இந்தியாவின் முதல் நிலை டென்னிஸ் வீரர் லியாண்டர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்தவண்ணம் இருந்தன. ஆனாலும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை.
இந்தநிலையில் ராஜதானி எக்ஸ்பிரஸ் பட வாய்ப்பை ஒப்புக் கொண்ட லியாண்டர், முழு ஹீரோவாக அதில் அறிமுகமாகிறார்.
லியாண்டர் பெயஸ் ஜோடியாக நடிக்க நிறைய கதாநாயகிகள் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியாக அமீஷா படேல் தேர்வாகியுள்ளார். கஹோனா பியார் ஹை மூலம் இந்தியில் முன்னணி நடிகையானார். தமிழில் ‘புதிய கீதை’ என்ற தமிழ் படத்தில் விஜய்யுடன் நடித்தார்.
ராஜஸ்தானி எக்ஸ்பிரஸை இயக்குபவர் அசோக் கோஹ்லி.
இப்படத்தில் நடிப்பது லி்யாண்டர் கூறுகையில், “முதலில் சற்று யோசனையாகத்தான் இருந்தது. ஆனால் வாழ்க்கையில் ஒரு மாறுதலுக்காக இந்தப் படத்தை ஒப்புக் கொண்டேன். இதன் கதையும் ரொம்ப வித்தியாசமாக இருந்தது” என்றார்.
நாயகி அமீஷா பட்டேல் கூறும்போது, “எனக்கு இதில் சவாலான வேடம். படத்தின் கதை ரொம்ப நாட்களுக்கு முன்பே எனக்கு தெரியும். ஆனால் கடந்த வாரம்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். லியாண்டர் பெயஸ் இந்தப் படத்தில் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்துவார்,” என்றார்.