ஒரே நேரத்தில் திருப்பதியில் ஸ்ரேயா, ரிச்சா 'தரிசனம்' - அலைமோதிய பக்த கோடிகள்!!

Shriya Richa Have Dharshan At Thirumalai

திருமலை: நடிகைகள் ஸ்ரேயாவும், ரிச்சாவும் திருப்பதி கோவிலில் ஒரே நாளில் சாமி கும்பிட வந்தததால், உற்சாகமான ரசிகர்கள், அவர்களை முற்றுகையிட்டு தங்கள் 'பக்தியை' வெளிப்படுத்தினர்.

ஸ்ரேயா அதிகாலையில் நடக்கும் சுப்ரபாத சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். உண்டியலில் காணிக்கை செலுத்திவிட்டு வெளியில் வந்த அவரை ரசிகர்கள் மொய்த்தனர்.

அவரிடம் ஆட்டோகிராப் வாங்க முண்டியடித்தனர். ஆனால் ஸ்ரேயா யாருக்கும் ஆட்டோகிராப் போடவில்லை. நான் இங்கு சாமி கும்பிட வந்துள்ளேன்.. நீங்களும் போய் சாமி கும்பிடுங்க என்று கடுப்பாகக் கூறிவிட்டு, வேமாக காருக்குள் சென்று விட்டார்.

பின்னர் ரசிகர்களுக்கு நிகராக முண்டியடித்து வந்த நிருபர்களிடம் கூறுகையில், "திருப்பதி வெங்கடாஜலபதி எனக்கு பிடித்தமான கடவுள். ஆண்டுக்கு நான்கு தடவை இந்த கோவிலுக்கு வந்து வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.

இதுதவிர என் படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் திருப்பதிக்கு வருவேன்.

இந்த முறை தமிழ், கன்னட மொழிகளில் தயாரான சந்திரா படத்தில் நடித்துள்ளேன். இது விரைவில் ரிலீசாக இருக்கிறது. அதற்காகவே சாமி கும்பிட வந்தேன். இந்த இடத்தில் மன அமைதியை மட்டுமே எதிர்பார்க்கிறேன்," என்றார்.

அடுத்து ரிச்சா...

ஸ்ரேயா நகர்ந்த கையோடு ரிச்சா கங்கோபாத்யா வந்துவிட்டார். டபுள் தமாகா எனும் அளவுக்கு ஏக குஷியாகிவிட்டனர் ரசிகர்கள். ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் அவரை முற்றுகையிட்டதால் அவரால் கோயில் படியிறங்கக் கூட முடியவில்லை. பின்னர் போலீஸ் துணையுடன் அவர் வேகமாக கோவிலுக்குள் சென்று விட்டார்.

கோயிலுக்குப் போனால் வெளியே வராமலா போய்விடுவார் என்று வெளியில் ஏராளமானோர் காத்திருந்தனர். சாமி தரிசனம் முடிந்து வெளியில் வந்த ரிச்சாவை அனைவரும் மொய்த்துக் கொண்டனர். ஒரு அடி கூட நகரவிடவில்லை. மீண்டும் போலீஸார் துணைக்கு வந்தனர். ரசிகர்களை தெலுங்கில் திட்டி அப்புறப்படுத்தினர்.

 

கை போ சே... ஒரு வாரத்தில் ரூ 29.50 கோடி!

Kai Po Che Has Successful Rs 29 50 Cr First Week   

ரூ 12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கை போ சே என்ற இந்திப் படம் ஒரே வாரத்தில் ரூ 29.50 கோடியை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேதன் பகத்தின் 3 மிஸ்டேக்ஸ் இன் மை லைப் என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் கை போ சே. அபிஷேக் கபூர் இயக்கத்தில், சுஷாந்த் சிங் ரஜ்புத், அமித் ஷாத், ராஜ்குமார் யாதவ் நடிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.

மூன்று நண்பர்களின் வாழ்க்கைதான் இந்தப் படத்தின் மையக் கரு. 3 இடியட்ஸ் படத்தின் கதைக்கு முதல் சொந்தக்காரரான சேதன் பகத், கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் எழுதியுள்ள கதை இது.

பாராட்டுகளை மட்டுமல்ல, வசூலும் பிரமாதமாக உள்ளது இந்தப் படத்துக்கு. ரூ 12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கை போ சே, முதல் வார இறுதியில் ரூ 29.50 கோடியை வசூலித்துள்ளது.

வார இறுதி நாட்களில் ரூ 18.10 கோடியும், திங்களன்று ரூ 3.25 கோடியும், செவ்வாய்க்கிழமை 2.95 கோடியும், புதன்கிழமை 2.70 கோடியும், வியாழன்கிழமை ரூ 2.50 கோடியும் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது.

பாஸிடிவ் விமர்சனங்கள் காரணமாக இந்த வாரமும் இதே வசூல் தொடரும் என நம்புவதாக இயக்குநர் அபிஷேக் கபூர் தெரிவித்தார்.

சரி.. கை போ சே என்றால் என்ன அர்த்தம் என்றுதானே கேட்கிறீர்கள்... காத்தாடி விடும்போது, போட்டிக் காத்தாடியின் கயிறை அறுத்துவிட்டு டீல் என்று கத்துவோமே... அதுதான் கை போ சே. இது குஜராத்தி வார்த்தை. அங்கு காத்தாடி விடும்போது அடிக்கடி கேட்கும் வார்த்தைகள்தான் இந்த கை போ சே!!

 

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா - ரஜினி, கமல் பங்கேற்கிறார்கள்!

rajini kamal will attend indian cinema 100th year celeb
சென்னை: நூறாண்டு காணும் இந்திய சினிமாவைக் கொண்டாட பிரமாண்ட விழா எடுக்கிறது தமிழ் சினிமா.

இந்த விழாவில் இந்திய சினிமாவின் சாதனை நாயகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாஸன், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பிக்கிறார்கள்.

இந்திய மக்களின் உணர்வோடு இரண்டறக் கலந்த விஷயம் சினிமா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, வங்காள, ஒரியா, போஜ்புரி மொழிகளில் சினிமாக்கள் ஏராளமாக தயாராகி வருகின்றன.

இந்தியாவில் சினிமா படங்கள் உருவாக ஆரம்பித்து. 100 ஆண்டுகள் ஓடிவிட்டன.

இந்த நூற்றாண்டு விழாவை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சென்னையில் கொண்டாட முடிவு செய்துள்ளது. இதற்குக் காரணம், இன்றைக்கு சினிமா அந்த மொழி மாநிலத் தலைநகர்களில் தயாராகின்றன. ஆனால், ஆரம்பத்தில் மும்பையை விட அதிகமாக சென்னையில்தான் அனைத்து மொழி சினிமாக்களும் தயாராகின.

பெரும்பாலான இந்திப் படங்கள், சென்னை ஸ்டுடியோக்களில் உருவானது ஒரு இனிய வரலாறு. எண்பதுகளுக்குப் பிறகுதான் சென்னையிலிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு சினிமா இடம் பெயர்ந்தது.

எனவே இந்தியா சினிமாவின் நூற்றாண்டு விழாவை சென்னையில் கொண்டாடுவதே பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த விழாவுக்கு பிலிம்சேம்பர் ஏற்பாடு செய்துள்ளது.

இதுபற்றி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கல்யாண் கூறுவகையில், "இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை தென்னிந்திய சினிமா துறை தொடங்கி வைக்க வேண்டும் என்று விரும்பினோம். அதன்படி ஏப்ரல் 26, 27, 28ம் தேதிகளில் விழாவை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

விழா தொடக்கத்தில் திரைப்பட உருவாக்கம் பற்றிய பயிற்சிபட்டறை நடத்த பேசிவருகிறோம். மாலையில் நடனம், இசை உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடக்கும். கடைசி நாளன்று இந்திய சினிமாவின் முக்கியமான முகங்கள் பங்குபெறும் வகையில் விழாவை நடத்த இருக்கிறோம்.

சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டரங்கில் விழா நடைபெறும். தற்போது அங்கு சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து சரியான நேரத்தில் அரங்கம் கிடைக்க உதவுமாறு கேட்கப் போகிறோம்," என்றார்.

இந்த விழாவில் தென்னிந்திய நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், அம்பரீஷ், சிரஞ்சீவி உட்பட பலர் கலந்துகொள்கிறார்கள். அமிதாப் உள்ளிட்ட பாலிவுட் கலைஞர்களை அழைக்கும் திட்டமும் உள்ளதாம்.

 

சிலிக்கான்வேலியில் இளையராஜாவின் இன்னிசை: ஹைடெக் ரசிகர்கள் ஆரவாரம்

சான் ஓசே(யு.எஸ்): அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இளையராஜா நடத்திய இசை நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், எழுந்து போகக் கூட மறந்துபோய் ரசித்தார்கள். ஐந்தரை மணிநேரம் நடந்த இசை நிகழ்ச்சியைக் காண 12 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் வந்திருந்தனர்.

அமெரிக்காவில் முதன்முறையாக நியூஜெர்ஸி மாநிலம் நுவர்க் நகரில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து சற்று முன்பாக (வெள்ளிக்கிழமை இரவு) சிலிக்கான்வேலி என்றழைக்கப்படும் கலிஃபோர்னியா மாநிலம் பே ஏரியா, சான்ஓசே நகரில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளார் இசைஞானி இளையராஜா.

ஹெச்.பி. பெவிலியன் அரங்கில், மாலை 7.30 மணி முதல் நள்ளிரவு 12.15 மணி வரை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு பாடல்கள் இடம் பெற்றன.

ilayarajaa mesmerises 12000 odd crowd silicon valley
இசை சாம்ராஜ்யம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ, சித்ரா, ஹரிஹரன், கார்த்திக், யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி, 'நீதானே பொன் வசந்தம்' புகழ் ரம்யா (கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பேத்தி) விஜய் டிவி புகழ் சத்யன், அனிதா உட்பட பதினைந்திற்கும் மேற்பட்டவர்கள் பிரபல பிண்ணனி பாடகர்கள் பங்கேற்றனர்.

இந்தியாவிலிருந்து வந்திருந்த இடைவேளையே இல்லாமல் நின்று கொண்டே நடத்தினார். இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளி படத்தில் இருந்து கூடவே வயலின் இசைத்து வரும் பிரபாகர் உட்பட சுமார் 60 பேர் இசைத்தனர். குன்னக்குடி வைத்திய நாதனின் மகன் குமரனும் வந்திருந்து ஷெனாய் வாசித்தார்.

முப்பது நிமிடத்தில் ஓ ப்ரியா ப்ரியா

ஜனனி ஜனனி என்ற தாய் மூகாம்பிகை பாடலுடன் ஆரம்பமான நிகழ்ச்சியில், இளையராஜாவின் குரலும் தென்பாண்டிச்சீமையிலே வரை தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. எந்த இசைக்கருவிகளும் இல்லாமல் முதல் முதலாக மேடையில் ஒரு பாடலை பாட வைத்தார்.

ஏழு பாடகர்களின் குரல்களினால் மட்டுமே தேவையான இசை ஒலியையும் உருவாக்கி பாடிய அந்த பாடல் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. முன்னதாக நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் பருவமே பாடலுக்கு, இசைக் கருவிகள் இல்லாமல் தொடையில் தாளம் தட்டியே முழு பாடலையும் பதிவு செய்தவர் இளையராஜா என்பதைக் குறிப்பிட்டார்கள்.

இதயத்தை திருடாதே படத்தில் இடம்பெற்ற ஓ ப்ரியா ப்ரியா பாடலை முப்பது நிமிடத்தில் நோட்ஸ் கொடுத்து, இசையமைத்து முடித்ததை இளையராஜா நினைவு கூர்ந்த போது ரசிகர்கள் கரகோஷத்துடன் ஆர்ப்பரித்தனர்.

Ilayarajaa mesmerises 12000 odd crowd in Silicon Valley

தளபதி படத்தில் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலுக்கு வயலின்கள் இசைக்க இந்தி இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மனின் குழுவினர் வந்திருந்ததை எஸ்பிபி நினைவு கூர்ந்தார்.

பாடல் பதிவு முடிந்தவுடன் அனைத்து இசைக் கலைஞர்களும் எழுந்து நின்று கைத்தட்டி இளையராஜாவை பாராட்டியது இன்றும் பசுமையாக இருக்கிறது என்றும் நினைவு கூர்ந்தார். இருவரும் தங்கள் பால்ய நட்பை வெளிப்படுத்தும் விதமாக தோள் மீது கை போட்டுக் கொண்டும், ஒருவரை ஒருவர் ஜோக்கடித்துக் கொண்டும் இருந்தனர்.

மாசி மாசம் கேட்டு வாங்கிய ரஜினி

செண்பகமே செண்பகமே பாடல் மூலம் புகழ் உச்சிக்கு சென்ற மனோ அதைப் பாடினார். ஒரு வார்த்தையை அவர் சற்றே மாற்றி உச்சரிக்க, பாடல் பதிவில் வெவ்வேறு டேக் வாங்குவது போல், மேடையிலும் நான்கு முறை டேக் வாங்கி மனோவுக்கு விளையாட்டு காட்டினார் ராஜா.

தர்மதுரையில் இடம்பெற்றுள்ள மாசி மாசம் பாடல் உருவான கதையை சுவாராஸ்யமாக விவரித்தார். இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் வரும்' தண்ணி கருத்தருச்சு' பாடலை குறிப்பிட்டு, அதைப்போல் ஒரு பாடல் வேண்டும் என்று ரஜினி கேட்டாராம்.

பல்வேறு ட்யூன்களை போட்டுக்காட்டிய பிறகு, இறுதியில் மாசி மாசம் பாடலை கேட்டதும் ரஜினிக்கு பிடித்து போய் விட்டதாக இளையராஜா தெரிவித்தார்.

Silicon Valleyசாஃப்ட்வேர் என்றாலே நம்மூரு தானே...

சாஃப்ட்வேர்களின் உலகத் தலைநகரமாக விளங்கும் சிலிக்கான்வேலி என்றழைக்கப்படும் பே ஏரியா தமிழ், தெலுங்கு மக்களின் அதிகப்படியான எண்ணிக்கையில் தென்னிந்தியா போல் விளங்குகிறது, நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களும் தொண்ணூறு சதவீதம் சாஃப்ட்வேர் வல்லுனர்களே.

இதை நினைவு கூறும் விதமாக சொர்க்கமே என்றாலும் என்ற பாடலை பாடிய இளையராஜா, ‘சாஃப்ட்வேர் என்றாலே நம்மூரு தானே' என்ற வரிகளையும் கூடுதலாக இணைத்து பாடினார். அதைக் கேட்ட ரசிகர்கள் உற்சாகத்தின் எல்லைக்கே போய் விட்டார்கள்.

நான் ஷோமேன் அல்ல

ஆனாலும் ஆரவாரம் இல்லாமல் இசையை ரசித்து கேட்க வேண்டும் என்றே இளையராஜா வேண்டுகோள் விடுத்தார். மேலும் 'நான் ஒரு ஷோமேன் அல்ல நல்ல இசையை கொடுப்பது மட்டுமே என் பணி' என்றார்.

அவர் பத்து நிமிடம் மேடையை விட்டு சென்ற போது, மேடையை தங்கள் வசமாக்கிக் கொண்ட கார்த்திக்கும், யுவன் ஷங்கர் ராஜாவும் கூட்டத்தினரை சத்தம் எழுப்ப செய்து ஆரவாரப்படுத்தினர். ராஜா மேடையில் இருந்த மற்ற நேரம் முழுவதும் அது ஒரு இசைக் கூடமாகத்தான் தெரிந்தது. அவர் ஒரு இசை யாகம் நடத்தினார் என்று சொல்வதே சரியாக இருக்கும்.

இளமைக் காலத்திற்கு திரும்பி வந்த தம்பதியினர்

சுமார் பன்னிரண்டாயிரம் மேற்பட்ட ரசிகர்களில் பெரும்பாலானோர் தம்பதி சகிதமாக வந்திருந்தனர். குழந்தைகளை நண்பர்கள் வீட்டில் அல்லது காப்பகத்தில் விட்டுவிட்டு வந்திருப்பார்கள் போலும். அவர்கள் அனைவரும் மீண்டும் இளமைக் காலத்திற்கு சென்று வந்த அனுபவம் கண்கூடாக தெரிந்தது. நள்ளிரவு பன்னிரண்டு மணி தாண்டிய பிறகு, இளையராஜா தென்பாண்டிச் சீமையிலே பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். ஆனாலும் யாருக்கும் எழுந்து செல்ல மனமில்லை.

Silicon Valleyஎழுந்து செல்ல மனமின்றி...

கடைசியாக இன்னொரு பாட்டு என்று கோரிக்கை வைக்க ஆரம்பித்து விட்டனர். இப்போது கமா தான் வைத்துள்ளோம், மீண்டும் தொடர்வோம் என்று எஸ்பிபி சமாதானம் செய்த பிறகு தான், மனசே இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கலையத் தொடங்கியது.

டெக்னாலாஜி பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் சிலிக்கான்வேலி சமூகத்தை தன் இசையால் கட்டிப் போட்ட இசைஞானியின் இசையை விட உன்னதமான டெக்னாலஜி உலகில் வேறென்ன இருக்கு சொல்லுங்க!

-ஒன்இந்தியா ஸ்பெஷல்

 

கிஸ்… கிஸ்… விளம்பரத்தில் நமீதா உடன் ஜோடி சேர்ந்த பவர்ஸ்டார்

Power Star Sreenivasan Joins With Namitha

சென்னை: ஒரே படத்தின் மூலம் ஓகோ?! என்று புகழடைந்துவிட்ட பவர்ஸ்டார் சீனிவாசன் இப்போது விளம்பரத்திலும் தலை காட்டத் தொடங்கிவிட்டார். அதுவும் நமீதாவின் ஜோடியாக நடிக்கிறார் என்பதுதான் விசேசம். இதற்காக தனது சம்பளத்தில் 30 சதவிகிதம் டிஸ்கவுண்ட் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பையில் இருந்து‘எங்கள் அண்ணா' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நமீதா. சினிமா வாய்ப்பு குறைந்த உடன் டிவி ரியாலிட்டி ஷோக்களில் தலை காட்டினார். விளம்பரத்திலும் வந்தார். இப்போது டிவி வாய்ப்பும் இல்லாமல் போகவே ரியல் எஸ்டேட், கடை திறப்பு விழா என கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் நடித்த கிஸ்... கிஸ்... கிஸ்கால் விளம்பரம் பிரசித்தி பெற்றது. பட வாய்ப்பே இல்லாத சூழலில் கூட ஹீரோயின் ரேஞ்சில் இருந்த நமீதா இப்போது ‘பவர்ஸ்டாருடன்' ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் நடித்திருப்பது சினிமாவில் இல்லை, கிஸ்கால் இரும்புக்கம்பி விளம்பர படத்தில். இரும்பு கம்பிகளை கைகளில் பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்து வந்த நமீதா இனி தனியாக நிற்காமல் பவர் ஸ்டாருடன் ஜோடியாக நிற்பார்.

சினிமாவில் கால்சீட் ஃபுல்லாக இருக்கும் பவர் ஸ்டார் இரும்புக் கம்பி விளம்பரத்தில் நமீதா உடன் ஜோடி என்ற உடன் நடிக்க பேசிய சம்பளத்தில் இருந்து 30 பர்சண்ட் டிஸ்கவுண்ட் செய்து கொண்டாராம்.

அப்ப இனி நமீதா மச்சான்ஸ் மறந்துறாதீங்க... கிஸ்.. கிஸ்.. கிஸ்கால் என்று பவர் ஸ்டாரைப் பார்த்து கூறுவாரோ?

 

நயன்தாரா.. ஹன்ஸிகா... யார் நம்பர் ஒன்?

Hot Hansika Overtakes Nayanthara

தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள்தான் இன்றைய தேதிக்கு இந்திய சினிமாவில் பெரும் பங்கு வகிக்கிறது.

இந்த இரு மொழிகளிலும் முதலிடம் பிடிப்பவர் யாரோ... அவர் பாலிவுட் நடிகர்களையும் மிஞ்சியவராகப் பார்க்கப்படுகிறார்.

பாலிவுட்டில் எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும், தெலுங்கிலோ அல்லது தமிழிலோ நடிக்க ஆர்வம் காட்டுவதைப் பார்க்க முடிகிறது. காரணம் தமிழ், தெலுங்கு சினிமாவின் வர்த்தக எல்லை அத்தனை தூரம் விரிவடைந்திருப்பதுதான்.

நடிகைகளைப் பொறுத்தவரை இந்த இரு மொழிகளுக்கும் பொதுவானவர்களாகவே உள்ளனர். நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா, அமலா பால், ஹன்சிகா என முன்னணி நாயகிகள் அனைவருமே இரு மொழிகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

அந்த வகையில் நயன்தாரா-ஹன்சிகா இடையில்தான் நம்பர் ஒன் இடத்துக்கு பெரும் போட்டி நிலவுகிறது.

இதுவரை நயன்தாராவே முதல் இடத்தில் இருக்கிறார். புதிதாக வந்துள்ள ஹன்சிகா வேகமாக நயன்தாரா இடத்துக்கு முன்னேறி வருகிறார்.

தமிழ் தெலுங்கில் மொத்தம் 6 படங்களில் நடிக்கிறார் நயன்தாரா. அனைத்துமே பெரிய பட்ஜெட் படங்கள். சம்பளம் கிட்டத்தட்ட 2 கோடி வரை போகிறது.

ஹன்சிகா தமிழில் சேட்டை, வாலு, வேட்டை மன்னன், சிங்கம்-2, பிரியாணி, தீயா வேலை செய்யனும் குமாரு, வாலிபன் என ஏழு படங்களில் நடித்து வருகிறார். 2015 வரை அவரிடம் தேதிகள் இல்லை. ஆனாலும் இன்னும் 5 புதிய படங்களுக்கு அட்வான்ஸ் கொடுத்துள்ளனர். சம்பளமும் கிட்டத்தட்ட நயன்தாரா வாங்குவதை நெருங்குகிறதாம்.

இதையெல்லாம் விட முக்கியம், நயன்தாராவின் முன்னாள் காதலன் சிம்புவுடன் மகா நெருக்கமாகிவிட்ட ஹன்ஸி, அவருடன் மட்டுமே 2 படங்களில் நடித்துக் கொண்டிருப்பதுதான்.

இப்போ சொல்லுங்க.. யார் நம்பர் ஒன்?

 

மலேசியாவிற்கு பயணிக்கும் நாதஸ்வரம் … திடீர் திருப்பங்கள்

Sun Tv Nadaswaram Family Move Malaysia

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாதஸ்வரம் தொடரில் மலேசியாவில் படமாக்கப்பட்ட காட்சிகள் வரும் வாரங்களில் ஒளிபரப்பாக உள்ளது.

திரு பிக்சர்ஸ் திருமுருகன் இயக்கி நடிக்கும் நாதஸ்வரம் தொடர் காரைக்குடியிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் படமாக்கப்பட்டு வருகிறது. சில வாரங்களில் ஊட்டி, பெங்களூர் என்று பயணித்த இந்த தொடர் தற்போது மலேசியாவில் படமாக்கப்பட்டு வருகிறது. உள்ளது.

கதைப்படி நாதஸ்வரம் வாசிக்க வந்த அழைப்பை சொக்கலிங்கம் குடும்பம் ஏற்கிறது. அதற்காக சொக்கலிங்கமும் கோபியும் மலேசியாவுக்கு தங்கள் குழுவினருடன் பயணப்பட வேண்டும். இந்த பயணத்தில் தன்மனைவி மலரை எப்படியாவது அழைத்துப் போய் விடலாம் என கோபி முயற்சி மேற்கொள்கிறான். ஆனால் அந்த முயற்சியை தன் சாமர்த்தியத்தால் தடுத்து விடுகிறாள் கோபியின் தாயார். இதற்கு கோபியின் சகோதரியும் உடந்தையாக இருக்கிறாள்.

இந்த விசயம் மலேசியா போனபின்புதான் கோபிக்கு தெரிய வருகிறது. அம்மாவுக்கு மலேசியாவுக்கு வர வேண்டும் என்ற ஆசை உள்ளூர இருந்திருக்கிறது. இதனால் அம்மாவின் அந்த உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோபி தன் அம்மா மலேசியா வர எற்பாடு செய்கிறான்.

மலேசியாவில் தான் கோபியின் குடும்பத்திற்குள் அதுவரை நிகழாத ஒரு திருப்பம் ஏற்படுகிறது. காணாமல் போன கோபியின் அண்ணனை கோபி அங்கே தான் சந்திக்கிறான். இதில் முக்கியமான விஷயம், கோபிக்கு அவர் தான் தன் அண்ணன் என்பது தெரியாது. அண்ணனுக்கும் அதே நிலை தான்.

யாரென்று தெரியாமலே அவர்கள் நட்பு பாராட்டுகிறார்கள். திருப்பமான இந்த காட்சியில் அடுத்தடுத்து சந்திப்பு தொடரும்போதாவது அவர்கள் அண்ணன்-தம்பி தான் என்பதை தெரிந்து கொண்டார்களா? அதற்கான வாய்ப்பு அமைந்ததா? என்பதுதான் சுவாரஸ்யம்.

சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. விறு விறுப்பான காட்சிகளை தொடரின் இயக்குனர் திருமுருகன் உள்ளிட்ட குழுவினர் மலேசியாவில் காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.

கோபியின் அண்ணன் வருகைக்குப் பிறகு தொடர் இன்னொரு கோணத்தில் விறுவிறுப்பை தக்க வைத்துக் கொண்டு தொடர்கிறது என்கிறார், தொடரின் இயக்குனர் திருமுருகன்.

 

கடுமையா உழைக்கணும்.. ஒழுங்கா வரி கட்டணும்.. பெரியவங்களை மதிக்கணும் - அஜீத்

Ajith S Advice Youngsters

கடுமையாக உழைக்க வேண்டும்... ஒழுங்காக வரி செலுத்த வேண்டும்.. பெரியவர்களை மதிக்க வேண்டும், என இளம் நடிகருக்கு அஜீத் அட்வைஸ் செய்துள்ளார்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும் அஜித்குமார் அடுத்ததாக 'சிறுத்தை' சிவா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். சமீப காலமாக தமிழ்த் திரையுலகின் இளம் நடிகர்களுடன் நடிப்பதிலும், திரைத்துறையில் அவர்கள் முன்னேற பல வழிகளில் ஊக்கமளிப்பதிலும் ரஜினியின் வாரிசாகத் திகழ்கிறார் அஜித்.

அந்த வகையில் விஜயா நிறுவனத்தின் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் பெயிரடபடாத படத்தில் பாலா, விதார்த், முனீஸ், சுஹைல் என இளம் நடிகர்கள் அஜீத்துடன் நடிக்கின்றனர். இவர்களில் ஒருவரான முனீஸ் சமீபத்தில் அஜீத்தை விஷ்ணுவர்தன் படப்பிடிப்பில் சந்தித்து வாய்ப்புக்காக நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது முனீஸிடம் தான் இந்த இடத்துக்கு வருவதற்கு பட்ட பாடுகளை விளக்கிக் கூறினார் அஜீத்.

அஜீத் கூறுகையில், "கடுமையாக உழைத்து நாணயமாக வரி கட்ட வேண்டும். குடும்பத்தை குறிப்பாக மூத்தவர்களை மதித்து நடப்பதுடன் அவர்களுடன் நிறைய நேரத்தை செலவிடவேண்டும். வருமானத்திலிருந்து ஒரு பகுதியை இயலாதவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.

அடுத்தவர்கள் வாழ்வில் உன் கருத்தை திணிக்காமலும், உன் வாழ்வில் அடுத்தவர் கருத்தை திணிக்க விடாமலும் இருக்கவேண்டும். நீ யாருடன் பணி புரிய வேண்டும் என்று வெறும் பணத்தை நிர்ணயிக்க விடாதே. வாழு வாழ விடு. இது என்னுடைய அறிவுரை அல்ல, என் வாழ்கை எனக்கு கற்று கொடுத்த அனுபவம்," என்று கூறி விடை கொடுத்தனுப்பியிருக்கிறார்.

அஜித்தின் வாழ்த்து மற்றும் அறிவுரை குறித்து முனீஸ் கூறுகையில், "அஜீத் கூறியது என்னால் என்றென்றும் மறக்க முடியாதது. அவர் கூறிய சில உபயோகரமான குறிப்புகள் என் திரைப் பயணத்தில் மட்டுமின்றி என் வாழ்க்கையிலும் நிச்சயம் உதவும்," என்றார்.

 

‘பிரியாணி’ பாதி சமைச்சாச்சு… ஸ்டூடியோ கிரீன் விளக்கம்!

Briyani Not Droped Put On Hold

கார்த்தி, ஹன்சிகா நடிப்பில் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் ‘பிரியாணி', ட்ராப் என்று கடந்த இரு தினங்களாக கோடம்பாக்கத்தில் ஒரே பரபரப்பு பேச்சு அடிபட்டு வருகிறது.

வெங்கட்பிரபு இயக்கும் பிரியாணியில் கார்த்திக்கு அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடித்து வருகிறார். இவர்களுடன் பிரேம்ஜி அமரன், பவர் ஸ்டார் சீனிவாசன் உட்பட மற்றும் பலர் நடித்து வரும் பிரியாணிக்கு இசை யுவன்ஷங்கர் ராஜா.

வெங்கட் பிரபு கோஷ்டியின் ஒர்க்கிங் ஸ்டைல் பிடிக்காமல் படத்தை நிறுத்தி வைத்திருப்பதாகவும், கார்த்தி ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் நடிக்க கிளம்பிவிட்டார் என்றும் செய்திகள் வெளியானது.

இதுவரைக்கும் 70 நாட்கள் பிரியாணிக்காக கால்ஷீட் கொடுத்திருந்தாராம் கார்த்தி. ஆனால் அதில் 40 நாட்கள் மட்டுமே கார்த்தியை கேமிராவுக்கு முன் நிற்க வைத்தாராம் வெங்கட் பிரபு. ஒரு முன்னணி ஹீரோவை 30 நாட்கள் சும்மா நாற்காலியில் உட்கார வைத்தால் யாருக்குதான் கோபம் வராது என்றும் பேசிக்கொண்டார்கள்.

இதை வைத்துக்கொண்டு, பிரியாணி ட்ராப் என்ற பேச்சு கசண், காது, மூக்கு எல்லாம் வைத்து கலவரமாக்கி விட்டனர். இது குறித்து இப்போது ஸ்டூடியோ க்ரீன், நிறுவனத்தார் வாய் திறந்துள்ளனர். "பிரியாணி படம் ட்ராப் ஆகவில்லை. அந்தப் படத்தின் படப்பிடிப்பு இதுவரை 60 சதவீதம் நடைபெற்று முடிந்துள்ளது. மீதியும் சீக்கிரம் முடிந்துவிடும்" என்று கூறியுள்ளனர்.

அதே நேரத்தில், இந்தப்படத்தைத் தொடர்ந்து அதே ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தின் படப்பிடிப்பும் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

இந்த படத்திற்காக இயக்குநர் ராஜேஸ், கார்த்தி குரூப் குற்றாலம் கிளம்பியுள்ளனர். இதில் சந்தானம் காஜல் அகர்வால் நடிக்கின்றனர் இதனால் பிரியாணி படத்தின் படப்பிடிப்புக்கு கொஞ்சம் பிரேக் விட்டிருக்கின்றனர். இரண்டுக்கும் ஒரே ஹீரோ, ஒரே நிறுவனம் தயாரிக்கும் படம் என்பதால் இந்த குளறுபடி என்கின்றனர்.

 

ஏப்ரல் 14ல் புது யுகம்… 10 படம் தயாரிக்கும் வேந்தர் மூவிஸ்

ஏப்ரல் 14ம் தேதி வேந்தர் டிவியில் புது யுகம் டிவி தொடங்க உள்ளது. இதற்காக வேந்தர் மூவிஸ் 10 படங்களை தயாரிக்கிறது.

ஏ.வி.எம், விஜயா, மாடர்ன் தியேட்டர்ஸ்,தேவர் பிலிம்ஸ் போன்ற நிறுவனங்கள்தான் கடந்த காலங்களில் 4 படங்கள் வரை தயாரிப்பார்கள்.

இன்றைக்கு இருக்கும் செலவில் ஒரு படம் எடுப்பதே சிரமமான காரியம். இதில் ஒரே நேரத்தில் 10 படம் தயாரிக்கின்றனர் வேந்தர் மூவிஸ் நிறுவனத்தார்.

புதிய பட தயாரிப்பாளர்களிடம் சேட்டிலைட் ரைட்ஸ் கேட்டு மல்லுக்கட்டுவதை விட தாங்களாகவே படம் தயாரித்துவிட்டால் நல்லதுதானே என்று முடிவெடுத்துவிட்டார்கள் போல வேந்தர் டிவி நிறுவனத்தார்.

பல வெள்ளிவிழா படங்களைக் கொடுத்த கோவைத்தம்பி பர்ஸ்ட் காபி அடிப்படையில் முதல் படத்தை தயாரித்து கொடுக்கிறார்.

ஏப்ரல் மாதம் 14ம் தேதி முதல் தொடங்க உள்ள புது யுகம் (வேந்தர் டிவி) டிவிக்காக இப்போதே மும்முரமாக தயாராகி வருகின்றனர். மார்ச் 6ம் தேதி முதல் புது யுகம் டிவி சோதனை ஒளிபரப்பை தொடங்க உள்ளது.