மே 1-ம் தேதிக்கு தள்ளிப் போனது இடம் பொருள் ஏவல்

சீனு ராமசாமி இயக்கத்தில் லிங்குசாமி தயாரிப்பில் உருவாகிவரும் இடம் பொருள் ஏவல் திரைப்படம் வரும் மே 1-ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி, விஷ்ணு, நந்திதா, ஐஸ்வர்யா நடித்துள்ள இந்தப் படம் மார்ச் மாதமே வெளியாகப் போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் ஏராளமான படங்கள் இந்த மாதம் தொடர்ந்து வெளியானதால், ரிலீசை தள்ளிப் போட்டனர்.

இதற்கிடையில் லிங்குசாமி தயாரித்துள்ள கமலின் உத்தம வில்லன், மற்றும் சிவகாரத்திகேயன் நடித்த ரஜினி முருகன் ஆகிய படங்களும் ஏப்ரலில் ரிலீசாக உள்ளன.

மே 1-ம் தேதிக்கு தள்ளிப் போனது இடம் பொருள் ஏவல்

எனவே இடம் பொருள் ஏவல் படத்தை மே 1-ம் தேதி வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்.

இந்தப் படத்தில் முதல் முறையாக யுவன் சங்கர் ராஜாவும் கவிஞர் வைரமுத்துவும் இணைந்துள்ளனர். பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

 

சிக்கலில் மாட்டிக் கொண்டதா அனுஷ்காவின் “ருத்ரம்மா தேவி”? – சினிமா வட்டாரத்தில் சலசலப்பு

சென்னை: விரைவில் வெளியாகவுள்ள அனுஷ்காவின் ருத்ரமா தேவி படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படத்தை எடுத்துள்ளனர்.

அனுஷ்கா ருத்ரமா ராணி வேடத்தில் நடித்துள்ளார். ராணா, அல்லு அர்ஜுன், பிரகாஷ்ராஜ், சுமன், நித்யாமேனன், கத்ரினா திரேசா போன்றோரும் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். குணசேகர் இயக்கி உள்ளார்.

13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ருத்ரமாதேவி ராணியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர். இதற்காக அனுஷ்கா வாள் சண்டை, குதிரை சவாரி பயிற்சிகள் பெற்று இப்படத்தில் நடிக்கிறார்.

சிக்கலில் மாட்டிக் கொண்டதா அனுஷ்காவின் “ருத்ரம்மா தேவி”? – சினிமா வட்டாரத்தில் சலசலப்பு

இதன் பாடல் வெளியீட்டு விழாவை இரண்டு இடங்களில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதில் பங்கேற்கும்படி நடிகர், நடிகைகள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

சரித்திர கதை என்பதால் இப்படத்துக்கு அரசின் கேளிக்கை வரி விலக்கு பெற படக்குழுவினர் முயற்சிக்கின்றனர். படத்தின் இயக்குனர் குணசேகர் தெலுங்கானா முதல்வர், சந்திரசேகர்ராவை நேரில் சந்தித்து பாடல் வெளியீட்டு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். அப்போது கேளிக்கை வரி விலக்கு பெறுவது பற்றியும் பேசியதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் படத்தின் டிரெய்லரை காட்டினார். அதை பார்த்ததும் சந்திரசேகரராவ், கோபமடைந்தாராம். அதில் தெலுங்கானா மாநிலம் உதயமானதற்கு எதிரான வசனங்கள் இடம் பற்று இருந்ததாக கூறப்படுகிறது.

இதுவே சந்திரசேகரராவை ஆத்திரப்பட வைத்ததாம். அதனை நேரிலேயே டைரக்டர் குணசேகரிடம் தெரிவித்துவிட்டார். இதனால் ருத்ரமா தேவி படத்துக்கு சிக்கல் எற்பட்டு உள்ளது. வரி விலக்கும் கிடைக்காது என்கின்றனர் சினிமா வட்டாரத்தினர்.

 

ரஜினிக்கு எதிரான பிச்சைப் போராட்டம் வாபஸ்!

லிங்கா பட விவகாரத்தில் ரஜினி வீட்டு முன் பிச்சை எடுக்கப் போவதாகக் கூறிய விநியோகஸ்தர்கள், ரஜினி பெரிய தொகையைக் கொடுத்துள்ளதால் அந்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

லிங்கா படம் வெளியான முதல் வாரத்திலிருந்து அந்தப் படத்துக்கு எதிராகவும், அதன் நாயகன் ரஜினிக்கு எதிராகவும் பலவிதமான பிரச்சாரத்தை மேற்கொண்டனர் அந்தப் படத்தை சில பகுதிகளில் வெளியிட்டவர்கள்.

சில அரசியல் தலைவர்களின் துணையோடு உண்ணாவிரதம் நடத்தியவர்கள், பின்னர் பிச்சைப் போராட்டம் அறிவித்தனர். படத்துக்கு வரிச்சலுகை அளித்ததற்கு எதிராக வழக்கும் போட்டனர்.

ரஜினிக்கு எதிரான பிச்சைப் போராட்டம் வாபஸ்!

இந்த நிலையில் இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர, நஷ்டம் என்று கூறியவர்களுக்கு ஒரு கணிசமான தொகையைக் கொடுத்துவிட்டார் ரஜினிகாந்த்.

இதனை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணுவிடம் அவர் ஒப்படைத்து பிரச்சினையை முடிக்குமாறு கூறினார்.

20 நாட்களுக்கு முன்பே இந்தத் தொகை தரப்பட்டும், அந்தத் தொகையை எப்படி பிரித்துக் கொள்வது என்பதில் சம்பந்த விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் மத்தியில் பெரிய சண்டை ஏற்பட்டுள்ளதால் பிரச்சினை முடிவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

ஆனால் இதனை வெளியில் சொல்லாமல், மீண்டும் பிச்சைப் போராட்டத்தை நேற்று அறிவித்து மீடியாவில் விளம்பரம் தேடி வந்தனர் இந்த விநியோகஸ்தர்கள்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடந்த உண்மையை நேற்று கலைப்புலி தாணு ஒரு அறிக்கை மூலம் தெளிவுபடுத்தினார்.

இதைத் தொடர்ந்து, லிங்கா பிரச்சினை சுமூகமாக முடிந்ததாகவும், ரஜினிக்கு எதிராக அறிவித்த பிச்சைப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் அந்த விநியோகஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.

போராட்டம் வாபஸ் ஓகே... வழக்கை எப்படி வாபஸ் பெறப் போகிறார்கள்?

 

அமிதாப்பைத் தொடரும் 2 கோடி பேர்!

பாலிவுட்டின் சாதனை நாயகனான அமிதாப் பச்சனை சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்கில்' பின் தொடருபவர்களின் எண்ணிக்கை 2 கோடியை கடந்துள்ளது.

ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் ஒன்றான ‘ட்விட்டர்' மூலம் பரபரப்பாக எழுதி வந்தார் அமிதாப். அதற்கு முன் ப்ளாக்கரில் கலக்கிக் கொண்டிருந்தார்.

அமிதாப்பைத் தொடரும் 2 கோடி பேர்!

சமூக வலைத் தளங்கள் பிரபலமானதால் ப்ளாக்கிலிருந்து ட்விட்டர், பேஸ்புக் என வந்துவிட்டார்.
ட்விட்டரில் அமிதாப்பை ஒரு கோடியே 37 லட்சம் பேர் தொடர்கிறார்கள்.

‘பேஸ்புக்'கில் தனது "ஃபாலோயர்ஸ்" எண்ணிக்கை 2 கோடியை கடந்து விட்டதாக 72 வயது அமிதாப் பச்சன், இன்று தனது ‘ட்விட்டர்' பக்கம் மூலம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்திய நட்சத்திரங்களில் இவ்வளவு அதிக ஃபாலோயர்களைக் கொண்டவர் அமிதாப் ஒருவர்தான்.