2/14/2011 3:37:23 PM
லண்டனில் 'நண்பன்' பாடல் கம்போசிங்
2/14/2011 3:37:23 PM
பில்லி சூனியம் ஏவி தம்மை முடக்க முயற்சி:ராஜ்கிரண் பரபரப்பு புகார்!
2/15/2011 10:45:54 AM
பில்லி சூனியம் ஏவி தம்மை முடக்க முயற்சி செய்வதாக முதல் மனைவி மீது நடிகர் ராஜ்கிரண் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணியாளர் முத்துகுமார் மூலம் முதல் மனைவி பர்வஷ் பீவி ஏவியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனை முன்கூட்டியே கண்டுபிடித்து பணியாளரை நீக்கினேன் என்று ராஜ்கிரண் தெரிவித்துள்ளார். இதனையடுத்து முத்துக்குமார் நீக்கப்பட்டதால் தமக்கு எதிராக போலீசில் கொலை முயற்சி புகார் அளித்துள்ளார் என்றும் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முத்துகுமார் புகாரின் பேரில் ராஜ்கிரணிடம் போலீஸ் விசாரணை நடத்தியுள்ளது.
‘நயன்தாராவோடு ஒப்பிடாதீங்க’ மேக்னா கோபம்
2/15/2011 12:47:22 PM
'காதல் சொல்ல வந்தேன்' படத்தின் ஹீரோயின் மேக்னா கூறியது: நயன்தாராபோல இருப்பதாக என்னை அவரோடு ஒப்பிட்டு பலர் கூறுகின்றனர். அவர் தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அது உற்சாகம் அளித்தாலும் என் நடிப்பு ஸ்டைலும், அவர் ஸ்டைலும் வேறுவேறுதான். எனது நடிப்பில் எனது இயக்குனர்கள் திருப்தி அடைகிறார்கள். யாராலும் யார் இடத்தையும் நிரப்பிவிட முடியாது. தற்போது 'கள்ள சிரிப்பழகா' படத்தில் நடிக்கிறேன். சக்தி ஹீரோ. மெடிகல் காலேஜ் மாணவி வேடம் ஏற்கிறேன். இப்படத்தை நகைச்சுவை மிகுந்த ஸ்கிரிப்டாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஜீவா. காமெடி காட்சிகளில் சூழலுக்கு ஏற்ப பேசி அசத்துகிறார் சக்தி. அவருக்கு ஈடுகொடுக்க நானும் முயற்சி எடுத்து நடிக்கிறேன். தொடர்ந்து நந்தா நந்திதா, காதல் வேதம், உயர் திரு 420 ஆகிய படங்களில் நடிக்கிறேன்.
2 ஹீரோயின் கதையில் சுமித்ரா மகள்
2/15/2011 12:52:36 PM
மித் புரொடக்ஷன்ஸ் சார்பில் அமித் மோகன் தயாரிக்கும் படம், 'சீடன்'. தனுஷ், கிருஷ்ணா, அனன்யா நடிக்கின்றனர். சுப்ரமணியம் சிவா இயக்குகிறார். 'சீடன்' படத்தை பார்த்த அனன்யா, இயக்குனர் சுப்ரமணியம் சிவாவின் காலை தொட்டு வாழ்த்துபெற்றபடி 'இனிமேல் இப்படியொரு வேடம் கிடைக்குமான்னு தெரியாது' என்றாராம்.
இப்படத்தில் நடித்தது குறித்து, நிருபர்களிடம் தனுஷ் கூறியதாவது: இப்படத்தை பெண்களுக்கு குறிப்பாக, என் அம்மா, மனைவி ஐஸ்வர்யா, லதாம்மா போன்றோருக்கு சமர்ப்பிக்கிறேன். அனைவரையும் கவரும் வகையில் ஒவ்வொரு காட்சியும் ஜனரஞ்சமாக இருக்கும். இவ்வாறு தனுஷ் கூறினார்.
மாஜி மனைவி லலிதகுமாரிக்கு நன்றி கூறிய பிரகாஷ் ராஜ்
2/15/2011 1:01:36 PM
சமீபத்தில் தன் மனைவி லலிதாகுமாரியை விவாகரத்து பண்ணிவிட்டு, போனி வர்மாவைத் திருமணம் செய்திருக்கும் பிரகாஷ்ராஜ் தான் தயாரித்த பயணம் படத்தை ரிலீஸ் செய்ய பயங்கரமான கஷட்ங்களை அனுபவித்துள்ளார். இதனையடுத்து அவரது மாஜி மனைவி லலிதகுமாரி படத்தை ரிலஸ் செய்ய தனது சொத்தை விற்று பிரகாஷ் ராஜ்-க்கு உதவியுள்ளார். பின்னர் தனது 'பயணம்' பட ரிலீஸுக்காக தனது சொத்தை கொடுத்து உதவிய மாஜி மனைவி லலிதகுமாரிக்கு நன்றி கூறினார் பிரகாஷ் ராஜ்.
நடிப்பதில் எனக்கு ஆர்வமில்லை
2/14/2011 3:41:06 PM
சீடன் படம் இசையமைப்பாளர் தினாவுக்கு 50வது படம். 50வது படம் வெளிவருகையில் இன்னொரு அவதாரமும் எடுத்திருக்கிறார். அது நடிகர். தம்பி அர்ஜுனா படத்தில் தினா ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் தரப்பில் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதால் நடித்தேன். மற்றபடி நடிப்பதில் எனக்கு ஆர்வமில்லை என்பவர், என்னை ரசிகர்கள் இசையமைப்பாளராக அடையாளம் காணுவதைதான் விரும்புகிறேன் என்கிறார்.
ஈகோ இல்லாமல்,எவருடனும் சேர்ந்து நடிப்பேன்
2/14/2011 4:08:22 PM
தமிழில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முன்னணி நடிகர்கள் சேர்ந்து நடிக்கும் காலம் எல்லாம் கடந்து விட்டது. ஈகோ இல்லாமல், எவருடனும் சேர்ந்து நடிக்கும் எண்ணம் எல்லா ஹீரோக்களுக்கும் வர வேண்டும். தற்போது வளர்ந்து வரும் இளம் ஹீரோக்கள் சிலர் ஈகோ இல்லாமல், எவருடனும் சேர்ந்து நடிப்பது தமிழ் சினிமாவிற்கு நல்ல அரோக்கியத்தை தந்திருக்கிறது. அப்படி ஈகோ இல்லாமல், எவருடனும் சேர்ந்து நடிப்பேன் என்று சக நடிகர்களிடம் மச்சான் உறவை ஸ்திரப்படுத்திக் கொண்டவர் ஜீவா. சைலண்டாக முன்னேறிக் கொண்டிருக்கும் ஜீவா, இன்றைய தேதியில் அதிக படங்கள் கையில் வைத்திருக்கும் நடிகர். தற்போது இளைய தளபதி விஜய்யுடன் இணைந்து நடிக்க ஆவலுடன் இருப்பதாக ஜீவா கூறியுள்ளார். மேலும் மற்ற ஹீரோக்களுடன் சேர்ந்து நடிப்பதன் மூலம் நான் நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்கிறேன் என்று ஜீவா கூறினார்.
சிங்கமும் சிறுத்தையும் பாலிவுட் செல்கிறது!
2/14/2011 3:50:51 PM
சன் பிக்ச்ர்ஸ் கலாநிதி மாறன் வழங்கிய, சூர்யா நடித்த சிங்கம் பாலிவுட் ரீமேக் ஆகிறது. தமிழில் சூப்பர் ஹட்டான சிங்கம், இந்தியில் ரீமேக் செய்யும் போது எதிர்பார்ப்பு நூறு சதவீதமாக மாறியுள்ளது. சிங்கத்தில் சூர்யா நடித்த நரம்பு புடைக்கும் போலீஸ் ரோலை அஜய் தேவ்கான் செய்கிறார். சூர்யா அளவுக்கு ஒன்றரை டன்னில் ஓங்கி அடிக்க அஜய் தேவ்கானால் முடியுமா என்பது சந்தேகம். அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பார் என தெரிகிறது.
இதே போல் சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்து சமீபத்தில் சூப்பர் ஹிட்டான சிறுத்தை படமும் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. ஆனால் யார் ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை.