இந்தி படங்களில் கணவருடன் சேர்ந்து சூடேற்றப் போகும் சன்னி லியோன்?


Sunny Leone S Husband Enter Bollywood   
மும்பை: ஆபாச படங்களில் இருந்து பாலிவுட்டுக்கு வந்திருக்கும் நடிகை சன்னி லியோனின் கணவரை இந்தி படங்களில் நடிக்க வைக்க ஏராளமானோர் ஆர்வமாக உள்ளார்களாம்.

வெளிநாட்டில் ஆபாசப் படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் ஜிஸ்ம் 2 மூலம் பாலிவுட்டில் நுழைந்தார். அவரது படத்தைப் பார்த்தவர்கள் சன்னிக்கு நடிக்கவே தெரியவில்லை என்றனர். அவ்வாறு கூறியவர்கள் கண் முன்னே நடித்துக் காட்டுகிறேன் பார் என்று அவர் இந்தியாவில் தங்கியுள்ளார். இந்நிலையில் அவரது கணவர் டேனியல் வெப்பருக்கு பாலிவுட் படங்களில் நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வருகிறதாம்.

இது குறித்து சன்னி கூறுகையில்,

எனது கணவருக்கு இந்தி பட வாய்ப்புகள் வருகின்றது. சிலர் அவரை அணுகி நாங்கள் இருவரும் ஜோடியாக நடிக்க கேட்கின்றனர். அவர் பாலிவுட்டில் நடிக்க ஆவலாக உள்ளார். நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதில் அவருக்கு இஷ்டம் தான் என்றார்.

வெப்பரும் சன்னியைப் போன்று ஆபாசப் படங்களில் நடித்தவர் தான். தற்போது அவர் ஆபாசப் படங்களைத் தயாரிக்கும் அமெரிக்காவில் உள்ள சன்னியின் நிறுவனமான சன் லஸ்ட் புரொடக்ஷன்ஸை கவனித்து வருகிறார். ஜிஸ்ம் 2 படத்தை அடுத்து சன்னி லியோன் இயக்குனர் ஏக் தா கபூரின் ராகினி எம்எம்எஸ்2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
 

கிளாமர் ரோல் வரல.... நடிக்கல! - ரம்யா நம்பீசன்

I M Not Against Glamour Roles Says Ramya Nambeesan   

எனக்கு க்ளாமர் வேடங்கள் கிடைக்கவில்லை. அதனால் நடிக்கவில்லை. அதற்காக என்னை கிளாமருக்கு எதிரியாகக் காட்ட வேண்டாம். பீட்சா படத்தில் கவர்ச்சியாகத்தான் நடித்திருக்கிறேன், என்கிறார் ரம்யா நம்பீசன்.

விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் ஜோடியாக நடிக்கும் பீட்சா படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது ரம்யா நம்பீசன் பேசுகையில், "இந்தப் படம் காதல் த்ரில்லர்.

தொடர்ந்து நான் அதிக படங்களில் நடிக்காததற்கு காரணம், சம்பந்தமே இல்லாமல் கவர்ச்சியாக நடிக்கக் கேட்டதுதான். இதற்கு முன்பு நடித்த படங்கள் அனைத்திலுமே எனக்கு குடும்பப் பாங்கான வேடம். கவர்ச்சி தேவைப்படவில்லை.

இப்போது பீட்சா படத்தில் காதலர்களுக்கிடையில் நெருக்கமான காட்சி இருந்தது. அதனால் கவர்ச்சி காட்ட à®'ப்புக் கொண்டேன். இவை கதைக்குத் தேவை என்பதால்தான் அப்படி நடித்தேன். அடுத்து இரண்டாவது படம் என்ற படத்திலும் கவர்ச்சி காட்டியுள்ளேன்," என்றார்.

 

மன்னாரு - சினிமா விமர்சனம்

Mannaru Review   

Movie Rating:
3.0/5

நடிப்பு: அப்புக்குட்டி, சுவாதி, வைஷாலி, தம்பி ராமையா

இசை: உதயன்

à®'ளிப்பதிவு: அகு அஜ்மல்

தயாரிப்பு: ஆர் சரவணன்

இயக்கம்: ஜெய்சங்கர்

மன்னாரு, à®'ரு மலைக் கிராமம் சார்ந்த எளிமையான காதல் கதை. நல்ல பாடல்கள், இனிமையான இசை, கண்களை நிறைக்கும் பசுமை சூழல் போன்றவை படத்தைப் பார்க்க வைக்கின்றன. சின்னச் சின்ன குறைகளை மறக்கடிக்கின்றன.

அப்புக்குட்டிதான் மன்னாரு. 'நாய் கூட மதிக்காத' அவருக்கும் முறைப்பெண் மல்லிகாவுக்கும் அப்படி à®'ரு காதல். இத்தனைக்கும் மன்னாரு படித்தது 3-ம் வகுப்பு. லாரிக்கு மணல் நிரப்பும் வேலை. à®'ரு நாள் ஷகிலா படம் பார்க்கப் போக, படம் முடிந்து நண்பன் அறையில் தங்க நேர்கிறது. அந்த நண்பனின் காதல் திருமணத்துக்கு சாட்சிக் கையெழுத்துப் போடுகிறான் மன்னாரு. அந்தக் கையெழுத்து அவன் வாழ்க்கையில் பல தொல்லைகளை இழுத்துவிடுகிறது.

நண்பனின் மனைவியை தன் மனைவியாகக் காட்டி நடிக்க வேண்டிய சூழல். இதில் காதலியை கைப்பிடிக்க முடியாமல் போகிறது. இறுதியில் மன்னாரு எப்படி சிக்கலிலிருந்து வெளிவருகிறான் என்பது கதை.

அப்புக்குட்டிக்கு ஏற்ற வேடம். ரொம்ப அனுபவித்து நடித்திருக்கிறார் மனிதர். குடித்துவிட்டு அவர் போடும் ஆட்டம், ஆடு திருடியதாக பொய்யான குற்றச்சாட்டில் சிக்கி அடிவாங்கி அழும் காட்சி என அனைத்திலும் மன்னாருவாகவே மாறியிருக்கிறார். ஆனால் அடுத்த படமும் இதே இமேஜ் தொடராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சுவாதி ஆளும் நடிப்பும் அம்சம். அந்த மலைக் கிராமத்தில் அவர் மட்டும் பளிச்சென்று ஈர்க்கிறார்.

மற்றொரு நாயகி வைஷாலிக்கு முகத்தில் கறுப்பு மையடித்து உலவ விட்டிருக்கிறார்கள். à®'வ்வொரு முறை அவர் தற்கொலைக்கு கிணற்றின் மீதேறி நிற்பதும், à®'ரு பாட்டி வந்து à®'ரு குடம் தண்ணி இறைச்சுத் தா என்று கேட்டு கெஞ்சுவதும் ரொம்ப இயல்பான நகைச்சுவை.

எப்போதும் வெற்றிலையைக் குதப்பியபடி , எங்கே நம்மீது துப்பிவிடுவாரோ என நினைக்க வைக்கும் அந்த அத்தைக்காரி, அவர் கணவராக வரும் சூர்யகாந்த் ஆகியோரும் குறிப்பிடும்படி செய்திருக்கின்றனர்.

தம்பி ராமையா ஆங்காங்கே கிச்சுகிச்சு மூட்டுகிறார். படத்தின் திரைக்கதை வசனமும் அவர்தான். வசனங்களில் காமெடி தூக்கல். திரைக்கதையில் சில à®"ட்டைகள் இருந்தாலும், அவை மன்னிக்கக் கூடியதாகவே இருப்பதால் அனுபவித்து ரசிக்க முடிகிறது படத்தை.

படத்தின் முக்கிய பலம் இசையும் à®'ளிப்பதிவும். உதயன் இசையில் ஊரை எல்லாம் காவல் காக்கும்... பாடலும் படமாக்கப்பட்ட விதமும் மனசை அள்ளுகிறது. டுபு டுபு டுபாயி பாடல் நன்றாக இருந்தாலும், அதை சரியான இடத்தில், சரியாக பிரசன்ட் செய்யாதது இயக்குநரின் தவறுதான்!

பின்னணி இசை சரியாகப் பொருந்தியிருப்பதால், சாதாரண காட்சி கூட பார்ப்பவர்களை ஈர்க்கும்படி உள்ளது.

அகு அஜ்மலின் à®'ளிப்பதிவில் கொடைக்கானலின் அழகை அள்ளிப் பருகுகின்றன விழிகள்.

மன்னாரு... பேஜாரு இல்லே!

-எஸ் ஷங்கர்

 

'நான் ஒரு சேறு நிறைந்த சாக்கடை, ஆனால்...' - சுயசரிதை எழுதுகிறார் பாலு மகேந்திரா!

Balu Mahendira Writes His Autobiogr

இயக்குநர் பாலு மகேந்திரா தனது சுயசரிதையை எழுதுகிறார்.

இதற்காக அவர் வலைப்பூ à®'ன்றையும் தொடங்கியுள்ளார்.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்றாலும், தமிழ் சினிமாவின் மிக முக்கியமானவராக மாறிப் போனவர் பாலு மகேந்திரா. 30 வருடங்களுக்கு மேல் இயங்கி வருபவர். 22 படங்களை எடுத்துள்ளார். இசை, à®'ளிப்பதிவு, அழுத்தமான திரைக்கதை இவர் படங்களின் ஸ்பெஷல்.

சினிமா என்பது வெறும் வசன ஊடகமல்ல, காட்சி ஊடகம் என்பதை அழுத்தமாக நிரூபித்தவர் பாலுமகேந்திரா.

தற்போது புதிய படம், இயக்குநர்களுக்கான திரைப்பட பயிற்சிப் பள்ளி என பிஸியாக இயங்கி வரும் அவர், தனது சுயசரிதையை எழுத ஆரம்பித்துள்ளார்.

இதற்காக புதிய ப்ளாக் à®'ன்றைத் தொடங்கியுள்ள அவர், தனது முதல் அத்தியாயத்தில் சினிமா மீது தனக்கு வந்த காதலை உணர்வுப்பூர்வமாக எழுதியுள்ளார்.

இந்த சுயசரிதையின் முன்னுரையில் பாலு மகேந்திரா இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:

என்னுடைய வாழ்க்கையை சுயசரிதையாக நான் பதிவு செய்ய வேண்டும் என்று எனது மாணவர்களும், நலம் விரும்பிகளும் மற்றும் என்னை ரொம்பவும் மதிப்பவர்களும் அவ்வப்போது என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

சுயசரிதம் எழுதும் அளவிற்கு நான் அப்படியொன்றும் சாதனையாளனல்ல. நான் à®'ரு சாமன்யன். இன்னும் சொல்லப்போனால் நான் à®'ரு சேறு நிறைந்த சாக்கடை.

இந்த இடத்தில் à®'ன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். லட்சுமி அமர்ந்திருப்பதாக சொல்லப்படும் செந்தாமரையும் சரஸ்வதி வீற்றிருப்பதாக சொல்லப்படும் வெண்தாமரையும் சேற்றில் தானே மலர்கின்றன.பாலுமகேந்திரா என்ற சேற்றில் இருந்து தான் கோகிலா, அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை, மறுபடியும், அது à®'ரு கனாக்காலம், போன்ற செந்தாமரைகளும், வீடு, சந்தியா ராகம், போன்ற வெண்தாமரைகளும் மலர்ந்தன.

எனது வாழ்க்கை சொல்லிக் கொள்ளும்படியானதோ அல்லது எழுதிக் கொள்ளும்படியானதோ அல்ல...'

 

விஜய்க்கு ஜோடி சமந்தா?

Vijay Romance With Samantha   

ஷங்கர், மணிரத்னம் என பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பைக் கூட உதறிவிட்டு, சிகிச்சையிலிருந்த சமந்தாவுக்கு இப்போது மீண்டும் பெரிய வாய்ப்புகள் தேடி வருகின்றன.

அதில் முக்கியமான ஒன்று, இயக்குநர் விஜய் - நடிகர் விஜய் இணையும் புதிய படம்.

இந்தப் படத்துக்கான பூர்வாங்க வேலைகளில் இயக்குநர் விஜய் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளார்.

படத்தின் நாயகியாக சமந்தா நடித்தால் நன்றாக இருக்கும் என்று நடிகர் விஜய் விரும்பியதால், அவரது கால்ஷீட்டுக்காக அணுகியுள்ளனர்.

சமந்தா இப்போது புதிதாக இரு தெலுங்குப் படங்களை ஒப்புக் கொண்டுள்ளதால், அதற்கேற்ப தேதியை அட்ஜஸ்ட் செய்துவிட்டு சொல்வதாகக் கூறியுள்ளாராம்.

இதுகுறித்து சமீபத்தில் அவர் கூறுகையில், "பெரிய இயக்குநர்களின் வாய்ப்பை இழந்துவிட்டது வருத்தம்தான் என்றாலும், தவிர்க்க முடியாத சூழலில் அந்த முடிவு மேற்கொள்ள வேண்டியிருந்தது. இப்போது மீண்டும் அதற்கு இணையான வாய்ப்புகள் வந்துள்ளன," என்றார்.

 

அமிதாப் பச்சனின் “கோன் பனேகா குரோர்பதி சீசன் 6” உற்சாக தொடக்கம்!

Amitabh Bachchan Kickstarts Kaun Banega Crorepati 6

மும்பை: பிக் பி அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கும் ‘கோன் பனேகா குரோர்பதி சீசன் 6' சோனி டிவியில் செப்டம்பர் 7 ம்தேதி முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. முதல்நாளன்று முதன் நிகழ்ச்சியில் அமிர்தசர்ஸ் நகரைச் சேர்ந்த கன்வர் சுர்டெஜ் சிங் பங்கேற்று 6,40,000 ஆயிரம் ரூபாயுடன் களத்தில் உள்ளார்.

கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி நடிகர் அமிதாப்பச்சனின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த நிகழ்ச்சி என்றே கூறப்படுகிறது. அதிக வரவேற்பினை பெற்ற இந்த நிகழ்ச்சி பல சீசன்களைக் கடந்து இப்பொழுது ஆறாவது சீசன் தொடங்கியுள்ளது. வெள்ளிகிழமையன்று தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் அறிவின் சக்தியை உணர்த்தும் "Na Roop Kaam Aata Hai,"... எனத் தொடங்கும் பாடலுக்கு நடன இயக்குநர் ரெமோ டி சோஷா நடனம் அமைக்க அமிதாப் பச்சன் குழுவினருடன் நடனமாடி அசத்தினார்.

முதல்நாள் நிகழ்ச்சியில் 21 வயதான பிடெக் மாணவர் கன்வார் சுர்டெஜ் சிங் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதிலை தெளிவாக கூறி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அமிதாப்பச்சனையும், பார்வையாளர்களையும் கவர்ந்தார். இதுவரை அவரது கையில் 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் உள்ளது. இனி இன்றைய போட்டியில் அவர் கூறும் பதிலைப் பொருத்து பரிசுத் தொகை அதிகரிக்கும்.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ‘கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சி வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு சோனி டிவியில் ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

நடன நிகழ்ச்சி: ஒரு எபிசோடுக்கு ரூ.1 கோடி வாங்கும் மாதுரி தீக்ஷித்

Madhuri Dixit Paid Rs 1 Crore Per Episode   

மும்பை: பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித் தான் நடுவராக இருக்கும் ஜலக் திக் லா ஜா என்ற நடன நிகழ்ச்சியின் ஒரு எபிசோடுக்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகு தனது டாக்டர் கணவருடன் அமெரிக்காவில் செட்டிலான பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித் அண்மையில் தான் மும்பையில் வந்து குடும்பத்தோடு செட்டில் ஆனார். இதையடுத்து அவர் பல்வேறு விளம்பரப் படங்களில் வருகிறார். இது தவிர அவர் கலர்ஸ் டிவியில் வரும் ஜலக் திக் லா ஜா என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். அவர் தவிர பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் மற்றும் நடன இயக்குனர் ரெமோ டிசோசா ஆகியோரும் நடுவர்களாக உள்ளனர்.

ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இருவ 9 மணி முதல் 10 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது ஒளிப்பரப்பாகிறது. இந்த சீசனில் தான் மாதுரி இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவர் ஒரு எபிசோடிற்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்குகிறாராம். கோடி கொடுத்தாலும் சரி மாதுரி தான் வேண்டும் என்று நினைக்கின்றனர் நிகழ்ச்சியாளர்கள்.

மாதுரிக்கு 43 வயதாகியும், 2 ஆண் குழந்தைகளை பெற்ற பிறகும் மெருகுடன் தான் இருக்கிறார். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பதை அவர் நன்றாகப் புரிந்து வைத்துள்ளார்.

 

மம்முட்டியின் மெகா மனசு... சிவாகாசி விபத்தில் காயம்பட்டவர்களுக்கு ரூ 40 லட்சம் உதவி!

Mammootty Helps Rs 40 Lakh Medicine Burn Victims

சென்னை: சமீபத்தில் சிவகாசியில் 38 பேரை பலி கொண்ட கொடிய பட்டாசு தொழிற்சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ 35 லட்சம் மதிப்புள்ள அக்னிஜித் மருந்துப் பொருள்களை இலவசமாக அளித்து உதவியுள்ளார் நடிகர் மம்முட்டி.

சிவகாசி விபத்து குறித்து தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்களோ, அரசியல்வாதிகளோ கூட கண்டுகொள்ளாத நிலையில், தாமாக முன்வந்து மம்முட்டி செய்துள்ள இந்த மாபெரும் உதவி நெகிழ வைத்துள்ளது.

தீக்காயங்களுக்கு சிறந்த நிவாரணமாக இந்த அக்னிஜித் மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்தைத் தயாரிக்கும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் மம்முட்டிக்கு சொந்தமானதாகும்.

சிவாகாசி விபத்தில் கடுமையாக தீக்காயங்கள் அடைந்து அவதிக்குள்ளாகியுள்ளோரைக் காக்க, அக்னிஜித் மருந்து வேண்டும் என பதஞ்சலி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளனர் சிவாகாசி அரசு மருத்துமனையைச் சேர்ந்தவர்கள்.

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய மம்முட்டிக்கு விஷயம் தெரிய வந்தது. உடனே மொத்த மருந்துகளையும் இலவசமாகவே அனுப்பி வைக்கும்படி கூறிவிட்டாராம் மம்முட்டி. இவற்றின் மொத்த மதிப்பு ரூ 40 லட்சம் ஆகும். இந்த மருந்து மட்டுமல்ல, இனி தேவைப்பட்டாலும் இலவசமாகவே வாங்கிக் கொள்ளுங்கள் என கூறியுள்ளாராம் மம்முட்டி.

மம்முட்டி காலத்தினால் செய்த இந்த உதவி நெகிழ வைத்துள்ளது.

 

கனா காணும் காலங்கள்: புதிய முகங்களைத் தேடி ஒரு பயணம்

Kanum Kalangal5 Puthiya Mugam New Dreams New Faces

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘கனா காணும் காலங்கள் ஒரு கல்லூரியின் கதை'யில் நடிக்க புதிய முகங்கள் நேர்முகத் தேர்வு ஞாயிறன்று கோவையில் நடைபெற உள்ளது. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தொடரில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘கனா காணும் காலங்கள்' தொடர் பெரும் வரவேற்பினை பெற்ற ஒரு தொடர். 2006 ம் ஆண்டில் பள்ளி மாணவர்களின் கலாட்டாக்களை ஒளிபரப்பியது. இந்தத் தொடரில் பள்ளிப்பருவம், பாடம், படிப்பு, நட்பு, மாணவர்களுக்கே உரித்தான குறும்புகள் என்று அத்தொடர் நேயர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது.

கனா காணும் காலங்கள் வெற்றியைத் தொடர்ந்து அக்கதையின் தொடர்பாகங்கள் பல சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது. பள்ளிப் பருவத்தை தாண்டி அந்த கதாபாத்திரங்கள் கல்லூரியில் காலடி எடுத்துவைக்கும் கதையாகிய ‘கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை' கடந்த ஆண்டு 2011 தொடங்கப்பட்டது. இத்தொடரும் நேயர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து 300 எபிசோடுகளையும் தாண்டி வெற்றிகரமாக திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரின் இயக்குனர் பரவீன் பெனட். இதில் சிந்து, எலிஸபெத், திரு, கார்த்திக், சாய் பிரமோதித்தா, விஷ்ணு, சிவாஜி, சத்திரியன், பாலா, அழகப்பன், ஹரிணி, வித்யா, கணேஷ், திவ்யா, சத்தி, ரமேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இத்தொடரில் மேலும் பல புதிய முகங்களை அறிமுகப்படுத்த விஜய் டிவி திட்டமிட்டுள்ளது. அதற்காக வரும் 09 தேதி கோவையில் பிரம்மாண்டமாக ஒரு தேடல் நிகழ்வை நடத்துகிறது. இந்த தேர்வில் 18 வயது முதல் 25 வயதுவரை உடைய இளைஞர்கள் பங்கேற்கலாம். இந்த நேர்முகத்தேர்வில் பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்று நடிப்புத்திறன் உள்ளவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

நிகழ்ச்சியில் பெயர் 'மெகா மார்ட் கனா காணும் காலங்கல் தேடல் பவர்ட் பை ஹீரோ கிளாமர்'. இந்த நேர்முகத்தேர்வில் பங்கேற்பவர்கள் கே.எஸ்.ஜி ஆர்ட்ஸ் அன் சயின்ஸ் கல்லூரி, காமராஜர் சாலை, வரதராஜபுரம், சிங்காநல்லூர், கோவை என்ற முகவரிக்கு நேரடியாக சென்று பங்கேற்கலாம். இதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ‘கனா காணும் காலங்கள் ஒரு கல்லூரியின் கதை' யில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

 

சுகாசினி வழங்கும் ‘கோல்டு கேசினோ’ கேம் ஷோ

Gold Casino New Game Show Raj Tv

ராஜ் டிவியில் ‘கோல்டு கேசினோ' போட்டி நிகழ்ச்சியை பிரபல நடிகை சுகாசினி மணிரத்னம் தொகுத்து வழங்க இருக்கிறார். கேள்வி பதில் நிகழ்ச்சிதான் என்றாலும் இதில் அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதிலை சொல்பவர்களுக்கு 5 கிலோ தங்கம் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.

‘கோல்டு கேசினோ' நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு முதலில் 20 தங்க காசுகள் கொடுக்கப்படும். கேட்கப்படும் கேள்விக்கு போட்டியாளர் தன் கையில் இருக்கும் எத்தனை தங்க காசுகளை வேண்டுமானாலும் பந்தயம் வைக்கலாம். போட்டியாளர்கள் வைக்கும் தங்க காசின் அளவைப் பொறுத்து பேங்கரும் அதேஅளவு தங்க காசுகளை வைப்பார். இதில் ஜெயித்தால் பந்தயத்தில் வைக்கப்பட்ட அத்தனை காசுகளும் போட்டியாளருக்கு போய்ச் சேரும். தோற்றாலோ பந்தயம் வைத்த காசு மட்டும் பேங்கருக்கு சென்று விடும். இதைத்தொடர்ந்து போட்டியாளர் தன்னிடம் இருக்கும் மீதமுள்ள தங்க காசுகளுக்கு ஆட்டத்தை தொடரலாம்.

போட்டியாளர் 40 தங்க காசுகளை ஜெயித்ததும், முதலில் பேங்கரிடம் இருந்து பெற்ற 20 தங்கக் காசுகளை அவரிடம் திருப்பிக் கொடுத்து விடடு ஆட்டத்தை தொடரலாம். மொத்த தங்கக்காசுகளையும் பந்தயம் வைத்து விளையாடி, 10 கேள்விகளுக்கும் சரியான பதிலை சொல்கிறவர்கள் 5 கிலோ தங்கத்தை தட்டிச்செல்லலாம்.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. சுகாசினி மணிரத்னம் இதனை தொகுத்து வழங்க இருக்கிறார். ஏற்கனவே ஜெயா டிவியில் ஆட்டோகிராப் நிகழ்ச்சியை சுகாசினி தொகுத்து வழங்கி வருகிறார். பிரபலங்களை பேட்டி காணும் அந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இது தங்கம் தொடர்பான நிகழ்ச்சி என்பதால் ரசிகர்களிடையே வரவேற்பினை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.