சினிமாக்காரன் சாலை... - 'நல்லா பாத்துக்கங்க, நானும் இப்போ ரவுடிதான்!'

-முத்துராமலிங்கன்

நம்ம ‘ஒன் இண்டியா'வுல ஒரு சினிமா தொடர் எழுதுறீங்களா சார்? என்று சங்கர் சார் கேட்டதும், எடுத்தவுடன் 'ராங் நம்பரோ?' என்று சற்று ஜெர்க் அண்ட் கன்ஃபியூசனானேன் என்றுதான் சொல்லவேண்டும்!

‘தொடர்' எழுதுற அளவுக்கு நாம ஒர்த்தா? என்ற கேள்வி இயல்பாகவே மனதில் எழுந்தது.

இன்றைய தேதிகளில் எங்கெங்கு காணினும் முகநூலில், ட்விட்டரில், வாட்ஸ் அப்பில் என்று சகலரும் குண்டக்க மண்டக்க என்னத்தையோ எழுத்தித் தள்ளியபடியேதான் இருக்கிறார்கள். எழுத்து என்பது எல்லோருக்கும் இருக்கும் கழுத்து மாதிரி ஆகிவிட்டது.

சினிமாக்காரன் சாலை... - முத்துராமலிங்கன் எழுதும் புதிய சினிமா தொடர்!

அதுவும் சினிமா குறித்து எழுதும்போது ஒரு கள்ளக்காதலியைச் சந்திக்கப்போகும் குறுகுறுப்புடனேயே அவர்களால் எழுதமுடிகிறது.

த்ரிஷாவின் திருமணம் தொடங்கி, வசுந்தராவின் பிட்டு செல்ஃபி ஷாட்கள் வழியாக பின் தொடர்ந்து, பெருமாள் முருகனின் 'மாதொரு பாகன்' சர்ச்சை வரை அவர்கள் எதையும் விட்டு வைப்பதில்லை.

சினிமாக்காரன் சாலை... - முத்துராமலிங்கன் எழுதும் புதிய சினிமா தொடர்!

லட்சுமி மேனன் ‘நான் திருமணம் செய்துகொள்ளப்போகும் மாப்பிள்ளை 6 அடி உயரம் இருக்கவேண்டும்' என்று பேட்டி கொடுத்தால், ‘ஏ புள்ள.. எப்ப அளவு எடுக்கப்போற? மாமன் ரெடியா இருக்கேன்' என்று கியூவில் நின்று லட்சக்கணக்கானோர் வாட்ஸ் அப்புகிறார்கள்.

‘ஐ', 'ஆம்பள' படங்கள் ரிலீஸான தேதிகளில் படம் பார்த்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சமாக இருந்தால், அவற்றிற்கு விமர்சனம் எழுதினவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சமாக இருக்கிறது.

இத்தனை லட்சம் பேர் ‘படம் பாத்து' விமர்சனம் எழுதியிருக்காங்க. அப்புறம் ஏன்யா கலெக்‌ஷன் மட்டும் பல்லிளிக்குது?' என்று தலையைப் பிய்த்துக்கொண்டே சொட்டையான தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை எழுபத்து ஏழு புள்ளி ஏழு சதவிகிதம்.

கல்லூரி படிக்கும் காலத்தில் நண்பர்கள், உறவினர் வீட்டுத் திருமணங்களில் பார்ட் டைம் போட்டோகிராஃபராக அவ்வப்போது நான் போவதுண்டு. அந்த சமயங்களில் மணமகனுக்கு அடுத்த முக்கிய நபராக போட்டோகிராஃபரைப் பார்ப்பார்கள். நம்மை நோக்கிய காதல் பார்வைகள் சிலவற்றைக் கூட அங்கே தரிசிக்க முடியும். மதுரை போன்ற ஒரு நகரில் 25 போட்டோகிராஃபர்கள் இருந்தாலே அதிகம்.

சினிமாக்காரன் சாலை... - முத்துராமலிங்கன் எழுதும் புதிய சினிமா தொடர்!

இன்று ஒரு திருமண மண்டபத்தில் அதிகாரபூர்வமான போட்டோகிராஃபர் என்பவர் எங்கே இருக்கிறார் என்பதைக்கூட கண்டுபிடிக்கமுடியாது. ஏனெனில் மண்டபத்துக்குள் செல்போன் வைத்திருப்பவர்கள் அத்தனை பேரும் போட்டோகிராஃபர்களே. மணமகன், மணமகள் துவங்கி, மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கும் ஐயர்வாள் வரை அனைவரும் செல்ஃபி எடுத்துக்கொண்டே ‘மாங்கல்யம் தந்துனானே'வை நடத்திக் கொண்டிருப்பார்கள்.

இன்றைக்கு எழுத்தாளர்கள் என்பவர்கள் நிலையும் ஏறத்தாழ இதுதான். பெயருக்கு முன்னால் ‘எழுத்தாளர்' என்று போட்டுக்கொண்டு, முகநூலில் நீங்கள் எதை எழுதினாலும் எழுத்தாளர்தான்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர் சாரு நிவேதிதா, எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர் சவடமுத்து, எழுத்தாளர் கொடுங்கையூர் ராமசாமி, எழுத்தாளர் அரகண்டநல்லூர் ராஜா என்று துவங்கி எனது முகநூல் பக்கத்தில் 4999 எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.

‘அதான் மார்க்கு 5000 பேர்வரை அனுமதித்திருக்கிறாரே, ஒரு ஆள் குறையுதே? என்று நீங்கள் கேட்கத் துடிக்கிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது.

‘அந்த ஒரு ஆள் நான் தான். இத்தனை காலமும் எழுத்தாளர் பட்டியலில் என்னை இணைத்துக் கொள்ளும் அந்த சபலம் ஏனோ எப்போதும் வந்ததில்லை.

ஆனால்... இன்று இப்படி இணையத்தில் எழுதுகிற எல்லோருமே 'எழுத்தாளர்கள்' என்று ஆகிவிட்ட பிறகு நான் மட்டும் ஒண்டி ஆளாய் மிச்சம் இருப்பானேன்?

இதோ இந்த தருணம் முதல் நானும் எழுத்தாளர்தான் என்று இந்த உலகுக்கு உரக்க அறிவிக்கிறேன். (தருணம், உரக்க? யோவ் நீ ரைட்டர் ஆயிட்ட. த்ரிஷா உனக்குத்தான்யா!)

'என்ன எழுதலாம்? என்ன வேணா எழுதலாம். திலகாஷ்ட மகிஷபந்தனம்.

இந்த இடத்தில் சிச்சுவேஷன் பாடலாக ராஜாவின் ‘என்னப் பாடச் சொல்லாத நான் கண்டபடி பாடிப்புடுவேன்' பாடல்தான் எனக்கு ஒலிக்கிறது. சும்மாவே நமக்கு வெங்கலக் குரல்?

நாளைமுதல், தமிழ்சினிமா தொடங்கி கொரிய சினிமா வரை அமேசான் காட்டு பல அரிய மூலிகை தகவல்களுடன், வாரம் ரெண்டுவாட்டி 'கண்டபடி பாடிப் புடுவேன்' என்று எச்சரித்து விடை பெறுபவர்... ‘எழுத்தாளர்' முத்துராமலிங்கன்!

குறிப்பு: கட்டுரையாளர் முத்துராமலிங்கன் தமிழ் சினிமா அறிந்த பத்திரிகையாளர், எழுத்தாளர். சொந்த ஊர் விருது நகர். முன்னணிப் பத்திரிகைகளில் செய்தியாளராக, ஆசிரியராக பணியாற்றியவர். சினேகாவின் காதலர்கள் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்போது தனது அடுத்த படமான ரூபச்சித்திர மாமரக்கிளியேவை இயக்கிக் கொண்டிருக்கிறார். 'மூவி ஃபண்டிங் எனும் மூடுமந்திரம்' என்ற குறுந்தொடர் மூலம் ஒன்இந்தியா வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர் இவர். விமர்சனத்தைக் கூட மிகுந்த நகைச்சுவையாக, சம்பந்தப்பட்டவரே ரசித்துப் படிக்கும் அளவுக்கு எழுதுவது இவர் சிறப்பு.

தொடர்புக்கு: muthuramalingam30@gmail.com

சினிமாக்காரன் சாலை -1: ஷங்கரின் 'ஐ த மெகா பொய்'!

-முத்துராமலிங்கன்

'மாதத்தின் முதல் வாரம் ஷங்கர் படம் போல் உற்சாகமாகவும், கடைசி வாரம் தங்கர் படம் போல் ஒரே அழுகாச்சியாகவும் ஆகிவிடுகிறது!'.

இது மாதச் சம்பளக்காரர்களின் மைண்ட் வாய்ஸ்.

‘ஜெண்டில்மேன்' முதல் ‘எந்திரன்' வரை மேற்படி கூற்று ஷங்கருக்கு ஓரளவு பொருந்தலாம். ‘ஐ' விவகாரத்தில் ஷங்கர் அதை இயக்கியதை நினைத்து இன்னும் பல ஆண்டுகளுக்கு வருந்தலாம்.

‘ஐ' படம் பார்த்ததிலிருந்து, இது ஷங்கர் தன்னை டிங்கரிங் பண்ணி பட்டி பார்த்துக்கொள்ள வேண்டிய சமயம் வந்து விட்டதாகவே தோன்றுகிறது.

முதலில் அவர் தான் ஒரு பிரம்மாண்ட இயக்குநர் என்று மாட்டிக் கொண்ட கோட்டை கழட்டி தூர எறியவேண்டும். அப்படி செய்தால் லட்சம் பூக்களுக்கு மத்தியில் ஒரு வீடு போன்ற தட்டையான சிந்தனைகளை எல்லாம் எழுதத் தோன்றாது.

ஒவ்வொரு படத்துக்கும் கதை 'செய்ய'த் துவங்கும் முன்பே பட்ஜெட் மட்டும் முந்தின படத்துக்கும் மேல.. அதுக்கும் மேல' என்று யோசிப்பதை நிறுத்தவேண்டும்.

சினிமாக்காரன் சாலை -1: ஷங்கரின் 'ஐ த மெகா பொய்'!

இந்த அடுத்தபட பெரும் பட்ஜெட் வியாதி ஷங்கரிடம் மட்டுமல்ல, தமிழ் சினிமாவின் பெரும்பாலான இயக்குநர்களிடம் இருக்கிறது. மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா போன்ற வெகுசிலர் மட்டுமே அந்த பாவச் செயலில் ஈடுபடவில்லை.

‘ஐ... த கடைந்தெடுக்கப்பட்ட பொய்' படத்தின் பட்ஜெட்டை தயாரிப்பாளர் தரப்பில் ஆரம்பத்திலிருந்தே 180 கோடி என்றார்கள். ஷங்கர் வட்டாரங்கள் '80 கோடிதான். வியாபார தந்திரமாக தயாரிப்பாளர் அவ்வளவு பெரிய பொய்யை அவிழ்க்கிறார்' என்றார்கள்.

ஷங்கர் சொன்ன 80 கோடி என்றே எடுத்துக்கொள்வோம். 80 கோடி செலவழிக்க இந்த படத்தில் என்ன எழவு கதை இருந்தது. மக்களுக்கு தீங்கு விளைவிக்கிற விளம்பரப் படங்கள்ல விக்ரம் நடிக்க மறுத்துடுவாராம். உடனே விளம்பர நிறுவன மேனேஜரும், விக்ரமால பாதிக்கப்பட்ட இன்னும் சிலரும் அவருக்கு ‘ஐ'டொஸொமொபொட்டொமாஸ்'ங்குற ஒரு வைரசை செலுத்தி வீங்கி விகாரமா ஆக்கிடுவாங்களாம். அவர் அதுக்கும் மேல போய் அவிங்களை 'பழி வீங்கி' பழைய நிலைமைக்கு வருவாராம்?

இந்த ஒன்லைனை லட்சுமி ராமகிருஷ்ணனிடம் சொல்லி பட்ஜெட் 80 கோடி என்றால் ‘என்னம்மா இப்பிடி பண்றீங்களேம்மா?' என்று கேட்காமல் இருப்பாரா?

அடுத்த பஞ்சாயத்து, கதையில் வரக்கூடிய விளம்பரப் படங்களை ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமாங்குற மாதிரி சீனாவில் மட்டுமேதான் எடுக்கமுடியுமா? இந்தியாவில் இல்லாத அழகிய லொகேஷன்களா?

இன்னொரு பக்கம் கார்ப்பொரேட்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, ஒரு பாடல் காட்சி முழுக்க வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்கள். நூறும், இருநூறும் கொடுத்து படம் பார்க்க வருகிற ரசிகனின் நெற்றியில் பட்டை நாமம் சாத்துகிற யுக்தி இது.

இதற்கு முன்பு பல படங்களில் இந்த IN-FILM AD கள் இருப்பது சகஜம் என்றாலும் அவை கொஞ்சம் நாசூக்காக, மறைமுகமாகவே காட்டப்பட்டு வந்தன. ஷங்கர் காட்டியதோ இதுக்கும் மேல யாரும் காட்டிர முடியாது என்கிற அளவுக்கு டூஊஊமச். அவர் காட்டிய விளம்பர சமாச்சாரங்களெல்லாம் யோக்கியமான புராடக்டுகள்தான் என்பதைத் தீர்மானிப்பது யார்? அவை அப்படிப்பட்டவை இல்லை என்று யாராவது நிரூபித்தால் இந்த 80 கோடி பட்ஜெட் கதையே தண்டம் என்று ஆகிவிடாதா?

அப்புறம் உங்க கதை இலாகாவைத் தூக்கி காயலான் கடையிலதான் போடனும்ங்குற மாதிரி இருக்கு, நீங்க படத்துல வச்சிருக்குற திருநங்கைகள் சமாச்சாரம்.

‘ஊரோரம் உள்ள புளியமரத்துல...' கும்மியடிச்சி ஏற்கனவே முந்நூத்திச்சொச்ச படங்கள் வந்தாச்சே?. இந்த சமூகத்தில் மதிக்கப்பட வேண்டிய அவங்கள இப்பிடி காம இச்சை, இம்சைன்னு சித்தரிச்சி சந்தி சிரிக்க வைக்கலாமா?'

ஒர காலத்தில் சாதாரண உதவி இயக்குநராக இருந்த ஷங்கர் இன்று பல நூறுகோடிகள் சொத்துக்கு அதிபதியாகி இருக்கிறார். அது அத்தனையும் சினிமா அவருக்கு கொடுத்த சொத்து. இவருக்கு இவ்வளவு செய்த சினிமாவுக்கு அவர் என்ன செய்திருக்கிறார்?

டியர் ஷங்கர்...இதுவரை தேவைக்கும் அதிகமாக பொழுதுபோக்கு படங்களைக் கொடுத்து ஜனங்களை சந்தோஷப்படுத்திருக்கிறீர்கள். மெஸேஜ் என்ற பெயரில் நீங்கள் செய்த மசாஜ்களை எல்லாம் யாம் நன்றாய் அறிவோம். போகட்டும் இப்போ மேட்டருக்கு வருவோம்.

எல்லாவற்றிற்கும் வரலாறு என்று ஒன்று உண்டு. அந்த வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள் மட்டுமே இடம் பெறுவார்கள். நீங்கள் இதுவரை அப்படி எதையாவது பதித்திருக்கிறீர்களா என்று கேட்டால் நீங்களே இல்லை என்றுதான் சொல்லுவீர்கள்.

தமிழ் சினிமாவின் பத்துப் படங்கள் வேண்டாம் நூறு படங்கள் என்று வைத்துக்கொண்டாலும் அதில் உங்கள் படம் ஒன்றுக்காவது அதில் இடம் பெற தகுதி உண்டா? மற்றவர்களை விடுங்கள் உங்கள் சிஷ்யர்கள் இயக்கிய ‘காதல்' வெயில்' அங்காடித் தெரு' போன்ற ஒரு உருப்படியான, மனதை உருக்கச் செய்கிற ஒரு படத்தையாவது இயக்கியிருப்பீர்களா?.

உங்கள் 80 கோடி பட்ஜெட் ‘ஐ' த பொய்'க்குப் பதிலாக 80 ‘காதல், 50 வெயில், 30 அங்காடித்தெரு' படங்கள் எடுத்திருக்க முடியும்.

முந்தின படத்தின் பட்ஜெட்டுக்கும் மேல.. அதுக்கும் மேல என்று நீங்கள் மேல மேல போகும்போது, கீழ கிடக்கிற 50 உதவி இயக்குநர்களின் வாய்ப்பையும் அடிவயிற்றில் அடித்துப் பறிக்கிறீர்கள்.

உங்கள் குழந்தையிடம் ‘விமானம் வேண்டுமா, பட்டம் வேண்டுமா? என்று கேட்டுப்பாருங்கள். அது பட்டம் வாங்கிப் பரவசப்படவே விரும்பும். அப்படி பரவசப்படுத்தும் ஒரு படம், ஒரே ஒரு படம் இயக்குங்கள்.

அது ஒரு சின்ன பட்ஜெட் படமாக, 3 கோடியிலோ 5 கோடியிலோ கூட இருக்கட்டும்.

பிரம்மாண்ட இயக்குநர் என்கிற பெயர் போய் 'ஷங்கர் எ வெரி குட் THINKER' என்ற பெயருடன் கொஞ்சநாள் உலாவிப் பாருங்களேன்.

லட்சம் பூக்களுக்கு மத்தியில் ஒரு வீடு என்பதை விட, நம் வீட்டில் பூக்கும் ஒற்றை ரோஜா இன்னும் பரவசத்தை தரக் கூடியது!

முத்துராமலிங்கன் - muthuramalingam30@gmail.com

மேலும் ஒரு வாரம் தள்ளிப் போகிறதா என்னை அறிந்தால்?

மேலும் ஒரு வாரம் தள்ளிப் போகிறதா என்னை அறிந்தால்?  

இப்போது படம் முழுவதுமாக முடிந்து சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் படத்தின் வெளியீட்டை மேலும் ஒரு வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. படத்துக்கு போதுமான அரங்குகள் கிடைக்க கூடுதல் அவகாசம் தேவை என்பதால் இப்படி தள்ளிப் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேநேரம், இதுகுறித்து ஏ எம் ரத்னம் தரப்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை.

மும்பை விழாவில் அக்கா நடிகையை கண்டுகொள்ளாத ஸ்டைல் நடிகர், சுள்ளான்

மும்பை: நேற்று முன்தினம் மும்பையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட ஸ்டைல் நடிகரும் அவரின் சுள்ளான் மருமகனும் முத்த நாயகனின் மூத்த மகளை கண்டுகொள்ளவே இல்லையாம்.

முத்த நாயகனின் மூத்த மகள் ஸ்டைல் நடிகரின் மூத்த மகளின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தார். அந்த படத்தில் நடிக்கையில் ஸ்டைல் நடிகரின் சுள்ளான் மருமகனுக்கும், முத்த நாயகனின் மகளுக்கும் இடையே காதல் தீ பற்றிக் கொண்டது என்றும், இது குறித்து அறிந்த இரண்டு ஜாம்பவான்களும் காதல் ஜோடியை பிரித்து வைத்ததாகவும் பேச்சாகக் கிடந்தது.

மும்பை விழாவில் அக்கா நடிகையை கண்டுகொள்ளாத ஸ்டைல் நடிகர், சுள்ளான்

இந்த சம்பவத்தை அடுத்து தான் முத்த நாயகன் தனது நடிகை மகளை மும்பையில் வீடு பார்த்து குடியமர்த்தினார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் நடந்த விழா ஒன்றில் ஸ்டைல் நடிகர், அவரது மூத்த மகள், சுள்ளான், முத்த நாயகன், அவரது 2 மகள்கள் மற்றும் முன்னாள் மனைவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் ஸ்டைல் நடிகரும் சரி, சுள்ளானும் சரி முத்த நாயகனின் இளைய மகளுடன் சிரித்து சிரித்து பேசினார்களே தவிர அவர் பக்கத்திலேயே நின்ற அவரது அக்காவை கண்டுகொள்ளக் கூட இல்லையாம். இத்தனைக்கும் அக்கா நடிகை பக்கத்தில் இருந்து அவர்கள் பேசுவதை சிரித்தபடியே பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்படி இருந்தும் கண்டுகொள்ளவில்லையாம்.

அப்படி ஒரு ஜீவன் விழாவுக்கு வந்ததாகவே மாமனாரும், மருமகனும் நினைக்கவில்லையாம். சுள்ளானின் மனைவியும் முத்த நாயகனின் மூத்த மகளை கண்டுகொள்ளவில்லையாம். இதற்கு எல்லாம் அந்த காதல் விவகாரம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகிறது கமலின் உத்தம வில்லன்?

கமல்ஹாஸனின் நடிப்பில் உருவாகியுள்ள உத்தம வில்லன் படம் வரும் ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிப் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கடந்த ஆண்டு கமல் ஹாஸன் நடிக்க ஆரம்பித்த படம் உத்தம வில்லன். படத்தை கடந்த செப்டம்பரிலேயே வெளியிடுவதாக அறிவித்திருந்தனர்.

ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகிறது கமலின் உத்தம வில்லன்?

ஆனால் சொன்ன தேதியில் வெளியிடவில்லை. அக்டோபர், டிசம்பர் என வேறு மாதங்களில் வெளியிடப் போவதாகச் சொன்னவர்கள், கடைசியாக பிப்ரவரி மாதம் வெளியிடப் போவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் பிப்ரவரி மாதம் முழுக்க வேறு பெரிய படங்கள் வெளியாகக் காத்திருப்பதால், ஏப்ரல் 13-ம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. படத்தை வாங்கியுள்ள ஈராஸ் நிறுவனத்தின் கைவசம் வேறு பெரிய படங்கள் உள்ளதாலும் இந்த முடிவாம்.

ஏப்ரல் 14-ம் தேதி சித்திரைப் புத்தாண்டு என்பதால் அதையொட்டி படத்தை வெளியிடும் எண்ணமாகவும் இருக்கலாம் என்கிறார்கள் கோலிவுட்டில்.

ஷமிதாப்.. நாளை சென்னை வருகிறார் அமிதாப்!

ஷமிதாப் படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகள் தீவிரமடைந்துள்ளன. இதுவரை இல்லாத பிரமாண்ட அளவில் படத்தை வெளியிடவிருப்பதால், நாடு முழுவதும் படத்தை விளம்பரப்படுத்த செய்தியாளர் சந்திப்பு, படத்தின் சிறப்பு நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தி வருகின்றனர்.

இரு தினங்களுக்கு முன்புதான் மும்பையில் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. படத்துக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு பாராட்டு விழாவாக அது நடத்தப்பட்டது.

ஷமிதாப்.. நாளை சென்னை வருகிறார் அமிதாப்!

இந்த விழாவில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமல் ஹாஸன், ஸ்ரீதேவி என இந்திய சினிமாவின் முதல் நிலை பிரபலங்கள் பங்கேற்றனர். இதனால் படத்துக்கு மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த நிலையில் தென்னகத்தில் படத்தினை விளம்பரப்படுத்த நாளை செய்தியாளர் சந்திப்பு மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதில் அமிதாப் பச்சன், இளையராஜா, இயக்குநர் பால்கி, நடிகர் தனுஷ், நடிகை அக்ஷரா, ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் போன்றவர்கள் பங்கேற்கின்றனர். ஓஎம்ஆர் சாலையில் உள்ள சத்யபாமா பல்கலைக் கழகத்தில் மாலையில் இந்த சந்திப்பு நடக்கிறது.

ராசி இல்லை: தளபதியின் படத் தலைப்பு மாறுகிறது?

சென்னை: தளபதி நடிகர் தான் நடித்து வரும் விலங்கின் பெயர் கொண்ட படத்தின் தலைப்பை மாற்றிவிடலாமா என்ற யோசனையில் உள்ளாராம்.

ஆயுதம் படத்தை அடுத்து தளபதி நடிகர் தற்போது விலங்கின் பெயர் கொண்ட அந்த படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் நடித்து வரும் படத்தின் பெயர் ராசி இல்லை என்றும், அந்த பெயரிலோ அல்லது அந்த பெயரை இணைத்தோ வந்த படங்கள் ஓடவில்லை என்றும் பலர் இணையதளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

ராசி இல்லை: தளபதியின் படத் தலைப்பு மாறுகிறது?

இவ்வளவு ஏன் ஸ்டைல் நடிகரின் பாயும் விலங்கு படம் கூட ஓடவில்லை. இந்நிலையில் தளபதியின் படத்திற்கு இந்த பெயர் நிலைத்தால் படம் ஓடாது என்று இணையதளத்தில் சிலர் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் தளபதியின் காதுகளுக்கு செல்ல அவரோ படத்தின் தலைப்பை மாற்றிவிடலாமா என்று பலத்த யோசனையில் உள்ளாராம். இந்நிலையில் படத்தின் இயக்குனரோ தனது உதவியாளர்களை அழைத்து நீங்கள் ஒவ்வொருவரும் 100 தலைப்புகள் எழுதி வாருங்கள் என்று தெரிவித்துள்ளாராம்.

படத்தை கூட எளிதில் எடுத்துவிடலாம் போல ஆனால் தலைப்பு வைப்பதற்குள் கண்ணை கட்டுதே என்று தயாரிப்பாளர் புலம்புகிறாராம்.

திருவண்ணாமலையில் ஆட்டோவில் கிரிவலம் வந்த சந்தானம்

தனது பிறந்த நாளையொட்டி திருவண்ணாமலைக்குச் சென்ற நடிகர் சந்தானம், ஆட்டோவில் ஏறி கிரிவலம் வந்தார்.

நடிகர் சந்தானம் நேற்று தனது 35-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், பின்னர் மலையை சுற்றி கிரி வலம் புறப்பட்டார்.

திருவண்ணாமலையில் ஆட்டோவில் கிரிவலம் வந்த சந்தானம்

ஆட்டோவில் கிரிவலம் சென்ற அவர் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் இறங்கி தரிசனம் செய்தார். அப்போது முதியவர்களுக்கு அன்னதானம், போர்வைகள் வழங்கினார்.

நடிகர் சந்தானத்தைப் பார்க்க ஏராளமானோர் திரண்டுவந்தனர்.

சாதனை என்று எதுவுமில்லை! - இளையராஜா

சென்னை: ஆயிரம் படங்களுக்கு இசையமைத்துள்ளதை சாதனையாகக் கருதவில்லை. சாதனை என்று எதுவுமில்லை, என்று தெரிவித்தார் இசையமைப்பாளர் இளையராஜா.

பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் ஆயிரம் படங்கள் என்ற மைல் கல்லை தொட்டிருக்கும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, பாலிவுட் திரையுலகம் சார்பில் செவ்வாய்க் கிழமை மும்பையில் பாராட்டு விழா நடைபெற்றது.

சாதனை என்று எதுவுமில்லை! - இளையராஜா

நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகை ஸ்ரீதேவி உள்ளிட்ட இந்திய திரையுலகினர் இந்த விழாவில் கலந்துகொண்டு இளையராஜாவுக்கு புகழாரம் சூட்டினர்.

இதையடுத்து, புதன்கிழமை பிற்பகல் விமானம் மூலம் சென்னை திரும்பிய இளையராஜா, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:

ஆயிரம் படங்களுக்கு இசையமைத்துள்ளதை நான் சாதனையாகக் கருதவில்லை. என்னைப் பொருத்தவரை சாதனை என்று எதுவுமில்லை. எல்லாம் கடந்து போகக் கூடிய ஒன்றுதான். இத்தனை வருடங்களில் இத்தனை படங்களில் நான் பயணித்து வந்ததாக நினைக்கவில்லை. மற்றவர்கள்தான் என்னோடு பயணித்திருக்கிறார்கள். நான் அங்கேதான் இருக்கிறேன்.

மும்பையில் நடந்த பாராட்டு விழா என்னை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. நடிகர் அமிதாப் பச்சன் என் மீது கொண்டுள்ள பாசம் புரிந்தது. அவரே, முன் வந்து எல்லோருக்கும் அழைப்பு விடுத்ததாகச் சொன்னார்கள். அந்த விழாவுக்கு யாரெல்லாம் வருவார்கள் என்பது எனக்குத் தெரியாது. கமலும் ரஜினியும் இந்த விழாவில் கலந்துகொள்வது எனக்கு முன் கூட்டியே தெரியாது. அவர்களுடைய வருகை எனக்கு வியப்பாக இருந்தது," என்றார் இளையராஜா.

ஐ படத்தை எதிர்க்க வேண்டாம் - திருநங்கைகளுக்கு ஓஜாஸ் ரஜனி வேண்டுகோள்

மும்பை: ஐ படத்தை தயவு செய்து எதிர்க்க வேண்டாம். அந்தப் படம் திருநங்கைகளுக்கு எதிரானதல்ல என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்த ஓஜாஸ் ரஜனி.

‘ஐ' படத்தில் 'திருநங்கைகளை' அவதூறாக சித்தரித்துள்ளதாக இயக்குனர் ஷங்கருக்கு எதிராக திருநங்கைகள் அமைப்பினர் கடந்த சில தினங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, இப்படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்த ஓஜாஸ் ரஜனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஐ படத்தை எதிர்க்க வேண்டாம் - திருநங்கைகளுக்கு ஓஜாஸ் ரஜனி வேண்டுகோள்

அன்பான வேண்டுகோள்

அதில், "திருநங்கை நண்பர்களுக்கு என்னுடைய அன்பான வேண்டுகோள். ‘ஐ' படத்தின் கதை ஒரு காதல் கதை.

என்னுடைய கதாபாத்திரம்

அந்த காதலை ஒரு திருநங்கை வெளிப்படுத்துவது போன்ற கதாபாத்திரம் என்னுடையது.

புண்படுத்த அல்ல

மற்றபடி, யார் மனதையும் புண்படுத்தும் விதமாகவோ, யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டும் என்பதற்காகவோ எடுக்கப்படவில்லை.

அழகாக படமாக்கியிருக்கிறார் ஷங்கர்

என்னுடைய கதாபாத்திரத்தை ஷங்கர் ரொம்பவும் அழகாக படமாக்கியிருந்தார்.

நான் இந்தியாவில் இல்லை

நான் தற்போது இந்தியாவில் இல்லை. படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றிருக்கிறேன்.

கோபம் வேண்டாம்.. கொண்டாடுங்கள்

ஆகையால், இந்த அறிக்கையை என்னுடைய வேண்டுகோளாக ஏற்று, ‘ஐ' படத்தின் மீது எந்த கோபமும் வேண்டாம், வெற்றியை மட்டும் கொண்டாடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன், " என்று கூறியுள்ளார்.

இளையராஜா ஒரு மகான்- ரஜினிகாந்த்

இசைஞானி இளையராஜா ஒரு மகான் ஆகிவிட்டார் என்று புகழ்ந்தார் ரஜினிகாந்த்.

1000 படங்களுக்கு இசையமைத்த இளைய ராஜாவுக்கு மும்பையில் பாராட்டு விழா நடந்தது.

பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜாவுக்கு பாலா இயக்கும் ‘தாரை தப்பட்டை' படம் 1000-வது படமாகும்.

இளையராஜா ஒரு மகான்- ரஜினிகாந்த்

சென்னையில் கிடைக்காத பாராட்டு

இதற்கான பாராட்டு விழா சென்னையில்தான் நடைப் பெற்றிருக்க வேண்டும்.

மும்பையில் விழா எடுத்த பால்கி

ஆனால் இயக்குநர் பால்கி, தனது ஷமிதாப் பட இசை வெளியீட்டு விழாவை இளையராஜாவுக்கான பாராட்டு விழாவாக மாற்றினார்.

திரண்டு வந்து வாழ்த்திய பிரபலங்கள்

பாலிவுட் பிரபலங்கள் அவ்வளவு பேரையும் திரள வைத்து, இளையராஜாவை கவுரவப்படுத்தினார்.

அமிதாப் -ரஜினி -கமல்

அமிதாப் பச்சன் தலைமையில் நடந்த இந்த விழாவில், ரஜினி, கமல், ஸ்ரீதேவியும், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யா ராய், போனிகபூர், தனுஷ், அக்ஷரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குறும்புக்கார இளையராஜா

விழாவில் ரஜினி பேசுகையில், "இளையராஜாவை 1970-ல் இருந்தே தெரியும். அப்போது மிகவும் குறும்புக்காரராக இருந்தார்.

இப்போ ராஜா சாமி

இப்போது அவரிடம் பெரிய மாற்றம். உடையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவரை ராஜா சாமி என்றுதான் நான் எப்போதும் அழைப்பது வழக்கம்.

மகான் ராஜா

இன்று அவர் ஒரு மகான் போல ஆகிவிட்டார். அவரது சாதனையை யாராலும் தொட முடியாது, " என்றார்.

சினிமாக்காரன் சாலை -1: ஷங்கரின் 'ஐ த மெகா பொய்'!

-முத்துராமலிங்கன்

'மாதத்தின் முதல் வாரம் ஷங்கர் படம் போல் உற்சாகமாகவும், கடைசி வாரம் தங்கர் படம் போல் ஒரே அழுகாச்சியாகவும் ஆகிவிடுகிறது!'.

இது மாதச் சம்பளக்காரர்களின் மைண்ட் வாய்ஸ்.

‘ஜெண்டில்மேன்' முதல் ‘எந்திரன்' வரை மேற்படி கூற்று ஷங்கருக்கு ஓரளவு பொருந்தலாம். ‘ஐ' விவகாரத்தில் ஷங்கர் அதை இயக்கியதை நினைத்து இன்னும் பல ஆண்டுகளுக்கு வருந்தலாம்.

‘ஐ' படம் பார்த்ததிலிருந்து, இது ஷங்கர் தன்னை டிங்கரிங் பண்ணி பட்டி பார்த்துக்கொள்ள வேண்டிய சமயம் வந்து விட்டதாகவே தோன்றுகிறது.

முதலில் அவர் தான் ஒரு பிரம்மாண்ட இயக்குநர் என்று மாட்டிக் கொண்ட கோட்டை கழட்டி தூர எறியவேண்டும். அப்படி செய்தால் லட்சம் பூக்களுக்கு மத்தியில் ஒரு வீடு போன்ற தட்டையான சிந்தனைகளை எல்லாம் எழுதத் தோன்றாது.

ஒவ்வொரு படத்துக்கும் கதை 'செய்ய'த் துவங்கும் முன்பே பட்ஜெட் மட்டும் முந்தின படத்துக்கும் மேல.. அதுக்கும் மேல' என்று யோசிப்பதை நிறுத்தவேண்டும்.

சினிமாக்காரன் சாலை -1: ஷங்கரின் 'ஐ த மெகா பொய்'!

இந்த அடுத்தபட பெரும் பட்ஜெட் வியாதி ஷங்கரிடம் மட்டுமல்ல, தமிழ் சினிமாவின் பெரும்பாலான இயக்குநர்களிடம் இருக்கிறது. மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா போன்ற வெகுசிலர் மட்டுமே அந்த பாவச் செயலில் ஈடுபடவில்லை.

‘ஐ... த கடைந்தெடுக்கப்பட்ட பொய்' படத்தின் பட்ஜெட்டை தயாரிப்பாளர் தரப்பில் ஆரம்பத்திலிருந்தே 180 கோடி என்றார்கள். ஷங்கர் வட்டாரங்கள் '80 கோடிதான். வியாபார தந்திரமாக தயாரிப்பாளர் அவ்வளவு பெரிய பொய்யை அவிழ்க்கிறார்' என்றார்கள்.

ஷங்கர் சொன்ன 80 கோடி என்றே எடுத்துக்கொள்வோம். 80 கோடி செலவழிக்க இந்த படத்தில் என்ன எழவு கதை இருந்தது. மக்களுக்கு தீங்கு விளைவிக்கிற விளம்பரப் படங்கள்ல விக்ரம் நடிக்க மறுத்துடுவாராம். உடனே விளம்பர நிறுவன மேனேஜரும், விக்ரமால பாதிக்கப்பட்ட இன்னும் சிலரும் அவருக்கு ‘ஐ'டொஸொமொபொட்டொமாஸ்'ங்குற ஒரு வைரசை செலுத்தி வீங்கி விகாரமா ஆக்கிடுவாங்களாம். அவர் அதுக்கும் மேல போய் அவிங்களை 'பழி வீங்கி' பழைய நிலைமைக்கு வருவாராம்?

இந்த ஒன்லைனை லட்சுமி ராமகிருஷ்ணனிடம் சொல்லி பட்ஜெட் 80 கோடி என்றால் ‘என்னம்மா இப்பிடி பண்றீங்களேம்மா?' என்று கேட்காமல் இருப்பாரா?

அடுத்த பஞ்சாயத்து, கதையில் வரக்கூடிய விளம்பரப் படங்களை ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமாங்குற மாதிரி சீனாவில் மட்டுமேதான் எடுக்கமுடியுமா? இந்தியாவில் இல்லாத அழகிய லொகேஷன்களா?

இன்னொரு பக்கம் கார்ப்பொரேட்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, ஒரு பாடல் காட்சி முழுக்க வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்கள். நூறும், இருநூறும் கொடுத்து படம் பார்க்க வருகிற ரசிகனின் நெற்றியில் பட்டை நாமம் சாத்துகிற யுக்தி இது.

இதற்கு முன்பு பல படங்களில் இந்த IN-FILM AD கள் இருப்பது சகஜம் என்றாலும் அவை கொஞ்சம் நாசூக்காக, மறைமுகமாகவே காட்டப்பட்டு வந்தன. ஷங்கர் காட்டியதோ இதுக்கும் மேல யாரும் காட்டிர முடியாது என்கிற அளவுக்கு டூஊஊமச். அவர் காட்டிய விளம்பர சமாச்சாரங்களெல்லாம் யோக்கியமான புராடக்டுகள்தான் என்பதைத் தீர்மானிப்பது யார்? அவை அப்படிப்பட்டவை இல்லை என்று யாராவது நிரூபித்தால் இந்த 80 கோடி பட்ஜெட் கதையே தண்டம் என்று ஆகிவிடாதா?

அப்புறம் உங்க கதை இலாகாவைத் தூக்கி காயலான் கடையிலதான் போடனும்ங்குற மாதிரி இருக்கு, நீங்க படத்துல வச்சிருக்குற திருநங்கைகள் சமாச்சாரம்.

‘ஊரோரம் உள்ள புளியமரத்துல...' கும்மியடிச்சி ஏற்கனவே முந்நூத்திச்சொச்ச படங்கள் வந்தாச்சே?. இந்த சமூகத்தில் மதிக்கப்பட வேண்டிய அவங்கள இப்பிடி காம இச்சை, இம்சைன்னு சித்தரிச்சி சந்தி சிரிக்க வைக்கலாமா?'

ஒர காலத்தில் சாதாரண உதவி இயக்குநராக இருந்த ஷங்கர் இன்று பல நூறுகோடிகள் சொத்துக்கு அதிபதியாகி இருக்கிறார். அது அத்தனையும் சினிமா அவருக்கு கொடுத்த சொத்து. இவருக்கு இவ்வளவு செய்த சினிமாவுக்கு அவர் என்ன செய்திருக்கிறார்?

டியர் ஷங்கர்...இதுவரை தேவைக்கும் அதிகமாக பொழுதுபோக்கு படங்களைக் கொடுத்து ஜனங்களை சந்தோஷப்படுத்திருக்கிறீர்கள். மெஸேஜ் என்ற பெயரில் நீங்கள் செய்த மசாஜ்களை எல்லாம் யாம் நன்றாய் அறிவோம். போகட்டும் இப்போ மேட்டருக்கு வருவோம்.

எல்லாவற்றிற்கும் வரலாறு என்று ஒன்று உண்டு. அந்த வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள் மட்டுமே இடம் பெறுவார்கள். நீங்கள் இதுவரை அப்படி எதையாவது பதித்திருக்கிறீர்களா என்று கேட்டால் நீங்களே இல்லை என்றுதான் சொல்லுவீர்கள்.

தமிழ் சினிமாவின் பத்துப் படங்கள் வேண்டாம் நூறு படங்கள் என்று வைத்துக்கொண்டாலும் அதில் உங்கள் படம் ஒன்றுக்காவது அதில் இடம் பெற தகுதி உண்டா? மற்றவர்களை விடுங்கள் உங்கள் சிஷ்யர்கள் இயக்கிய ‘காதல்' வெயில்' அங்காடித் தெரு' போன்ற ஒரு உருப்படியான, மனதை உருக்கச் செய்கிற ஒரு படத்தையாவது இயக்கியிருப்பீர்களா?.

உங்கள் 80 கோடி பட்ஜெட் ‘ஐ' த பொய்'க்குப் பதிலாக 80 ‘காதல், 50 வெயில், 30 அங்காடித்தெரு' படங்கள் எடுத்திருக்க முடியும்.

முந்தின படத்தின் பட்ஜெட்டுக்கும் மேல.. அதுக்கும் மேல என்று நீங்கள் மேல மேல போகும்போது, கீழ கிடக்கிற 50 உதவி இயக்குநர்களின் வாய்ப்பையும் அடிவயிற்றில் அடித்துப் பறிக்கிறீர்கள்.

ஒரே ஒரு தடவை 3 கோடி, ஐந்து கோடியில் சின்ன பட்ஜெட் படம் எடுத்துதான் பாருங்களேன். உங்களை எந்த விநியோகஸ்தரும் அடிக்க வீடு தேடி வரமாட்டார்கள் என்று நான் உத்தரவாதம் தருகிறேன்!

முத்துராமலிங்கன் - muthuramalingam30@gmail.com