பொக்கிஷம் கண்மணியின் சூப்பர் பிஸினஸ்
கோலங்கள் என்ற சின்னத்திரை நெடுந்தொடர் மூலம் பிரபலம் ஆனவர் டைரக்டர் திருச்செல்வம். அவர் திருச்செல்வம் தியேட்டர்ஸ் என்ற பேனரில் தயாரிக்கும் பொக்கிஷம் தொடர் கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.
பொக்கிஷம் தொடரில் அன்பு, கோபம், சோகத்திற்கு இணையாக நகைச்சுவையும் உண்டாம். இந்த தொடரில் 'கண்மணி' கதாபாத்திரத்தில் நடிப்பவர் மீரா கிருஷ்ணா. இவரது கணவர் சிவகுமார் கொரியாகிராஃபராம். தன்வந்த் என்ற இரண்டு வயது பையனின் அம்மாவாம் மீரா கிருஷ்ணா. ( பார்த்தா அப்படி தெரியலையே)
சீரியல் நடிப்பு தவிர கோடம்பாக்கத்தில் 'அடிக்ட் ஆன் கெட்டிங் இன்'னு ஒரு ஷாப் வெச்சுருக்காங்கலாம். சேனல் வட்டாரங்களில் இதுதான் இப்போ ஹாட் டாபிக்.
ஷங்கரின் புதிய மெகா பட்ஜெட் படம் 'ஐ' - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தனது அடுத்த படத்துக்கு வித்தியாசமாக 'ஐ' எனப் பெயர் சூட்டியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
இந்தப் படத்தில் ஷங்கருடன் இணைபவர் விக்ரம். நாட்டின் தலையாய பிரச்சினையான தேர்தல் முறைகேடுகள் பின்னணியில் இந்தப் படம் உருவாகவிருப்பதாக சொல்லப்படுகிறது.
படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழில் 'ஐ' என்றால் ஐவர் என்று ஒரு பொருள் உண்டு. ஆங்கிலத்தில் 'நான்' என்று சொல்லலாம்.
படத்தின் நாயகியாக சமந்தா ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் படத்துக்காக அவர் மணிரத்னம் படத்தை துறந்ததோடு, மொத்தமாக கால்ஷீட்டை கொடுத்துள்ளாராம்.
விரைவில் படத்தின் பிற விவரங்களை ஷங்கர் வெளியிடவிருக்கிறார்.
இமேஜைக் காப்பாற்றிக் கொள்ள நயன்தாரா மறுத்த ரூ 2 கோடி!
பிரபு தேவாவைத் திருமணம் செய்து கொள்வதற்காக புதிய படங்களை ஒப்புக் கொள்ளாமலிருந்த நயன்தாரா, கடைசியாக ஸ்ரீராமராஜ்யம் படத்தில் சீதாவாக நடித்தார்.
அந்த வேடம் அவருக்கு புதிய அந்தஸ்தைக் கொடுத்தது என்று கூட சொல்லலாம்.
எதிர்ப்பார்த்தபடி பிரபு தேவாவுடன் நயன்தாராவின் திருமணம் நடக்காமல் போனது. இருவரும் இப்போது பிரிந்து நின்று ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி பேட்டிகள் கொடுத்து வருகின்றனர்.
காதல் முறிந்துவிட்டதால், மீண்டும் முழுவீச்சில் நடிக்க வந்துவிட்டார் நயன்தாரா. தமிழில் 3 படங்களும், தெலுங்கில் 4 படங்களும் அவர் கையில் உள்ளன. இப்போதும் அவர்தான் நம்பர் ஒன்.
இந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு தி டர்ட்டி பிக்சர் தமிழ் ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு வந்தத. சில்க் ஸ்மிதா வேடம். கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாக இருக்கும் என்று சொல்லி, சம்பளமாக ரூ 2 கோடியை ஒரே செக்காக தந்தார்களாம், படத்தின் தயாரிப்பாளர்கள்.
ஆனால் நயன்தாரா அந்த வேடத்தில் நடிக்க முடியாது என ஒரேயடியாகச் சொல்லிவிட்டாராம்.
காரணம்?
சீதாவாக நடித்து நல்ல இமேஜைப் பெற்றுள்ள தன்னால், ஐட்டம் நடிகை பாத்திரத்தில் நடித்து அந்த இமேஜக் கெடுத்துக் கொள்ள முடியாது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன், என செக்கை திருப்பிக் கொடுத்துவிட்டாராம் நயன்.
நடிகர் சிரஞ்சீவி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!!
பிரபல நடிகரும் காங்கிரஸ் எம்பியுமான சிரஞ்சீவை தேடப்படப்படும் குற்றவாளியாக அறிவித்து பரபரப்பு கிளப்பியுள்ளது ஒசூர் நீதிமன்றம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கோபிநாத் போட்டியிட்டார்.
இவரை ஆதரித்து நடிகர் சிரஞ்சீவி பாகலூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டியதாகவும், வாகனங்கள் அதிகம் வைத்திருந்ததாகவும் சிரஞ்சீவி, கோபிநாத் உட்பட 6 பேர் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் 4 பேர் சம்மனை பெற்றுக்கொண்டு கோர்ட்டில் ஆஜரானார்கள். எம்.எல்.ஏ. கோபிநாத்தும், சிரஞ்சீவியும் சம்மனையும் வாங்கவில்லை. நீதிமன்றத்தில் ஆஜராகவுமில்லை.
நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் சம்மனை வாங்காத குற்றத்திற்காக கோபிநாத்தும், சிரஞ் சீவியும் தேடப்படும் குற்றவாளிகள் என்று கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது ஒசூர் நீதிமன்றம். நீதிபதி கஜராஜ் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
எம்பிபிஎஸ் படிக்க விரும்பிய நரிக்குறவ மாணவரின் படிப்பு செலவை ஏற்ற ஜீவா!
தர்மபுரியைச் சேர்ந்த நரிக்குறவ மாணவர் ஒருவரின் எம்பிபிஎஸ் படிப்புச் செலவு முழுவதையும் தானே ஏற்பதாக நடிகர் ஜீவா அறிவித்துள்ளார்.
தருமபுரி அருகில் உள்ள வெள்ளிமலை வாழ் நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த மாணவன் ராஜபாண்டி. 12ம் வகுப்பில் இந்த மாணவன் எடுத்த மதிப்பெண்கள், 1167.
தனக்கு மருத்துவ படிப்பு எம்பிபிஎஸ் படிக்கவேண்டும் என்று ஆசை என்றும், அதற்கு நிதி உதவி வேண்டும் என்றும் ஊடகங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தான் ராஜபாண்டி.
இதைத் தெரிந்து கொண்ட முன்னணி நடிகர் ஜீவா, தானே முன் வந்து, இதற்கதான முழு செலவையும் ஏற்றுள்ளார்.
இதுகுறித்து ஜீவா கூறுகையில், “நான் டிப்ளமா வரைக்கும்தான் படித்தேன். அப்புறம் நடிக்க வந்துவிட்டேன். நான்தான் சரியாகப் படிக்கவில்லை. இந்த மாணவனையாவது படிக்க வைப்போமே என்ற எண்ணத்தில், ராஜபாண்டி பற்றி கேள்விப்பட்டு இந்த உதவியை செய்கிறேன்.
இவர் படிப்புக்கும், படித்து முடிக்கும் வரை இவருக்கு ஆகும் செலவையும் நானே செய்வதாக சொல்லியிருக்கிறேன். அதோடு ராஜபாண்டி மேற்கொண்டு எம் எஸ் படிக்க ஆசைப்பட்டாலும், படிக்கவைப்பேன். பொதுவாக ஒருகை கொடுப்பது இன்னொரு கைக்கு தெரியக் கூடாது என்று சொல்வார்கள். நான் நடிகனாக இருப்பதால் என்னைப் பார்த்து மற்றவர்களும் முன் வருவார்கள் என்றுதான் செய்தியாளர்களிடம் கூட சொல்கிறேன்,” என்றார்.
பயனாளி மாணவன் ராஜபாண்டி பேசும்போது, “என் அம்மா என்னை மிகவும் கஷ்டப் பட்டு எங்க ஆளுங்களோட குலத்தொழில் செய்துதான் படிக்க வைத்தார்கள். அவர்கள் பெயரைக் காப்பாற்றுவேன். நடிகர் ஜீவா பெயரையும் காப்பாற்றுவேன். மருத்துவர் ஆனதும், எங்கள் இன மக்களுக்கு சேவை செய்வதே என் நோக்கம்,” என்றார்.
சினிமா புகைப்படக் கலைஞர் சித்ரா சுவாமிநாதன் மரணம்!
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றிய சித்ரா சுவாமிநாதன் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 72.
‘தொப்பி சித்ரா’ என்று திரைப்படத் துறையினர் மற்றும் பத்திரிகையாளர்களால் அழைக்கப்பட்டவர் சுவாமிநாதன்.
அனைத்து கலைஞர்களுக்கும் மிக நெருக்கமானவராக இருந்தார். திரைத்துறை தொடப்பான பல அரிய புகைப்படங்கள் அவரிடம் உண்டு.
இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பிறகும், சுறுசுறுப்பாக பணியாற்றி வந்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நெருக்கமான புகைப்படக்காரர் என்ற பெருமை இவருக்குண்டு. தன்னை எப்போதும் வந்து பார்க்கும் உரிமையை சித்ரா சுவாமிநாதனுக்கு அளித்திருந்தார் சூப்பர் ஸ்டார்.
புகைப்படத் துறையில் நவீனம் புகுந்த காலகட்டத்தில், சித்ரா மட்டும் சாதாரண கேமிராவை வைத்திருப்பதைப் பார்த்த ரஜினி, வெளிநாட்டிலிருந்து நவீன கேமரா ஒன்றை வரவழைத்து தன் பரிசாகக் கொடுத்தார். வெளியில் தெரியாமல் தொடர்ந்து பல உதவிகளை சித்ராவுக்கு அவர் செய்து வந்தார்.
கமல்ஹாஸன், அஜீத் குமார் ஆகியோரிடமும் நெருக்கமாக இருந்தவர் சித்ரா. கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், இன்று மரணமடைந்தார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ஆஸ்தான புகைப்படக் கலைஞராக இருந்து வந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர்.
விஜய் பிறந்த நாள் - அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம்!
தனது பிறந்த நாளையொட்டி, அரசு மருத்துவமனையில் நாளை பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம் அளிக்கிறார் நடிகர் விஜய்.
நடிகர் விஜய் பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. நாளை காலை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு விஜய் செல்கிறார். அங்கு நாளை பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் விஜய் தங்க மோதிரம் அணிவிக்கிறார்.
இங்குதான் விஜய் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
நீலாங்கரையில் ரசிகர்களின் ரத்தான முகாம் நடக்கிறது. இலவச மருத்துவ முகாமும் நடக்கிறது. எஸ்.ஏ. சந்திரசேகரன் தொடங்கி வைக்கிறார்.
வேளச்சேரி பகுதி விஜய் ரசிகர் மன்றம் சார்பில் திருவான்மியூர் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது.
சின்மயாநகர் குழந்தை ஏசு கோவிலில் முதியோருக்கு அன்னதானம், வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன.
கொருக்குப்பேட்டை மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.
புரசைவாக்கம், கோடம்பாக்கம் பகுதி ரசிகர்களும் அந்தந்த பகுதி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குகிறார்கள்.
இந்நிகழ்ச்சிகளில் எஸ்.ஏ. சந்திரசேகரன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விஜய் மக்கள் இயக்க மாநில தலைவர் ஆனந்த், செயலாளர் ரவிராஜா, துணை தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் எல்.குமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
தூம் 3 படத்தில் ஆமிர்கானூடன் நடிக்கிறாரா ரஜினி?
நியூசிலாந்தில் சினேகா-பிரசன்னா ஹனிமூன்
சில்க் ஸ்மிதா வாழ்க்கை பாடல்
சில்க் ஸ்மிதா வாழ்க்கை பாடல்
ஓடினால் லாபம் இல்லைன்னா காந்தி கணக்கு : கே.பாலசந்தர் பேச்சு
சில்க் ஸ்மிதா வாழ்க்கை பாடல்
தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. உடல் தகனம்
நடிக்கத் தெரியாது பாடகர் கார்த்திக்
தூம் 3 படத்தில் ஆமிர்கானூடன் நடிக்கிறாரா ரஜினி?
தூம் 3 படத்தில் ஆமிர்கானூடன் நடிக்கிறாரா ரஜினி?
படம் இயக்குகிறார் விவேக்
சில்க் ஸ்மிதா வாழ்க்கை பாடல்
பெண்களின் வயிற்றில் புளியைக் கரைக்கும் ராகவி!
கண்களை உருட்டி உருட்டி வில்லத்தனம் செய்யும் அண்ணியாக திருமதி செல்வம் நெடுந்தொடரில் கலக்கி வருகிறார் நடிகை ராகவி. இவரது வில்லத்தனம் பெரும்பாலான பெண்களின் வயிற்றில் புளியை கரைக்கிறது. அண்ணி என்றாலே அச்சத்தை ஏற்படுத்தும் அளவிற்கு சைலண்ட் வில்லியாக நடித்து வரும் ராகவி தனது சீரியல் வாழ்க்கையை பற்றி சொல்கிறார் படியுங்கள்.
சினிமாவில் பெரிய நடிகையாக வர வேண்டும் என்ற கனவோடுதான் நான் இந்த துறைக்கே வந்தேன். "ராஜா கைய வைச்சா', "மருதுபாண்டி', "நட்சத்திர நாயகன்' என சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகும் சில படங்கள் தொடர்ந்தன. பிறகு, சில சினிமா வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவை எதுவும் பிடிக்கவில்லை. பிறகுதான் என் கவனம் சீரியல் பக்கம் திரும்பியது.
ஏவி.எம். நிறுவனத்தின் "சொந்தம்' சீரியல்தான் என் முதல் சீரியல். அதன் பிறகு சீரியல் நடிகையாகவே ஆகிவிட்டேன். சீரியல் நடிகைகளிடையே இப்போது போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டி, தமிழ் சீரியல் உலகை வேறு ஒரு இடத்துக்கு எடுத்துச் செல்லும்.
சீரியல் உலகம் என்றுமே பிஸியானது. சினிமா போல அது கனவுலகம் இல்லை. சினிமா பற்றிய கனவுகளுடன் வாழ்கிறவர்கள் சீரியலுக்கு வந்தால் சாதித்து விடலாம். சினிமாவை நம்பி வந்து சீரியலில் சாதித்தவர்கள்தான் இங்கு அதிகம். இன்னும் சொல்லப் போனால் பல சினிமா நடிகைகளுக்கே சீரியல்தான் இறுதி அடைக்கலமாக இருக்கிறது.
சீரியல்கள் மட்டும் இல்லையென்றால் பல சினிமா நடிகைகளின் முகங்கள் பாதி பேருக்கு மறந்து போயிருக்கும். "ஜெயம்', "பிருந்தாவனம்', "பொறந்த வீடா புகுந்த வீடா' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தாகிவிட்டது. தற்போது திருமதி செல்வத்தில் மட்டும் நடித்து வருகிறேன். இதில் ஜெயந்தி என்ற அருமையான கேரக்டர் கிடைத்திருக்கிறது. அதைச் சரியாக செய்தாலே போதும்.
நான் ஒரே நேரத்தில் நிறைய சீரியல்களில் நடிப்பதில்லை. ஒரே நேரத்தில் நிறைய சீரியல்களில் நடித்தால் வீட்டை கவனிக்க முடியாமல் போய்விடும். அதனால்தான் என் கேரியரில் நிறைய சீரியல்கள் இல்லை. இல்லையென்றால் நானும் இதுவரை 50-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து விட்டேன் என சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ள முடியும்.
இப்போதைக்கு என் குழந்தை ஜித்திசாய்தான் என் உலகம். அவனுடைய ஒவ்வொரு அசைவையும் வீடே ரசித்துக் கொண்டாடுகிறது. அவன் என்னை பார்த்து சிரிக்கும் போதெல்லாம் மனம் சொக்கிப்போகிறேன் என்று சொல்லி சிரிக்கிறார் ராகவி.
இப்ராகிம் ராவுத்தர் தலைமையிலான 'அட்ஹாக் கமிட்டி'க்கு தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில், இப்ராகிம் ராவுத்தர் தலைமையில் `அட்ஹாக் கமிட்டி' செயல்படுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், பொருளாளர் எஸ்.தாணு ஆகியோர் தொடர்ந்த சிவில் வழக்கில், "தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கும் (பெப்சி), தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே சம்பளம் தொடர்பான பிரச்சினை உள்ளது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு 24 மணி நேர நோட்டீஸ் அளித்து கூட்டப்படுகிறது என்று செயலாளர் பெயரில் அறிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், சங்கத்தின் சார்பில் தற்காலிக குழு (அட்ஹாக் கமிட்டி) அமைக்கவும், சங்க செயல்பாட்டை கவனிக்க அக்குழுவுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
தடை விதிக்க வேண்டும்
இதை எதிர்த்து நான் நோட்டீஸ் அனுப்பினேன். இந்த நிலையில் எனக்கு வந்த தந்தியில், எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் தேனப்பன், பொருளாளர் தாணு ஆகியோர் அந்த பொறுப்பில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டு 15.4.12 அன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது. சங்கத்தில் தற்காலிக குழு அமைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
தற்காலிக குழுவை அமைக்க சங்க விதிகளில் இடமில்லை. 15.4.12 அன்று பொதுக்குழு கூடவுமில்லை. எனவே தற்காலிக குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்," என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்து நீதிபதி ஆர்.சுப்பையா பிறப்பித்த உத்தரவு:
சங்கத்தின் தற்காலிக குழுவை அமைத்தது, சங்க பதிவுச் சட்டத்தின்படியோ அல்லது சங்க ஒழுங்குமுறை விதிகளின்படியோ அமையவில்லை. சங்கத்தின் நிர்வாகக் குழுவுக்கு, துணைக்குழு போன்ற குழுக்களை அமைத்துக்கொள்ள அதிகாரம் உள்ளது என்றும் சங்க விதிகளில் அதற்கு இடமுள்ளது என்றும் இப்ராகிம் ராவுத்தர் தரப்பில் வாதிடப்பட்டது.
சங்கத்தின் நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான வகையில் அப்படிப்பட்ட குழுக்களை நிர்வாகக் குழு அமைத்துக் கொள்ளலாம். ஆனால் நிர்வாகக்குழு, தனது அதிகாரத்துக்கு இணையான மற்றொரு குழுவை அமைத்துக்கொள்வதற்கு சங்க விதியில் இடமில்லை. எனவே அவர் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது.
அட்ஹாக் கமிட்டிக்கு தடை
பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு 21 நாட்கள் முன்பே நோட்டீஸ் கொடுக்கப்பட வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன. அந்தக் கூட்டத்தில் சந்திரசேகரன், தேனப்பன், தாணு ஆகியோர் நேரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களிடம் விளக்கம் எதுவும் கேட்கப்படவில்லை. இது சட்டவிரோதமானது.
தயாரிப்பாளர் சங்கத்தில் தற்காலிக குழுவை ஏற்படுத்தியது, சட்டவிதிகளுக்கு முற்றிலும் முரணானது. சங்கத்தின் விதிமுறைகளை மீறி, 15.4.12 அன்று பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது. எனவே அட்ஹாக் கமிட்டி என்ற தற்காலிக குழுவுக்கு தடை விதிக்கப்படுகிறது.