மும்பையில் நடக்கும் நடிகை ஈஷா தியோலின் திருமணத்துக்கு செக்யூரிட்டி யார் தெரியமா... சல்மான் கானுக்கு சொந்தமான டைகர்ஸ் செக்யூரிட்டி என்ற நிறுவனம்தான்.
தனக்கு நெருக்கமானவர்கள், நண்பர்களுக்கு உதவுவதில் என்றுமே முதலிடத்தில் நிற்பவர் சல்மான்.
ஈஷா தியோலின் திருமணத்தில் விவிஐபிக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், ஒரு நல்ல தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை இந்தப் பணியில் அமர்த்த திட்டமிட்டனர்.
இதுகுறித்து அறிந்ததும், சல்மான் கான் தனக்கு பாடிகார்டாக உள்ள ஷேரா என்பவரை அனுப்பியதோடு, தனது டைகர்ஸ் செக்யூரிட்டி நிறுவனத்தை இந்தப் பணிக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறிவிட்டாராம்.
இதைத் தொடர்ந்து ஷேராவும் அவரது தலைமையிலான செக்யூரிட்டிகளும் நேற்று நடந்த ஈஷாவின் சங்கீத் நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அழைப்பு இல்லாத ஒருவரையும் உள்ளே விடவில்லை. வந்திருந்த அத்தனை விவிஐபிக்களுக்கும் கோட் நம்பர் கொடுத்து, கவனித்துக் கொண்டார்களாம். சங்கீத் நிகழ்ச்சிக்கு மட்டும் 40 செக்யூரிட்டிகள் வந்திருந்தனர். திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு இன்னும் அதிக செக்யூரிட்டிகளை இறக்கப் போகிறார்களாம்!