பிரபல நடிகை ஆர்த்தி அகர்வால் திடீர் மரணம்

‘பம்பரக் கண்ணாலே' படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமான ஆர்த்தி அகர்வால் (31) அமெரிக்காவில் திடீர் மரணம் அடைந்தார்.

1984-ல் பிறந்த ஆர்த்தி அகர்வால் அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் பிறந்தவர் ஆர்த்தி அகர்வால். 2001-ல் பாகல்பன் என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமானார். அடுத்து வெங்கடேஷ் ஜோடியாக நுவ்வு நாக்கு நச்சவ் என்ற படத்தில் நடித்தார்.

Actress Aarthi Agarwal passes away

இதன் மூலம் அவர் தெலுங்கில் பிரபல நடிகையானார்.

தமிழில் பம்பரக் கண்ணாலே படத்தின் மூலம் 2005-ல் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து தெலுங்கிலேயே நடித்து வந்தார். 2009-ல் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவுக்கே திரும்பினார்.

அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தவர், சமீபத்தில்தான் ரணம் 2 என்ற தெலுங்குப் படத்தில் மீண்டும் நடித்தார்.

உடல் நலக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அவருக்கு ஆஸ்த்மா கோளாறு என்பதால் மரணமடைந்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். இன்னொரு பக்கம், லைப்போசக்ஷன் எனும் கொழுப்பு நீக்க அறுவைசிகிச்சை செய்ததன் காரணமாகவே, மோசமான பின் விளைவுகள் ஏற்பட்டு அவர் இறந்ததாகவும் கூறுகிறார்கள்.

ஆர்த்தி அகர்வாலின் மரணம், தெலுங்கு திரையுலகை அதிர வைத்துள்ளது.

 

விளம்பரங்களில் நடிப்பதால் நடிகர்களை தண்டிக்கக் கூடாது!- நடிகர் சந்தானம் பேட்டி

மதுரை: விளம்பரங்களில் நடிப்பதால் நடிகர்களைத் தண்டிக்கக் கூடாது என்று திரைப்பட நடிகர் சந்தானம் கூறினார்.

நடிகர் சந்தானத்தின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் ஜூன் 12-ல் வெளியாகவுள்ள 'இனிமே இப்படித்தான்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் மேலும் கூறியது:

Dont punish artists for appearing in ads, says Santhanam

இந்தியாவில் வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நல்ல திரைப்படங்கள்கூட 2 வாரங்கள் மட்டுமே திரையிடக்கூடிய நிலை உள்ளது.

தமிழகத்தில் திரைப்பட ரசிகர்கள் ரசனை தற்போது மாறிவிட்டது. இதனால் திரைப்படங்களை தரமானதாகத் தயாரிக்கும் பொறுப்பு அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு குடும்பத்துடன் கண்டுகளிக்கும் வகையில் 'இனிமே இப்படித்தான்' திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம்.

ஒரு திரைப்படத்தின் வெற்றி-தோல்வியை ரசிகர்களே தீர்மானிக்கின்றனர். இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே இந்த திரைப்படத்தின் மையக் கருத்து. நான் நகைச்சுவை நடிகர், கதாநாயகன் என்ற வட்டத்திற்குள் சிக்காமல் குணச்சித்திர வேடம் அல்லது வில்லன் வேடம் கிடைத்தால்கூட நடிப்பேன். நல்ல நடிகன் எனப் பெயர் வாங்கவே ஆசைப்படுகிறேன்.

நான் தயாரித்துள்ள முதல் திரைப்படம் இது. ஒரு தயாரிப்பாளராக இது எனக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்துள்ளது. நல்ல கதை கிடைத்தால் தயாரிப்பு பணிகளைத் தொடருவேன். திரைப்படம் இயக்கும் ஆசையும் உள்ளது. விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கிறேன். அரசியலில் ஈடுபடுவது எதிர்காலத்தில் நடப்பதைப் பொருத்தே தீர்மானிக்கப்படும்.

இளைய தலைமுறை நடிகர்களிடையே போட்டி உணர்வு இல்லை. அதனால்தான் பல நடிகர்கள் ஒரே திரைப்படத்தில் நடிப்பது சாத்தியமாகியுள்ளது.

விளம்பரங்களில் நடிப்பதால் நடிகர்கள் தண்டிப்பது சரியான அணுகுமுறை அல்ல. சந்தையில் விற்பதற்கு ஏதுவான பொருள் என அரசங்கம் சான்றளித்த பிறகே அதை விளம்பரப்படுத்த விளம்பர நிறுவனங்கள் நடிகர்களை அணுகுகின்றனர். பின்னர் எப்படி இத்தகைய தவறுகளுக்கு நடிகர்கள் காரணமாக முடியும்?" என்றார் சந்தானம்.

 

பாகுபலி டப்பிங் அல்ல... ஒரு நேரடித் தமிழ்ப் படம்!

என்னதான் ட்ரைலர் பார்த்து வியந்து பாராட்டினாலும், சிலருக்கு.. ஏன் பெரும்பாலானோருக்கு பாகுபலி ஒரு தெலுங்கு டப்பிங் படம்தானே என்ற நினைப்பு இருக்கிறது.

அப்படி ஒரு நினைப்போடு இதைப் படிப்பவர்கள், இந்த கணமே அதைத் தூக்கியெறியுங்கள்.

Bahubali, a straight Tamil movie

பாகுபலி ஒரு நேரடித் தமிழ்ப் படம். ஒவ்வொரு வசனக் காட்சியையும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளுக்காகவும் இரு முறை எடுத்திருக்கிறார் எஸ் எஸ் ராஜமவுலி.

தமிழ் வடிவம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக அவர் மெனக்கெட்ட விதத்தை நடிகர் சத்யராஜ் இப்படி விவரித்தார், நேற்றைய பாகுபலி முன்னோட்டப் பட வெளியீட்டு விழாவில்.

"தயவுசெய்து, பாகுபலி ஒரு டப்பிங் படம் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். அது ராஜமவுலியின் உழைப்பை அவமதிப்பதற்கு சமம். இந்தப் படம் ஒரு நேரடித் தமிழ்ப் படம். ஒவ்வொரு வசனத்தையும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நேரடியாகப் பேசி நடித்தோம்.

தெலுங்கை விட தமிழ் வடிவம் எப்படி வரவேண்டும் என்பதில் ராஜமவுலி அத்தனை அக்கறை காட்டினார். சில காட்சிகளில் தமிழ் வசனங்கள் இப்படித்தான் வரவேண்டும் என வசனம் எழுதிய மதன் கார்க்கியிடம் கேட்டுப் பெற்றார்.

ராணாவும் பிரபாஸும் தமிழில் பேசி நடித்த படம் இது. எனவே பாகுபலி தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்க வந்திருக்கும் படம்.

இந்தப் படத்துக்கு இணையாக ஒரு படம் இனிமேல்தான் தமிழிலும் தெலுங்கிலும் வரவேண்டும். அப்படி ஒரு மகத்தான உருவாக்கம் பாகுபலி. எஸ்எஸ் ராஜமவுலி தமிழ் சினிமாவை பெருமைப்படுத்திவிட்டார்," என்றார்.

 

300 கிலோ மீட்டர் சர்வதேச சைக்கிள் போட்டி.. பங்கேற்கிறார் ஆர்யா!

ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு விளையாட்டில் ஆர்வம். அஜீத்துக்கு கார், பைக் ரேஸ் பிடிக்கும் என்றால், ஆர்யாவுக்கு சைக்கிள் ஓட்டுவது பிடிக்கும்.

படப்பிடிப்பின்போது தன்னுடைய சைக்கிளை உடனே எடுத்துச்செல்வார். இடைவெளியின் போது அதில்தான் ஊரைச் சுற்றுவார். மக்கள் அடையாளம் காண்பதற்குள் அந்த இடத்தை வேகமாகக் கடந்துவிடுவார்.

Arya to participate 300 km international cycling race

சைக்கிள் ஓட்டுவதை சில ஆண்டுகளாகவே தீவிரமாய் மேற்கொண்டு வந்த ஆர்யா, தற்போது தனது தொடர் பயிற்சி தந்துள்ள உத்வேகம் மற்றும் நம்பிக்கையின் காரணமாக சர்வதேச பந்தயங்களில் பங்கேற்க உள்ளார். அதன் முதற்படியாக தனது சர்வதேச சைக்கிள் பந்தய அணி 'ரைடர்ஸ்' லோகோவை வெளியிட்டுள்ளார்.

தனது முதல் சர்வேதேச போட்டி பற்றி ஆர்யா குறிப்பிடுகையில், "வாடேர்ன் ருன்டன் ரேஸ் என்ற பெயரில் ஸ்வீடன் நாட்டில் மோட்டாலா என்ற ஊரில் நடந்து வருகிறது இப்பந்தயம். தொடர்ந்து 50-வது வருடமாக இந்த போட்டி நடந்து வருகிறது. அபாயகரமான வளைவுகள், ஏரிகள், குளங்கள், மலைகள், சீரற்ற எதிர்காற்று என பல்வேறு சவால்களை கடந்து 300 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை 15 மணி நேரத்திற்குள் முடித்தாக வேண்டும். இதற்காக கடந்த 8 மாதங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்," என்றார்.