என் பெயரில் போலி ட்விட்டர் பக்கங்கள் - சிம்பு புகார்

சென்னை: தன் பெயரில் போலியாக ட்விட்டர் பக்கங்களை உருவாக்கி செயல்படுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சிம்பு, அதுகுறித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

நடிகர்கள், நடிகைகள் பெயரில் டுவிட்டர், பேஸ்புக்கில் போலி அக்கவுண்ட்களை சிலர் தொடங்கி, அதில் சம்பந்தப்ட்ட நடிகர் நடிகைகளே நேரடியாக ஈடுபடுவது போல காட்டிக் கொள்கின்றனர்.

என் பெயரில் போலி ட்விட்டர் பக்கங்கள் - சிம்பு புகார்

ஏற்கெனவே திரிஷா, நயன்தாரா பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு, அவர்கள் புகார் செய்த பிறகு அவை முடக்கப்ட்டன.

சமீபத்தில் காமெடி நடிகர்கள் பரோட்டா சூரி, வி.டி.வி கணேஷ் பெயரிலும் மோசடி நடந்தது. தற்போது சிம்பு பெயரில் நடக்கிறது.

இதுகுறித்து சிம்பு வெளியிட்ட அறிக்கை:

ட்விட்டரில் ஐ அம் எஸ்டிஆர் என்ற பெயரில் என் அதிகாரபூர்வ கணக்கு உள்ளது. ஆனால் என் பெயரில் சில போலி ட்விட்டர் கணக்குகளும் இருக்கின்றன. ரசிகர்களும் பத்திரிகையாளர்களும் இந்த போலி கணக்கை நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

என்னைப் பற்றிய செய்திகளையும் தகவல்களையும் எனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் உடனுக்குடன் போட்டு வருகிறேன். என் பெயரில் உள்ள போலி பக்கங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

கோச்சடையான் வருது... கமல், விஷால், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் படங்கள் தள்ளி வைப்பு

ஏப்ரல் 11-ம் தேதி ரஜினியின் கோச்சடையான் வெளியாவது உறுதியானதால், அந்த மாதம் வரவிருந்த கமல், விஷால், தனுஷ், சிவகார்த்திகேயனின் படங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

வடிவேலு படமும் தள்ளிப் போடப்பட்டுள்ளது.

ரஜினியின் கோச்சடையான் படம் ஏப்ரல் 11-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, போஜ்புரி, பெங்காலி, பஞ்சாபி, ஜப்பானி. ஆங்கில மொழிகளில் ரிலீஸ் படத்தை செய்கின்றனர்.

கோச்சடையான் வருது... கமல், விஷால், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் படங்கள் தள்ளி வைப்பு

6 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகிறது இந்தப் படம். இதனால் வேறு படங்களுக்கு தியேட்டர்கள் தருவது சிரமம் என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் கமலின் விஸ்வரூபம் - 2, விக்ரமின் ‘ஐ', விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன், தனுசின் ‘வேலை இல்லா பட்டதாரி', சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே' போன்ற படங்களை ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டனர். கோச்சடையான் வருவதால் இப்படங்களின் ரிலீசை மே மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர். வடிவேலுவின் தெனாலிராமன் படத்தயும் மே மாதம் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

 

எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் - வனிதா தயாரிக்கும் புதுப்படப் பூஜை!

சென்னை: நடிகை வனிதா (விஜயகுமார்) புதிதாக தயாரிக்கும் எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்தது.

நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா. இவர் ஏற்கெனவே இருமுறை திருமணம் செய்து விவாகரத்தும் பெற்றுவிட்டார்.

எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் - வனிதா தயாரிக்கும் புதுப்படப் பூஜை!

இப்போது டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் என்பவருடன் சேர்ந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. தாங்கள் இருவரும் நெருக்கமான நண்பர்கள் என்று வனிதாவும் கூறி வருகிறார்.

இந்த நிலையில் புதிதாக எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற தலைப்பில் படம் ஒன்றைத் தயாரிக்கிறார் வனிதா.

எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் - வனிதா தயாரிக்கும் புதுப்படப் பூஜை!

இந்தப் படத்தை வனிதாவின் நண்பரான ராபர்ட்தான் இயக்குகிறார்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். சரவணன் பிள்ளை ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. முதல் காட்சியை க்ளாப் அடித்து வனிதா தொடங்கி வைத்தார்.

 

மீண்டும் புற்று நோயிலிருந்து மீண்ட நடிகை மம்தா!

மீண்டும் புற்று நோயிலிருந்து மீண்ட நடிகை மம்தா!

நடிகை மம்தா மோகன்தாஸ் புற்று நோயின் பிடியிலிருந்து மீண்டும் உயிர் தப்பியுள்ளார்.

விஷால் ஜோடியாக ‘சிவப்பதிகாரம்' படத்தில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். குரு என் ஆளு, தடையற தாக்க, குசேலன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.

மம்தாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்றார். பிறகு குணமடைந்து அந்த நோயில் இருந்து மீண்டார்.

அதன் பிறகுதான் அவர் தடையறத் தாக்க படத்திலும் நடித்தார்.

மம்தாவுக்கும், பக்ரைன் தொழில் அதிபர் பிரஜித் பத்மநாபனுக்கும் 2011-ல் திருமணம் நடந்தது. ஒரு வருடம்தான் சேர்ந்து வாழ்ந்தார்கள். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். விவாகரத்தும் பெற்றனர்.

இதையடுத்து மம்தா மோகன்தாஸ் மீண்டும் நடிக்க வந்தார். மலையாள படங்களில் நடித்து வந்த அவருக்கு மீண்டும் புற்று நோய் தாக்கியது. இதையடுத்து மருத்துவமனையில் தங்கி கீமோதெரப்பி சிகிச்சை பெற்றார். தீவிர சிகிச்சைக்குப் பின் இப்போது குணமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் மம்தா.

 

இன்று நஸ்ரியா - பகத் பாஸில் திருமண நிச்சயதார்த்தம் - ஆகஸ்ட் 21-ல் திருமணம்!!

நடிகை நஸ்ரியா - பகத் பாஸில் திருமண நிச்சயதார்த்தம் இன்று திருவனந்தபுரத்தில் நடந்தது.

ஆகஸ்ட் 21-ம் தேதி இருவருக்கும் திருமணம் நடக்கிறது.

இன்று நஸ்ரியா - பகத் பாஸில்  திருமண நிச்சயதார்த்தம் - ஆகஸ்ட் 21-ல் திருமணம்!!

தமிழ், மலையாளத்தில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் நஸ்ரியா, யாரும் எதிர்பாராத வகையில் 20 வயதிலேயே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்.

தன்னுடன் நடித்த பகத் பாஸிலுடன் (இயக்குநர் பாஸில் மகன்) தனக்கு ஏற்பட்ட காதல், திருமண் செய்து கொள்ளும் முடிவை அறிவித்தார். இதனை இயக்குநர் பாஸிலும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த நிலையில் இருவருக்கும் இன்று திருவனந்தபுரத்திலுள்ள ஒரு ஓட்டலில் நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் கலந்து கொண்டனர்.

வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி திருமணம் நடக்கும் என்றும் அறிவித்துள்ளனர்.

 

புலிவால் - விமர்சனம்

Rating:
2.5/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, சூரி, தம்பி ராமையா

இசை: என் ஆர் ரகுநந்தன்

ஒளிப்பதிவு: போஜன் கே தினேஷ்

தயாரிப்பு: ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன்

இயக்கம்: ஜி மாரிமுத்து

மலையாளத்தில் வெளிவந்த சப்பா குரிசு படத்தை புலிவாலாக்கியிருக்கிறார் புது இயக்குநர் ஜி மாரிமுத்து.

ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலைபார்க்கும் சாதாரண இளைஞன் விமல். உடன் வேலைப் பார்க்கும் அனன்யாவுடன் காதல். இவர்களின் நண்பர் சூரி. எஸ்எம்எஸ் ஜோக் ஸ்பெஷலிஸ்ட்.

பிரசன்னா ஒரு மேல்தட்டு இளைஞர். இனியாவுடன் திருமணம் நிச்சயமான பிறகும், ஒரு நாள் பொழுது போக்க ஒரு பெண் தேடுகிறார். தன் அலுவலக செகரட்டரியான ஓவியாவை கெஸ்ட் அவுஸுக்கு வரவழைத்து, செக்ஸ் வைத்துக் கொள்கிறார். அதை முழுசாக தன் ஐபோனில் வீடியோவாக பதிவு செய்து வைக்கிறார். இது புரியாமல் பிரசன்னாதான் தன் கணவன் என்கிற அளவுக்கு கற்பனை செய்து கொள்கிறார் ஓவியா. பிரசன்னாவுக்கும் இனியாவுக்கும் நிச்சயதார்த்தம் என்கிற தகவல் கிடைத்ததும், உடைந்து போகும் ஓவியா, பிரசன்னாவை ஒரு காபி ஷாப்புக்கு வரவழைத்து குமுறுகிறார்.

புலிவால் - விமர்சனம்

நீயும் ஆசைப்பட்டுத்தானே படுக்கைக்கு வந்தாய்... என தட்டிக் கழிக்கப் பார்க்கிறார் பிரசன்னா. ஆனால் தன்னை மோசடி செய்ததற்காக போலீசுக்குப் போகப் போவதாக ஓவியா கோபப்பட, அப்போது தன் செல்போனில் உள்ள அந்த பலான வீடியோவைக் காட்டி மிரட்டுகிறார் பிரசன்னா. இவ்வளவு கேவலமானவனா என்ற வெறுப்புடன் அங்கிருந்து வெளியேறுகிறார் ஓவியா... பதட்டத்தில் டேபிளைத் தள்ளிவிட்டு அவர் பின்னால் விரைகிறார் பிரசன்னா. அப்போது அந்த செல்போன் கீழே விழுந்து, அங்கு யதேச்சையாக வரும் விமல் காலடியில் கிடக்க, அதை எடுத்துக் கொள்கிறார் விமல்.

ஆனால் உள்ளே என்ன இருக்கிறதென்று அவருக்குத் தெரியாது. அட, அந்த ஐபோனை உபயோகிக்கக் கூடத் தெரியாது விமலுக்கு. ஆனால் அந்த போனைக் கொண்டு, தனது சின்னச் சின்ன வன்மங்களைத் தீர்த்துக் கொள்கிறார். ஒவ்வொரு முறை அதை கொடுத்துவிட முனையும்போதும் கொடுக்க வேண்டாம் என்ற சூழல்...

புலிவால் - விமர்சனம்

இருவருக்குமிடையிலான இந்தத் துரத்தலில், அந்த போனை நீயே வைத்துக் கொள் என விமலுக்கு அன்புடன் தருகிறார் கடைசியில் பிரசன்னா.. இடையில் என்ன நடந்திருக்கும்? என்பதுதான் கதை.

முடிஞ்சா என்னைப் பிடி பார்க்கலாம்... ரக துரத்தல் கதைதான் இது. முதல் பாதியில் அதற்கான முஸ்தீபுகள் கூட கொஞ்சம் சரியாகவே பின்னப்பட்டிருக்கின்றன திரைக்கதையில்.

ஆனால் பின் பாதியில் அந்த சேஸிங்... இன்னும்கூட சுவாரஸ்யமாக்கியிருக்கலாம். மிக மெல்லியதான கதை, அதைவிட வலுவற்ற காட்சியமைப்புகள் காரணமாக பின்பாதியில் அலுப்புத் தட்டுகிறது. பிரசன்னா போன் செய்வதும், அதை விமல் எடுக்கலாமா வேண்டாமா என யோசிப்பதுமான காட்சிகளே திரும்பத் திரும்ப வந்து போரடிக்கின்றன.

விமலுக்கு மிகக் கச்சிதமான வேடம். பயந்த சுவாபம், மேனேஜர் கொடுமையை வேறு வழியின்றி தாங்கிக் கொள்ளும் மிடில் க்ளாஸ் மனோபாவம் என இயல்பாக நடித்திருக்கிறார். அவரது காதலியாக வரும் அனன்யாவுக்கு பெரிய வாய்ப்பில்லை.

புலிவால் - விமர்சனம்

பிரசன்னாவும் தன் வேடம் உணர்ந்து நடித்திருக்கிறார். கேரக்டர்படி இவர் செய்தது மிகப் பெரிய அயோக்கியத்தனம் என்பதால் அவர் மீது எந்தக் கட்டத்திலும் இரக்கமோ பரிதாபமோ தோன்றவில்லை.

ஓவியாவுக்குள்ள ஸ்கோப் கூட இனியாவுக்கு இல்லை.

முதல் பாதியில் வரும் இரண்டு டூயட் பாடல்கள் அட்டகாசம். ஆனால் அவை பத்து நிமிட இடைவெளிக்குள் அடுத்தடுத்து வருவதுதான் வேகத் தடை. சேஸிங் காட்சிகளில் இன்னும் சிறப்பான பின்னணி இசை அமைத்திருக்கலாம்.

புலிவால் - விமர்சனம்

போஜன் கே தினேஷின் ஒளிப்பதிவு இன்னொரு சிறப்பு.

அந்தரங்க விஷயங்களை செல்போனில் படமெடுத்து வைத்துக் கொள்வது எத்தனை பெரிய சிக்கலைத் தோற்றுவிக்கும் என்பதை உணரும்படியான காட்சிகள். ஆனால் ஒரு 20 நிமிடத்தில் நச்சென்று சொல்ல வேண்டிய இந்த விஷயத்தை சீரியல் மாதிரி ஆக்கியிருப்பதுதான் மைனஸ்.

நேரமிருந்தால், ஒரு முறை பார்த்து வைக்கலாம்!

 

ஏஆர் ரஹ்மான் ஸ்டுடியோவை இழுத்து மூடச் சொல்லி அதிகாலையில் கலாட்டா செய்த சிறுவன்!

சென்னை: ஏ ஆர் ரஹ்மானின் இசைக்கூடத்தை இழுத்து மூடச் சொல்லி ஒரு சிறுவனம் உத்தரவிட்டு கலாட்டா செய்துள்ளார். அப்போது ஏ ஆர் ரஹ்மானும் அங்கிருந்திருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து ஏ ஆர் ரஹ்மானே கூறியிருப்பதாவது:

ஒரு புதிய இசை ஆல்ப பணிக்காக எனது ஒலிப்பதிவு கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அதிகாலை 3 மணி இருக்கும். எதிர்பாராத புதிய விருந்தாளியாக ஒரு சிறுவன் உள்ளே நுழைந்தான்.

ஏஆர் ரஹ்மான் ஸ்டுடியோவை இழுத்து மூடச் சொல்லி அதிகாலையில் கலாட்டா செய்த சிறுவன்!

நேராக என்னுடைய சவுண்ட் எஞ்ஜினியரிடம் சென்று ‘எல்லாவற்றையும் இழுத்து மூடுங்கள்' என்று கம்பீரமாக உத்தரவிட்டான். அவனது குரலை கேட்ட அனைவரும் திகைத்துப் போய் விட்டனர்.

குரல் வந்த திசையை பார்த்த நானும் ஒரு கணம் ஆச்சரியத்தில் பிரமித்து போய் நின்று விட்டேன். கட்டாயமாக ஏழு மணி நேரமாவது நான் உறங்கி, ஓய்வெடுக்க வேண்டும் என உபதேசித்து, என்னை கையோடு அழைத்து செல்வதிலேயே குறியாக இருந்த என் மகன் அமீன்தான் அந்த சிறுவனம். அவனைச் சமாதானம் செய்து அனுப்பி வைக்க 10 நிமிடங்களுக்கு மேல் நான் போராட வேண்டியதாகி விட்டது.

அதன் பிறகு, எல்லா பணிகளையும் நிறுத்தி விட்டு, நான் உறங்க செல்லும்படி ஆகி விட்டது. ஹும்... காலம் தான் எவ்வளவு வேகமாக விரைந்தோடுகிறது? குழந்தைகள் என்றும் குழந்தைகளாகவே இருப்பதில்லை. எனது மகன் அமீன், இன்னும் குழந்தை இல்லை என்பதை நான் உணர்ந்த தருணம் இது," என்று தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.