சூப்பர் ஸ்பீடில் துப்பாக்கி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது 'துப்பாக்கி' படம். ஆக்சன் படமான இதில் என்கவுண்‌ட்டர் ஸ்பெஷலிஸ்டாக விஜய் நடிக்கிறார். காஜல் ஹீரோயின். இந்தப் படத்தைதான் இந்தியில் அக்சய்குமாரை வைத்து ‌‌ரீமேக் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம் முருகதாஸ். உள்ளூரில் போராட்டம், வேலை நிறுத்தம் என சூழல் சூடாகிப் போனதால் பாங்காக்கிற்கு பறந்திருக்கிறது விஜய் உள்ளிட்ட துப்பாக்கி டீம்.



 

யுவனவை தொடர்ந்து செல்வராகவன் படத்தி லிருந்து ஜி.வி.பிரகாஷ் நீக்கம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
யுவன் ஷங்கர் ராஜாவை தொடர்ந்து செல்வராகவன் படத்திலிருந்து ஜி.வி.பிரகாஷும் நீக்கப்பட்டுள்ளார். செல்வராகவன் இயக்கும் படங்களுக்கு தொடர்ந்து யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வந்தார். இந்நிலையில் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை இயக்கியபோது, அதிலிருந்து யுவன் ஷங்கர் ராஜாவை நீக்கினார் செல்வராகவன். இனி சேர்ந்து படம் பண்ணுவதில்லை என இருவரும் முடிவு செய்தனர். இதற்கு, இருவருக்கும் இடையே பணப் பிரச்னை ஏற்பட்டதுதான் காரணம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தார். இனி தனது படங்களில் பிரகாஷ்தான் பணியாற்றுவார் என செல்வராகவன் தெரிவித்தார். தொடர்ந்து, 'மயக்கம் என்ன' படத்துக்கும் பிரகாஷ் இசையமைத்தார். இதையடுத்து ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் 'இரண்டாம் உலகம்' படத்தை ஆரம்பித்தார் செல்வராகவன். இதிலும் இசையமைக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.  

இந்நிலையில் இப்போது திடீரென பிரகாஷ் நீக்கப்பட்டு, ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். செல்வராகவன் விரும்பிய மெட்டுகள் கிடைக்காததால் அவர் இசையமைப்பாளரை மாற்றிவிட்டதாக கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது. இதற்கிடையை டுவிட்டரில், "ஹாரிஸ் இசையில் கார்த்திக் பாடிய பாடல் பதிவு செய்யப்பட்டது. வைரமுத்து பாடலை எழுதியிருக்கிறார். சூப்பர் மெலடியாக இந்த பாடல் உருவாகியுள்ளது" என குறிப்பிட்டுள்ளார் செல்வராகவன்.


 

சர்வதேச திரைப்பட விழாவில் ‘தெய்வத்திருமகள்’

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இயக்குனர் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'தெய்வத்திருமகள்' பெரிய வரவேற்புடன் மெகா ஹிட்டானது. படத்தில் மனவளர்ச்சி குன்றிய இளைஞன் கேரக்டரில் விக்ரம் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். இந்நிலையில் 'தெய்வத்திருமகள்' படம் ஜப்பானில் ஒசாகா என்ற இடத்தில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கிறது.


 

"3" படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் அவரது கணவரும் நடிகருமான தனுஷ் நடித்த படம் '3'. இப்படத்துக்காக அவர் பாடிய 'ஒய் திஸ் கொலை வெறிடி' பாடல் சர்வதேச அளவில் பிரபலமாகி உள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். இந்நிலையில் '3' படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் கொடுத்துள்ளது.



 

பாவனா படத்துக்கு திடீர் சிக்கல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இந்தியிலிருந்து காப்பி அடித்த படத்தில் நடித்ததாக பாவனா நடித்த படம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாலிவுட்டில் வெற்றிகரமாக ஓடிய படம் 'நோ என்ட்ரிÕ. சல்மான் கான், அனீல் கபூர், பிபாஷா பாசு, லாரா தத்தா, செலினா ஜெட்லி நடித்த படம். இப்படத்தை மலையாளத்தில் 'ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்' என்ற பெயரில் காப்பி அடித்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் ஜெயராம், ஜெயசூர்யா, பாவனா, சம்விருதா, ரீமா கல்லிங்கல் நடித்துள்ளனர். 'நோ என்ட்ரி' கதைப்படி சல்மான், அனீல்கபூர் இருவரும் திருமணம் ஆனவர்கள். பிபாஷா பாசு கால்கேர்ள். அவரை தேடி போகின்றனர். இதனால் இருவருக்கும் வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை இருவரும் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை காமெடியாக சொல்கிறது படம். இதே பாணியில் 'ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்Õ கதையும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்படம் பற்றி மும்பை தயாரிப்பாளருக்கு தகவல் போனது. இதையடுத்து அவர் தன் படத்தை அனுமதி இல்லாமல் காப்பி அடித்ததாக மலையாள தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் இதுபற்றி மலையாள தயாரிப்பாளர் தரப்பில் கூறும்போது, 'எந்த படத்தையும் பார்த்து காப்பி அடிக்கவில்லை. தமிழில் வெளியான 'சார்லி சாப்ளின்' படத்தை பார்த்த பாதிப்பில் இக்கதை உருவானது' என்று குறிப்பிட்டுள்ளார். விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கிடையில் 'ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்' படக் குழு, கோவாவில் ஷூட்டிங் நடத்தி வருகிறது.