டெல்லி: ஃபித்தூர் படப்பிடிப்பில் கார் ஓட்டியபோது நடிகை கத்ரீனா கைப் வாகனத்தின் கதவை மூடாததால் அது சுவரின் மீது மோதியது.
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும், கத்ரீனா கைபும் காதலித்து வருகிறார்கள். அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திருமணம் செய்து கொள்ளப் போவதால் கத்ரீனா தன்னைத் தேடி வந்த 2 பட வாய்ப்புகளை கூட ஏற்க மறுத்துவிட்டாராம். ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களில் தான் நடித்து வருகிறாராம்.
அவர் தற்போது ஆதித்யா ராய் கபூருடன் சேர்ந்து ஃபித்தூர் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு அண்மையில் டெல்லியில் நடந்தது. அப்போது கத்ரீனா காரை ஓட்டிச் செல்லும் காட்சியை படமாக்கியுள்ளனர்.
காருக்குள் ஏறி அமர்ந்த கத்ரீனா கதவை மூடாமலேயே ஸ்டார்ட் செய்துள்ளார். இதனால் திறந்திருந்த காரின் கதவு சுவரின் மீது வேகமாக மோதியது. நல்ல வேளையாக இந்த சம்பவத்தில் கத்ரீனாவுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
பிரபல ஆங்கில எழுத்தாளரான சார்லஸ் டிக்கன்ஸின் கிரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸ் நாவலைத் தழுவி இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறதாம்.