12/8/2010 2:04:56 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
அங்காடி நடிகைக்கு கதை சொல்ல வர்றவங்க, குளியல் காட்சி, முத்தக் காட்சினு ஒரு கிளு கிளுப்பான சீனையாவது சேர்த்து சொல்றாங்களாம்… சொல்றாங்களாம்… சமீபத்துல ரிலீசான குஷியான படத்துல நடிகை அப்படி நடிச்சிருந்தாரு. அதனால கிளாமரா நடிக்க நடிகைக்கு வாய்ப்புகள் வருதாம்… வருதாம்…
ஓவியமான நடிகைக்கும் மைன நடிகைக்கும் கடும் போட்டி நடக்குதாம்… நடக்குதாம்… ஒருத்தர் வாய்ப்பை ஒருத்தரு தட்டிப் பறிக்கிறாங்களாம்… பறிக்கிறாங்களாம்… இளம் ஹீரோக்களுக்கு தூது விட்டு வாய்ப்பை பிடிக்கிற வேலையிலும் மும்முரமா இறங்கிட்டாங்களாம்… இறங்கிட்டாங்களாம்…
மந்திர படத்தால பிரேக் கிடைக்கும்னு நம்பிய மீனாட்சியான நடிகை ஏமாற்றத்துல இருக்கிறாராம்… இருக்கிறாராம்… நல்ல ரோலா இருந்தும் பெயர் கிடைக்கலேனு நெருங்கியவங்ககிட்ட புலம்புறாராம்… புலம்புறாராம்…