளின் சாபம், ரம்லத்தின் வேதனை, ஒட்டு மொத்த நற்பெண்களின் கோபத்தை ஒருங்கே பெற்றிருக்கிறார் நயன்தாரா. அவரை பிரபுதேவாவும் குடும்பத்தினரும் கட்டாயப்படுத்தி மதம் மாற்றி இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இது ஒரு குற்றச்செயல் ஆகும்," என்று தெரிவித்துள்ளார்.
 

20 குழந்தைகளின் 'அம்மா' ஹன்ஸிகா!


திருமணம் ஆகாமலே 20 குழந்தைகளுக்கு அன்பான 'அம்மா'வாக மாறியிருக்கிறார் இளம் நடிகை ஹன்ஸிகா மோத்வானி.

இருங்க இருங்க... ஏதும் வில்லங்கமா கற்பனை பண்ணிக்காதீங்க... 20 குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களுக்கு தாயாக மாறியுள்ளார் ஹன்ஸிகா.

தமிழ் சினிமாவில் இப்போது அதிக படங்களை கைவசம் வைத்துள்ளவர் ஹன்ஸிகா. அடுத்து இவர் நடித்த வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்கள் வெளியாக உள்ளன. இந்தப் படங்கள் வெளியான பிறகு இன்னும் பிஸியாகிவிடுவார் ஹன்ஸிகா என்கிறார்கள்.

இத்தனை பரபரப்புக்கு நடுவிலும் மும்பையில் 19 ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்திருந்தார் ஹன்ஸிகா. இப்போது 20வது குழந்தையை தத்தெடுத்துள்ளார்.

இவர்களுக்கு வெறும் பண உதவி மட்டும் செய்யாமல், படப்பிடிப்பு தவிர்த்த மற்ற நேரங்களில் இந்தக் குழந்தைகளை பீச், பார்க், சினிமா என வெளியில் அழைத்துப் போய் தேவையானதை வாங்கிக் கொடுத்து சந்தோஷப்படுத்துகிறாராம்.

இதுகுறித்துக் கேட்டபோது, இந்தக் குழந்தைகளை ஒரு தாயைப் போலவே பார்த்துக் கொள்ள விரும்புவதாக ஹன்ஸிகா கூறினார்.

ஹன்ஸிகா இப்போதுதான் 20 வயதில் அடியெடுத்து வைக்கிறார். தனது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில்தான் இந்த 20வது தத்தெடுப்பைச் செய்ததாக அவர் கூறியுள்ளார்.

நல்ல விஷயம். பிறந்த நாளை இப்படியும் கொண்டாடலாம்!
 

உதயநிதிக்காக 'ஓகே ஓகே'வுக்கு ஓகே சொன்ன ஆர்யா!


உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக அறிமுகமாகும் ஓகே ஓகே படத்தில் கவுரவே வேடத்தில் நடிக்கிறார் நடிகர் ஆர்யா.

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஒருகல் ஒரு கண்ணாடி படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது.

இப்படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் ஆர்யா. தன் படத்தில் ஆர்யா நடித்தால் நன்றாக இருக்கும் என்று உதயநிதி கேட்டுக் கொண்டாராம்.

மேலும் இயக்குநர் ராஜேஷ் இதுவரை இயக்கிய இரு படங்களிலும் ஆர்யா எப்படியாவது ஒரு ரோலில் வந்துவிடுவார். சிவா மனசுல சக்தி படத்தில் ஒரு கவுரவ வேடத்தில் வந்தார். அடுத்த படமான பாஸ் என்கிற பாஸ்கரனில் இவர்தான் ஹீரோ. அந்த வகையில் ராஜேஷுக்கு இவர் ராசி மீது அபார நம்பிக்கை.

இதுகுறித்து ஆர்யா கூறுகையில், ராஜேஷ், உதயநிதி இருவருமே என் நண்பர்கள். அவர்கள் கேட்டுக் கொண்டதால் மறுபேச்சின்றி ஒப்புக் கொண்டேன், என்றார்.
 

'வேட்டை'யில் காயமடைந்த சமீரா!


லிங்குசாமியின் வேட்டை பட ஷூட்டிங்கில் எதிர்பாராத விதமாக காயமடைந்தார் நடிகை சமீரா ரெட்டி.

லிங்குசாமி இயக்கும் வேட்டை படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்து வருகிறது. சமீரா ரெட்டி - அமலா பால் சகோதரிகளாக நடிக்கிறார்கள் இந்தப் படத்தில்.

இருவரும் பாவாடை தாவணியில் ஆடிப் பாடுவது போன்ற பாடல் காட்சியை இங்கு படமாக்கினார் லிங்குசாமி. ஒரு காட்சியில் இருவரும் மொபட்டுகளில் வருவது போல எடுத்தனர். அப்போது தடுமாறி விழுந்துவிட்டார் சமீரா ரெட்டி. இதில் அவருக்கு கை கால்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.

உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துப் போய் முதலுதவி செய்தனர் யூனிட்டிலுள்ளவர்கள். இதனால் சில மணி நேரம் பாதிக்கப்பட்ட ஷூட்டி பின்னர் தொடர்ந்தது.

வேட்டை படத்தில் மாதவன் - ஆர்யா ஹீரோக்களாக நடிக்கின்றனர்.
 

நடிகர்கள் சம்பளம் குறைப்பு: திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்


சென்னை: நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுக்குழுவில் நாளை தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. இது திரையுலகில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் ராமேஸ்வரத்தில் நாளை நடக்கிறது.

சங்கத்தின் தலைவர் அண்ணாமலை, பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், இணைச்செயலாளர் திருச்சி ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. நடிகர்கள் சம்பள பிரச்சினை, டிக்கெட் கட்டணம், எந்திரன் பட விவகாரம், தயாரிப்பு செலவுகளை குறைத்தல் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

இது குறித்து சங்கத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், நடிகர்கள் சம்பளம் ரூ.15 கோடி, ரூ.20 கோடி என உயர்ந்து தயாரிப்பு செலவுகளை அதிகப்படுத்தி விட் டது. டெக்னீஷியன்கள் சம்பளமும் கூடி விட்டது. 10 கோடி சம்பளம் வாங்கும் நடிகரின் மானேஜர் 15 சதவீதம் கமிஷன் என்ற பெயரில் ரூ.1.5 கோடி பெறுகிறார்.

இதை ஒழுங்குப்படுத்த வேண்டியது அவசியம். நாளைய பொதுக்குழுவில் இது வரைமுறை படுத்தப்படும் என்றார்.
 

பாடகி சின்மயி அறிமுகப்படுத்தியுள்ள புதிய மொபைல் டெக்னிக்!


பிரபல சினிமா பாடகி சின்மயி, தனது பாடல்களை புரமோட் செய்வதற்கேற்ப சொந்தமாக மொபைல் போன் பயன்பாட்டு சாப்ட்வேரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

தமிழ் பாடகிகளில் பிரபலமானவர் சின்மயி. வெளிப்படையாக துணிச்சலாக கருத்து சொல்லக் கூடியவர்.

சமீபத்தில் இவர் அமெரிக்கா போயிருந்தபோது அங்குள்ள நண்பர் ஒருவர் மொபைல் போனுக்கான பல்வேறு அப்ளிகேஷன்களை காட்டியுள்ளார்.

அதில் ஒன்றை தனக்கேற்ற மாதிரி மாற்றிக் கொண்டாராம் சின்மயி.

இந்த அப்ளிகேஷனை மொபைலில் வைத்திருந்தால், சின்மயியுடன் நேரில் உரையாடுவது போல தகவல் பரிமாறிக் கொள்ளலாம். சின்மயி எங்கே இருக்கிறார், அவரது நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் தெரிந்து கொள்ளலாம். வீடியோ மூலம் கூட உரையாடலாம்.

ரசிகர்கள் தங்கள் போனில் இந்த வசதியைப் பயன்படுத்தி சின்மயியிடம் கேட்க விரும்புவதைக் கேட்கலாம்.

ஆப்பிள் மேக்-ஐ சப்போர்ட் பண்ணும் அனைத்து மொபைல்களிலும் இந்த வசதியைப் பெற முடியும். நியூயார்க்கை சேர்ந்த மொபைல் டெவலப் நிறுவனமான தாக்ஷாவுடன் இணைந்து இந்த வசதியை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
 

சினிமா தயாரிப்பாளர் - பிஆர்ஓ கிளாமர் கிருஷ்ணமூர்த்தி மரணம்!


சென்னை: திரைப்பட தயாரிப்பாளரும் பிஆர்ஓவுமான கிளாமர் கிருஷ்ணமூர்த்தி சென்னையில் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74.

வி.சி. குகநாதன் இயக்கிய மஞ்சள் முகமே என்ற படத்தை தயாரித்தவர் கிளாமர் கிருஷ்ணமூர்த்தி.

நான் ஆணையிட்டால் படத்தில் எம்.ஜி.ஆரால் மக்கள் தொடர்பாளராக அறிமுகமாகி சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட பலருக்கு பி.ஆர்.ஓ.வாக பணியாற்றி உள்ளார்.

கிளாமர் சினி நியூஸ் என்ற மாத சினிமா பத்திரிகையையும், கிளாமர் சினிகைடு என்ற நட்சத்திரங்களின் டைரியையும் வெளியிட்டு நடத்தி வந்தார். மேலும் முன்னாள் பி.ஆர்.ஓ., யூனியன் தலைவராகவும், தற்போது பி.ஆர்.ஓ., யூனியன் ‌கவுரவ தலைவராகவும் இருந்து வந்தார்.

இவருக்கு கஜலட்சுமி என்ற மனைவியும் கிளாமர் சத்யா என்ற மகனும், விஜயகுமாரி, பிரேமா என்ற மகள்களும் உள்ளனர். இப்போதைய பிஆர்ஓ சங்கத் தலைவரும், பிரபல தயாரிப்பாளருமான விஜயமுரளி இவரது மருமகன் ஆவார்.

அவரது இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் சென்னை கண்ணம்மா பேட்டையில் நடந்தது. திரையுலகப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
 

கடத்தப்பட்டாரா கே எஸ் ரவிக்குமார் மகள்?


இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரின் மகள் கடத்தப்பட்டதாக புரார் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரபல சினிமா இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார். இவரது மகளை கோவையை சேர்ந்த ஒருவர் கடத்திவிட்டதாகவும், அது குறித்து புகார் செய்வதற்காக கே.எஸ். ரவிக்குமார் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு இன்று காலை வருவதாகவும் தகவல் பரவியது.

இதனால் பத்திரிகை மற்றும் டி.வி.க்களின் நிருபர்கள், போட்டோ கிராபர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு குவிந்தனர். காலை 10 மணிக்கு வந்த அவர்கள் 11 மணி வரை காத்து இருந்தனர்.

ஆனால் கே.எஸ். ரவிக்குமாரோ அவரது சார்பில் யாருமோ புகார் செய்ய வரவில்லை. இது குறித்து சென்னையில் உள்ள திரைப்பட பிரமுகர்களிடம் கேட்ட போது கே.எஸ். ரவிக்குமார் கோவை வரவில்லை என்று கூறினார்கள்.

ரவிக்குமார் வீட்டில் விசாரித்தபோது, இது முழுக்க முழுக்க வதந்தி என்றனர்.
 

டிவி நடிகையுடன் விபச்சாரம்: காங்கிரஸ் தலைவர் கைது!


மலப்புரம் அருகே காங்கிரஸ் மாநிலச் செயலாளர் ராஜ்மோகன் உன்னித்தான், டிவி நடிகையுடன் விபசாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.

கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் செயலாளராக இருப்பவர் ராஜ்மோகன் உன்னித்தான் (54). அக்கட்சியின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடனடியாக அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது கொல்லத்தை சேர்ந்த பிரபல டிவி நடிகையுடன் காங்கிரஸ் தலைவர் ராஜ்மோகன் விபசாரத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

தகவல் அறிந்த அப்பகுதி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அந்த வீட்டு முன் திரண்டு காங்கிரஸ் தலைவர் ராஜ்மோகனை கைது செய்யவேண்டும் எனக் கோஷமிட்டனர். ராஜ்மோகன் அந்த வீட்டிலிருந்து வெளியேற விடாமல் தடுத்தனர்.

இதையடுத்து ராஜ்மோகன் மற்றும் டிவி நடிகையை போலீசார் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். இருவர் மீதும் விபசார வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று மாலை அவர்கள் மஞ்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த மஞ்சேரி மாஜிஸ்திரேட் வர்கீஸ், ராஜ்மோகனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்த வழக்கில் விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்ட நடிகை ஜெயலட்சுமிக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
 

போட்டா போட்டி 50-50: சினிமா விமர்சனம்


நடிகர்கள்: ஆர் சிவம், ஹரிணி, சடகோபன் ரமேஷ், உமர், மயில்சாமி, அவதார் கணேஷ்

இசை: அருள்தேவ்

ஒளிப்பதிவு: கோபி அமர்நாத்

தயாரிப்பு: வி முரளிராமன்

இயக்கம்: யுவ்ராஜ்

லகான், சென்னை 28 என கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வெற்றி கண்ட படங்களின் பாதிப்பில் வந்துள்ள படம் போட்டா போட்டி.

உப்பார்பட்டியில் கொடைவாணன் (சிவம்), கொலைவாணன் (உமர்) என இரண்டு பங்காளிகள். இருவரும் கீரியும் பாம்பும்போல. கொடைவாணன் 'பாடி ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக்' ரகம். தமாஷ் பேர்வழி. கொலைவாணன் பெயருக்கு ஏற்ற மாதிரியே கொலை செய்யவும் தயங்காத ஆசாமி.

இந்த இருவருக்குமே ஆசை, மாமன் மகள் ரஞ்சிதத்தை (ஹரிணி) அடைவதுதான். ஆனால் அவளுக்கோ இந்த இருவரையுமே பிடிக்கவில்லை. ஒரு நாள் இருவருமே போட்டி போட்டுக் கொண்டு பெண் கேட்டுப் போகிறார்கள் மாமன் வீட்டுக்கு.

இந்த சிக்கலை சமாளிக்க, ஒரு கிரிக்கெட் போட்டி நடத்தி அதில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களுக்குதான் ரஞ்சிதம் என ஊர் முடிவு பண்ணுகிறது. ஆனால் இருவருக்குமே கிரிக்கெட் அரிச்சுவடி கூட தெரியாது. எனவே ஆளுக்கு ஒரு கோச்சை அழைத்து வர முடிவு செய்கிறார்கள்.

இதில் கொடைவாணன் அணி சடகோபன் ரமேஷை கடத்தி வருகிறது. கொலைவாணன் அணி டுபாக்கூர் கோச் மயில்சாமியை மடக்கிப் பிடித்து வருகிறது.

கோச்சிங் என்ற பெயரில் ஏகப்பட்ட தமாஷ் நடக்கிறது. இதற்கிடையே, போட்டிக்கு காரணமான ரஞ்சிதா, கொடை- கொலைவாணன்களை விட்டுவிட்டு, சடகோபன் ரமேஷை லவ்வுகிறார். இறுதியில் யாருக்கு அவர் கிடைத்தார் என்பதை ஒரு முழு கிரிக்கெட் போட்டியை நடத்தி சொல்கிறார்கள்.

இடையில் அலயன்ஸ் என்ற நிறுவனத்தினர் அங்குள்ள கிரானைட் மலை ஒன்றை விலைபேச வருகிறார்கள். இவர்களிடமிருந்து மலையைக் காக்கப் போராடுகிறது கொடைவாணன் குழு.

லகான் பாதிப்புதான் படம் என்றாலும், அதை தமிழ் கிராமத்துக்கேற்ப மாற்றியிருக்கிறார் இயக்குநர். ஆனால் பட்டிதொட்டியெல்லாம் நீக்கமற உப்பார்பட்டியில் ஒருவருக்கு கூட தெரியாமல் போனதைத்தான் நம்ப முடியவில்லை!

அதேபோல தேவையே இல்லாமல் படத்தில் இடம்பெற்றுள்ள 'அவாள்' அரசியல் உள்குத்தை ஏற்க முடியவில்லை. தேசிய கிரிக்கெட்டில்தான் இந்த நிலை என்றால், சினிமாவில், அதுவும் ஒரு கிராமத்தில் நடப்பதாக வரும் கிரிக்கெட்டில் கூடவா... அட போங்கப்பா!

இயக்குநர் - இணை தயாரிப்பாளர் என்பதற்காக, இப்படியெல்லாம் தேவையே இல்லாமல் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டு பயமுறுத்தலாமா யுவராஜ்?

காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் தட்டிக் கொண்டு போகும் கேரக்டர் சடகோபன் ரமேஷுக்கு. ஆனால் கிரிக்கெட்டை கோட்டைவிட்ட மாதிரியே நடிப்பிலும் அவர் அவுட். அவர் வசனம் பேசும்போது எரிச்சலாக உள்ளது. நல்ல வேளை, பாட்டு, டான்ஸ், பைட் என படுத்தாமல் விட்டார்(கள்)!

கொடைவாணனாக வரும் சிவம் கலக்கியிருக்கிறார். இந்த மண்ணின் மைந்தர்களை பிரதிபலிக்கும் முகம், தோற்றம், அல்டாப்பு குணம் என அப்படியே உப்பார்பட்டி ஆளாகவே மாறியிருக்கிறார்.

இவருக்கு எடுப்பாக வரும் அவதார் கணேஷ், 'ராசுக்குட்டி'யில் வரும் செம்புலியை நினைவூட்டுகிறார். மயில்சாமி இருக்க கலகலப்புக்கு பஞ்சமிருக்குமா... கோச் என்ற பெயரில் இவர் அடிக்கும் லூட்டி சரியான காமெடி.

நாயகி ஹரிணி ஓகே.

கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில் அசல் கிராமத்தைப் பார்க்க முடிகிறது. ஆனால் அருள்தேவின் இசை படத்தில் ஒன்ற விடாமல் தடுக்கிறது.

கடைசி காட்சி வரை படத்தை கலகலப்பாக கொண்டுபோன வரையில் இயக்குநருக்கு வெற்றிதான். வசனங்களில் புத்திசாலித்தனமும் கிராமத்து குறும்பும் கொப்பளிக்கிறது. ஆனால் இடைவேளைக்குப் பிறகு ஒரு முழு 50 ஓவர் மாட்ச் பார்த்த மாதிரி மகா இழுவை!

மற்றபடி... இரண்டரை மணி நேரத்தைக் கொல்ல சரியான படம்தான்!
 

விஜய் என்னை பயப்பட வைக்கிறார் : பாலா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விஜய் என்னை பயப்பட வைக்கிறார் : பாலா!

8/9/2011 12:16:04 PM

தெய்வ திருமகள் திரைப்படம் ஹிட் ஆனதற்கு மீடியாவும் ஒரு காரணம் என்று புரிந்து கொண்ட படக்குழுவினர் அவர்களை அழைத்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள். வழக்கம்போல நிகழ்ச்சி முடிகிற நேரத்தில் வந்தார் முக்கிய விருந்தாளியான பாலா. நான் எடுத்த இரண்டு படங்களில் விக்ரம் நடிச்சிருந்தார். அந்த படங்களை விட இந்த படத்தில்தான் எனக்கு விக்ரமின் நடிப்பு ரொம்ப பிடிச்சிருந்தது. தெய்வ திருமகள் படம் பார்த்துட்டு நான் கண்கலங்கினேன். உண்மையில் டைரக்டர் விஜய் என்னை பயப்பட வைக்கிறார். நான் அஞ்சுவது அவரது டைரக்ஷனை பார்த்துதான் என்று கூற, கிடைக்காத பெரிய விருது கிடைத்த சந்தோஷம் இருந்தது விஜய்யின் முகத்தில்.




 

மங்காத்தா படத்துக்காக சொந்தக் குரலில் பேசினார் நடிகை த்ரிஷா.


அஜீத், திரிஷா ஜோடியாக நடித்த மங்காத்தா படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது. பாடல்கள் நாளை ஆகஸ்ட் 10-ம் தேதி ரேடியோ மிர்ச்சியில் வெளியாகின்றன.

இந்தப் படத்துக்கு டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. திரிஷா இதில் சொந்தக்குரலிலேயே டப்பிங் பேசி உள்ளார்.

இதுகுறித்து மங்காத்தா பட இயக்குனர் வெங்கட்பிரபு கூறுகையில், "மங்காத்தா படத்தில் திரிஷாவுக்கு மிக முக்கியமான கேரக்டர். அஜீத்-திரிஷா காதல் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. இதில் திரிஷாவே சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார்.

அந்தப் பாத்திரத்துக்கு அவர் குரலே பொருத்தமாக இருக்கும் என்று உணர்ந்து நான்தான் டப்பிங் பேச வற்புறுத்தினேன். திரிஷாவும் சம்மதித்தார். நன்றாக பேசி உள்ளார். விரைவில் படம் வெள்ளித்திரையில், உங்கள் பார்வைக்கு வருகிறது," என்றார்.

ஒரிரு படங்கள் தவிர, மீதிப் படங்களில் த்ரிஷாவுக்கு டப்பிங் வேறு கலைஞர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு!

8/9/2011 12:10:55 PM

வெற்றிமாறனுக்கு தேசிய விருது கிடைத்த போதே உங்கள் அடுத்த பட ஹீரோவும் தனுஷ்தானா என்று கேட்டார்கள் நிருபர்கள். ஆனால் அதை இன்னும் முடிவு பண்ணலே என்றார் வெற்றிமாறன். மேலோட்டமாக இப்படி சொன்னாலும், ‘ஹீரோ ஹன்ட்டிங்’ அவரால் தொடங்கப்பட்டு பலமாதங்களாக நடந்தும் வந்தது. அப்படி அவரது வேட்டையில் சிக்கிய சிம்பு. ஒஸ்தி முடிந்ததும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கப்போகிறாராம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

"ஆதிபகவான்" ரகசியம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

‘ஆதிபகவான்’ ரகசியம்!

8/9/2011 11:55:27 AM

ஆதிபகவான் படத்தில் ஜெயம் ரவி இரண்டு வேடங்களில் நடிப்பதாக புதிய தகவல். ஆதிபகவான் அமீர் இயக்கும் படம். ஜெயம் ரவி, நீது சந்திரா நடித்துள்ளனர். பாங்காங்கில் பெரும் பகுதி படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஜெயம் ரவி இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடிப்பதை அமீரும் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஹீரோ, வில்லனா இல்லை வேறு வேடமா என்பது மட்டும் ரகசியம்.

 

ஒரு பாடலுக்கு ஆடும் தேவி ஸ்ரீ!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஒரு பாடலுக்கு ஆடும் தேவி ஸ்ரீ!

8/9/2011 11:56:09 AM

விஷாலை வைத்து இயக்கும் வெடி படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்தை ஒரு பாடலுக்கு ஆட வைத்திருக்கிறாராம். வெடியின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்து வருகிறது. தெலுங்கு சௌக‌ரியம் படத்தின் ‌ரீமேக்தான் வெடி. ரீமேக் செய்வது பிரபுதேவாவுக்கு சௌக‌ரியம். தனது படங்களில் சின்னச் சின்ன சில்மிஷங்கள் செய்யும் பிரபுதேவா இந்தப் படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்தை ஒரு பாடலுக்கு ஆட வைத்துள்ளாராம். அதற்காக படத்தின் இசை தேவி ஸ்ரீ பிரசாத் என்று நினைத்துவிடாதீர்கள். அது வேறு ஆள். தேவி ஸ்ரீ பிரசாத்துடன் ஆடியிருப்பது சமீரா ரெட்டியாம்.

 

பிரபுதேவாவை திருமணம் செய்ய இந்து மதத்துக்கு மாறினார் நயன்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிரபுதேவாவை திருமணம் செய்ய இந்து மதத்துக்கு மாறினார் நயன்!

8/9/2011 10:15:35 AM

நடிகரும் இயக்குனருமான பிரபுதேவாவை திருமணம் செய்ய இருக்கிறார் நடிகை நயன்தாரா. இதையடுத்து கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த அவர் இந்து மதத்துக்கு மாறியுள்ளார். நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம். இவரது தந்தை குரியன். தாய் ஓமணா மலையாள கிறிஸ்தவரான இவர் சினிமாவுக்காக தனது பெயரை நயன்தாரா என்று மாற்றிக்கொண்டார். இவருடன் ஏற்பட்ட காதல் காரணமாக, மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. இதையடுத்து பிரபுதேவா, நயன்தாரா திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கொச்சியில் தங்கியிருந்த நயன்தாரா, நேற்றுமுன்தினம் விமானத்தில் சென்னை வந்தார். வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஆரிய சமாஜ் கோயிலுக்கு காலை 11 மணிக்கு சென்றார். அங்கு இந்து மதத்துக்கு மாறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து சுத்திகர்மா முறைப்படி அவருக்கு மதமாற்றம் செய்வதற்கான நடைமுறைகளை புரோகிதர்கள் செய்தனர். ஹோமம் வளர்த்து புரோகிதர்கள் மந்திரங்கள் கூறினர். புரோகிதர்கள் சொல்லி கொடுத்தபடி வேத மந்திரங்களை, நயன்தாரா திரும்ப சொன்னார். 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சடங்குகள் நடைபெற்றன. பிறகு அவர் இந்து மதத்துக்கு மாறியதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. அதை பெற்றுக் கொண்டு கொச்சி திரும்பினார். இதுபற்றி நயன்தாராவிடம் கேட்டபோது, "நான் இந்துவாக மாறி விட்டேன். இது என் சொந்த விருப்பம். அதற்கான சடங்குகளில் ஈடுபாட்டுடன் பங்கேற்றேன்'' என்றார். பிரபுதேவாவுடன் எப்போது திருமணம் என்பதற்கு பதில் கூற மறுத்துவிட்டார். இந்து மதத்துக்கு மாறியதையடுத்து, பிரபுதேவாவை நயன்தாரா விரைவில் திருமணம் செய்வார் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.




 

சக்சேனா மீதான மேலும் 4 மோசடி வழக்குகள் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை: சக்சேனா மீதான மேலும் 4 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா. இவர் மீது கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் சினிமா வினியோகஸ்தர்கள் 2 புகார்களை கொடுத்தனர். இந்த வழக்குகளில் சக்சேனா கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்துக்கு வெளியே புகார்தாரர்களுடன் சமரசமானதை அடுத்து, இந்த 2 வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் சக்சேனா மனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து அந்த 2 வழக்குகளும் ரத்து செய்யப்பட்டன.

மேலும் 4 வழக்குகள்

இந்த நிலையில் முத்துக்குமுத்தாக என்ற படம் தொடர்பாக ராசு மதுரவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பட்டினப்பாக்கம் போலீசிலும், வல்லக்கோட்டை படம் தொடர்பாக டி.டி.ராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசிலும், சிந்தனை செய் படம் தொடர்பாக அருள் மூர்த்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் நுங்கம்பாக்கம் போலீசாரும், மாப்பிள்ளை படம் தொடர்பாக ஹித்தேஷ் ஜபக் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோடம்பாக்கம் போலீசாரும் சக்சேனா மீது மோசடி மற்றும் மிரட்டல் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

மனு ஏற்பு

நீதிமன்றத்துக்கு வெளியே இந்த பிரச்சினைகள் சம்பந்தமாக புகார்தாரர்களுடன் பேசி, சமரசம் ஏற்படுத்தியுள்ளதால் 4 வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சக்சேனா மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை நீதிபதி சுதந்திரம் விசாரித்தார். இதுபோன்ற நிலையில் மனுக்களை ஏற்றுக் கொள்வதற்கு உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது. எனவே இந்த வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன என அறிவித்தார்.
 

டிக்கெட் கட்டணத்தை சீரமைக்க திரையரங்க உரிமையாளர்கள் வேண்டுகோள்


சென்னை: திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை சீரமைக்க வேண்டும், என்று தமிழக அரசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்கள்.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொதுக்குழு கூட்டம், சென்னை அபிராமி தியேட்டரில் நேற்று காலை நடந்தது. கூட்டம் காலை 10-30 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 1 மணிவரை நடைபெற்றது. கூட்டத்துக்கு சம்மேளனத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள ஜெயலலிதாவை இந்த பொதுக்குழு நெஞ்சார வாழ்த்தி வரவேற்கிறது. மூன்று நல்ல நிபந்தனைகளுடன், தமிழில் பெயரிடப்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு பூரண வரிவிலக்கு அளித்ததற்காக நன்றி.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, திரையரங்கங்கள் சீரோடும், சிறப்போடும் மேன்மேலும் ஓங்கி உலகதரத்துடன் வளர்வதற்கு ஏதுவாக கீழ்க்கண்ட சலுகைகள் கேட்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

* மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு, ஏர்கண்டிஷன் தியேட்டர்களுக்கு, ஏர்கண்டிஷன் அல்லாத தியேட்டர்களுக்கு அதிகபட்ச-குறைந்தபட்ச கட்டணங்களை சீரமைத்து கொடுக்க வேண்டும். சீரமைத்துக் கொடுக்கப்படும் கட்டணத்துக்கு மேல் எந்த தியேட்டரும் கட்டணத்தை உயர்த்துவதில்லை.

* தியேட்டர்களின் பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தி கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

* தியேட்டர்களின் கட்டிட உறுதிக்கேற்ப பொதுப்பணித்துறை ஐந்து வருடங்கள் வரை கட்டிட உறுதி சான்றிதழ் வழங்க அனுமதி கொடுக்க வேண்டும்.

* ஒரு நாளைக்கு காலை 9 மணி முதல் இரவு 12 மணிவரை இவ்வளவு காட்சிகள்தான் நடத்தலாம் என்ற கட்டுப்பாட்டை விலக்கிக்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஜெயகுமார், துணைத்தலைவர்கள் எம்.சுப்பிரமணியன், கே.வேணுகோபால், செயலாளர்கள் எம்.வி.ராமு, ஆர்.சத்தியசீலன், பொருளாளர் எஸ்.பி.பழனியப்பன் உள்பட 500 தியேட்டர் அதிபர்கள் கலந்துகொண்டார்கள்.
 

இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா!!


பிரபு தேவாவைத் திருமணம் செய்வதற்காக கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினார் நடிகை நயன்தாரா.

15 ஆண்டுகளுக்கு முன் ரம்லத் என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து, 3 குழந்தைகள் பிறந்து, அதில் மூத்த குழந்தை இறந்த நிலையில், விவாகரத்து செய்தார் பிரபு தேவா. முஸ்லிமாக இருந்த ரம்லத், பிரபுதேவாவுக்காக மதம் மாறி லதா என்று புதுப்பெயர் சூடிக் கொண்டார். ஆனால் நயன்தாரா மீதான காதல் காரணமாக ரம்லத்தை உதறினார் பிரபு தேவா. சமீபத்தில்தான் ரம்லத் - பிரபு தேவா விவாகரத்தை அறிவித்தது குடும்ப நல கோர்ட்.

இப்போது பிரபு தேவா அடுத்த கல்யாணத்துக்கு தயாராகிறார். நயன்தாராதான் இவருக்கு மனைவியாகப் போகிறார். ஆனால் நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். பிரபு தேவாவுக்காக நயன்தாரா மதம் மாறுவாரா அல்லது நயனுக்காக பிரபு தேவா மதம் மாறுவாரா என்ற கேள்வி எழுந்தது.

இப்போது தனக்காக மனைவியை விவாகரத்து செய்த பிரபு தேவாவுக்காக, மதம் மாறிவிட்டார் நயன்தாரா.

நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் முறைப்படி இந்து மதத்துக்கு மாறினார். நேற்று கொச்சியிலிருந்து சென்னை வந்த நயன்தாரா, ஆரிய சமாஜத்தில் வேத விற்பன்னர்கள் முன்னிலையில் 'சுத்த பரிகாரம்' செய்தார்.

பி்ன்னர் வேத மந்திரங்களை உச்சரித்தபடி, இந்துவாக மாறினார்.

இந்து மதத்துக்கு மாறுவதை பெருமையாகவும் சந்தோஷமாகவும் உணர்வதாக நயன்தாரா பின்னர் தெரிவித்தார். இந்த மத மாற்றத்துக்கு யார் வற்புறுத்தலும் காரணமல்ல என்றும் இது எனது தனிப்பட்ட விருப்பம், உரிமை என்றும் அவர் கூறினார்.

நயன்தாராவின் நிஜப் பெயர் டயானா மரியம் குரியன். சினிமாவுக்காக வைக்கப்பட்ட இந்த நயன்தாரா என்ற பெயரையே இனி தன் நிரந்தரப் பெயராக பயன்படுத்தப் போகிறாராம்.
 

தலித் மக்களுக்கு எதிரான படம்: அமிதாப் நடித்த 'ஆராக்ஷனு'க்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை!


இட ஒதுக்கீட்டை விமர்சிக்கும் வகையில் எடுக்கப்பட்டு, பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஆராக்ஷன் படத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துவிட்டது.

பிரகாஷ் ஜா தயாரித்து இயக்கியுள்ள இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் ஹீரோவாக நடித்துள்ளார்.

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு குறித்த எதிர்மறையான படமாக ஆராக்ஷன் வந்துள்ளது. குறிப்பாக சமூகத்தில் இன்னமும் பல்வேறு கொடுமைகளை எதிர்நோக்கி வரும் தலித் மக்களுக்கு எதிரான படமாக ஆராக்ஷன் பார்க்கப்படுகிறது.

இந்தப் படம் சமூக அமைதியைக் கெடுக்கும், ஒடுக்கப்பட்ட இன மக்களை மேலும் பின்னிலைக்குத் தள்ளும் என்பதால் படத்தைத் தடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், படத்துக்கு இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்தது. இந்தியா முழுக்க வரும் ஆகஸ்ட் 12-ம் தேதியன்று இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே இந்தப் படம் தொடர்பான விளம்பரங்களை உத்திரப் பிரதேச அரசு தடை செய்துள்ளது. மராட்டிய மாநிலத்திலும் தடை கோரப்பட்டுள்ளது.