சோனாக்ஷியின் நெற்றிக்கு வந்த சோதனையைப் பாருங்க!

Fans Make Fun Sonakshi Forehead
சத்ருகன் சின்ஹா மகளும், பாலிவுட்டின் புதிய கவர்ச்சித் தாரகையுமான சோனாக்ஷி சின்ஹாவுக்கு ஒரு பெரும் சோதனை. அதாவது அவரது நெற்றியைப் பற்றி ரசிகர்கள் செமையாக வாரி கமெண்ட் அடித்து வருகிறார்களாம்.

தபாங் படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர் சோனாக்ஷி. இப்போது பாலிவுட்டில் இவரது ஆட்சியும் கொடி கட்டிப் பறக்கிறது. தபாங் படத்தில் பன்ச் டயலாக் எல்லாம் பேசி பட்டையைக் கிளப்பியிருந்தார் சோனா. ஆனால் இப்போது அவரை நோக்கி வரும் பன்ச் டயலாக்குகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் தவித்து வருகிறாராம்.

இந்திக்காரர்களின் டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் இப்போதைய ஹாட் டாப்பிக்கே சோனாக்ஷியின் நெற்றியை கிண்டலடிப்பதுதானாம். பாராட்டுபவர்களை விட வாரி விடுபவர்கள்தான் நிறைய உள்ளனராம்.

இதையெல்லாம் படித்தால் நமக்கே டென்ஷனாகிறது. ஆனால் சோனாவுக்கு அப்படியெல்லாம் இல்லையாம், ஜாலியாக படித்துச் சிரித்து விட்டு விடுகிறாராம்.

தற்போது தபாங் படத்தின் 2வது பாகத்தில் நடித்து வரும் சோனாக்ஷி, இதற்காக பாங்காங் போயிருந்தார். அடுத்து தான் நடித்துள்ள ரவுடி ரத்தோர் படத்தின் புரமோஷனுக்காக ரெடியாகி வருகிறாராம்.

எல்லாம் சரி, சோனாக்ஷியின் நெற்றியைப் பற்றி அப்படி என்னதான் கமெண்ட் அடிக்கிறார்கள், ரசிகர்கள் என்று பார்க்கலாமா...

நர்கீஸ் பக்ரி மட்டும்தான் சோனாக்ஷி சின்ஹாவின் நெற்றியை முழுமையாக முத்தமிட முடியும்...

நர்கீஸ் பக்ரி மற்றும் ஏஞ்செலீனா ஜூலி ஆகிய இருவரின் உதடுகளைச் சேர்த்தால் கூட அவை சோனாக்ஷி சின்ஹாவுக்கு நெற்றிக்கு ஈடு இணையாக முடியாது.

சோனாக்ஷியின் நெற்றிக்காத்தான் மகாபாரதப் போர் நடந்த்து.... இப்படி ஓஒட்டுகிறார்களாம் சோனாக்ஷியின் நெற்றியைப் பார்த்து .!

அது சரி, சோனாக்ஷியின் நெற்றி என்ன அவவளவு பெருசாவா இருக்கு...?
 

சின்னத்திரை காதல் ஜோடிகள் - சில சுவாரஸ்யமான அனுபவங்கள்!

Chinnathirai S Super Jodi
சினிமாவில் ஜோடியாக நடித்தவர்கள் நிஜவாழ்க்கையில் ஜோடியாக இணைவார்கள். அதேபோல் சின்னத்திரையில் ஜோடியாக நடிக்காவிட்டாலும் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர்கள், செய்தி வாசிப்பாளர்கள் அதே துறையை சேர்ந்தவர்களை காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். சில காதல் ஜோடிகளின் சுவாரஸ்யமான அனுபவங்களை தட்ஸ் தமிழுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

பிரஜின் சாண்ட்ரா

சன் மியூசிக் சேனலில் காம்பயராக கலக்கிய பிரஜின், சாண்ட்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். முதலில் காதலை சொன்னவர் சாண்ட்ராதானாம்.

பிரஜின் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு காதலை சொல்ல அவரும் சாண்ட்ராவின் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு காதலுக்கு ஓகே சொல்லியிருக்கிறார். அவர்களுடைய காதல் ஒரு சுபமுகூர்த்த நாளில் சுபமாகியிருக்கிறது. இந்த ஜோடி இப்பொழுது பெரிய திரையில் ஜோடியாக வலம் வர இருக்கிறார்கள்.

மோனிகா சாம்

சன் செய்திகளில் வானிலை அறிக்கை சொன்ன மோனிகா, சன் குழும தொலைக்காட்சிகளில் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். புதிய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் தொடக்கவிழாவில் தனது காதலரை சந்தித்துள்ளார்.

சஞ்சீவ் ப்ரீத்தி

திருமதி செல்வம் சீரியல் மூலம் பிரபலமான சஞ்சீவ் மானாட மயிலாட நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த நேரம். ப்ரீத்தி சின்னத்திரையில் நடித்துக்கொண்டிருந்தார்.

ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் புகழை அடுத்து மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஆட வந்த போது சஞ்சீவுடன் காதலாக மாறியது. இவர்களுடைய காதலுக்கு பெற்றோர் பச்சைக் கொடி காட்டவே இரண்டு ஆண்டுகளுக்கு முன் சுபயோக சுபதினத்தில் ப்ரீத்தியை கை பிடித்தார். ப்ரீத்தி இல்லத்தரசியாக இருக்க சஞ்சீவ் இன்னமும் திருமதி செல்வத்தில் செல்வமாக தொடர்கிறார்.

இப்படி மேலும் பற்பல காதல் ஜோடிகள் டிவி பெட்டிக்குள் உலா வந்து கொண்டுதான் உள்ளன. காதலுக்குத்தான் எல்லை இல்லையே.. அது சின்னத் திரை, பெரிய திரை என்று பார்த்தா வரப் போகிறது...!
 

பாண்டிச்சேரியில் குத்தாட்டம் போட்ட ரீமா!

Reema Sizzles Pondycherry
கல்யாண கையோடு மீண்டும் கோடம்பாக்கத்தில் திறமை காட்ட வந்துவிட்ட ரீமா சென், இப்போது கேம்ப் அடித்திருப்பது பாண்டிச்சேரி எனப்படும் புதுச்சேரியில்!

அம்மணியின் போஸ்ட் மேரேஜ் இன்னிங்ஸின் முதல் படம் விஜய் தயாரிப்பில் உருவாகும் சட்டம் ஒரு இருட்டறைதான்.

இந்தப் படத்தில் அவர் ஐட்டம் டான்ஸராக வருகிறார். இவரது ஆட்டம் மட்டும் 'ஆட்டத்துக்குப் பேர் போன' புதுச்சேரி தெருக்களில் நடத்தப்பட்டது. ரீமாவைப் பார்க்க ஏகக் கூட்டம் கூடிவிட்டதாம்.

இந்தப் படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எல்லாம் எஸ் ஏ சந்திரசேகரன்தான். ஆனால் இயக்குநர் மட்டும் அவரில்லை.

ஆம், தன்னிடம் உதவியாளராக இருந்த சினேகா என்ற பெண்ணை வைத்து இயக்குகிறார் எஸ் ஏ சி. (ஏதாவது சென்டிமென்ட் இருக்குமோ?)

ஏற்கெனவே ஒரு படத்தை சேனாபதி மகன் என்ற பெயரில் எஸ் ஏ சந்திரசேகரனே இயக்கியதாகச் சொல்வார்கள்!

இந்த புதிய சட்டம் ஒரு இருட்டறையில் பிரபு மகன் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். விஜய் ஆன்டனி இசை அமைக்கிறார். நடிகர் கில்லி பிலிம்ஸ் சார்பில் விஜய் தயாரிக்கிறார்.
 

கமல்ஹாஸனின் விஸ்வரூபம் ஜூன் 29-ல் ரிலீஸ்?

Kamal Release Vishwaroopam On June 29
ஜூன் மாதம் கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்தின் ஆடியோ வெளியாகக்கூடும் என்று நேற்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இப்போது விஸ்வரூபத்தின் ரிலீஸ் தேதியே வெளியாகிவிட்டது.

இந்தப் படத்தை ஜூன் 29-ம்தேதி வெளியிட கமல்ஹாஸன் திட்டமிட்டிருப்பதாகவும், புரமோஷன் பணிகளை அடுத்த வாரத்திலிருந்து அவர் தொடங்கக் கூடும் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

கமல்ஹாஸனின் ராஜ்கமல் இன்டர்நேஷனலும், பிவிபி சினிமாஸும் இணைந்து தயாரித்துள்ள படம் விஸ்வரூபம்.

தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் இல்லாத முதல் பிரதி கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுவிட்டது.

இப்போது இறுதிக்கட்டப் பணிகளை முடிக்கும் தறுவாயில் உள்ள கமல், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வேலைகளுக்காக அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார். அங்கேயே பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஓஸ்போர்னேவுக்கு படத்தை போட்டுக் காட்டிவிட்டு சென்னை வரும் கமல், உடனடியாக புரமோஷனை ஆரம்பிக்கிறார். ஜூன் முதல் வாரத்தில் பாடல்களையும் வெளியிட உள்ளாராம்.

விஸ்வரூபத்தை எழுதி இயக்கியிருப்பவரும் கமல்ஹாஸன்தான். வைரமுத்துவுடன் இணைந்து படத்துக்கு பாடல்களையும் எழுதியுள்ளார்.
 

'ரிஸ்க் எடுப்பது எனக்கு....' - உருமி இயக்குநர் சந்தோஷ் சிவன் பேசுகிறார்!

Santosh Sivan Speaks About Urumi
15-ம் நூற்றாண்டு கதையான ‘உருமி’யை தமிழில் வெளியிடும் முயற்சியில் உள்ளார் ஒளிப்பதிவாளர் கம் இயக்குநர் சந்தோஷ் சிவன்.

அவருடன் ஒரு சந்திப்பு...

இயக்குனர் மணிரத்னம் படங்களில் மட்டும் பணியாற்றுவீர்களாமே?

இந்த குற்றச்சாட்டை பல பேர் என்னிடமே நேரடியாகவே கேட்டுவிட்டார்கள். அப்படி நான் மணிரத்னம் படங்களுக்கு மட்டுமே பணியாற்ற வேண்டும் என்றால், எப்படி நான் மற்ற மொழிகளுக்குள் சென்றிருக்க முடியும்? ‘ரோஜா’ படம் பண்ணுவதற்கு முன்பே மணிரத்னத்தை எனக்கு நன்றாக தெரியும். அப்போது நான் மலையாளத்தில் சில படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தேன். ‘ரோஜா’ கதை விவாதம் முடிந்தவுடன் ஷûட்டிங்குக்கு புறப்பட்டோம். மணி எனக்கு அந்தப் படத்தில் முழு சுதந்திரம் கொடுத்தார். “சின்ன சின்ன ஆசை...” பாடல் காட்சி எல்லாம் என்னையே எடுக்க சொன்னார். ‘ரோஜா’பெரியளவில் பேசப்பட்டது.

அடுத்தடுத்து ‘தளபதி’, ‘இருவர்’, ‘உயிரே’, ‘ராவணன்’.... என்று எங்கள் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ‘துப்பாக்கி’ படத்திற்கு நான்தான் ஒளிப்பதிவாளர். அதற்கு ஏ.ஆர். முருகதாஸ்தான் இயக்குனர். மற்ற இயக்குனர்களுடன் பணியாற்றக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.

‘உருமி’யை பற்றி சொல்லுங்கள்!

வரலாற்று சம்பவங்களை ஆராய்வதிலும், அதைப் பற்றி தெரிந்து கொள்வதிலும் எனக்கு நிறைய ஆர்வம் உண்டு. நான் ‘கோவா’ போன்ற நகரங்களுக்கு லொக்கேஷன் பார்க்க செல்லும் போது, அங்குள்ள பழமையான கட்டிடங்களையும், சில பழமையான விஷயங்களையும் கண்டு ஆச்சரியப்படுவேன்.

பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கலாச்சாரமும், நாகரீகமும் தலைகீழாக இப்போது மாறிவிட்டன. ஆனால் அந்த வரலாற்று சம்பவங்கள் பல செய்திகளை நமக்கு கட்டிடங்கள், கல்வெட்டுக்களின் வழியே சொல்லிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், ‘வாஸ்கோடகாமா’ இந்தியாவிற்குள் வந்த போதும்,அதற்கு முந்தைய காலகட்டத்திற்கு செல்லும் கதையை தேடியபோதும் கிடைத்ததுதான் ‘உருமி’.

‘வாஸ்கோடகாமா’வின் வருகையை எப்படி படமாக சொல்ல முடியும்?

உண்மைதான். வாஸ்கோடகாமாவின் வருகையை ஒரு இரண்டு மணி நேர படத்திற்குள் அடக்கிவிடமுடியாது. அதே சமயம் ‘வாஸ்கோடகாமா’வை கொல்ல நினைக்கும் ஒரு இந்திய சிறுவனின் கதை என்று ஒற்றை வரியிலும் சொல்லிவிட முடியாது.

அரபு நாடுகளில் எண்ணெயை அபகரிக்க, அங்கு எப்படி உள்ளே நுழைந்தார்களோ, அதேபோல் இந்தியாவில் மிளகு திருட வந்தவர்கள்தான் போர்ச்சுகீசியர்கள். அவர்களுக்கு மிளகு தேவைப்பட்டபோது,அது அபரிமிதமாக இந்தியாவில் இருப்பதை கண்டு உள்ளே நுழைந்தார்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்திய வார்த்தை, வியாபாரம் செய்ய வந்திருக்கிறோம் என்பதுதான். இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட சேதுராயன் என்ற மன்னன்தான் போர்ச்சுகீசியர்களுக்கு எதிராக முதல் முதலாக குரல் கொடுத்து எதிர்த்து நின்றான். அப்புறம் வாஸ்கோடகாமாவை எதிர்த்ததும் சேதுராயனின் வாரிசுதான். இந்த ஒரு‘நாட்’டை வைத்து கொண்டுதான் ‘உருமி’யை உருவாக்கியுள்ளோம்.

இதுபோன்ற வரலாற்று பின்னணி படம் எடுப்பது ரிஸ்க்தானே?

கேமராமேனாக பணியாற்ற படங்கள் வந்து கொண்டிருக்கும் போது, அதில் ஒர்க் பண்ணிவிட்டு நல்ல சம்பளம் வாங்கி செட்டிலாகி விடுங்கள் என்று என்னிடம் சில பேர் சொல்லியிருக்கிறார்கள். எனக்கான ஒரு அடையாளம் வேண்டும் என்பதால்தான், கொஞ்சம் ரிஸ்க்கான சப்ஜெக்ட்டுகளை படமாக எடுத்து வருகிறேன்.
 

இவருக்கு பதில் இவர்.. சீரியலில் மட்டுமே சாத்தியம்!

Change Characters
சினிமாவில் ஒரு கதாபாத்திரம் நடித்தவர் திடீரென இறந்து விட்டாலோ, அல்லது நடிக்க வராமல் வம்பு செய்தாலோ அந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்படும். ஆனால் தொலைக்காட்சி தொடர்களில் அப்படி இல்லை. எந்த நடிகையோ, நடிகரோ வம்பு செய்கிறாரா கவலையே படமாட்டார்கள். இவருக்கு பதில் இவர் என்று கார்டு போட்டுவிட்டு சீரியலை தொடர்ந்து கொண்டு இருப்பார்கள். அப்படி ஆள் மாறிய சீரியல்கள் பற்றி ஒரு ரவுண்ட் அப்

சன் டிவியின் தொடர்களிலே டாப்ல உள்ள தொடர்கள்ல என்னப் பிரச்சனையோ தெரியில..இப்படித்தான் கொஞ்ச நாட்களா ஆள்மாறாட்ட வேலை நடக்குது.

தென்றல் தொடரில் மாமியார் கதாபாத்திரம் பிரசித்தி பெற்றது. கதாநாயகி துளசியின் மாமியாராக நடித்த சாந்தி வில்லியம்-ஐ தூக்கிட்டு அவருக்குப் பதிலாக ஜெயலட்சுமி நடித்து வருகிறார். ஆனால் குரல் அதேதான். சாந்தி வில்லியமோட முக பாவனை, அதுவும் குத்திக்காட்டிப் பேசறப்போ நக்கலாக ஒரு சிரிப்பு சிரிப்பாங்க பாருங்க ..அந்த நடிப்பு யாருக்குமே வராது.மெட்டிஒலி நாடகத்திலேயே ஒரு டிபிகல் நடுத்தர குடும்பத்து மாமியாராக வாழ்ந்துக் காட்டியிருப்பாங்க.

மாமியார்தான் மாறிட்டாங்களேன்னு நினைச்சா திடீர்னு துளசியின் அம்மாவா நடிக்கிற ஐஸ்வர்யாவைத் தூக்கிட்டு அவங்களுக்கு பதிலா சுதாசந்திரனை போட்டுட்டாங்க. இந்த நாடகத்தில அம்மா கதாபாத்திரமும் கிட்டத்தட்ட வில்லி மாதிரிதான். அம்மா மகள் சண்டையில் ஐஸ்வர்யாவோட ரியாக்சன் என்னவா இருக்கும்னு ஆவலோட எதிர்பார்த்துக்கிட்டு இருந்த நேரத்தில ஐஸ்வர்யாவுக்கு ஆப்பு வச்சுட்டாங்க பாவம். இவங்களுக்குப் பதிலா இந்தக் கேரக்டர்ல நடிக்கிற சுதாசந்திரனை பார்த்தாலே பாவமா இருக்கு.அந்த வேடம் கொஞ்சம் கூட செட் ஆகவே இல்ல.

அதேபோல தென்றலில் அர்ச்சனாவின் ரெண்டாவது தங்கை மாறினார். அதேபோல் மூன்றாவது தங்கையும் ஆள்மாறினார். கடைசியில் அந்த கதாபாத்திரத்திற்கு மாலை போட்டுவிட்டார்கள் பாவம். தற்போது செல்வத்தின் தோழியான நந்தினியாக நடித்த லதாராவை தூக்கிவிட்டு தற்போது வேறு ஒருவர் வந்திருக்கிறார். இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் இப்பொழுது நந்தினியாக நடிப்பவர்தான் லதாராவிற்கு முன்பாக நந்தினியாக நடித்தவர் என்பது கூடுதல் தகவல் ( திருமதி செல்வத்தை ஆரம்பத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு புரியும்)

இதே கூத்து நாதஸ்வரம் தொடரிலும் அரங்கேறி வருகிறது. கோபியின் மூத்த தங்கையாக நடித்தவர் இதுவரை நான்குமுறை மாறிவிட்டார் என்ன காரணமோ தெரியலே. தினசரி விடாமல் சீரியல் பாக்கிறவங்களுக்குதான் இந்த மாற்றம் தெரியும் கொஞ்சநாள் பாக்காமல் விட்டு புதுசா பார்த்தா யாருக்கு பதில் யார் என்பதில் குழம்பம் வந்தாலும் வரும்.

இயக்குநர்களே, சாரி இதில் இயக்குநர்களை குற்றம் சொல்ல முடியாது சமயத்தில் இயக்குநர்களே தூக்கியடிக்கப்படும் சம்பவமும் நடப்பதுண்டு. செல்லமே தொடரை இதுவரை நான்கைந்து இயக்குநர்கள் இயக்கியிருப்பார்கள் என நினைக்கிறேன்.

கிரியேட்டிவ் ஹெட் கொஞ்சம் மனசு வைங்க சீரியல் கன்டியூனிட்டி புரிய மாட்டேங்குது !

( சீரியல் பார்த்து மனசு உடைந்தோர் சங்கத்தினரின் புலம்பல் இது)
 

ரஜினியின் பாட்ஷா பாணியில் இந்தியில் புதுப் படம்- டைரக்டர் பிரபுதேவா?

Prabhu Deva Goes The Rajini Way
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து தமிழில் ஹிட் ஆன பாட்ஷா படத்தைப் போலவே இந்தியில் ஒரு புதுப் படம் உருவாகவிருக்கிறதாம். அஜய் தேவ்கன் நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தை பிரபுதேவா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பாட்ஷா குறித்து சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. தமிழ் சினிமா வரலாற்றில் அதற்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. இப்படத்தின் பாணியில் இப்போது இந்தியில் ஒரு படம் உருவாகவிருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.

கிட்டத்தட்ட பாட்ஷா பட பாணியிலேயே, அதன் கதையைத் தழுவியே இந்தக் கதை உருவாக்கப்படவிருக்கிறதாம். அஜய் தேவ்கன் நாயகனாக நடிக்கவுள்ளார். பிரபுதேவா இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போதுதான் அக்ஷய் குமாரை வைத்து ரெளடி ரத்தோர் படத்தை முடித்துள்ளார் பிரபுதேவா. அடுத்து அஜய் தேவ்கனுடன் இணையவுள்ளார் பிரபுதேவா.

பாட்ஷா படத்தின் காப்பி என்று சொல்ல முடியாது என்றாலும் கூட பாட்ஷா படத்தின் சில அம்சங்களை வைத்து கதை பின்னப்பட்டு வருவதாக தெரிகிறது. இதுகுறித்து பிரபுதேவா தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் தேவ்கனுடன் இணையவிருப்பதை மட்டும் பிரபுதேவா உறுதி செய்துள்ளார்.
 

சோலோவாகக் களமிறங்கும் காமெடி கலகலப்பு!

Kalakalappu Hits 255 Theaters Today    | அஞ்சலி    | ஓவியா  
இந்த வெள்ளிக்கிழமை ஒரே ஒரு படம்தான் ரிலீஸ். அது சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு.

கோடைக்கேத்த ஜாலி ரைடு என்ற 'பஞ்ச்'சுடன் வரும் இந்த காமெடி திருவிழாவில், அஞ்சலி - ஓவியாவின் கவர்ச்சி ஏற்கெனவே கோடம்பாக்கத்தின் பரபரப்புப் பேச்சாகி, படத்தின் விற்பனையை ஹாட்டாக்கிவிட்டது.

விமல், மிர்ச்சி சிவா, சந்தானம் என காமெடி ஹீரோக்கள் வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளனர்.

இந்தப் படத்துக்குப் போட்டியே இல்லை இப்போதைக்கு. 5 வாரங்களுக்கு முன் வெளியான ஓகே ஓகேதான் கலகலப்பால் கொஞ்சம் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. 255 அரங்குகளில் கலகலப்பு ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்தப் படம் தவிர, தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த கப்பர் சிங் 14 அரங்குகளில் வெளியாகிறது. இந்தி டபாங் ரீமேக் இது.

ஜானி டெப் நடித்துள்ள டார்க் ஷேடோஸும் இன்றுதான் ரிலீஸ். இந்தப் படத்துக்கு ரிசர்வேஷனில் நல்ல ரெஸ்பான்ஸாம்!
 

நடிகை உதயதாராவுக்கு நிச்சயதார்த்தம் - துபாய் மாப்பிள்ளையைக் கைப்பிடிக்கிறார்!

Udayathara Getting Engaged
கோலிவுட்டில் மேலும் ஒரு நடிகைக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது. அவர் உதயதாரா.

தீ நகர், கண்ணும் கண்ணும் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை உதயதாரா. சொந்த ஊர் கேரள மாநிலம் கோட்டயம்.

நடித்தது போதும் என்ற முடிவுக்கு வந்த அவர், துபாயைச் சேர்ந்த ஜுபின் ஜோசப் என்பவரை திருமணம் செய்கிறார். ஜுபின் விமானத்தில் பைலட்டாக உள்ளார்.

உதயதாரா - ஜுபின் ஜோசப் திருமண நிச்சயதார்த்தம் நேற்று கோட்டயத்தில் விமரிசையாக நடந்தது.

வரும் மே 16-ம் தேதி கொச்சி அருகே உள்ள கடுத்துருத்தி தேவாலயத்தில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது.

திருமணத்துக்குப் பிறகு நடிக்கப்போவதில்லை என உதயதாரா கூறியுள்ளார்.
 

தி டர்ட்டி பிக்சரில் நயன்தாரா!

Nayantara Play Silk Smitha Role Tamil
இந்தியில் பெரும் வெற்றிப் பெற்ற தி டர்ட்டி பிக்சர் படத்தின் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிக்கிறார்.

மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை 'த டர்டி பிக்சர்' என்ற பெயரில் இந்தியில் தயாராகி ரிலீசானது. சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரி குவித்தது. இதில் நடித்ததற்காக வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

சில்க் ஸ்மிதா குடும்பத்தினர் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தாலும், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

டர்டி பிக்சர் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு அப்படத்தை வேறு மொழிகளில் படமாக்க தயாரிப்பாளர்களை தூண்டி உள்ளது. அதன்படி தமிழ், தெலுங்கு மொழிகளில் இப்படம் ரீமேக் ஆகிறது.

இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க நடிகை தேர்வு நடந்தது. அனுஷ்கா, நிகிதா, ரிச்சா ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியாக நயன்தாராவை தேர்வு செய்துள்ளனர்.

அதிக கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்பதால் நயன்தாரா கேட்கும் சம்பளத்தைக் கொட்டித் தர தயாரிப்பாளர்கள் தயாராகவே உள்ளார்களாம்.
 

குரு - சீடர் உறவு கொண்ட எங்களை கொச்சைப்படுத்துகிறார் ஜெயேந்திரர்! - ரஞ்சிதா

Ranjitha Slammed Jayendirar
சென்னை: நித்யானந்தாவுடன் என்னை தேவையில்லாமல் தொடர்புபடுத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை ரஞ்சிதா.

நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக பதவி ஏற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜெயேந்திரர், "நித்யானந்தாவுக்கு ஆதீனம் பட்டம் வழங்கியதை ஏற்க முடியாது. நடிகை ரஞ்சிதா எப்போதும் அவருடன் இருக்கிறார்," என்று கூறி இருந்தார்.

இதற்கு நித்யானந்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 10 நாட்களுக்குள் ஜெயேந்திரர் தன் கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று கெடு விதித்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை 10.00 மணியளவில் நடிகை ரஞ்சிதாவின் வக்கீல்கள் முருகையன் பாபு, சண்முக சுந்தரம், கோபி, அருண்குமார் ஆகியோர் எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் கோர்ட்டுக்கு வந்தனர்.

அங்கு அவர்கள் ஜெயேந்திரருக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், "நான் (ரஞ்சிதா) தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட சினிமா படங்களில் நடித்துள்ளேன். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளேன்.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் எனக்கு ரசிகர்கள் உள்ளனர். ராகேஷ் ராமச்சந்திராமேனன் என்ற ராணுவ வீரரை நான் திருமணம் செய்துள்ளேன். சமுதாயத்தில் நான் நல்ல பெயருடன் வாழ்ந்து வருகிறேன். பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளேன். நித்யானந்தா சுவாமிகளின் ஆசிரமத்துக்கு சென்று வரும் நான் அவரது சீடராகவும் உள்ளேன்.

நித்யானந்தா சார்பில் நடத்தப்படும் மாநாடுகள், விழாக்களில் நான் கலந்து கொண்டுள்ளேன். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அளித்த ஒரு பேட்டியில் ரஞ்சிதா என்பவர் நித்யானந்தாவுடன் எப்போதும் இருக்கிறார் என்று கூறியுள்ளார். இது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

ஜெயேந்திரரின் இந்த பேட்டி எனக்கும் நித்யானந்தாவுக்கும் உள்ள குரு- சீடர் உறவை கொச்சைப்படுத்துவது போல உள்ளது. ஜெயேந்திரர் பேட்டியை பார்த்த என் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சகோதரி ஜோதி ஆகியோர் என்னை போனில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.

ஜெயேந்திரருக்கு தகுதியில்லை

ஜெயேந்திரர் மீது சங்கரராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கு ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அவர் என்னைப்பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.

எனவே அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 499 மற்றும் 500 ஆகியவற்றின் கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எனக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும்," என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலை 11 மணியளவில் நடிகை ரஞ்சிதா எழும்பூர் நீதிமன்றத்துக்கு வந்தார். நீதிபதி வி.பி. ரவீந்திரன் முன்னிலையில் ஆஜரானார். அவரிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. அவரை நீதிபதி திங்கட்கிழமை வாருங்கள் என்றார். இதையடுத்து நடிகை ரஞ்சிதா நீதிமன்றத்தை விட்டு வெளியில் வந்தார்.

அதன் பிறகு ரஞ்சிதா வக்கீல்கள் கூறுகையில், நீதிபதி முதலில் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்தபோது, ரஞ்சிதா நீதிமன்றத்துக்கு வந்து சேர இயலவில்லை. எனவே திங்கட்கிழமை விசாரணை நடைபெறும் என்றனர்.

இதையடுத்து நடிகை ரஞ்சிதா நிருபர்களிடம் பேசுகையில், "என்னைப்பற்றி ஜெயேந்திரர் கூறிய கருத்துக்களில் எந்தவித உண்மையும் இல்லை. எனவே அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர நீதிமன்றத்துக்கு வந்தேன். இது தொடர்பாக நீங்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் திங்கட்கிழமை விரிவாக பதில் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
 

நேற்று இல்லை நாளை இல்லே... எப்பவும் இளையராஜா!!

Ilayaraaja S Neethaane En Onvasantham Makes Waves
இளையராஜா ஒரு படத்துக்கு இசையமைக்கிறார் என்றாலே அந்தப் படம் குறித்து தனி மரியாதை வந்துவிடும். பாடல்கள் குறித்தும் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும்.

இது எழுபதுகளில் தொடங்கி தொன்னூறுகளின் இறுவரை தொடர்ந்தது. இடையில் சில வருடங்கள் ராஜா தமிழ்ப் படங்களில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அப்போது அவர் மகன் யுவன் ஷங்கர் ராஜா அந்தக் குறையைத் தீர்த்தார்.

இப்போது மீண்டும் முழு வீச்சில் களமிறங்கிவிட்டார் இசைஞானி. கவுதம் மேனனுடன் இணைந்து அவர் பணியாற்றும் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் இசை குறித்துதான் இன்றைக்கு இன்டஸ்ட்ரியில் பெரிய அளவு பேச்சு.

இந்தப் படத்தின் இசைக்கு சோனி உள்ளிட்ட ஆடியோ கம்பெனிகள் இதுவரை இல்லாத அளவு ரூ 2 கோடிக்கு மேல் விலைபேசப்பட்டு வருகிறது. இருந்தாலும் இன்னும் எந்த நிறுவனத்துக்கும் ஆடியோவை விற்கவில்லை கவுதம் மேனன். அநேகமாக ரூ 2.50 கோடிக்கு இந்தப் படத்தின் ஆடியோ விற்பனை செய்யப்படும் எனத் தெரிகிறது.

கவுதம் மேனன் - ரஹ்மான் கூட்டணியில் வந்த விண்ணைத் தாண்டி வருவாயா பட ஆடியோ ரூ 1.75 கோடிக்கு விற்பனையானது. இதைவிட முக்கால் கோடி அதிக விலைக்கு நீதானே என் பொன்வசந்தம் விற்பனையாகவிருக்கிறது.
 

மெட்ராஸிலேயே இனி தங்கப் போறாராம் 'மைனா' பால்!

Amala Paul Gets New House Chennai
ஒரு வழியாக சென்னையிலேயே டேரா போட முடிவு செய்து விட்டார் அமலா பால். இதற்காக ஒரு பிரமாண்ட வீட்டையும் வாடகைக்குப் பிடித்து விட்டாராம். அங்கு பால் காய்ச்சி குடியேறியும் விட்டார். இனிமேல் இங்கேயேதான் எல்லாமாம்.

கேரளாவிலிருந்து வந்திறங்கிய நடிகைகள் பட்டாளத்தில் ஒருவர்தான் அமலா பால். ஆரம்பத்தில் சரியாக மார்க்கெட் இல்லாமல் தவித்து வந்த அவருக்கு மைனா வந்து மார்க்கெட்டை டைட்டாக்கி விட்டது. இதனால் பயங்கர பிசியாகி விட்டார், அத்தோடு இல்லாமல் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடவும் ஆரம்பித்தார்.

விக்ரம், ஆர்யா ஆகியோருடன் ஜோடி சேர்ந்த இவர் இப்போது தெலுங்கிலும் அதகளம் செய்து வருகிறார்.

இதுவரை ஹோட்டலிலேயே வாசம் செய்து வந்த அமலா பால், அது பல விதங்களிலும் சரிப்பட்டு வராமல் இருந்ததால் ஒரு வீட்டை இப்போது வாடகைக்குப் பிடித்து விட்டாராம். இனிமேல் சென்னையிலேயே தங்கி நடிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளாராம்.

மயிலாப்பூர் பக்கம் நல்ல பங்களா ஒன்று தோதாக கிடைத்துள்ளதாம். அதில்தான் பால் காய்ச்சி குடியேறியுள்ளார் அமலா பால். இனிமேல் தமிழ் சினிமாக்காரர்கள் அமலா பாலைப் பார்க்க இங்கு வந்தால் போதுமாம்...

அப்புறம் என்ன எல்லோருக்கும் சந்தோஷம்தானே...?!
 

நடிகை சினேகா திருமணம் நடந்தது - இரண்டு முறை தாலி கட்டி மனைவியாக்கினார் பிரசன்னா!

Prasanna Ties Holy Knot Sneha    | ஸ்னேகா-பிரசன்னா நிச்சயதார்த்தம்   | திருமண வரவேற்பு படங்கள்  
நடிகை சினேகாவின் திருமணம் இன்று விமரிசையாக சென்னையில் நடந்தது. அவருக்கு சினேகா வீட்டு முறைப்படியும், தன் பிராமண வீட்டு முறைப்படியும் இரு முறை தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டார் நடிகர் பிரசன்னா.

நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தனர்.

நேற்று இருவருக்கும் நிச்சயதார்த்தமும், தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியும் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா பேலஸ் திருமண மண்டபத்தில் விமரிசையாக நடந்தது.

இன்று காலை 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் திருமணம் என்று நேரம் குறிக்கப்பட்டிருந்தது. இருவரும் கலப்பு திருமணம் என்பதால், இருவர் சமூக வழக்கப்படியும் சடங்குகள் நடந்தன.

முதலில் சினேகா சார்ந்த நாயுடு வகுப்பு முறைப்படி திருமணச் சடங்குகள் நடந்தன. அப்போது மெரூன் நிற பட்டுப் புடவை அணிந்திருந்தார் சினேகா. மணமகன் பிரசன்னா சட்டை அணியாமல், சினேகாவுக்கு தாலிகட்டி மனைவியாக்கிக் கொண்டார். அடுத்து, பிரசன்னாவின் பிராமண வழக்கப்படி திருமணம் நடந்தது. இதற்கென தனி முகூர்த்தப் புடவை எடுத்திருந்தனர். மாம்பழ நிறத்தில் பட்டுப்புடவை அணிந்து வந்த சினேகாவை அவர் தந்தை ராஜாராமன் மடியில் வைத்து தாரைவார்க்க, மீண்டும் தாலி கட்டினார் பிரசன்னா.

திருமணத்துக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். சிவகுமார் குடும்பம், விஜயகுமார் குடும்பம், இயக்குநர்கள் ஹரி, சேரன், பி வாசு, நாசர், நடிகைகள் கே ஆர் விஜயா உள்ளிட்டோர் வந்திருந்து வாழ்த்தினர்.

முன்னணி நடிகர்கள் யாரும் வரவில்லை

ஆனால் தமிழ் சினிமாவின் முதல்நிலை நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா உள்ளிட்ட நடிகர் நடிகைகள் திருமணத்துக்கு வரவில்லை.

ஸ்னேகா-பிரசன்னா திருமண படங்கள்

ஸ்னேகா- பிரசன்னா நிச்சயதார்த்த படங்கள்

திருமண வரவேற்பு படங்கள்
 

பிரமாண்ட க்ளைமாக்ஸ் - இறுதிக் கட்டத்தில் முகமூடி

Mugamoodi With Unusual Climax   
மிஷ்கின் இயக்கும் முதல் சூப்பர் ஹீரோ கதையான முகமூடி படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தப் படம் சூப்பர் மேன் போன்ற ஒரு கதையமைப்பைக் கொண்டது என்பதால், இரவு நேரத்தில் ஷூட்டிங்கை நடத்தி வருகிறார் இயக்குநர் மிஷ்கின்.

வழக்கமான தன் பாணியை முற்றாக விடுத்து, வித்தியாசமான முறையில் படமாக்கி வருகிறார்.

ஜீவாவுடன் பூஜா ஹெக்டே, நரேன் கைகோர்த்துள்ள இந்தப் படத்தின் க்ளைமாக்ஸில் 250 பேர் பங்கேற்று வருகின்றனர்.

ஆரம்பத்தில் திருவல்லிக்கேணியில் க்ளைமாக்ஸின் ஒரு பகுதியைப் படமாக்கிய மிஷ்கின், இப்போது மொத்த குழுவுடன் காரைக்காலுக்கு இடம்பெயர்ந்துள்ளார்.

இங்கும் இரவு நேர ஷூட்டிங்தான். இதுகுறித்து ஜீவா கூறுகையில், "இவ்வளவு பெரிய க்ளைமாக்ஸ் இதுவரை நான் நடித்த படங்களில் வந்ததில்லை. வழக்கம்போல இரவு நேரத்தில்தான் படமாகிறது. படம் வந்தபிறகு இதற்கான காரணம் புரியும்," என்றார்.

யுடிவி நேரடியாக தயாரிக்கும் படங்களில் முகமூடியும் ஒன்று!
 

சன் டிவியில் வாழ்க்கை கோயில்கள்: புதிய ஆன்மிகத் தொடர்

Sun Tv S New Programme Vazhlkai Koyilkal
சன் தொலைக்காட்சியின் ஆன்மிகப் பயணம் அதிகரித்துவிட்டது. முதலில் எல்லாம் கோயில், சாமியார், சாமி என்று போட்டு தாக்குவார்கள். தற்போது தெய்வ தரிசனம், நிஜம், வரிசையில் புதிய ஆன்மிகத் தொடரை சனிக்கிழமை முதல் தொடங்கியுள்ளனர்.

வாழ்க்கைக் கோயில்கள் என்ற தொடர் மூலம் பக்தர்கள் தங்கள் வாழ்க்கையில் வளம் பெறுவதற்காக எந்தெந்த கோயில்களுக்கு செல்கின்றனர். அந்த கோயிலில் என்ன சிறப்பு என்பதைப் பற்றியும் அந்த நிகழ்ச்சியில் தெரிவிக்க உள்ளனர். முதல் நிகழ்ச்சியாக திருப்பம் தரும் திருமலை ஒளிப்பரப்பாகிறது. வாரந்தோறும் சனிக்கிழமை காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகும் வாழ்க்கை கோயில்கள் நேயர்களுக்கு பக்தி விருந்தாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சொல்ல முடியாது, சன் டிவி தனியாக பக்தி சேனல் ஆரம்பித்தாலும் சொல்வதற்கில்லை.
 

‘அத்திப்பூக்கள்’ வில்லி ‘மகா’, நிஜத்தில் மகா அமைதியாம்!

Athipookkal Maha Mega Villi Reel Life Only
மத்தியான நேரத்தில் சாப்பிட்டு விட்டு குட்டி தூக்கம் போடுவது பெரும்பாலான இல்லத்தரசிகளின் வேலை. அந்த குட்டித்தூக்கத்தையும் சில வருடங்களாக கெடுத்துவிட்டது சன் டிவியில் ஒளிபரப்பாகும் அத்திப்பூக்கள் சீரியல். அதில் கணவரின் தங்கையின் குடும்பத்தை கெடுக்க நினைக்கும் அண்ணி கதாபாத்திரமான அஞ்சலியை சபிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு அனைவரையும் பாதிக்கும் கதாபாத்திரம் அது.

வில்லியை விட வில்லிக்கு தூபம் போடும் சைடு கதாபாத்திரங்களும் பிரபலமாக பேசப்படுவதுண்டு அந்த வகையில் அஞ்சலிக்கு அடுத்த வில்லியாக உள்ள ‘மகா’ கதாபாத்திரமும் அனைவரையும் கவர்ந்துள்ளது. சதிகாரர்களை விட சதிக்கு துணை புரியும் ‘மகா’ ( இனியா) வைத்தான் இன்றைக்கு நாம் சந்திக்கப் போகிறோம்.

சீரியலில் ஒரு வில்லியை சமாளிப்பதே பெரிய விசயம் அதுவும் இரண்டு வில்லிகள் என்றால் கேட்கவே வேண்டாம். அழுகையும், ஆர்பட்டமும்தான். சீரியலில் வில்லியாக நடித்தாலும் நிஜத்தில் அனைவருமே நண்பர்கள்தான் என்கிறார் இனியா.

நடிகை சச்சுவின் சொந்த ஊரைச் சேர்ந்தவர் இந்த இனியா. இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வந்ததே ஒரு விபத்துதானாம். பிரியா விஷனில் கல்யாண கலாட்டா சீரியலை வேடிக்கை பார்க்க போன போது திடீரென்று இவரும் நடிகையாகிவிட்டார். அது முதல் அத்திப்பூக்கள் வரை தொடர்கிறது சீரியல் பயணம்.

அத்திப்பூக்களில் வில்லி என்றாலும் ‘உறவுக்கு கை கொடுப்போம்’ சீரியலில் மென்மையான அமைதியான கேரக்டர் கிடைத்திருக்கிறது. என்னுடைய ஒரிஜினல் கேரக்டரே அதுதான் என்கிறார் இனியா.

அதனால இந்தத் தொடரில் நடிக்கிறேன் என்று சொல்வதைவிட வாழ்ந்துகிட்டு இருக்கேன் என்று கூறியுள்ளார்.

இனியாவின் கணவர் மாறன் பிஸினஸ்மேன். அவருடைய ஆதரவும், மாமியாரின் ஆதரவும் எப்போதும் உண்டாம் இனியாவிற்கு.

வாழ்த்துக்கள் இனியா, நல்லா வில்லத்தனம் பண்ணுங்க !
 

ஏற்கனவே கல்யாணமான டைரக்டரை 'லவ்'வும் வீணா மாலிக்!

Veena Madhukar Love Is The Air
பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் இப்போதெல்லாம் ஏதாவது ஒரு செய்தியில் விழ ஆரம்பித்துள்ளார். அவரைப் பற்றித்தான் அடிக்கடி இப்போது ஏதாவது ஒரு பரபரப்பு செய்தி வருகிறது.

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் இந்தியாவில் பிரபலமான வீணா மாலிக் தற்போது இந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் அவர் பிஜிக்கு ஷூட்டிங்குக்காக போயிருந்தபோது ஏகப்பட்ட ரசிகர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு நசுக்கித் தள்ளி விட்டனர். கஷ்டப்பட்டு மீண்ட அவரை அந்த நாட்டு அட்டர்னி ஜெனரலே நேரடியாக வந்து பார்த்து விட்டுப் போனது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த இயக்குநர் ஹேமந்த் மதுகருடன் வீணாவுக்கு சூடான காதல் மூண்டுள்ளதாம். அவரும், இவரும் படு நெருக்கமாக காதலித்து வருவதாக கூறுகின்றனர். அதை நிரூபிக்கும் வகையில் சூடான போட்டோக்களும் வெளியாகியுள்ளன. அதில் இருவரும் படு நெருக்கமாக, அன்னியோன்யமாக, கையில் மதுக் கோப்பைகளுடன் களேபரமாக காணப்படுகின்றனர்.

மும்பை 125 கிலோமீட்டர் என்ற படத்தை இயக்கி வருகிறார் மதுகர். இவரது பூர்வீகம் ஆந்திராவாகும். செக்ஸியான வீணாவுடன் படு நெருக்கமாக பழங்கி வரும் மதுகருக்கு ஏற்கனவே கல்யாணமாகி விட்டது. அவரது மனைவி பெயர் திரிப்தா, இவர் இமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

வீணாவுக்கும், காதலுக்கும் ஏழாம் பொருத்தமெல்லாம் கிடையாது. ஏற்கனவே சிலரைக் காதலித்தவர்தான் அவர். இப்போது மதுகருடனனான அவரது காதல் எவ்வளவு தூரத்திற்குப் போகும் என்பதுதான் கேள்வியாக உள்ளது...!
 

கெட்டி மேளம் முழங்க சினேகா கழுத்தில் 2 முறை தாலி கட்டினார் பிரசன்னா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகை சினேகா கழுத்தில் பிரசன்னா 2 முறை தாலி கட்டினார். நடிகர், நடிகைகள், நண்பர்கள், உற்றார் உறவினர் வாழ்த்தினர். 'சாது மிரண்டால்', 'சீனா தானா 007', 'பாணா காத்தாடி' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பிரசன்னா. 'என்னவளே', 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்', 'பள்ளிக்கூடம்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் சினேகா. இவர்கள் இருவரும் 'அச்சமுண்டு அச்சமுண்டு' என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது முதல் இருவரும் நண்பர்களாக பழகினர். பின்னர் அது காதலாக மாறியது. ஒரு வருடத்துக்கும் மேலாக பார்ட்டி மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு இருவரும் ஜோடியாக வந்தனர்.

சினேகா நாயுடு வகுப்பை சேர்ந்தவர். பிரசன்னா பிராமண வகுப்பை சேர்ந்தவர். இவர்களுக்கு காதலுக்கு இரு குடும்பத்திலும் எதிர்ப்பு இருந்தது. அதனால், காதலிப்பதை இருவரும் மறுத்து வந்தனர். பின்னர் இருவீட்டாரும் சந்தித்து பேசியதில், சமரசம் ஏற்பட்டது. இரண்டு ஜாதி முறைப்படியும் திருமணம் நடத்த முடிவு செய்தனர். கடந்த வாரம் பிரசன்னா, சினேகா ஜோடியாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தபோது இதை தெரிவித்தனர். பிரசன்னா  சினேகா திருமணம் இன்று காலை சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் நடந்தது. முதலில் நாயுடு முறைப்படி திருமண சடங்குகள் நடந்தன. பிரசன்னா காசி யாத்திரைக்கு செல்ல அவரை மச்சான்கள் சமாதானப்படுத்தி குடைபிடித்து மேடைக்கு அழைத்து வரும் சடங்கு நடந்தது. பின்னர் பிரசன்னா, சினேகா மாலை மாற்றும் சம்பிரதாயம் நடந்தது. அப்போது சினேகாவிடம் திருமண சேலையை பிரசன்னா குடும்பத்தினர் வழங்கினர். அதை மணமகள் அறைக்கு எடுத்துச் சென்று உடுத்தி வந்தார். மெரூன் நிற பட்டு சேலை சரசரக்க, தங்க நகை அலங்காரம் ஜொலி ஜொலிக்க மணமேடைக்கு வந்து பிரசன்னா அருகில் அமர்ந்தார் சினேகா. சரியாக காலை 9.50க்கு கெட்டி மேளம் முழங்க சினேகா கழுத்தில் தாலி கட்டினார் பிரசன்னா. பின்னர் பிராமண முறைப்படி திருமண சடங்குகள் நடந்தன. பிரசன்னா பஞ்சகச்சம் கட்டி வந்தார். சினேகா மடிசார் அணிந்து மணக்கோலத்தில் வந்தார். சினேகா தனது தந்தையின் மடியில் அமர்ந்துகொள்ள பிரசன்னா அவருக்கு தாலி கட்டினார்.

திருமண விழாவில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனைவி நளினி, நடிகர்கள் சிவகுமார், விஜயகுமார், சிபிராஜ், தாமு, இயக்குனர் கங்கை அமரன், நடிகை மஞ்சுளா, டைரக்டர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்தினர். முன்னதாக, நேற்று மாலை நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகினர் கலந்துகொண்டு வாழ்த்தினர். திருமணத்துக்காக சினேகாவுக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் 9 கஜத்துடன் கூடிய 2 பட்டு சேலைகள் காஞ்சிபுரத்தில் பிரத்யேகமாக ஆர்டர் செய்து வாங்கப்பட்டன. இருமுறைப்படி நடந்த திருமணம் நடந்ததால் 2 சேலைகள் வாங்கப்பட்டது. மேலும் வரவேற்பு நிகழ்ச்சிக்காக பெங்களூரில் உள்ள காஸ்டியூம் டிசைனரிடம் உடைகள் ஆர்டர் தரப்பட்டன. இருவருக்கும் ரோஸ் மற்றும் நீலம் கலந்த நிறத்தில் எம்பிராய்டரி வேலைகளுடன் கூடிய பிரத்யேக டிசைனில் உடை வடிவமைக்கப்பட்டு வரவழைக்கப்பட்டது. இந்த உடைகளின் மதிப்பு ரூ. 7 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

CLICK HERE TO VIEW PRASANNA - SNEHA WEDDING PHOTOS



 

சினேகா - பிரசன்னா திருமண வரவேற்பு - பல்லக்கில் அழைத்து வரப்பட்ட சினேகா!

Sneha Prasanna Marriage Reception   
நடிகை சினேகா - பிரசன்னா திருமண வரவேற்பு நேற்று மாலை விமரிசையாக நடந்தது.

நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதனை முறைப்படி பத்திரிகையாளர்களுக்கும் அறிவித்து கல்யாண வேலையில் இத்தனை நாள் மும்முரமாக இருந்தனர்.

நேற்று முன்தினத்திலிருந்து இருவரது திருமண சடங்குகளும் ஆரம்பித்தன. சினேகாவுக்கு நலங்கு வைத்தல், மருதாணி இடுதல் போன்ற சடங்குகள் நடந்தன.

நிச்சயதார்த்தம்

இதைத் தொடர்ந்து நேற்று மாலை சினேகா - பிரசன்னா நிச்சயதார்த்தம் நடந்தது. பிரசன்னாவுக்கு சினேகாவின் பெற்றோர் உடைகளை வழங்கினர். தங்கள் வீட்டுக்கு மருமகளாக வரும் சினேகாவுக்கு பிரசன்னாவின் பெற்றோர் வீட்டு முறைப்படி பரிசளித்தனர். மணமகன் ஒரு யானை மீது அமர்ந்திருப்பது போன்ற சிலை அது. பின்னர் இருவரும் மோதிரங்கள் மாற்றிக் கொண்டனர்.

அடுத்து, இருவரது திருமண வரவேற்பும் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா பேலஸ் திருமண மண்டபத்தில் விமரிசையாக நடந்தது.

பல்லக்கில்...

சினேகாவை ஒரு இளவரசி போல அலங்கரித்து, மலர் அலங்காரம் செய்யப்பட்ட பல்லக்கில் அமர வைத்து அழைத்து வந்தனர். பிரசன்னாவை தேரில் அழைத்து வந்தனர்.

இருவரும் மாலை மாற்றிக் கொண்டு மேடையில் நின்றனர். அவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர்.

இருவருக்கும் இன்று காலை 10.30 மணிக்கு திருமணம் நடக்கிறது.