விமல் - சமுத்திரக்கனி நடிக்கும் நீயெல்லாம் நல்லா வருவடா ஷூட்டிங் தொடங்கியது!

விமல் - சமுத்திரக்கனி இணைந்து நடிக்கும் நீயெல்லாம் நல்லா வருவடா படத்தின் ஷூட்டிங் நேற்று பிள்ளையார் சதுர்த்தியன்று தொடங்கியது.

இயக்குநர் சீமானின் தம்பி, வாழ்த்துகள், சுசி கணேசன் இயக்கிய திருட்டுப் பயலே, கந்தசாமி மற்றும் ஷார்ட்கட் ரோமியோ (இந்தி) படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஆர் நாகேந்திரன் இயக்கும் முதல் படம் இது. வெளிநாட்டுத் தமிழ்ப் பெண் கீதா நாயகியாக நடிக்கிறார்.

விமல் - சமுத்திரக்கனி நடிக்கும் நீயெல்லாம் நல்லா வருவடா ஷூட்டிங் தொடங்கியது!

இவர்களுடன் சிங்கமுத்து, எம்எஸ் பாஸ்கர், இமான் அண்ணாச்சி, கும்கி அஸ்வின் உள்பட பலரும் நடிக்கின்றனர்.

என்கே ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

காமெடி ஆக்ஷன் படமாக உருவாகும் நீயெல்லாம் நல்லா வருவடா, புதுச்சேரியில் தொடங்கி, ஆஸ்திரேலியா வரை பல அழகிய லொகேஷன்களில் படமாகிறது.

விமல் - சமுத்திரக்கனி நடிக்கும் நீயெல்லாம் நல்லா வருவடா ஷூட்டிங் தொடங்கியது!

இப்போதெல்லாம் காமெடியன்களின் வசனங்களே படங்களின் தலைப்புகளாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நீயெல்லாம் நல்லா வருவடா என்பது, ஓகேஓகே படத்தில் சந்தானம் உதயநிதியைப் பார்த்து சொல்லும் டயலாக் ஆகும்.

 

மியாவ்… மியாவ்… சிவகார்த்திக்கேயனின் சூப்பர் மாஸ்!

"பரிட்சையில ஃபெயில் ஆயிட்டேன்னு வருத்தப்படுறவனும், ஃபிகர் கழட்டி விட்டுடுச்சுன்னு ஃபீல் பண்றவனும் நம்ம சங்கத்திலேயே இருக்கக் கூடாது..."

இந்த டயலாக்கை கேட்டு அப்படி ஒரு அப்ளாஸ் திரையரங்கில்.

சத்தம் போட்டு சிரித்து.... விசிலடித்து... படம் பார்த்து ரொம்ப நாட்களாகிவிட்டது என்ற குறையை தீர்த்துவிட்டது வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

தலைவலி வந்தா கமெடி படம் பாருங்களேன் என்று யாரோ சொன்னதை நம்பி! தியேட்டருக்குப் போனது வீணாகவில்லை.

மியாவ்… மியாவ்… சிவகார்த்திக்கேயனின் சூப்பர் மாஸ்!

வரிக்கு வரி வார்த்தைகளால் காமெடி செய்துள்ளார் இயக்குநர் எம்.ராஜேஸ். இதில் தனது சிஷ்யன் பொன்ராமுக்கு வசனம் எழுதி தான் வித்தியாசமான குரு என்பதை நிரூபித்துள்ளார்.

சிவகார்த்திக்கேயன் - சூரி கெமிஸ்ட்ரி இதில் கொஞ்சம் அதிகமாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. ஊர் திருவிழாவில் ரீட்டா நடனம் வேண்டும் என்று அடம் பிடிப்பதாகட்டும். திருமணத்திற்கு ப்ளக்ஸ் போர்டு வைப்பதாகட்டும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் அலப்பரை நிற்கிறது.

வேலை வெட்டி இல்லை என்றாலும் கையில் செல்லும்... லந்து பேச்சுமாக ஊரில் வளைய வரும் இளவட்டமாய் கலக்கியிருக்கும் சிவகார்த்திக்கேயன், டீச்சரை கரெக்ட் செய்ய பள்ளி மாணவியிடம் லவ்லெட்டர் கொடுப்பதாகட்டும்.

பின்னர் அதே மாணவியை சைட் அடித்து மியாவ் என்று செல்லமாக கூப்பிடுவதாகட்டும்... உள்ளூர் கிராமத்து இளைஞனை பிரதிபலிக்கிறார். பிந்து மாதவியை விட குட்டி கதாநாயகி செம க்யூட்.

இயக்குநர்கள் ராஜேஸ், பொன்ராம் கூட்டணி அமைத்து காமெடி பட்டாசு கொளுத்தியதில் தலைவலி போயே போச்சு...

அதுவும் சத்யராஜ் ஆக்சன்கள் கிளைமாக்ஸில் மகள் கர்ப்பம் என்றவுடன் காட்டும் எக்ஸ்பிரசன் செம அப்ளாஸ்.

இப்போது காதல் தோல்வி என்றாலே குடித்துவிட்டு குத்துப்பாட்டு பாடவேண்டும் என்று டிரெண்ட் செட் செய்து விட்டார்கள் போல வருத்தப்படாத வாலிபர் சங்கமும் தப்பவில்லை.

அதை மட்டும் தவிர்த்திருந்தால் நிச்சயம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் செம மாஸ்தான்.

படம் ரிலீசாகி மூன்று நாட்களில் 6.65 கோடி வசூலித்துள்ளதாம். சிவகார்த்திக்கேயன் படத்திற்கு இது நல்ல ஓபனிங் என்கின்றனர். மெரினா தொடங்கி கடந்த இரண்டு ஆண்டுகளில் 6 படங்களில் நடித்துவிட்டார் சிவகார்த்திக்கேயன். தனக்கென்று தனி ட்ரெண்ட் செட் செய்து கொண்டால் நிச்சயம் சூப்பர் ஹீரோதான் என்கின்றனர் விமர்சகர்கள்.

 

தலகனம் இல்லாத 'தல', 'தளபதி': நெகிழும் தயாநிதி அழகிரி

தலகனம் இல்லாத 'தல', 'தளபதி': நெகிழும் தயாநிதி அழகிரி

சென்னை: அஜீத் குமாரும், விஜய்யும் தலைகனம் இல்லாதவர்கள் என்று தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

தல அஜீத், இளைய தளபதி விஜய் ஆகிய இருவருமே அடுத்தடுத்து வெற்றிகளை ஈட்டி வருகின்றனர். அவர்கள் இருவரையும் அருகில் இருந்து பார்த்து வருகிறேன். இத்தனை வெற்றிகளுக்கு பிறகும் அவர்கள் தலைகனம் இல்லாமல் முன்பு போன்றே பழகுகிறார்கள். இனி வரும் காலங்களிலும் அவர்கள் தொடர் வெற்றிப் பெற வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

அஜீத் குமார் நடித்த மங்காத்தா படத்தை தயாரித்தவர் தயாநிதி அழகிரி என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத்தின் ஆரம்பம் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. விஜய்யின் ஜில்லா தீபாவளி கழித்து வெளியாகும் என்று தெரிகிறது.

 

கரூர் வந்தார் இளையராஜா.. ராஜராஜசோழனின் போர்வாளுக்காக மக்கள் முன் மெட்டமைத்தார்!

கரூர்: ராஜாராஜ சோழனின் போர்வாள் என்ற படத்துக்காக கரூரில் மக்கள் முன் மெட்டமைத்தார் இசைஞானி இளையராஜா.

சினேகன் ஹீரோவாக நடிக்க, சினேகா, ஸ்ரேயா ஹீரோயின்களாக நடிக்கும் படம் ராஜராஜ சோழனின் போர்வாள்.

ஆர்எஸ் அமுதேஸ்வர் இயக்கும் இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

கரூர் வந்தார் இளையராஜா.. ராஜராஜசோழனின் போர்வாளுக்காக மக்கள் முன் மெட்டமைத்தார்!

உலக திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தப் படத்துக்கான பாடல் மெட்டுகளை மக்கள் முன்பாக இசைக்க ஒப்புக் கொண்டார் இளையராஜா. அதற்கான இடமாக கரூரில் உள்ள கருவூரார் ஜீவசமாதி அடைந்த இடத்தையும் அவர் தேர்வு செய்தார்.

அதன்படி இன்று காலை கரூருக்கு வந்த இசைஞானி, இந்தப் படத்துக்கான மெட்டுகளை மக்கள் முன்பாக இசையமைத்தார்.

இளையராஜாவைக் காரண ஏராளமான மக்கள் குவிந்துவிட்டனர். போலீசார் அவர்களைக் கட்டுப்படுத்த முயன்றபோது, "அமைதியாக இருந்து இசையைக் கேளுங்க, உங்களுக்காகத்தான் நான் வந்திருக்கிறேன்," என்று கூறி கூட்டத்தினரை அமைதிப்படுத்தினார் இளையராஜா.