சங்கம் இப்படி பிளவுபட்டுப் போச்சே... ! - சிம்புவின் கவலை

ஒரே குடும்பமா இருக்க வேண்டிய நடிகர் சங்கம் இப்படி பிளவுபட்டு நிற்பது வேதனையாக உள்ளது என்று நடிகர் சிம்பு கூறினார்.

வருகிற நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணியில் நடிகர் சிம்பு, உப தலைவர் பதவிக்கு சிம்பு போட்டியிடுகிறார். இந்நிலையில், நடிகர் சங்க தேர்தலில் இரண்டு அணிகளாக போட்டியிடுவது குறித்து சிம்பு பேசும்போது, "நான் நடிகன், டி.ராஜேந்தரின் மகன், தமிழன்... இதையெல்லாம் தாண்டி ஒரு மனிதன். எனக்குப் பிரிவினை என்பதே பிடிக்காத விஷயம்.

Simbu regrets for the split in Nadigar Sangam

சினிமா என்பது ஒரே குடும்பம். நடிகர் சங்கம் என்பது நடிக்கக் கூடிய ஒட்டுமொத்த நடிகர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டது. நான் 14 வயதில் இருந்து நடிகர் சங்கத்தின் கமிட்டியில் இருந்து வருகிறேன்.

எல்லோரும் என்னிடம் ஏன் இளைஞர்கள் அணியில் சேரவில்லை என்று கேட்கிறார்கள். இளைஞர்கள் அணியை நடத்துகிறார்கள், முதியவர்கள் அணியை நடத்துகிறார்கள் என்பது இங்கு முக்கியமில்லை. உண்மை எங்கிருக்கிறது என்பதுதான் முக்கியம். நமக்கு பிரச்சினை என்றால் யார் வந்து முதலில் நிற்பார்கள் என்பதுதான் இங்கு முக்கியம்.

நமக்குள் பிரிவினை இருப்பது என்பது மிகப்பெரிய கவலையளிக்கிறது. எங்கேயும் தப்பு நடக்கிறது என்றால் அதுக்கு குரல் கொடுக்க முதல் ஆளாக வந்து நிற்பேன். இந்த தேர்தலில் யார் ஜெயிக்கிறார்கள்? யார் தோற்கிறார்கள்? என்பது பற்றி கவலை இல்லை," என்றார்.

 

புலி இன்று சென்சார்... அக்டோபர் 1-ல் ரிலீஸ்!

விஜய் நடித்துள்ள புலி படம் இன்று தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. படத்தை வரும் அக்டோபர் முதல் தேதி வெளியிடுவதில் உறுதியாக உள்ளனர் தயாரிப்பாளர்கள்.

Paayum Puli (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

ஏற்கெனவே வெளியாகியுள்ள இப்படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள், ப்ரோமோ பாடல் ஆகியவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

Puli goes to censor

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹான், ஹன்சிகா, நான் ஈ சுதீப், ஸ்ரீதேவி, பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். நட்டி நடராஜ் ஒளிப்பதிவு அமைத்துள்ளார். எஸ்.கே.டி. ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் பி.டி.செல்வகுமார், சிபு தமீன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இந்தப் படம் இன்று தணிக்கைக் குழு அதிகாரிகளுக்கு திரையிட்டுக் காண்பிக்கப்படுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும்படியான ஒரு கதை என்பதால் எந்த சிக்கலுமின்றி யு சான்று கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

தூங்காவனம் இயக்குநருக்கே அடுத்த கமலின் படம்... தயாரிக்கும் வாய்ப்பு லிங்குவுக்கு கிடைக்குமா?

இப்போதுதான் ஆரம்பித்த மாதிரி இருந்தது... அதற்குள் தூங்காவனம் படம் ரிலீசுக்குத் தயாராகி நிற்கிறது.

கமலின் புது அணுகுமுறைக்குக் கிடைத்த பலன் இது. இதோ தூங்காவனம் குழுவோடு தனது அடுத்த படத்தை அறிவிக்கவும் தயாராகிவிட்டார் கமல்.

Kamal join hands with Thoongavanam team again

இந்தப் படத்தையும் ராஜேஷ் எம் செல்வாதான் இயக்குகிறார். ஆனால் இது முழுக்க முழுக்க காமெடி. படத்தின் கதை, திரைக்கதையை நடிகரும் இயக்குநருமான மவுலி எழுத, வசனத்தை கமலும் இணைந்து எழுதுகிறார்.

'உத்தமவில்லன்' படத்தில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடுகட்டும் வகையில், லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனத்துக்கு இன்னொரு படத்தில் நடித்துத் தருவதாக கமல் உறுதியளித்திருந்தார்.

அதன்படி இந்த வாய்ப்பை லிங்குசாமிக்கு கமல் தருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ரூ 30 கோடி பட்ஜெட்டுக்குள் இந்தப் படத்தை எடுத்துவிட முடிவு செய்துள்ளனர்.

 

என் படத்திற்கு குழந்தைகள் மற்றும் பெண்கள் வரவேண்டாம் - மிஷ்கின் அதிரடி

சென்னை: என் படத்திற்கு குழந்தைகள் மற்றும் பெண்கள் வரவேண்டாம் என்று கூறி அதிரடித்திருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.

ஆர்.பி.ரவி இயக்கத்தில் இயக்குநர் பி.வாசு மகன் சக்தி மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் தற்காப்பு படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா இன்று நடைபெற்றது.

Children & Women Don't Come My Movie - Says Mysskin

விழாவில் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், படத்தையும் படக்குழுவினரையும் வாழ்த்திப் பேசினார். மேலும் இன்றைய காலகட்டத்தில் சினிமாவில் படைப்பாளிகளின் சுதந்திரம் எப்படி இருக்கிறது என்றும் விரிவாகப் பேசினார்.

விழாவில் மிஷ்கின் பேசியவற்றை இங்கே பார்க்கலாம்.

தணிக்கைத் துறையால் பறிபோகும் சுதந்திரம்

தணிக்கைத்துறையால் கலைஞர்கள் பலரும் சுதந்திரத்தை இழக்கிறார்கள், இந்தப்படத்துக்கு (தற்காப்பு) யுஏ சான்றிதழ் கொடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். "யுஏ" மற்றும் "ஏ" சான்றிதழ் பெற்ற படங்கள் முப்பது சதவீத வரி கட்டவேண்டியிருக்கிறது. இன்றைய திரைப்படத்துறை இருக்கும் நிலையில் தயாரிப்பாளர்களுக்கு அது பெரியஅடி. தணிக்கைத்துறையின் செயல்பாடுகளால் நாங்கள் சுதந்திரம் இழந்திருக்கிறோம்.

ஈசியாக கிடைக்கும் "ஏ" சான்றிதழ்

கெட்டவார்த்தைகள், வன்முறைகள் படத்தில் இருந்தால் அதற்கு "ஏ" சான்றிதழ் என்று சுலபமாக சொல்லிவிடுகிறார்கள். கெட்டவார்த்தை, வன்முறை இல்லாமல் வாழ்க்கையே இல்லை. நான் ஒருவரைக் கோபம்கொண்டு பேசும் போது போடாசெல்லமே என்றா திட்டமுடியும்?

பிசாசால் கிடைத்த "ஏ"

நான் பிசாசு என்றொரு படமெடுத்தேன்.எங்கம்மா, பிசாசு என்றால் பயங்கரமானது என்று பொய்க்கதைகளைச் சொல்லிவிட்டார். ஆனால் திரைப்படத்துறையில்தான் நிறைய பிசாசுகளை நான் பார்த்தேன். பிசாசு மிகவும் மென்மையானது அன்பானது அதைப்பார்த்து நீங்கள் பயப்படத்தேவையில்லை என்று படமெடுத்தேன். படத்தைப் பார்த்த தணிக்கைத்துறையினர், படம் நன்றாக இருக்கிறது ஆனால் படத்தில் பிசாசு இருப்பதால் படத்துக்கு "ஏ" என்று சொல்லிவிட்டார்கள்.

பாலாவிடம் திட்டு வாங்கினேன்

பிசாசு படத்திற்கு "ஏ" சான்றிதழ் கிடைத்ததால் ஏண்டா இப்படி எடுத்தே என்று பாலா என்னைத் திட்டினார். நாங்கள் படப்பிடிப்பு நடத்தும்போதே ஒரு காட்சி வைத்தால், இதை வெட்டிவிடுவார்கள் என்று கேமிராமேன் சொல்லுகிறார், அந்தஇடத்திலேயே எங்களுக்குச் சுதந்திரம் இல்லாமல் இருக்கிறது.

படைப்பாளிகளுக்கு சுதந்திரம் வேண்டும்

ஒரு காட்சி (அல்லது) விசயத்தை எழுதும்போதே இப்படி வைத்தால் திட்டுவார்களே என்று அடித்துவிட்டு எழுதவேண்டியிருக்கிறது. எங்களுக்குச் சுதந்திரம் வேண்டும். அதற்கு, தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் ஆவணசெய்யவேண்டும்.

சினிமா குழந்தைகளுக்கானது அல்ல

இன்றைக்கு எல்லோரும் குழந்தைகளோடு படத்தைப் பார்க்கமுடியவில்லை என்று சொல்கிறார்கள். இந்த சினிமாமீடியம் என்பது குழந்தைகளுக்கானது அல்ல. எனவே திரையரங்குக்குக் குழந்தைகளோடு வராதீர்கள். இது வயதுவந்தவர்களுக்கான மீடியம். குழந்தைகளோடு கார்ட்டூன் படங்கள் பாருங்கள், அல்லது மைடியர்குட்டிச்சாத்தான் மாதிரியான படங்களுக்குப் போங்கள்.

பெண்கள் வரவேண்டாம்

நான் அடுத்து திகில் கலந்த ஏ படம்தான் எடுக்கப்போகிறேன், என் படத்துக்குப் பொம்ளைங்க வரவேண்டாம். தயவுசெய்து வரவேண்டாம். எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி எல்லாம் இல்லாமல் போயிருந்தால் நம் வாழ்க்கை என்னவாகியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள், அப்படிப்பட்டவர்கள் இருக்கும் இந்தத்துறையைப் பாதுகாக்கவேண்டியது அனைவருடைய கடமை" என்று உணர்ச்சி பொங்க மிஷ்கின் பேசினார்.

ஏற்கனவே நாட்டில பல படங்கள் பெண்கள் பார்க்க முடியாத படங்களாத் தான் வந்திட்டிருக்கு சார்.

 

5000 தியேட்டர்கள்.. சீனாவில் வெளியாகப்போகும் முதல் தென் இந்திய திரைப்படம் பாகுபலி!

டெல்லி: ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி இந்தியாவில் வசூலில் வேட்டையாடிய பாகுபலி திரைப்படம், சீனாவில் 5000 அரங்கங்களில் திரையிடப்பட உள்ளது.

Baahubali - The Beginning (Tamil) (U/A): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம், பாகுபலி.

Baahubali' to release in 5000 screens in China

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும், இந்த படம், ரிலீசாகி சக்கைபோடு போட்டது. இந்த திரைப்படம், சீனாவின் 5000 அரங்குகளில் திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை வெளியிடும் இ ஸ்டார்ஸ் நிறுவனம், ஆமீர் கான் நடித்த பிகே திரைப்படத்தை சீனாவில் வெளியிட்ட அனுபவம் கொண்டது. நவம்பர் மாதத்தில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தென் இந்திய திரைப்படம் ஒன்று, சீனாவில் இப்போதுதான் முதல்முறையாக ரிலீஸ் ஆக உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான 'ஐ' திரைப்படத்தை சீனாவில் வெளியிட உள்ளதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை ரிலீஸ் ஆகவில்லை.

சீனாவில் ரிலீஸ் செய்வதற்காக பாகுபலி திரைப்படத்தில் 20 நிமிட காட்சிகள் ட்ரிம் செய்யப்பட்டுள்ளனவாம்.

 

சென்னையில் ”ஐஸ்லேண்ட் பிலிம் பெஸ்டிவல்” - ரஷ்யன் கலாச்சார மையத்தில் படங்கள் வரிசையாக!

சென்னை: சென்னையில் டெல்லி ஐஸ்லேண்ட் தூதரகம் மற்றும், இண்டோ சினி அப்ரிசியேஷன் குழுமம் இணைந்து "ஐஸ்லேண்டிக் பிலிம் பெஸ்டிவல் நேற்று துவங்கியுள்ளது.

நேற்றைய நிகழ்வாக "தி டீப்" என்னும் பால்ட்ஸர் கோர்மகுரின் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. ஒரு மீனவனின் கதையை பிரதிபலிக்கும் வகையிலான திரைப்படம், கிட்டதட்ட 11 விருதுகளை வென்றுள்ளது இப்படம்.

Icelandic film festival in Chennai

லைப் ஈஸ் எ பிஸ் பவுல் - இன்று திரையிடப்பட இருக்கின்ற இத்திரைப்பட்டம் பால்டிவின் ஜொப்னிசன் இயக்கியது. 3 பேருடைய, 3 வெவ்வேறு கதைகளை சொல்லும் திரைப்படம்.

மேலும், தொடர்ந்து ஆப் ஹார்சஸ் அண்ட் மென், மெட்டல் ஹெட், வல்கனோ, பாரிஸ் ஆப் நார்த் ஆகிய திரைப்படங்கள் ஒவ்வொரு நாளும் வருகின்ற வெள்ளிக் கிழமை வரை திரையிடப்பட உள்ளன.

ரஷ்யன் கலாச்சார மையத்தில் நடைபெறுகின்ற இத்திரைப்படங்களை கண்டு களியுங்கள்... மேலும், விவரங்களுக்கு (044) - 28212652 என்ற எண்ணில் அழைத்து தெரிந்து கொள்ளலாம்.

 

'For The Love Of A Man'... வெனிஸ் திரைப்பட விழாவில் வரவேற்பு பெற்ற ரஜினி பற்றிய ஆவணப் படம்!

ஒரு மனிதரின் அன்புக்காக... இது ரஜினிகாந்த் பற்றி உருவாக்கப்பட்ட ஒரு ஆவண திரைப்படம்.

நெதர்லாண்ட்ஸைச் சேர்ந்த ரிங்கு கல்சி என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள ரஜினி ரசிகர்களைச் சந்தித்து, ரஜினியின் படங்கள் வெளியாகும்போது நிலவும் திருவிழா மனநிலை, கொண்டாட்டங்கள், அதன் பின்னணி, ரஜினி என்ற மனிதர் மீதான அன்புக்காக எதையும் செய்யத் தயங்காத ரசிக மனோபாவம் போன்றவற்றை இந்தப் படத்தில் பதிவு செய்துள்ளார்.

Documentary on Rajini at Venice Film Festival

இந்த ஆவணப் படமெடுப்பதற்காக தான் பார்த்து வந்த டிவி வேலையை உதறிவிட்டு தமிழகத்துக்கு வந்து தங்கியிருந்தார். பல ரஜினி ரசிகர்கள், மன்ற நிர்வாகிகள் அவருக்கு நண்பர்களாகிவிட்டனர்.

அவரது நண்பர் ஜோயோஜித் பால் இந்த டாகுமென்டரியைத் தயாரித்துள்ளார்.

Documentary on Rajini at Venice Film Festival

இந்தப் படம் பெருமைக்குரிய 72வது வெனிஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் கடந்த செப்டம்பர் 4-ம் தேதி பிற்பகல் மூன்று மணிக்குத் திரையிடப்பட்டது.

பார்வையாளர்கள் மத்தியில் இந்தப் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. "ரஜினி என்ற சூப்பர் ஸ்டார் மீது மக்கள் வைத்துள்ள அன்பையும், அவர் புகழையும் உலகுக்குச் சொல்லும் விதமாக For The Love Of A Man படம் அமைந்ததாக" ரிங்கு கல்சி தெரிவித்துள்ளார்.

 

ஜஸ்பா ஷூட்டிங்: மேக்கப்மேனை கட்டிப்பிடித்து கதறிய ஐஸ்வர்யாராய்

ஜஸ்பா திரைப்படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கின் போது தனது மேக்கப்மேன் மிக்கியை கட்டிப்பிடித்து அழுதிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய்.

குழந்தைக்கு தாயானவுடன் சுமார் 4 வருடங்கள் நடிப்பிற்கு இடைவெளி விட்டிருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராய், தற்போது ஜஸ்பா என்ற ஹிந்தித் திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

Aishwarya Cried on Last Day of Jazbaa

இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக படம் பிடிக்கப்பட்டன. சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முடிவடைந்தன.

ஒரே குடும்பம் போல ஜஸ்பா படக்குழுவினர் அனைவரும் பழகி வந்தனர். இந்நிலையில் தனது காட்சிகள் முழுவதும் முடிந்து படக்குழுவினரை ஐஸ்வர்யா ராய் பிரிந்தார்.

பிரியும் போது அவரது கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது." இத்தனை நாட்கள் அனைவரும் ஒன்றாக இருந்தோம், இப்போது உங்கள் அனைவரையும் பிரிவது வருத்தமாக உள்ளது" என்று கூறினார்.

மேலும் படத்தில் தனக்கு மேக்கப்மேனாக பணியாற்றிய மிக்கி என்பவரை கட்டிப்பிடித்து அழுதார், இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரது கண்களிலும் கண்ணீர் வந்தது.

ஐஸ்வர்யாராய் உணர்ச்சி வசப்பட்டு அழுததை கண்ட மொத்த படக்குழுவும் கண்கலங்கி நின்றது.

 

ரஜினி பிறந்த நாளில் எந்திரன் 2 ஆரம்பம்?

ரஜினியின் கபாலி படத்தின் துவக்க விழா, ஷூட்டிங் பற்றிய செய்கள் ஒரு பக்கம் பரபரப்பாக மீடியாவில் வலம் வந்துகொண்டிருக்க, மறுபக்கம் அவரது அடுத்த பிரமாண்ட படமான எந்திரன் 2 பற்றிய செய்திகளும் யூகங்களும் பஞ்சமின்றி வந்து கொண்டுள்ளன.

இந்தப் படத்தின் முன் தயாரிப்பு வேலைகளை மிகக் கச்சிதமாக செய்து வரும் ஷங்கர், படப்பிடிப்பு வரும் டிசம்பர் 12-ம் தேதி ரஜினி பிறந்த நாளன்று ஆரம்பித்துவிடலாம் என ஆசைப்படுகிறாராம்.

Enthiran 2 launch on Dec 12

இந்தப் படத்தில் தீபிகா படுகோன் ரஜினிக்கு நாயகியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. ரஜினிக்கு வில்லனாக நடிக்க வைக்க ஹாலிவுட் மெகா ஸ்டார் அர்னால்டுடன் தொடர்ந்து பேசி வருவதாகத் தெரிகிறது. அவர் கேட்கும் பெரும் சம்பளம்தான் பிரச்சினை என்கிறார்கள்.

இந்த டிசம்பரில் தொடங்கி, அடுத்த டிசம்பர் அல்லது பொங்கலுக்கு படத்தை வெளியிட்டுவிட வேண்டும் என்பதில் ஷங்கரும் உறுதியாக உள்ளாராம்.