தமிழ் நடிகைகளுக்கு நீச்சல் டிரஸா?
மீண்டும் நடிக்க வந்த ஹீரோயின்
தினசரி பட வாய்ப்புகள் : ஹன்சிகா
கிசு கிசு - பிசின் நடிகைய பத்தி வதந்தி
நல்லகாலம் பொறக்குது...
பாலிவுட்போன பிசின் நடிகைய பத்தி தேவையில்லாம வதந்தி பரபரப்பறாங்களாம்... பரபரப்பறாங்களாம்... ஷாருக் ஹீரோ படத்துல ஜோடியா நடிக்கறதுக்காக அவர் படத்த இயக்கற இயக்குனர்கிட்ட சான்ஸ் கேக்கறாருன்னு பேசறாங்களாம். இத கேள்விப்பட்ட பிசின் நடிகை உர்ராயிட்டாராம். 'ஷாருக் நடிகரோ நடிக்கறது எனது ஆசைதான். அதுக்காக வலியப்போய் யார் கிட்டயும் வாய்ப்பு கேக்க மாட்டேன்'னு வதந்தி பரபரப்பரவங்களுக்கு சூடா பதில் சொல்றாராம்... சொல்றாராம்...
மிருக பட பத்ம ஹீரோயின் ரொம்பவே துணிஞ்சிட்டாராம்... துணிஞ்சிட்டாராம்... அழுதழுது நடிச்சப்ப யாருமே கண்டுகலையாம். கொஞ்சம் கிளாமருக்கு மாறனதும் வாய்ப்பு தேடி வர்ற ஆரம்பிச்சிருக்காம். கிளாமரா குத்தாட்டம் போடணும்னு யாராவது கேட்டா உடனே ஒ.கே. சொல்றாராம். 'என்னைய மாதிரி குத்தாட்டம்போட வேற மல்லுவுட் ஹீரோயினுக்கு துணிச்சல் இருக்கா'னு சவால் விட்றாராம்.. விட்றாராம்...
கல்யாணத்துக்கப்பறம் டிவி சீரியல்ல குறியா இருந்த தேவ நடிகை இப்ப கணவர் ராஜகுமாரோடு ஜோடிபோட்டு படத்துல நடிச்சிருக்காராம்... நடிச்சிருக்காராம்... 'புதுசா படங்கள் வந்தா நடிப்பீங்களா?'னு கேட்டா 'நாங்க ஜோடி போட்ட படம் ரிலீஸாகட்டும் அதோட ரிசல்ட் பாத்துட்டு புதுபடம் ஒத்துகறதுபத்தி சொல்றேன்'னு பதில் வருதாம்... வருதாம்...
3 படம் 100
குழந்தையைப் போன்றவர் ரஜினி - தீபிகா படுகோன்
ரஜினி சார் ஒரு குழந்தையைப் போன்ற உற்சாகம் மிகுந்தவர். இந்திய சினிமாவில் அமிதாப்பும் ரஜினியும்தான் நான் பார்த்த மிகச் சிறந்த கலைஞர்கள் என்கிறார் தீபிகா படுகோன்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "ரஜினி சாருடன் நடிக்கிறோமே என்ற பயம் காரணமாக ஆரம்பத்தில் மன அழுத்தம் இருந்தது போல உணர்ந்தேன். ஆனால் செட்டுக்குள் போனதும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, என் பாத்திரத்தில் மட்டும் கவனம் செலுத்தினேன். ஓம் சாந்தி ஓம் படத்தின் போதும் இப்படித்தான் நடித்தேன்.
கோச்சடையானைப் பொறுத்தவரை என்னை வியக்கவைத்தது, சூப்பர் ஸ்டார் ரஜினியின் எளிமையும், மாறாத உற்சாகமும்தான்.
ஒரு குழந்தையைப் போல கள்ளங்கபடமற்ற, துள்ளலை அவரிடம் பார்க்கலாம். திரையுலகில் இப்படி ஒரு உற்சாக மனிதரை நான் பார்த்ததில்லை.
எல்லா காட்சிகளும் மிக்ச சரியாக வரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் நடித்துத் தரத் தயாராக இருப்பார்.
ரஜினி, அமிதாப் ஆகிய இரு மேதைகளிடம்தான் இந்த அர்ப்பணிப்பை, தொழில் ஒழுங்கை நான் பார்த்திருக்கிறேன். அவர்களின் கண்களைப் பாருங்கள்.. இந்த சினிமாவை அவர்கள் எந்த அளவு நேசிக்கிறார்கள் என்பது தெரியும்...," என்றார்.
அய்யோ கொல்ல வராங்கோ... - அலறும் மகத்
நடிகர் மஞ்சு மனோஜின் ஆட்கள் என்னை கொல்ல முயல்கிறார்கள் என்று புகார் கூறியுள்ளார் நடிகர் மகத்.
ஒரு மது விருந்தில் நடிகை டாப்ஸிக்காக நடந்த சண்டையில் தெலுங்கு நடிகர் மஞ்சு மனோஜும் மகத்தும் கடுமையாக அடித்துக் கொண்டனர்.
மனோஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் ஹைதராபாத்துக்கு தப்பிவிட்டார்.
நடிகை டாப்ஸியே இந்த தகராறுக்கு காரணம் என கூறப்பட்டது. மகத்தும் மனோஜும் டாப்ஸியை காதலித்தனர். முதலில் மகத்துடன் சுற்றிய டாப்ஸி, பிறகு மனோஜுடன் நெருக்கமானார். மனோஜும் டாப்ஸியும் தனி வீட்டில் குடித்தனம் நடத்துவதாக ஆந்திர பத்திரிகைகளில் சமீபத்தில் கிசுகிசுக்கள் வந்தன.
டாப்ஸி பிரிந்ததால், அவர் மீது மகத் கோபமாக இருந்ததாகவும் அவரை அடிக்கடி தொடர்பு கொண்டு டார்ச்சர் செய்ததாகவும் அந்த ஆத்திரத்தில் தான் மகத்தை மனோஜ் அடித்து உதைத்தார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் இவர்கள் மோதலுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று டாப்ஸி அறிக்கை விட்டுள்ளார். மனோஜை தனது அண்ணன் என்று ஒரே போடாகப் போட்டவர், மகத்தை தெரிந்ததாகக் கூட காட்டிக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் மகத்தை தாக்கிய மனோஜ் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரமானார்கள். மனோஜுடம் விசாரணை நடத்தி கைது செய்ய ஆந்திராவுக்கு தனிப்படை போலீசை அனுப்பவும் ஏற்பாடு நடந்தது. ஆனால் மனோஜ் மலேசியாவுக்கு தப்பி சென்று விட்டாராம்.
வாபஸ் வாங்கு
இதற்கிடையில் முக்கிய பிரமுகர்கள் பலர் தலையிட்டு போலீஸ் விசாரணைக்கு இடையூறு செய்வதாக கூறப்படுகிறது. விசாரணை நடத்த வேண்டாம் என்று வழக்கை கைவிடுங்கள் என்று அவர்கள் நிர்ப்பந்தம் செய்கிறார்களாம்.
மகத்திடமும் புகாரை வாபஸ் பெரும்படி சிலர் மிரட்டுகிறார்களாம். மனோஜின் ஆட்கள் தன்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்கள் என மகத் புகார் கூறியுள்ளார்.
ஆனால் அவர் தற்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
மது விருந்தில் கலந்து கொண்ட நடிகர்-நடிகைகள் யார் என்ற விவரங்களை சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் தயாராகி வருகிறார்கள்.
துபாய் ஹோட்டலில் வைகைப் புயல் வடிவேலுடன் சாப்பிட ஆசையா?
துபாய்: துபாயில் உள்ள ராஸ் அல் கைமா ஹோட்டலில் வைகைப் புயல் வடிவேலுவுடன் மதிய உணவு மற்றும் இரவு உண்ண அரிய வாய்ப்பு.
துபாயில் உள்ள ராஸ் அல் கைமா ஹோட்டலில் நகைச்சுவை நடிகர் வைகைப் புயல் வடிவேலுவுடன் மதிய உணவு மற்றும் இரவு உணவு உண்ண அரிய வாய்ப்பு. நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் இரவு விருந்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் நபர் ஒருவருக்கு 100 திர்ஹம் செலுத்த வேண்டும். நாளை மறுநாள் அதாவது 13ம் தேதி மதியம் 1 மணிக்கு நடக்கும் விருந்தில் கலந்து கொள்ள விரும்புவோர் நபர் ஒருவருக்கு 50 திர்ஹம் செலுத்த வேண்டும். 6 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமியருக்கு கட்டணம் இல்லை.
விருந்து தவிர நடன நிகழ்ச்சி, மிமிக்ரி, இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகள், விருந்துகளில் கலந்து கொள்ள விரும்புவோர் 050-4326367, 055-7112280 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.
ராஸ் அல் கைமா ஹோட்டல் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி்க்கு சினர்ஜி யுடிஎஸ் இவன்ட்ஸ், சூப்பர் 94.7 எப்எம் ஆகியவை ஆதரவளித்துள்ளன.
திருமணத்துக்குப் பிறகும் நடிப்பைத் தொடருவேன் - ராதிகா ஆப்தே
பொதுவாக ஒரு நடிகைக்குத் திருமணம் என்ற செய்தி வெளியாகும்போதே, தவறாமல் இடம் பெறும் தகவல், 'திருமணத்துக்குப் பின் நடிக்கமாட்டேன். இல்லத் தலைவியாக சேவை செய்வேன்' என்பதுதான்.
ஆனால் ராதிகா ஆப்தே கொஞ்சம் வித்தியாசமானவர்தான். நாடகத்திலிருந்து திரைக்கு வந்தவராச்சே...
ராதிகாவுக்கு சீக்கிரமே திருமணம் நடக்கிறது. தான் நடிக்கும் வெற்றிச் செல்வன் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்புக்கு வந்திருந்தார்.
உட்லண்ட்ஸ் தியேட்டரில் நடந்த இந்த ஷூட்டிங்கில் பங்கேற்ற அவர், பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், "ரத்த சரித்திரம், டோனி படங்களில் நடித்துள்ளேன். வெற்றிச் செல்வன் தமிழில் எனக்கு மூன்றாவது படம். இதில் வக்கீல் கேரக்டரில் வருகிறேன். தொழிலிலும் வைராக்கியமும் மற்றவர்களிடம் மென்மையாக நடக்கும் குணத்துடனும் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறேன்.
நல்ல கதையம்சம் உள்ள படம். சமூகத்துக்கு தேவையான ஒரு விஷயம் படத்தில் உள்ளது. லண்டனை சேர்ந்த இசை அமைப்பாளர் பெனட்டிக் டெய்வருடன் எனக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. திருமண தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை.திருமணத்துக்கு பிறகும் நடிப்பேன்.
தமிழில் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பேன். எனது முந்தைய படங்களை போல் அல்லாமல் வெற்றிச் செல்வன் முழு கமர்சியல் படமாக வந்துள்ளது," என்றார்.
100 கட்கள், 3 நிமிட 'சீன்' நீக்கப்பட்ட பிறகு டர்ட்டி பிக்சருக்கு டிவியில் அனுமதி!
ஆபாச காட்சிகள் நீக்கப்பட்டு விட்டதால், த டர்ட்டி பிக்சர் படத்தை டிவியில் ஒளிபரப்ப அனுமதி அளித்துள்ளனர்.
சில்க்ஸ்மிதா வாழ்க்கையை வைத்து எடுக்கப்பட்ட படம் 'த டர்ட்டி பிக்சர்'. இதில் சில்க்ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்தார்.
ஆபாசக் காட்சிகள் உள்ள இந்தப் படத்தை டிவியில் வெளியிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டது.
டி.வி.யில் முக்கிய நேரங்களான 'பிரைம் டைமில்' டர்டிபிக்சர் படத்தை வெளியிடக்கூடாது என்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் தடை விதித்திருந்தது.
இதையடுத்து டர்டிபிக்சர் படத்தை தயாரிப்பாளர் தணிக்கை குழுவுக்கு அனுப்பினார். தணிக்கை அதிகாரிகள் படத்தைப் பார்த்து சர்ச்சைக்குரிய 3 நிமிட காட்சிகளை வெட்டிவிட்டனர். இதைத் தவிர 100 இடங்களில் கட் கொடுத்துள்ளனர்.
இதனால் டெலிவிஷன் பிரைம் டைமில் ஒளிபரப்ப தற்போது அனுமதி அளித்துள்ளனர்.
இவ்ளோ வெட்டோட வர்ற படத்தை பாத்தா என்ன பாக்காட்டி என்னன்னுதானே யோசிக்கிறீங்க...!!
இதுதான் 'பில்லா 2' கதையா...??
ஈழப் புரட்சிக்கு நிதியுதவி அளிக்கும் கேரக்டரில் அஜீத்குமார், பில்லா 2 படத்தில் நடித்திருப்பதாக ஒரு பரபரப்புச் செய்தி வெளியாகியுள்ளது.
அஜீத் நடிப்பில் ஏற்கனவே வெளியான பில்லா ரீமேக், அவருக்கு பெரும் ஏற்றத்தைக் கொடுத்தது. இந்த நிலையில் தற்போது அதன் 2ம் பாகத்தை எடுத்துள்ளனர். ஆனால் இது முதல் படத்தின் தொடர்ச்சி அல்ல, மாறாக, எப்படி ஒரு சாதாரண மனிதன் பில்லா என்ற தாதாவாக மாறினான் என்பதைப் பார்க்கும் கதையாக இது மாற்றப்பட்டுள்ளது.
இப்படத்தின் கதை இதுதான் என்று ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
1983ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் ஹாலிவுட் படம் ஸ்கார்பேஸ் (Scarface). சூப்பர் ஸ்டார் அல் பசினோ நடித்த படம். அட்டகாசமாக ஓடிய திரில்லர் கிரைம் படம் இது. கதை ரொம்பச் சின்னது... கியூபாவிலிருந்து அகதியாக மியாமிக்கு வந்து சேருகிறார் அல் பசினோ.
அங்கு அவருக்கு கொகைன் கடத்தல் கும்பலுடன் தொடர்பு ஏற்படுகிறது. பின்னர் ஒரு நாள் அந்தக் கும்பலுக்கேத் தலைவனாகி விடுகிறார் அல் பசினோ. அதன் பின்னர் அவரிடம் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. இந்தப் பணத்தை அப்படியே கியூபாவுக்கு அனுப்புகிறார். அங்கு அரசுக்கு எதிரான புரட்சிக்கு பணத்தை தாராளமாக கொடுத்து உதவுகிறார்.
இந்தப் படத்துக்கு அப்போது கியூப மக்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. குறிப்பாக மியாமியில் வசித்து வந்த கியூப மக்கள் பெரும் போராட்டங்களிலெல்லாம் குதித்தனர். கியூப மக்களை போதைப் பொருள் கடத்தல்காரர்களாக சித்தரிப்பதா என்று வரிந்து கட்டி எழுந்தனர். ஆனால் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதை விட அல் பசினோவின் அட்டகாசமான நடிப்பு வெகுவாக பேசப்பட்டது.
இப்போது பில்லாவுக்கு வருவோம்... ஸ்கார்பேஸ் படத்தின் கதையைத்தான் பில்லா 2 படமாக மாற்றியுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. பில்லா 2ல், இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதியாக வருகிறார் டேவிட் பில்லா, அதாவது நம்ம அஜீ்த். இங்கு வந்த பிறகு அவர் சூழ்நிலை காரணமாக தாதாவாகிறார். பின்னர் தனது நாட்டில் நடக்கும் புரட்சிக்கு உதவி செய்வதாக கதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்று தெரியவில்லை. இன்னும் சில நாட்கள்தானே, படத்தைப் பார்த்து விட்டுத் தெரிந்து கொண்டால் போச்சு...
லைலா கானி்ன் இகத்புரி பண்ணை வீட்டில் 6 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு
நாசிக்: பாலிவுட் நடிகை லைலா கானின் பண்ணை வீட்டில் இருந்து 6 எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டுள்ளன. இவை கொலை செய்யப்பட்ட லைலா கான் மற்றும் அவருடயை குடும்பத்தாருடையதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பாலிவுட் நடிகை லைலா கான், தாயார் ஷெலீனா, சகோதரிகள் ஹஸ்மினா, ஜாரா, தம்பி இம்ரான் மற்றும் உறவினர் ஒருவர் ஆகியோர் கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மர்மமான முறையி்ல் காணாமல் போனார்கள். இதையடுத்து லைலாவின் தந்தை நாதீர் பட்டேல் ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அவர் தனது புகாரி்ல், பாகிஸ்தானைச் சேர்ந்த பர்வேஸ் தக் மற்றும் அவனுடைய கூட்டாளி ஆஷிப் ஷேக் ஆகியோர் தான் லைலாவையும் மற்றவர்களையும் கடத்தியதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பர்வேஸ் தக் காஷ்மீர் போலீசாரிடம் சிக்கினார். அவர் பயன்படுத்தி வந்த கார் லைலா கானின் தாயாருடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆசிப் ஷேக்கும் கைது செய்யப்பட்டார். பர்வேஸ் தக்கை மும்பை போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரித்ததில் லைலா கான் மற்றும் அவரது குடும்பத்தார் சுட்டுக் கொல்லப்பட்டதாக பர்வேஸ் தெரிவித்தார்.
கொலைக்கான காரணம்:
லைலாவின் தாய் ஷெலீனா நாதீர் பட்டேலைப் பிரிந்த பிறகு பர்வேஸுடன் தொடர்பு வைத்து அவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.
லைலா கான் தனது குடும்பத்தாருடன் நாசிக் அருகே உள்ள இகத்புரியில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வந்தார். பர்வேஸும் அந்த வீட்டில் வந்து தங்கிச் சென்றுள்ளார். இதற்கிடையே ஷெலீனாவுக்கும் பர்வேஸின் கூட்டாளி ஆசிப் ஷேக்கிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அவரை 3வது திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த பர்வேஸ் ஆத்திரத்தில் ஷெலீனாவை தாக்கினார். இதில் அவர் இறந்து போனார். இதைப் பார்த்த லைலா கான் உள்ளிட்ட 5 பேரை அவர் சுட்டுக் கொன்றார். இதை அவர் போலீஸ் விசாரணையில் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் பர்வேஸ் தக்கை அழைத்துக் கொண்டு இகத்புரி பண்ணை வீட்டுக்கு சென்றனர். அங்கு 6 எழும்புக்கூடுகள், கத்தி, கட்டை, 2 செல்போன்கள், பை நிறைய பெண்கள் உடைகள், நகைகள் ஆகியவை கிடைத்துள்ளன. அந்த எலும்புக் கூடுகள் லைலா கான் மற்றும் அவருடைய குடும்பத்தாருடையதாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அடுத்தடுத்து அள்ளும் ஜெயா டிவி..கோச்சடையானைத் தொடர்ந்து 'மாற்றானும்' ஜெயா கையில்!
கோச்சடையானை வாங்கிய கையோடு இப்போது சூர்யா நடித்துள்ள மாற்றான் படத்தையும் ஜெயா டிவி பெரும் விலை கொடுத்து வாங்கி விட்டதாம். பெரிய பெரிய படங்களை கை நழுவ விட்டுக் கொண்டிருப்பதால் சன் டிவி கையைப் பிசைந்து கொண்டிருக்கிறதாம்.
தமிழில் புதிய படங்களை, குறிப்பாக சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களை வாங்கும் டிவி சானல் எது என்றால் ப்ரீகேஜி குழந்தை கூட சன் டிவி என்றுதான் சொல்லும். அந்த அளவுக்கு திரைப்படங்களை வாங்கிக் குவிப்பதில் சன் டிவி முன்னணியில் இருந்து வந்தது. தற்போது அந்த இடத்தைத் தகர்க்க ஆரம்பித்துள்ளது ஜெயா டிவி.
இதற்காகவே தனி டீம் அமைத்து பெருமளவில் பணத்தை வாரியிறைத்துப் புதிய படங்களை, குறிப்பாக முக்கிய நடிகர்களின் படங்களை வாங்க ஆரம்பித்துள்ளதாம் ஜெயா டிவி.
டிவி உரிமையை வாங்குவதில் இப்போது சன் டிவிக்கும், ஜெயா டிவிக்கும் இடையேதான் கடும் போட்டி நடக்கிறதாம். இதில் சமீபகாலமாக ஜெயா டிவி வெல்ல ஆரம்பித்திருப்பது சன் டிவியை கலங்க வைத்துள்ளதாம்.
சமீபத்தில்தான் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கோச்சடையான் படத்தை மிகப் பெரிய விலை கொடுத்து ஜெயா டிவி வாங்கியது. இந்த நிலையில் திங்கள்கிழமையன்று சூர்யா நடித்துள்ள மாற்றான் படத்தையும் பெரிய விலை கொடுத்து வாங்கிப் போட்டு விட்டனராம்.
மிகப் பெரிய விலை கொடுத்து புதிய படங்களை வாங்குவதில் எந்தக் காலத்திலுமே ஜெயா டிவி அக்கறை காட்டியதில்லை. கேட்டுப் பார்ப்பார்கள் விலை படியவில்லை என்றால் போய் விடுவார்கள். ஆனால் தற்போது அப்படி இல்லையாம், என்ன விலை கொடுத்தாவது வாங்கி விடுகிறார்களாம். படம் சன்னுக்குப் போகக் கூடாது என்பது மட்டுமே தற்போதைக்கு அவர்களது ஒரே நோக்கமாக உள்ளதாம்.
இதுகுறித்து ஜெயா டிவியின் துணைத் தலைவரான சுனில் கூறுகையில் தற்போது புதிய படங்களை வாங்குவதில் வேகம் காட்ட ஆரம்பித்துள்ளோம். மேலும் சில படங்களை வாங்குவது குறித்து பேச்சு நடந்து வருகிறது. விரைவில் அவை முடியும். பெரிய நடிகர்களின் படங்கள் என்று இல்லாமல், சிறிய படங்களையும் கூட நாங்கள் வாங்குகிறோம் என்றார்.
ஜெயா டிவி ரஜினி, சூர்யா என கிளம்பியிருப்பதால் சன் டிவி நிர்வாகத்தினர் டென்ஷனில் உள்ளனராம். தற்போது ஆட்சி, அதிகாரம் எல்லாம் ஜெயா டிவிக்கு சாதகமாக இருப்பதாக கூறப்படுகிறது. சன் டிவியைப் பொறுத்தவரை அதன் முக்கியத் தளபதிகளில் ஒருவரான தயாநிதி மாறன் பதவியில்லாமல் இருக்கிறார். வெறும் எம்.பியாக மட்டுமே இருக்கிறார். திமுகவிலும் கூட முன்பு போல அவர் சுதந்திரமாக இல்லை.
மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் கிட்டத்தட்ட மூடு விழா கண்டநிலையில் படுத்துக் கிடக்கிறது. அதை திறம்பட நிர்வகித்த ஹன்ஸ்ராஜ் சக்சேனா முடங்கிப் போய் விட்டார். சன் நியூஸ் சானலுக்கும் புதிய தலைமுறை மூலம் கடும் சவால்... இப்படி பலமுனைத் தாக்குதலில் சன் சிக்கியிருப்பதால் அந்த டிவியால் ஜெயா டிவியுடன் போட்டி போட முடியாத நிலை இருப்பதாக பேசிக் கொள்கிறார்கள். இன்னும் கொ்ஞ்ச காலத்துக்கு சன் டிவி ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தாக வேண்டிய நிலையில்தான் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜெயா டிவி மட்டுமல்லாமல் விஜய் டிவியும் கூட சன்னுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்து வருகிறது. அந்த டிவியின் வித்தியாசமான நிகழ்ச்சிகள் சன் டிவியை பெரும் சரிவுக்கு கொண்டு போய்க் கொண்டிருக்கின்றன. சன் டிவி அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைப்பது அவர்களுக்கே கூட போரடித்துப் போய் விடும் நிலையில்தான் உள்ளது. ஆனால் விஜய் டிவி தரும் வித்தியாசம், அந்த சானலுக்குப் பல புதிய ரசிகர்களை கொண்டு வந்து சேர்க்கிறது.
அது மட்டுமல்லாமல் விஜய்யும் கூட இப்போது போட்டி போட்டுக் கொண்டு புதிய படங்களை சரமாரியாக வாங்க ஆரம்பித்துள்ளது. சிறுத்தை, அவன் இவன், நண்பன் என இவர்களின் லிஸ்ட் பெரிதாகிக் கொண்டு போவதால் விஜய்யிடமும் சிக்கித் தவிக்கிறது சன்.
மறுபக்கம் ஜீ தமிழ் டிவியும் இப்போது புதிய படங்களை வாங்குவதில் முனைப்பு காட்டத் தொடங்கியுள்ளது. சிம்புவின் வேட்டை மன்னன் படத்தை இந்த டிவிதான் வாங்கியுள்ளதாம்.
ஜெயா, விஜய் என போட்டிகள் வலுத்துக் கொண்டே போகும் நிலையில் அதை சமாளிக்கும் வழிகள் குறித்து சன் டிவி நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறதா என்பது தெரியவில்லை.
உலகின் செக்ஸியான பெண் - ஏஞ்சலினா ஜூலியை ஓரங்கட்டிய வீணா மாலிக்!
எந்தப் பக்கத்தை அல்லது தளத்தைத் திருப்பினாலும் ஒரே வீணா மாலிக் புராணமாக உள்ளது.
அவரும் சளைக்காமல், இருக்கிற கவர்ச்சியை அள்ளி அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார், இனி காட்ட ஒன்றுமில்லை எனும் அளவுக்கு.
இப்போது அவருக்கு இன்னுமொரு 'பெருமை'. உலகிலேயே மிகவும் செக்ஸியான பெண் என்ற புதிய சிறப்பு சேர்ந்திருக்கிறது.
இதற்கு முன்பு வரை இந்தப் பெருமைக்கு சொந்தக்காரராக இருந்தவர் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி.
உலகின் செக்ஸியான பெண் யார் என்பதற்காக சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது சர்வதேச பத்திரிகை ஒன்ரு. இதில் 'கும்' பார்ட்டிகள் கிம் கர்தஸியான், பிரிட்னி ஸ்பியர்ஸ், ஏஞ்சலினா ஜூலி, கேமரூன் டயஸ், மேகான் பாக்ஸ், பாரிஸ் ஹில்டன், பூனம் பாண்டே, சோனம் கபூர் மற்றும் ஷில்பா ஷெட்டி ஆகியோருடன் வீணா மாலிக்கையும் பட்டியலிட்டிருந்தது.
இந்தப் பட்டியலில் இருந்த அத்தனை பேரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளார் வீணா மாலிக்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இது உண்மையிலேயே எனக்கு பெருமையான விஷயம்தான். இந்த கணிப்பில் என் உடல் அழகைப் பார்த்து மட்டும் ரசிகர்கள் வாக்களிக்கவில்லை... உள்ளத்து அழகுக்காகவும்தான் என்பதைப் புரிந்து கொண்டேன்," என்றார்.
சான்ட்ரா புல்லக்கின் புதுப் பட ஷூட்டிங்கில் ட்ரக்கில் பாய்ந்த பஸ் - 11 பேர் படுகாயம்
சான்ட்ரா புல்லக் நடித்த புதிய படத்தின் படப்பிடிப்பின்போது, செட்டுக்குள் பஸ் பாய்ந்து எதிரில் இருந்த ட்ரக்கில் மோதியது. இந்த விபத்தில் 11 பேர் படுகாயமடைந்தனர்.
சான்ட்ரா புல்லக் தி ஹீட் எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் எப்பிஐ ஏஜென்டாக, ஆனால் காமெடி ரோலில் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் பாஸ்டன் நகரில் நேற்று தொடங்கியது. காலை 9.30 மணிக்கு ஷூட்டிங் தொடங்கியதும், 60 நீள பயணிகள் பஸ் ஒன்று வேகமாக செட்டுக்குள் பாய்ந்து வந்தது. படப்பிடிப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த ட்ரக்கின் மீது வேகமாக பஸ் மோதியது.
இதில் 11 பேர் காயமடைந்தனர். அவர்களில் 6 பேர் பஸ்ஸிலிருந்த பயணிகள். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து பாஸ்டன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னைவாசியாகிறார் 'லாலேட்டன்'!
பெரும்பாலான மலையாள நடிகைகளுக்கு மட்டுமல்ல, நடிகர்களுக்கும் சென்னையில் வீடு உள்ளது. குறிப்பாக மம்முட்டி, மோகன்லால், ஜெய்ராம் உள்ளிட்டோருக்கு சென்னையில் பங்களாக்கள் உள்ளன.
மம்முட்டியும் ஜெயராமும் சென்னைவாசிகள்தான். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சென்னையில் குடும்பத்தோடு தங்கிவிடுவார்கள். மம்முட்டியின் மகன் படித்ததெல்லாம் சென்னையில்தான்.
லாலேட்டன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் மோகன்லாலுக்கு சொந்த வீடு இருந்தாலும், அவர் அடிக்கடி வருவதில்லை. ஆனால் இனி சென்னையில் நிரந்தரமாக குடியேறப் போகிறாராம்.
தற்போது திருச்சூரில் உடல் புத்துணர்வுக்காக ஆயுர்வேத சிகிச்சை பெற்று வரும் மோகன்லால், சிகிச்சை முடிந்ததும் ஒலிம்பிக் போட்டிகளை காண லண்டன் செல்கிறார்.
ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு கொச்சியில் உள்ள தன் வீட்டை காலி செய்துவிட்டு சென்னையில் உள்ள தன் பங்களாவில் நிரந்தரமாகக் குடியேறப் போகிறார்.
ஜெமினிக்கு செக் வைக்கும் 'புலி'!
துப்பாக்கி சண்டை இன்னும் தீவிமடைஞ்சிருக்கு... முதலில் தம் போஸ்டருக்கு பிரச்சினை வந்து, அது ஓய்ந்த கையோடு டைட்டிலுக்கு மோதல் வந்தது.
கள்ளத் துப்பாக்கி படக்குழுவினர் போட்ட வழக்கால், விஜய்யின் துப்பாக்கி தலைப்புக்கே தடை வந்துவிட்டது.
ஆனாலும் கள்ளத்துப்பாக்கி எங்க நல்ல துப்பாக்கியை என்ன செய்யும்? என முஷ்டியை மடக்கி களமிறங்கியுள்ளார் கலைப்புலி தாணு.
உண்மையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் ஜெமினி நிறுவனம்தானாம். கலைப்புலி பர்ஸ்ட் காப்பி அடிப்படையில்தான் தயாரிக்கிறாராம்.
படத்தயாரிப்புக்கென்று ஆரம்பத்தில் ஜெமினி கொடுத்த தொகைக்கான செக் வங்கியில் செல்லாமல் போக, சட்டென்று தன் பணத்தையே முதலீடு செய்து முழு தயாரிப்பாளரானார் தாணு.
இப்போது படம் நன்றாக வந்திருப்பதால், மீண்டும் படத்துக்கு ஜெமினி சொந்தம் கொண்டாட, தயாரிப்பு செலவுத் தொகையை எண்ணி வைத்துவிட்டு வாங்கிட்டுப் போங்க என்றாராம் தாணு. அந்தத் தொகை, ஜெமினி திட்டமிட்டதைவிட மிக அதிகமாம்.
தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தரலாமா என்று யோசித்திருக்கிறது ஜெமினி. ஆனால் அங்கே முக்கிய பதவியில் இருப்பவரே தாணுதானே... சங்கத் தலைவர் எஸ்ஏசி மகன் விஜய் படம் வேறு.
விஷயத்தைக் கேள்விப்பட்ட சங்க நிர்வாகிகள் பலரும், 'நல்லா வேணும்யா. எத்தனை இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டாங்க. இப்ப படட்டும். தாணு பக்கம்தான் நியாயம். படத்தை அவருக்கே கொடுத்துட்டுப் போகட்டும் ஜெமினி," என்று கூற ஆரம்பித்திருப்பதை கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறது ஜெமினி.
எம்டிவிக்கு போட்டியாக டிடியிலும் ராக் ஷோ!
எம்.டிவிக்கு போட்டியாக டிடியில் பிரைம்டைம்மில் இந்த இசை நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளனர். அதில் நாட்டுப்புற பாடல்களும், பாப் பாடல்களும் இடம்பெறப் போகின்றனவாம்.
சேட்டிலைட் சேனல்களின் வருகைக்கு முன்னர் தூர்தர்சன் மட்டும்தான் இந்திய மக்களுக்கான தொலைக்காட்சி. அதில் புதன்கிழமையும், வெள்ளிக்கிழமையும் ஒளிபரப்பாகும் சித்ரஹார், சித்ரமாலா போன்றவைகளை பார்ப்பதற்காக கூட்டம் கூட்டமாக திரண்டிருப்பார்கள். 80, 90 களில் டிடியின் ஆதிக்கம்தான் கோலோச்சியிருந்தது.
ஆனால் சன் தொடங்கி நூற்றுக்கணக்கான சேட்டிலைட் சேனல்களினால் தூர்தர்சனை பார்ப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையத்தொடங்கியது. இன்றைக்கும் தூர்தர்சனை மட்டுமே பார்க்கும் பார்வையாளர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் சேட்டிலைட் சேனல்களின் தரத்திற்கு இணையாக போட்டி போட்டுக்கொண்டு அவர்களால் நிகழ்ச்சியை தரமுடியவில்லை என்பதுதான் வேதனையான உண்மை. இருப்பினும் புதிதாக தற்போது புதிய இசை நிகழ்ச்சி ஒன்று டிடியில் ஒளிபரப்பாக உள்ளது.
கோக் ஸ்டூடியோ இந்த இசை நிகழ்ச்சியை தயாரித்து அளிக்க உள்ளது. கோக் ஸ்டூடியோ ஏற்கனவே எம்டிவியில் இந்த நிகழ்ச்சியை தயாரித்து வழங்கி வருகிறது. அது இனிமேல் டிடியிலும் வரப் போகிறது.
இசைநிகழ்ச்சியில் உஷா உதூப், மாஸ்டர் சலீம், சவான்கான், ஹரி ஷுக்மணி, போன்ற பிரபலங்கள் பங்கேற்றுப் பாட உள்ளனர். டிடியில் இந்த நிகழ்ச்சி சனிக்கிழமை தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று கோக் ஸ்டூடியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதேபோல் டிடி பொதிகை டிவியில் சேட்டிலைட் சேனலுக்குப் போட்டியாக எப்போது புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப போகிறார்களோ என்பது அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அம்மா கேரக்ட்ரா? அலறும் தேவதர்ஷினி
அத்திப்பூக்கள் தொடர் ஆயிரம் எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. பாசமான அம்மாவாக நடித்துவரும் தேவதர்சினியை நிறைய இயக்குநர்கள் சினிமாவில் ஹீரோவிற்கு அம்மாவாக நடிக்க அழைப்பு விடுக்கிறார்களாம்.
சீரியலில் சீரியஸாக நடித்தாலும் காமெடி கதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார் தேவதர்ஷினி. காஞ்சனா படத்தில் காமெடியான அண்ணியாக வந்து அனைவரையும் கலகலப்பூட்டியவர் இப்போது சன் தொலைக்காட்சியில் சண்டே கலாட்டா நிகழ்ச்சியின் மூலம் காமெடி நிகழ்ச்சியில் நடித்து வருகிறார்.
சினிமா, சீரியல் இரண்டுமே இரண்டு கண்கள்தான் என்று கூறும் தேவதர்ஷினி காமெடி நடிகை என்ற ஒரு இமேஜ் மட்டுமே தனக்கு வேண்டாம் என்று கூறுகிறார். அதனால்தான் காஞ்சனாவிற்கு பிறகு அதே மாதிரியாக வந்த பல வாய்ப்புகளை மறுத்துவிட்டாராம்.
சினிமாவில் ஹீரோவிற்கு அம்மாவாக நடிக்க வரும் வாய்ப்புகளுக்கும் நோ சொல்லிவிடுகிறாராம். இப்போது நடித்து வரும் அக்கா, அண்ணி கதாபாத்திரங்கள் வாய்ப்பு பறிபோய்விடும், தவிர சீரியல்களில் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்பதனால்தான் அம்மா ரோல்களில் நடிக்க மறுத்துவிடுவதாகவும் காரணம் கூறியுள்ளார்.
அத்திப்பூக்கள் தொடரில் பாசமான அம்மாவாக நடித்து வரும் தேவதர்ஷினி நிஜவாழ்க்கையில் பொஸசிவ் அம்மாவாம். கணவர் குழந்தைகளுக்காக அதிக நேரம் செலவிடவேண்டும் என்பதற்காகவே நிறைய வாய்ப்புகளை ஒத்துக்கொள்வதில்லையாம்.
பில்லா 2 புக்கிங்... ஒரு வாரம் ஃபுல்.. முதல் ஷோ டிக்கெட் விலை ரூ 650!!
ரஜினி - கமல் என்ற வரிசைக்கு அடுத்த நடிகர்களில் நல்ல ஓபனிங் என்றால் அது அஜீத் படத்துக்குதான்.
ப்ளாப் படமாக இருந்தாலும் அஜீத் படத்துக்கு முதல் 5 நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடுவது வழக்கம்.
மங்காத்தா என்ற வெற்றிக்குப் பிறகு அஜீத் நடிப்பில் வரும் படம் பில்லா 2. இந்தப் படத்தில் அஜீத், யுவன் சங்கர் ராஜா தவிர, வேறு தெரிந்த முகங்கள் இல்லை.
இயக்குநர் சக்ரிக்கு ஒரு வகையில் இதுதான் முதல் படம். இதற்கு முன் அவர் உன்னைப் போல் ஒருவனை இயக்கினாலும், அதில் கமலின் பங்களிப்பு எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.
நாயகிகள் பார்வதி ஓமனக்குட்டன், ப்ருனா அப்துல்லா இருவருக்குமே இது முதல் படம். எனவே அவர்களால் படத்துக்கு பெரிய பலன் கிடையாது.
இருந்தும் அஜீத் படம் என்ற ஒரே காரணத்துக்காக சென்னை திரையரங்குகளில் பில்லா 2 க்கு ஒரு வாரத்துக்கான புக்கிங் முடிந்துவிட்டது.
பல இடங்களில் ப்ளாக்கில் ரூ 500 வரை இந்தப் படத்துக்கு டிக்கெட் விற்கப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு அரங்கில் கவுன்டரிலேயே 650 ரூபாய்க்கு முதல் காட்சிக்கான டிக்கெட் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பிக் பிரதர் ரியாலிட்டி ஷோவில் டீனா உப்பலுக்கு அவமரியாதை
பிக் பிரதர் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற மிஸ் இந்தியா - யுகே 2012 போட்டியில் பட்டம் வென்ற டீனா உப்பல்க்கு அவமரியாதை கிடைத்துள்ளது. அவருடன் பிக்பிரதர் வீட்டில் தங்கிய சக ரூம்மேட் கானர் மெக்இன்டையர் அவரை அவமரியாதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சேனல் 5 தொலைக்காட்சி நடத்தும் பிக் பிரதர் ரியாலிட்டி ஷோவில் பிரபலங்கள் பங்கேற்கின்றனர். அவர்களை ஒருவீட்டில் தங்கவைத்து அவர்களின் நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புவதுதான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.
இந்த நிகழ்ச்சியின் சுவரஸ்யத்திற்காகவும் டிஆர்பிஐ அதிகரிக்கவும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கிளுகிளுப்பான விசயங்களை இதில் புகுத்துகின்றனர். அதேபோல் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களை அவமரியாதையாக நடத்துவது அவர்களை அழவைப்பது போன்ற பல்வேறு நிகழ்வுகளை நடத்துகின்றனர். பிக்பிரதர் 13வது சீசனில் பங்கேற்ற டீனா உப்பல்க்கு அதுபோன்ற ஒரு அவமரியாதை நடந்துள்ளது.
ஏற்கனவே 2007ம் ஆண்டு இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஷில்பா ஷெட்டியை அவருடன் பங்கேற்ற ஜேட்கூடி இனவெறியை தூண்டும் விதமாக பேசி அவமானப்படுத்தினார் அதனால் ஷில்பாவிற்கு பார்வையாளர்களின் ஓட்டுக்கள் அதிகம் விழுந்தன நிகழ்ச்சியில் அவரும் வெற்றி பெற்றார்.
தற்போது மிஸ் இந்தியா - யுகே பட்டம் வென்ற டீனா உப்பல் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அவரை அதே வீட்டில் தங்கிய சக பங்கேற்பாளர் அவமரியாதை தரக்கூடிய வார்த்தையால் பேசியுள்ளார். இதனையடுத்து டீனா உப்பால் தன்னை அவமானப்படுத்தியவர் மீது பிக்பிரதர் நிர்வாகத்தில் புகார் அளித்தார். அதன் எதிரொலியாக அவமரியாதை செய்த நபரை பிக் பிரதர் தயாரிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். இதுவரை 1108 புகார்கள் பிக்பிரதர் நிகழ்ச்சியில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எனக்குள்ளே போராட்ட குணம் இருக்கு – ராதிகா
மீடியா உலகில் ‘போல்டு அன்டு பியூட்டிஃபுல்' என்ற வார்த்தைக்கு சரியான பொருத்தம் ராதிகா என்பார்கள். கிழக்கே போகும் ரயிலில் தொடங்கிய சினிமா பயணம் சின்னத்திரையில் செல்லமே வரை தொடர்கிறது. ராடான் மீடியா நிர்வாக இயக்குநர், சினிமா நடிகை, சீரியல் கிரியேட்டிவ் ஹெட் என பன்முகத்திறமையில் ஜொலித்துக்கொண்டிருக்கும் ராதிகா சரத்குமாரின் வெற்றிகரமான பயணம் பற்றி அவரிடமே கேட்டுத்தெரிந்து கொள்வோம்.
சினிமா உலகில் அடி எடுத்து வைத்து பரபரப்பான நடிகையாக பெயரெடுத்து பின்னர் சீரியல் உலகில் வாழ்க்கையை தொடங்கினேன். சித்தி முதல் தயாரிப்பு. சித்தி, அண்ணாமலை, அரசி போன்ற தொடர்கள் என்னை மையப்படுத்தியே இருந்தன. இப்போதைய செல்லமே தொடர் ஒரு குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
சாதாரண குடும்பங்களில் உள்ள கஷ்ட நஷ்டங்களைப் பாசப் பிரச்னைகளோடு சொல்கிற கதை. இன்றைய காலகட்டத்தில் கூட்டு குடும்ப வாழ்க்கையின் பெருமையை உணர்த்துவதாக இருக்கும். உயிருக்கு உயிரான நண்பர்கள்கூட சொத்துக்கு ஆசைப்பட்டு எதிரியாகிவிடுகிறார்கள். உறவுகள் பிரிந்தால் அந்தக் குடும்பம் எப்படித் தத்தளிக்கும் என்பதைச் சொல்லியிருக்கிறோம்.இந்த தொடரில்தான் முதன் முறையாக என்னோடு சேர்ந்து எனக்கு அண்ணனாக ராதாரவி நடித்திருக்கிறார்.
எனக்கு நான் எடுத்துக் கொண்ட எல்லா வேடங்களும் பிடிக்கும், அதை நான் ரசித்துப் பண்ணுவதால். "செல்வி' மூணு வருஷம் பண்ணுனேன். "அரசி' ரெண்டரை வருஷம் பண்ணுனேன். ரெண்டும் வித்தியாசம்தான். நேரம் கிடைக்கும்போது பசங்க கூடதான் இருக்கேன். அவங்க ஹோம் ஒர்க் பார்ப்பது, ஸ்கூல் பிரச்னைகளைப் பற்றிப் பேசுவது இதற்கே நேரம் போய்விடுகிறது.அப்புறம் நான் பிஸினஸைப் பார்க்கணும். தயாரிப்பைப் பார்க்கணும். நடிப்பைப் பார்க்கணும். பசங்களைப் பார்க்கணும். கணவரைப் பார்க்கணும். எல்லாம் இருக்கே. அதனால் ஒரு சீரியலுக்கு மேல் நடிக்கிறது ரொம்ப கஷ்டமான வேலை.
இயல்பிலேயே எனக்குள்ளே போராட்ட குணம் இருப்பதால் தினசரி இரவு 9.30 மணியை கடந்த 10 ஆண்டுகளாக என்னால் தக்கவைத்துக் கொள்ள முடிகிறது. இதை கஷ்டம் என்று சொல்ல முடியாது. தினம் ஒரு பிரச்னையை உருவாக்கி அதற்கு எதிர்பார்ப்பு உருவாக்க நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. சில சமயம் மிகப்பெரிய சிக்கல்கள் எல்லாம் வரும். அதையெல்லாம் தாங்கி சமாளிக்க வேண்டியதுதான்.
நான் நினைக்கிறது சொல்றது எல்லாமே சீரியல் மூலமா சொல்லிடுறேன். அடிப் படையில் எனக்கு "நீ அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும்' என்று அட்வைஸ் பண்ணுவதெல்லாம் பிடிக்காது.எந்தத் துறையில் இருந்தாலும் குடும்பத் தலை வியா இருந்தாலும் அல்லது வேலைக்குச் சென்றாலும் சமையல்காரியாக இருந்தாலும் எந்த இடத்திலும் உறுதியாக இருந்தோம் என்றால் நம்மால் சாதிக்க முடியும்.
அதேபோல் கீழே விழுந்தாலும் டக்குன்னு எழுந்திருச்சி நடக்க வேண்டும். உருண்டு புரண்டு அழுதுகிட்டு இருக்கமுடியாது. அதை ரொம்ப சீக்கிரமா கத்துக்கிட்டேன் என்று தனது வெற்றியின் ரகசியத்தை கூறி டிரேட் மார்க் சிரிப்பினை உதிர்த்தார் ராதிகா.